Thursday, November 29, 2012

காடுதிரும்பல் - பாகன் டமார் பயோடேட்டா



                                                                 

பெயர்: அய்யா GOD

தொழில்: இந்தியாவை வல்லரசாக்க டெய்லி பதிவு போடுதல். சில சமயம் 2,3.

சைடு தொழில்: தினம் 101 பேருக்கு கமன்ட், லைக், ஓட்டு போடுதல்.

ரோல் மாடல்: சி.பி. செமதில் டமார்

பிடித்தவர்கள்: (பாராட்டி மட்டும்) கமன்ட் & த.ம.வில் ஓட்டு போடுவோர்

எதிரிகள்: (அ)நியாயமாக தன்னை விமர்சிக்கும் அனைவரும்.

பொழுதுபோக்கு: பதிவு போடவே நேரமில்லை. இது வேறயா?


பலம்: 6 முதல் 60 வரை(குறிப்பாக குடும்ப பெண்கள்) நித்தம் 3,000+ பேர் இவர் பதிவை 'படிப்பது',

பலவீனம்: பிரபல கூகிள் ப்ளஸ்ஸர்கள் ஓட்டினால் பம்முவது.  இளம் பதிவர்கள் கலாய்த்தால் மட்டும் கொதித்து பதில் சொல்வது. 

நீண்டகால சாதனை: பிரபல திரட்டியில் அனைவரையும் ஓரம் கட்டி மாதக் கணக்கில் சிம்மாசனத்தில் இருப்பது, ஆண்டுக்கணக்கில் பயணக்கட்டுரை எனும் பெயரில் ஒவ்வொரு பதிவிலும் 100 போட்டோ, 30 வீடியோ போட்டது. 

சமீபத்திய சாதனை: முதல் இடத்திற்கு ஆபத்து வராமல் இருக்க அடிக்கடி சினிமா பதிவுகளை போட்டு தப்பிப்பது, மடிப்பாக்கம் துர்கா பவன் பதிவு, பயணக்கட்டுரையை ஒருவழியாக முடித்தது, வெள்ளிக்கிழமை பட முன்னோட்டம் போடுதல், பாடல் விமர்சனம்.

தனிச்சிறப்பு: டி.வி. நிகழ்ச்சிகள் பற்றி தொடர்ந்து எழுதுதல், விசேஷ தினங்களில் டி.வி.யில் என்ன பார்க்கலாம் என்று யோசனை சொல்லுதல், மறுநாள் அதுகுறித்த விமர்சனங்கள் போட்டு திகிலை கிளப்புதல், நாளுக்கு 40 ரூவாய் சம்பாதிக்கும் கூலித்தொழிலாளிகளை இம்சித்து பேட்டி எடுத்து அவர்கள் வருமானத்தை வறுத்து எடுத்தல்.

ஸ்பெஷல் சிறப்பு: சோகத்தில் ரோட்டோரம் நடந்து செல்லும் அப்பாவியை வலுக்கட்டாயமாக அழைத்து தன்னை பலவித ஸ்டில் எடுக்க சொல்லி வெறுப்பேற்றுவது.

மிகச்சிறப்பு: பதிவுலகில் இவரை தெரியாதவர்கள்  யாருமில்லை, இவருக்கு தெரியாதவர்களும் யாருமில்லை. இல்லை. இல்லையோ இல்லை.

முக்கிய சிறப்பு: பயணக்கட்டுரை மூலம் கூகிள் மேப்பின் இன்கமை காலி செய்தது. 'இனி எங்க டூர் போனாலும் உங்க பதிவை மேப்பா வச்சித்தான் போவோம்' என்று தென்கிழக்கு ரஷ்யா முதல் வடமேற்கு சிம்லா வரை உள்ள வாசகர்கள் பாராட்டுவது. 

வெற்றியின் ரகசியம்: பதிவு போடும்போது டைட்டிலின்  பின்பாதியில் அதிரடியாக வார்த்தைகள் வைத்து வாசகர்களை உள்ளே இழுப்பது. உதாரணம்: அரிய/அறியாத தகவல்கள், மறக்க முடியாத நினைவுகள், அசத்தல் படங்கள்.
     
நீண்ட கால எரிச்சல்: 'செம' எனும் வார்த்தையை தவிர்க்க முடியாமல் தவிப்பது. 

சமீபத்திய எரிச்சல்: ரேங்கிங்கில் தொடர்ந்து தனக்கு மிக அருகில் இருப்பவர்கள், குறுகிய காலத்தில் தன்னை விட பிரபலம் ஆகிவிட்ட சகலகலா சிட்டிக்காட்டான்(விரைவில் சிட்டியை போட்டுத்தள்ள ஆட்கள் தேவை விளம்பரம் தர முடிவு).

லட்சியம்: அடுத்த ஆண்டும் 365+(730?) பதிவுகள் போட்டு நெம்பர் ஒன் ஆகுதல்.


*******                                          ************************                  **************
      

94 comments:

Philosophy Prabhakaran said...

யோவ் சிவா... சார் பதிவை லேடீஸ் எல்லாம் படிக்கிறாங்கன்னு உனக்கு பொறாமைய்யா...

ரஹீம் கஸ்ஸாலி said...

ஏன் இந்த கொலைவெறி?

நாய் நக்ஸ் said...

Yowwwww
post
poduravanga
per
podungappa......!!!!!!

Philosophy Prabhakaran said...

TODAY MY YOUNGER DAUGHTER ASKED ME 'YENNAPA INNAIKU KAADUTHIRUMBAL PAKALAYA?;. KAADUTHIRUMBAL ENTERED IN MY DAILY LIFE. VOW!!

நாய் நக்ஸ் said...

Daily phone
pannuvathu-----vote podubavargalukku
mattum.....

Pl. Add this....

Philosophy Prabhakaran said...

நக்ஸ்... போஸ்ட் கவுண்டமணி செந்தில் குழு சார்பாக பதிவிடப்பட்டிருக்கிறது...

நாய் நக்ஸ் said...

Daily katharadippathu;;;;; vote
podaathavargalai.....

Add this....

CS. Mohan Kumar said...

இந்த பதிவு எழுதியவர் பேரு மற்றும் அட்ரஸ் கொடுங்களேன்

பாகன் டமார் 66 A நோட்டிஸ் அனுப்ப வசதியா இருக்கும் :))

நாய் நக்ஸ் said...

Virumbuvathu;;;;office staffs-i
perumai pada vaippathu....

நாய் நக்ஸ் said...

Pathive varaatha naal;;;;;
thirattigalin....vidumurai naal...

Philosophy Prabhakaran said...

பாகன் டமார் தன்னை கலாய்க்கும் லக்கி, அதிஷா, மணிஜி இன்னபிற ஒளிவட்ட பதிவர்களுக்கு 66A அனுப்பிவிட்டாரா...

CS. Mohan Kumar said...

நாய் நக்ஸ் said...

Daily phone
pannuvathu-----vote podubavargalukku
mattum.....

Pl. Add this....

நக்ஸ் அண்ணே: அப்படி எல்லாம் இல்லை; இணைய நட்புகளோடு போனில் பேசுவது; நேரில் சந்திப்பது அதிகம் வேண்டாம்னு நினைக்கிறேன். எழுதுறது; படிக்கறதோட போதும். என் துறை சார்ந்த நண்பர்களுடன் மட்டும் தான் இப்போ தினம் போனில் பேசுறேன்;

ஒரு நேரத்தில் மற்ற நண்பர்களே இல்லாம வெறும் இணைய நண்பர்கள் மட்டும் தான் இருப்பாங்க என்கிற மாதிரி ஆகிடுச்சு; இது மிக தப்பு என இம்முடிவு எடுத்தேன்

பதிவர்களிடமிருந்து அனேகமா இன்கம்மிங் மட்டும் தான் வருது; அவுட் கோயிங் மிக மிக அரிது தான் (கால் பண்ணா செலவாகிடுமே என்பதால் இது இல்லை என்பது புரியும் என நினைக்கிறேன் )
****
பிலாசபி: நீ சொன்ன கமன்ட் போட்டவர் ஒரு ப்ளாகர் இல்லை; இறந்த எனது நண்பன் லட்சுமனின் தம்பி. லட்சுமணன் நினைவா தான் வீடுதிரும்பல் என்ற பெயர் வைக்கப்பட்டது

CS. Mohan Kumar said...

பதிவை எழுதுனது பிலாசபியா சிவாவா? ஒரே குயப்பமா இருக்கே !

சிவாவை இங்கு ஆளே காணும் ; பிலாசபி உட்கார்ந்து பேசுறதை பார்த்தால் அவர் தான் எழுதி போட்ட மாதிரி இல்லே தெரியுது :)

Philosophy Prabhakaran said...

நீங்களும் ஜாக்கியும் ஆ ஊன்னா செண்டிமெண்டை கையில தூக்கிடுறீங்களே ஏன் சார்...?

நான் அந்த ஆங்கில கமெண்டை காப்பி பேஸ்ட் பண்ணி போட்டேன்... அம்புட்டுதேன்... அதுக்கு ஏன் சம்பந்தமே இல்லாம செண்டிமெண்ட் ஜூஸ் போடுறீங்க...

Philosophy Prabhakaran said...

// சிவாவை இங்கு ஆளே காணும் ; பிலாசபி உட்கார்ந்து பேசுறதை பார்த்தால் அவர் தான் எழுதி போட்ட மாதிரி இல்லே தெரியுது :) //

ஏன் அஞ்சாசிங்கம் எழுதியிருக்க கூடாதா ?

CS. Mohan Kumar said...

ஒரு சென்டிமென்ட்டும் இல்ல தம்பி; நீ அதனை எந்த அர்த்தத்தில் இங்கு போட்டாய் என தெரியலை. நான் அந்த கமன்ட் போட்டவர் பற்றிய தகவலை சொன்னேன் அவ்ளோ தான்

CS. Mohan Kumar said...

அஞ்சாசிங்கம் எழுத்து நடை நமக்கு தெரியாதா ? இது அவரு இல்ல

Easy (EZ) Editorial Calendar said...

இதையே ஒரு பதிவாக போட்டாச்சு.....நல்லா வருவிங்க.....

நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

MARI The Great said...

:D

Anonymous said...

mokkai post

சீனு said...

பாகன் டமார் - அய்யா god சொற் பிழை இல்லை பெயர் பிழை உள்ளது... முதல் வரியிலேயே இவ்வளவு பெரிய பிழை இழைதிருப்பதை 66a வன்மையாகக் கண்டிக்கிறது...

சீனு said...

//Philosophy Prabhakaran said...
நீங்களும் ஜாக்கியும் ஆ ஊன்னா செண்டிமெண்டை கையில தூக்கிடுறீங்களே ஏன் சார்...?//

பெயரில் பிலாசபியை வைத்துக் கொண்டு மற்றவர்கள் கூறும் பி"லா"சபியை கொண்டால் செய்வது எந்த நியாயம் என்று நான் கேட்க வில்லை மிஸ்டர் "பெயர்: -----" கேட்கக் சொன்னார்


சீனு said...

//பாகன் டமார் தன்னை கலாய்க்கும் லக்கி, அதிஷா, மணிஜி இன்னபிற ஒளிவட்ட பதிவர்களுக்கு 66A அனுப்பிவிட்டாரா...//

நீங்க இப்படி செஞ்சதே இல்லையா சார்...
வைத்தீரே, சொன்னேரே, சென்றீரே ..
ஐயோ இனி எல்லாரும் ரே போட் பெசுவாய்ங்கலே

மறுக்கவும் மொதல்ல இருந்தா... நாடு தாங்காது சாமி

Unknown said...

காடுதிரும்பல் - பாகன் டமார் பயோடேட்டா
////////////////////
நீங்க குறிப்பிட்ட பதிவர் யார்ன்னு எனக்கு தெரியாது...? ஏன் அவர் பெயர்ல டமார்ன்னு வருது பூரி,உருளை கிழங்கு அதிகமா சாப்பிட்டாரோ..?

Unknown said...

