Friday, December 14, 2012

பட்டிக்காட்டான் ஜெய் கதைகள் 3


திருவாளர் பட்டிஸ் ஒரு கருமிங்கறது நம்ம பூமியையும் தாண்டி செவ்வாய், வியாழன் வரைக்கும்  தெரியும், "எச்சக் கையில குருவி கூட ஓட்டமாட்டாப்ல...!" என்பது அனைவருக்கும் தெரியும். வீட்டுல பிளஸ்ல எகத்தாளம் பேசுற மாதிரியே…பேச சோத்தைக் "கட்" பண்ணிட்டாங்க…!இவருக்கு கொல பட்டினி வேற சரி நைசா ஹோட்டல்ல போய் சாப்பிட்டுக்கலாம்ன்னு கிளம்புறார். "நானே ராஜா நானே மந்திரி .."அப்படின்னு பாட்டுப் பாடிட்டு ரோட்டுல அலம்பிக்கிட்டு வர்றார் ஆட்டோக்காரன் ஓருத்தர் வண்டிய நிறுத்தி சார் வண்டி வேனுமா..? அப்படிங்கிறார்…!

"இல்லப்பா செகன்ட் ஹேன்ட் வண்டி நான் வாங்குறதில்லை..! " அப்படின்னு நக்கல் பேச…."போய்யா சாவு கிராக்கி பன்னாடை..., பரதேசி, அப்படின்னு திட்டிட்டு போறான்…!

வழக்கமா நாமதானே திட்டுவோம் இவம் திட்டுறான்…! சரி ஒரு லைக்கப் போட்டுருவோம் அப்படின்னு "லைக்......லைக்......" அப்படின்னு கத்தறாரு..! அப்ப அந்தபக்கம் பால்கனியில் இருந்து குப்பை கொட்ட வந்த "ஆன்ட்டி"  யாரைப் பாத்து லைக்குங்கற ராஸ்கல் அப்படின்னு குப்பைய இவர் தலையில கொட்டிட்டு போயிருச்சு…! இன்னிக்கு நாம ஸ்டேட்டஸ் போட்ட நேரம் சரியில்ல போல அப்படின்னு புலம்பிக்கிட்டு வர்றார் ஒரு ஹோட்டல் கண்ணுல படுது உள்ள நுழையறார்.

ஹோட்டல்க்குள்ள இவர் உள்ள நுழைஞ்ச நேரம் பாத்து  அங்க ஏற்கனவே சிவாவும், நக்கீரனும் இருக்காங்க…..இவரும் போயி அவங்க இருந்த டேபிள்ல உக்காறாரு……! எதாவது ஆர்டர் பண்ணுவாய்ங்க நாம ஓசில சாப்பிட்டுக்கலாமின்னு பாக்கறாரு அவங்க அதைப் பத்தியே பேசலை…! இவருக்கு கொலைப்பட்டினி மெதுவா சிவா சாப்பிடலாமே அப்படின்னு பிட்ட போடுறாரு

"ஓ….சாப்பிடலாமே…! பில்லு நீங்க கொடுங்க" அப்படினாப்டி…!சிவா!

"இது என்னடா வம்பாப் போச்சுன்னு"  யோசனை செய்த பட்டிஸ் முழிச்சிட்டு இருக்கையில…..அப்ப பாத்து ஆருர் முனா வர்றாப்ல ஹோட்டல்ககுள்ள….! அவரும் ஒரு சேர்ல உக்காந்துட்டு "ஏம்பா என்ன ஆர்டர் பண்ணயிருக்கீங்க…?" அப்படின்னு கேட்க "ஒன்னும் பண்ணல யாரு இன்னிக்கு வாங்கி தருவதுன்னு டிஸ்கஷன் பண்ணிட்டு இருக்கோம் அப்படிங்கிறாரு நக்கீரன்..!" 

சிவாகிட்டியும், எங்கிட்டியும் காசு இல்ல…..நீங்க இரண்டு பேர்ல யாராவது ஆர்டர் பண்ணுங்க என்கிறார்…..நக்கீரன்! ஆருர் மூனா சரி நான் நக்கீரனுக்கு பில் கொடுக்கிறேன் பட்டி சிவாவுக்கு பில் பண்ணட்டும் அப்படிங்க உடனே பட்டிஸ் சிவா நீ என்ன சாப்பிடுவே….? அப்படின்னு கேட்குறாரு…..!நான் என்னங்க சாப்பிடுவேன் இரண்டு இட்லி, இரண்டு ரோஸ்ட், ஒரு காப்பி, ஒரு வடை அவ்வளவுதான் அப்படிங்கிறாப்ல…!

