சென்ற
ஆண்டு மிகச் சிறப்பாக நடைபெற்ற தமிழ் வலைப்பதிவர்கள் சந்திப்பு விழாவைத்
தொடர்ந்து இந்த ஆண்டும் சந்திப்பு விழாவை நடத்துவதற்காக ஏற்பாடுகள்
துவங்கப்படுகின்றன. எந்த பதிவரையும் தனிப்பட்ட முறையில் முன்னிறுத்தாமல்
நடந்த சென்ற ஆண்டு விழாவைப் போல் தான் இந்த ஆண்டும் நடத்தப்படுகின்றன.
எனவே
விருப்பமுள்ள அனைத்து பதிவர்களும் விழாக்குழுவில் தங்களை இணைத்துக்
கொண்டு வரும் ஞாயிறன்று நடைபெற உள்ள ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து
கொள்ளுங்கள். தங்களது ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன.
ஒரு *முழு
நாள்* நடக்க இருக்கும் இந்த வலைபதிவர்கள் சந்திப்பை எப்படி ஆக்கபூர்வமாகவும
சுவாரஸ்யமாகவும் நடத்தலாம் என்ற தங்களின் ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றது.
முன் நின்று நடத்த ஆர்வமுள்ளவர்களும் வரவேற்கப்படுகிறார்கள்
எங்கு நடத்துவது, மண்டபம் எப்படி இருக்க வேண்டும், மதிய உணவு எப்படி ஸ்பெசலாக அமைய வேண்டும் என்று தொடங்கி விழா நிகழ்ச்சிகள் எந்த வரிசையில் அமைய வேண்டும் என்பது வரை கலந்துரையாடல் நடக்க இருக்கிறது.
விருப்பமுள்ள அனைத்து பதிவர்களும் கலந்து கொள்ள வேண்டுமாய் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
எங்கு நடத்துவது, மண்டபம் எப்படி இருக்க வேண்டும், மதிய உணவு எப்படி ஸ்பெசலாக அமைய வேண்டும் என்று தொடங்கி விழா நிகழ்ச்சிகள் எந்த வரிசையில் அமைய வேண்டும் என்பது வரை கலந்துரையாடல் நடக்க இருக்கிறது.
விருப்பமுள்ள அனைத்து பதிவர்களும் கலந்து கொள்ள வேண்டுமாய் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இங்கனம்
தற்காலிக விழாக் குழுவினர்கள்
34 comments:
சந்திப்பும் சிறக்க வாழ்த்துக்கள்...
நன்றி தனபாலன், விழாக் குழுவில் நீங்களும் உண்டு என்பதை மறந்து விட வேண்டாம்
என் இல்லம் வந்து சிறப்பித்த அனைவருக்கும் மிக்க நன்றி!
DK illatha thiruvilaava... avaru karuthu mattum sollittu pora aalu kaedaiyaathu... karutha vaela paakira aalum...!
தீயா வேலை செய்யணும் 'ஜெய்குமாரு'
MY full support ungalukku :-))
ரைட்டு...
ஆரம்பிச்சிட்டகளா...?
ஜமாய்த்திடலாம் செந்தில....
பதிவர் சந்திப்பு நடைபெற இல்லம் அளித்ததற்கு நன்றி ஐயா
கருத்தா பேசாவிட்டாலும் கருத்தா வேலை பார்த்தா போதும்
சிவா அவரு தீயை அணைக்க நெறைய செலவாகுமே
பொருளாளர் இப்படி பேசலாமா ஜெய். சேர்ந்தே ஜமாய்ப்போம்னு சொல்லுங்க
ஞாயிறு வந்திருங்க செளந்தர்
சின்ன சின்ன விளயாட்டுக்களை அறிமுகப்படுத்துங்க. செம ஜாலியா இருக்கும். உதாரணத்துக்கு பேப்பர் டம்ப்ளர்களை ஒண்ணு மேல ஒண்ணாய் நிறுத்த.., கையால தண்ணியை மொண்டு வாட்டர்கேன் நிரப்ப.., ஆண்களுக்கு 2 கையிலயும் வெயிட் தூக்கிக்கிட்டு நடக்குறதுன்னு..,வைக்கலாம். சிறு குழந்தாயாய் மாறி மகிழலாம்
சுய அறிமுகத்துக்கு நேரம் வீணாகாமல் இருக்க முன் கூட்டியே பதிவர்களின் போட்டோ +சுய அறிமுகத்தை கலெக்ட் செய்து ஜெராக்ஸ் போட்டு ப்ளாஸ்டிக் ஃபைல் ஒன்னை கொடுத்துரலாம்.
நான் களத்தில் ...
1.நீங்க ஒரு படி குறைஞ்சாலும் பரவாயில்ல....சென்னையைச் மற்றும் அனைத்து ஊரைச் சார்ந்த சீனியர்கள் காதில் ஒரு வார்த்தை சொல்லிடுங்க.
2.அதை ஜெய் கிட்ட ஒப்படைச்சிருங்க அவர் போனில் எல்லாரையும் அழைப்பார்.
3.அப்படி யாராவது என்னது பதிவர் சந்திப்பா எனக்கு தெரியலையே என்று சொன்னால் அதற்கு ஜெய்தான் பொறுப்பு.
4.ஜெய் போன் செலவை செலவு கணக்கா எடுத்துகங்க.
5.இந்த சந்திப்புக்கு அழகா ஒரு பெயர் சூட்டுங்க. (சங்கமம் மாதிரி)
6.மரபுப் படி இல்லாம கூட்டத்தை வித்தியாசமாக நடத்த சிந்தியுங்கள்.(நன்றியுரை,முகவுரை இதெல்லாம் இல்லாம)
7.முடிந்த அளவு வெளியூர் பதிவர்கள் வர ஏதுவான இடமாக தேர்வு செய்துவிடுங்கள்.
