இன்று நம்ம பஞ்சாயத்து மேடையை சுற்றி கூட்டம் அதிகம் . மேடையை மறைத்து கொண்டு மனித தலைகள் எக்கச்சக்கமாக இருக்க
உள்ளே நுழைகிறார் நம் தலைவர் கவுண்டர் அவருடன் செந்திலும் .
கவுண்டமணி :- டேய் அரவேக்காட்டு மண்டையா எவனடா இன்னைக்கி பிடிச்சிட்டு வந்திருக்கானுங்க இவளோ கூட்டம் இருக்கு ?
செந்தில் :- அது யாரோ பழைய தளபதி பஜய்யாம் பக்கத்துல ஏதோ சூட்டிங் வந்திருக்காப்புல நம்மளும் தீர்ப்பு சொல்லி ரொம்ப நாள் ஆய்டுச்சா .அதான் நம்ம ஆளுங்கள விட்டு பிடிச்சுட்டு வர சொன்னேன் .
கவுண்டமணி :- அட வறுமைக்கு பொறந்தவனே சும்மா போறவன் வர்றவன் எல்லாம் இப்படி பிடிச்சுட்டு வந்து தீர்ப்பு சொல்லுன்னா ஜனங்க நம்மள பத்தி என்ன நெனைப்பாங்க போ போயி அவங்கள பத்தி விட்டுட்டு வா .
செந்தில் :- அண்ணே அவங்க தப்பு பண்ணிருக்காங்க நம்ம கோவிந்தன் சொன்னான் அவன் தான் பஞ்சாயத்த கூட்ட சொன்னான் சும்மா வாங்கணே என்னன்னு விசாரிப்போம் .
அனைவரும் விலகி வழி விட அங்கே பழைய தளபதி பஜய் தோளுக்கு குறுக்கே கைகளை போட்டுகொண்டு லேசாக குத்தவைத்த நிலையில் பின்புறத்தை ஆட்டி கொண்டு நிற்கிறார் .
கவுண்டமணி :- நாயே நடை பாதையில் உக்காறதே கொஞ்சம் நகந்து உக்காரு .........
டேய் கோழியூர் கோவிந்தா என்னடா பிரச்சனை இப்படி பெரிய மனுசங்கள எல்லாம் பிடிச்சிட்டு வந்துருக்கே ?
கோழியூர் கோவிந்தன் :- அண்ணே நான் சிவனேன்னு நம்ம ஊரு கண்மாயில மீன் பிடிச்சிக்கிட்டு இருந்தேன் .
அப்போ இவரு காருல வந்து என்னை தைரியமா இலங்கைக்கு போய் மீன் பிடின்னு சொல்றாருனே . நான் செத்துட்டா இவரு பிரதமருக்கும் ஜனாதிபதிக்கும் தந்தி குடுப்பாராம் . அதுனால நான் இலங்கைக்கு போய் மீன் பிடிக்கணுமாம் .
கவுண்டமணி :-டேய் எல்லாம் தள்ளி வந்துருங்க கடிச்சி வச்சிர போறான் . தம்பி உன் அமைப்பே சரி இல்லையே டேய் நிமிர்ந்து நில்லு தோளில் இருந்து கைய எடு படுவா பிச்சி புடுவேன் பிச்சி..........
பழைய தளபதி பஜய் :- ...ன்னா ........நான் என்னங்கணா அப்படி தப்பு பண்ணீட்டேன் எங்க நைனா சொல்லி குடுத்தத சொன்னேன் இது ஒரு தப்புகளானா............ இலங்கை காரன் நம்ம தமிழ் மீனவர்களை கொல்றாங்க அதனால நீ எங்கே மீனவர்களை பார்த்தாலும் போய் ஆறுதல் சொல்லு அப்பதான் நீ முதலமைச்சர் ஆக முடியும் நானும் துணை முதல்வர் ஆகணும்ன்னு எங்க நைனா சொன்னாருங்கனா ..இவரு மீன் பிடிச்சிக்கிட்டு இருந்தாரு அதான் இவருக்கிட்ட சொன்னேன் ....
கவுண்டமணி :- டேய் அது கடல்ல மீன் பிடிக்கிறவங்க கிட்ட போய் சொல்லணும் இப்படி கண்மாய்ல மீன் பிடிக்கிறவன் கக்கூசுக்கு போறவன் கிட்ட எல்லாம் போய் சொல்ல கூடாது இதெல்லாம் உங்கப்பன் உனக்கு சரியா சொல்லி தரலையா ?
பழைய தளபதி பஜய் :- அப்படீங்கலானா அப்போ இவங்கள எல்லாம் இலங்கை காரங்க சுட மாட்டாங்களா ?
கவுண்டமணி :- ஏன் உங்க அப்பன் கிட்ட சொல்லி அதுக்கும் ஏற்பாடு பண்ணேன் . சரி இவளோ அறிவு கொழுந்தா இருக்கியே நீ முதலமைச்சர் ஆகி என்னை பண்ண போறே சொல்லு ............
