சென்னையில் எவருக்குமே பரிச்சயம் இல்லாத பிரபல குவாலிட்டியான ஓட்டல்களை அறிமுகம் செய்வதில் என்னை அடித்துக்கொள்ள ஆள் இல்லை என்பது சொல்லித்தெரிய வேண்டியதில்லை. அடையாறு ஆனந்த பவன், திருவல்லிக்கேணி ரத்னா கபே மற்றும் புகாரி போன்ற ஹோட்டல்களை அறிமுகம் செய்து சாப்பாட்டுக்கடையில் ஒரு ஏகாந்த புரட்சியை எட்டுத்திக்கும் பரப்பிய செய்தியை உலகறியும்.
அந்த அமேசிங் ரெக்கார்டை தஞ்சாவூர் கல்வெட்டில் பதிக்கும் பொறுப்பை விளிம்பு நிலை ஸ்தபதி ஒருவருக்கு தந்திருக்கிறேன் மக்களே(அவருடைய பேட்டி அடுத்த பதிவில்).
ஏற்கனவே மூடப்பட்ட ஒரு உணவுக்கடைக்கு விமர்சனம் எழுதி உண்டக்கட்டி வாங்கிய அனுபவம் இருந்ததால் அதற்குப்பின் செம அலெர்ட் ஆகி விட்டேன். இம்முறை இனிமேல் திறக்கப்போகும் உணவகத்தை அறிமுகம் செய்துள்ளேன். மடிப்பாக்கம் அம்சா மாமி வீட்டருகே சரவண பவன் எனும் புதிய ஹோட்டல் ஓப்பனிங் செரமனி அறிவிப்பு பார்த்தேன். (மன்னிக்க. ஒரு ஒரு வரியாக எழுதி அதை பேரா போல காண்பித்து பதிவை நிரப்ப மறந்துவிட்டேன்).
உள்ளே நுழைந்ததும் எட்டுக்கு எட்டு சதுர அடி பரப்பில் அட்மாஸ்பியரே அசத்தியது.
பார்சல் வாங்கும் இடத்தில் சில பேர் பார்சல் வாங்கிக்கொண்டு இருந்தார்கள். சாப்பிடும் டேபிளில் பலபேர் சாப்பிட்டுக்கொண்டு இருந்தார்கள்.
கல்லாவில் இருந்தவர் முதலாளி என பெர்பெக்டாக யூகித்து 'வணக்கம். நான் பிரபல உணவுக்கடை ப்ளாக்கர்' என்று விண்ணைத்தாண்டி வருவாயா கணேஷ் போல கரகர குரலில் அறிமுகம் செய்ததுதான் தாமதம். 'அண்ணே...ரெண்டு இட்லி பார்சல் ப்ரீயா வாங்கிட்டு போங்க. என் ஓட்டல பத்தி மட்டும்....'. புரிந்து கொண்டேன். அந்த பயம் இருக்கணும்.
நான் ஆர்டர் செய்தது:
வட்ட இட்லி ஒன்று
தேசியக்கொடி கலரில் மூவர்ண சட்னிகள்
ஓட்டை போட்ட மெதுவடை பாதி
ஒரு டம்ளர் தண்ணீர்
பொதுவாக நாம் சாப்பிடும் இட்லிகள் மெத்து மெத்தென்று இருக்கும். ஆனால் இங்கே வெரி ஸ்மூத்தியாக இருந்தது. இட்லியை 21 ஆக பிரித்து கலருக்கொரு சட்னி வீதம் ஒவ்வொரு சட்னியிலும் 7 முறை முக்கி முக்கி சாப்பிட்டேன். செம டேஸ்டி.
ஓட்டல் ஸ்பெஷல் உணவுகள்:
மசாலா தோசை, உருளைக்கிழங்கு சொருகப்பட்ட தோசை
கொம்பன் சுறா சுக்கா மக்கா, கடல் ராசா கத்தரி கொஸ்து
பூனைக்கொம்பு பொடிமாஸ், பேமிலி இடியாப்பம்.
பெண் சிக்கன் ப்ரை, ஆண் சேவல் ஆப் பாயில்.
பெண் சிக்கன் ப்ரை, ஆண் சேவல் ஆப் பாயில்.
Bad Experience !!
