Friday, January 24, 2014

நீ சப்தம் - தூக்கம் தொண்டையை அடைக்கிறது


Roughly Note -The below post is inspired by:

http://www.nisaptham.com/2014/01/blog-post_23.html




பண்புள்ள நல்லபுள்ள வாவ்.மணிகண்டன் அவர்களுக்கு,

இரவு சாய்ந்து இருட்டு வரும்போது வரும் கொடூரமான விஷயம் உண்டெனில் அது தமிழிசை சௌந்தர்ராஜன் அக்கா கலந்து கொள்ளும் விவாத நிகழ்ச்சியை பார்த்துவிட்டு தூங்கப்போவது அல்ல. தூங்கிய சில மைக்ரோ நொடியில் வரும் எனது சுய சொந்த குறட்டை சத்தம்தான். எட்டுக்கு ஏலே முக்கால் ரூமில் 4 நண்பர்களோடு தூங்குகையில் நித்தம் குறட்டை தொண்டையை அடைக்கிறது. 'அடிங் ^&*@#$. ஏன்டா டைப் ரைட்டிங் மிஷின்ல எல்லா கீயையும் அழுத்தி அப்பறம் ஒவ்வொண்ணையும் படக்கு படக்குன்னு ரிலீஸ் செய்றா மாரி, கண்டத தின்ன காட்டுக்கரடி கடமுடன்னு கக்கூஸ் போற மாரி டிசைன் டிசைனா கொரட்ட விட்டு கொல்ற" என்று நிசப்த விரும்பிகள் என் உசுரை எடுக்கிறார்கள். 

சில நேரம் என் குறட்டை சத்தத்தை கேட்டு நானே பயந்து எழுந்துள்ளேன் என்றால் அதன் அபார வீரிய வில்லங்கம் எப்படி இருக்கும் என்று பார்த்துக்கொள்ளுங்கள். நீ சப்தம் என்று சொல்லும் நண்பர்கள் நிசப்தம் என்று அமைதி கொள்ள ஏன் நீங்கள் என் போன்ற புதியதாய் குறட்டை விடுவோருக்கு அறிவுரை தரக்கூடாது. இதற்கு முன்பு தாங்கள் பரிசளித்த ஹரி உரை நூலில் இருந்த அறிவுரை எப்பயனையும் அளிக்கவில்லை தோழர். உதவுங்கள் ப்ளீஸ். ப்ளீச் ப்ளீச் என்று சோடா அடித்து என்னை எழுப்பும் செலவை மிச்சம் செய்ய ஹெல்ப் மீ ப்ளீஸ்.

நன்றி,
நஸ்ருதீன் ஷா(ருக்).

                                              ***


அன்புள்ள நஸ்ருதீன் மற்றும் ஷாருக்,

தூக்கம் தொண்டையை அடைப்பதெல்லாம் கும்பகர்ண காலத்து கான்சப்ட். எனக்கு அப்படி ஒரு நிலை அரிதாகவோ/அடிக்கடியோ வந்ததுண்டு. யூரியா மாறிய காய்கறி தின்றால் கூட இந்நிலை வரலாம். எனவே ரிலையப்ல் ரிலையன்ஸ் கடையில்தான் வாங்கினீர்களா என்று செக் செய்க. 

''அடிங் ^&*@#$. ஏன்டா^#$%" என்று உங்கள் நண்பர்கள் கயுவி ஊற்றுகிறார்கள். என்னிடம் ஒரே ப்ளோரில் கொத்து கொத்தாக குறட்டை விடும்  ஆபீஸ் கொத்தடிமைகள் ''உன் சவுண்ட் வர வர நெம்ப ஜாஸ்தியா இருக்கே. பொத்திட்டு பட்றா ^#$%" என கெஞ்சுகிறார்கள். அம்புடுதேன். சென்னையில் இருந்து சைதாப்பேட்டை ஆபீஸ் செல்லும்போதெல்லாம் செக்யூரிட்டி ஷட்டரை திறந்த மறுநொடி கேபினுக்கு கீழ் சென்றுவிட துடிப்பேன். காரியம் தொண்டை கூட சில சமயம் விநாயக, முருகனையும் துதிப்பேன். 

இதை எப்படியோ சக சகா ஒருவன் காலை ஆப்பம் தின்னும் வேளையில் மோப்பம் பிடித்து மேனேஜரிடம் ஓதிவிட்டான்.  "அதுக்கு என் தூக்கத்த ஏன்டா கெடுத்த ம%ர்  புடு$கி" என்று அவனது பங்களா நாய் முடியை பிடித்து உலுக்கி விட்டார் அவர். 'சரி. சி.சி.டி.வி. கேமராவில் இருந்து தப்பிப்பது எப்படி?' என்றொரு இடியாப்ப சிக்கல் என் நெஞ்சில் இடியாக இறங்கியது. எனவே ஒரு நாள் இரவோடு இரவாக அந்த கேமராவில் தேவகவுடா போட்டோவை ஒட்டி விட்டேன். அதைப்பார்த்து தூங்கிய செக்யூரிட்டிகள் இன்னும் எழுந்த பாடில்லை என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.


