(கூட்டணி) பிரண்ட்ஸ் - ரீமிக்ஸ்:
தேர்தலில் செம உதை வாங்கினால் கூட்டணியில் ஏற்படும் சலசலப்பு எப்படி இருக்கும். கட்சி சார்பு இல்லாத பொதுவான கற்பனை.
காட்சி - 1
சித்தப்பா: ஐயய்யோ... அட நாசமா போற எடுவட்ட பயலுகளா..நீங்க எல்லாம் அடுத்து என்னை பதவில உக்கார வக்க வாடா வந்துருக்கீங்க. என் கட்சிய லெட்டர் பேட் கட்சி ஆக்கனும்னே வந்துருக்கீங்கடா. உள்ளடி வேலை பண்ணியே கவுத்துட்டீங்கலேடா..
பெரியப்பா(கூட்டணி தலைவர்): என்னடா இங்க சத்தம். 100 வருசமா ஜனங்க தலைல மொளகா அரைக்க வச்சிருந்த அம்மிய ஒடச்சிட்டீங்கலேடா..
சுறா: அப்பாடா.. நான் குடுக்கற தொல்ல பொறுக்காம என் தலைல போட வச்சிருந்த கல்லுன்னு நினைச்சி பயந்துட்டங்க...
பெரியப்பா: கழுதை...அரசியல் தந்திரம் உனக்கு தெரியுமாடா. எங்க பாட்டன் பூட்டன் காலத்துல இருந்து காப்பாத்திட்டு வந்த கட்சியை மொக்கை பிரச்சாரம் பண்ணி டெபாசிட் இழக்க வச்சிட்டீங்கலேடா. இனிமே எவனாவது கட்சில சேருவானாடா.
A.B.C.D இளங்கோ: ஆமாமா.. இனிமே எவனும் சேர மாட்டான்.
சித்தப்பா: வாய மூட்றா கொரங்கு. அய்யா, மன்னிச்சிகங்கய்யா.
பெரியப்பா: தவசி....டேய் தவசி...
தவசி: இதோ வந்துட்டேன்...
பெரியப்பா: ஏண்டா எதிர்கட்சி ஆபீசுக்குள்ள ஓடுற. இன்னும் நீ 'ஸ்டெடி' ஆவலையா.
தவசி: என்ன எழவோ தெர்ல. எங்க போகணும்னு தெரியாம தப்பான ஏரியாக்கு காலு போயிடுது. டாக்டர்கிட்ட கொண்டு போயி காலை காட்டனும்.
பெரியப்பா: டாக்டர்கிட்ட காட்ட வேண்டியது உன் காலை இல்லை. உன் கண்ணை. தயவு செஞ்சி அந்த கருப்பு கண்ணாடிய கழட்டு. லூஸ் மோசன் வர்றா மாதிரி இருக்கு. கூலிங் கிளாஸ் போட்டுட்டு நம்ம கட்சிக்கு ஓட்டு போடாம எதிர்கட்சிக்கி ஓட்டு போட்டா இந்த நிலைமைதான் நமக்கு.
தவசி: டேய்..யார்ரா அது விசில் அடிச்சி சிரிக்கிறது. யார்ரா நான் பண்ண பிரச்சாரத்தை எல்லாம் ஆதித்யா சேனல்ல போட்டது..?
சித்தப்பா: ஒண்ணும் இல்லங்க. உங்களுக்கு வாய் ஸ்லிப் ஆன மாதிரி நம்ம பசங்களுக்கு மனநிலை ஸ்லிப் ஆயிருச்சி.
தவசி: எஜமான், இனிமே ஒரு நிமிஷம் கூட இந்த மாதிரி ஆளுங்கள கூட வச்சி இருக்கக்கூடாது. உடனே கூட்டணிய கலைச்சிட வேண்டியதுதான்.
பெரியப்பா: ஆ..எலெக்சன்ல வாரி எறைச்ச பணத்தை எல்லாம் உங்க அப்பனா வந்து சம்பாதிச்சி கொடுப்பான்.
ராமு பக்தன்: அய்யா..அய்யா. கொஞ்சம் பெரிய மனசு பண்ணுங்கய்யா..
பெரியப்பா: அந்த கதையே இங்க கிடையாது. இதுவரை எங்க ஆட்சில அமுக்குன மொத்த பணத்துல பாதிய எங்க பேர்ல மாத்திக்கொடு. மத்ததை எல்லாம் அடுத்த எலக்சன்ல ஜெயிச்சா பாத்துக்கலாம்.
வேசன், பீதாம்பரம், மற்றும் திருப்பாச்சி ஆகியோர் அம்மியை தூக்குகிறார்கள்.
