Thursday, April 12, 2012

வியாழக்கிழமை ஆறுச்சாமி, வெட்டியா ஆபீஸ்ல தூங்கிடு சாமி (32.13.2013)                                                                 
இந்த படத்தோட ஹைலைட்டே 'மன்மத லீலையை வென்றார் உண்டோ?' பாடல்தான். மூணு லட்சத்திற்கும் மேற்பட்ட கில்மா ஸ்டில்களை போட்ட என்னை பார்த்த பிறகும் 'மன்மத லீலையை வென்றார் உண்டோ?' என்று கேட்கும் அளவிற்கு இந்த பாகவதருக்கு என்ன ஆணவம் இருக்கும். அதனால்தான் 'உன் படங்கள் மேல் எனக்கு பாராமுகம்..' என்று பாடிவிட்டு தியேட்டருக்கு செல்லாமல் தவிர்க்க போகிறேன். தீபாவளிக்கு வர வேண்டிய படம். பாவம் தமிழ் புத்தாண்டுக்கு வருகிறது. ஈரோட்டில் ரிலீஸ் ஆகவில்லை. என்னை பகச்சி கிட்டா இதுதான் கதி!!


இதுவும் எப்போதோ எடுத்த படம்தான். ஹனி தடவிய மூன் போல இருக்கும் ஹன்சிகாவை ஹனிமூன் கொண்டாடும் தம்பதிகள் அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம். ஸ்டாலின் சன் (உதயநிதி) தானம் செய்த பணத்தில் சந்தானம் காமடியில் வெளுத்து வாங்கி இருப்பார் என்பதில் சந்தேகமில்லை. அவர் பேசிய வசனங்கள் அனைத்தையும் என் பதிவில் போடப்போகிறேன் என்பதை கேள்விப்பட்ட உதயநிதி "ஐயா தயவு செஞ்சி வேண்டாம். வேணும்னா போன மாசம் வந்த 'முரசொலி'ல உங்களுக்குன்னே மூணு பக்கம் ஒதுக்கி தர சொல்லி தாத்தா கிட்ட சொல்றேன். அதுல எழுதிக்கங்க. இதையே எங்க ஆட்சில செஞ்சி இருந்தீங்கன்னா உங்களுக்கு 'வேற விதத்துல' வெகுமானம் தந்துருப்போம்.." எனக்கெஞ்சினார். ஓக்கே. ஓக்கே என்று டீலை முடித்தேன்.


இந்தப்படத்தில் ஒல்லியாக இருக்கும் ஓணான் ஒன்று 'மங்கிசா பாயாசா' லேக்கியத்தை சாப்பிட்டு ஒரே நைட்டில் ஒன்பது மாடி பில்டிங் சைஸ் ஜந்துவாக வளர்ந்து நிற்கிறது. இதெல்லாம் ஒரு கதையா? சென்ற வாரம்தான் 'டின் டின்' விமர்சனத்தில் அந்த ஆளு ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கை வெளுத்து வாங்கினேன். அப்பவும் திருந்தவில்லை. "உங்கள் படத்தின் லாஜிக் மிஸ்டேக் மற்றும் நீங்கள் பல்ப் வாங்கிய இடங்கள்" பகுதியை இணைத்து மெயில் கூட அனுப்பினேன். ஆனால் "தமிழ் தெரியாது" என்று எஸ்கேப் ஆகிவிட்டார். அதற்கு நான் "எனக்கு கூடதான் இங்கிலீஷ் தெரியாது. தமிழ் டப்பிங்ல உங்க படத்தை பாக்கலையா?. அது மாதிரி என் லெட்டருக்கு இங்கிலீஷ் டப்பிங் செஞ்சி படிங்க" என்று மடக்கினேன். அவரும் மடக்கினார்....லெட்டரை. சுத்த பயந்தாங்கொள்ளி...ஹி..ஹி...

நாளைக்கி ஜுராசிக் பார்க் ரிலீஸ் ஆகட்டும். அப்ப இருக்கு அந்த ஆளுக்கு. 'ஜுராசிக் பார்க்கில் ஜிகிடிகள் செய்த ஜில்ஜில் மல்மல் சில்மிஷங்கள்' அப்படின்னு தலைப்பு வச்சி ஒரு போஸ்ட் போடறேன். அப்பதான் என் பவர் தெரியும். 

