எங்கள் ட்ரை சைக்கிள் பயணம் முடிந்து ஹோட்டலுக்கு திரும்பினோம். ஆபீசர் வீட்டு மொட்டை மாடியில் ஓய்வெடுக்க சென்றேன். அங்கே இருந்து பார்த்தால் தார் ரோடு, பிளாட்பாரம் போன்றவை எல்லாம் பளிச்சென தெரிகிறது. என் கண்ணில் ஒரு படு கவர்ச்சியான மஞ்சள் நிற பூ ஒன்று தென்பட்டது. அதை ரசித்து கொண்டு இருக்கும்போது இரு பெண்கள் பறித்து விட்டனர். உடனே மாடியின் பின்பக்க குழாயில் இருந்து இறங்கி சென்று அவர்களை பார்த்து 'பூக்களைத்தான் பறிக்காதீங்க..காதலைத்தான் முறிக்காதீங்க' என இடுப்பை வளைத்து பெல்லி டான்ஸ் ஆடி அந்தப்பெண்களை கலவரப்படுத்தினேன். ஆனால் அவர்கள் அதை ரசிக்கும் ஞானம் இன்றி என்னை சந்து சந்தாக விரட்டி சுழற்றி சுழற்றி அடித்தனர். பிறகுதான் தெரிந்தது அவர்கள் பூ கட்டுபவர்கள் என்று. ஆபீசருக்கு படு குஷி. வீட்டில் இருந்த பூரிக்கட்டையை அவர்களிடம் தந்து 'இன்னும் நாலு மாத்து மாத்துங்க' என்றார்.
'துளசி வாசம் மாறலாம். தவசி வாக்கு மாறாது லேய்' என்பதை உணர்த்தும் விதமாக வீட்டில் ஒரு துளசி செடியை வளர்க்கிறார் ஆபீசர். அப்படியே அவர் வீட்டை ஏற இறங்க பார்த்து விட்டு 'நீங்க கட்டுன வீடு அருமை சார்' என்றேன். என்ன கோபமோ. சப்பென கன்னத்தில் அறைந்து விட்டார்.."எத்தனை தரம் சொல்றது..இது கொத்தனார் கட்டுன வீடுன்னு" என காண்டாகி கரடுமுரடாக கத்தி விட்டார். பொறுமை இழந்த நான் தரையில் புரண்டு அழ ஆரம்பித்தேன். சாரின் சமாதானத்திற்கு செவி சாய்க்கவில்லை. அதன் பின் கொத்தனார் அந்த வீட்டை கட்டிய ஸ்டில்லை விஜயன் எனக்கு காட்டினார்(ஸ்டில் கீழே). அதை கண்டபின் சற்று அமைதியானேன். பிறகு பக்கத்து வீட்டு பையனிடம்இருந்த பத்து தேன் மிட்டாயை பிடுங்கி தின்ற பிறகுதான் என் சினம் ஆறியது.
"இன்னொரு
தடவ பயணப்பதிவு போட்டா இதாலயே மண்டைய பொளந்துருவேன்"
அதன் பின் ஆபீசர் வீட்டு பணியாட்களுக்கு என் பயணப்பதிவு ஸ்டில்களை காட்டினேன். அத்தோடு லீவில் போனவர்கள் வேலைக்கு திரும்ப ஒரு மாமாங்கம் திரும்ப வரவே இல்லையாம்.
எனக்காக பஸ் ஸ்டாண்டில் கெடையாய் கெடக்கும் நாய் நக்ஸ்
'போதும் என் பொழப்ப கெடுத்தது' என்று டவேரா காரில் மூட்டை கட்டி என்னை கிளப்பினார் சார். 'மெட்ராசை சுத்தி பாக்க போறேன். மெரினாவில் வீடு கட்ட போறேன். லைட் அவுசில் ஏறி நிக்க போறேன். மங்காத்தா அஜீத் போல கண்ணாடி போட்டுட்டு வாரேன்' என்ற பாடலை முணுமுணுத்து கொண்டே அந்த பயணத்தை அனுபவித்தேன். டயராலும், பெட்ரோ லாலும் இயங்கிய அந்தக்கார் நெல்லை சந்திப்பை அடைந்தது. கார் கதவை திறந்து வெளியே வந்தேன். அப்போது தரையில் என் கால்கள் பதிந்தன. பகல் நேரம் என்பதால் சூரிய ஒளி எங்கும் நிறைந்து இருந்தது. நான் காலால் நடக்க ஆரம்பித்தேன். ரயில் நிலையத்தில் சில ரயில்களை கண்டேன். ஆனால் இப்படி ஒரு அதிர்ச்சியை நான் எதிர்பார்க்கவே இல்லை......
