இந்தியன் ஏர்லைன்ஸ் புட்போர்ட் ட்ராவல் கொடுமை முடிந்து கச கச சென்னை வெயிலில் கால் பதிக்கிறார் கானா புகழ் அப்து அண்ணன்:
அப்து: போதும் நிப்பாட்டுய்யா வண்டிய. (சலிப்புடன்) ஏர் ஹோஸ்டசை மாத்துங்கடான்னா கேக்கறானுங்களா....
தமிழ்நாட்டு பார்டரை தாண்டாத லோக்கல் பதிவர் அண்ணனை வரவேற்கிறார்.
லோக்கல் பதிவர்: ஏன் மச்சா.. கானா போயிட்டு வந்தீங்களே..எனக்கு ஒரு ஜீன்ஸ் வாங்கிட்டு வரக்கூடாதா..
அப்து: இந்த மாதிரி கலர் ஜீன்ஸ் எல்லாம் போடறதுக்கு ஒனக்கு ஒரு தகுதி வேணும்டா. கருவாப்பயலே. ஏன்டா எவ்வளவு நாளைக்கிதான்டா மாசக்கூலி, ப்ளஸ்ஸு, ஃபேஸ் புக்னு திரியப்போறீங்க? என்ன மாதிரி நியூயார்க், கானா போனமா, ஜர்னலிசம் படிச்சி ISD புகழ் வாங்குனமா, சென்ட் அடிச்சமா, செட்டில் ஆனமான்னு இல்லாம...இன்னு உங்கப்ப ஈசாக்கு மாதிரியே திரியறியேடா..
லோ.ப : மச்சா...முன்ன விட நீரு இப்ப ரொம்ப ஜில்ல்ல்லுனு இருக்கீரு...
அப்து: மாப்ள நா மட்டுமாடா ஜில்லுனு இருக்கேன். கானாவே ஜில்லுனு தான்டா கெடக்கு. ஏன்டா மாப்ள. கானா மலைப்பாம்ப பாத்து இருக்கியாடா நீயி?
லோ.ப : நா எங்க பாத்தேன். நீருதான் சரவணா ஸ்டோர்ஸ் போயிட்டு வர்ற மாதிரி பொசுக்கு பொசுக்குன்னு எல்லா நாட்டுக்கும் போயிட்டு வர்ரீறு...
அப்து: அதுக்கெல்லாம் ஒரு யோகம் வேணுமடா. மாப்ள..அந்த ஊரு பாம்ப நான் உத்து பாத்ததும் என்ன கொத்த வந்துருச்சி..
லோ.ப : அப்படியா?
அப்து: பின்ன. விடுவனா நானு. கழுத்தா மட்டைல நாலு போட்டு தோலுரிச்சி கட்டுன பெல்ட் தான்டா இது. இதெல்லாம் அனுபவிக்காம உள்ளூர்லயே சைக்கிள் தள்ளிட்டு திரியறயே...சனியனே...சனியனே...
லோ.ப : அப்ப என்னத்துக்கு நீரு திரும்ப இங்க வந்தீரு..
அப்து: டேய்....என்னடா பொசுக்குன்னு மரியாத இல்லாம பேசிப்புட்ட? ஏன்டா இங்க வந்து நாலு கட்சி தலைவருங்கள பாக்கனுமே, மண்ணை மாத்தனுமேன்னு பிரயாசப்பட்டு வந்தா....எடு செருப்ப ராஸ்கல்.
_______________________________________________
5 comments:
ஹா...ஹா... ஜில்ல்ல்லுனு கலாய்ப்பு...?!
நல்ல காமடியான வசனங்கள் ரசிக்கும் படி இருந்தது.
செம!
எப்பவாச்சும் இப்படி காமெடி ?
இன்னைக்கு நானா? நடத்துண்ணே நடத்து நடத்து :)))
Post a Comment