வணக்கமுங்கோ! "கொஞ்சம் வெட்டி பேச்சு" சித்ராவின் முதல் வணக்கமுங்கோ !
நான் அதி தீவிர ரஜினி ரசிகை என்று, ரஜினியைத் தவிர எல்லோருக்கும் தெரியும்னு நினைக்கிறேன்.... அப்புறம் உனக்கு என்ன இங்கே வேலை என்று நினைக்கிறீங்களா? இருக்குப்பா.....
எனக்கு கவுண்டமணி காமெடி பிடிக்க ஆரம்பித்ததற்கும் ரஜினி தான் காரணம். முதல் தடவையா, மன்னன் படம் பார்த்த போதுதான், ரஜினி - கவுண்டமணி காம்பினேஷன்ல, கவுண்டபெல்லின் காமெடி ரசிச்சு பார்த்தேன். இன்னைக்கும் என்னுடைய ஆல் டைம் பிடிச்ச காமெடி சீன்ஸ்ல அந்த படம் இருக்குது.
எனக்கு கவுண்டமணி காமெடி பிடிக்க ஆரம்பித்ததற்கும் ரஜினி தான் காரணம். முதல் தடவையா, மன்னன் படம் பார்த்த போதுதான், ரஜினி - கவுண்டமணி காம்பினேஷன்ல, கவுண்டபெல்லின் காமெடி ரசிச்சு பார்த்தேன். இன்னைக்கும் என்னுடைய ஆல் டைம் பிடிச்ச காமெடி சீன்ஸ்ல அந்த படம் இருக்குது.
அதில ரஜினி, கவுண்டமணி சந்திக்கும் காட்சியிலேயே பட்டையை கிளப்புவாங்க...
மேலும் இந்த காட்சியில் கவுண்டமணி கொடுக்கிற பில்ட் அப் பேச்சு மாதிரி, இங்கே என்னுடைய நண்பர் ஒருவர் அவரது IT வேலையில் கேட்க வேண்டியதாக போச்சு... ஆமாம்ப்பா....
எங்கள் நண்பர், செந்தில் சென்னையில் இருந்து, ஒரு ப்ராஜெக்ட் மேனேஜர் ஆக நியமிக்கப்பட்டு கலிபோர்னியா வந்து இருந்தாப்புல. அங்கே இவர் பொறுப்பில் எடுத்துக் கொள்ள வேண்டிய அந்த ப்ராஜெக்ட் வேலைகள் குறித்த சில தகவல்கள் பகிர்ந்து கொள்ள, அந்த கம்பெனியில் வேற கன்சல்டன்ட் மூலமாக வந்த ஒரு Software engineer ஆன இன்னொரு தமிழரிடம் சொல்லி இருந்து இருக்காங்க. அவரோ, வேலைக்கு வந்து ஆறு மாதம் கூட ஆகவில்லை. ஆனால், என்னமோ கம்பெனியே, இவர் கம்ப்யூட்டர்ல தட்டுற என்டர் கீயினால் தான் ஓடுதுன்கிற லெவல்க்கு - நினைப்பில் நடந்துக் கிட்டு இருந்தாப்புல.
செந்தில்தான் ப்ராஜெக்ட்டின் மேனேஜர் என்று தெரியாமல், அந்த ஆளு எகத்தாளமா பேசி - அலட்டிக்கிட்டு செந்திலை இம்சை பண்ணியிருக்காப்புல. ரெண்டு நாள் கழிச்சு, Client கம்பெனி ஒரு மீட்டிங்கில் வைத்து, செந்திலை official ஆக அவர்கள் கொடுக்கப் போகும் அடுத்த ப்ராஜெக்ட் மேனேஜர் அவர்தான் என்று அறிவித்த பொழுது, இந்த ஆள் முகம் போன போக்கை இன்னும் செந்தில் மறக்கல.... சமீபத்தில் இந்த காமெடி சீன் பார்த்த போது, செந்தில் அந்த ஆளை பத்தி எங்க கிட்ட சொல்லி, சத்தம் போட்டு சிரிச்சார்...
