இன்றைய கேள்விகளுக்கு பதில் அளிப்பவர் பதிவுலக கவுண்டர் பன்னிக்குட்டி ராம்சாமி அவர்கள்!
1.ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணம் பண்ணு, பசி வந்தால் பத்தும் பறந்து
போகும், மாமியார் உடைச்சா மண் குடம்..மருமக உடைச்சா பொன் குடம். இந்த
பழமொழிகளுக்கு உங்க ஸ்டைல் ரிவிட் என்ன?
ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணம் பண்ணு,
ஏன் 1001 பொய் சொன்னா அது கல்யாணம் இல்லியா? பொய் சொல்றதே தப்பு, இதுல இவரு ஆயிரம் வரைக்கும் எண்ணிக்கிட்டே சொல்வாராம், ங்கொக்காமக்கா.... இப்படிப் பண்ணிப் பண்ணித்தாண்டா நாட்ல பாதிப் பேருக்கு மண்டைல முடி இல்லாம போச்சு....
பசி வந்தால் பத்தும் பறந்து போகும்,
பத்து பறந்து போறதுக்கு அது என்ன எலிக்காப்டராடா........? டவுசர் வாயா..... பசி வந்தா போய் சாப்புடறத விட்டுப்புட்டு பேச்ச பாரு, லொல்ல பாரு, எகத்தாளத்தப் பாரு?
அப்போ மாமனாரு ஒடச்சா வெங்கல கொடமா? படுவா எந்தா நாரு ஒடச்சாலும் மண்கொடம் மண்கொடம்தாண்டா கரிச்சட்டி மண்டையனுங்களா..... கருமம் புடிச்சவனுங்க.... பழமொழி, பழுக்காத மொழின்னு... ஏண்டா எவனோ எப்பவோ பொழுதுபோகாம சொல்லி வெச்சத இன்னும் சொல்லிக்கிட்டு திரியறீங்க?
..........................
2. உலக கோப்பை கிரிக்கெட் பார்க்கும் ஆர்வத்தில் தேர்வுக்கு படிக்காமல்
இருக்கும் மாணவர்களுக்கு ஒரு குட்டிக்கவிதை சொல்லுங்க தலைவா...
யக்கா மவளே இந்து....... ஓ.... சாரி.... ட்ங்க் ஸ்லிப்மா....... யூ மீன் ஸ்டுடண்ட்ஸ்.......... ?
பன்னிக்குட்டி: ஹல்லோ ஆல் யங் ஸ்டூடண்ட்ஸ்....... படிச்சமா.... பரிட்ச எழுதுனமான்னு இருக்கோனும், அதவிட்டுப்புட்டு, அங்க அங்க நின்னு டீவி ஷோரூம்கள்ல மேட்சு பாக்கறது, முக்குல நின்னு சிகுனல் கொடுக்கறது, காத்துல கணக்குப் போடுறது...... பொண்ணுகள பாத்து மம்மிய பாத்த எம்எல்ஏ மாதிரி பம்முறது.... இதெல்லாம் பாத்தேன்... படுவா... ஒருத்தனுக்கும் இனி காலைல பல்லு வெளக்க பல்லு இருக்காது.....!
என்னது இது கவிதை இல்லியா? அப்போ.. நெக்ஸ்ட் கொஸ்டின் ப்ளீஸ்....
............................
3. பேரரசு: என் அடுத்த படத்துல நீங்கதான் வில்லன். விஜய் ஹீரோ. படத்தோட டைட்டில் 'விஜயவாடா'. சிச்சுவேசன்: ரேசன் கடைல ஊழல் செஞ்சதா உங்களை விஜய் தட்டி கேட்கும் காட்சி. அந்த வசனம் மட்டும் நீங்க எழுதணும். என்ன எழுதுவீங்க?
பன்னிக்குட்டி: அய்யய்யோ..... இந்த தீஞ்ச மண்டையன் படத்துக்கெல்லாம் வசனம் எழுத வெச்சிட்டானுகளே?
ஓகே, ஐ வில் ட்ரை...
