Wednesday, July 17, 2013

கோனைவில்: கோவை நேரம் – வடிவுக்கரசி – அஞ்சரைக்குள்ள வண்டி – லொட்டு லொசுக்கு


பார்த்த படம்: அஞ்சரைக்குள்ள வண்டி
புதிதாக திருமணமான ஷகிலாவுக்கு தன்னுடைய எதிர்பார்ப்பிற்கு ஏற்ற வகையில் மணமகன் அமையவில்லை. அவர்களுடைய எதிர்வீட்டில் ஒரு வாட்டசாட்டமான ஆள் குடி வருகிறார். இருவருக்குமிடையே கள்ளக்காதல் மலர்கிறது.

மாலை ஐந்தரை மணிக்கு வருகிற ரயிலிலேறி ஓடிப்போக முடிவு செய்கிறார்கள். விஷயம் எப்படியோ ஷகிலாவின் கணவருக்கு தெரிந்து விடுகிறது. அப்போது தான் எதிர்வீட்டு ஆசாமி பற்றி ஒரு உண்மை தெரிய வருகிறது. ஷகிலா என்ன ஆனார் என்பதை படம் பார்த்து அறியுங்கள் !

மலையாளத்தில் மட்டும் எப்படி தான் இவ்வளவு அழகான கதைகள் வருகிறதோ ? பெரும்பலான காட்சிகளில் வசனம் போன்ற சமாசாரம் அதிகம் இன்றி ஒரு சுவாரஸ்ய படத்தை தந்திருக்கிறது இந்த டீம்.

அவசியம் பாருங்கள் !

அழகு கார்னர்
வடிவுக்கரசி – கண், மூக்கு, உதடு, வாய், கழுத்து என அனைத்தும் சரியாய் இருந்தும் ஏனோ தமிழில் அதிகம் ஸ்கோர் செய்யாமல் போனது வருத்தமே. நம்ம பாக்யராஜ் கூட கன்னி பருவத்திலே படத்தில் இவரை ஹீரோயினாக்கி முன்னுக்கு கொண்டுவர முயற்சி செய்தார்.

வரணும். அம்மணி மீண்டும் ஒரு ரவுண்டு வரணும்.


போஸ்டர் கார்னர்

அய்யய்யோசாமி கார்னர்
சென்ற வாரம் ஒரு நாள் காய்கறி வாங்க சென்றார் அய்யய்யோசாமி. போனவர் சும்மா இருந்திருக்கலாம் இல்லையா ? கீரை விற்கும் ஆயாவிடம் போய் விளிம்புநிலை மனிதருக்கான பேட்டி காண முயற்சி செய்திருக்கிறார். அந்த நேரம் பார்த்து அங்கே வேறொரு வேலையாக வந்த ஹவுஸ்பாஸ் அய்யய்யோசாமியை ஆயாவும் கையுமாக பிடித்துவிட்டார்.

வீட்டுக்கு வந்ததும் ஹவுஸ்பாஸ் அய்யய்யோசாமியை கடுமையாக அர்ச்சனை செய்தார். ஆனால் அய்யய்யோசாமி வழக்கம்போல ஒரு பெரிய புஸ்தகத்தை எடுத்து வைத்துக்கொண்டு படிப்பதுபோல சீன் போட்டார். விடுவாரா ஹவுஸ்பாஸ் ? பூரிக்கட்டை, பூந்திக்கரண்டி என்று கிச்சனில் கிடைத்ததை எல்லாம் அய்யய்யோசாமியின் மீது தூக்கி எரிய ஆரம்பித்துவிட்டார். அய்யய்யோசாமி பாதுகாப்பாக வீட்டின் ஒரு கார்னரில் போய் பதுங்கிக்கொண்டார். அதுவே அய்யய்யோசாமி கார்னர் என்றழைக்கப்படுகிறது.

பதிவர் பக்கம் – கோவை நேரம்
நண்பரை கலாய்த்து எழுதும்போது – நம்மையே கலாய்த்து எழுதுற மாதிரி கொஞ்சம் கூச்சமா இருக்கு (க்கும் நண்பரை கலாய்க்கிறதுக்கு கூச்சபடுற ஆளா நீயி? - மனசாட்சி)

கோவை நேரம் என்கிற பெயரில் பதிவெழுதும் நண்பர் ஜீவா – இந்தப் பக்கத்தில் இருந்து பார்க்கும்போது அலைபாயுதே மாதவன் மாதிரி இருக்கிறார். ஒருவேளை அந்தப்பக்கம் சென்று பார்த்தால் அஜித்குமார் மாதிரி இருக்கலாம்.

ஒரு விசிட் அடித்து வாருங்களேன் !

என்ன பாட்டுடே – அடிக்குது குளிரு !
என்னை முதன் முதலாக கவர்ந்த பாடல் என்றால் – அது அடிக்கிது குளிரு தான் !

பள்ளியில் படித்த காலம் அது –

முல்லை பூங்கொடி கொம்பை தேடுது
கொம்பைப் போல உன் அம்பை தேடுது !

என்ற வரிகள் ரொம்பவே பிடித்து  விட்டது. என்னமா யோசிச்சிருக்காரு பாட்டு எழுதியவர் என நினைத்து நினைத்து வியந்தேன்.

அற்புதமாய் பாடத் தெரிந்த ரஜினிகாந்த், அருமையாய் முகபாவம் காட்ட கூடிய விஜயசாந்தி, கருத்தாழம் மிக்க வரிகள் என எல்லா பக்கமும் சிக்சர் அடிக்கும் பாட்டு.

இப்பாடலை பாடியமைக்கு ரஜினிகாந்துக்கு தேசிய விருது கிடைத்தது.

வா கட்டபொம்மன் பேரா... கட்டழகு வீரா...!”

நாட்டு மக்களுக்கோர் நற்செய்தி !  
கவுண்டமணி செந்திலில் ஆடிக்கொன்று அமாவாசைக்கொன்று என்று பதிவு வெளியிட்டு வந்ததை தாங்கள் அறிவீர்கள். ஆனால் இனி வாரத்திற்கு ஒரு பதிவாவது நிச்சயம் வரும். அதுவும் மற்ற பதிவர்களை பகடி செய்யும் பதிவாக இருக்கும். யாரை கலாய்க்கலாம் என்று வாசகர்களும் அய்யய்யோசாமிக்கு ஐடியா கொடுக்கலாம். போக போக இது இன்னும் அதிகமாக கூகிள் ஆண்டவரை வேண்டுவோம் !