(இந்தப்பதிவு முழுக்க முழுக்க நகைச்சுவைக்காக எழுதப்பட்ட கற்பனை... சிரிங்க... சீரியஸா எடுத்துக்காதீங்க...)
நையாண்டி பவனில் ஒருநாள்...
கவுண்டமணி: டேய் தயிர்வடை தலையா...
செந்தில்: அண்ணே...
கவுண்டமணி: என்னடா வரவர நம்ம ஹோட்டலுக்கு ஒருத்தனும் வர மாட்டேங்குறான். எல்லாரும் குடும்பத்தோட போயஸ் கார்டனுக்கு பொக்கே குடுக்க போயிட்டானுங்களா...?
செந்தில்: அது வந்துண்ணே...
கவுண்டமணி: என்ன வந்து போய்... முழுங்காம சொல்றா...
செந்தில்: நம்ம கடை சமையக்காரங்க எல்லாம் ஸ்ட்ரைக் பண்றாங்கண்ணே...
கவுண்டமணி (ஜெர்க்காகி): எது ஸ்ட்ரைக்கா...? படுவா அந்த எட்டு பேரையும் இங்க வரச்சொல்லுறா... நான் பார்த்தாகனும்...
செந்தில்: ஆகட்டும்ண்ணே...
(அடுத்த பத்து நிமிடத்தில் சமையல்காரர்கள் அனைவரும் கவுண்டருக்கு பயந்து வரிசையில் வந்து நிற்கிறார்கள்)
செந்தில்: அண்ணே... இவர் பேரு விந்தை மனிதன்... வேலைக்கு சேர்ந்ததுல இருந்து ஒருமுறை கூட சமையல் செஞ்சதில்ல...
கவுண்டமணி: என்னது விந்தைமனிதனா...? யோவ் பொறக்கும்போது என்ன ரெண்டு கொம்போட பொறந்தியா...?
விந்தைமனிதன்: நைட் சர்வீஸ் பஸ் வுடுறேன்... வந்து ஏறிக்கோங்க...
கவுண்டமணி: ஹே ராஜா... கஸ்டமர் இலைல பாயசம் விடச்சொன்னா நீ பஸ் வுடுறியா... மவனே இரு உன்ன...
கவுண்டமணி: ஏன்ய்யா நாஞ்சில் சம்பத் கிட்ட பேட்டி எடுத்தியே... அத ப்ளாக்ல போட்டியா...
விந்தைமனிதன்: இதோ இப்ப போட்டுடுறேன் தலைவா...
கவுண்டமணி: யோவ் எலக்சன் ரிசல்ட் வந்து ஒருவாரம் ஆச்சு... ஊசிப்போன வடையை போட்டு ஊரை எமாத்தப் பாக்குறியா...
விந்தைமனிதன்: கொங்கை முகங்குழையக் கூந்தல் மழைகுலைய...
கவுண்டமணி: ஆ... அப்பா... கவிதை சொல்ல ஆரம்பிச்சிட்டானே... இந்தாளை போகச்சொல்லுங்கடா...
கவுண்டமணி: டேய்... ஆசிட் வாயா அடுத்த ஆளை வரச்சொல்லு...
செந்தில்: அண்ணே... இவரு அஞ்சாசிங்கம் கம் அறிவியல் விஞ்ஞானி...
கவுண்டமணி: ஆமாம்... சாம்பார்ல விழுந்த பெருச்சாளியை கண்டுபுடிச்சவனெல்லாம் விஞ்ஞானின்னு சொல்லிக்க வேண்டியது...
அஞ்சாசிங்கம்: பூமி உருண்டையில்லை அது தட்டையா இருக்கு... உங்களுக்கு தெரியுமா...?
கவுண்டமணி: இப்ப நான் அடிக்கிற அடியில உன் மூஞ்சி தட்டையாகிடும் தெரியுமா...
அஞ்சாசிங்கம்: கிரேக்க வரலாற்றில் என்ன சொல்லியிருக்காங்கன்னா.....
கவுண்டமணி: அடேய் ஆப்பத்தலையா... இது சரிப்பட்டு வராது... அந்த சிராஜுதீனை கூப்பிட்டு விடு...
(அஞ்சாசிங்கம் “ஆள விடுங்கடா சாமி..” என்று தலைதெறிக்க ஓடுகிறார்...)