அடுத்ததா நக்கீரனை கேட்குறாப்ல….நான் என்னய்யா டயட்ல இருக்கிறேன் எதா இருந்தாலும் ஒன்னுதான் சாப்பிடுவேன் அப்படிங்கறாப்ல…..! பட்டியின் கணக்கு பூச்சி மூளை அதிசயமா அன்னிக்குன்னு பார்த்து வேலை செய்யுது ஒரு பேப்பரையும் பேனாவையும் எடுத்து நாலு A4 ஷீட் வருகிற அளவுக்கு கணக்க எழுதி பார்த்துட்டு சிவாவை விட நக்கீரனுக்கு பில்லு குறைவா வருன்னு விடை சொல்ல……..நான் நக்கீரனுக்கு பில் தர்றேன்னு அடம் பிடிக்க……ஆரம்பிச்சாரு…! ஆருர் மூனா மறுத்தாலும் பிறகு சரி என்று சொல்ல நால்வரும் சாப்பிட்டார்கள்….! பட்டி தன் மொபைல்ல பிளஸ்க்கெல்லாம் லைக் போட்டுட்டே சாப்பிடுறாரு....!சாப்பிட்டு முடிச்சதும் நக்கீரன் சாப்பிட்ட பில்லப் பார்த்து பட்டிஸ் மயக்கம் போட்டு விழுந்திட்டாப்ல….பில்ல எடுத்துப் பார்த்தா…..!
இட்லி-1
பூரி -1
புரோட்டா -1
வடை-1
பொங்கல்-1
ஜிலேபி-1
குலோப் ஜாமுன்-1
கிச்சடி-1
ரோஸ்ட்-1
தயிர் வடை-1
சாம்பார் வடை -1
லெமன் சாதம்-1
ஆப்பிள் ஜூஸ் -1
காப்பி-1
டீ-1
பாதாம் பால்-1
மசாலா பால்-1
பீடா-1
---------------------------------------------
நீதி : ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது!

Friday, December 7, 2012

பட்டிக்காட்டான் ஜோக்ஸ் - 2

பட்டிக்காட்டான் ஜெய்யின் தத்துவம் நம்பர் 1
கண்ணா நீ
கல்யாணத்திற்கு முன்னாடி சூப்பர்மேன் ,
கல்யாணத்திற்கு பின்னாடி ஜென்டில்மேன் ,
பத்து வருஷத்திற்கு பிறகு வாட்ச்மேன் ,
நாற்பது வருஷத்திற்கு பிறகு டாபர்மேன் …

--------------------------------------------------------

டாக்டர் : நீங்க உடனடியா மீன் , ஆடு , கோழி சாப்பிடுவதை நிறுத்த வேண்டும் .
பட்டிக்காட்டான் : அதுக சாப்பிடுவதை நான் எப்படி நிறுத்த முடியும் டாக்டர் .

--------------------------------------------------------

பட்டிக்காட்டான் சிறுவயதில் அவரது பள்ளித் தலைமையாசிரியடம் இப்படிக் கேட்டு தான் பின்னாடி பழுக்க அடி வாங்கினாராம்

சார் , டீ மாஸ்டர்டீ போடறாரு , பரோட்டா மாஸ்டர்பரோட்டா போடறாரு , மேக்ஸ் மாஸ்டர்மேக்ஸ் போடறாரு , நீங்க ஹெட்மாஸ்டர் தானே ஏன் மண்டய போட மாட்டேங்கிறீங்க ?..

--------------------------------------------------------


பட்டிக்காட்டான் : ஒரு காப்பி எவ்வளவு சார் ?

மெட்ராஸ்பவன் ஓனர் : 6 ரூபாய் .

பட்டிக்காட்டான் : எதிர்த்த கடையில ஒரு ரூபாய்ன்னு எழுதியிருக்கே ?

மெட்ராஸ்பவன் ஓனர் : டேய். சாவுகிராக்கி அது XEROX காப்பிடா !

