கடந்த சில நாட்களாக தமிழ் பேசும் நல்லுலகில் நமது வயிற்றை கலக்கி வருவது இயக்குனர் லிங்குசாமியின் 'லிங்கூ' கவிதை தொகுப்பு. நேற்று அன்னாரது படைப்பை வாசிக்கும் பாக்கியம் பெற்றேன்(நன்றி டிஸ்கவரி புக் பேலஸ் வேடியப்பன் அவர்கள்). அதிகபட்சம் பத்து வார்த்தைகள் கொண்ட சாம்பிள்(!) ஹைக்கூகள் ஒரு பக்கத்திற்கு. விலை 90 ரூபாயாம். வாழ்க கும்கி. இதில் இடம்பெற்ற லிங்கூக்களை கவுண்டர் மற்றும் செந்தில் வாசித்து இருந்தால்.. ..!!
டிங்கு(செந்தில்): வாங்கம்மா வாங்க. தென்னைய வச்சா எளநீரு. புள்ளைய பெத்தா கண்ணீரு.
தல(கவுண்டர்): ஆமாம்மா. அடுப்புல வச்சா தண்ணீரு. எறக்கி வச்சா வெண்ணீரு. படுவா ரைமிங்கா?
டிங்கு: ஹலோ...ரொம்ப பேசாதீங்க. 'டிங்கூ'ங்கற தலைப்புல ஹைக்கூ எழுதி லிங்கு அண்ணன் மாதிரி கவிஞனா மாறப்போறேன்.
தல: அது சரி. நீ ஒருத்தன்தான் பாக்கி. ஒன்ன மாதிரி ஓட்ட காலணா எல்லாம் இப்படி ஆகுற அளவுக்கு நம்ம திருப்பதி பிரதர் என்னதான் எழுதி இருக்காரு? எங்க கொஞ்சம் அவுத்து விடு.
டிங்கு: படிக்கறேன் கேட்டுக்கங்க.
'சுஜாதா, கவிதா, பத்மா, உஷா அப்பறம் கீதா
இவை எல்லாம் பெயர்கள் அல்ல'.
தல: அப்பறம்..
டிங்கு: அவ்வளவுதான்.
தல: அடங்கோ? சௌபாக்யாவை விட்டுட்டாரே. இவை எல்லாம் பெயர்கள் அல்ல. அன்றாடம் நான் வீட்டு வேலை செய்யும் மிஷின்கள்னு முடிச்சி இருக்கலாம். நெக்ஸ்டு...
டிங்கு:
'தேவை இல்லாமல் குழப்பம் விளைவிக்கிறாய்.
எல்லா திருமண வீடுகளிலும்'
தல: பின்ன..ஊர்ல கல்யாணம்னா, மார்ல மைசூர் சான்டலை தடவிக்கிட்டு 3 தரம் பந்தில உக்காந்து தொந்திய ரொப்பி இருப்பாரு. சும்மா விடுவாங்களா?
டிங்கு: 'இந்த இடி சத்தத்திற்கு அவளும் பயந்திருப்பாளோ'
தல: யம்ம யம்மா!! பொண்ணோட அப்பன் அருவா சைசுல மீச வச்சிருக்கறத பாத்து பத்து பர்லாங் ஜம்ப் பண்ணி ஓடி வந்துருக்கு நம்ம மாப்பி. இன்னும் பயம் தெளியல போல. அடுத்து....
டிங்கு:
'இஸ்திரி போடும் தொழிலாளியின் வயிற்றில் சுருக்கம்'
தல: அன்னைக்கி அம்மா மெஸ் லீவா இருந்துருக்கும்.
டிங்கு:
'நீ ஊரில் இல்லை. அது தெரியாமல் திருவிழா கொண்டாடுகிறார்கள்'.
தல: தெரிஞ்சிதான் நிம்மதியா கொண்டாடி இருக்காங்க. ஊருக்கே சமைக்கிற சோத்தையெல்லாம் வர்ஷா வர்ஷம் சட்டி சட்டியா நீயே காலி பண்ணி இருக்க . இப்ப நீ ஊர்ல இல்ல. அதான் அந்த சந்தோஷம்.
