(இந்தப்பதிவு முழுக்க முழுக்க நகைச்சுவைக்காக எழுதப்பட்ட கற்பனை... சிரிங்க... சீரியஸா எடுத்துக்காதீங்க...)
நையாண்டி பவனில் ஒருநாள்...
கவுண்டமணி: டேய் தயிர்வடை தலையா...
செந்தில்: அண்ணே...
கவுண்டமணி: என்னடா வரவர நம்ம ஹோட்டலுக்கு ஒருத்தனும் வர மாட்டேங்குறான். எல்லாரும் குடும்பத்தோட போயஸ் கார்டனுக்கு பொக்கே குடுக்க போயிட்டானுங்களா...?
செந்தில்: அது வந்துண்ணே...
கவுண்டமணி: என்ன வந்து போய்... முழுங்காம சொல்றா...
செந்தில்: நம்ம கடை சமையக்காரங்க எல்லாம் ஸ்ட்ரைக் பண்றாங்கண்ணே...
கவுண்டமணி (ஜெர்க்காகி): எது ஸ்ட்ரைக்கா...? படுவா அந்த எட்டு பேரையும் இங்க வரச்சொல்லுறா... நான் பார்த்தாகனும்...
செந்தில்: ஆகட்டும்ண்ணே...
(அடுத்த பத்து நிமிடத்தில் சமையல்காரர்கள் அனைவரும் கவுண்டருக்கு பயந்து வரிசையில் வந்து நிற்கிறார்கள்)
செந்தில்: அண்ணே... இவர் பேரு விந்தை மனிதன்... வேலைக்கு சேர்ந்ததுல இருந்து ஒருமுறை கூட சமையல் செஞ்சதில்ல...
கவுண்டமணி: என்னது விந்தைமனிதனா...? யோவ் பொறக்கும்போது என்ன ரெண்டு கொம்போட பொறந்தியா...?
விந்தைமனிதன்: நைட் சர்வீஸ் பஸ் வுடுறேன்... வந்து ஏறிக்கோங்க...
கவுண்டமணி: ஹே ராஜா... கஸ்டமர் இலைல பாயசம் விடச்சொன்னா நீ பஸ் வுடுறியா... மவனே இரு உன்ன...
கவுண்டமணி: ஏன்ய்யா நாஞ்சில் சம்பத் கிட்ட பேட்டி எடுத்தியே... அத ப்ளாக்ல போட்டியா...
விந்தைமனிதன்: இதோ இப்ப போட்டுடுறேன் தலைவா...
கவுண்டமணி: யோவ் எலக்சன் ரிசல்ட் வந்து ஒருவாரம் ஆச்சு... ஊசிப்போன வடையை போட்டு ஊரை எமாத்தப் பாக்குறியா...
விந்தைமனிதன்: கொங்கை முகங்குழையக் கூந்தல் மழைகுலைய...
கவுண்டமணி: ஆ... அப்பா... கவிதை சொல்ல ஆரம்பிச்சிட்டானே... இந்தாளை போகச்சொல்லுங்கடா...
கவுண்டமணி: டேய்... ஆசிட் வாயா அடுத்த ஆளை வரச்சொல்லு...
செந்தில்: அண்ணே... இவரு அஞ்சாசிங்கம் கம் அறிவியல் விஞ்ஞானி...
கவுண்டமணி: ஆமாம்... சாம்பார்ல விழுந்த பெருச்சாளியை கண்டுபுடிச்சவனெல்லாம் விஞ்ஞானின்னு சொல்லிக்க வேண்டியது...
அஞ்சாசிங்கம்: பூமி உருண்டையில்லை அது தட்டையா இருக்கு... உங்களுக்கு தெரியுமா...?
கவுண்டமணி: இப்ப நான் அடிக்கிற அடியில உன் மூஞ்சி தட்டையாகிடும் தெரியுமா...
அஞ்சாசிங்கம்: கிரேக்க வரலாற்றில் என்ன சொல்லியிருக்காங்கன்னா.....
கவுண்டமணி: அடேய் ஆப்பத்தலையா... இது சரிப்பட்டு வராது... அந்த சிராஜுதீனை கூப்பிட்டு விடு...
(அஞ்சாசிங்கம் “ஆள விடுங்கடா சாமி..” என்று தலைதெறிக்க ஓடுகிறார்...)