@மோகன் குமார் said...
இந்த பதிவு எழுதியவர் பேரு மற்றும் அட்ரஸ் கொடுங்களேன்

பாகன் டமார் 66 A நோட்டிஸ் அனுப்ப வசதியா இருக்கும் :))
///////////////////////
சுறா,லத்திகா பட சிடி கூட அனுப்புங்க சார்...! சாவட்டும்

அமுதா கிருஷ்ணா said...

ஆண்டு கணக்கில் பயணக்கட்டுரை,கூலி தொழிலாளி இம்சிப்பதும் ஹா..ஹா..ஹா.

கோவை நேரம் said...

கலாய்ப்பதுதான் வேலையா...முகம் தெரிந்த நண்பர்களிடமே இப்படி என்றால்...

CS. Mohan Kumar said...

நீங்க எழுதியதில் நிறைய விஷயத்துக்கு பதில் சொல்லலாம் என்றாலும் இரண்டு விஷயத்துக்கு மட்டும் சொல்றேன். சீரியஸா இல்லை. விளக்கம் சொல்ல ஒரு வாய்ப்பு என்கிற அளவில் மட்டும்:

ஓரளவு பிரபலமான பதிவர்கள் மீது இருக்கும் பொதுவான குற்றசாட்டு : அவர்கள் யாருடைய பதிவுக்கும் போய் பின்னூட்டமிடுவதில்லை. "பிரபல பதிவர்"னு நினைப்பு ! இன்னொரு பக்கம் என்னை மாதிரி நிறைய பேருக்கு கமன்ட் போட்டாலும் அதுக்கும் விமர்சனம் வருது இல்லியா?

அடுத்து பிரபா மிக அடிக்கடி கேட்பது: அதிஷா, லக்கி போன்றோரிடம் கோபப்படுவதில்லை; ஏன் எங்க மேலே மட்டும் கோபப்படுறீங்க? ஏன்னா நீங்க என் நண்பர்கள் என நினைக்கிறேன்; உரிமை இருக்கிற இடத்தில் தானே கோபப்படமுடியும்? அதிகம் பழகாத யாரோ ஒருத்தரிடம் உரிமையா கோபப்பட முடியாது இல்லியா? மேலும் அவர்களின் உள்குத்து & உள் அரசியல் எனக்கு புரியாததும், அவர்களிடம் வாதிட போனால் புதை குழி போல் மாட்டி கொள்வோம் என்ற பயமும் கூட ஒரு காரணம் தான்.

Anonymous said...


//கோவை நேரம் said...
கலாய்ப்பதுதான் வேலையா...முகம் தெரிந்த நண்பர்களிடமே இப்படி என்றால்...//

ஜீவா. கலாய்ப்பதுதான் வேலை என்று எதை வைத்து சொல்கிறீர்கள்? இந்த தளத்தில் இவ்வாண்டு வந்த மொத்த பதிவுகளின் எண்ணிக்கையை பாருங்கள். கலாய்ப்பது மட்டுமே வேலை அல்ல என்பது புரியும். நேற்று கூட வீடு சுரேஸ் எங்களை ஓட்டி இருந்தார். நாங்கள் யாரும் டென்ஷன் ஆகவில்லை.

//முகம் தெரிந்த நண்பர்களிடமே இப்படி என்றால்.//

தெரியாத பதிவர்களை கிண்டல் செய்வது எந்த வகையில் நாகரீகம் என்று சொல்லுங்கள்!!

Anonymous said...
This comment has been removed by the author.
Philosophy Prabhakaran said...

// ஜீவா. கலாய்ப்பதுதான் வேலை என்று எதை வைத்து சொல்கிறீர்கள்? இந்த தளத்தில் இவ்வாண்டு வந்த மொத்த பதிவுகளின் எண்ணிக்கையை பாருங்கள். கலாய்ப்பது மட்டுமே வேலை அல்ல என்பது புரியும். நேற்று கூட வீடு சுரேஸ் எங்களை ஓட்டி இருந்தார். நாங்கள் யாரும் டென்ஷன் ஆகவில்லை. //

ஆடு திரும்பல் ஸ்டைலில் பின்னூட்டம் போட்ட சூட்சுமம் புரிகிறது...

Philosophy Prabhakaran said...

// This comment has been removed by the author. //

யோவ் சிவா... இதானே வேணாங்குறது... இந்த பதிவுக்கு மோகன் அண்ணன் உட்பட நிறைய பேர் follow up வைத்திருக்கிறார்கள்... நீங்கள் டெலிட் செய்த கமென்ட் நாளை மறுவெளியீடு செய்யப்படும் தம்பி...

Philosophy Prabhakaran said...

// ஓரளவு பிரபலமான பதிவர்கள் மீது இருக்கும் பொதுவான குற்றசாட்டு : அவர்கள் யாருடைய பதிவுக்கும் போய் பின்னூட்டமிடுவதில்லை. "பிரபல பதிவர்"னு நினைப்பு ! இன்னொரு பக்கம் என்னை மாதிரி நிறைய பேருக்கு கமன்ட் போட்டாலும் அதுக்கும் விமர்சனம் வருது இல்லியா? //

மோகன் அண்ணே... நீங்க சொல்றது செம காமெடி... முன்னதையும் பின்னதையும் மாற்றிப்போட்டிருக்கிறீர்கள்... நீங்க பலதரப்பட்ட இடங்களுக்கு சென்று பின்னூட்டமிடுவதால் தான் பிரபலம் ஆகியிருக்கிறீர்கள்... ஒரு ஆறு மாத காலத்திற்கு நீங்கள் யாருடைய பதிவுக்கும் பின்னூட்டம் போடாமல் இருந்தால் பதிவுலகம் உங்களை மறந்துவிடும்... நீங்கள் மட்டுமல்ல நான் உட்பட இங்கே பெரும்பான்மை நிலை அதுதான்... அதையும் மீறி திறமையோ அல்லது வேறு சில மார்க்கெட்டிங் டெக்னிக் (இது என்ன என்பதை வேறொரு சமயம் விரிவாக சொல்கிறேன்) வைத்திருப்பவர்கள் மட்டும் இங்கே நிலைக்க முடியும்...

மோகன் குமார் உங்களுடைய மார்கெட்டிங் வித்தை எங்களுக்கு தெரியும் என்பதை மறந்துவிட்டு நீங்கள் பேசுவது நகைச்சுவையாக இருக்கிறது...

Philosophy Prabhakaran said...

// அவர்களிடம் வாதிட போனால் புதை குழி போல் மாட்டி கொள்வோம் என்ற பயமும் கூட ஒரு காரணம் தான். //

Quote of the week... நன்றி...

CS. Mohan Kumar said...

பிரபா பல இடங்களுக்கு போய் நான் பின்னூட்டம் போட்டதால் தான் பிரபலம் ஆகிறேன் என்கிறாயா ?

மூவாயிரம் பேர் தினம் படிக்கிறார்கள் என்றால் அவர்களுக்கு பின்னூட்டம் போட்டா படிக்க வருகிறார்கள்?

கமன்ட் போடுவது தான் இங்கு மொய்க்கு மொய் வேலையாக உள்ளது. நான் தினம் போடும் கமன்ட் ஐந்து அல்லது ஆறு - இதை தமிழ் மணம் மூலம் எளிதாய் காணலாம் ; பின்னூட்டம் போடுவது மார்கெட்டிங் டெக்னிக் என்பது உங்கள் பார்வை

வீடுதிரும்பலை பொருத்த வரை சினிமா அரசியல் பயண கட்டுரை விளிம்பு நிலை மனிதர்கள் என என பல்வேறு கலவைகளை எழுதுவதால் தான் அது பிரபலம் ஆனது

goundamanifans said...

//நாய் நக்ஸ் said...
Yowwwww
post
poduravanga
per
podungappa......!!!!!!//

கமன்ட் போடுற நீங்க முதல்ல சொந்தப்பேர்ல போடுங்க தலைவா!!

goundamanifans said...



//நாய் நக்ஸ் said...
Daily phone
pannuvathu-----vote podubavargalukku
mattum.....

Pl. Add this....//

அதை நீங்க சொன்னீங்க பாருங்க. அங்க நிக்கறீங்க. மிஸ்ட் கால் தந்தே மத்தவங்களை பேச வச்சி கொல்ற மாமனிதரே.

goundamanifans said...

//மோகன் குமார் said...
அஞ்சாசிங்கம் எழுத்து நடை நமக்கு தெரியாதா ? இது அவரு இல்ல//

ரொம்ப அப்பாவி சார் நீங்க :)

Unknown said...

@மோகன்குமார்

சார்..!உங்களுக்கு தெரியாதது எதுவும் இல்லை..!இருந்தாலும் சொல்றேன்

நான் பன்னிக்குட்டி பயடேட்டா

வௌங்காதவன் பயடேட்டா

இரண்டு பதிவு போட்டேன் இரண்டு பேரையும் ஓட்டித்தான் போட்டேன் அதுல அவங்க கமெண்ட்டை பாருங்க நகைச்சுவையை, கலாய்ப்பதை,நகைச்சுவையா எதிர் கொண்டு பாருங்க....
விவாதம் செய்யாதிங்க...ரிலாக்ஸ்சா எதிர் கொள்ளுங்க..!அப்பத்தான் மனசு பிரியாகும்....
எங்க சிரிங்க....அட நல்லா சிரிங்க சார்...
மனசுல நல்லா பவர் ஸடாரை ஒரு தடவை நெனைச்சு பாருங்க
இப்ப சிரிப்பு பொத்துட்டு வருதா...? இனி கமெண்ட் போடுங்க....
படிக்கிற எங்களுக்கும் சிரிப்பு வரும்..!
:)))))

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

||நீங்க சொல்றது செம காமெடி... முன்னதையும் பின்னதையும் மாற்றிப்போட்டிருக்கிறீர்கள்.||

இது உண்மை என்றே நினைக்கிறேன்.
அவரது பதிவில் அவரை விமர்சித்து பின்னூட்டினால் கூட அதற்குப் பெரும்பாலும் அவர் பதில் கூட அளிப்பதில்லை.

இந்த குணம் எழுதுவதைப் பொறுத்தவரை எனக்கு ஒப்புதலில்லாததால் அவரது பதிவுகளைத் சமீப காலங்களில் தவிர்த்தே வந்திருக்கிறேன்..

மற்றபடி பகடி சங்கத்து சிங்கங்'களுக்கு மிக நன்றாகவே வருகிறது..

பிரபல டெக்னிக் எல்லாம் நிச்சயம் உண்மை. பதிவுலகில் ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வருவதால் இதை நிறையப் பார்த்திருக்கிறேன்.

ஆறு மாதம் அல்ல, மூன்று மாதங்களுக்கு எந்தப் பதிவுக்கும் சென்று பின்னூட்டமிடாமல் இருந்தாலே, பதிவுகள் காற்றாடும்..

ஆனால் அந்தநிலை, கட்டாயமாக எழுதத் தேவையான பொருளில் மட்டும் எழுதும் நிலையைத் தருவதால் எழுத்தின் தரம் கூடுவதும் நடைபெறும்..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////Philosophy Prabhakaran said...
யோவ் சிவா... சார் பதிவை லேடீஸ் எல்லாம் படிக்கிறாங்கன்னு உனக்கு பொறாமைய்யா.../////

நம்ம சிட்டிக்ஸ் அண்ணனுக்கும்தான் லேடீஸ் ஃபேன்ஸ் இருக்காங்க...... அதுவும் பதிவே எழுதாமே...... இப்ப சொல்லுங்கய்யா யாரு பெரிய பிரபலம்னு..... !

