Monday, January 16, 2012

சென்னை புத்தக கண்கொள்ளாக்காட்சி - 2போகி, பொங்கல் அன்றும் புத்தக கண்காட்சி செல்லும் படலம் தொடர்ந்தது. பதிவர்கள் அனைவரும் டிஸ்கவரி புக் பேலஸ் ஸ்டால் அருகே நின்று நித்தம் மணிக்கணக்கில் பேசினாலும் தனது ஸ்டாலில் நிறைய புத்தகம் வாங்காம இருக்காங்களே?என்ற பதட்டம் அதன் ஓனர் வேடியப்பன் முகத்தில் வெடித்தவாறு இருந்தது வேடிக்கை. சில சமயம் "கொஞ்சம் தள்ளி நின்னு பேசுங்க" என்று பதிவர்களை ஓரம் கட்டுவதிலேயே டயர்ட் ஆகி லிட்டர் கணக்கில் தண்ணீர் குடித்து கொண்டிருந்தார். பதிவர்கள் எழுதிய புத்தகங்கள் உட்பட ஏனைய புத்தகங்கள் நிறைய விற்பனை ஆகிக்கொண்டு இருந்தது அவரது ஸ்டாலில். பழகுவதற்கு இனிமையான மனிதர். 

                                "ப்ளாக்கர்ஸ் இம்ச தாங்கலையே முருகா" - வேடியப்பன்

தன் படைப்புகளை வாங்கிய பக்தர்களுக்கு இலவச ஆட்டோக்ராப் போட்டு தந்தார் கேபிள். யார் போன் செய்தாலும் "ஹலோ..சொல்லுங்க. நானா? என்னுடைய ரசிகர்கள் கிட்ட பேசிக்கிட்டு இருக்கேன்" என்று அதகளம் செய்து கொண்டிருந்தார். நாட்டி பாய்!!

          "எத்தன?  பேஜுக்கு ஒரு கையெழுத்தா. போட்டாச்சி. போட்டாச்சி" - கேபிள்
         
நக்கீரன் ஸ்டாலை வலைவீசி தேடிக்கொண்டு இருந்தார் அரசியல் பதிவர்  கஸாலி. இலக்கியவாதிகள் பேரைக்கேட்டாலே கண்கள் சிவந்து கோபக்கனலை கக்குகிறார். 

                           "மன்னார்குடி மர்மங்கள் புத்தகம் எங்க கிடைக்கும்" - கஸாலி.  

காலையிலேயே வந்து புத்தக வேட்டையை ஆரம்பித்தனர் வேடந்தாங்கல் கருனும், கவிதை வீதி சௌந்தரும். தேர்வு நேரம் என்பதால் வேலைப்பளு அதிகம் என கூறினார். மாணவர்களுக்கும் சில புத்தகங்களை வாங்கினர். சில சௌந்தர் வேறு கடைக்கு போனதும், நர்சரி ரைம்ஸ்களை எங்களுக்கு பாடிக்காட்டினார் கருன். :)  

                "சிபியின் சில்மிஷங்கள்" புத்தகம் மட்டும் கெடைக்கலையே?"  - கருன்.

நக்கீரன் ஸ்டாலில் நம்ம அஞ்சலி இருப்பதாக செய்தி வந்தது. உள்ளே சென்று பார்த்தேன். 'அப்படிப்பார்க்காதே' என்று வெட்கப்பட்டார். "இதென்னமா வம்பா போச்சி. அதை நான் சொல்லணும். பொல்லாத பொண்ணா இருப்ப போல" என்று ஆத்திரம் பொங்க திட்டுவிட்டு வேறு கடைக்குள் நுழைந்தேன்.  

                                     'அப்படி பாக்காதே'ன்னு நெசமாத்தான் சொல்றியா?