விஜய்: டேய்ய்..... ரேசன் கடைல இருந்துக்கிட்டு மக்களுக்கு போய் சேரவேண்டிய பொருள்களை இப்படி திருடித் திங்கிறீயே வெக்கமா இல்ல உனக்கு?
பன்னிக்குட்டி: ஆமா, அப்பிடியே கோடி கோடியா அடிச்சு அயல்நாட்டுக்கு ஏற்றுமதி பண்ணிட்டோம் பாரு? 2 லட்சம் கோடி, 4 லட்சம் கோடின்னு அடிக்கறவன விட்ருங்கடா, எங்ககிட்ட மட்டும் வந்து நல்லா கேள்வி கேளுங்கடா.......! ங்ணா..... இதே வசனத்த 51-வது தடவையா பேசுறீங்களே, உங்களுக்கு வெக்கமா இல்லீங்களாங்ணா.....? ங்கொக்காமக்கா.. கரடிக்கு சேவிங் பண்ண மாதிரி இருந்துக்கிட்டு பேச்ச பாரு? படுவா..... உனக்கும் ஒரு பங்கு கொடுத்திருந்தா வாய மூடிக்கிட்டு லைன்ல நின்னுருப்பே....! பிஞ்சு போன பஞ்சு டயலாக்க ஓரமா நின்னு வாந்தி எடுக்கப் போற பயலுக்கு லவுசப் பாரு... என்னமா சவுண்டு கொடுக்குது பார்ரா? அதெப்பட்றா பண்றதையும் பண்ணிட்டு கொஞ்சம் கூட வெக்கப்படாம இப்படி கேள்வி கேக்குறீங்க? நான் பாட்டுக்கு பேசிக்கிட்டு இருக்கேன், கொஞ்சமாவது பீல் பண்றானான்னு பாருங்க? அதென்றா வாய்க்குள்ள உருளுது, அதுக்குள்ள எடக்கல்ல எடுத்து வாய்க்குள்ள அமுக்கிட்டியாடா டாஸ்மாக் வாயா.......?
விஜய்: கடவுள்கிட்ட மட்டும்தான் சாந்த்த்தமா பேசுவேன்.. சாக்கடை கூட இல்ல...
பன்னிக்குட்டி: அப்போ இங்க ஏனுங்ணா வந்தீங்க....?கடவுள்கிட்டேயே போய் பேசுங்ணா.... !
விஜய்: வாடா..வாடா விஜயவாடா........
பன்னிக்குட்டி: போடா போடா... போண்டாவாயா......
.....................................
4. தலைவர் கவுண்டரும் நீங்களும் ஒரு இடத்தில் தற்செயலாக சந்திக்கிறீர்கள். அப்போது நீங்கதான் கவுண்டர் என்றெண்ணி மக்கள் உங்களிடம் ஆட்டோ க்ராப் கேட்கிறார்கள். அப்ப நீங்க என்ன செய்வீங்க? கவுண்டமணி எப்படி பேசி இருப்பார்?
பன்னிக்குட்டி: அடங்கொன்னியா இவனுக நம்மளையே ஒரிஜினலுன்னு நெனச்சுட்டானுகளே? சே இது கொஞ்ச வருசத்துக்கு முன்னாடி தெரிஞ்சிருந்தா அப்பிடியே மார்க்கெட்டையும் புடிச்சிருக்கலாம் சில சில சிட்டுகளையும் வளைச்சிருக்கலாம்..... எதுக்கும் இப்பிடியே மெயிண்டெயின் பண்ணி இன்னிக்கு ஏதாவது கிடைக்குமான்னு பார்ப்போம்........!
