Saturday, February 18, 2012

அட உங்க வூட்ல பார்ட்டி!!


                                                           எப்படி இருந்த நான்...

தல கவுண்டமணி: வீட்டுக்கு குடிவந்து நாலு மாசம் ஆச்சி. இந்த டிபன் பாக்ஸ் தலையன் வாடகையே குடுக்காம டிமிக்கி குடுக்கறானே? இன்னிக்கி படுவா அவன் காதை கடிச்சி தின்னுட வேண்டியதுதான். அதுல இருக்குற கடுக்கண வித்து அமவுண்ட்டை எடுத்துக்கணும்..

சிம்பு வீட்டு ஜன்னல் வழியே எட்டிப்பார்க்கிறார் தல. உச்சஸ்துதியில் கோஷ்டியுடன் பாடி ஆடிக்கொண்டு இருக்கிறார் சிம்பு. 

ரீட்டா: ஏ டோலு மய்யா..டோலு மய்யா..ஏ டைய்யா. ஏ பைய்யா. ஹே டும்மியிலே டும்மியிலே டும்மா  டும்மா ங்கொய்யா.

தல: என்னங்கடி இது..பய்யா கொய்யாவா? கேட்டியா கொடுமைய. இதை கட்டி கஞ்சி ஊத்த போறானே..அந்த கேனப்பய எங்க இருக்கானோ பாவம். 

சிம்பு: என்னமோ பண்ணலாம். டிஸ்கோவுக்கு போகலாம். 

தல: அது சரி..டிஸ்கோவுக்கு போயி ஆடுறத தவிர என்ன என்னமோ பண்றீங்க. பய உண்மையத்தான் சொல்லறான். 

சிம்பு: வோட்காவ போடலாம். ஓடிப்பாடி ஆடலாம். 

தல: ஓங்கி தல மேல போடறேன் இரு. இப்ப நான் குடுக்கற குடுப்புல எப்படி தெருத்தெருவா ஓடி ஓடி பாடி ஆகப்போறன்னு பாருடி ராசா..

சிம்பு: ஆல்ரெடி நேரம் ஆச்சி. பப்பும் தான மூடிப்போச்சி.

தல: வாடக குடுக்க வக்கில்லாத கம்னாட்டி. நேரம் வேற ஆகுதுன்னு பீலிங்கா. ஏன்..இந்த டாஸ்மாக்கு பக்கம் எல்லாம் போனா ஐயாவோட லட்சியத்துக்கு இழுக்கு வந்துருமாக்கும்..'பப்பா' முல்ல. படுவா.

சிம்பு:  Where is the party. ஆ உங்க ஊட்ல பார்ட்டி. 

தல: எங்க வூட்லயா? வாசல்ல கால வய்யி. மகனே..என் வீட்டு பூனையை விட்டே உன்ன கடிக்க விடறேன். 

சிம்பு: போலீசு இப்ப ரொம்ப ஸ்ட்ரிக்ட் ஆனதே. நம்ம யூத் மனசு ரொம்ப வெக்ஸ் ஆனதே. 

தல: இருக்காதா பின்னே. இந்த வாரம் மட்டும் 419 பிக்பாக்கெட்ட புடிச்சி இருக்காங்க. நீ மட்டும் சிக்குனா 420. 

சிம்பு: தா..நீ ஒன்னியும் கவலைப்படாத..நான் ஆடுனா தமிழ்நாட்டுக்கே பார்ட்டிதான். 

தல: ஆமா..பின்ன.. இப்படி ஒரு வித்தைய குற்றலாத்துல இருக்கே அதைத்தவிர யாரும் காட்டுனதே இல்ல. நீ காட்டு காட்டுன்னு காட்றா!

சிம்பு: முன்னெல்லா ஒரு பொண்ணு வேணுமுன்னா. நாங்க காலேஜுக்கும், பஸ் ஸ்டாண்டுக்கும் போவோமுங்க.    

