சென்ற வாரம் வெத்து பரோட்டாவில் ஒண்டிப்புலி நாயக்கர் ஸ்ட்ரீட்டில் மண்டிக்கிடக்கும் குப்பை பற்றி எழுதியதற்கு இம்மீடியட் ரெஸ்பான்ஸ் கிடைத்திருக்கிறது. எனது ரெகுலர் ரீடரான இங்கிலாந்து பிரின்ஸ் ஹாரியின் உத்தரவின் பேரில் கார்பேஜ்கள் உடனே அகற்றப்பட்டு கிரீன் கலர் புற்கள் போர்த்தி, மம்முட்டியால் பள்ளம் தோண்டி ட்ரீயும் நட்டுவிட்டு சென்ற ஹாரிக்கு தேங்க்ஸ்கள் பல. ஆதாரம் கீழே:
ஒண்டிப்புலி ஸ்ட்ரீட் நேற்று:
இன்று:
@@@@@@@@@@@@@@@@@@@
என்னுடைய முதல் பட வெற்றிக்கு பிறகு கரோக்கியில் நான் பாடவிருக்கும் பாடல் இதுதான்:
https://www.youtube.com/watch?v=AFEsuL5gNHo
@@@@@@@@@@@@@@@@@@@@@
சாப்பாட்டு ஷாப்ஸ்:
என் படத்தில் அசைவ ஓட்டல் காட்சிகள் நிறைய இருப்பதால் சைவ ஹோட்டல்களை தவிர்த்து சென்னையின் பிற ஹோட்டல்களில் லொக்கேஷன் பார்க்க ஹெவியாக டைம் பாஸ் செய்ய வேண்டி இருந்தது. குதிரைமுத்து நகர் சற்குணம் தெருவில் ஃபுல்லுகட்டு முத்தம்மா ஓட்டல் கண்ணில் பட்டது. இரண்டு வெள்ளை இட்டிலி, நான்கு வாலி மஞ்சள் சாம்பார் ஆர்டர் செய்தோம். பக்கத்து இலையில் இருந்த சிக்கன் குழம்பும், கோழி க்ரேவியும் அட அட அட அட....டிவைன். பொதுவாக பிற ஓட்டல்களில் சிக்கன் குழம்பு டேஸ்டியாக இருந்தால் கோழி க்ரேவி சொதப்பி விடும். ஆனால் இங்கு இரண்டுமே சம்திங் வாவ்.
அருகில் இருந்த ஹன்சிகா அத்வானி நான் சூப் உறிஞ்சும் ஸ்டைலை பார்த்து 'சூப்பர். சூப்பரோ சூப்பர்' என எனது கன்னத்தில் கிள்ளி துள்ளினார். அந்த சில நொடிகள் மட்டும் வெக்கத்தை தூக்கி கக்கத்தில் வைத்துக்கொள்ள படாத பாடு பட வேண்டி இருந்தது. லெத்தார்ஜிக் முமெண்ட்ஸ்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@
சென்னை மல்டிப்ளெக்ஸ் தியேட்டர்களில் பார்க்கிங் அராஜகம் பத்துதலை விரித்து ஆடுவதால் பரங்கிமலை ஜோதி அருகே உள்ள 'மல்லு'ப்ளெக்ஸில் மட்டுமே படங்கள் பார்க்கிறேன். இந்த வாரம் 'துள்ளு ராணி அள்ளு ராஜா' பிரிமியர் ஷோ. படம் முடிந்து வெளியே வந்தால் பார்க்கிங் சார்ஜ் ஐம்பது பைசா என்று அராஜகம் செய்தார்கள். நேற்று 'வாடி பொட்ட புள்ள வெளியே. என் வாலிபத்த நோகடிச்ச கிளியே' படத்துக்கு நாலணா தான வாங்குனீங்க என்று சத்தம் போட்டேன்.
பிரச்னை பெரிதானது. 'நீங்கள் கேபிள் ஷங்கர்தான' என்று லட்சக்கணக்கான வாசகர்கள் வேறு சூழ்ந்து கொண்டதால் கிண்டி ரேஸ் கோர்ஸ் வரை ட்ராபிக் ஜாம் ஆகிப்போனது. பதறி ஓடி வந்த முதலாளி " வேணும்னா து.ரா.அ.ரா. இன்னொரு ஷோ பாத்துக்கங்க. ப்ளீஸ்" என கெஞ்சியதால் சாந்தமானேன்.
கேட்டால் கிடைக்கும்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
என் ட்வீட்டில் இருந்து:
-கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
ஒண்தொடி கண்ணே உள.
-மச்சான் மீச வீச்சருவா. மச்சினியெல்லாம் ஏங்கிடுவா.
மச்சான் கண்ணும் மந்திரமா. சொக்கி போனேன் பம்பரமா.
என் முகநூலில் இருந்து:
-வாடா வாடா வாங்கிக்கடா. வாய்ல பீடா போட்டுக்கடா.
