யார் போலி? யார் போலீஸ்?
குறளின் குரல்:
இளைஞனே, உனக்கு மனசாட்சி இருக்கிறதா. தந்தை பணத்தை திருடி பல விந்தை செயல் புரிகிறாய். திரை அரங்கு, டாஸ்மாக், கடற்கரை இன்னும் பல இடங்களில் பொழுதை வீண் அடிக்கிறாய். எத்தனை ஆசிரியர் உனக்கு வழி காட்டினாலும் அவர்களை விழி பிதுங்க வைக்கிறாய். இனி பொறுப்பதில்லை. இதோ பொங்கும் வெள்ளமாக உன் உள்ளத்தில் நான் தங்கும் நேரம் வந்துவிட்டது.
வள்ளுவன் குரலை கேட்டு வாழாதது உன் கெட்ட நேரம். வல்லவன் தந்தை குரலை இனி நீ கேட்கப்போவது உன் நல்ல(!!!) நேரம். என் மொத்த அறிவுரையையும் கேளு. அதுக்கப்புறம் நீதான் நம்பர் ஒன் ஆளு.
கேட்டு முடிச்சிட்டீங்களா? காதுக்குள்ள குருவி சத்தம் சும்மா 'கொய்யுன்னு'
கேக்குமே. அதை சரி செய்ய கீழே உள்ள பாடலை கேளுங்கள். 'சுத்தமாக' சரி ஆயிடும்!
முழு பரவசத்தை அனுபவிக்க ஹை வால்யூமில் வைத்து கேட்கவும்.
கவுண்டரின் ஈகை குணம்:
பிரபல குணச்சித்திர நடிகர் பீலி சிவம், தனது இனிய நண்பர் கவுண்டமணி பற்றி ஒரு முறை அளித்த பேட்டி:
"நாங்கள் இருவரும் சிறு வயதில் நாடகங்களில் நடித்து வந்த காலம் அது. கவுண்டமணி என் உயிர் நண்பன். ஒரு நாள் இரவு, வீதியில் நடந்து கொண்டு இருந்தோம். இருவரும் அன்று சாப்பிடவில்லை. எனக்கு கடும் பசியாக உள்ளதென அவனிடம் கூறினேன். இருவரிடமும் பணம் இல்லை. கவுண்டமணி என்னிடம் 'சிறிது நேரம் பொறுத்திரு. இதோ வருகிறேன்' என்று சொல்லிவிட்டு சென்றான். ஒரு சில மணி நேரம் கழித்து கையில் பரோட்டா பொட்டலத்துடன் வந்தான். அதை என் கையில் தந்து விட்டு சாப்பிட சொன்னான். 'உன்னிடம் தான் பணம் இல்லையே? எப்படி வாங்கினாய்?' என்று கேட்டேன். அவன் பதில் சொல்லவில்லை. நான் தொடர்ந்து வற்புறுத்தி கேட்டதும் அவன் சொன்ன பதில் "அருகில் உள்ள ரத்த வங்கிக்கு சென்று என் ரத்தத்தை தானம் செய்து கிடைத்த பணத்தில் வாங்கினேன்" என்றான். என் கண்கள் கலங்கி விட்டன. நண்பன் பசிக்காக தன் ரத்தத்தை விற்று உணவு தந்த அவனை என் வாழ்நாளில் எப்படி மறப்பேன்".
நட்புக்கு உதாரணமாய் திகழும் தலைவர் கவுண்டமணி அவர்கள் வாழ்க பல்லாண்டு!
.........................................................
posted by:
!சிவகுமார்!
27 comments:
//"அருகில் உள்ள ரத்த வங்கிக்கு சென்று என் ரத்தத்தை தானம் செய்து கிடைத்த பணத்தில் வாங்கினேன்" //
கண்கலங்க வைக்கும் நிகழ்வுகள்...
கவுண்டமணி இம்புட்டு பாசக்காரரா!
கவுண்டமணி வாழ்க!
பதிவின் தொகுப்பு சூப்பரோ! சூப்பர்!
SUPER NANPA
கவுண்டமணி என்ற மனிதனின் இன்னொரு முகம்...