'சுப்ரமணியபுரம்'  ஜீனியர் ஆர்டிஸ்ட் ரேஞ்சுக்கு பெல்பாட்டம், கட்டம் போட்ட சட்டையுடன் வந்தார் பிலாசபி. அந்தாளு வாங்குற புக்கு எல்லாமே ஒரு மார்க்கமா இருக்கு. கணேஷ் சார் எங்களுடன் இணைந்தார். கேபிள் சங்கர் எனும் புதிய பதிவர் பற்றியும், பத்திரிக்கை துறை அனுபவங்கள் குறித்தும் எம்மிடம் பேசினார்.  அவரிடம் அரசியல் கேள்விகளை அலசிக்கேட்டார் கஸாலி.    

                             "விலையில்லா இலவச ப்ரீ புக் எங்க கிடைக்கும்" - கணேஷ்.

"இந்தா வந்துட்டேன்" என்று சொல்லிவிட்டு மணிக்கணக்கில் காணாமல் போனார் சிராஜுதீன். அன்று புத்தக ஸ்டால்களில் இருந்த பாதிக்கும் மேற்பட்ட புத்தகங்களை அவர்தான் வாங்கி இருப்பார் போல. பல கிலோவிற்கு வாங்கிய புத்தகங்களை சில பைகள் திணற திணற அடுக்கினார். அவருக்கு எந்த உதவியும் செய்யாமல் சேரில் அமர்ந்தவாறு பொறுப்பின்றி மாலை மலர் பேப்பர் படித்து கொண்டு இருந்தார் கஸாலி. 

வேர்வை சிந்த புத்தகம் அடுக்கும் சிராஜும், பொறுப்பின்றி மேதை ஸ்டில் பார்க்கும் கஸாலியும்.                                                                
         
கஸாலி, பிரபாகர், கணேஷன் சாருடன் சுற்றிக்கொண்டு இருக்கையில் ஒரு ஸ்டாலில் எழுத்தாளர் பாலகுமாரன் அமர்ந்து இருந்தார். அவரிடம் ஒரு சந்தேகம் கேட்க முனைகையில் கணேஷ் மற்றும் கஸாலி இருவரும் மேலும் இரண்டு கேள்விகளை கேட்க சொன்னார்கள். அதைக்கேட்டு பாலகுமாரனிடம் கன்னத்தில் சப்பென அறைவாங்க எனக்கு தைரியமில்லை. எனவே மிக முக்கியமான சந்தேகத்தை கேட்க விரைந்தேன். அந்தக்கேள்வி: "சார் நீங்க ஜென்டில்மேன் படத்துக்கு வசனம் எழுதி இருந்தீங்க. எனக்கு ஒரு சின்ன சந்தேகம். டிக்கிலோனா, ஸ்பூன்லிங்...அதெல்லாம் கூட நீங்க எழுதுனதா? இல்ல கவுண்டமணி - செந்திலுக்கு ட்ராக் எழுதுற வீரப்பன் எழுதுனதா?" என்று கேட்டேன்.  
                                                               
                                                புத்தக கண்காட்சியில் பாலகுமாரன்

                                                    பாலகுமாரன் அவர்களுடன்...

 "இல்லப்பா. நாந்தான் எழுதனேன். நிறைய பேர் என்னை சீரியசான ஆளுன்னு நெனைக்கறாங்க. அப்படி இல்ல. நான் ஜாலியான ஆள்தாம்பா" என்றார். என்னை மதித்து பதில் அளித்த பாலகுமாரன் அவர்களுக்கு நன்றி.

மேதை பார்த்த போதையில் இருந்த பிலாசபியும், அஞ்சாசிங்கமும் அது தெளிய நேற்று புத்தகங்கள் வாங்க வந்தனர். ஆனால் மேதையின் பாதிப்பு அதிகமாக இருந்ததால் சீக்கிரமே மலையேறி விட்டனர்.  
...............................................................................................