ஆம்...திருநெல்வேலி சந்திப்பு எனும் போர்டை கண்டதும் என் ரத்தம் கொந்தளித்தது. மனோ-ஆபீசர் சந்திப்பு என்று போடாமல் என்ன எகத்தாளம் இருந்தால் திருநெல்வேலி சந்திப்பு எனப்போடுவார்கள். விடுவதாக இல்லை நான். அடர்த்தியாக வானில் உலவிக்கொண்டு இருந்த கார் மேகங்களை ஒரு டஜன் கையில் எடுத்து வந்து அந்த போர்டை அளித்தேன். 'தில்லி சந்திப்பு' என பெயர் மாற்றி அந்த இடத்தில் இருந்து சிதறி ஓடி எனது ட்ரெயின் அருகே வந்து விட்டேன். பாவம்....தில்லிக்கு போக, வரவிருந்த ட்ரெயின்கள் எல்லாம் இந்தப்பக்கம் வந்து ஒரே ட்ராபிக் ஜாம். 'அய்...ஏமாந்தீங்களா' என்று வலது கை ஆட்காட்டி விரலை மடக்கி அங்கு அலைந்த வடநாட்டவரை வெறுப்பேற்றி கிண்டல் செய்தேன். ஹி..ஹீ....பிறகு மும்பை ரயிலை நோக்கி ஓடினேன். என்ன பார்த்த டி.டி.ஆர். "இனிமே நெல்லை பக்கம் வந்தா சொல்லுங்க...தண்டவாளத்துல போயி படுத்துக்கறேன்" என்று அன்புடன் வழியனுப்பி வைத்தார்...
டிக்கட் வாங்க காசின்றி புட்போர்டில் ஒரு பயணம்....
பயணம் முற்றும்...(உங்களுக்கும் முற்றி விட்டது எனும் நம்பிக்கையில்..)
நீங்கள் சகஜ நிலைக்கு திரும்ப ஆபீசர் தரும் டிப்ஸ்:
மனோ உங்கள் ஊருக்கு வந்தால் ரெண்டு நாள் உங்கள் முகம் இறுகி விடும் இல்லையா? அப்படி அவர் வந்தால் வெந்நீரை நன்றாக கொதிக்கவிட்டு அந்த அண்டாவில் அவரை ஆறுமணிநேரம் மிதக்க விடுங்கள். குறிப்பாக அவருடைய கேமராவை உருவி பேரிச்சம்பழ கடையில் போட்டு விடுங்கள். அவரை உடனே அனுப்பி விடாதீர்கள். ஒரு மாதம் நன்றாக ஊறப்போட்டு வெள்ளாவியில் வைத்து வெளுத்து போடுங்கள்.
டிஸ்கி:
இப்போது நீங்கள் படித்து பரவசம் அடைந்த நெல்லை பதிவு வெறும் டீசர் ட்ரெயிலர் தான் நண்பர்களே. இதை விட பத்துமடங்கு பெரிய பதிவு விரைவில். தலைப்பு : "ஆபீசர் வீட்டு கல்யாணம். எனது மெகா பயணம். நீங்கள் பணயம்"
57 comments:
ஹா..ஹா...ஹா...
மனோ....???!!!!!
சூப்பர் தலை...அதுவும் அந்த தில்லி மேட்டர்....
இனி மனோ பயணத்தை தொடர்ந்து நமது பயணமும் தொடரும்..:)))
ஆஹா காயவச்சி தொங்க போட்டுட்டாயிங்கலேய் எலேய் விக்கி என்ற பக்கி உனக்கு இன்னிக்கு முழுக்க சிரிச்சிட்டே உன் பி ஏ கூட கடலை போட மேட்டர் கிடைச்சிருச்சு போ....
அதன் பின் ஆபீசர் வீட்டு பணியாட்களுக்கு என் பயணப்பதிவு ஸ்டில்களை காட்டினேன். அத்தோடு லீவில் போனவர்கள் வேலைக்கு திரும்ப ஒரு மாமாங்கம் திரும்ப வரவே இல்லையாம்.//
கல்யாணத்துக்கு கண்டிப்பா வாரான்களாம்...