டிங்கு:
'என்னிடம் கேட்காமல் கடந்து செல்கிறான் பிச்சைக்காரன்'
தல: 'பின்ன. போன தடவ நீ போட்ட தேஞ்சிப்போன அஞ்சி பைசா அவன் கண்ணு முன்னால வந்து போகுமா இல்லையா...
டிங்கு:
'ஞாபத்திற்கு வராத எல்லா பெயர்களும் நல்ல பெயர்கள்தான்'.
தல: ஜீ, பீமாவையும் சேத்துதான?
டிங்கு:
'இன்னும் கொஞ்சம் நேரம் கண்களை மூடி வேண்டக்கூடாதா'
தல: கவலைப்படாத. இது கல்யாணி கவரிங் தான்.
டிங்கு:
'மொட்டை பனை மரத்தில் தோகை விரித்தபடி மயில்'
தல: அட. ஹிந்தில வேற எழுதி இருக்காரே.
டிங்கு: என்னண்ணே சொல்றீங்க?
தல: ஆமான்டா. தோ கை. அதாவது ரெண்டு கைய பப்பரப்பென்னு விரிச்சிக்கிட்டு மயில் பன மரத்து உச்சில நிக்குது. வாட் எ விஷுவல் மிராக்கிள்.
டிங்கு: நீங்களும் இருக்கீங்களே? ஒரு ஹிந்தி ஹிக்கூ எழுதி இருக்கீங்களா?
தல: ஏன் இல்ல. கேட்டுக்க..
தோ விஸ்வநாதன்
தீன் விஸ்வநாதன்
ஏக் தோ தீன் விஸ்வநாதன்.
டிங்கு: லிங்கு பிரதர் மாதிரி என்னோட டிங்கூல ஓவியம் கூட நானே வரைஞ்சி இருக்கேண்ணே.
தல: எது இதுவா? நீ செய்யி ராசா. துணிக்கடைல சமோசா, பஜ்ஜி விக்கறான். கார் வாங்குனா கத்தரிக்கா இலவசம்னு தர்றான். இப்படி சம்மந்தமே இல்லாம ஆளாளுக்கு அலப்பர தர்ரப்ப இது ஒன்னும் தப்பு இல்ல. ஆனா ஒன்னு மகனே. அங்க இருக்குற 500 அண்டா குண்டா எல்லாத்தையும் கழுவிட்டு அப்பறம் வேற என்ன வேணா செஞ்சிக்க.
(போற போக்க பாத்தா இவன் நம்மள விட பெரியாளு ஆகிடுவானோ. அதுக்கு முன்ன நம்ம ஒரு புக்க போட்ற வேண்டியதுதான். மொத கவித என்ன எழுதலாம்....)
'ஒரு முறை உள்ளம் இளகாயோ
இல்லாக்காட்டி நான் கடிக்க போவது
101 பச்சை மிளகாயோ?'
.....................................................................
posted by:
!சிவகுமார்!
11 comments:
ஹா ஹா ஹா ஹா காட்டை வித்து கள்ளு குடிச்சாலும் கவுண்டன் கவுண்டந்தான்ய்யா, கவுண்டர் கலக்கல்...!
arumai. elimaiyaaka irukkirathu...!
:)
:)
:).....
Nee kalakku siththappu.....!!!!
யம்ம,யம்ம,யம்மா!!!
ஹாஹா :-) வரிக்கு வரி எகத்தாளம்
ரசித்தேன்
ஹஹா..ஹா... வரிக்கு வரி கலக்கல்...
ஏக் விஸ்வநாதன்
தோ விஸ்வநாதன்
தீன் விஸ்வநாதன்
ஏக் தோ தீன் விஸ்வநாதன்.
எம்.எஸ்.விஸ்வநாதன் ..
address! Address! Address!
ஆனாலும் எகத்தாளம் .நல்லா இருந்துச்சு
அண்ணே அந்த கவிதைய விட கௌண்டர் பஞ்ச் சூப்பர்அப்பு
:-))))))
Post a Comment