பெயர்: அய்யா GOD
தொழில்: இந்தியாவை வல்லரசாக்க டெய்லி பதிவு போடுதல். சில சமயம் 2,3.
சைடு தொழில்: தினம் 101 பேருக்கு கமன்ட், லைக், ஓட்டு போடுதல்.
ரோல் மாடல்: சி.பி. செமதில் டமார்
பிடித்தவர்கள்: (பாராட்டி மட்டும்) கமன்ட் & த.ம.வில் ஓட்டு போடுவோர்
எதிரிகள்: (அ)நியாயமாக தன்னை விமர்சிக்கும் அனைவரும்.
பொழுதுபோக்கு: பதிவு போடவே நேரமில்லை. இது வேறயா?
பலம்: 6 முதல் 60 வரை(குறிப்பாக குடும்ப பெண்கள்) நித்தம் 3,000+ பேர் இவர் பதிவை 'படிப்பது',
பலவீனம்: பிரபல கூகிள் ப்ளஸ்ஸர்கள் ஓட்டினால் பம்முவது. இளம் பதிவர்கள் கலாய்த்தால் மட்டும் கொதித்து பதில் சொல்வது.
நீண்டகால சாதனை: பிரபல திரட்டியில் அனைவரையும் ஓரம் கட்டி மாதக் கணக்கில் சிம்மாசனத்தில் இருப்பது, ஆண்டுக்கணக்கில் பயணக்கட்டுரை எனும் பெயரில் ஒவ்வொரு பதிவிலும் 100 போட்டோ, 30 வீடியோ போட்டது.
சமீபத்திய சாதனை: முதல் இடத்திற்கு ஆபத்து வராமல் இருக்க அடிக்கடி சினிமா பதிவுகளை போட்டு தப்பிப்பது, மடிப்பாக்கம் துர்கா பவன் பதிவு, பயணக்கட்டுரையை ஒருவழியாக முடித்தது, வெள்ளிக்கிழமை பட முன்னோட்டம் போடுதல், பாடல் விமர்சனம்.
தனிச்சிறப்பு: டி.வி. நிகழ்ச்சிகள் பற்றி தொடர்ந்து எழுதுதல், விசேஷ தினங்களில் டி.வி.யில் என்ன பார்க்கலாம் என்று யோசனை சொல்லுதல், மறுநாள் அதுகுறித்த விமர்சனங்கள் போட்டு திகிலை கிளப்புதல், நாளுக்கு 40 ரூவாய் சம்பாதிக்கும் கூலித்தொழிலாளிகளை இம்சித்து பேட்டி எடுத்து அவர்கள் வருமானத்தை வறுத்து எடுத்தல்.
ஸ்பெஷல் சிறப்பு: சோகத்தில் ரோட்டோரம் நடந்து செல்லும் அப்பாவியை வலுக்கட்டாயமாக அழைத்து தன்னை பலவித ஸ்டில் எடுக்க சொல்லி வெறுப்பேற்றுவது.
மிகச்சிறப்பு: பதிவுலகில் இவரை தெரியாதவர்கள் யாருமில்லை, இவருக்கு தெரியாதவர்களும் யாருமில்லை. இல்லை. இல்லையோ இல்லை.
முக்கிய சிறப்பு: பயணக்கட்டுரை மூலம் கூகிள் மேப்பின் இன்கமை காலி செய்தது. 'இனி எங்க டூர் போனாலும் உங்க பதிவை மேப்பா வச்சித்தான் போவோம்' என்று தென்கிழக்கு ரஷ்யா முதல் வடமேற்கு சிம்லா வரை உள்ள வாசகர்கள் பாராட்டுவது.
வெற்றியின் ரகசியம்: பதிவு போடும்போது டைட்டிலின் பின்பாதியில் அதிரடியாக வார்த்தைகள் வைத்து வாசகர்களை உள்ளே இழுப்பது. உதாரணம்: அரிய/அறியாத தகவல்கள், மறக்க முடியாத நினைவுகள், அசத்தல் படங்கள்.
சமீபத்திய எரிச்சல்: ரேங்கிங்கில் தொடர்ந்து தனக்கு மிக அருகில் இருப்பவர்கள், குறுகிய காலத்தில் தன்னை விட பிரபலம் ஆகிவிட்ட சகலகலா சிட்டிக்காட்டான்(விரைவில் சிட்டியை போட்டுத்தள்ள ஆட்கள் தேவை விளம்பரம் தர முடிவு).
லட்சியம்: அடுத்த ஆண்டும் 365+(730?) பதிவுகள் போட்டு நெம்பர் ஒன் ஆகுதல்.
******* ************************ **************