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////தொழில்: இந்தியாவை வல்லரசாக்க டெய்லி பதிவு போடுதல். சில சமயம் 2,3./////

நல்லவேள இது அப்துல் கலாம் ஐய்யாவுக்கு தெரியாது......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////சைடு தொழில்: தினம் 101 பேருக்கு கமன்ட், லைக், ஓட்டு போடுதல்.//////

எங்க சிட்டிக்ஸ் அண்ணன் 301 பேருக்கு போடுறாரே...?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////ரோல் மாடல்: சி.பி. செமதில் டமார்//////

யோவ் ரோல் மாடல்னா என்ன பிலிம் ரோல்னு நெனச்சிட்டீங்களா..... சிபி மாதிரி மாசத்துக்கு 150 பதிவு யாராலேயும் போடமுடியுமா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////பிடித்தவர்கள்: (பாராட்டி மட்டும்) கமன்ட் & த.ம.வில் ஓட்டு போடுவோர்/////

ஓ அதுதான் எல்லாரும் தானாமானா ஒண்ணு, தானாமானா ரெண்டுன்னு பம்முறாங்கிறாங்களா......!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////எதிரிகள்: (அ)நியாயமாக தன்னை விமர்சிக்கும் அனைவரும்.////

அக்கிரமம்.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////பொழுதுபோக்கு: பதிவு போடவே நேரமில்லை. இது வேறயா?/////

அப்போ பதிவு போடுறது பொழுதுபோக்கு இல்லையா....? என்னமோ போங்கய்யா.......!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////பலம்: 6 முதல் 60 வரை(குறிப்பாக குடும்ப பெண்கள்) நித்தம் 3,000+ பேர் இவர் பதிவை 'படிப்பது',//////

யோவ் குடும்ப பெண்கள் படிக்கிறதுல என்னய்யா பிரச்சனை.....? அவங்கள்லாம் அண்ணனோட ரெகுலர் வாசகிகள்........!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////பலவீனம்: பிரபல கூகிள் ப்ளஸ்ஸர்கள் ஓட்டினால் பம்முவது. இளம் பதிவர்கள் கலாய்த்தால் மட்டும் கொதித்து பதில் சொல்வது. /////

அப்பாடா நானும் இளம்பதிவர்தான்யா..... கன்பர்ம்...!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////நீண்டகால சாதனை: பிரபல திரட்டியில் அனைவரையும் ஓரம் கட்டி மாதக் கணக்கில் சிம்மாசனத்தில் இருப்பது,/////

வடை கொடுத்தாங்களா....?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////சமீபத்திய சாதனை: முதல் இடத்திற்கு ஆபத்து வராமல் இருக்க/////

யாருக்குய்யா இப்படி டீ ஆத்துறீங்க....?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////தனிச்சிறப்பு: டி.வி. நிகழ்ச்சிகள் பற்றி தொடர்ந்து எழுதுதல்,/////

அதுவும் குறிப்பா குஜய் டீவில வர்ர டூப்பர் சிங்கர்....! ராஜ்டீவில நைட்டு என்னென்னமோ போடுறான் அதையெல்லாம் கொஞ்சம் கவர் பண்ணா இளம் வாசகர்கள் நிறைய கெடைப்பாங்க....!

வவ்வால் said...

இந்த பதிவு என்ன மொழியில் எழுதி இருக்கு? நான் எழுத்தறிவில்லாதவன், யாராவது படிச்சு சொன்னா தெரின்சுப்பேன்,

வந்ததுக்கு ஒரு மொய்!

(கொல வெறிக்கூட்டமா இருக்கிற எடத்தில சூதனமா பேசிட்டு ஓடிப்பொயிடனும்)

CS. Mohan Kumar said...
This comment has been removed by the author.
goundamanifans said...


//பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////சைடு தொழில்: தினம் 101 பேருக்கு கமன்ட், லைக், ஓட்டு போடுதல்.//////

எங்க சிட்டிக்ஸ் அண்ணன் 301 பேருக்கு போடுறாரே...?//

'உங்களில் யார் அடுத்த சிபி சித்தப்பு-20121' போட்டி அனல் பறக்கிறது. வெல்வாரா சிட்டிக்ஸ்???? சக பதிவர்கள், வாசகர்கள் அனைவரும் சீட்டின் நுனியில் அமர்ந்து முடிவுகளை எதிர்பார்க்கிறார்கள்.

goundamanifans said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////ரோல் மாடல்: சி.பி. செமதில் டமார்//////

யோவ் ரோல் மாடல்னா என்ன பிலிம் ரோல்னு நெனச்சிட்டீங்களா..... சிபி மாதிரி மாசத்துக்கு 150 பதிவு யாராலேயும் போடமுடியுமா?//

சிபி சித்தப்பு VS ஹோம் ரிட்டன் VS சிட்டிக்ஸ். மும்முனைப்போட்டி???

goundamanifans said...


//பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////பிடித்தவர்கள்: (பாராட்டி மட்டும்) கமன்ட் & த.ம.வில் ஓட்டு போடுவோர்/////

ஓ அதுதான் எல்லாரும் தானாமானா ஒண்ணு, தானாமானா ரெண்டுன்னு பம்முறாங்கிறாங்களா......!//

ஆமாம்.

goundamanifans said...


//பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////பொழுதுபோக்கு: பதிவு போடவே நேரமில்லை. இது வேறயா?/////

அப்போ பதிவு போடுறது பொழுதுபோக்கு இல்லையா....? என்னமோ போங்கய்யா.......!//

தெரியாத மாதிரி கேக்குற உம்மை கொமட்டைல குத்தனும்.

goundamanifans said...


//பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////பலம்: 6 முதல் 60 வரை(குறிப்பாக குடும்ப பெண்கள்) நித்தம் 3,000+ பேர் இவர் பதிவை 'படிப்பது',//////

யோவ் குடும்ப பெண்கள் படிக்கிறதுல என்னய்யா பிரச்சனை.....? அவங்கள்லாம் அண்ணனோட ரெகுலர் வாசகிகள்........!//

என்னைய்யா இது அநியாயம் ... டேபிள் பங்கர், சிட்டிக்காட்டான், மெட்ராஸ் ஓட்டல்காரர் பதிவைக்கூடத்தான் எல்லா நாட்டு பெண்களும் ரெகுலரா படிக்கறாங்க.

goundamanifans said...


//பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////நீண்டகால சாதனை: பிரபல திரட்டியில் அனைவரையும் ஓரம் கட்டி மாதக் கணக்கில் சிம்மாசனத்தில் இருப்பது,/////

வடை கொடுத்தாங்களா....?//

'2011 நெம்பர் ஒன்' லேபிள் தரப்படும். வலைப்பூவில் ஒட்டிக்கொள்ளலாம்.

goundamanifans said...


பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////சமீபத்திய சாதனை: முதல் இடத்திற்கு ஆபத்து வராமல் இருக்க/////

யாருக்குய்யா இப்படி டீ ஆத்துறீங்க....?//

அதானே. அபிஷ்டுக்களே.

goundamanifans said...


//வவ்வால் said...
இந்த பதிவு என்ன மொழியில் எழுதி இருக்கு? நான் எழுத்தறிவில்லாதவன், யாராவது படிச்சு சொன்னா தெரின்சுப்பேன்,

வந்ததுக்கு ஒரு மொய்!

(கொல வெறிக்கூட்டமா இருக்கிற எடத்தில சூதனமா பேசிட்டு ஓடிப்பொயிடனும்)//

பேட்மேன் பறந்துட்டார்.

Anonymous said...

மோகன்குமார் சார், சீரியஸ் ஆக வேண்டாம். ஏகப்பட்ட அடி வாங்கியும் சங்க தலைவர் மேதகு.சிட்டிக்ஸ் சிம்ப்ளி ராக்ஸ். அவர மாதிரி டேக் இட் ஈஸி!!

Philosophy Prabhakaran said...

// உங்கள் புரிதலுக்கு நன்றி. ஜாக்கி, உணா தானா அண்ணே, கேபிள்,சிபி போன்றோர் யாருடைய ப்ளாகுக்கும் போய் அனேகமா கமன்ட் போடுறது கிடையாது; அவங்க ப்ளாகில் என்ன தினசரி கூட்டம் இல்லாமலா இருக்கு ? //

முடிஞ்சா எங்க அண்ணனை டச்சு பண்ணிப்பாரு ரக பின்னூட்டம்... அதுசரி, இதனால் தாங்கள் கூற விரும்புவது என்னவோ ?

// உங்களை என்னிக்கு கோச்சுகிட்டேன். உங்களை மாதிரி ஜாலியா ரசிக்கும்படி களாய்ப்பவர் ரொம்ப குறைவு அண்ணே //

பன்னிக்குட்டி... அண்ணன் எப்படி பம்மிட்டார் பார்த்தீங்களா... இதுல இருந்து என்ன தெரியுது... நீங்க யூத்து இல்லை... கீக்கீக்கீக்கீ....

// கமண்டு போடறது பல நேரம் நாம யாருக்கு பன்றோமோ அவங்க தான் பண்றாங்க (மொய்க்கு மொய்) ஆனா பதிவை படிப்பது வெறும் ப்ளாகர் மட்டும் இல்லீங்க அண்ணே. சாதாரண ஆட்கள் நிறைய பேர் படிக்கிறாங்க.. எல்லா ப்ளாகும் ! //

மோகன் ஜி... நான் இந்தமாதிரி தரை டிக்கெட் ரேஞ்சு புள்ளிவிவரங்களை விரும்புவதில்லை... இருந்தாலும் நீங்கள் தொடர்ந்து நச்சரிப்பதால் சொல்கிறேன்...

நீங்கள் தொடர்ந்து குறிப்பிட்ட சில பதிவர்களுடைய பதிவுகளில் கமெண்ட்டும் ஓட்டும் போட்டு வருகிறீர்கள் ----> அவர்களும் பதில் மரியாதை கருதி உங்களுடைய பதிவில் வாக்களிக்கிறார்கள் ----> வாக்கு எண்ணிக்கை ஏழு கடந்து முகப்பு பக்கத்துக்கு வருகிறது ----> அது முகப்புப்பக்கத்துக்கு வருவதால் இன்னும் சிலர் படிக்கிறார்கள் ----> போதாத குறைக்கு "அருமை", "பகிர்வுக்கு நன்றி" வகையறா பின்னூட்டங்கள் தொடர்ந்து விழுந்து தமிழ்மண முகப்பு பக்கத்தின் வலது பக்கத்தில் பதிவு இடம்பெறுகிறது ----> அங்கிருந்தும் வாசகர்கள் வருகிறார்கள் ----> ஒருமுறை வரும் வாசகரை அப்படியே அள்ளியெடுத்து கொஞ்சி டெயிலி வந்து பின்னூட்டமும் ஓட்டு போடுங்கன்னு நீங்க பாலிஷ்டா சொல்ற மெயில் சாம்பிள் ஒன்னு நம்மகிட்ட இருக்கு :) ---> அப்புறம் சில சமயங்களில் பதிவு மகுடத்தில் ஏறி, (அதாவது உங்களுடைய மொய்க்கு மொய் தோழர்களால் ஏற்றப்பட்டு) இன்னும் கொஞ்சம் வாசகர்களை கொண்டு வந்து சேர்க்கிறது...

இதான் உங்க சைக்கிள்... உங்களுடைய மேற்படி பயணத்தில் எங்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை... ஆனால் நீங்களே உங்களை பிரபல பதிவர்களோடு ஒப்பிட்டுக்கொள்ளும்போது தான் உறுத்துகிறது...

உண்மையாகவே உங்களுக்கு உங்களுடைய எழுத்தின் மீதும் வாசகர்கள் மீதும் நம்பிக்கை இருந்தால் ஒரு வருடம் முழுவதும் யாருடைய பதிவுகளுக்கும் சென்று வாக்கு, பின்னூட்டமளிக்காமல், மெயில், போன்கால் கேன்வாஸ் செய்யாமல் இருந்து காட்டுங்களேன்... இதை உங்களுக்கு ஒரு சவாலாக முன்வைக்கிறேன்...

வவ்வால் said...

//பேட்மேன் பறந்துட்டார். //

ஓய் மக்கா நீங்க கலாய்க்கிற இடத்தில நான் பேசிண்டு இருக்க முடியுமா, நாம் என்னிக்குமே தனி ஆவர்த்தனம் தேன்,அதுவும் அப்பாடக்கர்களை தான் கலாய்ப்பேன்.

'“குழவி இறப்பினும், ஊண்தடி பிறப்பினும்
ஆள் அன்று, என்று வாளின் தப்பார்
தொடர்படு ஞமளிஇன் இடர்ப்படுத்து இரீஇய
கேணல் கேளீர் "

சங்கத்தமிழன் :-))

CS. Mohan Kumar said...