செந்தில்: அண்ணே... அடுத்ததா உங்க பங்காளி பன்னிக்குட்டி வந்திருக்கார்...
கவுண்டமணி: பங்காளியாவது கிங்காளியாவது... ஒரு உறையில ஒரு கத்தி தான் இருக்கணும் தெரியுதா...
பன்னிக்குட்டி: மங்கிஸா கிங்கிஸா... கிங்கிஸா பாயாஸா...
கவுண்டமணி: அடேய் மஞ்சத்துண்டு மண்டையா... இவன் என்னடா சொல்றான்...
செந்தில்: ஆப்பிரிக்கா பாஷைல அவர் உங்களுக்கு தம்பி மாதிரின்னு சொல்றாரு அண்ணே...
கவுண்டமணி (மனதிற்குள்): அதானே... ஆப்பிரிக்கா பாஷை எல்லாம் உனக்குத்தானே தெரியும்...
கவுண்டமணி: மீ அண்ணா... யூ தம்பி... டச் பண்ணிட்டீங்களே தம்பி... நல்லா இருங்க... ஆனா கடைக்கு வர்ற கஸ்டமருக்கு மரநாய் கக்காவுல காப்பி போட்டு தர்றீங்களாமே... அதை மட்டும் செய்யாதீங்க... சரிங்களா...
பன்னிக்குட்டி: சரிங்ண்ணா...
கவுண்டமணி: த நெக்ஸ்ட்...
செந்தில்: இவங்க ஹைக்கூ அதிர்வுகள் ஆனந்தி...
கவுண்டமணி (மனதிற்குள்): ஹை லேடீஸ்... லேடீஸ்...
கவுண்டமணி: என்ன அதிரவே இல்லை... அதுசரி நீங்க எந்த ஊரு மேடம்...
ஆனந்தி: நாங்கெல்லாம் மதுரக்காரைங்க... தங்கமானவங்க...
கவுண்டமணி: அப்ப சென்னைல இருக்குறவங்க எல்லாம் தகரமா... நாட்டுல ரொம்ப பேர் இப்படி சொல்லிட்டு திரியுறீங்க...
ஆனந்தி: புள்ளைக்கு பரீட்சைங்க...
கவுண்டமணி: மேடம்... எக்ஸாம் முடிஞ்சி எலக்குஸன் ரிசல்ட் எக்ஸாம் ரிசல்ட் எல்லாம் வந்தாச்சு... இந்த டக்கால்ட்டி வேலையெல்லாம் இங்க வேணாம்... இன்னும் ஒரு வாரத்துல வேலைக்கு வந்து சேருற வழிய பாருங்க...
செந்தில்: அடுத்து வந்திருக்காங்க... கொஞ்சம் வெட்டிப்பேச்சு சித்ரா...
கவுண்டமணி: எது கொஞ்சம் வெட்டிப்பேச்சா...? இவங்க பேச ஆரம்பிச்சா நிறுத்த மாட்டாங்களே...
சித்ரா: புயல் அடிச்சது... பேய் மழை பெஞ்சது... மரங்கள் விழுந்துச்சு... வேலிகள் பறந்துச்சு...
செந்தில்: கவித... கவித...
கவுண்டமணி: டேய் ஒபாமா வாயா... இதுக்கு முன்னாடி நீ கவிதையே வாசிச்சது இல்லையா...
சித்ரா: Actually what im trying to say is…
கவுண்டமணி: தாயி... நீங்க எதுவும் சொல்ல வேண்டாம்... எவ்வளவு நாள் வேணும்னாலும் லீவ் எடுத்துக்கோங்க... ஆனா திரும்ப வரும்போது பீஸா, பர்கர் ரெசிபி எல்லாம் கத்துட்டு வாங்க... நம்மூரு கஸ்டமருங்க எவ்வளவு நாளைக்குத்தான் புளியோதரையும் பொங்கலும் சாப்பிடுவாங்க...
செந்தில்: அண்ணே... இவரு “மெட்ராஸ் பவன்” சிவக்குமார்...
கவுண்டமணி: வா ராஜா... நம்ம நையாண்டி பவனுக்கு போட்டியா...
சிவக்குமார்: ஐயோ அதெல்லாம் இல்லீங்க...