போடா போடா பொழச்சி போடா. போகும்போது பாத்து போடா.
-பத்து முறைக்கு மேல் மனைவி கையால் அடி வாங்கிய பிறகும்
பொறுமை காட்டாதே. கெத்தாக எழு.
அவங்க உன்ன அடிக்க. உன்ன அவங்க அடிக்க. ரெண்டுல ஒண்ணு பாத்துடு.
@@@@@@@@@@@@@@@@@@
அடல்ட் Garner:
இந்தப்பகுதியில் ஜோக் எழுத சரக்கு தீர்ந்து கொண்டே வருவதால் இந்த வாரம் கடுமையாக சரக்கு அடித்து தீர்த்தேன். நல்லவேளை என் ரெகுலர் ரீடர் சச்சின் ஒரு அரை நிர்வாண புகைப்படத்தை அனுப்பி 'குறையை' போக்கினார்.
கீழே பப்பரப்பே என்று கார்னரில் சாய்ந்து இருப்பது வெஸ்ட் இண்டீஸின் முன்னாள் பவுலர் ஜோயல் கார்னர். அவருடைய வயது 18 பூர்த்தி ஆகிவிட்டது என்பதும் கன்பர்ம் செய்யப்பட்டு விட்டது. எனவே இந்த வாரம் இதுதான் அடல்ட் Garner. அடேங்கப்பா எவ்ளோ பெருசு.......................................காலு!!
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
13 comments:
thambi.. வெத்து பரோட்டா..வில் இன்னும் கொஞ்சம் காரம் மணம் வேண்டும்.. சாப்பாட்டுக்கடை தனி பதிவாய் போட்டிருக்கலாம். ஐம்பது பைசா பார்க்கிங் மேட்டர்..சூப்பர்.. பட்..நான் இன்னும் கொஞ்சம் எதிர்பார்க்குறேன்.:)
கேபுள் கிட்ட எம்புட்டு காசு வாங்குனே படவா....!
ஹா ஹா ஹா... வெத்து புரோட்டா சூப்பரு....
ஹா ஹா செமையா கலாய்ச்சிருக்கீங்க
கேட்டால் உதை கிடைக்கும்......
Blogger Cable சங்கர் said...
thambi.. வெத்து பரோட்டா..வில் இன்னும் கொஞ்சம் காரம் மணம் வேண்டும்.. சாப்பாட்டுக்கடை தனி பதிவாய் போட்டிருக்கலாம். ஐம்பது பைசா பார்க்கிங் மேட்டர்..சூப்பர்.. பட்..நான் இன்னும் கொஞ்சம் எதிர்பார்க்குறேன்.:)/////////////
பதிலுக்கு மொக்கையா கலாயக்கிராராம்...
:-))))))))
ரைட்டு
அடுத்த பதிவுல எங்க ஏரியா ஃபோட்டோ போட்டு இரண்டாவது படத்துல இருக்குற மாதிரி எங்க ஏரியாவ மாத்தி புடுங்க சார்.
அந்தப் படத்துடைய லிங் கிடைக்குமா சகோ...
ஹா..ஹா..சூப்பர்யா..அதுவும் அந்த ஐம்பது பைசா..சான்ஸே இல்லை!
// நீங்கள் கேபிள் ஷங்கர்தான' //
"டேபிள் பங்கர்தான" என்று எழுதி இருந்தால் காப்பிரைட்டில் தப்பிக்கலாம் # சீனியர் பிளாகர் அட்வைஸ் :)
அப்துலாண்ணே,
//"டேபிள் பங்கர்தான" என்று எழுதி இருந்தால் காப்பிரைட்டில் தப்பிக்கலாம் # சீனியர் பிளாகர் அட்வைஸ் :)//
மார்க்கெட்டிங் புரோமோவில கூட உன்னிப்பா உத்துப்பார்த்து ஆலோசனை வழங்குறிங்களே ,ரொம்ப்ப்ப நல்லவரு தான் :-))
முன்பு கேபிளை கலாய்த்த சாம் ஆன்டர்சன் பதிவில் அடிச்சா வலிக்காத மாரியே கேபிள் இட்ட பின்னூட்டம்...
//சங்கர் நாராயண் @ Cable Sankar January 12, 2012 at 4:27 AM
தம்பி.. இன்னும் இன்னும் நல்லா ட்ரை பண்ணு..இல்ல எழுதறதுக்கு முன்னாடி எனக்கு ஒரு காப்பி அனுப்பு.. பட்டிப் பார்த்து தர்றேன்..:)) எனிவே கீப் ப்ளாகிங் நண்பா.. வாழ்த்துக்கள். //
அண்ணாத்தை அவரு பின்னூட்டத்தையே அவரே உல்டா அடிச்சு இன்னொரு பின்னூட்டம் போடுறாரு. இந்த ஒரே ஒரு தகுதி போதாதா அவரு தமிழ் திரையுலகில் பெரிய ஆளா வர!
Post a Comment