Thursday, November 29, 2012

காடுதிரும்பல் - பாகன் டமார் பயோடேட்டா                                                                 

பெயர்: அய்யா GOD

தொழில்: இந்தியாவை வல்லரசாக்க டெய்லி பதிவு போடுதல். சில சமயம் 2,3.

சைடு தொழில்: தினம் 101 பேருக்கு கமன்ட், லைக், ஓட்டு போடுதல்.

ரோல் மாடல்: சி.பி. செமதில் டமார்

பிடித்தவர்கள்: (பாராட்டி மட்டும்) கமன்ட் & த.ம.வில் ஓட்டு போடுவோர்

எதிரிகள்: (அ)நியாயமாக தன்னை விமர்சிக்கும் அனைவரும்.

பொழுதுபோக்கு: பதிவு போடவே நேரமில்லை. இது வேறயா?


பலம்: 6 முதல் 60 வரை(குறிப்பாக குடும்ப பெண்கள்) நித்தம் 3,000+ பேர் இவர் பதிவை 'படிப்பது',

பலவீனம்: பிரபல கூகிள் ப்ளஸ்ஸர்கள் ஓட்டினால் பம்முவது.  இளம் பதிவர்கள் கலாய்த்தால் மட்டும் கொதித்து பதில் சொல்வது. 

நீண்டகால சாதனை: பிரபல திரட்டியில் அனைவரையும் ஓரம் கட்டி மாதக் கணக்கில் சிம்மாசனத்தில் இருப்பது, ஆண்டுக்கணக்கில் பயணக்கட்டுரை எனும் பெயரில் ஒவ்வொரு பதிவிலும் 100 போட்டோ, 30 வீடியோ போட்டது. 

சமீபத்திய சாதனை: முதல் இடத்திற்கு ஆபத்து வராமல் இருக்க அடிக்கடி சினிமா பதிவுகளை போட்டு தப்பிப்பது, மடிப்பாக்கம் துர்கா பவன் பதிவு, பயணக்கட்டுரையை ஒருவழியாக முடித்தது, வெள்ளிக்கிழமை பட முன்னோட்டம் போடுதல், பாடல் விமர்சனம்.

தனிச்சிறப்பு: டி.வி. நிகழ்ச்சிகள் பற்றி தொடர்ந்து எழுதுதல், விசேஷ தினங்களில் டி.வி.யில் என்ன பார்க்கலாம் என்று யோசனை சொல்லுதல், மறுநாள் அதுகுறித்த விமர்சனங்கள் போட்டு திகிலை கிளப்புதல், நாளுக்கு 40 ரூவாய் சம்பாதிக்கும் கூலித்தொழிலாளிகளை இம்சித்து பேட்டி எடுத்து அவர்கள் வருமானத்தை வறுத்து எடுத்தல்.

ஸ்பெஷல் சிறப்பு: சோகத்தில் ரோட்டோரம் நடந்து செல்லும் அப்பாவியை வலுக்கட்டாயமாக அழைத்து தன்னை பலவித ஸ்டில் எடுக்க சொல்லி வெறுப்பேற்றுவது.

மிகச்சிறப்பு: பதிவுலகில் இவரை தெரியாதவர்கள்  யாருமில்லை, இவருக்கு தெரியாதவர்களும் யாருமில்லை. இல்லை. இல்லையோ இல்லை.

முக்கிய சிறப்பு: பயணக்கட்டுரை மூலம் கூகிள் மேப்பின் இன்கமை காலி செய்தது. 'இனி எங்க டூர் போனாலும் உங்க பதிவை மேப்பா வச்சித்தான் போவோம்' என்று தென்கிழக்கு ரஷ்யா முதல் வடமேற்கு சிம்லா வரை உள்ள வாசகர்கள் பாராட்டுவது. 

வெற்றியின் ரகசியம்: பதிவு போடும்போது டைட்டிலின்  பின்பாதியில் அதிரடியாக வார்த்தைகள் வைத்து வாசகர்களை உள்ளே இழுப்பது. உதாரணம்: அரிய/அறியாத தகவல்கள், மறக்க முடியாத நினைவுகள், அசத்தல் படங்கள்.
     