ஆம்...திருநெல்வேலி சந்திப்பு எனும் போர்டை கண்டதும் என் ரத்தம் கொந்தளித்தது. மனோ-ஆபீசர் சந்திப்பு என்று போடாமல் என்ன எகத்தாளம் இருந்தால் திருநெல்வேலி சந்திப்பு எனப்போடுவார்கள்.//
அடடா எனக்கு இது தோணாமல் போச்சே ம்ஹும்....
என்ன பார்த்த டி.டி.ஆர். "இனிமே நெல்லை பக்கம் வந்தா சொல்லுங்க...தண்டவாளத்துல போயி படுத்துக்கறேன்" என்று அன்புடன் வழியனுப்பி வைத்தார்..//
ஹே ஹே ஹே ஹே நமக்கு அங்கேயும் ஃபேன்ஸ் இருக்காங்க...!!!
இப்போது நீங்கள் படித்து பரவசம் அடைந்த நெல்லை பதிவு வெறும் டீசர் ட்ரெயிலர் தான் நண்பர்களே. இதை விட பத்துமடங்கு பெரிய பதிவு விரைவில். தலைப்பு : "ஆபீசர் வீட்டு கல்யாணம். எனது மெகா பயணம். நீங்கள் பணயம்"//
அய் அய் அய் அய் இம்புட்டு வரவேற்ப்பு இருக்கா நமக்கு ஹீ ஹீ.....
எப்படி மனோ வலிக்காது மாதிரியே கமெண்ட் போடுற/....
கூப்பிட்ட வரணும்...புரியுதா????
பார்த்துக்க உங்களை தட்டி கேக்க ஆள் இருக்கு....
இனி நீ போடுற சிபி மாதிரியான மொக்கை போஸ்ட்-க்கு எல்லாம்
இப்படிதான் ....பதில் அடி...
அடங்கப்பா ஒரு தொல்லைய காலையில பாத்ததுக்கே தல சுத்துது...அடுத்து இன்னொன்னா சாமி முடியல!
செத்தான் மனோ என்னும் சேகரு....
//MANO நாஞ்சில் மனோ said...
அதன் பின் ஆபீசர் வீட்டு பணியாட்களுக்கு என் பயணப்பதிவு ஸ்டில்களை காட்டினேன். அத்தோடு லீவில் போனவர்கள் வேலைக்கு திரும்ப ஒரு மாமாங்கம் திரும்ப வரவே இல்லையாம்.//
கல்யாணத்துக்கு கண்டிப்பா வாரான்களாம்...//
விடாதீங்க..நக்ஸ் கிட்ட அறிமுகம் செஞ்சி அவங்களுக்கு பைபோலார் டிசார்டர் வர வச்சே தீரணும்...
//MANO நாஞ்சில் மனோ said...
என்ன பார்த்த டி.டி.ஆர். "இனிமே நெல்லை பக்கம் வந்தா சொல்லுங்க...தண்டவாளத்துல போயி படுத்துக்கறேன்" என்று அன்புடன் வழியனுப்பி வைத்தார்..//
ஹே ஹே ஹே ஹே நமக்கு அங்கேயும் ஃபேன்ஸ் இருக்காங்க...!!!//
என்னது ஃபேன்சா??? அட கர்த்தரே..கர்த்தரே...
//விக்கியுலகம் said...
அடங்கப்பா ஒரு தொல்லைய காலையில பாத்ததுக்கே தல சுத்துது...அடுத்து இன்னொன்னா சாமி முடியல!//
அதே தொல்லைதான். டிசைன் மட்டும் மாறி இருக்கு. எம்.ஜி.ஆர். மாதிரி கன்னத்துல மரு வச்சிக்கிட்டு..:))
இணையத்தில் வருமானம் ஈட்ட ஒரு எளிய வழிமுறை!
Visit Here : http://mytamilpeople.blogspot.in/2012/04/wazzub-opportunity-of-lifetime.html
இணையத்தில் வருமானம் ஈட்ட ஒரு எளிய வழிமுறை!
Visit Here : http://mytamilpeople.blogspot.in/2012/04/wazzub-opportunity-of-lifetime.html
யோவ்! நக்சு இன்னா நீ சிபிய தாக்கி கமெண்ட் போட்டிட்டே இருக்க....இது நல்லாயில்ல ஆமா சொல்லிபுட்டேன்! நீ கிண்டல் பண்றதா இருந்தா மனோவ கிண்டல் பண்ணு, நம்ம பதிவுகளுக்கு வராத ஆள கிண்டல் கூட பண்ணக்கூடாது ஆமா.....
ஆமா அது யாரு சிபி ?????????
