மாட்சுமை மிகோ மிகு. பபாஷா அவர்களுக்கு,
சமீபத்தில் கூகிள் ப்ளஸ்ஸில் தங்கள் உள்ளக்குமுறலையும், இதய இருமலையும் ஒரு ஏகாந்த பொன்மாலைப்பொழுதில் எம்மால் காண நேர்ந்தது. அது யாதெனின்:
''நடைபெறவிருக்கும் அகில உலக வலைப்பதிவர் மாநாட்டில் +Pattikaattaan Jey என்ற
மாணிக்கத்தை திரும்ப ப்ளாக் உலகத்திற்கே திருப்பி எடுத்துக்கொண்டு தமிழ்மண
யாவாரசங்க தலைவராக்கி கூகுள் ப்ளஸ் என்னும் இந்த சிறிய உலகத்தைக்
காப்பாற்றுமாறு அன்புடன் கோரிக்கை வைக்கிறேன்''.
நெஞ்சிலோர் துளி moisture இருப்பினோ அல்லது உடலிலோர் சொட்டு நற்குருதி ஓடினாலோ இப்படி ஓர் கோரிக்கையை வைத்திருப்பீரா? மோட்டாரில்லா காட்டாறாக கண்ட இடத்தில் அலைபாய்ந்து கொண்டிருந்த பட்டிக்ஸை பகுமானமாக ப்ளஸ் பக்கம் திருப்பிவிட நாங்கள் பட்ட பாடு கொஞ்சமல்லவே? தங்கள் களத்தில் துள்ளி விளையாடுவதற்காக காலா காலத்திற்கும் நேர்ந்து விடப்பட்ட AVM இன் முரட்டுக்காளையான அவரை திரும்பப்பெறுதல் எம் போன்ற ஆரண்ய காண்ட ஜமீன்களுக்கு வரலாறு காணா இழுக்கை ஏற்படுத்தித்தரும் என்பதை கிஞ்சித்தும் யோசிக்காமல் இப்படி ஒரு முடிவெடுக்க காரணமென்ன? 'ஜெய்' போலே போலோ நாத்!
செந்தொடையுடன் சீர்மிகு பலாப்ஸ்
இந்திய துணைக்'கண்டம்' பட்டிக்ஸ் முதல் இருண்ட ஆப்ரிக்கா இடி அமீன் ஆவி வரை அனைவரும் அதிரும் வண்ணம் உமது செவ்விதழ் திறந்து இப்படி ஒரு விண்ணப்பம் வந்திருப்பதன் பின்னணி என்னவென்பதை எம்முடைய பட்டத்து பூனைப்படை புலன் விசாரணை மேற்கொண்டதன் விளைவாக ஒரு வலுவான ஆதாரம் சிக்கி இருக்கிறது.
அதாகப்பட்டது வரும் சென்னை பதிவர் சந்திப்பில் 'அழுக்குச்சட்டை போட்டாலும் அழகாய் தோன்றும் ஆணழகன்' போட்டி நடைபெறுவதாக ஒரு வதந்தி உம்மிடம் பரப்பப்பட்டதாகவும், எங்கே அப்போட்டியில் அப்பாஸ் லுக் அலைக் அப்துல்லாவிடம் ஒரு ஓட்டு வித்யாசத்தில் தோற்றுவிடுவோமோ எனும் பேரச்சத்தில் இம்முடிவை மேற்கொண்டிருப்பதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.
மாநிற தொடையுடன் மேதகு. பட்டிக்ஸ்
எனவே நேற்று நள்ளிரவே யாம் அனைவரும் ஆலோசனை செய்து பட்டிக்ஸ் எனும் ஹைதர் காலத்து ட்ரங்க் பெட்டியை கூகிள் ப்ளஸ் வாழ் ஒளிவட்ட சான்றோர்களுக்கு அடுத்த 99 ஆண்டுகள் மொத்தை குத்தகைக்கு விடுகிறோம். அதில் வரும் வருமானத்தை ப்ளஸ் பாண்டிய சகோதரர்களே அனுபவிக்கவும் இந்த சுத்த விக்கிய பத்திரம் அனுகூலம் செய்கிறது.
மேற்படி இந்த ஐந்தடி நான்கு அங்குல ப்ராப்பர்டியின் பால் வரும் எந்த ஒரு இன்னலுக்கும் பதிவர் குழு பொறுப்பேற்காது என்பதை திட்டவட்ட மற்றும் சதுரமாக அறுதியிட்டு உறுதி கூறுகிறது.
இப்படிக்கு,
ஏழேழுலக பதிவர் சங்க தலைமைக்குழு,
தென்கிழக்கு இருண்ட ஆப்ரிக்கா.
-----------------------------------------------------------
posted by:
! சிவகுமார் !
16 comments:
ஏம்ப்பா இங்கே என்ன தொடை அழகன் போட்டியா நடக்குது !
ஹா ஹா
karrr thoooooo parathesi...!
உயர்திரு பலாப்ஸ் நிற்பது எழில்மிகு தென்காசி திருத்தலம் :-)
செம செம
அடேங்கப்பா...
ஹா ஹா ஹா
தூள்
கூகிள் ப்ளஸ்ஸின் தமிழ் கூறும் நல்லுலகை பட்டிக்ஷ் அவர்கள் ஏற்கனவே சுய ஏலத்தில் எடுத்து சுகபோகமாக ஆண்டனுபவித்து வருகிறார் என்பதை பெருமையுடன் அனைவருக்கும் அறியத்தருகிறோம்.
:))))
தொடை குறித்து எழுதிய காவியத்தால் இன்று முதல் தொடை தாங்கி என்று பட்டம் பெற்று நீடுடீ வாழ்வீர் என்று அழைக்கப்படுவீர்.
யோ தம்பிய கலாய்ப்பதற்கும் ஒரு அளவு வேணாமா? பாவமையா நம்மாளு..
ஹோயோ ஹோயோ
ஸ்டாம்பு ஒட்டாத இந்த பத்திரத்தில் டமில் பதிவுலகின் ஏகோபோக...'தலை'வரான நமது மோகன்குமாருக்குப் பின் நானும் ஆப்பம்...ச்சே ஒப்பமிடுகின்றேன்...!
//மேற்படி இந்த ஐந்தடி நான்கு அங்குல ப்ராப்பர்டியின் பால் வரும் எந்த ஒரு இன்னலுக்கும் பதிவர் குழு பொறுப்பேற்காது என்பதை திட்டவட்ட மற்றும் சதுரமாக அறுதியிட்டு உறுதி கூறுகிறது. //
பட்டிங்ஸ் : இதுக்கு மேல நான் உசுரோட இருக்கனுமா?
பதிவர்ஸ் + ப்ளஸர்ஸ் + பேஸ்புக் + டிவிட்டர் + அனைத்து உலக மக்கள் : நாங்க யாரும் அப்படி சொல்லவில்லை
பதிவர் சந்திப்பில் தொடை அழகன் போட்டியெல்லாமா இருக்கு?
Post a Comment