--------------------------------------------------------

வீடு சுரேஷ் : ஏன் மச்சி உஜாலா பாட்டில கீழ போட்டு தாண்டிகிட்டு இருக்குற?

பட்டிக்காட்டான் : எங்க ஆபீஸ்ல நாளைக்கு நீளம் தாண்டுற போட்டி இருக்கு. அதுக்கு தான் பிராக்டீஸ் பண்ணி கிட்டு இருக்கேன்.

--------------------------------------------------------
ஒரு நாள் நம்ம பட்டிக்காட்டான், சின்னதா ஒரு டிவி வாங்கனும்ன்னு ஆசை பட்டு, எலக்ட்ரானிக்ஸ் கடைக்கு போயிருக்கார். கடைகாரனைப் கூப்பிட்டு ஒரு சின்ன டிவியை காண்பிச்சு கேட்டார்.

"இந்த டிவி என்ன விலை?"

கடைகாரன் பட்டிக்காட்டானை ஏற இறங்க பார்த்துட்டு சொன்னான்

"இந்த கடையில பட்டிக்காட்டானுக்கெல்லாம் டிவி விக்கறதில்லை..."

எப்படியும் இந்த டிவியை வாங்கிடனும்னு, விட்டுக்கு போய் தன்னோட கெட்அப்பை மாதிக்கிட்டு வந்து ‌கடைகாரனைப் பார்த்து கேட்டார்,

"இந்த டிவி என்ன விலை?"

"இந்த கடையில பட்டிக்காட்டானுக்கெல்லாம் டிவி விக்கறதில்லை..." ம‌றுப‌டியும் அதையே க‌டைகார‌ன் சொல்ல‌, டென்ஷனான பட்டிக்காட்டானுக்கு என்ன செய்றதுன்னு தெரியலை. ந‌ம்ம திருட்டு முழி தான் இவனுக்கு காட்டிகுடுக்குதுன்னு நினைச்சு, அடுத்த முறை போகும் போது, கூலிங்கிளாஸ் போட்டுக்கிட்டு, ஒட்டு மொத்த கெட்அப்பும் மாத்திக்கிட்டு கடைக்கு போய் கேட்டார்,

"இந்த டிவி என்ன விலை?"

"ஒரு தடவை சொன்னா புரியாது? இந்த கடையில பட்டிக்காட்டானுக்கெல்லாம் டிவி விக்கறதில்லை..."

பட்டிக்காட்டானால‌் பொறுக்க‌ முடிய‌லை, கடைகாரன்கிட்ட பரிதாபமா கேட்டார்,

"டிவி குடுக்க‌லைன்னா ப‌ர‌வாயில்லை, அட்லீஸ்ட், நான் பட்டிக்காட்டான் தான்னு எப்ப‌டி க‌ண்டுபிடிச்சே சொல்லு?"

கடைகாரன் சிரிச்சிக்கிட்டே சொன்னான், "இது டிவி இல்லை, மைக்ரோஓவ‌ன் அதான்"

--------------------------------------------------------

பட்டிக்காட்டான் அவருடைய ஆட்டோவின் சக்கரங்களை மிக மும்முரமாக கழட்டுவதில் ஈடுபட்டிருந்தார். அவரைப்பார்த்து ஒருவர்,"எதுக்கு ஆட்டோ சக்ககரத்தை கழட்டிக்கிட்டு இருக்கீங்க?"
பட்டிக்காட்டான் : போர்ட்ல என்ன போட்டிருக்கங்கனு பாருங்க.'Parking for Two Wheelers only!'.அதுக்குதான் 

--------------------------------------------------------

பட்டிக்காட்டான் வேலை தேடிக் கொண்டு இருந்த போது ஒரு சாப்ட்வேர் கம்பனி நேர்முக தேர்வில்

தேர்வாளர்: "உங்களுக்கு MS Office தெரியுமா?"
பட்டிக்காட்டான் : "நீங்க அட்ரெஸ் குடுதீங்கனா கண்டிப்பா கண்டுபிடிச்சிடுவேன்" 

--------------------------------------------------------

ஒரு வகுப்பில் ஆசிரியர் மாணவர்களை "CRICKET MATCH" பற்றி ஒரு கட்டுரை எழுதச்சொன்னார். மாணவர்களும் உடனே எழுத ஆரம்பித்துவிட்டார்கள். அவ்வகுப்பில் இருந்த பட்டிக்காட்டான் நீண்ட நேர யோசனைக்குப்பிறகு இப்படி எழுதினார் "DUE TO RAIN, NO MATCH!"