தம்பி நீ என்னை பத்தி ஒரு சைக்கிள் சொல்லிருக்கே நானும் ஒரு பதிவரை பத்தி ஒரு சைக்கிள் சொல்றேன்பா :

தொடர்ந்து பதிவெழுதும் ஆளுங்க மேலே மட்டும் தொடர்ந்து கல் விடுறது (ஜாக்கி, உண்மை தமிழன், சிபி, இப்போ நான்)..இவங்களில் யாராவது எழுதுறதை குறைச்சிட்டா (இப்போ உண்மை தமிழன்) அவங்க மேலே அப்புறம் கல் எரியறதை நிறுத்திடுறது - இந்த பதிவுக்காக இதை சொல்லலை தம்பி; ஜஸ்ட் வெயிட். (ஆமா முடிஞ்சா நீங்க தினம் ஒரு பதிவு எழுதலாமே இதை ஒரு சவாலா தான் சொல்றேன்; இப்படிப்பட்டவர்கள் மீது மட்டும் தொடர்ந்து கல் எறிவது " அவன் ஏன் லைம்ளைட்டிலே இருக்கான்" என்கிற பொறாமை உணர்ச்சியை தான் தெளிவா காட்டுது )

எந்த விழாவிலும் சிறு துரும்பும் கிள்ளி போடாதது; மேநேஜரியல் ஸ்கில்ஸ் என்பதை விட்டு தள்ளுவோம் ; கூட இருப்பவர்களுடன் சேர்ந்து சிறு பொறுப்பை கூட எடுத்து செய்ய முடியாத பொறுப்பற்ற தன்மை

ஆனால் அந்த விழாக்களுக்கு போயி இந்து இடுக்கு சந்து பொந்தில் தெரியும் குறைகளை மட்டும் பார்த்து எழுதுறது (நல்லதில் கூட கெட்டதை மட்டுமே எப்பவும் பார்க்கும் நற்குணம்)

நல்ல விஷயம் செய்ய தான் மனம் இருக்காதே ஒழிய வெறுப்பேற்ற, ஒழிக்க எந்த அளவு வேணா இறங்குவது

ஒரு வாரம் ஒரு பதிவருக்கு ஒரு திரட்டியில் தொடர்ந்து ஓட்டு போடுங்க என எல்லா ஊர், பல மாநிலம் பல நாடுகளில் வசிப்போரிடம் போன் மூலமும் மெயில் மூலமும் கெஞ்சியது; தானும் கள்ள ஓட்டு குத்தி தள்ளியது. இவ்வளவு செய்தும் தான் நினைத்தது நடக்காமல் மூக்குடைபட்டது

இது நடந்து இரு வாரம் கழித்து " ஏம்ப்பா அவர் வீட்டுல எழுவு விழுந்துடுச்சே யாரும் விசாரிக்கலியா?" என பிளஸ் விட்டது (இதை படித்த உடன் எனக்கு தோன்றிய உணர்வை இங்கே எழுத முடியாது; அன்றைக்கும் எழுதாமல் போனதன் காரணம் - வெறுப்புலே பேசுறான் என பேசக்கூடும் )

நண்பர்களுக்கே சில விஷயம் தப்பு என தெரிந்தாலும் " யாரும் அவன் கிட்டே பேச முடியாது; அவன் அப்படித்தான் ; மாற்றமுடியாது " என சொல்லும்படி நடப்பது (இந்த டயலாக் எங்கேயோ கேட்ட மாதிரி இருக்குதே)

மற்றவர்களை தொடர்ந்து hurt செய்து, தான் மட்டும் எப்போதும் சிரித்து கொண்டிருப்பது (இதுக்கு இங்க்லீஷில் என்னவோ ஒரு பேர் சொல்லுவாங்க)

இன்னும் நிறைய சொல்லலாம் ஊருக்கு கிளம்புறேன்;

இங்கே சில முறை நான் விவாதம் செய்ய செய்ய "பலரும் டேக் இட் ஈசி " என்றனர்; ஆனால் தொடர்ந்து சீண்டப்படுவதால் தான் இங்கு அப்படி பேசினேன்; எப்பவாவது முழுசா என்ன நடந்தது என எல்லாருக்கும் தெரியனும் தானே !

வீடு சுரேஷ் சில நாள் முன் கிண்டல் செய்து போட்ட பதிவோ, சிவா சில வாரம் முன் இங்கேயே போட்ட பதிவோ( சாப்பாட்டு கடை - இட்லி ) என்னை கோபப்படுதலை; காரணம்
அவர்கள் மனதில் கலாய்ப்பதை தவிர வேறு எண்ணம் இல்லை என தெரியும். இந்த பதிவும் என்னை கோபப்படுதலை; ஆனால் தொடர்ந்து கல் எறிந்தால் அதன் பின்னணியில் இருக்கும் மனோபாவம் என்ன என மற்றவருக்கும் தெரியட்டும்.

உன்னை பற்றிய ஒரு தனிப்பட்ட பயம் என் மனதில் இருந்து கொண்டே இருக்கு (என்னை கிண்டல் செய்வதை பொருத்தல்ல)இங்கு எழுதாத விஷயங்களும் நிறைய உண்டு; இவ்வளவு இருந்தும் இன்னும் நேரில் பார்க்கையில் நார்மலா தான் பேசுவோம் !

Anonymous said...


மோகன் குமார் said...

//எந்த விழாவிலும் சிறு துரும்பும் கிள்ளி போடாதது; மேநேஜரியல் ஸ்கில்ஸ் என்பதை விட்டு தள்ளுவோம் ; கூட இருப்பவர்களுடன் சேர்ந்து சிறு பொறுப்பை கூட எடுத்து செய்ய முடியாத பொறுப்பற்ற தன்மை //

மோகன் சார். இது முற்றிலும் தவறு. சென்னை பதிவர் சந்திப்பு மற்றும் யூத் பதிவர் சந்திப்பு உள்ளிட்ட நிகழ்வுகளில் பிரபாகரன் தனக்கான பங்கை(பொருளாதார ரீதியாகவும் சேர்த்து) ஆற்றியே இருக்கிறார். அதை எப்போதும் வெளிக்காட்டி கொண்டதில்லை. அது அவரது கேரக்டரும் இல்லை.

பிரபல பதிவர்களில் அதிகம் கல்லடி வாங்கிய நபரே பிரபாகரன்தான் என்பதே உண்மை. தாங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை என நினைக்கிறேன். அது ஒரு பொற்காலம். :))

Anonymous said...


//ஆனால் அந்த விழாக்களுக்கு போயி இந்து இடுக்கு சந்து பொந்தில் தெரியும் குறைகளை மட்டும் பார்த்து எழுதுறது (நல்லதில் கூட கெட்டதை மட்டுமே எப்பவும் பார்க்கும் நற்குணம்)//

ஒரு நிகழ்வில் நடக்கும் தவறுகளை சுட்டிக்காட்டுவது பிறரது தனி உரிமை. பதிவில் மட்டும் அரசியல்வாதியை விமர்சிப்பது, திரைவிமர்சனம் போடும்போது நல்ல படமே என்றாலும் குறைகளை சொல்வது மட்டும் சரியென்றால் இதை எப்படி தவறு என்று கூறுகிறீர்கள்.

ஆதாரத்துடன் விழாக்களில் நடந்த தவறுகளை சொன்னால் என்ன தவறு???? கருத்து சுதந்திரம் வேண்டும் என்று நாம் பொங்கும் அதே வேளையில் தவறுகளை சுட்டிக்காட்டவே கூடாது என்பது உச்சகட்ட சர்வாதிகாரம்.

Philosophy Prabhakaran said...

வாரே வா... மோகன் குமார் அண்ணே... இப்பதான் பார்முக்கு வர்றீங்க... வழக்கம் போல நல்லவன் வேஷம் போடாம எப்பவுமே இப்படி உண்மையைப் பேசி பழகினா நல்லாயிருக்கும்...

அதுசரி, நான் உங்கள் மீது வைக்கும் எந்த குற்றச்சாட்டுக்கும் பதில் சொல்லாமல் நீங்கள் என் மீது பதில் கல் வீசுகிறீர்களே... ஒய் பாஸ் ???

// " அவன் ஏன் லைம்ளைட்டிலே இருக்கான்" என்கிற பொறாமை உணர்ச்சியை தான் தெளிவா காட்டுது //

மறுபடி மறுபடி நீங்க ஒரு பிரபலம் என்ற நினைப்பிலேயே பேசிக்கொண்டிருக்கிறீர்கள்... கீக்கீக்கீக்கீ....

// எந்த விழாவிலும் சிறு துரும்பும் கிள்ளி போடாதது; மேநேஜரியல் ஸ்கில்ஸ் என்பதை விட்டு தள்ளுவோம் ; கூட இருப்பவர்களுடன் சேர்ந்து சிறு பொறுப்பை கூட எடுத்து செய்ய முடியாத பொறுப்பற்ற தன்மை //

மோகன் குமார்... நீங்க சொல்ற மாதிரி நான் ஒரு மயிரையும் புடுங்கலைன்னே வச்சிக்கோங்க... அதுகூட பரவாயில்லை... ஆனா சில பேரு தேவையில்லாத மயிரையெல்லாம் புடுங்குறாங்களே... அதுக்கு என்ன பண்றது...

மற்றபடி உங்களுடைய குற்றச்சாட்டுகளுக்கெல்லாம் நான் சொல்லும் ஒரே பதில் "நான் அப்படித்தான்"... நான் உங்களைப் போல நல்லவன் சீன் போடுவதில்லை... நான் கெட்டவன் தான்... அதனால உங்களுக்கென்ன ???

உங்களைப் பத்தி சொல்றதுக்கும் என்கிட்ட இன்னும் நிறைய இருக்கு அண்ணே :) வாங்க வெளாடுவோம்...

Anonymous said...

எங்கள் பார்வையில் இவர் பிரபலம், அவர் சுமார் என்று பிரித்து பார்ப்பதில்லை. தயவு செய்து சிலரை மட்டும் 'பிரபலம்' என்று தூக்கி வைக்க வேண்டாம். ஒவ்வொருவருக்கும் தனித்திறமை உண்டு. ஓசையே இல்லாமல் ஓட்டுகள், கமன்ட் வாங்காமல் நீங்கள் சொல்பவர்களை விட பல வாசகர்களால் வாசிக்கப்படும் இளைஞர்களின் வலைப்பூ குறித்து எனக்கு நன்றாக தெரியும்.

