Tuesday, September 10, 2013

ஆர்யா சூர்யா !


அன்புள்ள வலைப்பூவிற்கு,

கடந்த ஞாயிறின் காலையில் கேபிளின் தொட்டால் தொடரும் பூஜையை வெற்றிகரமாக முடித்துக் கொடுத்துவிட்டு வடசென்னை நோக்கி திரும்பிக்கொண்டிருந்தோம். “சர்ச்சுல ஏதோ நோன்பி கும்பிடுறாங்க வர்றியாடாப்பா” என்றார் சிங்கம். ஏற்கனவே அதிகாலையில் துயில் எழுந்திருந்தமையால் கண்கள் சொருகின. இருப்பினும், “சரி, வண்டியை விடுங்கஜீ” என்று ஆமோதித்தேன். உள்ளே நுழைந்தால் கறி, மீன் என்று ஒரே அசைவ வாடை. தவிர, ஆங்காங்கே ‘ஷேவ் தி பலூன்’ வகையறா விளையாட்டுப்போட்டிகள். சிங்கம் அவருடைய உடன்பிறப்பை பதினேழாவது முறையாக எனக்கு அறிமுகப் படுத்திவைத்தார். ஏற்கனவே பூஜையில் இட்லியும் கெட்டிச்சட்டினியயும் லபக்கியிருந்ததால் பசிக்கவில்லை. அடுத்து என்ன செய்யலாம் ? என்று யோசித்தபோது ‘ம்ம்ம் ம்ம்ம் புரோட்டா சாப்பிடலாமா ?’ என்று ஒரு அபிஷ்டு கேட்டதைப் போலவே ‘சினிமாவுக்கு போலாமா ?’ என்றது ஒரு குரல். பெருசா சிறுசா என்று நினைவில்லை.

“ஓ போலாமே ! எம்.எம்மிலே ஆர்யா சூர்யா ஓடுது. ராம.நாராயணன் ரீ-என்ட்ரி கொடுத்திருக்கிறாராம்” என்று திருவாய் மலர்ந்தருளினேன். அப்போது நான்கு கண்களில் மரணபயத்தைக் கண்டேன். “அதெல்லாம் ஆகாது. எம்.எஸ்.எம்மில் ரிட்டிக் போட்டிருக்கான். வேணுமின்னா அதுக்கு போகலாம்” என்றது வரலாறு. அதையே சின்னவரும் ஆதரிக்க, வேற வழி. வாகனங்கள் எம்.எஸ்.எம் நோக்கி விரைந்தன. அப்போதுதான் தெய்வாதீனமாக அந்த போஸ்டர் என் கண்ணில் பட்டது. “ஜீ வண்டியை நிறுத்துங்க” – பதறினேன். “எம்.எஸ்.எம்மில் ஈவ்னிங்கும் நைட்டும் தான் ரிட்டிக் ஓடுதாம், பாக்கி ரெண்டு ஷோ தெலுங்கு படம் தூஃபன் ஓடுதாம்”. அடுத்து என்ன செய்யலாம் ? என்று அண்ணனும் தம்பியும் யோசிப்பதற்குள், “பேசாம ஆர்யா சூர்யாவுக்கே போயிடலாமா ?” என்றொரு கேள்வியை முன்வைத்தேன். ஒருவேளை அப்படியும் அவர்கள் வழிக்கு வரவில்லை என்றால் தூஃபனுக்கு போய் ப்ரியங்கா சோப்ராவின் தொடைகளை பார்த்து வரலாம் என்று சில மைக்ரோ செக்கண்டுகளில் மாற்றுத்திட்டம் ஒன்றை தீட்டி வைத்தேன். பெரிய ஆடு தலையை ஆட்டிவிட்டது. சின்ன ஆடு யோசித்துக்கொண்டிருக்கும்போதே “அட, வண்டியை திருப்புங்க பாஸ்” என்று சொல்லிக்கொண்டே ஒரு கேவலமான சிரிப்பு ஒன்றை உதிர்த்து அவருடைய மூளையை சில நொடிகள் செயலிழக்கச் செய்தேன். 