செந்தில்: அண்ணே... அடுத்ததா உங்க பங்காளி பன்னிக்குட்டி வந்திருக்கார்...
கவுண்டமணி: பங்காளியாவது கிங்காளியாவது... ஒரு உறையில ஒரு கத்தி தான் இருக்கணும் தெரியுதா...
பன்னிக்குட்டி: மங்கிஸா கிங்கிஸா... கிங்கிஸா பாயாஸா...
கவுண்டமணி: அடேய் மஞ்சத்துண்டு மண்டையா... இவன் என்னடா சொல்றான்...
செந்தில்: ஆப்பிரிக்கா பாஷைல அவர் உங்களுக்கு தம்பி மாதிரின்னு சொல்றாரு அண்ணே...
கவுண்டமணி (மனதிற்குள்): அதானே... ஆப்பிரிக்கா பாஷை எல்லாம் உனக்குத்தானே தெரியும்...
கவுண்டமணி: மீ அண்ணா... யூ தம்பி... டச் பண்ணிட்டீங்களே தம்பி... நல்லா இருங்க... ஆனா கடைக்கு வர்ற கஸ்டமருக்கு மரநாய் கக்காவுல காப்பி போட்டு தர்றீங்களாமே... அதை மட்டும் செய்யாதீங்க... சரிங்களா...
பன்னிக்குட்டி: சரிங்ண்ணா...
கவுண்டமணி: த நெக்ஸ்ட்...
செந்தில்: இவங்க ஹைக்கூ அதிர்வுகள் ஆனந்தி...
கவுண்டமணி (மனதிற்குள்): ஹை லேடீஸ்... லேடீஸ்...
கவுண்டமணி: என்ன அதிரவே இல்லை... அதுசரி நீங்க எந்த ஊரு மேடம்...
ஆனந்தி: நாங்கெல்லாம் மதுரக்காரைங்க... தங்கமானவங்க...
கவுண்டமணி: அப்ப சென்னைல இருக்குறவங்க எல்லாம் தகரமா... நாட்டுல ரொம்ப பேர் இப்படி சொல்லிட்டு திரியுறீங்க...
ஆனந்தி: புள்ளைக்கு பரீட்சைங்க...
கவுண்டமணி: மேடம்... எக்ஸாம் முடிஞ்சி எலக்குஸன் ரிசல்ட் எக்ஸாம் ரிசல்ட் எல்லாம் வந்தாச்சு... இந்த டக்கால்ட்டி வேலையெல்லாம் இங்க வேணாம்... இன்னும் ஒரு வாரத்துல வேலைக்கு வந்து சேருற வழிய பாருங்க...
செந்தில்: அடுத்து வந்திருக்காங்க... கொஞ்சம் வெட்டிப்பேச்சு சித்ரா...
கவுண்டமணி: எது கொஞ்சம் வெட்டிப்பேச்சா...? இவங்க பேச ஆரம்பிச்சா நிறுத்த மாட்டாங்களே...
சித்ரா: புயல் அடிச்சது... பேய் மழை பெஞ்சது... மரங்கள் விழுந்துச்சு... வேலிகள் பறந்துச்சு...
செந்தில்: கவித... கவித...
கவுண்டமணி: டேய் ஒபாமா வாயா... இதுக்கு முன்னாடி நீ கவிதையே வாசிச்சது இல்லையா...
சித்ரா: Actually what im trying to say is…
கவுண்டமணி: தாயி... நீங்க எதுவும் சொல்ல வேண்டாம்... எவ்வளவு நாள் வேணும்னாலும் லீவ் எடுத்துக்கோங்க... ஆனா திரும்ப வரும்போது பீஸா, பர்கர் ரெசிபி எல்லாம் கத்துட்டு வாங்க... நம்மூரு கஸ்டமருங்க எவ்வளவு நாளைக்குத்தான் புளியோதரையும் பொங்கலும் சாப்பிடுவாங்க...
செந்தில்: அண்ணே... இவரு “மெட்ராஸ் பவன்” சிவக்குமார்...
கவுண்டமணி: வா ராஜா... நம்ம நையாண்டி பவனுக்கு போட்டியா...
சிவக்குமார்: ஐயோ அதெல்லாம் இல்லீங்க...