அருமை...
ம்ம்ம்...கிளாஸ்....பதிவு
//அருகில் உள்ள ரத்த வங்கிக்கு சென்று என் ரத்தத்தை தானம் செய்து கிடைத்த பணத்தில் வாங்கினேன்" என்றான். என் கண்கள் கலங்கி விட்டன. நண்பன் பசிக்காக தன் ரத்தத்தை விற்று உணவு தந்த அவனை என் வாழ்நாளில் எப்படி மறப்பேன்".
ஒரு சிறந்த மனிதர்
அய்யய்யோ கரடி.. கரடி......!
யோவ் ஒரு கரடியவே தாங்க மாட்டோம், இத்தனை கரடிய இப்படி ஒரே நேரத்துல விட்டா ஒண்ணு கெடக்க ஒண்ணு ஆயிடப் போகுதுய்யா.....!
கவுண்டரைப் பத்திய விஷேசத் தகவலுக்கு நன்றி.... நிஜமான சூப்பர் ஸ்டார் அவர்தான்!
சிவகுமார் ........கலக்கல்
ராஜகோபால், தமிழ் ஜேம்ஸ்பான்ட், சுஜீவன், டக்கால்டி, செந்தில், வேக ஆசிரியர் எல்லாருக்கும் வந்தனம்!
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
யோவ் ஒரு கரடியவே தாங்க மாட்டோம், இத்தனை கரடிய இப்படி ஒரே நேரத்துல விட்டா ஒண்ணு கெடக்க ஒண்ணு ஆயிடப் போகுதுய்யா.....//
கொஞ்சம் டேஞ்சரான ஆளுங்கதான்...பயப்படாதீங்க...தூம் தாதா!
//நா.மணிவண்ணன் said...
சிவகுமார் ........கலக்கல்//
தேங்க்ஸ் மணி!
Superb Funny video..:))))
நாங்கள் ஆட்ச்சிக்கு வந்தபிறகு தொப்புளில் பம்பரம் விட வசதி செய்து தருவோம்!
கவுண்டரின் நட்பின் ஆழமும் , மனித தன்மையும் நெகிழ் வைக்கிறது. உண்மையில் நம் பன்னி சொல்லியது போன கவுண்டமணி ஒரு சூப்பர் ஸ்டார்தான்.
மொத வீடியோ: எப்பிடியெல்லாம் பொழப்பு நடக்குதய்யா
கௌண்டமணி இதலையும் கிரேட்.
அட இன்னைக்கு ரொம்ப லேட் ஆயிடுச்சி ...............
அது என்ன கரடி கக்கூஸ் போற மாதிரி ஒரு ஸ்டில்லு ?...........
வர வர உனக்கும் குசும்பு ஜாஸ்தியா ஆகிகிட்டு இருக்கு .............
உன்ன லட்சிய தி மூ க்கா கட்சியில வலுகட்டாயமா சேர்த்து வுட்டுடுவேன் ஜாக்கிரதை ..................
நல்ல வேளை திருவள்ளுவர் ஏற்கனவே செத்துட்டார்..!! :))))))))))))))))))
ttpian said...
நாங்கள் ஆட்ச்சிக்கு வந்தபிறகு தொப்புளில் பம்பரம் விட வசதி செய்து தருவோம்//
நீங்க சின்ன கவுண்டர் ஊரா?
மாணிக்கம், ரமேஷ்..சரியா சொன்னீங்க!
//அஞ்சா சிங்கம் said...
உன்ன லட்சிய தி மூ க்கா கட்சியில வலுகட்டாயமா சேர்த்து வுட்டுடுவேன் ஜாக்கிரதை ...//
செல்வின், ஐ ஆம் பாவம்!
//அன்னு said...
நல்ல வேளை திருவள்ளுவர் ஏற்கனவே செத்துட்டார்..!//
ரைட்டு!
gud humour blog
பகிர்வுக்கு நன்றி நண்பா
கவுண்டமணி மேட்டரு சூப்பரு
super kowndaminsir ungaluku sentiment um nalla varum
Post a Comment