Saturday, November 24, 2012

சிட்டிக்காட்டான் - சிரிப்பு மலர்



                                                           

சகலகலா பதிவர் சிட்டிக்காட்டான் சிரிப்பு வெடிகளை கண்டு வகுறு குலுங்க சிரிக்கப்போகும் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்:

உஸ்மான் சாலையில்..

நக்கீரன்: யோவ்..அறிவு இல்ல? இவ்ளோ ஸ்பீடா வந்து மோதுற? என்னைய்யா வண்டி ஓட்டற நீ?

சிட்டி: ஸ்ப்லென்டருங்க.
...............................................  

டிங் டாங் பட்டி ஆலமரத்தடி...       

நாட்டாமை அஞ்சாசிங்கம் : எலேய் சிட்டிக்காட்டான் என்றா?

சிட்டி: 1 2 3 4 5 6 7 8........
..............................................

அவ்வையார் ஆரம்ப பாட சாலை LKG சேர்க்கை க்யூவில்.....

சிட்டி:  பசங்களோட LKG சீட்டுக்கு 1 லட்சம் கேக்கறாங்க பாவிங்க?

பிலாசபி:  ஆமாங்க. என் பையனை 2015 ல சேக்க ஒரு சீட் கேட்டேன். 5 லட்சம் கேக்கறாங்க லவ$%$த&*7

சிட்டி: எனக்கு தெரிஞ்ச பர்னிச்சர் கடைல பர்மா தேக்குல செஞ்ச சீட்டே 30,000 தானுங்க. இங்க ரொம்ப அநியாயமுங்க?

பிலாசபி: தக்%$%####.    
.........................................................

பிட்சா கார்னரில்..

சிட்டி: எக்ஸ் யூஸ் மீ. பிட்சா இங்கன எப்படி?

வீடு சுரேஸ்: 250, 300, 450. இப்படி நிறைய இருக்கு. உங்களுக்கு என்ன வேணும் சார்?

சிட்டி: நான் என்ன தீனிப்பண்டாரமா? ஒன்னே ஒன்னு குடுய்யா. 
.........................................................

திருவாரூர் கோயிலில்....

ஆரூர் முனா: யோவ்..எதுக்குய்யா துள்ளி குதிச்சி சாமி கும்புடற?

சிட்டி: அப்பதான் நான் சிறந்த பக்தி'மான்' ஆவேன்னு நித்தி சொன்னாப்ல.
.........................................................

இயக்குனர் சங்கர் அலுவலக வாசலில் சான்ஸ் கேட்டு காத்திருந்த 100 பேரை தாண்டி ஒரு வழியாக உள்ளே நுழைகிறார் சிட்டி.

சிட்டி: சங்கர் சார் வர சொன்னாப்டி. ஜெய்னு சொன்னா தெரியும்.

மேனேஜர் மதுமதி: அப்படியா? இருங்க அவருக்கு கால் பண்றேன்.

சில நொடிகளுக்கு பின்பு..

மேனேஜர் மதுமதி: இந்தாங்க போன். கொஞ்ச நேரம் லைன்ல இருங்க. சார் பேசப்போறார்.  

சிட்டி: சரிங்க.

மீண்டும் லைனில் பின் போய் நிற்கிறார்.
.............................................................

போலீஸ் ஸ்டேஷனில்...

சிட்டி: சார். நான் ஒரு சமூக வலைத்தள ஓனர். ஒரு சின்ன டவுட்டுங்க.

எஸ்.ஐ. கே.ஆர்.பி.: கேளுங்க.   

சிட்டி: முதல்ல நான் சொல்றதை கேளுங்க சார்.

எஸ்.ஐ. கே.ஆர்.பி: அதத்தான்யா சொன்னேன். டவுட்டை கேளுய்யா.

சிட்டி: சார். போன வாரம் நீங்க ஒருத்தர் கிட்ட 1,000 ரூவா கில்மா வாங்குனதை போட்டோ பிடிச்சி பேஸ்புக்ல போட்டேன். அதை டெலிட் பண்ண ட்ரை பண்றேன். ரொம்ப கஷ்டமா இருக்கும். அது வரைக்கும் எனக்கு சிறப்பு பாதுகாப்பு வேணும். அதுக்கு என்ன செய்யணும்?
.................................................................

புலன் விசாரணையில்....

கேப்டன் சீனு: இந்த கொலைய நேர்ல பாத்த சாட்சியை கொண்டு வாங்க.

சாட்சி சிட்டி ஆஜர்.

