முஸ்கி: இந்த இடுகையில் உள்ள அனைத்தும் நகைச்சுவைக்காக மட்டுமே எழுதப்பட்டது... யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கில் அல்ல...
(குமுதத்தில் வரும் நையாண்டி பவன் காமிக்ஸ் கான்செப்ட் பற்றி அறிந்திருப்பீர்கள். அறியாதவர்களுக்கு “நையாண்டி பவன்” என்ற இந்த ஹோட்டலுக்கு நம்ம தானைத்தலைவர் கவுண்டமணி அண்ணன்தான் முதலாளி அவரோட உதவியாளரா செந்தில். ஹோட்டலுக்கு வந்து போறவங்ககிட்ட என்னா ரவுசு பண்றாங்கன்னு நீங்களே பாருங்க...)
கவுண்டமணி: அய்யா கூலிங்கிளாஸ் போட்டுட்டு வர்ற பெரியவரே... வணக்குமுங்க...
(கூலிங்கிளாஸ் போட்டபடி இயக்குனர் மிஷ்கின் உள்ளே நுழைகிறார்...)
கவுண்டமணி (மைண்ட்வாய்ஸ்): இவனுக்கா வணக்கம் சொன்னோம்... வீட்டுக்கு போனதும் கையை அடுப்புல வச்சி கருக்கிடனும்...
கவுண்டமணி: அதென்னங்கண்ணா ரூமுக்குள்ள வந்தப்புறமும் கூலிங்கிளாஸ்... கழட்டி ஓரமா வைக்கிறது தானே...
(மிஷ்கின் கூலிங்கிளாசை கழட்ட, செந்தில் ஜெர்க் ஆகிறார்...)
கவுண்டமணி: ஐயோ ண்ணா... பையன் பயப்புடறான் தயவுசெஞ்சு கூலிங்கிளாசை கண்லயே மாட்டிக்கோங்கண்ணா... அது அங்கேயே இருக்கட்டும்...
செந்தில்: அண்ணே... உங்க யுத்தம் செய் படத்த பார்த்தேன்னே... எப்படிண்ணே இந்தமாதிரி எல்லாம் யோசிக்கிறீங்க...?
மிஷ்கின்: ஒரு அம்பது வயசு அம்மா....
கவுண்டமணி: யாருங்க நம்ம அம்மாங்களா...???
மிஷ்கின்: யோவ் குறுக்குல பேசாதய்யா மனப்பாடம் பண்ணிட்டு வந்தது மறந்து போயிடும்...
ஒரு அம்பது வயசு அம்மா கோர்ட்டுல உக்காந்திருக்காங்க... அந்த அம்மா சிகரெட் பிடிச்சாங்க... அதுக்கப்புறம் என் மூஞ்சில காரித்துப்பினாங்க.... அவங்க எதுக்காக துப்பினாங்கன்னு யோசிச்சு எழுதின கதை தான் யுத்தம் செய்...
செந்தில்: அதெல்லாம் சரிண்ணே... இந்தப்படத்துல சேரன் வித்தியாசமா நடிச்சிருக்காரே... அதப்பத்தி கொஞ்சம் சொல்லுங்கண்ணே...
மிஷ்கின்: நம்ம எல்லாருக்குள்ளையும் ஒரு புலி தூங்கிட்டிருக்கு... அந்தப்புலியை இந்தப்படத்துல அவுத்து விட்டிருக்கிறோம்...
கவுண்டமணி: என்னது புளிங்களா...? கொட்டை எடுத்ததா எடுக்காததா...?
கவுண்டமணி: அது ஏனுங்கண்ணா உங்க படத்துல அடியாளுங்க ஒவ்வொருத்தரா வந்து சண்டை போடுறானுங்க... இங்க என்ன ரேஷன்ல மண்ணெண்ணை கொடுக்குறாங்களா...
மிஷ்கின்: நிஜ வாழ்க்கைல யாராவது நம்மள அடிக்க வந்தா பறந்து பறந்து அடிக்கிறோமா... இல்லிங்களே... அந்த யதார்த்தத்தை தான் என் படத்துல காட்டுறேன்...