நீண்ட கால எரிச்சல்: 'செம' எனும் வார்த்தையை தவிர்க்க முடியாமல் தவிப்பது. 

சமீபத்திய எரிச்சல்: ரேங்கிங்கில் தொடர்ந்து தனக்கு மிக அருகில் இருப்பவர்கள், குறுகிய காலத்தில் தன்னை விட பிரபலம் ஆகிவிட்ட சகலகலா சிட்டிக்காட்டான்(விரைவில் சிட்டியை போட்டுத்தள்ள ஆட்கள் தேவை விளம்பரம் தர முடிவு).

லட்சியம்: அடுத்த ஆண்டும் 365+(730?) பதிவுகள் போட்டு நெம்பர் ஒன் ஆகுதல்.


*******                                          ************************                  **************
      

Saturday, November 24, 2012

சிட்டிக்காட்டான் - சிரிப்பு மலர்                                                           

சகலகலா பதிவர் சிட்டிக்காட்டான் சிரிப்பு வெடிகளை கண்டு வகுறு குலுங்க சிரிக்கப்போகும் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்:

உஸ்மான் சாலையில்..

நக்கீரன்: யோவ்..அறிவு இல்ல? இவ்ளோ ஸ்பீடா வந்து மோதுற? என்னைய்யா வண்டி ஓட்டற நீ?

சிட்டி: ஸ்ப்லென்டருங்க.
...............................................  

டிங் டாங் பட்டி ஆலமரத்தடி...       

நாட்டாமை அஞ்சாசிங்கம் : எலேய் சிட்டிக்காட்டான் என்றா?

சிட்டி: 1 2 3 4 5 6 7 8........
..............................................

அவ்வையார் ஆரம்ப பாட சாலை LKG சேர்க்கை க்யூவில்.....

சிட்டி:  பசங்களோட LKG சீட்டுக்கு 1 லட்சம் கேக்கறாங்க பாவிங்க?

பிலாசபி:  ஆமாங்க. என் பையனை 2015 ல சேக்க ஒரு சீட் கேட்டேன். 5 லட்சம் கேக்கறாங்க லவ$%$த&*7

சிட்டி: எனக்கு தெரிஞ்ச பர்னிச்சர் கடைல பர்மா தேக்குல செஞ்ச சீட்டே 30,000 தானுங்க. இங்க ரொம்ப அநியாயமுங்க?

பிலாசபி: தக்%$%####.    
.........................................................

பிட்சா கார்னரில்..

சிட்டி: எக்ஸ் யூஸ் மீ. பிட்சா இங்கன எப்படி?

வீடு சுரேஸ்: 250, 300, 450. இப்படி நிறைய இருக்கு. உங்களுக்கு என்ன வேணும் சார்?

சிட்டி: நான் என்ன தீனிப்பண்டாரமா? ஒன்னே ஒன்னு குடுய்யா. 
.........................................................

திருவாரூர் கோயிலில்....

ஆரூர் முனா: யோவ்..எதுக்குய்யா துள்ளி குதிச்சி சாமி கும்புடற?

சிட்டி: அப்பதான் நான் சிறந்த பக்தி'மான்' ஆவேன்னு நித்தி சொன்னாப்ல.
.........................................................

இயக்குனர் சங்கர் அலுவலக வாசலில் சான்ஸ் கேட்டு காத்திருந்த 100 பேரை தாண்டி ஒரு வழியாக உள்ளே நுழைகிறார் சிட்டி.

சிட்டி: சங்கர் சார் வர சொன்னாப்டி. ஜெய்னு சொன்னா தெரியும்.

மேனேஜர் மதுமதி: அப்படியா? இருங்க அவருக்கு கால் பண்றேன்.

சில நொடிகளுக்கு பின்பு..

மேனேஜர் மதுமதி: இந்தாங்க போன். கொஞ்ச நேரம் லைன்ல இருங்க. சார் பேசப்போறார்.  

சிட்டி: சரிங்க.

மீண்டும் லைனில் பின் போய் நிற்கிறார்.
.............................................................

போலீஸ் ஸ்டேஷனில்...

சிட்டி: சார். நான் ஒரு சமூக வலைத்தள ஓனர். ஒரு சின்ன டவுட்டுங்க.