கவுண்டமணி: மண்டையா... பையன் பாக்குறதுக்கு அம்மாஞ்சியா இருக்கானே... ரொம்ப நல்ல பையனோ...
செந்தில்: ஆமாண்ணே... யாருமே இல்லாத கடையில யாருக்கோ டீ ஆத்துனவரு இவர் தாண்ணே...
கவுண்டமணி: வெளக்கெண்ணை கருப்பா... புரியுற மாதிரி சொல்லுடா...
செந்தில்: அண்ணே... நம்ம ஹோட்டல் மூடாம இருக்குறதுக்கு காரணமே இவர் தான்...
கவுண்டமணி: அப்படியா...? அப்படின்னா தம்பி நீங்க கல்லாவுல போய் உக்காருங்க... ஆனா இது நாலு பேரு வந்துபோற இடம் டிக்கிலோனால்லாம் விளையாடாதீங்க...
செந்தில்: அண்ணே... இவருதான் பிரபல பதிவர் பிலாசபி பிரபாகரன்...
கவுண்டமணி: ஓ... பெரிய்ய்ய தத்துவஞானி சாக்ரடீஸ்... சொறி புடிச்ச மொன்னை நாயி நீயெல்லாம் எதுக்குடா அடைமொழி வச்சிக்குற... அதுசரி... நீ என்னவோ கடைக்கு வர்ற கஸ்டமரை எல்லாம் கெட்டவார்த்தைல திட்டுறியாமே...???
பிலாசபி பிரபாகரன்: அண்ணே... நான் சின்ன பையன்... நீங்க திருத்தக்கூடாதா...?
கவுண்டமணி: ஒன்ன மாதிரி நாட்டுல 80 கோடி பேர் இருக்கானுங்க... ஒங்கள திருத்துறது என் வேலை இல்ல... மொதல்ல நான் என்னை திருத்திக்கிறேன்...
பிலாசபி பிரபாகரன்: இப்படித்தான் மகாத்மா காந்தி ஒருமுறை...
கவுண்டமணி: வாயை மூடுறா கழுதை வாயா... என்னடா தள்ளாடிக்கிட்டே நிக்கிறே... ஒயின்ஷாப்ல இருந்து நேரா வர்றியா...?
பிலாசபி பிரபாகரன்: உவ்வே...
கவுண்டமணி: அய்யா ராஜா... அப்படி ஓரமா உன்னோட ஒயின்ஷாப்ல போயி வாந்தி எடு... இங்க வேணாம்...
செந்தில்: அண்ணே... கடைசியா ஒருத்தர் வெயிட்டிங்...
கவுண்டமணி: வரசொல்லுடா...
செந்தில்: இவரு கே.ஆர்.பி.செந்தில்... மிகப்பெரிய தொழிலதிபர்...
கவுண்டமணி: நாட்டுல இந்த தொழிலதிபருங்க தொல்லை தாங்க முடியலடா... குண்டூசி விக்கிறவனெல்லாம் தொழிலதிபர் ஆயிடுறான்...
கே.ஆர்.பி: சொல்லுங்க தம்பி...
கவுண்டமணி: டேய் இடியாப்ப தலையா... என்னடா இவன் என்னைப் பார்த்து தம்பின்னு சொல்றான்...
செந்தில்: அண்ணே... இவர் எல்லாரையும் தம்பின்னு தான் கூப்பிடுவார்....
கவுண்டமணி: அப்படிங்களா அண்ணா... உங்க பேரு என்னங்கண்ணா...?
கே.ஆர்.பி: செந்தில்...
கவுண்டமணி: கொஞ்சம் சத்தமா சொல்லுங்க...
கே.ஆர்.பி: செந்திலு...
கவுண்டமணி: அப்படியே அந்தப்பக்கம் திரும்பி நின்னு இன்னும் சத்தமா சொல்லுங்க...
கே.ஆர்.பி: செந்திலுங்கோ...
(கவுண்டமணி தனது சகா செந்திலை வழக்கமாக எங்கே மிதிப்பாரோ அங்கே கே.ஆர்.பி.செந்திலை மிதிக்க சமையல்காரர்கள் குழு எஸ்கேப்....)
கற்பனை: பிலாசபி பிரபாகரன்
81 comments:
அண்ணே நடத்துங்கன்னே!