கவுண்டமணி: நல்லா காட்டுனீங்க பதார்த்தத்தை... உங்கள இந்தமாதிரி எல்லாம் பேசச் சொல்லி யாருங்க்ண்ணா கத்து குடுக்குறது...?
மிஷ்கின்: புக்ஸ் படிக்கிறேங்க... இப்ப இருக்குற உதவி இயக்குனரு பயலுங்க மாதிரி எல்லாம் கிடையாதுங்க நான்... நிறைய புக்ஸ் படிக்கிறேன்... அதனால பேசுறேன்...
கவுண்டமணி: புக்ஸ்ன்னா சரோஜா தேவி புக்ஸ் தானே...???
செந்தில்: அண்ணே... எனக்கு ஒரு டவுட்டுண்ணே...
கவுண்டமணி: ஆரம்பிச்சிட்டாரு டவுட் தங்கபாலு... என்றா டவுட் கொஸ்டின் மண்டையா...
செந்தில்: எது ஏன்னே உங்க எல்லாப் படத்துலயும் மஞ்சள் புடவை பாட்டு, சிகப்பு நிற டைட்டில் வைக்கிறீங்க...
கவுண்டமணி: டேய் விக்கி லீக்ஸ் வாயா... கலைஞருக்கு மஞ்சள் துண்டு, அம்மாவுக்கு பச்சை புடவை மாதிரி சாருக்கு அது ஒரு செண்டிமன்ட் டா...
மிஷ்கின்: அது ஒண்ணுமில்ல... ஆடித்தள்ளுபடில ஒரு புடவைய எடுத்தோம்... அதை கட்டிக்கிட்டு எப்படி ஆ(ட்)டினாலும் கிழியாம இருந்துச்சு... அதனால அதையே எல்லாப் படத்துலயும் யூஸ் பண்ணிக்கிறேன்...
செந்தில்: அது யாருண்ணே அந்த பாட்டுக்கு நடுவுல விரலை மட்டும் காட்டுறது...?
மிஷ்கின்: அது ஒரு அல்லக்கை... எனக்கு ஏதாவது ரோல் கொடுங்கன்னு கேட்டுட்டே இருந்தான்... சரி போய்த்தொலையட்டும்ன்னு ஹார்மோனியம் வாசிக்க விட்டேன்...
செந்தில்: அப்படின்னா சாரு நிவேதிதா...?
மிஷ்கின்: அவர் என்னோட நண்பர்... என்னோட நண்பர்... என்னோட நண்பர்...
கவுண்டமணி: அத ஏனுங்கண்ணா மூணு முறை சொல்றீங்க... தண்ணி ஓவராயிடுச்சா...???
கவுண்டமணி: ஏனுங்க நீங்க உலகப்படங்களை பாத்து காப்பி அடிக்கிறதா சிலவனுங்க சொல்றானுங்களே... அதெல்லாம் உண்மையா...?
மிஷ்கின்: ஆமாங்க... அகிரோ குரசோவா, டகேஷி கிடானு இவங்களை எல்லாம் பாத்து தான் நான் சினிமா எடுக்க கத்துக்கிட்டேன்...
செந்தில்: அண்ணே... என்னன்னே திடீர்னு கெட்டவார்த்தைல திட்டுராரு...
கவுண்டமணி: அடேய் கோமுட்டி தலையா... அதெல்லாம் ஓலகப்பட இயக்குனருங்க பேருடா... அவங்க எடுத்த படங்களை தான் இவரு ரீமேக் பண்றாரு...
மிஷ்கின்: அப்படியே பாத்தாலும் நான் உங்களுக்கு ஒன்னும் அபின் கொடுக்கலையேங்க... என் மக்களுக்காக நல்ல படங்களைதானே தர்றேன்...
கவுண்டமணி: ரொம்ப சந்தோஷமுங்க... அப்படின்னா கையோட கையா காப்பிரைட் வாங்கிட்டு எடுக்கலாமேங்க...
மிஷ்கின் (தலையை சொறிந்தபடி): அதுக்கெல்லாம் காசு கொடுக்கணுமே தம்பி...
கவுண்டமணி: பாத்துக்கோங்க பொதுஜனங்களே இந்த பாவத்துக்கெல்லாம் நான் ஆளாகவே மாட்டேன்... என்ன உட்ருங்க...