கவுண்டர்: அடங்கொக்காமக்கா, இந்தப் பன்னிவாயன் பேசுறதுதான் டுபாக்கூருனா ஆளே சுத்த ஃபோர்ஜரியா இருப்பான் போல இருக்கே? நல்ல வேள நான் வேற தெளிவா இருக்கேன், கொஞ்சம் அப்பிடி இப்பிடி இருந்திருந்தா இன்னேரம் நானே நம்பி இருப்பேனே.....? ராஸ்கல்.. இவன இப்பிடியே விட்டா என்னையே வித்துட்டு போயிடுவான்... .... ஹாய்.... பப்ளிக்..... ஐ கம்முய்யா......அது நாந்தாங்க...... அது நாந்தாங்க.......... ம்ம் என்னது எவனும் கண்டுக்க மாட்டேங்கிறான்... அடப்பரதேசி பன்னாட நாய்ங்களா இத்தன வருசமா நடிச்சும் ஒரிஜினலு நாந்தான்னா நம்ப மாட்டேங்கிறீங்களேடா? பன்னி, மரியாதையா நீயாவது அது நாந்தான்னு சொல்லிரு......
பன்னிக்குட்டி: யோவ் கம்முனு இருய்யா, எனக்கும் ஒரு சான்ஸ் கெடச்சிருக்கு கொஞ்ச நேரம் எஞ்சாய் பண்ணிக்கிறேன். இதுக்குத்தான் அப்பப்போ டீவி, ரேடீயோ, பேப்பருல, பொஸ்தவத்துல பேட்டி கொடுத்து ஜனங்களுக்கு மூஞ்சிய காட்டிக்கோனும்கறது....
கவுண்டர்: எனக்கே அல்வாவா.....? மவனே.... எல்லாரும் போகட்டும், அப்புறம் இருக்குடி உனக்கு...........!
....................................
5. பதிவர்களில் மூன்று பேர் நேரில் சிக்கினால் பொளந்து கட்ட வேண்டும் என
நினைப்பது யாரை? ஏன்?
பன்னிக்குட்டி: ங்ணா நாங்கள்லாம் சவுண்டுதானுங்ணா ஜாஸ்தியா கொடுப்போம்..... ஒரு அப்பு அப்புனா அப்பிடியே பொத்திக்கிட்டு போய்ருவோம்ணா.......
..............................
6. படத்திற்கு கமன்ட் போடவும்:
பன்னிக்குட்டி: ஆமா இந்த வெளக்கெண்ண வாயன்க அப்பிடியே பேசிக் கிழிச்சி பாலாறும் தேனாறும் ஓட வெச்சிடுவானுங்க பாருங்க......? கேன்டீன்ல பஜ்ஜி நல்லாருந்தா போயி நல்லா தின்னுப்புட்டு தூங்க வேண்டியது
தானே, படுவா அத விட்டுப்புட்டு சும்மா சக்கைல சாறு எடுத்தா வருமா.....? அதெல்லாம் எப்பவோ எங்கெங்கேயோ டெபாசிட் பண்ணியாச்சுங்கோ, இனி கூட்டுக்குழு போட்டாலும் கெடைக்காது, கூட்டாத கூழு குடிச்சாலும் கெடைக்காதுங்கோ.......பேசாம அடுத்து எதுல சான்ஸ் கெடைக்கும்னு பாருங்கங்கோவ்..........
..............................
7. பன்மோகன் சிங்: எவ்ளோ நல்லவனா இருந்தாலும் பல ரூபத்துல பிரச்னை
வருதே. எத்தனை ஊழல்டா சாமி. மிஸ்டர் ராம்சாமி, ஒரு மாசம் ஜாலியா
வெளிநாட்ல ரெஸ்ட் எடுக்கப்போறேன். நீங்க என் பதவில உக்கார்றீங்களா?
பன்னிக்குட்டி: கொஞ்சம் இருங்க, பின்னாடி அடியாளு யாரும் வெச்சிருக்கீங்களான்னு பாத்துக்குறேன்....ங்ணா... என்னங்ணா இது... உங்களுக்கே நியாயமா.......? சும்மா இருந்தப்பெல்லாம் உக்காந்து ஜாலியா எஞ்சாய் பண்ணிட்டு, அடி கன்பர்ம்னு தெரிஞ்ச உடனே மாட்டிவிடுறீங்களே? ங்ணா எந்த நாட்டுக்குங்ணா போறீங்க? ஸ்விஸ்சுக்குங்ளா? என்னையும் அங்கேயே கூட்டிட்டுப் போய்டுங்ணா, அந்த பேங்கு வாசல்லேயே உக்காந்து பிச்சை எடுத்தாவது நானும் ஓரு தொழிலதிபர் ஆயிடுறேனுங்ணா.......