தமிழ்மகன் said...
இணையத்தில் வருமானம் ஈட்ட ஒரு எளிய வழிமுறை!
Visit Here : http://mytamilpeople.blogspot.in/2012/04/wazzub-opportunity-of-lifetime.html/////
சார் மனோவின் 499 போட்டாவுக்கு எதாவுது போட்டு கொடுங்க சார்.....
NAAI-NAKKS said...
ஆமா அது யாரு சிபி ?????????/////
எங்க மனோவ ஒன்னு விட்ட அப்புச்சி!
//வீடு சுரேஸ்குமார் said...
யோவ்! நக்சு இன்னா நீ சிபிய தாக்கி கமெண்ட் போட்டிட்டே இருக்க....இது நல்லாயில்ல ஆமா சொல்லிபுட்டேன்! நீ கிண்டல் பண்றதா இருந்தா மனோவ கிண்டல் பண்ணு, நம்ம பதிவுகளுக்கு வராத ஆள கிண்டல் கூட பண்ணக்கூடாது ஆமா.....//
ஆமாம். அதுவும் சரிதான். அடுத்த பொங்கல் நக்சுக்கு வச்சிருவோம்.
எங்க விட்டார்.....???
காலுக்கு நடுவிலையா????
//வீடு சுரேஸ்குமார் said...
தமிழ்மகன் said...
இணையத்தில் வருமானம் ஈட்ட ஒரு எளிய வழிமுறை!
Visit Here : http://mytamilpeople.blogspot.in/2012/04/wazzub-opportunity-of-lifetime.html/////
சார் மனோவின் 499 போட்டாவுக்கு எதாவுது போட்டு கொடுங்க சார்.....//
காது மேல வேணும்னா போட்டு அனுப்புவாங்க..
//வீடு சுரேஸ்குமார் said...
NAAI-NAKKS said...
ஆமா அது யாரு சிபி ?????????/////
எங்க மனோவ ஒன்னு விட்ட அப்புச்சி!//
மனோ செவுல்ல ஏகப்பட்ட ஆளுங்க அப்பிச்சி. அதுல யாரு இந்த அப்புச்சி??
NAAI-NAKKS said...
எங்க விட்டார்.....???
காலுக்கு நடுவிலையா????////
யோவ்! நீ பெரிய மனுசனா?
//தமிழ்மகன் said...
இணையத்தில் வருமானம் ஈட்ட ஒரு எளிய வழிமுறை!
Visit Here : http://mytamilpeople.blogspot.in/2012/04/wazzub-opportunity-of-lifetime.html//
என்னை வெறிகொண்ட வேங்கை ஆக்கிறாதீங்க. அப்படியே தலைமறைவு ஆயிடுங்க..
நான ரொம்ப சின்ன பையன் ....
அங்க இருந்துதானே ஒன்னுக்கு விடமுடியும்??????
NAAI-NAKKS said...
நான ரொம்ப சின்ன பையன் ....
அங்க இருந்துதானே ஒன்னுக்கு விடமுடியும்??????///////
உங்க வீட்ல உம்மை அடிக்கறது தப்பேயில்லைய்யா......இருடி நாட்டாமை மெயிலுக்கு இந்த கமெண்ட்டை அனுப்புகிறேன்......பெ
NAAI-NAKKS said...
நான ரொம்ப சின்ன பையன் ....
அங்க இருந்துதானே ஒன்னுக்கு விடமுடியும்??????///////
உங்க வீட்ல உம்மை அடிக்கறது தப்பேயில்லைய்யா......இருடி நாட்டாமை மெயிலுக்கு இந்த கமெண்ட்டை அனுப்புகிறேன்......பெ
இவனுக புதுசு புதுசுசா வேற பேருல
வரானுகலே....
முடியலை....
இவனுக போன் நம் வாங்கி தாங்க...
நைட்-ல போன் பண்ணி விவரம் கேப்போம்...
//வீடு சுரேஸ்குமார் said...
NAAI-NAKKS said...
நான ரொம்ப சின்ன பையன் ....
அங்க இருந்துதானே ஒன்னுக்கு விடமுடியும்??????///////
உங்க வீட்ல உம்மை அடிக்கறது தப்பேயில்லைய்யா......இருடி நாட்டாமை மெயிலுக்கு இந்த கமெண்ட்டை அனுப்புகிறேன்.//
சீக்கிரம் மண்டைய ஒடச்சி மாவிளக்கு வைங்க..
NAAI-NAKKS said...