செந்தில்: எண்ணே... நந்தலாலா படமும் கிகுஜிரோ படமும் அப்படியே அச்சு அசல் ஒரே மாதிரியே இருக்குறதா பேசிக்கிறாங்களே ண்ணே...
மிஷ்கின் (கடுப்பாகி): ஏங்க அப்படி பார்த்தா மணிரத்னம் காப்பி, நாயகன் காப்பி, பாரதிராஜா காப்பி, பதினாறு வயதினிலே காப்பி, கேஆர்பியோட பயோடேட்டா காப்பி... இவ்வளவு ஏங்க உங்க நையாண்டி பவனே காப்பி... என்னவிட்டா நான் நாலு மணிநேரம் கூட பேசுவேன்...
கவுண்டமணி (டென்ஷனாகி செந்திலின் புட்டத்தை எட்டி மிதித்தபடி): சொறி புடிச்ச மொன்னை நாயே... இனிமே இந்த மாதிரி ஆளுங்கள எல்லாம் கடைக்குள்ள சேர்த்தா கூகுள் ஓனரை விட்டு கடிக்க வச்சிடுவேன்... ஜாக்கிரதை...
(இந்த சம்பவத்தை பார்த்து மிஷ்கின் தலைதெறித்தபடி ஓடுகிறார்...)
கவுண்டமணி (மிஷ்கின் ஓடிய திசையை பார்த்து): படுவா... இனிமே நீ ஓலகப்படம் பார்த்த உன்ன ஒரே அப்புல மக்காத்தி பண்ணிடுவேன்...
53 comments:
வந்தாச்சு :)
நானும் வந்துட்டேன்
“நையாண்டி பவன்” செம்ம நக்கல் :))
சூப்பர்...
//மக்காத்தி //
இது என்னா புது வார்த்தையா இருக்கு :))
nayandi, landhu, dakalti, nakkal, makathi ayyo nan escape
செம லொள்ளு...:))
சூப்பர் நையாண்டி....
அது யாருண்ணே அந்த பாட்டுக்கு நடுவுல விரலை மட்டும் காட்டுறது...?//
நான் கூட ரசிகர்கள் அவருக்கு நடு விரலை காமிச்சுட்டாங்களோன்னு பதறிட்டேன்...
இவ்வளவு ஏங்க உங்க நையாண்டி பவனே காப்பி... //
Ultimate
இவ்வளவு ஏங்க உங்க நையாண்டி பவனே காப்பி..
....ha,ha,ha,ha,ha,ha,ha,ha,ha,ha,ha...
நல்ல நகைச்சுவை
நன்றி . . .
நாமளும் வந்திட்டமெல்ல....நல்ல நகைச்சுவை..
// நல்லா காட்டுனீங்க பதார்த்தத்தை... // அட்டகாசம் ஜி !!
// நல்லா காட்டுனீங்க பதார்த்தத்தை... //
அட்டகாசம் ஜி !!
www.nimidam.blogspot.com
:-))))))))))))00
அட நீ வேறயா ஏன்யா வெந்த புண்ணுல வெரல பாச்சிறீங்க
/////கவுண்டமணி (மிஷ்கின் ஓடிய திசையை பார்த்து): படுவா... இனிமே நீ ஓலகப்படம் பார்த்த உன்ன ஒரே அப்புல மக்காத்தி பண்ணிடுவேன்../////
ங்கொக்காமக்கா இவ்ருதான் அந்த ஒலகப் படம் எடுக்கறவரா.... ? அதென்ன ஒலகப் படம்...? படுவா அப்போ மத்த படம்லாம் ஒலகத்துல எடுக்காம செவ்வாய் கெரகத்துலேயா எடுக்கறாங்க?
அடங்கொன்னியா copy க்கு காபி கொடுத்த ஓட்டலுக்காரங்களுக்கு நன்றி ஹி ஹி!
