Wednesday, January 16, 2013

சென்னை புக் ஃபேர் - ஜாலி பட்டாசுகள்



சம்பவங்கள் நடந்த நாள்: ஜனவரி 13 ஞாயிறு

மதியம் 2 மணிக்கு நடக்கும் விழா ஒன்றில் மணிவாசகர் பதிப்பகம் 30 நூல்களை வெளியிடுகிறது என்றும்  சிறப்பு விருந்தினர்களில் ஒருவராக புதிய பவர் ஸ்டார் ராஜகுமாரன் வருகிறார் என்ற செய்தியும் பரபரப்பை அதிகப்படுத்தியது. தலைவனை தரிசிக்க பிலாசபி, அஞ்சாசிங்கம், கே.ஆர்.பி. ஆகியோர் மேடையை ஸ்கேன் செய்து பார்த்தோம். எங்கள் துரதிர்ஷ்டம் ஆள் வரவே இல்லை. திருமாவளவன், 'ஆரோகணம்' இயக்குனர் லக்ஷ்மி ஆகியோர் முன் வரிசையில் இருந்தனர்.

                                              நான் லாங் ஜம்ப் பண்ணி ஓடிய ஸ்டால்            

நல்லி குப்புசாமி மைக்கை பிடித்தார். முதன் முறை அவர் பேச்சை கேட்டேன். ஆறிப்போன பொங்கலை அர்த்த ராத்திரியில் சாப்பிட்ட உணர்வு. பேசுகிறார். பேசுகிறார். பேசிக்கொண்டே இருக்கிறார். எந்த சுவாரஸ்யமும் இன்றி. பல்வேறு அமைப்புகளில் தலைவராக இருக்கும் இவர் இனி தயவு செய்து ஓரிரு நிமிடங்கள் பேசிவிட்டு அமர்வது (யாவருக்கும்) நலம். அடுத்து ஒரு பெரியவர் உணர்ச்சி கொப்பளிக்க பேசினார்: 'மேடையை நேர்த்தியாக அமைத்து இருக்கும் அன்பர்களின் கீர்த்தியை சொல்லிவிட்டு என் பேச்சை பூர்த்தி செய்கிறேன்'. (மிச்சம் வைத்தது ஆர்த்தி மற்றும் மூர்த்தியைத்தான்). வடிவேலு பெட்டிக்கடை வைத்திருப்பார் ஒரு படத்தில். அப்போது சிங்கமுத்து சிறுவர்கள் உண்ணும் தின்பண்டம் ஒன்றை கேட்டவுடன் வடிவேலு 'இன்னும்மா இதுகளை திங்கற' என ஆச்சர்யமாய் கேட்பார். அதுபோல 2013 லயும் இப்படி பேசிக்கிட்டு திரியறாங்க நம்ம ஆளுங்க.         

                                          நான் ட்ரிப்ள் ஜம்ப் பண்ணி ஓடிய ஸ்டால்                            
                                
"இதுக்கு மேல இன்னும் நெறைய பேரு பேசுவாங்கப்போய். புத்தகம் பார்க்க போகலாம்" என்று அனைவரும் உள்ளே நுழைந்தோம்.  அந்த நாள் முழுக்க அஞ்சாசிங்கத்தின் அடாவடிகள் ஆகாசத்தை தாண்டின. ஆதாரங்கள் பின்வருமாறு:

முன்சொன்ன மேடையில் பதிவர் கவியாழி கண்ணதாசனின் கவிதை நூல் வெளியீடும் இருந்தது. முக்கிய புள்ளி ஒருவர் பொன்னாடைக்கு பதில் அண்ணனுக்கு ரோஸ் கலர் டர்க்கி டவலை போர்த்தியதை வன்மையாக கண்டிக்கிறோம். விழா முடிந்ததும் புத்தக சந்தைக்குள் வேகமாக வந்தார் கவியாழி. அனைவருக்கும் தனது நூல் மற்றும் காலெண்டர் ஒன்றை பரிசளித்தார். 'நடமாடும் ஷாப்பிங் மால்' பட்டிக்ஸின் வலது கை மட்டும்தான் சும்மா இருந்தது. அதிலும் காலண்டர் சொருகப்பட அறுப்புக்கு வந்த ஆடு போல முழித்தார்(படத்தை பாருங்கள்). கவியாழியின் ஜிகு ஜிகு ஜிப்பாவை கண்டு அஞ்சா சிங்கமே ஒரு கணம் மிரண்டு போனார். "எலேய். நீங்க எங்களை ஓட்டிட்டு இருந்ததை   மேடைல இருந்து பாத்துட்டுதான் இருந்தேன்" என்று கவியாழி படபடப்புடன் கூறிவிட்டு மாயமாய் பறந்தார்.                                    
                                                         