--------------------------------------------------------

பட்டிக்காட்டான் கண்ணை மூடிக்கொண்டு கண்ணாடி முன்பு நின்றுகொண்டிருந்தார்.
அவரைப்பார்த்து அவரின் நண்பர்  " கண்ணாடி முன்னே கண்ண மூடிட்டு என்ன செய்றீங்க" என்று கேட்க, பட்டிக்காட்டான் " நான் தூங்கறப்ப எப்படி இருப்பேன்னு பாத்துகிட்டிருக்கேன்" என்று பதிலளித்தார்!!!ஆரூர் மூனா செந்தில்

Thursday, December 6, 2012

பட்டிக்காட்டான் ஜெய் கதைகள் - 1

     
                                                               
                                         
நம்ம ப.காவுக்கு வாழ்க்கையே வெறுத்துப் போச்சு...!சாமியாரா போயிறலாம்ன்னு முடிவு செய்து நித்திகிட்ட போய் சுவாமி நான் சாமியார் ஆகப் போறேன் உங்க ஆலோசனை வேண்டும் அப்படிங்கிறார்...!

நித்தியும் ரஞ்சியையும் தன் சிஷ்யைகளையும் கண்ணால் ஜாடை காட்டி வேறு ஒரு அறைக்குப் போகுமாறு ஜாடை காட்டுகின்றார்....!

கவலைப்படாதிங்க சுவாமிஜி...! உங்க ஆளுகளை யாரையும் நான் தள்ளிட்டுப்
போகமாட்டேன்! தனியா நான் கடை போட்டுக்கிறேன்! அப்படிங்கிறார் நம்ம ப.கா.

நிம்மதி பெருமூச்சு விட்ட நித்தி! குழந்தாய்! யார் வந்தாலும் “உன்னிடம் அதிகம் இருப்பதை இல்லாதவர்களுக்கு கொடு” அப்படின்னு இதையேச் சொல்லு...!போதும் என்கின்றார்...!

நம்ம ப.காவும் தனியா கடை போட்டு உன்னிடம் அதிகம் இருப்பதை இல்லாதவர்களுக்கு கொடு என்று சொல்ல பெரிய லட்சாதிபதி ஒருவன் ப.காவை பார்க்க வர, அவனிடமும் பகா இதையே சொல்ல, அவன் தன்னிடம் இருந்த அதிக சொத்துகளை தானம் தர்மம் செய்ய “காக்காய் உக்கார கள்ளு சட்டி கையில விழுந்த மாதிரி” விரைவில் அவன் கோடீஸ்வரன் ஆகிவிட்டான். ப.காவின் புகழ் பயங்கரமாக பரவ ஆரம்பித்தது. கூட்டம் அதிகம் வர ப.கா மாற்றமே இல்லாமல் இதையே அனைவரிடமும் கூறிக்கொண்டிருந்தார்.

ஒரு முறை பயங்கர ரவுடி ஒருவன் ப.காவைப் பார்க்க வந்தான். சுவாமி பட்டிஸ் எனக்கு நாலு மனைவிகள் என்னால சமாளிக்க முடியலை என்ன செய்வது? என்று கேட்டான் பட்டிஸ் என்ன சொல்லியிருப்பார்ன்னு உங்களுக்கே தெரியுமே...! அதன் பிறகு ரவுடிகிட்ட எவ்வளவு வாங்கியிருப்பார்ன்னும் உங்களுக்குத் தெரியும்..!

நீதி : தவறான குருவை தேர்ந்தெடுப்பவன் தவறான தொழிலையே செய்வான்..!
*********************************************************************************

                                                           
பட்டிக்காட்டான் ஒரு நாள் ரோட்டுல ஜாலியா வந்திட்டு இருந்தாப்ல.....அப்ப ஒரு ஹோட்டல்காரர் வாங்க தம்பி அப்படின்னு கையப்பிடிச்சு ஹோட்டலுக்கு உள்ள இழுத்திட்டுப் போயி ஒரு தட்டுல சாம்பார் வடைய வெச்சு சாப்பிடுங்க தம்பின்னு அன்ப பொழிஞ்சார்...!

