Wednesday, March 28, 2012

பயணங்கள் முடிய வாய்ப்பே இல்லை


என்னாலே மக்கா எல்லாரும் சௌக்யம்தானே. இன்னைல இருந்து ஒரு வித்யாசமான பயணப்பதிவு எழுதப்போறேன் லேய். கொலம்பஸ் பயணத்தை எல்லாம் தூக்கி சாப்புடுற தொடர்பதிவுக்கு ரெடியாகுங்க எல்லாரும். தினத்தந்தில வர்ற கன்னித்தீவு கதையை விட நாலு பாகம் அதிகம் போட்டுட்டுதான் இந்த தொடருக்கு ஓய்வு. சரி அப்படி என்ன பயணம் போனேன்? என்னெல்லாம் பாத்தேன்?.....சொல்றேன். சொல்றேன். 

அதாவது மக்கா இது ரெண்டு பயணங்களோட தொகுப்பு. மொதல்ல சொல்லப்போறது மும்பைல எங்க தெரு முனைல இருக்குற பானை பூரி கடைக்கு போன கதை. கேட்டுக்க. என்னாது பானி பூரின்னா என்னவா சரியான லகுட பாண்டியா இருக்கீங்களே. அதாம்லே.. நம்ம பூரி இருக்குல்ல பூரி. அதோட கொள்ளுப்பேத்தி சைசுல இருக்கற ஐட்டம் பேருதான் பானி பூரி. மும்பலை 'தண்ணி' அடிக்கறவங்க இதத்தான் சைட் டிஷ்ஷா வச்சி திம்பாங்க. அதான் இதுக்கு பானி பூரின்னு பேரு வந்துச்சி. அம்ரீஷ் பூரி, ஓம் பூரி இப்படி ஏகப்பட்ட பூரி இருக்குலே மும்பைல. பானி பூரிய கண்டாலே எனக்கு பூரிப்பு பீறிக்கிட்டு வரும்லேய்.

அதை சாப்புட எங்க தெருமுனைக்கு போகலாம்னு நேத்து மதியம் 12:30:59 மணிக்கு முடிவு செஞ்சேன். கருப்பு கலர் தார் ரோட்டுல (!) நடக்க ஆரம்பிச்சேன். முதல்ல வலது கால், அப்பறம் எடது காலை மாத்தி வச்சி நடந்தேன். அப்ப லேசா தென்றல் காத்து அடிச்சது. என்னா சொகம்டா.  அப்படியே என் கழுத்தை தூக்கி வானத்தை பார்த்தேன். அங்க வானம், மேகம், சூரியன்,நாலஞ்சி பறவைங்க, ஏரோப்ளேன், பானா காத்தாடி எல்லாம் பாத்தேன். போற வழில சின்ன/ஸ்மால்/ஷார்ட் பெட்டிக்கடை ஒண்ணு இருந்துச்சி. அங்க பத்து மினி அப்பளங்களை வாங்கி ஒவ்வொண்ணையும் எல்லா கை வெரல்லயும் மாட்டிக்கிட்டு சாப்டுகிட்டே போனேன். சொர்க்கம்னா அதுதாம்லே! 

  
[[ பானி பூரி கடை படக்குறிப்புகள்: கோயில், குளம், மரங்கள், பச்சை நிற இலைகள், பஞ்சு மிட்டாய் விற்கும் சிறுவன், குளத்தை வேடிக்கை பார்க்கும் சிறுவர்கள் இரண்டு பேர், இரு நடுத்தர வயது ஆட்கள், எடது ஓரத்தில் முக்கால் அளவு நிரம்பிய தண்ணீர் பக்கெட்(வெள்ளை, பச்சை கலரில்), அதே கலர் பக்கெட் கடையின் கீழேயும் உள்ளது குறிப்பிடத்தக்கது. ஆரஞ்சு, வெள்ளை நிறம் கலந்த காலி குடம், ஒரு மினி லைட், மெரூன், பச்சை நிறம் கலந்த மாலை ஒன்று, பானி பூரிகள், சுண்டல், கடாய், TN64 A 2053 பைக்கில் அமர்ந்து இருக்கும் இளைஞன், கருப்பு டயர் (உட்புறம் ஆரஞ்சு கலர்), குளத்தின் எதிர்புறம் நான்கு பேர், ஒரு எவர்சில்வர் பாத்திரம், தரையில் இரண்டு கற்கள் ]].

எல்லாரும் என்னையே திரும்பி பாத்தாங்க. நாம அப்பளம் திங்கற அழகை பாத்து கண்ணு வக்கிராங்களோன்னு நெனச்சேன். ஆனா எல்லா பயலும் என் காலையே பாத்து ஏதோ பேசிட்டு இருந்தானுவ. அது வேற ஒண்ணுமில்ல மாப்ள. பக்கத்து வீட்டு பையன் போட்டுருந்த ஷூ மேல எனக்கு ரொம்ப நாளா கண்ணு. அடிக்கடி என்னை கூப்புட்டு "மனோ மாமா பாத்தியா என் ஷூவை. கலர் கலரா லைட் அடிக்கும். நடக்கும் போது "பீங் பீங்"னு சத்தம் வரும். இது உன்கிட்ட இல்லையே" அப்படின்னு சொல்லி ஒழுங்கா காட்டுனான். இன்னைக்கி வச்சேன் அவனுக்கு ஆப்பு.அப்படியே அந்த ஷூவை அமுக்கிட்டேன். இப்ப அதை போட்டுக்கிட்டு கடைக்கு போறதை பாத்து வவுறு ஏறியது இந்த ஊரு சனம். ஒரே குஷியா இருக்கேன் மக்கா இந்த ஷூவால!!

                                                                   
பயணங்கள் முடிய வாய்ப்பே இல்லை...இது வெறும் விளம்பரம்தான். ட்ரெயிலர், லைட் எரியும் 'ஷூ' வில் இருந்து வரும் இசை வெளியீடு, மெயின் பிக்சர் எல்லாம் இனிமேதான். நீ கொடுத்த வச்சவன்டா மாப்ளை. அனுபவி !!

நடந்து போகையில் நான் ரசித்த இயற்கை காட்சிகளும், விலங்குகளும்:

                                         என் பதிவின் முதல் வரியை படித்த ஜீவனின் நிலை...     
                                               
                                        எங்கள் தெருமுனையில் இருக்கும் கட்டிடம்..

                                            பானி பூரி கடைக்கு செல்லும் பாதை
   


                                                            சூரிய அஸ்தமன காட்சி.....

                                              சூரிய உதயம்..கண்கொள்ளா காட்சி.....

இப்ப உங்க எல்லாருக்கும் ஒரு புதிர் போட்டி. கீழ இருக்கற ஆறு படத்துல மொத்தம் 8 வித்யாசம் இருக்கு. அது என்னன்னு சொல்லுங்க பாப்போம்.

                                                 
                                       
                                        

                                         
                     
                                           

                                            

                                             


என்னது ரொம்ப கஷ்டமான போட்டியா? அப்ப வேற படம் போடறேன். இதுல கொறஞ்சது 10 வித்யாசம் இருக்கு. அதை சொல்லுங்க பாக்கலாம்.

                                                                     






 
_________________________________________________________