                                                                   
நல்ல பாம்பு பெயரில் நல்ல பாம்பு படம் எடுப்பது போல காட்சிகளை வைத்து எடுக்கப்பட்ட படம். ஏற்கனவே இந்த நல்ல பாம்பு சிலமுறை சொந்தமாக படம் எடுத்து தோற்றுள்ளது. ஒரு முறை ஷகீலாவின் 'ஒருக்களித்து படுத்த ஓமணக்குட்டி' படத்தை ஈரோடு ஆபரேஷன் தியேட்டரில் நான் கிளுகிளுப்பாக பார்த்து கொண்டிருந்த போது இதே நல்ல பாம்பு என் சீட்டின் நடுவே என் இரண்டு கால்களுக்கும் இடையில் 'உஸ்.உஸ்..' என உறுமியது. 'நேரங்கெட்ட நேரத்துல உனக்கு படம் ஒரு கேடா' என்று அதன் காதை பிடித்து திருகி பைக் ஸ்டாண்டில் வீசிவிட்டு வந்தேன். அது முதல் இந்த நல்ல பாம்பு எடுத்த எல்லா படமும் தோல்விதான்.

இந்த எல்லா படத்தையும் ஈரோட்டில் நாளை காலை பகல் காட்சி பார்த்து விட்டு பட்டென சிட்டாக பறந்து வந்து பதிவு போடுகிறேன். ஒரே நேரத்தில் எப்படி நாலு படத்தையும் பாத்து பதிவு போட முடியும்னு கேக்கறீங்களா? என்ன மாதிரியே மூணு பேருக்கு டூப் போட்டு படம் பார்ப்பேன். கணக்கு டால்லி ஆயிடுச்சா? ஹி..ஹி..


###############################################

Thursday, April 5, 2012

எனது பலகோடி கி.மீ. பயணத்தில் ஒரு சின்ன ஸ்பீட் ப்ரேக்!!                                                                               
எங்கள் ட்ரை சைக்கிள் பயணம் முடிந்து ஹோட்டலுக்கு திரும்பினோம். ஆபீசர் வீட்டு மொட்டை மாடியில் ஓய்வெடுக்க சென்றேன். அங்கே இருந்து பார்த்தால் தார் ரோடு, பிளாட்பாரம் போன்றவை எல்லாம் பளிச்சென தெரிகிறது. என் கண்ணில் ஒரு படு கவர்ச்சியான மஞ்சள் நிற பூ ஒன்று தென்பட்டது. அதை ரசித்து கொண்டு இருக்கும்போது இரு பெண்கள் பறித்து விட்டனர். உடனே மாடியின் பின்பக்க குழாயில் இருந்து இறங்கி சென்று அவர்களை பார்த்து 'பூக்களைத்தான் பறிக்காதீங்க..காதலைத்தான் முறிக்காதீங்க' என இடுப்பை வளைத்து பெல்லி டான்ஸ் ஆடி அந்தப்பெண்களை கலவரப்படுத்தினேன். ஆனால் அவர்கள் அதை ரசிக்கும் ஞானம் இன்றி என்னை சந்து சந்தாக விரட்டி சுழற்றி சுழற்றி அடித்தனர். பிறகுதான் தெரிந்தது அவர்கள் பூ கட்டுபவர்கள் என்று. ஆபீசருக்கு படு குஷி. வீட்டில் இருந்த பூரிக்கட்டையை அவர்களிடம் தந்து 'இன்னும் நாலு மாத்து மாத்துங்க' என்றார்.

'துளசி வாசம் மாறலாம். தவசி வாக்கு மாறாது லேய்' என்பதை உணர்த்தும் விதமாக வீட்டில் ஒரு துளசி செடியை வளர்க்கிறார் ஆபீசர். அப்படியே அவர் வீட்டை ஏற இறங்க பார்த்து விட்டு 'நீங்க கட்டுன வீடு அருமை சார்' என்றேன். என்ன கோபமோ. சப்பென கன்னத்தில் அறைந்து விட்டார்.."எத்தனை தரம் சொல்றது..இது கொத்தனார் கட்டுன வீடுன்னு" என காண்டாகி கரடுமுரடாக கத்தி விட்டார். பொறுமை இழந்த நான் தரையில் புரண்டு அழ ஆரம்பித்தேன். சாரின் சமாதானத்திற்கு செவி சாய்க்கவில்லை. அதன் பின் கொத்தனார் அந்த வீட்டை கட்டிய ஸ்டில்லை விஜயன் எனக்கு காட்டினார்(ஸ்டில் கீழே). அதை கண்டபின் சற்று அமைதியானேன். பிறகு பக்கத்து வீட்டு பையனிடம்இருந்த பத்து தேன் மிட்டாயை பிடுங்கி தின்ற பிறகுதான் என் சினம் ஆறியது.