"புத்தக கண்காட்சிக்கு போகும் எண்ணம் உருவான விதம்" குறித்து 10 பதிவுகள் போடுமாறு அகிலமெங்கிலும் இருந்து அழைப்போசை. என்ன செய்யலாம்..!!!
..............................................................................................


...............................
Posted by:
!சிவகுமார்!
..............................
                                       
                             

25 comments:

பால கணேஷ் said...

அடக்கடவுளே... என்னை எப்பய்யா போட்டோ எடுத்தே? வயசுப் புள்ளங்க மனசைக் கெடுக்கக் கூடாதுன்னு தானே நான் போட்டோவுக்கு போஸ் தர்றதில்ல... ஒண்ணு வாங்கினா ஒண்ணு ப்ரீயா புக்ஸ் மட்டும் கிடைக்கறதில்லையேங்கறது என் நீண்ட நாள் கவலை.

goundamanifans said...

//கணேஷ்

வயசுப் புள்ளங்க மனசைக் கெடுக்கக் கூடாதுன்னு தானே நான் போட்டோவுக்கு போஸ் தர்றதில்ல///

எத்தனை வயசு புள்ளைங்க..? அதை சொல்லுங்க...

goundamanifans said...

//கணேஷ் said...
அடக்கடவுளே... என்னை எப்பய்யா போட்டோ எடுத்தே?//

நீங்கதான சார்..நான் கண்டுக்காத மாதிரி இருக்கேன். நீ பாட்டுக்கு படமெடுன்னு சொன்னீங்க..

- இப்படிக்கு பிரபாகரன்.

பால கணேஷ் said...

ஹி... ஹி... டீன் வயசுப் புள்ளைங்க தான்... என்னது... நான் படமெடுக்கச் சொன்னேனா... எப்ப... (செலக்டிவ் அம்னீஷியா எனக்கு)

தமிழ்வாசி பிரகாஷ் said...

அட... பதிவர்களையும், அவங்க வாங்கின புத்தகங்களையும் போட்டோ புடிச்சு போட்டிருகிங்க...

ஆனா கடைசி வரை உங்க முகத்தை நல்லா காட்டவேயில்லை???

Rathnavel Natarajan said...

வாழ்த்துகள்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இன்னும் எத்தன பாகம் வரப் போகுதோ.....?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நம்ம மெட்ராஸ்பவன்காரர்,கண்காட்சில மேதைக்குன்னு ஒரு தனி ஸ்டால் போட போறாராமே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////மேதை பார்த்த போதையில் இருந்த பிலாசபியும், அஞ்சாசிங்கமும் அது தெளிய நேற்று புத்தகங்கள் வாங்க வந்தனர். ஆனால் மேதையின் பாதிப்பு அதிகமாக இருந்ததால் சீக்கிரமே மலையேறி விட்டனர். //////


இல்லேன்னா தக்காளி சூச சப்பி சப்பி குடிச்சிட்டு குப்புற படுத்திருப்பாங்க?

Philosophy Prabhakaran said...

// 'சுப்ரமணியபுரம்' ஜீனியர் ஆர்டிஸ்ட் ரேஞ்சுக்கு பெல்பாட்டம், கட்டம் போட்ட சட்டையுடன் வந்தார் பிலாசபி. //

ஏற்கனவே ஈசன்... இப்ப சுப்ரமணியபுரமா... ஒரே டெரர் படங்களா இருக்கே...

Unknown said...

சார் பிரசண்டுங்கோ!

Unknown said...

இதுதான் பாலகுமாரன் டக் :)))

CS. Mohan Kumar said...

ஏம்பா நிஜமாவே பாலகுமாரன்கிட்டே அந்த மாதிரி கேட்டீங்களா?

ரஹீம் கஸ்ஸாலி said...