GOLD வாலு: டேய்..டேய்..அம்மிய தொட்டீங்க.. 'கை'ய வெட்டிப்புடுவேன். ராஸ்கல். நடங்கடா.
திருப்பாச்சி சோகமாக அம்மிக்கல்லை பார்க்கிறார்.
சித்தப்பா: டேய்.. என்ன பீலிங்கா. கடைசி வரைக்கும் வாய் தெறக்காமயே இருந்துட்ட. எனக்குதாண்டா பீலிங்கு. போடா. ஐயோ..அந்தலை சிந்தலை ஆக்கிட்டாங்களே...
காட்சி - 2
பெரியப்பா: டேய் எல்லாரும் இங்க வாங்க. நீங்களும் வாங்கடா. உங்களுக்கு(டி.ஆர், பார்த்திக்) வேற தனியா வெத்தல பாக்கு வச்சி அழைக்கணுமா. டேய் அந்த பிரசார ஸ்பெசல் புத்தகத்த அவன்கிட்ட குடு. நீங்க போய் புது மாடல் அம்மிக்கல் வாங்க கலெக்சனுக்கு போங்க. டேய் நீங்க(புளிமுத்து,கித்தீஷ் ) எங்கடா போறீங்க. வாங்கடா. டேய் தவசி நீ எங்க போற?
தவசி: நீங்கதான பிரசார புத்தகத்தை படிக்க சொன்னீங்க.
பெரியப்பா: இதுவரைக்கும் பேசி எங்க லங்கோடை அறுத்தது எல்லாம் பத்தாதா. பேசுறேன்னு மைக்குல கை வச்ச....கொன்னுடுவேன். மேல போயி உன் அடுத்த படத்துக்காவது கொஞ்சம் பாக்குற மாதிரி ஹீரோயினை செலக்ட் பண்ற வழியப்பாரு.. போ.
தவசி: கலக்கல் ஹீரோயின், மொக்கை ஹீரோயின்னு எப்படி கரெக்டா செலக்ட் பண்றது??
பெரியப்பா: நீ செலக்ட் பண்ற ஹீரோயின் எல்லாமே மொக்கை ஹீரோயின் தான். போய் செலக்ட் பண்ணு போ.
கித்தீஷ், பார்த்திக் இருவரும் தவசியை பின்தொடர்கின்றனர்.
பெரியப்பா: டேய் நீங்க எங்கடா போறீங்க.
இருவரும் கோரசாக: உங்களுக்கு வேர்க்குது. துண்டு எடுக்கப்போறோம்.
பெரியப்பா: வாங்கடா கீழ. விட்டா கிறுக்கன் ஆக்கிடுவாங்க போல இருக்கு. ஊர்ல இருக்குற காமெடி பயலுக எல்லாம் எங்கிட்ட வந்து உசுர வாங்கிட்டு இருக்கீங்களேடா.
தவசி மாடியில் இருந்து வருகையில் கொடியில் காய்ந்து கொண்டு இருக்கும் ஆயிரக்கணக்கான கூட்டணி கட்சி துண்டுகளை கண்டு கொதித்து எழுகிறார். அனைத்தையும் கீழே இருக்கும் பெரியப்பா தலையில் ஓங்கி எறிகிறார்.
வலி தாங்காமல் சுருண்டு விழுகிறார் பெரியப்பா.
"என்னடா ஆச்சி"
"பெரியப்பா தலைல துண்டு விழுந்துருச்சி"
.................................................................................
7 comments:
ஒரு பெண் பாத்திரம் கூட இல்லாமல் இந்த பிரஸ் மீட் நடத்தியிருக்கீங்க.
ஏன் மம்மி,அம்மி, அக்கா,சித்தி, ஆத்தா என ஒருவரும் கண்ணில் படலையா?!
உங்களின் ஆணாத்திக்கம் ஒழிக.
அரசியல் பேசாதீங்கப்பா!
நாறும்.....
(கிழிக்கும் முன், நன்றாக துவைத்துக் கிழிக்கவும்....
நாத்தம் தாங்க முடிலடா ங்கப்பா!)
அட்டகாசம்
@ கக்கு - மாணிக்கம்
சீனுக்கு பொருத்தமா இருக்கனும்னுதான் இப்படி..
வெளங்காதவன் said...
//கிழிக்கும் முன், நன்றாக துவைத்துக் கிழிக்கவும்....
நாத்தம் தாங்க முடிலடா ங்கப்பா!//
சலவை செஞ்சி துணி அடுத்த மாசம் வந்தா தெரியும். பாப்போம்.
//Speed Master said...
அட்டகாசம்//
வாங்க வேக வாத்தியார்.
இப்படித்தான் தீயா பதிவு எழுதனும் குமாரு, ஹி...ஹி...
Post a Comment