                   "இன்னொரு தடவ பயணப்பதிவு போட்டா இதாலயே மண்டைய பொளந்துருவேன்"  

அதன் பின் ஆபீசர் வீட்டு பணியாட்களுக்கு என் பயணப்பதிவு ஸ்டில்களை காட்டினேன். அத்தோடு லீவில் போனவர்கள் வேலைக்கு திரும்ப ஒரு மாமாங்கம் திரும்ப வரவே இல்லையாம்.

                              எனக்காக   பஸ் ஸ்டாண்டில் கெடையாய் கெடக்கும் நாய் நக்ஸ்          

'போதும் என் பொழப்ப கெடுத்தது' என்று டவேரா காரில் மூட்டை கட்டி என்னை கிளப்பினார் சார். 'மெட்ராசை சுத்தி பாக்க போறேன். மெரினாவில் வீடு கட்ட போறேன். லைட் அவுசில் ஏறி நிக்க போறேன். மங்காத்தா அஜீத் போல கண்ணாடி போட்டுட்டு வாரேன்' என்ற பாடலை முணுமுணுத்து கொண்டே அந்த பயணத்தை அனுபவித்தேன். டயராலும், பெட்ரோ லாலும் இயங்கிய அந்தக்கார் நெல்லை சந்திப்பை அடைந்தது. கார் கதவை திறந்து வெளியே வந்தேன். அப்போது தரையில் என் கால்கள் பதிந்தன. பகல் நேரம் என்பதால் சூரிய ஒளி எங்கும் நிறைந்து இருந்தது. நான் காலால் நடக்க ஆரம்பித்தேன். ரயில் நிலையத்தில் சில ரயில்களை கண்டேன். ஆனால் இப்படி ஒரு அதிர்ச்சியை நான் எதிர்பார்க்கவே இல்லை......

    
ஆம்...திருநெல்வேலி சந்திப்பு எனும் போர்டை கண்டதும் என் ரத்தம் கொந்தளித்தது. மனோ-ஆபீசர் சந்திப்பு என்று போடாமல் என்ன எகத்தாளம் இருந்தால் திருநெல்வேலி சந்திப்பு எனப்போடுவார்கள். விடுவதாக இல்லை நான். அடர்த்தியாக வானில் உலவிக்கொண்டு இருந்த கார் மேகங்களை ஒரு டஜன் கையில் எடுத்து வந்து அந்த போர்டை அளித்தேன். 'தில்லி சந்திப்பு' என பெயர் மாற்றி அந்த இடத்தில் இருந்து சிதறி ஓடி எனது ட்ரெயின் அருகே வந்து விட்டேன். பாவம்....தில்லிக்கு போக, வரவிருந்த ட்ரெயின்கள் எல்லாம் இந்தப்பக்கம் வந்து ஒரே ட்ராபிக் ஜாம். 'அய்...ஏமாந்தீங்களா' என்று வலது கை ஆட்காட்டி விரலை மடக்கி அங்கு அலைந்த வடநாட்டவரை வெறுப்பேற்றி கிண்டல் செய்தேன். ஹி..ஹீ....பிறகு மும்பை ரயிலை நோக்கி ஓடினேன். என்ன பார்த்த டி.டி.ஆர். "இனிமே நெல்லை பக்கம் வந்தா சொல்லுங்க...தண்டவாளத்துல போயி படுத்துக்கறேன்" என்று அன்புடன் வழியனுப்பி வைத்தார்...                                                       
                 
                                                       டிக்கட் வாங்க காசின்றி புட்போர்டில் ஒரு பயணம்....

பயணம் முற்றும்...(உங்களுக்கும் முற்றி விட்டது எனும் நம்பிக்கையில்..)

நீங்கள் சகஜ நிலைக்கு திரும்ப ஆபீசர் தரும் டிப்ஸ்:

மனோ உங்கள் ஊருக்கு வந்தால் ரெண்டு நாள் உங்கள் முகம் இறுகி விடும் இல்லையா? அப்படி அவர் வந்தால் வெந்நீரை நன்றாக கொதிக்கவிட்டு அந்த அண்டாவில் அவரை ஆறுமணிநேரம் மிதக்க விடுங்கள். குறிப்பாக அவருடைய கேமராவை உருவி பேரிச்சம்பழ கடையில் போட்டு விடுங்கள். அவரை உடனே அனுப்பி விடாதீர்கள். ஒரு மாதம் நன்றாக ஊறப்போட்டு வெள்ளாவியில் வைத்து வெளுத்து போடுங்கள்.