வேணாங்க எங்கிட்ட காசு இல்ல அப்படினாப்டி ப.கா

நான் உங்க கிட்ட காசு கேட்டனா....? நீங்க சாப்பிடுங்க தம்பி அப்படினாப்டி..ஹோட்டல்காரர்! ப.காவுக்கு இவம் யாராவது பதிவரா இருப்பானோ..?என்று நினைச்சுட்டு சாம்பார் வடை ஓசில கிடைச்ச சந்தோசத்துல சந்தோசமா சாப்பிடறாரு...!முடிச்சதும் டீ கொடுக்கறார் அதையும் குடிச்சிட்டு வெளிய வந்து ப.கா அவரிடம் சார் என் மேல அன்பை பொழியிறிங்களே நீங்க பதிவரா....?உறவினரா...?நண்பரா...?எனக்கு ஒன்னும் புரியலை அப்படிங்கிறார்...!


அதுக்கு ஹோட்டல் காரர் என்ன சொன்னார் தெரியுமா...?

ஒன்னுமில்ல தம்பி நேத்து வச்ச சாம்பார் கெட்டிருச்சுன்னு பசங்க சொன்னாங்க....!நான் நம்பலை....!உங்களுக்கு குடித்து டெஸ்ட் பண்ணிப் பார்த்தேன் நீங்க ஒன்னுமே சொல்லலை அப்ப சாம்பார் கெடலைன்னுதானே அர்த்தம்...!இனி நான் எல்லாருக்கும் கொடுக்கலாமில்ல அப்படினாரு...!ஹோட்டல்காரர்...!
நீதி : இலவசமா கிடைக்கின்ற எந்த பொருளுமே....!நம்மிடம் எதாவது எதிர்பார்த்தே வழங்கப்படுகின்றது!
________________________________________


Posted by: 

சின்ன (வீடு சுரேஷ்) குஜாலானந்தா சுவாமிகள்!
_____________________________________________

இந்த தொடரின் வெற்றியை பொறுத்து பட்டிக்காட்டான் கதைகள் புத்தகமாக வெளியிடப்படும் என்பதை அஸ்க்க லஸ்க்குடன் கூறிக்கொள்கிறோம்.
_____________________________________________________


Wednesday, December 5, 2012

கேபிள் சங்கர் - சிரிப்பு மலர்                                                           

மெரினாவில் மேற்கண்ட போஸில் படுத்த வண்ணம் கேபிள்:

'ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலை இல்லே.

ராம்கி தொழிலாளி: அதெல்லாம் சர்தான். தரைய பெருக்கணும். கொஞ்சம் ஒத்திப்போய் படுங்க இல்ல பாடுங்க.
......................................................................

சிட்டிக்காட்டான்: அண்ணே உங்க படத்துல செகன்ட் ஹீரோ சான்ஸ் ஆவது எனக்கு தாங்கண்ணே.

கேபிள்: ஒரு செகன்ட் வந்துட்டு போற மாதிரி வேணா சான்ஸ் தர்றேன்.

சிட்டி: சான்சே இல்லண்ணே.

கேபிள்: நாந்தாய்யா டைரக்டர். உனக்கு சான்ஸ் இருக்கு.
.....................................................................

கேபிள்: தலைவரே 'ஒரேய்  ஓமக்குச்சி' தெலுங்கு படம் போலாமா?

கே.ஆர்.பி: (கொல்றாறே மனுஷன்) போ...லா......ம் தலைவரே

கேபிள்: அப்பறம் நாளைக்கி தலைவர் கூட மீட்டிங் இருக்கு தலைவரே

கே.ஆர்.பி: போயிடுவோம் தலைவரே. தலைவர் கிட்ட சொல்லிடுங்க.

கேபிள்: எந்த தலைவர் கிட்ட தலைவரே?

கே.ஆர்.பி: போனவாரம் தியேட்டர்ல பாத்த தலைவர்கள்ல ஒரு தலைவரை பாத்தோமே அந்த தலைவர்தான் தலைவரே.

கேபிள்: ஓக்கே தலைவரே.
...................................................................

கேபிள் மொபைலில் 'நக்கீரன் காலிங்'. பார்த்ததில் இருந்து அடுத்த ஆறு மணி நேரம் விடாமல் லூஸ் மோஷன் போகிறார். விடுவாரா நக்ஸ் மாமா. தொடர்ந்து மிஸ்ட் கால் தருகிறார். 