                           அஞ்சாசிங்கம்: "அண்ணே ஜிப்பா கண்லயே நிக்குது. ஜிப்பா சூப்பர்"      

இவ்வாண்டு அஞ்சா லயன் கண்காட்சிக்கு வரும் முதல் நாள் இது. அதற்கு முன்பு வரை பிளாஸ்டிக்/எவர்சில்வர் டம்ளர்களில் தண்ணீர் வைத்து இருந்தனர். ஆனால் தாகத்திற்கு சிங்கம் தண்ணி அடிக்க தொட்டி நோக்கி ஓடிய நேரம் பார்த்து அலுமினிய சங்கிலியில் டம்ளரை மூன்று முடிச்சு போட்டு கட்டி சிங்கத்தை அசிங்கப்படுத்தியது 'என்ன கொடும சரவணா':  

                                   'ஹே...தண்ணி கேன் தேடி வந்த சிங்கக்குட்டி நான்'         


                          கே.ஆர்.பி.:   உலகம் சுற்றும் வாலிபனும், உலகம் சுற்றும் வாலிபனும்                


    "சொப்பன சுந்தரி காரை எங்க பார்க் பண்ணி இருக்காங்கன்னா கேக்கற. இந்தா வாங்கிக்க"   

               புலவர் ஐயாவை மதிக்காமல் புள்ளிமானை சைட் அடிக்கும் சில்லி சிங்கம்.
       
     
                          கண்காட்சியின் கவர்ச்சி அம்சம்: பிலாசபியின் பின்னங்கால்                                                             

                              கள்ளம் கபடம் இல்லாத வெள்ளை உள்ளம் கொண்ட பதிவர்


மேலும் சில சிறப்பு படங்கள். அடுத்த பதிவில்.

...................................................

' 2012 சிறந்த(?) பதிவர்கள்' விருதுத்தேர்வு ஜரூராக நடந்து வருகிறது. அவார்ட் வழங்கும் வைபோகம் விரைவில்.
.................................................




16 comments:

பால கணேஷ் said...

வெள்ளை உள்ளத்தை கலர் சட்டை போட்டு மறைத்த அந்தப் பதிவரை வன்மையாக கண்டிக்கிறேன். அஞ்சா சிங்கத்தின் அட்ராகுட்டி. ச்சே... அட்ராசிட்டி அருமை. உலகம் சுற்றிய வாலிபன்கள் படததை ரசித்தேன்.

பட்டிகாட்டான் Jey said...

// கள்ளம் கபடம் இல்லாத வெள்ளை உள்ளம் கொண்ட பதிவர் //

உனக்கு ஒரு தனிப்பதிவு ஒன்னை எழுதி, அதை பிளஸ்ல இழுத்துபோட்டு காரப்பொங்கல் ஒன்னு வச்சாத்தான் சரிப்பட்டு வருவே போலயே...:-)))

Unknown said...

கள்ளம் கபடம் இல்லாத வெள்ளை உள்ளம் கொண்ட பதிவர்
/////////////////////////////
அது யாருய்யா அது அப்படியெல்லாம் வலைதளத்தில யாரும் இல்லையே...?
அந்த ஆளை ஜீப்ப வுட்டு இறக்குங்கய்யா....!அந்த ஆளை!

Unknown said...

பட்டிகாட்டான் Jey said...
// கள்ளம் கபடம் இல்லாத வெள்ளை உள்ளம் கொண்ட பதிவர் //

உனக்கு ஒரு தனிப்பதிவு ஒன்னை எழுதி, அதை பிளஸ்ல இழுத்துபோட்டு காரப்பொங்கல் ஒன்னு வச்சாத்தான் சரிப்பட்டு வருவே போலயே...:-)))
////////////////////////
மூத்திர சந்துல எத்தனை அடிச்சாலும் நானும்...ரவுடி..நானும் ரவுடின்னு கூவ எங்க தானை தலைவன் பட்டிஸ்னால மட்டுமே முடியும் என்பதை தாழ்மையுடன் காரி துப்பி தெரிவித்துக் கொள்கின்றேன்...!கர்ர்ர்ர்ர்ர்ர்ர்தூ...........!

cheena (சீனா) said...

அன்பின் கவுண்டமணி ஃபேன்ஸ் - புத்தகக் கண்காட்சி விஜயம் பற்றிய பதிவு நன்று - கண்காட்சியினைப் பற்றி எழுத வில்லையே - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

goundamanifans said...