கேப்டன் சீனு: ம்ம்...உண்மைய சொல்லுங்க. இல்ல கடிச்சி துப்பிடுவேன்.

சிட்டி: ஐயோ சாமி. நான் கொலைய நேர்ல பாக்கலீங். சைடு வாக்கா இருந்து தானுங்க பாத்தேனுங்.
........................................................





28 comments:

சீனு said...

//மீண்டும் லைனில் பின் போய் நிற்கிறார்.// செம டாப் கிளாஸ்

//கேப்டன் சீனு// அவ்வ்வ்வவ்

சீனு said...

மெட்ராசுக்கு சிறை பயம் வந்துவிட்டது பதிவிட்டவர் சிவா என்று போட்டால் எங்கே ஜெ கேஸ் கொடுத்து விடுவாரோ என்று பலியை சங்கத்தின் மீது போட்டு விட்டார்....

ராஜ் said...

சிரிப்பு மலரா..??இல்ல சிறப்பு மலரா...
மலர்ல மெட்ராஸ் மட்டும் ஆளை காணம்....:):)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நான் ஒத்துக்கவே மாட்டேன்.... இதுல மகளிர் அணி வரவே இல்ல.....

இப்படிக்கு
சிட்டிக்காட்ஸ்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////அவ்வையார் ஆரம்ப பாட சாலை LKG சேர்க்கை க்யூவில்...../////

அது ப்ரீகேஜீ இல்ல?

Unknown said...

எட்றா அருவாளை எம் பங்காளிய நக்கல் அடிக்கிறாங்க.........!இன்னிக்கு ஏக் மோர் தோ துக்கடா.......தாதாதாதாதவூவூவூத்.........................................................

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////சிட்டி: எக்ஸ் யூஸ் மீ. பிட்சா இங்கன எப்படி?/////

அவர் ஒருவேள படத்த பத்தி கேட்டிருக்க போறாரு......!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////மீண்டும் லைனில் பின் போய் நிற்கிறார்./////

லைன்ல நிக்க சொன்னா லைன்லதானேய்யா நிக்கோனும்....?

இப்படிக்கு
மீண்டும் அதே
சிட்டிக்ஸ்

Sivakumar said...


@ சீனு

சரி... வைஸ் கேப்டன்.

Sivakumar said...

//சீனு said...
மெட்ராசுக்கு சிறை பயம் வந்துவிட்டது பதிவிட்டவர் சிவா என்று போட்டால் எங்கே ஜெ கேஸ் கொடுத்து விடுவாரோ என்று பலியை சங்கத்தின் மீது போட்டு விட்டார்....//

தனியே பேரு போடப்படாது. பகிர்ந்துண்டு வாழ்வாரே வாழ்வார். அது இலார் சிதறுண்டு போவார்னு கண்ணதாசன் சொன்னது தெரியாதா?

(கண்ணதாசா? ஜேசுதாசா?)

Sivakumar said...

//ராஜ் said...
சிரிப்பு மலரா..??இல்ல சிறப்பு மலரா...
மலர்ல மெட்ராஸ் மட்டும் ஆளை காணம்....:):)//

இந்த பதிவை போட்ட மர்ம நபரை தேடிக்கொண்டு இருக்கிறேன்

Sivakumar said...


//பன்னிக்குட்டி ராம்சாமி said...
நான் ஒத்துக்கவே மாட்டேன்.... இதுல மகளிர் அணி வரவே இல்ல.....

இப்படிக்கு
சிட்டிக்காட்ஸ்//

அந்த அளவுக்கு நாங்கள் குடும்ப பதிவர் ஆக சாத்தியம் கம்மியே.

Sivakumar said...


//பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////அவ்வையார் ஆரம்ப பாட சாலை LKG சேர்க்கை க்யூவில்...../////

அது ப்ரீகேஜீ இல்ல?//

சிட்டி: ஆமா. கரெக்ட். ஆனா FREE கே.ஜி. இல்லை. அதுக்கும் காசுதான். 224 மணி நேரமா க்யூவுல நிக்கறேன்.

Sivakumar said...


//வீடு சுரேஸ்குமார் said...
எட்றா அருவாளை எம் பங்காளிய நக்கல் அடிக்கிறாங்க.........!இன்னிக்கு ஏக் மோர் தோ துக்கடா.......தாதாதாதாதவூவூவூத்.//

சிட்டி: அது என்ன ஆளாளுக்கு 'எட்றா அருவாள'ன்னுக்கிட்டு. நீங்களே எடுக்க மாட்டீங்களா?