அது சரி "ஒரே அப்புல மக்காத்தி பண்ணிடுவேன்" என்ன அர்த்தம்
அது யாருண்ணே அந்த பாட்டுக்கு நடுவுல விரலை மட்டும் காட்டுறது...?////
அப்படியா ? எந்த வெரல காட்டுவாரு
இந்த ஆளு மொத படமே எனக்கு பிடிக்கல. ஹீரோ ஒரு சைக்கோ மாதிரியே இருப்பான். அவன மாதிரி தான் இவரு இப்ப இருக்காரு. இன்னும் கொஞ்சம் தொண்டை நனைவது போல் கிழிச்சாதான் தமிழ் சினிமா உருப்படும்.
கூலிங் கிளாஸ்...இப்ப நம்ம கேப்டன் கூட மேடைல போட ஆரம்பிச்சிட்டாரு.இந்த வாரம் செம ஹாட்! அடுத்த வாரம் நையாண்டி பவன்ல யார கிண்டப்போறிங்கன்னு தெரியல!
//ஆரம்பிச்சிட்டாரு டவுட் தங்கபாலு... என்றா டவுட் கொஸ்டின் மண்டையா.//
வாய்ப்பே இல்லைங்க , செம காமெடி . கண்டிப்ப்பா கவுண்டமணி அண்ணன் பேசிருந்தா இப்படித்தான் இருந்திருக்கும் ..
//படுவா... இனிமே நீ ஓலகப்படம் பார்த்த உன்ன ஒரே அப்புல மக்காத்தி பண்ணிடுவேன்...
//
ஹய்யோ ஹய்யோ ... இன்னும் சிரிசிட்டே இருக்கேன் .. கலக்கிட்டீங்க ..
நானும் வந்துட்டேன் உள்ளே ஹா ஹா ஹா....
//ஏங்க அப்படி பார்த்தா மணிரத்னம் காப்பி, நாயகன் காப்பி, பாரதிராஜா காப்பி, பதினாறு வயதினிலே காப்பி, கேஆர்பியோட பயோடேட்டா காப்பி... இவ்வளவு ஏங்க உங்க நையாண்டி பவனே காப்பி//
ஹி.. ஹி..ஆமாவா?!!??
அய்யோ - சூப்பர் கவுண்டரு - செந்திலு காமெடி - பேசாம சினிமாவுக்குப் போயிட வேண்டியதுதானெ பிரபா - ம்ம்ம்
//கவுண்டமணி: ரொம்ப சந்தோஷமுங்க... அப்படின்னா கையோட கையா காப்பிரைட் வாங்கிட்டு எடுக்கலாமேங்க...
மிஷ்கின் (தலையை சொறிந்தபடி): அதுக்கெல்லாம் காசு கொடுக்கணுமே தம்பி...//அப்படிங்களாண்ணா...! அப்போ உங்க படத்த தியேட்டருக்கு வந்து காசு குடுத்து பாக்கனும்னு எங்களையும் எதிர்பாக்காதீங்க அண்ணா..!! மவனே இந்தப் படம் நல்லாயிருக்குன்னு பிரபா சொன்னாரேன்னு பாத்து தொலைச்சேன். படம் பூராவும் ஒரே இருட்டு, ஏங்கியே போறானுங்க, எவனையோ அடிக்கிறானுங்க, முக்கள் வாசிப் படம் மண்டையைப் பிச்சிகிட்டு பாத்தேன், அப்புறம் நொந்தலாலாவை...சாரி நந்தலாலாவை நொந்துகிட்டே கொஞ்ச நேரம் பாத்துட்டு மூடிட்டேன். தாங்க முடியலை. //படுவா... இனிமே நீ ஓலகப்படம் பார்த்த உன்ன ஒரே அப்புல மக்காத்தி பண்ணிடுவேன்...// இதுதான் ரைட்டு.
எழுத்தாளர் சாரு நிவேதிதாவை கேவலப்படுத்தி இந்தப்பதிவை போட்டதால் கண்டித்து வெளிநட்ப்பு செய்கிறேன்,, ஹி ஹி ஹி
Nice :)
அண்ணே என் பயோடேட்டா காப்பியா? அது இன்ஸ்பிரெசனுங்கோ!.. ஹி...ஹி...
கொக்கா மக்கா பொலந்து கட்டுரீங்களே.....கலக்குங்க....கலக்குங்க....