குடிச்சிட்டு வந்து கலாட்டா பன்றியா! இருடி உன்னை என்ன பன்றேன் பாரு!!
அந்த கூகுள் ஒனரையும், ஜாஸ்மின் ப்ரியாவையும் வரச்சொல்லுங்கய்யா...
@ விக்கி உலகம்
சீக்கிரம் போஸ்ட் போடுங்க தலைவா... இன்னிக்கு அவனை ஒரு வழி பண்ணிடலாம்...
>>நாங்கெல்லாம் மதுரக்காரைங்க... தங்கமானவங்க...
கவுண்டமணி: அப்ப சென்னைல இருக்குறவங்க எல்லாம் தகரமா... நாட்டுல ரொம்ப பேர் இப்படி சொல்லிட்டு திரியுறீங்க...
கலக்கல்
>>எது கொஞ்சம் வெட்டிப்பேச்சா...? இவங்க பேச ஆரம்பிச்சா நிறுத்த மாட்டாங்களே...
சித்ரா: புயல் அடிச்சது... பேய் மழை பெஞ்சது... மரங்கள் விழுந்துச்சு... வேலிகள் பறந்துச்சு...
செந்தில்: கவித... கவித...
கவுண்டமணி: டேய் ஒபாமா வாயா... இதுக்கு முன்னாடி நீ கவிதையே வாசிச்சது இல்லையா...
சித்ரா: Actually what im trying to say is…
ஹா ஹா செம..
>>
கவுண்டமணி: ஓ... பெரிய்ய்ய தத்துவஞானி சாக்ரடீஸ்... சொறி புடிச்ச மொன்னை நாயி
இந்த லைன் மட்டும் எடுத்து விடலாம் என நினைக்கிறேன். கொஞ்சம் இண்டீசண்டா இருக்கு
@ சி.பி.செந்தில்குமார்
வாங்க சித்தப்பு...
மிக கலக்கலான காமெடி பதிவு .. ரசித்தேன்
@ சி.பி.செந்தில்குமார்
// ஓ... பெரிய்ய்ய தத்துவஞானி சாக்ரடீஸ்... சொறி புடிச்ச மொன்னை நாயி //
கவுண்டர் சினிமாவுல பேசின டயலாக் தானே... அப்புறமென்ன...
@ சி.பி.செந்தில்குமார்
சித்ராக்காவை கலாய்த்தால் ரொம்ப சந்தோசம் போல...
??>>Philosophy Prabhakaran said...
@ சி.பி.செந்தில்குமார்
வாங்க சித்தப்பு...
adappaaviஅடப்பாவி.. என்னை கேவலப்படுத்தாம உங்களால இருக்கவே முடியாதா?
@ சி.பி.செந்தில்குமார்
// அடப்பாவி.. என்னை கேவலப்படுத்தாம உங்களால இருக்கவே முடியாதா? //
உங்களுக்கு அடைமொழி கொடுக்குறதுல ஒரு சந்தோசம்... "பதிவுலக பாக்யராஜ்" - இது எப்படி இருக்கு...?
நல்லவேளை நான் பிரபல கம் பிராப்ள பதிவரா இல்லாமப்போயிட்டேன் :))
@ புதுகை.அப்துல்லா
புதுசா ஒரு கஸ்டமர் வந்திருக்காரு... அந்த வடையை எடுத்து ஒளிச்சு வைங்கய்யா...
(இந்தப்பதிவு முழுக்க முழுக்க நகைச்சுவைக்காக எழுதப்பட்ட கற்பனை... சிரிங்க... சீரியஸா எடுத்துக்காதீங்க...)
...... சரிங்க..... ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா..... :-)))))
@ Chitra
ஆவோஜி...
Very very comedy post . . I very much enjoy . .ha . . Ha . . Ha . . I can t control . . .
ஏ அப்பாடி, என்ன ஒரு நக்கல், என்ன ஒரு துணிச்சல்.
நடத்துங்க, நடத்துங்க. நல்லா சிரிக்க வைக்கரீங்க.
//கவுண்டமணி: என்ன அதிரவே இல்லை... அதுசரி நீங்க எந்த ஊரு மேடம்...//
மதுர அருவாள் பட்டால் சகலமும் அதிரும் கவுண்டமணிஜீ...ஹீ ஹீ...