பதிவே எழுதாமல் பட்டையை கிளப்பும் சிட்டிக்ஸ் பெரியப்பா, நக்கீரன் மாமாவை விட பதிவுலகில் பிரபலங்கள் இருக்க முடியுமா? மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள் :)))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

பெரியவங்க மல்லுக்கட்டுறாங்க, நாம நம்ம வேலைய பாப்போம்.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////goundamanifans said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////சைடு தொழில்: தினம் 101 பேருக்கு கமன்ட், லைக், ஓட்டு போடுதல்.//////

எங்க சிட்டிக்ஸ் அண்ணன் 301 பேருக்கு போடுறாரே...?//

'உங்களில் யார் அடுத்த சிபி சித்தப்பு-20121' போட்டி அனல் பறக்கிறது. வெல்வாரா சிட்டிக்ஸ்???? சக பதிவர்கள், வாசகர்கள் அனைவரும் சீட்டின் நுனியில் அமர்ந்து முடிவுகளை எதிர்பார்க்கிறார்கள்.///////

அவங்க எல்லாரையும் சீட்டு அடில உக்கார சொல்லுங்க, ஏன்னா எங்க பட்டிக்ஸ்தான் கெலிக்க போறாரு.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////goundamanifans said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////ரோல் மாடல்: சி.பி. செமதில் டமார்//////

யோவ் ரோல் மாடல்னா என்ன பிலிம் ரோல்னு நெனச்சிட்டீங்களா..... சிபி மாதிரி மாசத்துக்கு 150 பதிவு யாராலேயும் போடமுடியுமா?//

சிபி சித்தப்பு VS ஹோம் ரிட்டன் VS சிட்டிக்ஸ். மும்முனைப்போட்டி???//////////

நோ... நோ.... இத நான் ஒத்துக்கவே மாட்டேன்..... சிபி மாசம் 150 பதிவு போடுறார்னா எங்க சிட்டிக்ஸ் டெய்லி 300 கமெண்ட்டு போடுறார்யா.....
ஹோம் ரிட்டன் டெய்லி 3000+ ஹிட்ஸ் அடிக்கிறார்னா சிட்டிக்ஸ் டெய்லி 5000+ லைக்ஸ் போடுறாருய்யா....
கூகிள் ப்ளஸ்ல இதுவரைக்கும் வந்த எல்லா தமிழ் ப்ளஸ் & கமெண்ட்ஸ்க்கும் லைக் போட்டிருக்காரு எங்க சிட்டிக்ஸ்..... எங்க உங்க ஆள அதுல பாதியாவது போட சொல்லுங்க பார்ப்போம்? மரியாதையா எங்க சிட்டிக்ஸ் அண்ணன அனானிமசா ச்சீ... யுனானிமசா தேர்ந்தெடுத்துடுங்க...... இல்லேன்னா அப்புறம் சைனீஸ், ஜப்பானீஸ், கொரியன் ப்ளஸ்க்கு எல்லாம் அண்ணன் லைக் போட ஆரம்பிச்சிடுவாரு.... ஜாக்க்க்க்கிரத....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////பன்னிக்குட்டி... அண்ணன் எப்படி பம்மிட்டார் பார்த்தீங்களா... இதுல இருந்து என்ன தெரியுது... நீங்க யூத்து இல்லை... கீக்கீக்கீக்கீ....////////

ஆங்..... இன்னும் கொஞ்சநாள்ல எல்லாரும் ஒரே குட்டைதான்.....

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

[[அறிவன்: உங்கள் புரிதலுக்கு நன்றி. ஜாக்கி, உணா தானா அண்ணே, கேபிள்,சிபி போன்றோர் யாருடைய ப்ளாகுக்கும் போய் அனேகமா கமன்ட் போடுறது கிடையாது; அவங்க ப்ளாகில் என்ன தினசரி கூட்டம் இல்லாமலா இருக்கு ? ]]

இப்போதைய பெரும்பாலான பதிவர்கள் -90 சதம்- தங்களுக்கு என்று ஒரு களம் அமைத்துக் கொண்டு, சினிமா, விமர்சனம், வெறும் கலாய்ப்பு- என்று எழுதுகிறார்கள். அவர்களுக்கு குறிப்பிட்ட அளவு வாசகர் வட்டம் எப்போதும் இருக்கும்.

பரந்து பட்ட வாசகர்கள் எப்போதாவது வந்தாலும், அவர்கள் தரமான எழுத்தைத் தவறாது ஊக்குவித்தே வருகிறார்கள்.அவ்வித பதிவுகளும் பதிவர்களும் பெருமளவு குறைவே.

நிறங்கள் செல்வநாயகி, (எய்ட்ஸ் நோயாளிகள் தொடர்பில்) தன்னார்வ சேவை புரியும் மங்கை, சுந்தர மூர்த்தி, சுந்தர வடிவேல், தங்கமணி என்று தரமான எழுத்துக்கள் பதிவுலகில் 2005-2008 காலகட்டத்தில் பெருமளவு இருந்தது.பதிவுலகின் சமீப கால சப்த,அரட்டைப் பதிவுகளில் அவர்கள் எல்லாம் காணாமல் போனார்கள்.

இன்றைய பதிவுலகம் குமுதம்,ஆனந்த விகடன் தரத்தில்,நோக்கத்தில்தான் பெரும்பாலும் செல்கிறது. இதில் கூட்டம் வருகிறது என்று பெருமிதப் படுவதை என்னவென்று சொல்வது என்று தெரியவில்லை.

[[மறுபடி சொல்றேன்: கமண்டு போடறது பல நேரம் நாம யாருக்கு பன்றோமோ அவங்க தான் பண்றாங்க (மொய்க்கு மொய்) ஆனா பதிவை படிப்பது வெறும் ப்ளாகர் மட்டும் இல்லீங்க அண்ணே. சாதாரண ஆட்கள் நிறைய பேர் படிக்கிறாங்க.. எல்லா ப்ளாகும் ! ]]

மேற்சொன்னதுதான் இதற்கும் விளக்கம். தரமான எழுத்து இருக்கும்நிலையில் மொய்க்கு மொய் எல்லாம் தேவையில்லை. எடுத்துக்காட்டுக்கு இந்தப் பதிவைப் பார்க்கவும். இந்தப் பதிவின் எழுத்தைக் காட்டிலும் பின்னூட்டத்திற்குச் சாரமிட்ட ஜாலி ஜம்பர் மற்றும் முத்துஸ்வாமி இருவரிம் பதிவுகளுக்கு நான் ஒருமுறை கூட சென்றதில்லை என்றே நினைக்கிறேன். அதற்குப் பின் நெடுங்காலத்திற்கு அவர்கள் இருவரும் என் பதிவில் தென்படவில்லை.

இன்றும் என்னுடைய பதிவில் ரீப்பீட் பின்னூட்டங்கள் வருவது 90 சதம் இல்லை.

நானும் மொய் விவகாரத்தில் எல்லாம் நம்பிக்கை அற்றவன். ஒருபதிவு என்னை இழுத்து நிறுத்தும் போதுதான் அதில் கருத்திடுவேன். மேம்போக்காக பலரும் சூடான இடுகைகள்,வாசகர் ஓட்டில் வரும் பதிவுகள் தமிழ்மணத்தின் முகப்பில் வருவதால் அவற்றைப் பார்வையிடுவது உண்டு.

உங்களது பதிவுகள் ஏதாவது காரணத்தால் தமிழ்மண முகப்பில் வராது போனால் அப்போது உங்களது பல கருத்துக்கள் தவறு என்று நீங்கள் உணரலாம்.

[[என் ப்ளாகில் கமண்டுக்கு பதில் சொல்றதில்லைன்னு சொல்றீங்க: சிலர் தன்னை பத்தி விமர்சித்து கமன்ட் வந்தால் மாடரேஷன் வச்சு வெளியிடுரதே இல்ல ; அட்லீஸ்ட் நான் வெளியிடுறேன். சிலவற்றுக்கு பதில் சொல்றேன்; சில சென்சிடிவ் விஷயத்துக்கு பதில் சொல்றதில்லை]]

இது என்னைச் சொன்னதா என்று தெரியவில்லை; என்னுடைய இத்தனை வருட எழுத்தில் மூன்று அல்லது நான்கு முறை மட்டுமே நான் பின்னூட்டங்களை வெளியிட்டதில்லை. அவையும் திராவிடக் குஞ்சுகள் என்னுடைய குடும்பத்தை இழுத்து எழுதிய கீழ்த்தர ஏச்சுகள். எனது எழுத்தையோ கருத்தையோ விமர்சித்த அனைவரையும் நான் அனுமதித்திருக்கிறேன்.ஆனால் நீங்கள் அப்படி நடந்து கொள்ளவில்லை.எதிர்க் கருத்து அல்லது நீங்கள் எழுதியதைத் தவறு என்று விமர்சிப்பதை நீங்கள் பிரசுரப்பதில்லை.

தொடர்கிறது....

✨முருகு தமிழ் அறிவன்✨ said...


[[உங்களோட பல வருஷத்துக்கு முன்னாடி சின்ன சண்டை வந்த நியாபகம். இணையத்தில் இப்படி சண்டை வந்தா அப்புறம் அவங்களை முழுக்க வெறுக்க ஆரம்பிச்சிடுறோம் (இது எனக்கும் பொருந்தும்; ஆனா நான் நிச்சயம் உங்களை வெறுக்களை ]]

இதுவும் நீங்கள் கூறும் பொய் என்று என்னால் நிறுவ முடியும்; நாங்கள் பழகி வந்த பதிவுலகில் குடுமிப்பிடி சண்டை அளவுக்கு கருத்து மோதல்கள் வருவதுண்டு. ஆனால் அதற்கடுத்து ஒருநல்ல பதிவு படிக்க நேர்ந்தால் உடனே அனைத்தையும் மறந்து கருத்திடும் நண்பர்கள் பலர் உண்டு. எனக்கும் வவ்வாலுக்கும், யோகாசனம் பற்றி தெகா மற்றும் நான் எழுதிய ஒரு பதிவில் கடும் விவாதம் நடந்தது.
அதற்குப் பிறகும் என்னுடையதில் நல்லது என்று அவர் கருதும் பதிவுகளிலும்,அவருடைய நல்ல பதிவுகளை நான் பார்க்க நேர்ந்தாலும் கருத்துப் பரிமாற்றம் செய்து கொண்டுதான் இருக்கிறோம்.

ஆனால் உங்கள் பதிவில் வானம்பாடிகளுக்கு எதிரான கருத்து அளித்ததற்காக(அந்தக் கருத்தை தனிமனித நிந்தனைக்கு அருகிலும் கொண்டு செல்ல முடியாது!!!) அதற்குப் பிறகு உங்களது வேறு பதிவுகளில் நான் இட்ட கருத்துக்கள் எவற்றிற்கும் நீங்கள் பதில் அளிப்பது மட்டுமல்ல,ஒரு சம்பிரதாய நன்றி கூடத் தெரிவித்ததில்லை.இதுவே வானம்பாடிகள் பதிவிலும் நடந்தது.முதலில் நானும் இதைக் கவனிக்கவில்லை;எதேச்சையாக இதை உணர்ந்த நான், பின்னர் உங்கள் பதிவுகளைப் படிப்பதையோ கருத்திடுவதையோ முற்றிலுமாக நிறுத்தினேன்.....

முகமறியாத பதிவுலகில் சிலர் நாம் எழுதும் கருத்துக்களுக்காக நம்மீது எவராவது வன்மம் கொள்ள இயலுமெனில் அது எவ்வளவு ஆபத்தான வாழ்வியல் சூழல்?!

ஆனால் இது தமிழ்ப் பதிவுலகில் மிக அதிகம் !!!!!!

வவ்வால் said...

அறிவன்,

//எனக்கும் வவ்வாலுக்கும், யோகாசனம் பற்றி தெகா மற்றும் நான் எழுதிய ஒரு பதிவில் கடும் விவாதம் நடந்தது.
அதற்குப் பிறகும் என்னுடையதில் நல்லது என்று அவர் கருதும் //

அண்ணே உங்க காலை காட்டுங்க ,அடேங்கப்பா ...எந்த காலத்தில நடந்த பிராணயம், யோகா உரையாடலை இன்னமும் நியாபகம் வச்சு சொல்லுறிங்க, எனக்கு அதெல்லாம் நினைவேயில்லை.

ஹி..ஹி நான் எல்லார் கூடவும் விவாதம் செய்வேன், ஆனால் தனிப்பட்ட முறையில் எடுத்துக்கொள்ளவே மாட்டேன். பேச்சு பேச்சோடத்தான்னு நினைப்பேன்.

கடவுள் இருக்குன்னு ஒருத்தர் ,சொல்றார், இல்லைனு சொல்கிறேன் இங்கே பிரச்சினை கடவுள் தானே ஒழிய பேசுற ரெண்டுப்பேருக்கும் இடையே இல்லை.

ஆனால் நிறைய பேர் என்ன நினைச்சுக்கிறாங்க, நாம சொல்ற கருத்துக்கு எதிரா பேசுறவனோட எப்படி நட்பா இருக்க முடியும்னு சண்டைக்கு கிளம்பி, பகைமை பாராட்ட ஆரம்பிச்சுடுறாங்க.

ராஜாஜியும் -பெரியாரும் எதிர் துருவ கொள்கையாளர்கள் நண்பர்களா இல்லையா :-))

----------
இப்போ எல்லாம் பதிவுகள் மூலம் புகழ் தேடலாம் என ஒரு கொள்கை வகுத்து செயல்படுறாங்க, நமக்கு பொழுது போக்கு. அதனால்
தான் "conflict of interest" எளிதில் உருவாகிடுது என நினைக்கிறேன்.