இவனுக புதுசு புதுசுசா வேற பேருல
வரானுகலே....
முடியலை....
இவனுக போன் நம் வாங்கி தாங்க...
நைட்-ல போன் பண்ணி விவரம் கேப்போம்.../////////////////
விடுய்யா ஒரு கமெண்ட் பார்ட்டி ஒன்னை போட்டு தள்ள தேடிகிட்டு இருக்கிறாரு ஜாக்கிரதை!
விடுய்யா ஒரு கமெண்ட் பார்ட்டி ஒன்னை போட்டு தள்ள தேடிகிட்டு இருக்கிறாரு ஜாக்கிரதை!////
அது யாருயா....?????
இன்னும் நம்ம போன் அட்டேன் பண்ணலையா??????
NAAI-NAKKS said...
விடுய்யா ஒரு கமெண்ட் பார்ட்டி ஒன்னை போட்டு தள்ள தேடிகிட்டு இருக்கிறாரு ஜாக்கிரதை!////
அது யாருயா....?????
இன்னும் நம்ம போன் அட்டேன் பண்ணலையா??????////
அட்டென் பண்ணினா மண்டைய போட்டுருவோம்ன்னு தெரிஞ்சு போச்சி.....
அர்உம்அஇ.
ஒரு கொலைகார கும்பல் கிட்ட மனோ சிக்கிகிட்டாரு பா ..
Gumthathaa!
வெளங்காதவன்™ said...
Gumthathaa!
>>>>>>>>>>>>>>>>>>>>>>>
பங்கு உம்மை யாருய்யா இங்க வரச் சொன்னது..., பாரு மாடு வெள்ளாமை காட்டுக்குள்ள பூந்திருச்சு!ஒழுங்கா மாட்டை பாருய்யா.....!
FOOD NELLAI said...
//வீடு சுரேஸ்குமார் said...
யோவ்! நக்சு இன்னா நீ சிபிய தாக்கி கமெண்ட் போட்டிட்டே இருக்க....இது நல்லாயில்ல ஆமா சொல்லிபுட்டேன்! நீ கிண்டல் பண்றதா இருந்தா மனோவ கிண்டல் பண்ணு, நம்ம பதிவுகளுக்கு வராத ஆள கிண்டல் கூட பண்ணக்கூடாது ஆமா.....//
அவரு பெரிய அப்பாடக்கருங்க. ஏன்னா, அவரு பதிவையே அவரு பார்க்கிறதில்ல. யாரோ பப்ளிஷ் பண்றாங்க.இதில உங்க பதிவுக்கெல்லாம் வர முடியுமா?/////
சிபி......இதுக்கு மேலயும் நீ போஸ்ட் போடணுமா???
எப்படி இருந்தாலும் யார் சொன்னாலும்,.,,
அந்த கூகிள் காரனே சொன்னாலும்.....
கேக்கபோறதில்லை ...என்ன சொல்லி என்ன பிரயோஜனம்....
எங்க தலை எழுத்து...
"பார்த்து" வைக்கிறோம்....
[[படிக்கிறது இல்லை....]]
///////எனது பலகோடி கி.மீ. பயணத்தில் ஒரு சின்ன ஸ்பீட் ப்ரேக்!!/////////
அண்ணன் இன்னேரம் நெப்டியூன் பக்கத்துல போய்ட்டு இருப்பாரு............
///////எங்கள் ட்ரை சைக்கிள் பயணம் முடிந்து ஹோட்டலுக்கு திரும்பினோம். ஆபீசர் வீட்டு மொட்டை மாடியில் ஓய்வெடுக்க சென்றேன். ////////////
யோவ் ஹோட்டலுக்கு திரும்பிட்டு அப்புறம் ஆபீசர் வீட்டு மொட்டை மாடிக்கு எப்படியா போனே? (ஓ... அது ஒரு தனிப்பதிவா வருமோ?)
//////அங்கே இருந்து பார்த்தால் தார் ரோடு, பிளாட்பாரம் போன்றவை எல்லாம் பளிச்சென தெரிகிறது. //////////
இன்னும் கொஞ்சம் உத்துப்பார்த்திருந்தா ட்ரைனேஜே தெரிஞ்சிருக்குமே?
//////அதன் பின் கொத்தனார் அந்த வீட்டை கட்டிய ஸ்டில்லை விஜயன் எனக்கு காட்டினார்(ஸ்டில் கீழே). அதை கண்டபின் சற்று அமைதியானேன். //////////
அதானே அண்ணனை அப்படியெல்லாம் சும்மா ஏமாத்திட முடியுமாலே?