வாகனங்கள் எம்.எம் திரையரங்கை நோக்கி... வழியெல்லாம் மேக்கிங் ஆப் ஆர்யா சூர்யா பற்றி பேசி சிங்கத்தை வெறியேற்றிக் கொண்டிருந்தேன். திரையரங்க வாயிலில் சுமார் முப்பது பேராவது இருந்திருக்கக்கூடும். அதில் முக்கால்வாசி அபவ் ஐம்பது ! டிக்கெட்டை வாங்கிக்கொண்டு பேனருக்கு முன்னால் நின்று புகைப்படங்கள் எடுத்துக்கொண்டோம். ஷோவுக்கு இருபது நிமிடங்கள் இருந்தன. கட் பண்ணா டாஸ்மாக் !

ஆளுக்கொரு பியரை வாங்கினோம். பார் சுவற்றை போட்டோஷாப் மூலமாக மிகைப்படுத்தப்பட்ட தமன்னாவின் அங்கங்கள் அலங்கரித்திருந்தன. ஆடுகள் சமயத்தில் தப்பிக்க திட்டமிடக்கூடும். ஷோ நேரத்தை கடந்து ஐந்து நிமிடங்கள் ஆகியிருந்தது. சகோக்களின் பாட்டில்களில் கால்வாசி மீதமிருந்தது. “யப்பா... அடிச்சு விடுங்கப்பா... படம் போட்டிருப்பாங்க...” என்று நினைவூட்ட வேண்டியதாக போய்விட்டது. ஒருவேளை டி.ஆரின் பாடல் டைட்டில் சாங்காக இருந்துவிட்டால் என்ன செய்வதென்ற கவலை எனக்கு ?

சினிமாவில் இசையமைப்பாளராகும் முயற்சியில் இரு இளைஞர்கள். இருவரும் புத்திசாலிகள். ஆனால் சுஜாதாவின் கணேஷ் – வசந்த் போல ஒருவன் கொஞ்சம் ஜென்யூன், மற்றொருவன் குறும்பு கூட்டல் ரகளையானவன். சூழ்நிலையின் காரணமாக இருவரும் இணைந்து ஒரு கொள்ளைக்கூட்டத்தை பற்றி துப்பறிகிறார்கள். புகழ் பெறுகிறார்கள். அவர்களிடம் இன்னொரு துப்பறியும் ப்ராஜெக்ட் வந்து சேர்கிறது. இம்முறை சில சிக்கல்கள் ஏற்பட, இறுதியில் ஆர்யாவும் சூர்யாவும் எப்படி தங்கள் துப்பறியும் திறனை பயன்படுத்தி வெற்றி பெறுகிறார்கள் என்பதே க்ளைமாக்ஸ்.

கதையை கேட்கும்போது சுமாரா இருக்கு என்ற எண்ணம் தோன்றினால் ஆச்சர்யப்படுவதற்கில்லை. ஆனால் அதை எந்த அளவுக்கு கேவலமாக எடுக்க முடியும் என்பதை மெனக்கெட்டு ஆராய்ச்சி செய்திருக்கிறார். ராம நாராயணன். எந்த அளவிற்கு கேவலமாக என்பதற்கு சில உதாரணங்கள் தருகிறேன் :-

- முதல் காட்சியில் ஆர்யாவும் சூர்யாவும் நாம சந்திச்சு 24 மணிநேரம் கூட ஆகலை என்று பேசிக்கொள்கிறார்கள். அடுத்த காட்சியில் மூணு மாசமா வாடகை குடுக்காம இருக்குறீங்க என்று ஹவுஸ் ஓனர் இருவரையும் அடித்து விரட்டுகிறார்.

- நகைச்சுவை காட்சி: ஆர்யாவும் சூர்யாவும் உணவகத்திற்கு செல்கிறார்கள். கையில் காசு குறைவாக இருக்கிறது. ஒரேயொரு அன்லிமிட்டட் மீல்ஸ் வாங்கி சப்ளையர் பார்க்காத நேரமாக இருவரும் மாற்றி மாற்றி சாப்பிடுகிறார்கள். சொல்லும்போதே சிரிப்பு வருகிறதல்லவா ?