டிஸ்கி:
இப்போது நீங்கள் படித்து பரவசம் அடைந்த நெல்லை பதிவு வெறும் டீசர் ட்ரெயிலர் தான் நண்பர்களே. இதை விட பத்துமடங்கு பெரிய பதிவு விரைவில். தலைப்பு : "ஆபீசர் வீட்டு கல்யாணம். எனது மெகா பயணம். நீங்கள் பணயம்"


Wednesday, April 4, 2012

ஆபீசர் வீட்டு கல்யாணத்தில் அண்ணாத்தை மனோ!                       " சட்டு புட்டுன்னு நாலாவது பந்திய போடுங்க ஆபீசர்..நாக்கு ஊருதுல்ல ..." 


மும்பையில் இருந்து அரபிக்கடல் மார்க்கமாக நான் சென்னை கடற்கரைக்கு வந்த கதை பற்றி தனியாக ஒரு நெட்ட நெடுந்தொடர் பதிவை தனி ப்ளாக்கில்   எழுதுகிறேன். பயணக்கட்டுரைக்கு என்றே தனி ப்ளாக் தொடங்க வேண்டுமென என் ரசிகர்கள் பலர் கேட்டதால் இனி பயணம் பற்றிய போன்ற பதிவுகள் manotravels.nonstop.out தளத்தில் வெளியாகும் என்பதை இறுமாப்புடன் தெரிவித்து கொள்கிறேன். மும்பையில் இருந்து கடல்வழியாக எப்படி சென்னை வந்தேன் என்றுதானே நாக்கின் மேல் விரல் வைத்து கேட்கிறீர்கள்? அது ஒரு வீரசாகச பயணம் மக்களே. தாரவி பகுதியில் ஏழைச்சிறுவன் ஒருவன் செய்து வைத்திருந்த பேப்பர் கப்பலை ராவோடு ராவாக ராவி அதன் மூலம் ஒருவழியாக இங்கு வந்து சேர்ந்தேன். வழியில் ஒரு வஞ்சிரம் மீன் என் கப்பலை கவிழ்க்க சதி செய்தது. விடுவனா? கூலிங் கிளாஸ் கண்ணாடியை உடைத்து அதை குத்தி குத்தியே கொன்று விட்டேன்..அந்த கடல் பயண அனுபவத்தை பிறகு பார்ப்போம்.

சென்னையில் இருந்து ரயில் மார்க்கமாக சிதம்பரம் சென்று கொண்டிருந்தேன் (இது குறித்து manochennaitochidhambaram.point2point.avvv தளத்தில் எழுதுகிறேன்). ஒரே ஒரு சாம்பிள் அனுபவம் மட்டும் உங்களுக்காக. ட்ரெயினில் சப்பணங்கால் போட்டுக்கொண்டு லாப்டாப்பை திறந்து பதிவு எழுதிய நள்ளிரவு நேரமது. அரை தூக்கத்தில் இருந்தேன். அப்போது அந்த நிலா வெளிச்சத்தில் அழகிய சிற்றருவி ஒன்று சலசலவென பாய்ந்து கொண்டு இருந்த அழகைக்கண்டேன். அதை வர்ணித்து எழுதியதை பெர்த்தில் இருந்து பார்த்த சிறுவன் சொன்ன வார்த்தைகள் என் நெஞ்சில் ஈட்டியாக குத்தி குதறின.."அய்ய..அங்கிள் அது அருவி இல்ல. நாந்தான் இப்ப சொய்யின்னு சுடச்சுட சுச்சா போனேன்"

                                                                            நக்கீரனின் காஸ்ட்லி கார்

"எலேய் மனோ. நான் நேரா நெல்லை போயிடறேன். என் கார் ட்ரைவர் உன்னை சிதம்பரத்ல பிக்கப் பண்ணிப்பான்" என்று சொல்லிவிட்டார் நக்கீரன். மேலே உள்ள படத்தில் இருக்கும் காரை மணிக்கு 150 சென்ட்டி மீட்டர் வேகத்தில் ஓட்டி என்னை நெல்லைக்கு கொண்டு சேர்த்த ட்ரைவர் வாழ்க.