//நம்மூரு கஸ்டமருங்க எவ்வளவு நாளைக்குத்தான் புளியோதரையும் பொங்கலும் சாப்பிடுவாங்க...//
கவுண்டமணி ஜீ...கோவில் பக்கமே திரியற மாதிரி இருக்கே...இஜ் இட்..? :)))
//@ சி.பி.செந்தில்குமார்
சித்ராக்காவை கலாய்த்தால் ரொம்ப சந்தோசம் போல...//
பிரபா....நீங்க ரொம்ப க்யூட் ன்னு தெரியும்...இன்னைக்கு தான் ரொம்ப ரொம்ப ரொம்ப க்யூட் ன்னு புரிஞ்சுட்டேன்..:))))))
//>நாங்கெல்லாம் மதுரக்காரைங்க... தங்கமானவங்க...
கவுண்டமணி: அப்ப சென்னைல இருக்குறவங்க எல்லாம் தகரமா... நாட்டுல ரொம்ப பேர் இப்படி சொல்லிட்டு திரியுறீங்க...
கலக்கல் //
சரியா சொன்னீங்க சி.பி.சார்...அந்த புள்ள ரொம்ப மதுரை உதார்...:)))
அய்யா குஜால இருக்கு
///கவுண்டமணி: ஓ... பெரிய்ய்ய தத்துவஞானி சாக்ரடீஸ்... சொறி புடிச்ச மொன்னை நாயி நீயெல்லாம் எதுக்குடா அடைமொழி வச்சிக்குற... அதுசரி... நீ என்னவோ கடைக்கு வர்ற கஸ்டமரை எல்லாம் கெட்டவார்த்தைல திட்டுறியாமே...???///
ஆமானே என்னைய கூட மானசுக்குல நாலஞ்சு கெட்ட வார்த்தைல திட்டு புட்டாருனே ,அத முதல என்னன்னு கேளுக்கன்னே கவுண்டர் அண்ணே
நல்லாதான் வச்சிருக்கே ஆப்பு .......
அது என்ன என்னை விரட்டனும்ன்னா சிராஜை கூப்பிடுறதா ?
ஹா ஹா ................. சரியா தான் செக் வைக்கிறாங்க ...................
hi hi hi
சூப்பரப்பு...
அடங்கொன்னியா
நாரடிக்கிராயிங்களே........ஹே ஹே ஹே ஹே...
நானும் ஒரு பதிவரா ஆயிரலாம்ன்னு இருக்கேன்...ஹி..ஹி..ஹி....
@ "என் ராஜபாட்டை"- ராஜா
// Very very comedy post . . I very much enjoy . .ha . . Ha . . Ha . . I can t control . . . //
துறை இங்கிலிபீசு எல்லாம் பேசுதே...
@ ஆனந்தி..
// மதுர அருவாள் பட்டால் சகலமும் அதிரும் கவுண்டமணிஜீ...ஹீ ஹீ... //
நாராயணா... இந்த கொசுத்தொல்லை தாங்க முடியலடா...
@ ஆனந்தி..
// சரியா சொன்னீங்க சி.பி.சார்...அந்த புள்ள ரொம்ப மதுரை உதார்...:))) //
அந்த புள்ளயாவது பரவாயில்லை... இந்த சினிமாக்காரங்க பண்ற லவுட்ட தாங்க முடியல... ஆஊன்னா மதுரக்காரைங்கன்னு ஆரம்பிச்சிடறாங்க...
@ நா.மணிவண்ணன்
// அய்யா குஜால இருக்கு //
யோவ்... இங்க ஒரு ஃபிகர் படம் கூட போடலையே...
@ நா.மணிவண்ணன்
// ஆமானே என்னைய கூட மானசுக்குல நாலஞ்சு கெட்ட வார்த்தைல திட்டு புட்டாருனே ,அத முதல என்னன்னு கேளுக்கன்னே கவுண்டர் அண்ணே //
ஆமா இவரை மனசுக்குள்ள வேற திட்டுறாங்க... காயின் போன்ல ஒரு ரூபாயை போட்டா ஒரு நிமிஷம் முழுசா நிறுத்தாம திட்டலாம் தெரியுமோ...?
@ நா.மணிவண்ணன்
அதெல்லாம் விடுங்க மணி... அந்த பதிவருக்கு மைனஸ் ஓட்டு போட்டது பெரிய பிரச்னை ஆயிடுச்சாமே...