நீங்க பதிவை கருத்து களமாக பார்க்கிறிங்க, அதெல்லாம் இப்போ புதுசா உருவான பிரபல ஆசையுள்ள பதிவர்களுக்கு புரியாது.

பிரபல பதிவர்னு எவனாது தனக்கு தானே சொல்லிக்கிட்டா அங்கிருந்து ஓடி வந்திடனும் ,இல்லைனா இம்சை தான் :-))

முட்டாப்பையன் said...

. இணையத்தில் இப்படி சண்டை வந்தா அப்புறம் அவங்களை முழுக்க வெறுக்க ஆரம்பிச்சிடுறோம் (இது எனக்கும் பொருந்தும்; ஆனா நான் நிச்சயம் உங்களை வெறுக்களை ) ////////////////

மிஸ்டர் மோகன்குமார்.
உங்களை நாங்கள் முன்பே விமர்சித்தோம்.நீங்கள் திருந்தவில்லை.திருந்தபோவதும் இல்லை.அதே பதிவில் வவ்வாளையும் விமர்சித்தோம்.மூன்று நாட்கள்.பிறகு நாங்கள் வருண்,ஜெயதேவ்டோஸ்,மார்க்க பந்துக்கள் பதிவில் கருத்து என்னும் லந்து இணைந்தே பண்ணோம்.அவர்களும் அடிச்சிக்கிட்டவங்க இப்படி ஒட்டிக்கிடீன்களே என்று கேட்டார்கள்.விளக்கம் கொடுத்தோம்.வவ்வாலை விமர்சித்தது அவரின் எரிச்சல் ஊட்டும் கம்மேன்ட்க்காக.அதனால் நல்ல கருத்துக்கள் எடுபடாமல் போவது.அந்த வருத்தத்தில்தான் அவருக்கு மருந்து கொடுக்கவேண்டியதாயிற்று.அவரும் புரிந்துகொண்டார்.
நீங்கள இணைய நட்பை வெறும் வோட்,கமெண்ட் ஆகத்தான் பர்க்குரீர்கள்.மற்றவர்கள் இனிய இணைய நட்பை
மதித்து போற்றுகிறார்கள்.அந்த தெளிவு உங்களிடம் இல்லை.இருந்தால் இப்படிப்பட்ட பதில் வராது.எதையுமே ஜாலியாக எடுத்துக்கொண்டால் இங்கு அனைத்தும் சுகமே.:)))))))))

அப்பார்ட்பிரம் தட்.

கொஞ்சம் நீங்க எழுதுன பதிவுகள் அனைத்தையும் மீண்டும் படித்துப்பாருங்கள்.உங்களுக்கே அவற்றின் தரம் தெரியும்.
எப்போது நீங்கள் மகுடம்,வோட்,கமெண்ட் என்று ஆசைப்பட ஆரம்பித்துவிடீர்களோ அப்போதே நீங்கள் கடைகொடிக்கு சென்ருவிடீர்கள்.என்ன சொள்ளவறீங்க உங்க பேட்டி,பதிவுகள்ல இருந்து?
தொல்லை காட்சி,பாடல் விமர்சனம் இப்படி.இதுஎல்லாம் என்ன?குப்பையிலும் படு குப்பை.
கண்டிப்பா உங்களுக்கு கோபம் வரும்.உங்கள் எழுத்தை இப்படி சொன்னால்.ஆனால் உண்மை சார் இது.
இன்னும் நீங்கள் யோசிக்கவில்லை.ஆனால் விளக்கம் கொடுத்து பூசி மொழுவ பார்க்குரீர்கள்.

நீங்கள்,சிபி,மார்க்கபந்துக்கள் எல்லாம் இனையத்தின் சாபகேடுகள்.
இந்த கமெண்ட் உங்களுக்கு நல்ல ஊக்கத்தை கொடுத்தால் நாங்கள் நிச்சயம் மகிழ்ச்சி அடைவோம்.
நல்ல புரிதல்களை தங்களுக்கு கொடுக்கும் என்று நம்புகிறோம்.யோசிக்க ஆரம்பியுங்கள்.

உங்கள் மதிப்பு தானாக ஏறும்.நன்றி.நரம இருந்தால் பிறகு வருகிறோம்.

முட்டாப்பையன் said...

ஆங்.
மோகன்குமார்.
தங்களின் இணைய சாதனை ஒண்ணு இருக்கு.அத அவசியம் சொல்லணும்.
இந்த பயணக்கட்டுரை எழுதி இந்தியாவில் உள்ள வழிகாட்டிகள் வயத்துல அடிச்சீங்க பாருங்க
அங்க நிக்குறீங்க சார் நீங்க.
:)))))))))

CS. Mohan Kumar said...

தம்பி: ரெண்டு நாள் பாண்டி வாசம் இப்போ தான் வந்தேன் இணையம் பக்கம் வரலை (நல்லாருக்குப்பா இணையம் இல்லா பெருவாழ்வு)

நான் நாலு பேருக்கு ஓட்டு போடுறேன்; கமன்ட் போடுறேன் ; பதிலுக்கு அவங்க ஓட்டு போடுறாங்க அதுனால தமிழ் மணத்தில் பிரபலமாகிறேன் ; அப்படி தான் நிறைய பேர் வீடுதிரும்பல் வாசிக்க வர்றாங்க என்கிறாய் அதுக்கு தானே நான் பதில் சொல்லாம தப்பிச்சேன் என கேட்கிரே?

"நான் நாலு பேருக்கு ஓட்டு போடுறேன்; கமன்ட் போடுறேன் " என்பதில் எந்த பொய்யும் இல்லை; இது உலகுக்கே தெரிந்த விஷயம் யார், யாருக்கு காமன்ட் போடுறாங்க ; யாருக்கு ஓட்டு போடுறாங்க என எல்லாரும் பாக்கலாம் ; " நாங்க அப்படி செஞ்சதே இல்லை சார்" என அட்லீஸ்ட் 90% பதிவர்களால் சொல்லமுடியாது. (இந்த பதிவுக்கு யார் ஓட்டு போட்டுருக்காங்க என பார்; உன் நண்பர்கள் தான்; வெளி ஆள் ஒருத்தர் கூட போடலை; இப்படி குழு குழுவா ஓட்டு போடும் அசிங்கம் தான் தமிழ் மணத்தில் நடக்குது)

ஆனா இப்படி ஓட்டு போட்டு முதல் பக்கத்தில் வருவதால் தான் நிறைய பேர் வீடுதிரும்பல் படிக்கிறாங்க என்பதை ஏத்துக்கு முடியாது ; சிபி மாதிரி புள்ளி விவரம் தர்ரானே என திட்டாமல் கேட்கவும் ; வேணும்னா உங்க நாலு பேரில் (செந்தில், அஞ்சா சிங்கம், சிவா) யாருக்கு வேண்ணா என் ப்ளாக் பாஸ்வர்ட் தர்றேன் ; நான் சொல்வது சரியா என நீங்கள் கூகிள் ஸ்டேட்ஸ் போயி பார்க்கலாம்

தினம் படிக்கும் மூவாயிரம் பேரில் தமிழ் மணம் மூலம் வர்றவங்க ஆயிரத்துக்கும் சற்று குறைவு; ஐநூறு கிட்டே இன்ட்லி மூலம் வந்தால் கூட, குறைந்தது 1500 பேர் தினம் நேரா தான் வர்றாங்க (டேஷ் போர்ட்; ரீடர் அல்லது வேறு எப்படியோ) அதாவது 50% நேரா வர்றவங்க தான் (கேபிளுக்கு அது 90% இருக்கும் ; மீதம் 10% தான் திரட்டியை அவர் depend செய்றார்)

தமிழ் மண ரேங்க்கிங் முழுக்க தவறானது. அங்கு ஓட்டுக்கும், பின்னூட்ட எண்களுக்கும் அதிக முக்கியத்துவம் தருது. ஓட்டுக்கும், பின்னூட்ட எண்களுக்கும் எந்த முக்கியத்துவமும் தராத அலேக்சாவை பாப்போமா? அதையாவது ஏத்துப்பியா?

எனக்கு தெரிந்த வரை வீடுதிரும்பளுக்கு முன் அலேச்காவில் இருக்கும் இரு பதிவர்கள் கேபிள் மற்றும் சிபி மட்டுமே ; இதில் சிபி யின் வெற்றி ரகசியம் காப்பி பேஸ்ட் பற்றி எல்லாருக்கும் தெரியும்; கேபிள் தான் நிஜ பாப்புலர் பதிவர் (சிவா: வார்த்தை பிரயோகத்துக்கு மன்னிச்சூ ) ஆனா இங்கு பேசப்பட்ட "அவங்களோடு நீ கம்பேர் பண்ணிக்குரீயே ஹா ஹா " என நீ சொல்ற எல்லாரும் வீடுதிரும்பளுக்கு அப்புறம் வர்றாங்க ; வேண்ணா அலெக்சா போய் பாரு; இந்த லிஸ்ட்டில் எனக்கு தெரியாத, அறிமுகம் இல்லா பதிவர்கள் சிலர் வீடுதிரும்பளுக்கு மேலே இருக்கலாம்; தெரியலை காரணம் அங்கு ஒவ்வொரு ப்ளாக் பேர் போட்டு தான் அதன் ரேன்க் பாக்கணும் ; ஆனால் எனக்கு தெரிந்த, அறிமுகமான மற்றவர்கள் இல்லை.

இதை நான் இதுவரை எங்கும் எழுதலை; சொல்லலை இப்போ நீயெல்லாம் பிரபல பதிவர்னு நினைசுக்குரே என்றதால் தான் சொல்ல வேண்டியதா ஆச்சு

கேபிள் ஒன்னு சொல்லுவார்: ஒரு பதிவர் இன்னொரு பதிவரை சாமானியமா பாராட்ட மாட்டான்; பெரிய ஆளுன்னு ஒத்துக்க மாட்டான்; என்னை மாதிரி இன்னொரு ஆளுயா அவன்; என் அளவுக்கு அவன் நல்லா எழுதுறானா என்ன என்று தான் நினைப்பான்;

ஆனா ப்ளாகே எழுதாம பதிவு மட்டும் படிக்குறவன் ஆயிரக்கணக்கில் இருக்கான் அவன் ஜட்ஜ்மேன்ட்டு தான் எப்பவும் கரக்ட்டு என !

இன்னொன்னும் சொல்லணும்: உன் டேஸ்ட் , புரிதல், அறிவு இவை - ஒரு லெவலுக்கு மேலே இருந்தா உனக்கு அதுக்கு கீழே இருக்கவங்களை மதிக்க முடியாது. எப்படி ராஜேஷ் குமார் படிக்க ஒரு கூட்டம் , அடுத்த லேயரில் சுஜாதா படிக்க ஒரு கூட்டம், அதுக்கு மேலே உள்ள லேயரில் லா. சா. ராமாமிர்தம் படிக்க ஒரு கூட்டம் இருக்கோ அப்படி தான் இது.

(எழுத்தாளர் என்பது உதாரணத்துக்கு சொன்னது நாம எழுத்தாளர் இல்லை என நல்லா தெரியும் )

உன் டேஸ்ட் லா. சா. ரா அளவு இருந்தா அடுத்த உள்ள மற்ற லேயரை கிண்டலா பார்ப்பது இயல்பு தான்.

ஆனா அடுத்த லெவலில் படிக்கவும் ஒரு கூட்டம் இருக்கு இல்லியா? அப்படி தான். என் ப்ளாக் படிப்பவர்கள் என் அளவு அல்லது அதுக்கு கீழ் அறிவும், ரசனையும் உள்ளவர்கள்; இவங்களே நிறைய இருக்காங்க; என் கெப்பாசிட்டி அவ்ளோ தான்.

அலெக்சா என்பதும் சரி கிடையாது. எழுத்து குவாளிட்டி தான் முக்கியம் என்றால் , இங்கு அலேக்சாவில் வீடுதிரும்பளுக்கு பின் இருக்கும் ஏராள பதிவர்கள் தரமான் எழுத்தில் எனக்கு முன் இருப்பார்கள் ; தெரியும் !

(தொடரும்)

CS. Mohan Kumar said...