@ பாலகணேஷ்

அடுத்த வாரம் நமது போட்டோ ஷூட் மாடலே நீங்கதான் சார்.

goundamanifans said...


//பட்டிகாட்டான் Jey said...
// கள்ளம் கபடம் இல்லாத வெள்ளை உள்ளம் கொண்ட பதிவர் //

உனக்கு ஒரு தனிப்பதிவு ஒன்னை எழுதி, அதை பிளஸ்ல இழுத்துபோட்டு காரப்பொங்கல் ஒன்னு வச்சாத்தான் சரிப்பட்டு வருவே போலயே...:-)))//

கலாய்க்கிறாராம்!!

goundamanifans said...

//வீடு சுரேஸ்குமார் said...
கள்ளம் கபடம் இல்லாத வெள்ளை உள்ளம் கொண்ட பதிவர்
/////////////////////////////
அது யாருய்யா அது அப்படியெல்லாம் வலைதளத்தில யாரும் இல்லையே...?
அந்த ஆளை ஜீப்ப வுட்டு இறக்குங்கய்யா....!அந்த ஆளை!//

லெஸ் டென்ஷன் மோர் வொர்க். மோர் வொர்க் லெஸ் டென்ஷன்!!

goundamanifans said...


//cheena (சீனா) said...
அன்பின் கவுண்டமணி ஃபேன்ஸ் - புத்தகக் கண்காட்சி விஜயம் பற்றிய பதிவு நன்று - கண்காட்சியினைப் பற்றி எழுத வில்லையே - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா//

இக்குழு பதிவர்கள் தமது சொந்த தளங்களில் புத்தகம் பற்றி எழுதுவதும், இத்தளத்தில் சந்தோஷ நிமிடங்களை பகிர்வதுமே வாடிக்கை ஐயா.

புதுகை.அப்துல்லா said...

' 2012 சிறந்த(?) பதிவர்கள்' விருதுத்தேர்வு ஜரூராக நடந்து வருகிறது.

//

இது வேறயாஆஆஆஆ??

பால கணேஷ் said...

அடுத்த வாரம் நமது போட்டோ ஷூட் மாடலே நீங்கதான் சார்.

///அது உன்னைய நோக்கித்தான் வருது... ஓடிட்ரா கணேஷ்... ஓடிரு!

Sivakumar said...

//புதுகை.அப்துல்லா said...
' 2012 சிறந்த(?) பதிவர்கள்' விருதுத்தேர்வு ஜரூராக நடந்து வருகிறது.

//

இது வேறயாஆஆஆஆ??
ஆமாண்ணே. ஜட்ஜா வந்தீங்கன்னா சந்தோஷம்!

Sivakumar said...


//பால கணேஷ் said...
அடுத்த வாரம் நமது போட்டோ ஷூட் மாடலே நீங்கதான் சார்.

///அது உன்னைய நோக்கித்தான் வருது... ஓடிட்ரா கணேஷ்... ஓடிரு!//

சந்துக்கு ஒரு ஒளிப்பதிவாளரை வாடகைக்கு வச்சி வளச்சி பிடிப்போம்ல.

வவ்வால் said...

குட்டிகளின் மனங்கவர்ந்த வெள்ளை உள்ளத்துக்காரர் ,லாங் ஷாட்டில் யாரையோ கவர் செய்யறாப்போல இருக்கே :-))

# 10 ரூவா டம்ளருக்கு 30 ரூவா சங்கிலி போட்டுக்கட்டுற டமிலர் கலாச்சாரம் மாறாமல் இருப்பதை இப்பதிவு வரலாற்றில் பதிவு செய்கிறது, இவ்வரலாற்று சிறப்புமிக்க பதிவில் தனது இருத்தலையும் பதிவு செய்த அஞ்சா ஸிங்கம் ,தமிழ் மண்ணும், தமிழ் வரலாறும் உள்ளகாலம் வரையில் நினைவுக்கூறப்படுவார் :-))

Paleo God said...

அருமையான அறிந்துகொள்ளவேண்டிய விவரங்கள், தொடருங்கள்.

வவ்வால் said...

// தொடருங்கள்.//

என்னமோ சூப்பர் ஃபிகர் முன்னாடி போறாப்போல தொடருங்கள்னு சொல்லுறாரே ஷங்கர்ஜி ...அவ்வ் :-))

இந்த டெம்ப்ளேட் கமெண்ட் போடுறவங்களை எல்லாம் மவுண்ட் ரோட்டில உச்சி வெயிலில் குப்புற படுக்க வச்சாத்தான் திருந்துவாங்க போல :-))