................................
8. நீங்க பாட்டுக்கு சிவனேன்னு ரோட்ல போயிட்டு இருக்கீங்க. இன்னும் கொஞ்ச நேரத்துல இன்டர்வியு. திடீர்னு 'வல்லரசு' விஜயகாந்த் குறுக்க வந்து "கொலை முயற்சி கேசுல உங்களை கைது செய்றேன்" அப்டின்னு உங்களை கொண்டு போய் ஜெயிலில் அடிக்கிறார். நீங்கள் என்ன சொல்லியும் கேட்காமல் வெளுத்து துவைக்கிறார். மறு நாள் காலை கேப்டன் உங்கள பாத்து "நீங்க பில்லா இல்லன்னு கன்பார்ம் ஆயிருச்சி. போகலாம்" என்று சொல்கிறார். அப்போது உங்க ரியாக்சன்/பதில்..
பன்னிக்குட்டி: ஆ..... காது ரெண்டுலேயும் நல்லா அடிச்சுட்டாங்க போல..... ஒண்ணும் கேக்க மாட்டேங்கிது........ யப்பா .... டங்குவாரு கிழிஞ்சிடுச்சுடா சாமி......... இன்னேரம் வீட்ல இருந்தா சொகமா கொத்துப்பரோட்டா தின்னுக்கிட்டு இருப்பேனே..............? என்ன ஏட்டு என்னமோ சொல்றாரு.... சார்... என்ன சார் சொல்றீங்க?
ஏட்டு: உன்னை ரிலீஸ் பண்ணச் சொல்லிட்டாங்க...
பன்னிக்குட்டி: ஆங்..இது பெரிய சூப்பர் ஸ்டாரு படம்.... இன்னிக்கு ரிலீஸ்சு......... பாத்தீங்களா ஜனங்களே அந்த இண்டெர்வியூ மட்டும் போயிருந்தா.. இன்னேரம் எங்கேயோ போயிருக்க வேண்டியவன, இவனுக அள்ளிக்கிட்டு வந்து விடிய விடிய கொத்துக்கறிய கொத்துற மாதிரி கொத்திப்புட்டு இப்போ கொஞ்சம் கூட பீல் பண்ணாம போக சொல்றானுங்க...... (தீபாவளி, பொங்கல்னு காசு கேட்டு வரட்டும்... சொறிநாய வெச்சி கடிக்க விடுறேன்....)
போலீஸ் டிப்பார்ட்மெண்ட்ல வேற ஆளே இல்லேன்னுதானே உங்களைக் கூப்புட்டு பில்லாவ புடிக்கச் சொன்னாங்க கேப்டன்......... இது உங்களுக்கே நல்லா இருக்கா? நான்தான் நான் பில்லா இல்லேன்னு அப்பவே சொன்னேனே.... கேக்க மாட்டேனுட்டானுகளே.... எவனோ ஒரு கிருதுருவம் புடிச்ச மாங்கா மண்டையன் அவன்பாட்டுக்கு நான் தான் பில்லான்னு சொல்லிட்டுப் போயிட்டான்.... நான் இவனுககிட்ட மாட்டிக்கிட்டு இப்படி லோல்படுறேன்.... அவன் மட்டும் என் கைல கெடச்சான்.........
கேப்டன்: ஏய் மிஸ்டர்... குற்றவாளிகளை தேடும்போது இப்படி அப்பாவிகள் மாட்டறது சகஜம்.... இப்போ தமிழ்நாட்ல 1 லட்சத்து 84 ஆயிரம் பேரு தேடப்படும் குற்றவாளியா இருக்காங்க, அவங்களைப் பிடிக்க 23 ஆயிரம் போலீஸார்......
பன்னிக்குட்டி: (மேட்டுக்குடியில் வருவது போல் கையெடுத்து கும்பிட்டபடி) ங்ணா....... அந்தக் கொலைய நாந்தான் பண்ணேனுங்ணா.... புடிச்சி தூக்குலேயே போட்ருங்ணா..... போற உசுரு உடனே போகட்டும்.......!