இப்போ எங்களுக்கும் இந்த சீன் பார்க்கும் போதெல்லாம், அரைகுறையாக வேலை தெரிஞ்சிக்கிட்டு பெருசா சீன் விடுற காமெடி பீஸ்களை நினைச்சு சிரிக்க ஆரம்பிச்சுடுவோம். நிச்சயமாக உங்களுக்கும் இந்த மாதிரி ஒரு ஆளையாவது தெரிஞ்சு இருக்கணுமே! சிரிங்க...சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...
கவுண்டமணி காமெடி காட்சிகளில் பெரும்பாலும் - எல்லாவற்றிலும் அல்ல - ஒரு எதார்த்தம் இருக்கும்.
ஒரு சாதாரண மனிதரை, அவராலே அழகா படம் பிடிச்சு காட்ட முடியும். அதுவே அந்த காமெடி சீனில் தனிச்சு நிக்கும். நம்மையும் ரசிக்க வைக்கும்.நல்லா சிரிச்சீங்களா? மீண்டும் அடுத்த மாதம், நான் ரசித்த மற்றுமொரு கவுண்டமணி காமெடி காட்சியோடு மீண்டும் உங்களை சந்திக்கும் வரை, உங்களிடம் இருந்து விடை பெறுவது - சித்ரா!!!
32 comments:
அது சரி தான் சித்ரா...கவுண்டமணியை நாம இப்போ எல்லாம் ரொம்ப மிஸ் பண்றோம்...
மோதரம்... அந்த மோதரம்
>>>நான் அதி தீவிர ரஜினி ரசிகை என்று, ரஜினியைத் தவிர எல்லோருக்கும் தெரியும்னு நினைக்கிறேன்..
ஓப்பனிங்க்லயே சிக்ஸர்?
அரைகுறையாக வேலை தெரிஞ்சிக்கிட்டு பெருசா சீன் விடுற காமெடி பீஸ்களை நினைச்சு சிரிக்க ஆரம்பிச்சுடுவோம்.//
இது நீங்க சிபிய சொல்லலைதானே?
நிச்சயமாக உங்களுக்கும் இந்த மாதிரி ஒரு ஆளையாவது தெரிஞ்சு இருக்கணுமே! சிரிங்க...சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... ///
கண்டிப்பா தெரியும்... சிரிப்பு போலி.....வேண்டாம் விடுங்க..
ஓ.. இதுல டான்ஸ் வேற ஆட சொல்லுவாங்க போல இருக்கப்போ! ரஜினி - கவுண்டர் சூப்பர் காம்பினேசன்!
"வேலைசெய்யத் தெரியாத அளவுக்கு படிச்சிருக்கேன்!!"
"இல்ல நான் இந்தப் பக்கம் இருக்கோன்னு நெனெச்சேன்.."
"நாங்களாவது உங்கக்கிட்ட சொல்லிட்டு வந்தோம் நீங்க எங்ககிட்ட சொல்லாமலேயே வந்திட்டீங்கோ..."
"நாட்டுல இந்தத் தொழிலதிபருங்க தொல்லை தாங்ங்ங்க முடியலப்பா...."
"அட நீ வேற ஏம்ப கைவேற கால்வேற தூக்கிக்கிட்டிருக்க...."
அந்த சீனை நெனெச்சாலே கவுண்டர் தனக்கே உரிய நக்கலும்... இந்தக் காட்சியில் அவருடைய சிணுங்கலும் காதுல விழுது.... சூப்பர் ஸ்டார்ட் அக்கா! :)
அரைகுறையாக வேலை தெரிஞ்சிக்கிட்டு பெருசா சீன் விடுற காமெடி பீஸ்களை நினைச்சு சிரிக்க ஆரம்பிச்சுடுவோம். நிச்சயமாக உங்களுக்கும் இந்த மாதிரி ஒரு ஆளையாவது தெரிஞ்சு இருக்கணுமே! //
நீங்க சித்ராவை சொல்லலியே?
செம காமெடிங்க,நான் இப்ப தான் ரசிச்சு பார்த்தேன்.