எஸ்.ஐ. கே.ஆர்.பி.: கேளுங்க.   

சிட்டி: முதல்ல நான் சொல்றதை கேளுங்க சார்.

எஸ்.ஐ. கே.ஆர்.பி: அதத்தான்யா சொன்னேன். டவுட்டை கேளுய்யா.

சிட்டி: சார். போன வாரம் நீங்க ஒருத்தர் கிட்ட 1,000 ரூவா கில்மா வாங்குனதை போட்டோ பிடிச்சி பேஸ்புக்ல போட்டேன். அதை டெலிட் பண்ண ட்ரை பண்றேன். ரொம்ப கஷ்டமா இருக்கும். அது வரைக்கும் எனக்கு சிறப்பு பாதுகாப்பு வேணும். அதுக்கு என்ன செய்யணும்?
.................................................................

புலன் விசாரணையில்....

கேப்டன் சீனு: இந்த கொலைய நேர்ல பாத்த சாட்சியை கொண்டு வாங்க.

சாட்சி சிட்டி ஆஜர்.

கேப்டன் சீனு: ம்ம்...உண்மைய சொல்லுங்க. இல்ல கடிச்சி துப்பிடுவேன்.

சிட்டி: ஐயோ சாமி. நான் கொலைய நேர்ல பாக்கலீங். சைடு வாக்கா இருந்து தானுங்க பாத்தேனுங்.
........................................................

Friday, November 9, 2012

பயோடேட்டா : விமர்சனம்....

பெயர்                                  :விமர்சனம்
இயற்பெயர்                        : கருத்து சுதந்திரம்
தலைவர்கள்                      : பிரபலங்கள், அரசியல்வாதிகள்
துணைத் தலைவர்கள்      : புரட்சி எழுத்தாளர்கள்
மேலும்
துணைத் தலைவர்கள்    : ஊடக தாதாக்கள்
வயது                                : இன்னும் வயதுக்கு வரவில்லை
தொழில்                         : பிடிக்கலைன்னா மட்டும் சொல்வது
பலம்                                 : சட்டம் தன் கடமையை செய்யும்
பலவீனம்                          : கட்டற்ற இணைய சுதந்திரம்
நீண்ட கால சாதனைகள் : மேடை போட்டு என்ன வேனுன்னாலும் பேசலாம்
சமீபத்திய சாதனைகள்   : கருத்து சொன்னா உள்ளே தள்ளுவது
நீண்ட கால எரிச்சல்         : ஜனநாயகம்
சமீபத்திய எரிச்சல்          : ஃபேஸ்புக், ட்விட்டர் மற்றும் பதிவுலகம்
மக்கள்                                : அரசியல் கட்சி மற்றும் ரசிகர் மன்ற உறுப்பினர்கள்
சொத்து மதிப்பு                :  பதவியில் இருப்பது அல்லது அவர்களின் உறவினர்களாக இருப்பது
நண்பர்கள்                          : ஸ்க்ரீன் சாட் எடுப்பவர்கள்
எதிரிகள்                            : பெயிலில் எடுப்பவர்கள்
ஆசை                                : எவனும் வாயை திறக்கக்கூடாது
நிராசை                              : இனி யாரையும் கட்டுப்படுத்த முடியாது
பாராட்டுக்குரியது            : ?????????????????
பயம்                                 : எல்லோரும் கேஜ்ரிவாலாக மாறிக்கொண்டிருப்பது
கோபம்                             : சவுக்கு.......
காணாமல் போனவை  : சகிப்புத்தன்மை
புதியவை                        :  ”கருத்து”ன்னு ஒரு இயக்கம் ஆரம்பித்த கார்த்தி சிதம்பரமே
                                            கருத்து சொன்ன ஒருத்தர் மேல வழக்கு போட்டது
கருத்து                             : கருத்து சுதந்திரம் என்ற பெயரில் தனி மனித தாக்குதல்களை
                                            செய்வதுதான் பிரச்சினைகளை உருவாக்குகிறது.
டிஸ்கி                              : சாரு, ஜெமோ போன்ற எழுத்து அரசியல்வாதிகளின்
                                           முகமூடி கிழிந்தது!