.........................................
9. பாஜபக்சே: ஹல்லோ மிஸ்டர்..ராம்சாமி. எங்க நாட்டு டூரிசம் சார்பா உங்கள ஒரு வாரம் சிறப்பு விருந்தாளியா அழைக்கிறேன். என் ரூம்ல தான் தங்கணும். என்ன சொல்றீங்க?
பன்னிக்குட்டி: என்னது சுற்றுலாவா அதுவும் உங்ககூட வேற தங்கனுமா? இதுக்கு அந்த கூகிள் மண்டையன் கூடவே இருந்திடுவேனே...... வேண்டாம்டா சாமி, என்னைய வெச்சிக்கிட்டு நான் தான் மீனவர்களை கொல்ல சொன்னேன்னு பேட்டிக் கொடுத்தாலும் கொடுத்திருவ.... அப்புறம் எங்க தலைவரு அதிலேயும் பங்கு கேப்பாரு......! அய்யோ........ இந்த ஹிப்புப்போட்டமஸ் தலையன் இன்னும் அடங்க மாட்டேங்கிறானே? ஆண்டவா என்னை ஏன் இந்த மாதிரி நாதாரிங்க கூட கூட்டு சேர்க்கிறே...........?
.......................................
10. "சப்போஸ் உன்ன காதலிச்சா", "லூசு பெண்ணே லூசு பெண்ணே", "எவண்டி உன்ன பெத்தான். கைல கெடச்சான் செத்தான்" போன்ற தத்துவ பாடல்களை எழுதியவர்கள் உங்கள் கையில் சிக்கினால்...
பன்னிக்குட்டி: இவனுகளைத்தான்யா நானும் ரொமப நாளா தேடிக்கிட்டு இருக்கேன், ங்கொக்காமக்கா... காச வாங்கிட்டு இவனுக பாட்டுக்கு இஷ்டத்துக்கு எதையாவது எழுதிட்டுப் போயிடறானுங்க, அதாவது பரவால்ல..... பொழப்புன்னு அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம், ஆனா அதுக்கப்புறம் அந்தப் பாட்டுகள நாட்ல இருக்க வெந்தது வேகாதது, ஒட்டு பீடி பொறுக்குனதுகள்லாம் பாடிக்கிட்டுத் திரியறானுங்க பாருங்க......... முடியலடா சாமி... காச்சுன கம்பிய எடுத்து காதுல விட்ட மாதிரி இருக்குய்யா....... சே..சே..சே நாடே நமச்சல் எடுத்து போச்சு............ !
...................................
சிறப்பு கேள்வி: கவுண்டமணி/செந்தில் படங்களில் தங்களுக்கு மிகவும்
பிடித்த மூன்று காமெடி ட்ராக் எது? ஏன்?
பன்னிக்குட்டி: இதுதான் ரொம்பக் கஷ்டமான கேள்வி...... மூன்று மட்டும் எப்படி சொல்றது? இருந்தாலும் உங்களுக்காக (இது தரவரிசைப்படி அல்ல)
மன்னன்: இந்த தொழிலதிபர்கள் தொல்ல தாங்கமுடியலடா சாமி....
சேரன் பாண்டியன்: அய்யா கொட புடிச்சிக்கிட்டு போற பெரியவரே....
சூரியன்: அரசியல்ல இதெல்லாம்..........., ஸ்டார்ட் மியூசிக்....
அப்புறம்......
கோயமுத்தூர் மாப்ள
உத்தமராசா
ஊர்மரியாதை
தாலாட்டு கேட்குதம்மா
கரகாட்டக்காரன் (இது இல்லேன்னா எப்படி?)
உள்ளத்தை அள்ளித்தா
மேட்டுக்குடி
மாமன் மகள்
கோவில் காளை
சின்னக் கவுண்டர்
நடிகன்
இன்னும் நிறைய இருக்கு, ஆனா படங்களின் பெயர்கள் இப்போ ஞாபகம் இல்ல
...................................