@ அஞ்சா சிங்கம்
// அது என்ன என்னை விரட்டனும்ன்னா சிராஜை கூப்பிடுறதா ?
ஹா ஹா ................. சரியா தான் செக் வைக்கிறாங்க ................ //
சிராஜூ இன்னும் இங்க வரலையே... வந்தா போட்டு கும்மலாம்...
//பையன் பாக்குறதுக்கு அம்மாஞ்சியா இருக்கானே... ரொம்ப நல்ல பையனோ..//
ஒவ்வொரு பதிவர் மீட்டிங்குலயும் எதுவும் பேசாம அம்மாஞ்சியா போஸ் குடுக்கறது யாருன்னு நம்ம ஆளுங்களுக்கு தெரியும்..மனசாட்சிய தொட்டு சொல்லணும்...
//அஞ்சா சிங்கம் said...
அது என்ன என்னை விரட்டனும்ன்னா சிராஜை கூப்பிடுறதா ?//
செல்வின் மீது ஏவி விட எங்களுக்கு கிடைத்த பிரம்மாஸ்திரம் அவர்தானே.
யோவ் சிவா... கரக்காட்ட கோஷ்டி லிங்கை சரி பண்ணுய்யா...
// ஒவ்வொரு பதிவர் மீட்டிங்குலயும் எதுவும் பேசாம அம்மாஞ்சியா போஸ் குடுக்கறது யாருன்னு நம்ம ஆளுங்களுக்கு தெரியும்..மனசாட்சிய தொட்டு சொல்லணும்... //
யாரை அவனையா சொல்றீங்க... அவன் பாக்குறதுக்கு தான் அம்மாஞ்சியா இருப்பான்... மோசமான பய...
///அதெல்லாம் விடுங்க மணி... அந்த பதிவருக்கு மைனஸ் ஓட்டு போட்டது பெரிய பிரச்னை ஆயிடுச்சாமே...///
ஏன்யா என்னைய மாட்டி விடுற நீ ஓட்டு போட்டுட்டு
@ நா.மணிவண்ணன்
அதுசரி... உங்களுக்கு கல்யாணம் ஆகிருச்சுன்னு வேற எழுதி வச்சிருக்கார்... அது உண்மையா...???
அந்த அம்மாஞ்சி பதிவரு தல முடிய கண்டமேனிக்க பிச்சுக்கிறாரே ,ஏன் ?
// அந்த அம்மாஞ்சி பதிவரு தல முடிய கண்டமேனிக்க பிச்சுக்கிறாரே ,ஏன் ? //
போட்டி தட்டுற பொழப்புன்னாலே அப்படித்தான் #சேம் பிளட்
ஒருவேளை எந்த ப்ளாக்குளையும் பாலோயர் லிங்கு வேலை செய்யலியோ...
///அதுசரி... உங்களுக்கு கல்யாணம் ஆகிருச்சுன்னு வேற எழுதி வச்சிருக்கார்... அது உண்மையா...???///
ரைட்டு உணமைலே இவரு போதைல இருக்காரு , நாம தேவை இல்லாம வாயா குடுத்து மாட்டிக்குவோம் ,எஸ்கேப் ஆகிடுறா மணி
@ நா.மணிவண்ணன்
யாரை ஏமாத்தப் பாக்குறே... இது தி.நகர்ல இருக்குற வடபழனி பிராஞ்ச்...
ஆமா உங்க பொட்டிதட்டுற வேல என்ன ஆச்சு ,கமெண்ட் ரிப்ளை பண்றீங்க ,மறுபடியும் வேல காலியா ,
அல்லோ தன்ராஜா.... சொல்லுங்க சொல்லுங்க......!
அண்ணே பன்னிகுட்டி அண்ணே ,வணக்கம்னே ,நல்லா இருக்கீங்களானே
// ஆமா உங்க பொட்டிதட்டுற வேல என்ன ஆச்சு ,கமெண்ட் ரிப்ளை பண்றீங்க ,மறுபடியும் வேல காலியா , //
தனியா ஒரு ரூம்ல போட்டு வச்சிருக்கானுங்க... அதனால் ஆணி புடுங்காம ப்ளாக் படிச்சிட்டு இருக்கேன் :)))
@ பன்னிக்குட்டி ராம்சாமி
நீங்க கொஞ்ச நாள் இல்லாம பதிவுலகமே மொடக்கமாயிடுச்சு...