சூப்பர் கலக்கல்
ஹாஹா நிஜமாவே மிஷ்கின் இதே பதில்களைத் தான் சொல்லுவார். கலக்கல் கலக்கல் கலக்கல் (மூணு முறை)
கொடைய மடக்கி வெச்சுட்டு சொல்றேன்... உங்க கட அயிட்டங்கள் சூப்பர்! இதுக்கு மேல நான் ரெகுலர் கஸ்டமர். மேலும் நல்ல நல்ல பலகாரங்களை எதிர்ப்பார்க்கிறோம். வாழ்த்துக்கள். விக்கி லீக் வாயன்....! சான்சே இல்ல நண்பா!
Super nakkals!!
ஹி ஹி ஹி.. கவுண்டரே.!! கவுண்டரே.!!
நையாண்டி பவனில் இந்த வாரம் காப்பி வாரம்....
கலக்கல் காபி!
மிஷ்கினை கிழித்ததற்கு நன்றி
அளவே இல்ல,கலக்குங்க,பாவம் மிஷ்கின்!
நையாண்டி பவனில் உணவருந்த வருகை தந்த அனைவருக்கும் நன்றிங்கோ...
மாணவன் said...
//மக்காத்தி //
இது என்னா புது வார்த்தையா இருக்கு :))
---> அது ஒரு பின்நவீனத்துவ வார்த்தை... அர்த்தமெல்லாம் கேட்கப்பிடாது...
! சிவகுமார் ! said...
அடுத்த வாரம் நையாண்டி பவன்ல யார கிண்டப்போறிங்கன்னு தெரியல!
---> கமல் அப்படி இல்லைன்னா டி.ஆரை கூப்பிடலாம்ன்னு திட்டம்...
cheena (சீனா) said...
பேசாம சினிமாவுக்குப் போயிட வேண்டியதுதானெ பிரபா
---> ஏனய்யா உங்களுக்கு இந்த கொலைவெறி... உசுப்பேத்தி உசுபேத்தியே ஒடம்ப ரணகளமாக்குறீங்களே...
@ Jayadev Das
நந்தலாலா, யுத்தம் செய் இரண்டு படங்களையுமே பிடிக்காத சில அபூர்வ மனிதர்களில் நீங்களும் ஒருவர்... உங்களுக்கு என்ன மாதிரியான படங்கள் பிடிக்கும் என்று சில உதாரணங்களை கூறுங்கள்... நான் உங்களுக்கேற்ற படங்களை பரிந்துரைக்கிறேன்...
சி.பி.செந்தில்குமார் said...
எழுத்தாளர் சாரு நிவேதிதாவை கேவலப்படுத்தி இந்தப்பதிவை போட்டதால் கண்டித்து வெளிநட்ப்பு செய்கிறேன்,, ஹி ஹி ஹி
---> இதுக்கே இப்படின்னா நாங்க உண்மையிலேயே கேவலப்படுத்தி இருந்தா என்ன சொல்லி இருப்பீங்களோ...
வந்தியத்தேவன் said...
ஹாஹா நிஜமாவே மிஷ்கின் இதே பதில்களைத் தான் சொல்லுவார். கலக்கல் கலக்கல் கலக்கல் (மூணு முறை)
---> சரியா போச்சு போங்க... நீங்க விஜய் டிவியில் மிஷ்கின் நிகழ்ச்சி பார்க்கலையா... அதில் அவர் கூறிய பதில்களை அடிப்படையாக வைத்தே இந்த எபிசொட் உருவாக்கப்பட்டது...
தல கலக்கிட்டிங்க,அடுத்தது யாரு?
-அருண்-
தனி ப்ளாக்கே ஆரம்பிச்சாச்சா?
முடியலை சாமி ஒவர் லந்தா இருக்கே?
எப்படிதான் சமாளிக்கிறாங்கலோ இந்த டயருடக்கருங்க
செம்ம நக்கல்.சூப்பர்.
சூப்பரு.. இப்படி போட்டு மிதிச்சா தான் இந்த டகுலு வாயனுக திருந்துவாணுக.. நல்லா வேணும்..
mishkinnukku kedda nerum, avvaluvuthan. samy
Post a Comment