கல்யாண மண்டபத்திற்கு வெளியே நக்கீரனுக்கு தனி போன் பூத் வைத்து தந்திருந்தார் ஆபீசர். வாசலில் நின்றோருக்கு கூட போன் போட்டு "வாங்க. வாங்க" என்று உபசரிப்பு வேறு..நக்கி தொல்லை தாங்கலடா. "எங்கலே சிபி?" என்று கேட்டதற்கு "செவுத்துல உக்காந்துகிட்டு போற வர்ற பொண்ணுங்களுக்கு மார்க் போட்டதால அவரோட மொகத்துல லேடி போலீஸ் மார்க் போட்டுட்டாங்க. பேன்ட் ஏஜ் வாங்க போயிருக்கு பய புள்ள" என்றார் நக்கி. ஹி..ஹி..தேவைதான். சொன்னா கேட்டாத்தான....

மண்டபத்தின் உள்ளே நுழைந்த நான் கல்கண்டு தட்டை கண்டதும் துள்ளி குதித்தேன். இரண்டு கைகளால் நான்கு முறை அள்ளி கார்கோஸ் பேன்ட் பாக்கெட்டுகள் முழுக்க நிரப்பியதும் "ஐயோ திருடன் திருடன்" என்று அங்கிருந்த சிறுமிகள் கத்தி ஊரை கூட்டிவிட்டனர். "என்ன நடக்குது. இங்க" என்று கேட்டவாறு வந்தார் ஆபீசர். எத்தனை நாள் ஆனது அவரைப்பார்த்து..கண்கள் கலங்கி இதயம் பனித்தது. அவரோ "ஏன் மனோ இப்படி?? கேட்டா ஒரு மூட்டை கல்கண்டை தர்றேன். வாங்க உள்ள" என்று தன் சுண்டுவிரலால் என் கரங்களை பற்றி அழைத்து சென்றார்.

"எனக்கு அசதியா இருக்கு. சத்த நேரம் தூங்கணும். என்னை தூங்க வைங்க ஆபீசர்" என்றேன். "என்னங்க..நான் எவ்வளோ பிசியா இருக்கேன். இப்ப போயி.." என்றார் ஆபீசர். "ஒரு அரை மணிநேரம்..ப்ளீஸ்" என 'துர்கா படத்து   ஷாமிலி போல கெஞ்சினேன். என் பிஞ்சு முகம் அவரை சம்மதிக்க வைத்தது என்றால் அது மிகையில்லை.

மண்டப வாசலில் எனக்காக ஒரு தூளி கட்டி வாயில் பிங்க் கலர் நிப்பிளை சொருகி 'பச்ச மல பூவு..நீ உச்சி மல தேனு' பாடலை போட்டுவிட்டார்.

                                             "தூளியிலே ஆட வந்த பெட்ரோமாக்ஸ் விளக்கே..." 

என்னை கழற்றி விட்டு நைசாக ஜகா வாங்க பார்த்த உணவு உலகம் ஆபீசரிடம் "சார்..எங்க ஓடறீங்க. எனக்கு பசிக்குது. உணவு உலகம் ஆபீசர் கல்யாணத்துல உலக உணவெல்லாம் தயார் செஞ்சி இருப்பீங்க. ஆனா எனக்கு வெறும் தயிர் சாதம் மட்டும் பெசஞ்சி தாங்களேன்" என்று அழுதேன். முதலில் அவர் சம்மதிக்கவில்லை. "இல்லாட்டி நிப்பிளையும், பால் புட்டியையும் அப்படியே கடிச்சி தின்னுபுடுவேன்" என்று மிரட்டியதும்தான் வழிக்கு வந்தார்.

சிறிய வெற்றிலை ஒன்றில் ப்ரீத்தி மிக்சியில் 50 முறை மிருதுவாக அரைத்த தயிர் சாதத்தை இட்டு என்னருகே வந்தார் ஆபீசர்.
                           
                                                   
                                                                    
எனக்கு மிகவும் பிடித்த பிங்க் நிற ஸ்பூனில் ஒவ்வொரு பருக்கையாக ஊட்டினார். அமெரிக்கா, இந்தியா, ஒரிஸ்ஸா, லண்டன், இங்கிலாந்து போன்ற எல்லா நாட்டு தாய்களும் ஒன்றாக சேர்ந்து எனக்கு உணவு ஊட்டியதை போன்று இருந்தது அந்த அனுபவம். "உப்பு போடவா?" என்றார் ஆபீசர். "வேண்டாம் சார். நான் ஏற்கனவே நிறைய உப்பு போட்டுட்டேன்" என்றேன்.

நான் சொன்னது என் கண்ணீரை..........

இதற்கு மேல் எழுத முடியாமல் என் மனம் நெகிழ்கிறது. உள்ளம் உருகுகிறது. பிறகு சந்திக்கிறேன்...
..................................................................


_________
Posted by:
sivakumar
_________