பழைய தளபதி பஜய் :- அது எல்லாம் எங்க நைனாக்கு தானுங்கண்ணா தெரியும் நான் திரிஷா கூட சூட்டிங் போவேன் .அப்புறம் என் ரசிக பசங்களுக்கு எல்லாம் என் படம் போட்ட டீசர்ட் குடுப்பேன் . எல்லா தியேட்டர்லயும் என் படத்தை ஓட வைப்பேன் .
வேற எதுவும் செய்யனுங்கலானா ...........?
கவுண்டமணி :- நீ ஒன்னும் செய்ய வேண்டாம் இதுவே போதும் நாடே நமச்சல் எடுத்து போய்டும்........... எப்பா இந்த கொசுவ அடிச்சி துரத்துங்கடா முழுசா இன்னும் நடிக்கவே கத்துக்கல அதுக்குள்ள முதலமைச்சர் ஆகணுமாம் புளியான்கொட்டை .......
இன்னொரு முறை உன்னை இங்க பார்த்தேன் ..... அப்படியே உன்னை இலங்கைக்கு பார்சல் பண்ணிடுவேன் ஜாக்கிரதை ....
டேய் சிலிண்டர் மண்டையா இவனை நம்ம ஊரு எல்லை வரைக்கும் பத்தி விட்டுட்டு வா ........
இனிமேல் என்னை இந்த மாதிரி வெந்தது வேகாதது அரைவேக்காடுகளுக்கு எல்லாம் பஞ்சாயத்து பண்ண கூப்புடாதீங்கடா ..
நான் கெளம்புறேன் ............
posted by அஞ்சாசிங்கம்
19 comments:
படிச்சிட்டு வ்ர்றேன்..
ஹா ஏன் இந்த கொலவெறி
விருது கொடுத்துருக்கோம் வாங்க
நாமே ராஜா, நமக்கே விருது-4
http://speedsays.blogspot.com/2011/03/4.html
என்னப்ப விஜய் விட மாட்டிங்க போல..
அசத்தல் தொடருங்கள்..
பஞ்சாயத்து முடிஞ்சதும், வாரேன். ஹா,ஹா,ஹா....
ஹஹா ..நல்லா அடிச்சு துவைச்சிட்டாறு கவுண்டர் ..கலக்குங்க :)
இது உங்களுக்கும் நிகழ்ந்திருக்கும் !-விஞ்ஞான விளக்கம்
இங்க பஞ்சாயத்துல கவுண்டரு Dr.விஜய்ய அடிச்சு தொரத்துனாலும்
Dr.விஜய் கவுண்டமணிக்கும் நண்பன்டா
http://enpakkangal-rajagopal.blogspot.com/2011/03/dr.html
சின்ன டாக்டர விட மாட்டீங்க போல :-))))))
இரவு வானம் said...
சின்ன டாக்டர விட மாட்டீங்க போல :-))))))//////
ரொம்ப அப்பாவியா இருப்பீங்க போல ....
ராஜகோபால் said... இங்க பஞ்சாயத்துல கவுண்டரு Dr.விஜய்ய அடிச்சு தொரத்துனாலும்
Dr.விஜய் கவுண்டமணிக்கும் நண்பன்டா........///////
வரேன் வந்து பாக்குறேன் ......
S.Sudharshan said... ஹஹா ..நல்லா அடிச்சு துவைச்சிட்டாறு கவுண்டர் ..கலக்குங்க :)......../////////
அதான் கவுண்டரு .......
Chitra said...
பஞ்சாயத்து முடிஞ்சதும், வாரேன். ஹா,ஹா,ஹா....///////////
யாருப்பா அது பாதி பஞ்சாயத்துல எழுந்து போறது ..........ஜக்கமா கோவபடுவா....தாயத்து கட்டிகங்க
கவுண்டர் சி.எம். ஆனாதான் சரிப்படும்!
ஐயா மவராசங்களா!! பாவம் பஜய் சாரி விஜய்...
இதுநல்லாயிருக்கே.
//பஞ்சாயத்து முடிஞ்சதும், வாரேன். ஹா,ஹா,ஹா....//
அதுசரி...:))))
அண்ணே கவுண்டர் அண்ணே
பழைய தளபதி பஜய் கிட்ட சொல்லி என் சைக்கிள் தொலைஞ்சதுக்கு நஷ்ட ஈடு வாங்கித்தாங்கன்னே ,அவரு படத்துக்கு போனப்ப தானே என் சைக்கிள் தொலைஞ்சுபோச்சு
நா.மணிவண்ணன் said...
அண்ணே கவுண்டர் அண்ணே
பழைய தளபதி பஜய் கிட்ட சொல்லி என் சைக்கிள் தொலைஞ்சதுக்கு நஷ்ட ஈடு வாங்கித்தாங்கன்னே ,அவரு படத்துக்கு போனப்ப தானே என் சைக்கிள் தொலைஞ்சுபோச்சு
////////////////////////////
அவர வச்சி படம் எடுத்த தயாரிப்பாளர்களுக்கே இன்னும் நஷ்ட ஈடு தரவில்லை உன் ஒன்ரையனா சைக்குளுக்கு தருவாரா ?.......வெவரம் தெரியாத புள்ளயா இருக்கியே .............
Iyya ivaru padatha naan parthen
nattamai: yaruda nee
ayya naan avav sidhappa
nattamai: hum sellathu ,sellathu
Post a Comment