அதுபோகட்டும். குறட்டை விட்டதால் உங்கள் அறையில் மொத்தம் எத்தனை விரிசல்கள்? நீங்கள் மவுண்ட் ரோடு பக்கம் உள்ளீர்களா? அப்படி என்றால் மெட்ரோ ரயில் சுரங்கம் அமைத்ததால் விரிசல் விட்டது என்று சொல்லி உங்களுக்கு நான் நிவாரண் 90 வாங்கித்தருகிறேன். எனது 'ஸ்லீப் ஐ ஸே z/o வேடியப்பன்' புத்தகத்தை தெரியாமல் வாங்கி, பிறகு என்னிடம் ரூ. 10,000 தந்து 'நீங்களே வச்சிக்கங்க' என்று சொன்ன மெட்ரோ ரயில் எம்.டி. மங்கு(னி) சிங் என் நண்பர்தான். உங்களுக்கு நிவாரண் 90 கன்பர்ம்.

ஆனால் ஒன்று. குறட்டை ஒழிப்பு என்பது தொடர்ச்சியான பயிற்சி. தொடர்ந்து தூங்குவதால் மட்டுமே அதை ஒழிக்க முடியும். தியான நிலைக்கு செல்ல மேக் அப் போட்ட நஸ்ரியாவை திருமணம் எனும் நிக்கா ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து உங்கள் கனவுக்கோட்டைக்கு இஸ்துக்குனு வர வேண்டும். 

ஓப்பனாக சொன்னால் இந்த பயிற்சியை நான் வெறித்தனமாக செய்கிறேன். ஆனால் "போங்கள். நீங்கள் மண்டை ஜாஸ்தி உள்ள முதல் பெஞ்ச் மாணவர் போல் இருக்கிறீர்கள்" என்று வெக்கப்பட்டுக்கொண்டே 'மாயி' வாம்மா மின்னலை விட வேகமாக ஓடிப்போய் விடுகிறார் நஸ்ரியா. எனவே சீ சீ இந்தப்பழம் புளிக்கும் என்றெண்ணி அவருக்கு பதிலாக அட்லீஸ்ட் சுமார் மூஞ்சி குமாரி யாராவது சிக்குவார்களா என்று விட்டத்தை பார்த்து கொட்டாவி விட பிடிக்க தொடங்கினேன். அந்நேரம் பார்த்தா பக்கத்து வீட்டு பார்த்தாவின் மனைவி ஜெயமாலினி ஆன்ட்டி சுட்ட வடையை வாயில் போட்டு விட்டுப்போக வேண்டும் அந்த கட்டைல போற காக்கா???. (சனியனே. உன் தலைல அண்டங்காக்கா பேல).

அந்த வடையை மறைப்பதாக நினைத்து கொள்ள வேண்டாமென்று தங்கள் வலது கால் சுண்டுவிரலை இழுத்து பிடித்து கேட்டுக்கொள்கிறேன்.

சத்தியமாக குறட்டையை போக்க இதுபோன்று அரட்டை அடிப்பதை தவிர என்னிடம் வேறு பெரிய சாத்திரங்கள் இல்லை. மயிலை  சத்திரம் ஒன்றின் முகவரி மட்டுமே உள்ளது. அங்கு எந்த எடுவாப்பய இம்சையும் இல்லாமல் நீ(ங்கள்) சப்தமாக தூங்கலாம்.

இதோ இப்போதே ''தந்தி'' டி.வி. மூலம் அம்முகவரியை உங்களுக்கு ஸ்க்ரோலிங்கில் அனுப்புகிறேன். மயிலை கபாலி உங்கள் முகத்தில் வரி(ஐ மீன் என்னைப்போல் 'ப்ளேடு') போடாமல் இருந்தால் உங்கள் அதிர்ஷ்டம். ஒருவேளை (அல்லது மூன்று வேளை) நீங்கள் தூங்கிக்கொண்டு இருந்தால் வெறி ஆகாமல் சில நொடி ஸ்க்ரோலிங் செய்தவாறே உருண்டு போய் அச்சேனலை பார்க்கவும்.

வாழ்த்துக்கள்,

போGO. மணிகண்டன்.
Neesaptham.calm
 .....................................................................


Posted by:

சிவகுமார் 
madrasbhavan.com