/////////Philosophy Prabhakaran said...
@ பன்னிக்குட்டி ராம்சாமி
நீங்க கொஞ்ச நாள் இல்லாம பதிவுலகமே மொடக்கமாயிடுச்சு... //////
அண்ணே மன்னிச்சு விட்ருங்கண்ணே.......!
///நா.மணிவண்ணன் said...
அந்த அம்மாஞ்சி பதிவரு தல முடிய கண்டமேனிக்க பிச்சுக்கிறாரே ,ஏன் ?//
மணி...ஊர்ல கலவரம் நடத்த சரியான ஆள் நீங்கதான்!!
செம நக்கல்...நையாண்டி....கலக்குறே பிரபா... அப்புறமா இன்னைக்கு ஏன் கடைய சாத்துன...
// செம நக்கல்...நையாண்டி....கலக்குறே பிரபா... அப்புறமா இன்னைக்கு ஏன் கடைய சாத்துன... //
அதுக்கு பதிலா தான் இங்கே கும்மி அடிக்கிறோமே...
//////நா.மணிவண்ணன் said...
அண்ணே பன்னிகுட்டி அண்ணே ,வணக்கம்னே ,நல்லா இருக்கீங்களானே ////////
ஏதோ இருக்கம்ணே, நம்ம புது சட்டசப வெலைக்கி வருதாம்ணே கொஞ்சம் பேசி முடிச்சி குடுங்கண்ணே
பதிவு செம கலக்கல் பிரபா... Congrats... அவசரமா அலுவலகம் கெளம்புறேன்.. கண்டிப்பா 2 மணி நேரம் கழிச்சு சேந்துக்குறேன்.... அதுவரை எல்லாருமா சேர்ந்து செல்வின போட்டு மிதிச்சுக்கிட்டு இருங்க... நான் வந்து பாக்கிறப்ப ஆளு நார் நார கிழுஞ்சு தொங்கணும்....
ஏதோ ஒரே ஒரு புத்தகத்த படிச்சுபுட்டு பயபுள்ள என்ன பேச்சு பேசுறான்....
// அதுவரை எல்லாருமா சேர்ந்து செல்வின போட்டு மிதிச்சுக்கிட்டு இருங்க... நான் வந்து பாக்கிறப்ப ஆளு நார் நார கிழுஞ்சு தொங்கணும்.... //
என்ன ஒரு கொலைவெறி....
@பன்னிகுட்டி ராமசாமி
///ஏதோ இருக்கம்ணே, நம்ம புது சட்டசப வெலைக்கி வருதாம்ணே கொஞ்சம் பேசி முடிச்சி குடுங்கண்ணே///
ஓகேனே பேசி முடுச்சுடுவோம் ,அங்க கக்குசு கூட ஏசியாம்னே
// ஏதோ ஒரே ஒரு புத்தகத்த படிச்சுபுட்டு பயபுள்ள என்ன பேச்சு பேசுறான்.... //
செல்வின் எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்...
///ஏதோ ஒரே ஒரு புத்தகத்த படிச்சுபுட்டு பயபுள்ள என்ன பேச்சு பேசுறான்.///
அது என்ன புத்தகம் ,அந்த மாதிரி புத்தகமா ?
// அது என்ன புத்தகம் ,அந்த மாதிரி புத்தகமா ? //
எந்தமாதிரின்னு மணி வெளக்கமா சொன்னா நல்லா இருக்கும்...
கலக்கீட்டீங்க
கலக்கல்..இன்னும் சிரிப்பு நிக்கல..
\\ஆமாண்ணே... யாருமே இல்லாத கடையில யாருக்கோ டீ ஆத்துனவரு இவர் தாண்ணே...\\ ஐயையோ, பாவம் அவரு இதைப் பாத்தா வேதனைப் படுவாரே??!!
நல்ல யோசனை..