/////பிறகு பக்கத்து வீட்டு பையனிடம்இருந்த பத்து தேன் மிட்டாயை பிடுங்கி தின்ற பிறகுதான் என் சினம் ஆறியது.///////////
தலைவரு வெறும் வாய்ல சைட் டிஷ் திங்க மாட்டாரே?
/// "இன்னொரு தடவ பயணப்பதிவு போட்டா இதாலயே மண்டைய பொளந்துருவேன்" /////////
பதிவர்களை மீட்க வந்த நாயகனே நீ வாழ்க......
///// டயராலும், பெட்ரோ லாலும் இயங்கிய அந்தக்கார் நெல்லை சந்திப்பை அடைந்தது. கார் கதவை திறந்து வெளியே வந்தேன். அப்போது தரையில் என் கால்கள் பதிந்தன. பகல் நேரம் என்பதால் சூரிய ஒளி எங்கும் நிறைந்து இருந்தது. நான் காலால் நடக்க ஆரம்பித்தேன். ரயில் நிலையத்தில் சில ரயில்களை கண்டேன். /////////
என்ன ஒரு யதார்த்தம்...? வரிகளில் பின்நவீனத்தின் மாட்சிமைகளை உருவகப்படுத்திய குறியீடுகளின் ஒலியற்ற சொற்கள் வெளிப்படுத்தும் பொருள் அறிந்து உவக்கிறேன்.
///////ஆம்...திருநெல்வேலி சந்திப்பு எனும் போர்டை கண்டதும் என் ரத்தம் கொந்தளித்தது. மனோ-ஆபீசர் சந்திப்பு என்று போடாமல் என்ன எகத்தாளம் இருந்தால் திருநெல்வேலி சந்திப்பு எனப்போடுவார்கள்.////////////
இதுக்கு காரணமான காங்கிரஸ் அரசையும் இத்தாலிக்காரர்களையும் சும்மா விடமாட்டோம்.
இப்படிக்கு
பயணக்கட்டுரை அறிஞர் மனோ பாசறை
/////பாவம்....தில்லிக்கு போக, வரவிருந்த ட்ரெயின்கள் எல்லாம் இந்தப்பக்கம் வந்து ஒரே ட்ராபிக் ஜாம்.///////////
தில்லியையே பல்லியாக்கிய கில்லியே.... நீ வாழ்க.............
//////டிக்கட் வாங்க காசின்றி புட்போர்டில் ஒரு பயணம்..../////////
மனோகிட்டயே டிக்கட் கேட்ட அந்த டிடிஆரை ஊரை விட்டு ஒதுக்கி வைக்கிறேன், இனி ஆரும் அந்த ட்ரைன்ல போகப்படாது, ஆரும் அந்த டேசன்ல பொழங்கப்படாது, இதுதாம்ல என்ற தீர்ப்பு.........
//////பயணம் முற்றும்...(உங்களுக்கும் முற்றி விட்டது எனும் நம்பிக்கையில்..)//////////
ஆம் முற்றி இருக்கிறது, சிலருக்கு உள்மூலம், சிலருக்கு வெளிமூலம் என்று பகுதி பகுதியாக முற்றி இருப்பதாக தெரிகிறது.
//////அவரை உடனே அனுப்பி விடாதீர்கள். ஒரு மாதம் நன்றாக ஊறப்போட்டு வெள்ளாவியில் வைத்து வெளுத்து போடுங்கள்.///////////
எம்ஜிஆரு மாதிரி தகதகதகவென மின்னும் மனோவை வெள்ளாவியில் வைத்து வெளுக்க சொல்லும் விசமத்தனத்தை கண்டிக்கிறேன்.
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
எம்ஜிஆரு மாதிரி தகதகதகவென மின்னும் மனோவை வெள்ளாவியில் வைத்து வெளுக்க சொல்லும் விசமத்தனத்தை கண்டிக்கிறேன்.//
வெயிலுக்கு தெரியாமல் வளர்ந்த மனோ மீதான இவ்வரிகளுக்கு எங்கள் மீது நாங்களே கண்டன தீர்மானம் நிறைவேற்றுகிறோம் என்பதை....
// "ஆபீசர் வீட்டு கல்யாணம். எனது மெகா பயணம். நீங்கள் பணயம்" //
அருமை அருமை
hii.. Nice Post
Thanks for sharing
More Entertainment
For latest stills videos visit ..
.
Post a Comment