ஒரு முறை இங்கு சாப்பிட்டு விட்டு, இன்னொரு நாள் பார்சல்
வாங்கலாம் என வீக் எண்டில் சென்று வெறுத்து போய் விட்டேன். 2 பேருக்கு
மேல் காத்திருக்க ஒவ்வொருவருக்கும் டோக்கன் போட்டு தருகிறார்கள். 'டோக்கனை போடாமல் கையில் தந்தால் என்ன?' என்று கத்திய பிறகே இஸ்யூ சால்வ் ஆனது.
மாத்ருபூதம் டாக்டர்
வீட்டில் காத்திருப்பது போல் ஒரு மணி நேரம் காத்திருக்க நேருகிறது. 5
நிமிஷத்துக்கு தான் ஒவ்வொருவர் டோக்கன் நம்பராக அழைக்கிறார்கள் நம் முறை வர
குறைந்தது அரை மணி நேரம் முதல் 1 மணி நேரம் ஆகிடுது கொடுமை.
டோக்கன் '108' என்று இரண்டாவதாக ஒருவழியாக என்னை அழைத்தனர். என்ன யூஸ்?
பார்சல் வாங்கினால் கண்டிப்பாக காசு வேறு தர வேண்டும் என்று அடம் பிடிக்கிறார்கள். புல் ஷிட்.
ரேட் கார்னர்
மேலதிக தகவல்கள்:
ஓட்டல் பெயர்: சரவண பவன்
கிளைகளின் பெயர்கள்: சரவண பவன்
பார்சல் கவரில் இருக்கும் பெயர்: சரவண பவன்
வெப்சைட் பெயர்: சரவண பவன்.
நான் வெஜ் பிரியர்கள் அவசியம் ஒரு தரம் கண்டிப்பாக நிச்சயம் விசிட் செய்து பாருங்கள்.
நான் வெஜ் என்றால் அசைவம் அல்ல. 'நான் வெஜ்' என்று சொல்லும் சைவ பிரியர்களை சொன்னேன். எப்படி நம்ம காமடி :))
கீழதிக தகவல்கள்:
இந்த பதிவை நான் ட்ராப்டில் வைத்திருந்ததை எப்படியோ கண்டுபிடித்துவிட்ட
அன்னாசி என்னை பொளந்து கட்ட பொங்கிய செய்தி கேட்டு செம உஷாராகி கம்ப்ளைன்ட் செய்துவிட்டேன். என்ன வேட்டுடே!!
_____________________________________________
Posted by:
! சிவகுமார் !
Posted by:
! சிவகுமார் !
18 comments:
சிரிச்சுகிட்டே இருக்கேன் :))))))
வாங்கண்ணா. வணக்கங்கண்ணா.
//விண்ணைத்தாண்டி வருவாயா கணேஷ் போல கரகர குரலில் //
ஹா ஹா ஹா...
அடுத்து யாரோ...
சிவா, மற்றும் ஒரு முறை உங்க சென்ஸ் ஆப் ஹுமரை நிருபிச்சு இருக்கீங்க. வி.பு.சி.
//ஸ்கூல் பையன் said...
//விண்ணைத்தாண்டி வருவாயா கணேஷ் போல கரகர குரலில் //
ஹா ஹா ஹா..அடுத்து யாரோ//
VTV கணேஷ்: "நெஞ்சுகுள்ள 'ஸ்கூல் பையன். ஸ்கூல் பையன்னு சொல்லுதா''
@ ராஜ்
வணக்கம் 'தலைவா'
haa..haa..
அண்ணே அடுத்து "எலி செத்து போச்சு டைலர்" பேட்டி போடுங்கண்ணே...!
kallula verum maavu mattum oothi suttaa dosai... antha dosai kkulla poori kilangu vachi koduthaa athu thaan masala dosai ...!!
எப்படி இப்படியெல்லாம்?!அடுத்து யார் மாட்டப்போறாங்களோ?!
சிவா.... Keep an eye on சென்னை பித்தன்...
Rate corner -- doller
சூப்பரு!
என்ன வேட்டுடே!!//
எலேய் நீ இப்போ என்ன சொல்ல வருத ? வெட்டுடெவா ? வேட்டுடேவா ? ஹ ஹா ஹா ஹா ஹா செம...!
தீயா வேலை செய்திருக்கீங்க "குமாரு"...!!
//சிவா.... Keep an eye on சென்னை பித்தன்...//
பின்னூட்டம் போட்டது தப்பாப் போச்சே!
Still laughing. Thanks man!!
பெண் சிக்கன் ப்ரை, ஆண் சேவல் ஆப் பாயில்.
super....
Post a Comment