நல்லவனா தொடர்ந்து வேஷம் போட முடியாது; பல வருஷம் அப்படி வேஷம் போட்டா அப்புறம் கொஞ்சமாவது நல்லவன் ஆகிடுவாங்க

இணையத்தில் நம்ம வீக்னெஸ் காட்ட கூடாது ; ஏன்னா இன்னிக்கு நண்பர்களா இருக்கவங்க நாளைக்கு எதிரி ஆவாங்க; அப்போ அவங்களுக்கு தெரிஞ்ச அந்த வீக்னேச்சை வச்சு தன் பழைய நண்பனை கண்ணில் விரல் விட்டு ஆட்டுவாங்க இது மாதிரி ஆங்காங்கு சில கேஸ் பார்த்தால் நான் இணையத்தில் என் வீக்னெஸ் காட்டாமல் சற்று எச்சரிக்கையாய் இருக்கலாம்.

உன் வயசில் நானும் பல சண்டை போட்டிருக்கேன் ; உன் 25 வயசில் இணையம் இருக்கு; அங்கு நீ சண்டை போடுறே; எனது 25 வயசில் இணையம் பிரபலம் இல்லை; நடு ரோட்டில் கூட சண்டை போட்டிருக்கோம். இப்போ 42 வயசு ஆச்சு இன்னும் 25 வயசுல இரு ந்த மாத்ரி அப்படியே இருக்க முடியுமா ? கல்யாணம் ஆன பின் கொஞ்சம் கொஞ்சமா நல்லதை நோக்கி நகர்வது இயல்பு; அதிலும் ஒரு பெண் குழந்தை பிறந்து அவள் ஒரு கட்டத்துக்கு மேல் வளரும் போது இன்னும் நிறைய கெட்ட பழக்கம் உதிருது எனக்கு அப்படி தான் நடந்தது.

நான் சிவா அளவு நல்லவன் கிடையாது பீர் அடிப்பேன் ஆனா கடந்த பதினஞ்சு வருஷத்தில் 15 முறை தான் பீர் சாப்பிட்டுருப்பேன் ; கடைசியா சாப்பிட்டு ஒன்னரை வருஷத்து மேல் ஆச்சு ; ஹாட் குடிக்க கூடாதுன்னு இல்லை; ரெண்டே முறை சாப்பிட்டு ரெண்டு முறையும் வாந்தி + மட்டை ; அதான் விட்டாச்சு ; போதுமா ?

இது இந்த பதிவில் எனது கடைசி பின்னூ ட்டம் ; நீ இனி என்ன வேண்ணா சொல்லிக்கோ. உன் நண்பர்களும் தனி பதிவோ அல்லது வேறு என்ன எழுதனுமோ எழுதட்டும்; இனி முடிந்த வரை நீங்க கலாய்க்கும் போது உள்ளே எட்டி பாக்காம (பதில் சொல்ல !) முயற்சி செய்றேன்

முட்டாப்பையன் said...


இது இந்த பதிவில் எனது கடைசி பின்னூ ட்டம் ;////////////
சார் சார் .என்ன சார் இப்படி சொல்லிடீங்க.உங்க கிட்ட இன்னும் எதிர்பார்க்குறோம் சார்.ப்ளீஸ் சார்.

இன்னும் நிறைய அறியாத தவல்கள் கொடுங்க சார்.பிளீச்.!

முட்டாப்பையன் said...

இதோ சேட்டை வெந்நீர் பதிவு போட்டிருக்கார்.மோகன் சார்.
நீங்க கொஞ்சம் வெந்நீர் பத்தி அறிந்த தகவல்,அறியாத தகவல் (மொண்ணை அறிவாமனையோ?)கொடுங்க சார்.பிளிச்.

முட்டாப்பையன் said...

தம்பி: ரெண்டு நாள் பாண்டி வாசம் இப்போ தான் வந்தேன் இணையம் பக்கம் வரலை (நல்லாருக்குப்பா இணையம் இல்லா பெருவாழ்வு) ///////////////////

அப்படியே மெயின்டைன் பண்ணுங்களேன்.மின் குப்பை குறையும்.
:)))))))

வவ்வால் said...

முட்டாப்பையர்,

//அதே பதிவில் வவ்வாளையும் விமர்சித்தோம்.மூன்று நாட்கள்.பிறகு நாங்கள் வருண்,ஜெயதேவ்டோஸ்,மார்க்க பந்துக்கள் பதிவில் கருத்து என்னும் லந்து இணைந்தே பண்ணோம்.அவர்களும் அடிச்சிக்கிட்டவங்க இப்படி ஒட்டிக்கிடீன்களே என்று கேட்டார்கள்.விளக்கம் கொடுத்தோம்.வவ்வாலை விமர்சித்தது அவரின் எரிச்சல் ஊட்டும் கம்மேன்ட்க்காக.அதனால் நல்ல கருத்துக்கள் எடுபடாமல் போவது.அந்த வருத்தத்தில்தான் அவருக்கு மருந்து கொடுக்கவேண்டியதாயிற்று.அவரும் புரிந்துகொண்டார்.//

என்னமோ குத்தம் செய்தவன் திருந்திட்டான் போல இல்ல சொல்லிக்கீரிங்க, நீங்க எல்லாம் மொபைல் நெட் பயன்படுத்தி இருந்தால் தான் சமீபகாலமாக தமிழ்நாட்டில் நெட் நிலையாக கனெக்ட் ஆகாத துயரம் தெரிய.

அப்புறம் என்னோட மோதல்கள் எல்லாம் கருத்து ரீதியாக தான்,ஆனால் என் மேல வீணா குற்றம் சுமத்தினால் அவர்களை புறக்கணிப்பேன், அது எனோட உரிமை தானே.

நீங்களோ ,யாரோ என்னை திட்டினாலும் எனக்கு மன வருத்தம் வருவது இல்லை, அதே சமயம் ஒத்த கருத்தினை சொன்னால் வந்து பாராட்டவும் செய்வேன்.

ஏன் எனில் நான் எதிரிப்போல யாரையும் இது வரை நினைப்பதே இல்லை.

நான் எப்போதுமே சாதாரணமாக தான் ஆரம்பிப்பேன், அவங்களா வாய கொடுத்தா தான் கிண்டுவேன்.

நான் இப்பவும் ஒரே மாதிரி தான் பின்னூட்டம் போடுறேன், என்ன அவங்க தான் நம்ம பின்னூட்டத்தினை வெளியிடுவதில்லை, எல்லாம் பொட்டைகள் , ஆட்சென்ஸ் விளம்பரத்துக்கும்,புகழுக்கும், பதிவு எழுதுறாங்க.

எனக்கு இப்பவும்,எப்பவும் ஒன்று தான் மனசில பட்டதை சொல்லிட்டு போவேன், இணையத்திலும் மனசில் பட்டதை சொல்ல இடம் இல்லை எனில் கழிப்பறை சுவற்றில் தான் கிறுக்கி வைக்கணும் :-))

--------

அல்ப ஆசை புடித்தவர்களோட எல்லாம் என்னை ஒப்பிடாதிங்க, தமிழ்மணம் என்ற திரட்டியில் இணைக்கவில்லை என்றால் கொசு கூட இங்கே சிலரை மோர்ந்து பாக்காது, அவனெல்லாம் ஊர் நாயம் பேசினால் நான் உலக நாயம் பேசிடுவேன்.

நம்ம பொழப்பே நாய் படாத பொழப்பா இருக்கு, இதில பெருமைக்கு அலையுறவங்கள கவனிக்க எல்லாம் நேரம் இல்லைங்கோ :-))

Philosophy Prabhakaran said...

மோகன் குமார்... நீங்கள் சொல்லும் புள்ளிவிவரங்களில் ஓரளவுக்கு உண்மை இருக்கிறது... ஒப்புக்கொள்கிறேன்...

ஆனால் நான் கூறிய குற்றச்சாட்டுகளும் உண்மையே... நீங்கள் 42 வயதில் செய்துக்கொண்டிருக்கும் ஹிட்ஸ், ஓட்டு சில்லாவளித்தனமெல்லாம் நான் 23 வயதிலேயே செய்தாயிற்று... இப்போது நினைத்துப் பார்த்தால் வேடிக்கையாக இருக்கிறது... இப்போது உங்களுடன் மல்லுக்கட்டிக்கொண்டிருப்பது கூட சில வருடங்கள் கழித்து வேடிக்கையாக இருக்கலாம்...

ஒரு 25 வயது இளைஞன் மெச்சூரிட்டி இல்லாமல் இருப்பது பெரிய விஷயமில்லை... ஆனால் 42 வயது ஆளுக்கு அதைவிட மெச்சூரிட்டி குறைவாக இருப்பது எள்ளலை வரவழைக்கிறது...

அடுத்ததாக நல்லவன் - கெட்டவன் விவாதத்திற்கு வருகிறேன்...

நீங்க பீர் மட்டும் தான் அடிப்பீங்க, ஹாட் அடிச்சா மட்டையாகிடுவீங்க என்பது உங்களுடைய தனிப்பட்ட விஷயம்... அதற்குள் நான் தலையிடவே விரும்பவில்லை... என்னுடைய வார்த்தை ஏதோ ஒன்றை நீங்கள் தவறாக புரிந்துக்கொண்டுள்ளீர்கள் என்று நினைக்கிறேன்... உங்களுடைய பிரச்சனையே அதுதானே :)

தவிர, தண்ணியடிக்கிறவன்லாம் கெட்டவன் என்று நினைப்பதே ஒரு சாடிஸ மனப்பான்மை...

நான் நல்லவர்களை நம்புகிறேன்... கெட்டவர்களையும் நம்புகிறேன்... ஆனால் நல்லவர்கள் மாதிரி நடிக்கும் கெட்டவர்களை மட்டும்தான் வெறுக்கிறேன்...

மறுபடியும் பர்சனலாக எதுவும் அர்த்தம் செய்துக்கொள்ள வேண்டாம்... நானே உதாரணம் சொல்கிறேன்... கொஞ்ச மாதத்துக்கு முன்பு வரை சிபி அதிகம் காப்பி பேஸ்ட் பதிவுகள் இல்லாமல் ஜோக்ஸ், சினிமா மட்டும்தான் எழுதிக்கொண்டிருந்தார்... இப்போது உங்கள் மீது வைக்கப்படும் விமர்சனங்கள் அவர் மீதும் வைக்கப்பட்டன... ஆனால் அவர் கோபப்படவில்லை... ஆமாம் அப்படித்தான் என்று துப்பியத்தை துடைத்துவிட்டு போய்விட்டார்... அந்த Genuinity... அதைத்தான் நான் நம்புறேன்...

இன்னொரு உதாரணம், உங்களை நான் பதிவர் சந்திப்பு முடிந்ததிலிருந்தே விமர்சித்துக்கொண்டும், எள்ளல் செய்துக்கொண்டும் இருக்கிறேன்... எங்கேயும் அனானியாக வந்து உங்களை சீண்டியதில்லை... எல்லாமே பொதுவில் வெளிப்படையாகவே நடந்தது... தமிழ்மண குழு ஓட்டு விவகாரத்தில் கூட ஆமா, நான்தான் பண்றேன் இப்போ என்னன்னு உங்களுடைய வலைப்பூவில் கமென்ட் போட்டிருப்பேன்... நீங்கள் பதிலுக்கு என்னிடம் கடுமையாக நடந்துக்கொண்டதில்லை... ஆனால் அத்தனை வன்மத்தையும் மனதில் வைத்துக்கொண்டு தற்போது, நான் பதிவர் சந்திப்பில் துரும்பைக் கூட நகர்த்திப்போடவில்லை, மற்றவர்களை ஒழிக்கிறேன், ஹர்ட் செய்கிறேன், குறைகளை மட்டுமே சொல்கிறேன் என்று வெளிப்படுத்தியிருக்கிறீர்கள்... உங்கள் குற்றச்சாட்டுகள் எதையும் நான் மறுக்கவில்லை... ஆனால் இவ்வளவு நாள், என்னைப்பற்றி இவ்வளவு விஷயங்களை மனதில் வைத்துக்கொண்டு என்னிடம் போலியாகத் தானே பழகினீர்கள்... அதான் அந்த போலித்தனத்தை தான் வெறுக்கிறேன்...