- ஆ & சூ வாடகைக்கு வீடு தேடி அலைகின்றனர். அந்த நேரம் பார்த்து ஒரு பங்களா வீட்டு தம்பதியரிடம் அவர்களுடைய பெண்ணைப் பார்க்க மாப்பிள்ளையும், மாப்பிள்ளைத் தோழனும் வர இருப்பதாக தரகர் சொல்லித் தொலைக்கிறார். அதன்பிறகு வரக்கூடிய காட்சிகளை சுச்சுபிஜுக்கு என்று இருக்கும் எல்.கே.ஜி பையன் கூட கண்டுபிடித்துவிடுவான்.

- க்ளைமாக்ஸ் காட்சியில் வெண்ணிற ஆடை மூர்த்தி பதட்டமாக ப்ரர்ர்ர்ர்ர்ர்ர் (என்னன்னே தெரியல அவரு பேரைச் சொன்னாலே இப்படியாகுது) தொலைபேசியை எடுக்கிறார். எடுத்ததும், “ஹலோ... போலீஸ் ஸ்டேஷனா ?” என்று கேட்கிறார். ஷாட் கட் செய்யப்படுகிறது. 

- நாயகிகளை கொள்ளைக்கூட்டத்தினர் கடத்தி வைத்திருக்க அவர்கள் போனில் நாயகர்களுக்கு குறிப்பு கொடுக்கிறார்கள். அதாவது அருகில் மசூதி, ரயில் நிலையம், சுடுகாடு ஆகியவை இருப்பதாக. அதனை க.க.க. என்று கவ்விக்கொண்டு ரயில் நிலையம், மசூதி, சுடுகாடு மூன்றுமே ஒருங்கே அமையப்பெற்றது பல்லாவரம் என்று மிக சாமர்த்தியமாக கண்டுபிடிக்கிறார்கள் ஆர்யாவும் சூர்யாவும். 

இவை தவிர்த்து, யாரும் இடைவேளையில் தப்பித்துவிடக் கூடாது என்பதற்காக ராவன்னா நாவன்னா ஒரு யுக்தியை பயன்படுத்தியிருக்கிறார். என்னவென்றால், இடைவேளை போடுவதற்கு முன்னால் டி.ஆர் “முமைத்த்த்து.....!” என்று அலறுகிறார். ஆஹா தலைவரு பாட்டு வந்துடுச்சு டோய் என்று உற்சாகமாகிற நேரத்தில் தொடரும் என்று போட்டு இடைவேளை விடுகிறார்கள். ப்ளடி ராஸ்கல்ஸ் !

அதோடு சரியாக க்ளைமாக்ஸுக்கு முன்னால்தான் பாடல் வருகிறது. படத்திலேயே உருப்படியான விஷயம் அந்த பாடல் மட்டும்தான் என சொல்லலாம். “ரங்கு ரக்கர ரங்கு ரக்கர ரங்கு ரக்கர ரக்கர ரக்கர ரக்கர...” என்று தலைவரு தலை மயிரை சிலுப்பும்போது டிக்கெட் கிழிப்பவரை பிடித்துவந்து நாலு உதை உதைக்கலாமா என்று தோன்றுமளவிற்கு உற்சாகம் கூடுகிறது.

ஆர்யா சூர்யா – பார்யா போய்ச்சேர்யா !

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

8 comments:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ஒரேயொரு அன்லிமிட்டட் மீல்ஸ் வாங்கி சப்ளையர் பார்க்காத நேரமாக இருவரும் மாற்றி மாற்றி சாப்பிடுகிறார்கள். சொல்லும்போதே சிரிப்பு வருகிறதல்லவா ?///

thankamani rankamani seen. Directed by Rama.Narayanan

Philosophy Prabhakaran said...

ஏதோ ஒரு எஸ்.வி.சேகர் படம் என்று ஞாபகம் இருந்தது... அதுவும் ராம.நாராயணன் படம்தானா... வெளங்கிடும்...