தல: சரி..அதுக்கு என்ன இப்ப? மத்தவங்க எல்லாம் பப்ளிக் கக்கூசுக்கும், பாதாள சாக்கடைக்குமா போவாங்க? 

                                                              இப்படி ஆயிட்டேன்... 

ரீட்டா: இப்பெல்லாம் ஒரு பொண்ணு வேணுமுன்னா நீங்க க்ளப்புக்கும், பப்புக்கும் வரணுமுங்க.  

தல: யாரு. உங்கள பாக்கவா? எங்கப்பன் வீட்டு மாங்கா மரத்துல 1000 ரூவா நோட்டா தொங்குது. அதுல 20 ஐ புடுங்கிட்டு வர்றேன் மவராசி. மொதல்ல தலைக்கி எண்ணை வைங்கடி. இருங்கடி ஒரு நாளைக்கி அந்தப்பக்கம் வர்றேன். அப்ப இருக்கு ஒரு உங்களுக்கு தீபாவளி. பெத்தவனுக்கும் சேத்து இருக்கு நாலு அப்பு. 

சிம்பு: வூட்ல இருந்து போகும்போது எல்லாத்தையும் மறைக்கிற. பப்புக்குள்ள போகும்போது எல்லாத்தையும் கொறைக்கிற. 

ரீட்டா: என்ன குத்தம் சொல்லாத. சந்தோஷத்த கொல்லாத.

தல: பொடவைக்கடை பொம்ம மாட்டுனாலே போன் பண்ணி பொழுது போற வரைக்கும் பேசுவ. பக்கத்து வீட்டு பொண்ணுன்னா சும்மாவா இருப்ப. அதான். 

ஒண்ண  குத்தம் சொல்லல தாயி. சீரூட்டி, மோரூட்டி, தயிரூட்டி உன்னையும் பொம்பளையா வளத்தாங்களே உங்க மம்மி. அவங்க அட்ரசைத்தான் தேடிட்டு இருக்கேன். ஆத்தா, பொண்ணு ரெண்டு பேரையும் ஈச்ச மரத்துல கட்டி தொங்க விடறேன். அடே அடி அடடீ...!!  

சிம்பு: (ஏக வேகத்தில் ஆடுகிறார்) ஆ.. தமிழ்நாட்ல பார்ட்டி டு நைட்..

தல: பார்ட்டிதான. கொஞ்சம் பொறு மாப்ள. கேப்டன் கட்சில உன்னை சேத்து விட்டுடறேன். அதுதான் உனக்கு சரியான பார்ட்டி. என் வாடகை போனாலும் பரவா இல்ல. அவருகிட்ட உன்ன புடிச்சு குடுக்காம தூங்க மாட்டேன். 

செந்தில்: புகை பிடிப்பது உடல் நலத்திற்கு கேடு. தம்பி படம் பாக்க எவன் கூப்புட்டாலும் தலை தெறிச்சி ஓடு. 

தல: மனுநீதிச்சோழனே சொல்லிட்டாரு. கேட்டுக்கங்கப்பா. அட்வான்சையே  அறுபது இன்ஸ்டால்மென்ட்ல தந்த பய நீ. அட்வைஸ் வேறயா. டேய் தேன்கூடு தலையா. ஓடாத அங்கயே நில்லு...வாய்ல பட்டாசை கொளுத்தி போட்டுருவேன். 

துரத்திக்கொண்டு ஓடுகிறார் தல.
.....................................................................................


............................
Posted by:
!சிவகுமார்!
........................... 

    

5 comments:

முத்தரசு said...

பாட்டை - பட்டை கிளப்பிடேலே

ஹாலிவுட்ரசிகன் said...

செம பதிவு. நன்றி கவுண்டரே

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அடங்கொன்னியா இந்த டிபன் பாக்ஸ் தலையன் திருந்தவே மாட்டானா?

Learn said...

கலக்கல்

தமிழ்த்தோட்டம்
www.tamilthottam.in

anandh said...

yaruppa ithu simbuva kalaikkirathu,
avar yar theriyuma?
yaravathu therinja sollungo