சும்மா ஆவூன்னா சிராஜை வம்பிழுப்பதே உங்களுக்கெல்லாம் வேலையாபோச்சுப்பா....சும்மா இருங்கப்பா அப்புறம் அஞ்சாசிங்கம் கோபமாகி சூன்யம் கீண்யம் வசிட போறாரு சிராஜுக்கு
அன்பின் பிரபாகரன் - நல்லாவே இருக்கு கற்பனை - நல்லா சிந்திச்சு எழுதப்பட்ட இடுகை. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
@ ரஹீம் கஸாலி
// சும்மா ஆவூன்னா சிராஜை வம்பிழுப்பதே உங்களுக்கெல்லாம் வேலையாபோச்சுப்பா....சும்மா இருங்கப்பா அப்புறம் அஞ்சாசிங்கம் கோபமாகி சூன்யம் கீண்யம் வசிட போறாரு சிராஜுக்கு //
ரெண்டு மணிநேரத்துக்கு அப்புறமா வர்றேன்னு சொன்ன அந்த ஆடு இன்னும் வரலை... பார்த்தா, இந்தப்பக்கமா பத்திவிடுங்க பாஸ்...
அய்யா பிலாசபி, அலுவலகத்தில கொஞ்சம் வேலை, அதான் வர முடியல... மத்தபடி நாளைக்கு நம்ம பிளாக்ல நண்பர் அஞ்சா சிங்கம் மாதிரியே ஒரு நல்ல மனிதரின் பேட்டி அவர் அனுமதி இல்லாமலே வெளியிடப்படுகிறது. நண்பர்கள் வந்து பார்க்க வேண்டும்.
நம்மல இன்னும் அலுவலகத்தில் குமுறிகிட்டு தான் இருக்காங்க... எப்போ விடுவாங்கன்னு தெரியல... வாழ்ந்தா K .R .P செந்தில் மாதிரி வாழணும்.
@ சிராஜ்
// நம்மல இன்னும் அலுவலகத்தில் குமுறிகிட்டு தான் இருக்காங்க... எப்போ விடுவாங்கன்னு தெரியல... வாழ்ந்தா K .R .P செந்தில் மாதிரி வாழணும். //
நமக்கு இன்னும் ட்ரெயினிங் போயிட்டு இருக்கு... எப்போ குமுற ஆரம்பிப்பாங்கன்னு தெரியல...
சிராஜ் said...
பதிவு செம கலக்கல் பிரபா... Congrats... அவசரமா அலுவலகம் கெளம்புறேன்.. கண்டிப்பா 2 மணி நேரம் கழிச்சு சேந்துக்குறேன்.... அதுவரை எல்லாருமா சேர்ந்து செல்வின போட்டு மிதிச்சுக்கிட்டு இருங்க... நான் வந்து பாக்கிறப்ப ஆளு நார் நார கிழுஞ்சு தொங்கணும்....
ஏதோ ஒரே ஒரு புத்தகத்த படிச்சுபுட்டு பயபுள்ள என்ன பேச்சு பேசுறான்....///
////////////////////////////
அட பாவிகளா நேத்து ஒரு நாலு நான் கொஞ்சம் அசந்துட்டேன் அதுக்குள்ள இந்த வாங்கு வாங்கிருக்கீங்க .
என்பா கூடவே சுத்துறியே கசாலி நீயாவது நல்ல புத்தி சொல்லகூடாதா ?
நகைச்சுவை ரொம்ப பிரமாதம் சகோ.
சிறந்த கற்பனைவளம்.. சிறந்த நகைச்சுவைப் பதிவு.. ஒவ்வொரு ரசிச்சு சிரிக்கும்படி இருந்தது..!
வாழ்த்துக்கள் பிளாசபி..!!
ஒவ்வொரு வரியும் என்று படிக்கவும்..
http://blogintamil.blogspot.com/2011/06/3.html
தங்களை வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன். பார்த்து கருத்துக்களைத் தெரிவிக்கவும். நன்றி.
ஐயா கவுண்டமணி நான் காட்டான் வந்திருக்கேன் உங்கட பதிவுகள நாங்க சகித்துகொண்டு பார்த்த மாதிரி நீங்களும் வந்து எங்கட பதிவுகளையும் பார்த்து கருத்த கக்கினால் நாங்களும் எங்கள் மனைவிமாரிடம் கவுண்டனும் கருத்து போட்டான்னு ...தாஜா பண்னலாமே..!!!!
காட்டான் உங்களுக்கும் குழ போட்டுட்டான் இனி உங்க இஸ்டம்..!!
Post a Comment