8.பதிவர்களைப் பற்றிய தனிப்பட்ட சொந்த வாழ்க்கை,கெட்ட பழக்கங்களைப் பற்றி மேடையில் கூறுவதை தடை செய்து விடுங்கள்.
9.மதுமதி ஒருத்தரையே அலைய விடாதிங்க, ஆளுக்கு ஒரு பொறுப்பு எடுத்துகங்க...!
அதிகபிரசங்கித்தனமாக நினைக்காமல் எங்கள் அனுபவமாக எடுத்துக் கொள்ளவும் நன்றி!
சந்திப்பு சிறக்க வாழ்த்துக்கள்!
இந்த ஆண்டும் சிறப்பாய் நடை பெற வாழ்த்துகிறேன்
வீடு மாம்ஸ்... ஆலோசனைகளுக்கு மிக்க நன்றி... பட்டிக்காட்டானிடம் வெளியுறவுத்துறையை ஒப்படைப்பது சிறந்த ஆலோசனை... பின்பற்றுகிறோம்...
நல்ல செய்தி! சென்றமுறை போல் சென்னையிலேயே நடத்த வேண்டாம். என்னைப் போன்றவர்களுக்கு வந்து போகவும், தங்குவதற்கும் சிரமமாக உள்ளது. தமிழ் நாட்டின் மத்தியில் ஒருநாள் பொழுதிற்குள் வந்து போகுமாறு உள்ள இடத்தில் நடத்தவும். தஞ்சாவூர் என்றால் தஞ்சை பெரியகோயிலை இதுவரை பாராத பல பதிவர்களுக்கு பார்க்க ஒரு வாய்ப்பும் அமையும்.
சீனு தொலை பேசியில் அழைத்திருந்தார்; புலவர் ஐயா வீட்டில் சந்திப்பு நடந்த அன்று கேரளாவில் இருந்தேன்
வாராந்திர மீட்டிங்குகளுக்கு வருவது சிரமம் ; எனது கருத்துகள் மெயிலில் அவ்வப்போது பகிர்கிறேன் ; விழாவிற்கு நிச்சயம் வருவேன்
சென்ற ஆண்டை போல சிறப்பாக நடக்க வாழ்த்துகள்
Hats off.....again....
We will meet....
சந்திப்பும் சிறக்க வாழ்த்துக்கள்...
Sunday 09-06-2013,
Discovery book palace
k.k.nagar.
@ 3:45pm 1st Doscussion meet for forthcoming '2vathu Tamil valaipathivarkal maanaadu.
ALL Bloggers are welcome.
Ippadikki
vizha kuzhu
YOUTH WING :-)))
Good News
அன்பின் ஆரூர் மூனா செந்தில் - இந்த மாபெரும் பதிவர் சந்திப்பு சென்னையில் சிறப்புடன் நடைபெற நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
தற்சமயம் அயலகத்தில் இருப்பதனால் இங்கிருந்த படியே வாழ்த்துகிறோம்
இந்த வருடமும் பதிவர் விழாவா? அருமை...
சென்ற ஆண்டைப் போலவே சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்.
வீடு சுரேசின் ஆலோசனைகளை வழிமொழிகிறேன். பதிவுகள் எப்படி இயல்பாக அவரவர் போக்கில் இருக்கிறதோ அப்படியே இயல்பாக விழாவையும் நடத்தலாம்.
நாய் நக்சிற்கு தற்காலிக முக்கிய பொறுப்பு வழங்கா விட்டால் தற்காலிக விபரீத விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று தற்காலிக விழாக்குழுவினரை தற்காலிகமாக எச்சரிக்கிறேன்.
இப்படிக்கு
தற்காலிக நாய் நக்ஸ் பேரவை
கருத்திட்ட அனைவருக்கும் நன்றி.
/பன்னிக்குட்டி ராம்சாமி said...
வீடு சுரேசின் ஆலோசனைகளை வழிமொழிகிறேன். பதிவுகள் எப்படி இயல்பாக அவரவர் போக்கில் இருக்கிறதோ அப்படியே இயல்பாக விழாவையும் நடத்தலாம்./
அவர் திருப்பூரில் இருந்தாலும் குழுவில் ஒருவர்தான் என்பதால் அலைபேசி வாயிலாக கண்டிப்பாக தகவல்கள் பரிமாறப்படும். வீடு கட்டி அடிப்பார் என நம்பலாம்.
/ பன்னிக்குட்டி ராம்சாமி said...
நாய் நக்சிற்கு தற்காலிக முக்கிய பொறுப்பு வழங்கா விட்டால் தற்காலிக விபரீத விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று தற்காலிக விழாக்குழுவினரை தற்காலிகமாக எச்சரிக்கிறேன்.
இப்படிக்கு
தற்காலிக நாய் நக்ஸ் பேரவை/
ஆம். சரியான கருத்து. கண்டிப்பாக பரிசீலிக்கப்படும்.
இப்படிக்கு
தற்காலிக நாய் நக்ஸ் பேரவையின் தற்காலிக சிற்றவை.
பதிவர் விழா சென்ற ஆண்டைப் போலவே சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்...
கொண்டாட்டங்களுக்கு மத்தியில் தமிழ் பதிவர் சங்கம் தொடங்குவது பற்றியும் கொஞ்சம் சீரியசாக விவாதிக்கலாமே...
யாரைப்பற்றியும்...எதைப்பற்றியும் துணிச்சலாய் முகமூடி அணியாமல் எழுதக்கூடிய ஆரோக்கியமான சூழலை நோக்கி நகர உதவுமே...
மறுபடியும் வாழ்த்துக்கள்...
பதிவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்.
Post a Comment