கவுண்டமணி: மண்டையா... பையன் பாக்குறதுக்கு அம்மாஞ்சியா இருக்கானே... ரொம்ப நல்ல பையனோ...
செந்தில்: ஆமாண்ணே... யாருமே இல்லாத கடையில யாருக்கோ டீ ஆத்துனவரு இவர் தாண்ணே...
கவுண்டமணி: வெளக்கெண்ணை கருப்பா... புரியுற மாதிரி சொல்லுடா...
செந்தில்: அண்ணே... நம்ம ஹோட்டல் மூடாம இருக்குறதுக்கு காரணமே இவர் தான்...
கவுண்டமணி: அப்படியா...? அப்படின்னா தம்பி நீங்க கல்லாவுல போய் உக்காருங்க... ஆனா இது நாலு பேரு வந்துபோற இடம் டிக்கிலோனால்லாம் விளையாடாதீங்க...
செந்தில்: அண்ணே... இவருதான் பிரபல பதிவர் பிலாசபி பிரபாகரன்...
கவுண்டமணி: ஓ... பெரிய்ய்ய தத்துவஞானி சாக்ரடீஸ்... சொறி புடிச்ச மொன்னை நாயி நீயெல்லாம் எதுக்குடா அடைமொழி வச்சிக்குற... அதுசரி... நீ என்னவோ கடைக்கு வர்ற கஸ்டமரை எல்லாம் கெட்டவார்த்தைல திட்டுறியாமே...???
பிலாசபி பிரபாகரன்: அண்ணே... நான் சின்ன பையன்... நீங்க திருத்தக்கூடாதா...?
கவுண்டமணி: ஒன்ன மாதிரி நாட்டுல 80 கோடி பேர் இருக்கானுங்க... ஒங்கள திருத்துறது என் வேலை இல்ல... மொதல்ல நான் என்னை திருத்திக்கிறேன்...
பிலாசபி பிரபாகரன்: இப்படித்தான் மகாத்மா காந்தி ஒருமுறை...
கவுண்டமணி: வாயை மூடுறா கழுதை வாயா... என்னடா தள்ளாடிக்கிட்டே நிக்கிறே... ஒயின்ஷாப்ல இருந்து நேரா வர்றியா...?
பிலாசபி பிரபாகரன்: உவ்வே...
கவுண்டமணி: அய்யா ராஜா... அப்படி ஓரமா உன்னோட ஒயின்ஷாப்ல போயி வாந்தி எடு... இங்க வேணாம்...
செந்தில்: அண்ணே... கடைசியா ஒருத்தர் வெயிட்டிங்...
கவுண்டமணி: வரசொல்லுடா...
செந்தில்: இவரு கே.ஆர்.பி.செந்தில்... மிகப்பெரிய தொழிலதிபர்...
கவுண்டமணி: நாட்டுல இந்த தொழிலதிபருங்க தொல்லை தாங்க முடியலடா... குண்டூசி விக்கிறவனெல்லாம் தொழிலதிபர் ஆயிடுறான்...
கே.ஆர்.பி: சொல்லுங்க தம்பி...
கவுண்டமணி: டேய் இடியாப்ப தலையா... என்னடா இவன் என்னைப் பார்த்து தம்பின்னு சொல்றான்...
செந்தில்: அண்ணே... இவர் எல்லாரையும் தம்பின்னு தான் கூப்பிடுவார்....
கவுண்டமணி: அப்படிங்களா அண்ணா... உங்க பேரு என்னங்கண்ணா...?
கே.ஆர்.பி: செந்தில்...
கவுண்டமணி: கொஞ்சம் சத்தமா சொல்லுங்க...
கே.ஆர்.பி: செந்திலு...
கவுண்டமணி: அப்படியே அந்தப்பக்கம் திரும்பி நின்னு இன்னும் சத்தமா சொல்லுங்க...
கே.ஆர்.பி: செந்திலுங்கோ...
(கவுண்டமணி தனது சகா செந்திலை வழக்கமாக எங்கே மிதிப்பாரோ அங்கே கே.ஆர்.பி.செந்திலை மிதிக்க சமையல்காரர்கள் குழு எஸ்கேப்....)
கற்பனை: பிலாசபி பிரபாகரன்