குகன் said...

எஸ்.வி.சேகர் - 'மைக்' மோகன் நடித்த "சகாதேவன் - மகாதேவன்" ரீமேக். அதுவும் இராம.நாராயணன் இயக்கிய படம்.

Anonymous said...

//ஆர்யா சூர்யா//

யார்யா அந்த ரெண்டு பேர்யா?

settaikkaran said...

//ஒரேயொரு அன்லிமிட்டட் மீல்ஸ் வாங்கி சப்ளையர் பார்க்காத நேரமாக இருவரும் மாற்றி மாற்றி சாப்பிடுகிறார்கள். சொல்லும்போதே சிரிப்பு வருகிறதல்லவா ?//

30 வருடங்களுக்கு முன்னால் வந்த ஜெமினியின் ‘எல்லோரும் நல்லவரே’ என்ற படத்தில் ஹீரோ முத்துராமனின் மூன்று நண்பர்கள் செய்த காமெடி இது. :-)

வவ்வால் said...

பிரபா,

//“அதெல்லாம் ஆகாது. எம்.எஸ்.எம்மில் ரிட்டிக் போட்டிருக்கான். வேணுமின்னா அதுக்கு போகலாம்” என்றது வரலாறு. அதையே சின்னவரும் ஆதரிக்க, வேற வழி. வாகனங்கள் எம்.எஸ்.எம் நோக்கி விரைந்தன. அப்போதுதான் தெய்வாதீனமாக அந்த போஸ்டர் என் கண்ணில் பட்டது. “ஜீ வண்டியை நிறுத்துங்க” – பதறினேன். “எம்.எஸ்.எம்மில் ஈவ்னிங்கும் நைட்டும் தான் ரிட்டிக் ஓடுதாம், பாக்கி ரெண்டு ஷோ தெலுங்கு படம் தூஃபன் ஓடுதாம்”. அடுத்து என்ன செய்யலாம் ? என்று அண்ணனும் தம்பியும் யோசிப்பதற்குள், “பேசாம ஆர்யா சூர்யாவுக்கே போயிடலாமா ?” என்றொரு கேள்வியை முன்வைத்தேன். //

ஆக மொத்தம் முமைத்கானை முழுசா பாத்தாச்சு :-))

எனக்கு ஒரு சந்தேகம் உண்மை தெரிஞ்சாகனும் சாமி...வின் டீசல் நடிச்ச ரிற்றிக் படம் வெளிவந்து சுமார் 4-5 ஆண்டுகளாவது இருக்கும்(pitch black part -2 தான் இது) இப்போ ,ஆர்யா-சூர்யா கூட சேர்த்து வச்சு பேசுறிங்களே ,எதாவது முன் பின் நவீனமா பேசிட்டு இருக்கிங்களோ அவ்வ்!

# இந்த படத்தில ஈரோயினே இல்லியா "ஒன்னுமே படம் காணோம்"

நாம நாரயணன் டெக்னிக்கே தெரியாமே இருக்கீர், ஒரே கதைய இல்லைனா வேற ,மொழில ஓடின படத்த அலேக்கா சுட்டு லோ பட்ஜெட்ல எடுத்து , அதை விட அதிக விலைக்கு வித்து காசு பாத்துடுவார் தியேட்டரில் 3 நாள் ஓடினாலே அவருக்கு போதும், "ஹி இஸ் தி பெஸ்ட் பிசினெஸ்மேன் இன் டமில் ஃபில்ம் இன்டஸ்ட்ரி" :-))

Philosophy Prabhakaran said...

வவ்வால்,

நீங்க சொல்றது Chronicles of Riddick... இது Riddick, அதே சீரிஸின் மூன்றாவது பாகம்...

சும்மா சுருக்கமா ஒரு பதிவு... அதான் ஈரோயினி பத்தி எழுதல... அதாகப்பட்ட பவர் பத்தியே எழுதலையே....

Unknown said...

அட்டை படத்தில் ஒரு HEAD LIGHT FUSE போயிடிச்சா ?