Sivakumar said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
////சிட்டி: எக்ஸ் யூஸ் மீ. பிட்சா இங்கன எப்படி?/////

அவர் ஒருவேள படத்த பத்தி கேட்டிருக்க போறாரு......!//

சிட்டி: ஆமா. அந்த படத்த தமிழ்ல வெண்ணை ரொட்டின்னு எடுக்க போறாங்களாமே? எப்ப ரிலீசு?

Sivakumar said...


//பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////மீண்டும் லைனில் பின் போய் நிற்கிறார்./////

லைன்ல நிக்க சொன்னா லைன்லதானேய்யா நிக்கோனும்....?

இப்படிக்கு
மீண்டும் அதே
சிட்டிக்ஸ்//

சிட்டி: அவுக போன் லைன்ல நிக்க சொன்னாப்டி.

சீனு said...

//(கண்ணதாசா? ஜேசுதாசா?) //

பாவம் அவரே கணப்பியுஸ் ஆயிட்டாரு

இப்படிக்கு சிட்டிக்க்ஸ் பான்ஸ் கிளப் செவ்வாய் கிரகம்

முத்தரசு said...

:)))))))

JR Benedict II said...

சூப்பரு தல அதுவும் மதுமதி காமெடி கலக்கல்

Anonymous said...

செம செம , அதுவும் பேஸ்புக் மேட்டர் என்னையே சிரிக்க வைத்துவிட்டது. :)))

வெளங்காதவன்™ said...

இப்புடி உண்மை உண்மையாவே பேசுனா, சேகர் செத்துருவான். பரவால்லியா?- ஜெ

:))

முனைவர் இரா.குணசீலன் said...

மீண்டும் மீண்டும் சிரித்தேன்.

திண்டுக்கல் தனபாலன் said...

ஹா... ஹா... செம...

பட்டிகாட்டான் Jey said...

இன்னும் கொஞ்சம் சேர்த்திருக்கலாம் மச்சிகளா :-))))

நல்லா இருக்குது. சிரிச்சிங்க் :-)))))

பட்டிகாட்டான் Jey said...

// பன்னிக்குட்டி ராம்சாமி said...
நான் ஒத்துக்கவே மாட்டேன்.... இதுல மகளிர் அணி வரவே இல்ல..... //

பன்னிப்பயலே.... 66ஏ வை வாசல்ல இட்டாந்து விட்டுட்டு போயிடுவே போலயே. இவன்ட்டா கொஞ்சம் உஷாராத்தான் இருக்கனும் :-)))

பட்டிகாட்டான் Jey said...

என்னடா மெட்ராசூ, நாங்க எல்கேஜி சீட்டுக்கு நாயா...பேயா அலயிறது ஒனக்கு சிரிப்பாப் போச்சா,

உனக்கும் கல்யாணம் ஆகி குழந்தை பொறந்து, இதைவிட கேவலமா ஸ்கூல் வாசல்ல பிச்சைக்காரன் மாதிரி தலைவிரிகோலமா(அது இப்பவும் அப்பத்தான் இருக்குதோ!!!) எல்கேஜி சீட்டுக்காக நிக்கனுமின்னு சாபம் குடுக்கிறேண்டா :-)))

பட்டிகாட்டான் Jey said...

// ! சிவகுமார் ! said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////மீண்டும் லைனில் பின் போய் நிற்கிறார்./////

லைன்ல நிக்க சொன்னா லைன்லதானேய்யா நிக்கோனும்....?

இப்படிக்கு
மீண்டும் அதே
சிட்டிக்ஸ்//

சிட்டி: அவுக போன் லைன்ல நிக்க சொன்னாப்டி. //

ஓ அப்படியா, போன் லைன் தனியா இருக்குதா.... சரி விடு அந்த க்யூவில போய் நின்னுடுறேன் :-))))

அப்படி தெளிவாச் சொல்லனுமில்ல....:-))))

பட்டிகாட்டான் Jey said...

// ராஜ் said...
சிரிப்பு மலரா..??இல்ல சிறப்பு மலரா...
மலர்ல மெட்ராஸ் மட்டும் ஆளை காணம்....:):) //

டோன்'ட் ஒர்ர்ய் ராஜ், டமெட்ராசுக்கு
தனியா ஒரு *மொக்கை மலர்* ஒன்னு தனிப்பதிவா ரிலீஸ் பண்ணிடலாம் :-))))))))

இப்படிக்க,
பன்னிக்குட்டி ராம்சாமி