சூப்பர்
haaaaa.................. haaaa....... super! my all time favourite
ஏற்கனவே பார்த்திருந்தாலும் மீண்டும் ரசிக்க கூடிய நகைச்சுவை கவுண்டமனியுடையது
நம்ம தலைவர் கவுண்டரின் தனித்தன்மையே யதார்த்தத்தை பதார்த்தமா காமெடி ஆக்குவதுதானே
மன்னன் நெல்லை சென்ட்ரல் திரை அரங்கில் பார்த்தீர்களா
நூறு நாட்கள் ஓடியது என நினைக்கிறேன்
ரசிக்க கூடிய நகைச்சுவை கவுண்டமனியுடையது
//நான் அதி தீவிர ரஜினி ரசிகை என்று, ரஜினியைத் தவிர எல்லோருக்கும் தெரியும்னு நினைக்கிறேன்//
எனக்கும் தெரியாது. இங்க வரல நான். ( ஐ.. நானும் ரஜினியும் ஒண்ணு...) :-)
இப்பத்தானே பாக்கிறேன்.இங்கயும் சிரிக்கலாமா !
semma semmaa hihi
கவுண்டர்.... வாழ்க.......!
பகிர்வுக்கு நன்றி
இந்த ப்லாக் பேஜ்ல, எனது முதல் பதிவிற்கு பின்னூட்டமிட்டும் வோட்டு அளித்தும் வரவேற்ற அன்பு உள்ளங்கள் அனைவருக்கும், என் மனமார்ந்த நன்றிகள்.
முற்றிலும் வித்தியாசமான கோணத்தில் உங்கள் அலசல் இருக்கிறது .......................
தூள் கிளப்புங்கள் ..........
மன்னன் படத்த எப்படியும் வீடியோ கேசட்டில் 6 தடவை பார்த்து இருபேன், கவுண்டமனி , ரஜினி ஜோக்ஸ் அசத்தல்,
விஜய சாந்தியின் நடிப்பும் அருமை, சூப்பர் ஹிட் பாடல் அம்மா என்றழைக்காத உயிரில்லையே..
அருமையான பகிர்வு.
மன்னன் படக்காமெடி அல்டிமெட்...
ஹெ ஹெ .. சித்ராக்கா, கலக்குங்க :)
காலங் கடந்தும் எம்மையெல்லாம் ரசிக்க வைக்கும், சிரிக்க வைக்கும் காமெடி இது. கவுண்டரின் தனித் திறமைக்கு ஈடு இணையேதுமில்லை.
அஞ்சா சிங்கம் said...
முற்றிலும் வித்தியாசமான கோணத்தில் உங்கள் அலசல் இருக்கிறது .......................
தூள் கிளப்புங்கள் ..........
February 28, 2011 8:27 PM//
அது என்ன கோணம்? கும்பகோணமா?
நான் தெரியாம தான் கேக்குறேன்..அது ஏன்னா எல்லாரும் வித்தியாசமான கோணமுன்னு சொல்லிகிறீங்க...
சித்ரா அக்கா என்ன மிஷ்கின் படத்துல கேமரா வுமனாகவா வேலை செஞ்சாங்க?
பன்னிக்குட்டி ராம்சாமி said...
கவுண்டர்.... வாழ்க.......!
February 28, 2011 10:30 AM//
ஒரு கவுண்டரே
இன்னொரு கவுண்டரை
நல்லா படிங்க...
ஒண்ணு கீழ ஒண்ணு
ஒரு கவுண்டரே
இன்னொரு கவுண்டரை
வாழ்த்துகின்றதே!!!!
பன்னிக்குட்டி ராம்சாமி said...
கவுண்டர்.... வாழ்க.......!
February 28, 2011 10:30 AM//
கவுண்டரின் கவுண்ட்டரும் வாழ்க!!!
மோதிரத்தை என்ன பன்ரது
அட எவன்ப்பா விரல்ல மாட்டிடு அசிங்கமா!!!.
கவுண்டர் Rocks..!!!
ITHUKUTNAN OORUKULLA ORU ALL IN ALLL ALAGU RAJA VENUMGIRATHU
AYYYA YEPPADI TAMIL LA TYPE PANRATHUNU SOLLI KUDUNGAYYYA
Post a Comment