அதுதான் மரியாதை, நாகரிகம், so and so என்று சொன்னால் அந்த கேடுகெட்ட மரியாதை எனக்கு தேவையே இல்லை...

என்னுடையது சாம்பிள் மட்டும்தான்... என்னைப்போல நிறைய பேரை நீங்கள் ஏமாற்றிக்கொண்டிருக்கிறீர்கள் என்பது உங்களுக்கே தெரியும்... நீங்கள் எல்லோருக்கும் நல்லவராக இருக்க விரும்புகிறீர்கள்... அது தர்க்க ரீதியாக வேலைக்கு ஆகாது... உண்மைகள் ஒருநாள் வெளிவந்து விடும்...

புரிதலுக்கு நன்றி.

CS. Mohan Kumar said...

//ஆனால் இவ்வளவு நாள், என்னைப்பற்றி இவ்வளவு விஷயங்களை மனதில் வைத்துக்கொண்டு என்னிடம் போலியாகத் தானே பழகினீர்கள்... அதான் அந்த போலித்தனத்தை தான் வெறுக்கிறேன்...//

தம்பி மறுபடி மறுபடி வரவைக்கிறே

என்ன பண்ணிருக்கணும் நான் ? உன்னோட பேசுறதை நிருத்திருக்கனுமா ? நீ தொடர்ந்து மேலே சொன்னவை செய்ய ஆரம்பித்த பின் உன்னிடம் பேசுவதை பெருமளவு குறைத்து கொண்டேன். எங்காவது பாக்கும் போது ஹலோ சொல்றதோட சரி. எப்பவாவது நீ கமன்ட் போட்டா அதுக்கு பதில் சொல்வேன்; வெட்டி ப்ளாகர் மாதிரி பொது தளத்தில் ஏதாவது சில வரி பிரச்சனை இல்லாத விஷயத்தில் பேசிருப்போம். அவ்ளோ தான். அதுக்காக உன்னோட டூ விட்டுட்டு உறவை கட் பண்ணிருக்கனுமா ? அது மிக எக்ஸ்ட்ரீம் ஸ்டேப். அதுவும் இணைய உலகில் ஒரு சிலரிடம் மட்டும் செஞ்சுருக்கேன். நீ என்னை சீண்ட செய்ததில் என்னை பெரிதும் காயப்படுத்தியது எழவு என்று போட்டது தான் மற்றவை நீ ஜாலிக்கு செய்தது என புரிந்தது. தமிழ் மணம் ஓட்டு விஷயத்தில் நீ ஏன் அப்படி செய்றே ; ஏன் மேலே என்ன கோபம் என புரியாமலும், வெளி உலகிற்கு விழா குழு என அறியப்பட்ட நீயும் நானும் மறைமுகமா அடித்து கொள்வது கிண்டலா பார்க்கப்படும் என்று தான் நினைதேன்; அதனால் தான் முதல் சில நாள் டென்ஷன் ஆனேன் சிவா விடம் இதையே தான் சொன்னேன். சிவா " அவன் ஜாலிக்கு தான் பண்றான் வேற மோடிவ் இல்லை " என்றதும் பின் பேசாம இருந்துட்டேன்

நல்லவன் என நடிக்கிறேன் ; இமேஜ் மெயின்டெயின் பண்றேன் என்றதால் மட்டும் தான் தண்ணியடிக்கும் உதாரணம் தந்தேன்.. எனக்கும் கெட்ட பழக்கம் இருக்கு. அதை மிக சில நேரம் பொதுவெளியில் ஒப்பு கொண்டுள்ளேன் என்பதற்கு தான் சொன்னேன். மத்தபடி தண்ணி அடிக்கிற நல்லவங்களும் உண்டு தண்ணியே அடிக்காத வக்கிர புத்தி காரங்களும் உண்டு இது எனக்கும் தெரியும்

எல்லாரையும் திருப்தி படுத்த நினைத்தது (இப்பவும் உனக்கு இவ்ளோ விளக்கம் சொல்வது) நிச்சயம் என் தப்பு தான். நான் இப்படி தான் இருக்கேன். மாற்றிக்க முயற்சி பண்றேன். இணையத்தில் எல்லாரும் நம்மை புரிஞ்சுக்க முடியாது

இங்கு நல்லவன் வேஷம் போட்டு நான் எதுவும் அச்சீவ் செய்ய போறதில்லை ;

மற்றபடி நீ சீண்டிய [போதெல்லாம் பேசாமல் இருக்க காரணம் பயம் தான். ஆனானப்பட்ட லக்கி அதிஷா ஜாக்கி போன்றோரே உன்னை கண்டால் சண்டை வச்சுக்காம விலகி போறாங்க இல்லையா? அப்படி தான் நானும் பேசாம இருந்தேன் (தம்பி நான் அவங்களோட கம்பேர் பண்ணலை- அவங்களை பாத்து ஒரு சில விஷயம் கத்துக்குறேன்)

இதுவாவது என்னோட கடைசி பின்னூட்டமா இருக்கட்டும் :)

goundamanifans said...

ஏற்கனவே பயோ டேட்டாவில் சொன்னதுதான் மீண்டும் நடக்கிறது. இந்த அளவு கோபத்தை பெரிய தலைகளிடம் காட்டாமல் எங்களைப்போன்ற சிறுவர்களிடம்(!) மட்டுமே காட்டுகிறீர்கள்.

- உங்களைப்பற்றி பேசினால் எதற்கு தேவையின்றி கேபிள், உ.த., ஜாக்கி ஆகியோரை உதாரணம் காட்ட வேண்டும். உங்களை விட ஏகப்பட்ட விமர்சனங்களை சந்தித்த அவர்கள் ஒரு முறை கூட பிற பதிவரை கம்பேர் செய்து விவாதம் செய்தது இல்லை. அவர்களுக்கு இணையான பாப்புலாரிட்டி உங்களுக்கு உள்ளது என்று மற்றவர்கள் சொல்ல வேண்டுமே ஒழிய 'நானும் ஜெயிலுக்கு போறேன். நானும் ரவுடிதான்' என்று ஜீப்பி ஏறி ஏன் அமர்கிறீர்கள்? பில்டிங் ஸ்ட்ராங்(பதிவுகளின் எண்ணிக்கை). பேஸ்மென்ட் வீக்(தரம்) ????

goundamanifans said...

//நான் சிவா அளவு நல்லவன் கிடையாது பீர் அடிப்பேன் ஆனா கடந்த பதினஞ்சு வருஷத்தில் 15 முறை தான் பீர் சாப்பிட்டுருப்பேன் //

சிவா? அந்த வெளக்கெண்ணை தண்ணி அடிக்கலன்னா யோக்கியனா? அதை ஊர் சொல்லணும்.

goundamanifans said...

// ஆனானப்பட்ட லக்கி அதிஷா ஜாக்கி போன்றோரே உன்னை கண்டால் சண்டை வச்சுக்காம விலகி போறாங்க இல்லையா? அப்படி தான் நானும் பேசாம இருந்தேன் (தம்பி நான் அவங்களோட கம்பேர் பண்ணலை- அவங்களை பாத்து ஒரு சில விஷயம் கத்துக்குறேன்) //

மீண்டும் மீண்டும் எதற்கு தேவையின்றி பிற பதிவர்களை மேற்கோள் காட்டுகிறீர்கள்?????????

அது என்ன ஆனானப்பட்ட????? இணைய உலகில் இவர்கள் மட்டுமே அதி அற்புத எழுத்தாளர்கள் போன்ற ஒரு தோற்ற மயக்கத்தை ஏற்படுத்துவதை நிறுத்துங்கள். தி சோ கால்ட் 'ஆனானப்பட்ட' லக்கி, அதிஷா போன்றவர்கள்(உடனே அவர்களை தொடர்பு கொண்டு 'இங்க பாருங்க உங்களைப்பத்தி எழுதி இருக்காங்க' என்று அவர்களுக்கு லிங்க் கொடுக்க வேண்டாம். பாவம்.) உங்களை விட பல நூறு முறை பதிவுலகில் கடும் விவாதங்களில் பங்கேற்று இருக்கிறார்கள். அவர்களின் எழுத்து மீதும் எங்களுக்கு என்றும் மரியாதை உண்டு. ஒரு சில கருத்து வேறுபாடுகளில் சட்டை கிழிந்து இருக்கலாம். நிரந்தர வன்மம் என்றும் இல்லை என்பதே உண்மை. ஏனெனில் நாங்களோ அவர்களோ ஸ்கூல் பசங்க இல்லை.

அவர்கள் விலகிப்போகவில்லை. அவர்களும் எம்முடன் சிலமுறை கருத்து மோதல்களில் பங்கேற்கவே செய்தனர். நேரில் பார்த்தாலும் பரஸ்பரம் 'ஹாய் ஹலோ' போடுகிறோம். இனியும் அப்படித்தான். அதையும் கெடுப்பதுபோல் ஆகிவிடும் உங்கள் கமன்ட். கருத்து மோதல் வேறு, தனிப்பட்ட நட்பு வேறு எனும் மெச்சூரிட்டி உங்களுக்கு வர வேண்டும்.

goundamanifans said...


'ஆமாம் நான் ஹிட்ஸ், ரேங்கிங் காக மட்டுமே தினம் எழுதறேன் என்று ஒப்புக்கொள்ளும் சிபியின் நேர்மை உங்களிடம் இருக்க வாய்ப்புகள் மிகக்குறைவு. எத்தனை முறை கேட்டாலும் எனது ஆயகலை 66 வகை பதிவுகள்(டி.வி, சினிமா, பயணம், பேட்டிகள்...........) எல்லாம் மக்களை சென்று அடையவே நித்தம் ஒரு பதிவு போடுகிறேன் என்பது 100% உண்மை அல்ல என்பது உங்கள் மனசாட்சிக்கும், நீங்கள் வணங்கும் இறைவனுக்கும் நன்றாக தெரியும் என்பதே உண்மை. உண்மை. உண்மை.

சனி,ஞாயிறு இரண்டு நாட்கள் உங்கள் தளத்தில் போடாததற்கு சேர்த்து இங்கு ஏகப்பட்ட பதிவுகளை போட்டு தள்ளி விட்டீர்கள். அதாவது சச்சின் 2 ரன்னில் அவுட் ஆனாலும் பௌலிங் போட்டு 5 விக்கெட் எடுப்பது போல. :))))))

இதுவே எங்கள் கடைசி கமன்ட். முன்பு சொன்னது போல சீரியஸ் ஆக எடுத்து கொள்ள வேண்டாம். இறைவனின் திருவிளையாடலில் இதுவும் ஒன்று. சியர்ஸ்!!!!!!!

goundamanifans said...


என்னதான் நீங்கள் பல்டி அடித்தாலும் இந்த ஆண்டு சிறந்த பதிவர் சிட்டிகாட்டான் மட்டுமே. அவர்கள் மீதுதான் உங்களுக்கு பொறாமையே தவிர உங்கள் மீது மற்றவர்கள் பொறாமை ப்படுகிறார்கள் என்று சொல்வது மிகப்பெரிய காமடி. உங்கள் குறும்பிற்கு அளவே இல்லையா அய்யா..............சாமி.....................!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

Unknown said...

மேனேஜரியல் ஸ்கில்ஸ்:

அது நம்ம டமாருக்கு அதிகமாகவே இருப்பதாக உணர்கிறேன் பெரிய ஆளுகளுக்கு சலாம் வைப்பதையும் சின்ன பசங்களிடம் பன்ச் டயலாக் பேசுவதையும் சரியாக செய்கிறார்

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

[[பிரபல பதிவர்னு எவனாது தனக்கு தானே சொல்லிக்கிட்டா அங்கிருந்து ஓடி வந்திடனும் ,இல்லைனா இம்சை தான் :-))]]

:))

வவ்ஸ்,இந்த மாதிரி வடிவேலு ப்ராண்ட் ஸ்டேட்மெண்ட் ரொம்பப் பிடிச்சிருக்கு.

:))