பொறுப்பின்றி மேதை ஸ்டில் பார்க்கும் கஸாலியும். ////
அடப்பாவீங்களா? நான் எங்கே பார்த்தேன்? எல்லோரும் சேர்ந்து பார்க்கவச்சீங்க..... நல்லவேளை...மேதை ஸ்டில்லு பார்த்ததற்கே இப்படின்னா...படம் மட்டும் பார்த்திருந்தா...?

! சிவகுமார் ! said...

//கணேஷ் said...
(செலக்டிவ் அம்னீஷியா எனக்கு)//

வசதியா போச்சி எங்களுக்கு.

! சிவகுமார் ! said...

//Rathnavel said...
வாழ்த்துகள்.//

நன்றி ஐயா.

! சிவகுமார் ! said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
இன்னும் எத்தன பாகம் வரப் போகுதோ.....?//

"புத்தக கண்காட்சிக்கு போகும் எண்ணம் உருவான விதம்" குறித்து 10 பதிவுகள் போடுமாறு அகிலமெங்கிலும் இருந்து அழைப்போசை. என்ன செய்யலாம்..!!!

! சிவகுமார் ! said...

//

பன்னிக்குட்டி ராம்சாமி said...
நம்ம மெட்ராஸ்பவன்காரர்,கண்காட்சில மேதைக்குன்னு ஒரு தனி ஸ்டால் போட போறாராமே?//

அப்படி எல்லாம் செஞ்சி தலைவரை குறுகிய வட்டத்திற்குள் அடைக்க மாட்டோம்.

அடுத்த வருடம் 'மேதை புத்தக கண்காட்சி' வைக்கும் எண்ணம் உள்ளது...

! சிவகுமார் ! said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////மேதை பார்த்த போதையில் இருந்த பிலாசபியும், அஞ்சாசிங்கமும் அது தெளிய நேற்று புத்தகங்கள் வாங்க வந்தனர். ஆனால் மேதையின் பாதிப்பு அதிகமாக இருந்ததால் சீக்கிரமே மலையேறி விட்டனர். //////


இல்லேன்னா தக்காளி சூச சப்பி சப்பி குடிச்சிட்டு குப்புற படுத்திருப்பாங்க?//

ஏன் குப்புற படுக்கணும் ???

! சிவகுமார் ! said...

//விக்கியுலகம் said...
சார் பிரசண்டுங்கோ!//


வியட்நாம் மேதையே வருக வருக.

! சிவகுமார் ! said...

//கே.ஆர்.பி.செந்தில் said...
இதுதான் பாலகுமாரன் டக் :)))//

என்னவோ சொல்றாரே..

! சிவகுமார் ! said...

//மோகன் குமார் said...
ஏம்பா நிஜமாவே பாலகுமாரன்கிட்டே அந்த மாதிரி கேட்டீங்களா?//

ஆமாம் சார்.

! சிவகுமார் ! said...

//ரஹீம் கஸாலி said...
பொறுப்பின்றி மேதை ஸ்டில் பார்க்கும் கஸாலியும். ////
அடப்பாவீங்களா? நான் எங்கே பார்த்தேன்? எல்லோரும் சேர்ந்து பார்க்கவச்சீங்க..... நல்லவேளை...மேதை ஸ்டில்லு பார்த்ததற்கே இப்படின்னா...படம் மட்டும் பார்த்திருந்தா...//

படம் பாத்து இருந்தா புண்ணியம் கெடச்சி இருக்கும்..

goundamanifans said...

//தமிழ்வாசி பிரகாஷ் said...
அட... பதிவர்களையும், அவங்க வாங்கின புத்தகங்களையும் போட்டோ புடிச்சு போட்டிருகிங்க...

ஆனா கடைசி வரை உங்க முகத்தை நல்லா காட்டவேயில்லை???//

hi..hi..vekka vekkamaa varudhu..ponganne...

சிராஜ் said...

சிவா,
எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும். நான் புக் அடுக்கிக்கொண்டு இருக்கும் போட்டாவை யார் எடுத்தது?