கேபிள்: வணக்கம் தலைவரே. சொல்லுங்க.

நக்கீரன்: கேபிள் பக்கத்து வீட்டு பாப்பாவுக்கு நாளைக்கி பொறந்த நாள். கம்மி ரேட்ல பொம்ம வாங்கணும். ரங்கநாதன் தெருவுல எங்க கெடைக்கும்?

கேபிள்: (என்ன பாத்தா அவ்ளோ காமடியாவா இருக்கு) யோவ். இது உனக்கே ஓவரா தெரியல???  உங்க ஊர்லய வாங்கிக்க.

நக்கீரன் சென்டிமென்ட் ஜூஸை பிழிகிறார். கேபிள் இளகுகிறார்.

கேபிள்: காசே செலவு பண்ணாம சூப்பர் பொம்ம உங்க ஊர்லையே இருக்கு.

நக்கீரன்: சீக்கிரம் சொல்லுங்க. சீக்கிரம்.

கேபிள்: பேசாம நீங்களே அந்த வீட்டு வாசல்ல 4 நாள் உக்காந்துக்கங்க. அந்த கொழந்தைக்கு இதுதான் பெஸ்ட் கிப்ட்.
.................................................................    

கேபிள்: கேட்டால் கிடைக்கும் குழுமத்திற்கு சட்ட ஆலோசகர் தேவை.

சிட்டிக்காட்டான்: அண்ணே....எங்க ஏரியாவுக்கே நாந்தான் சட்ட ஆலோசகர். கல்யாணம், காதுகுத்து, கட்டப்பஞ்சாயத்து இப்படி எல்லாத்துக்கும் எந்த கலர் சட்ட போட்டா நல்லா இருக்கும்னு ஆலோசனை சொல்றவன். என்னையே சட்ட ஆலோசகரா போடுங்கண்ணே.

கேபிள்: %^%உ##$#ர% 
.....................................................................

கேபிள்: நேத்தி ஒரு ஹோட்டல்ல சாப்புட்டேன். டிவைன் தலைவா டிவைன்.

சிட்டிகாட்டான்: இனிமே என்கூட பேசாதீங்கண்ணே.

கேபிள்: ஏன்யா. நீயும் மூக்கு பிடிக்க தின்ன. நாந்தான் பில் கட்டுனேன். அப்பறம் எதுக்கு முறுக்கிக்கற?

சிட்டி: போங்கண்ணே. நீங்க மட்டும் அந்த 'டி' Wine ஐ  குடிச்சிருக்கீங்க. எனக்கு தரவே இல்லையே???????           

கேபிள்: %$^கே$%%#@#
......................................................................

சிட்டி: அண்ணே... நாளைக்கு நான் பாரின் போறேன்.

கேபிள்: எந்த நாட்டுக்கு?

சிட்டி: ஏதோ அகமதாபாத்னு சொன்னாய்ங்க. நல்ல சூட்டிங் ஸ்பாட் அங்க இருந்தா சொல்லுங்க. 

கேபிள்: (10 டப்பா அமருதாஞ்சனை தலையில் தடவி விட்டு). எதுக்கு படமெடுக்க போறியா?    

சிட்டி: இல்லண்ணே. அங்க ப்ரென்ட் ரிசப்சன். அவன்தான் நல்ல Suiting ஸ்பாட் போயி ட்ரெஸ் வாங்கிக்க. நான் காசு தர்றேன்னு சொன்னான். ரேமன்ட் ஷோ ரூம் அங்கன இருக்கா?

கேபிள்: %^%1#$$$&*()
..............................................................
    
கேபிளின் என்டர்(ர்ர்) கவிதை: 

10000 பேர் வந்து செல்லும் ரங்கநாதன் தெருவில் 
உனது அசைவின் ஒவ்வொரு பதிவும் 
எனக்கு அத்துப்படி.
என்னை கண்டுகொள்ளாமல் எவ்வளவு நேரமானாலும் 
நீ அவள் விகடன் படி.
அத்தனை பேர் சப்தத்திலும் உனது உதடசைவு 
எனது நெஞ்சினில் பதியும்.
ஜெயச்சந்திரன், சரவணா எங்கு சென்றாலும் 
உன்னை துரத்தும் எனது விதியும்.
அதெப்படி சாத்தியம் என நீ கேட்கலாம்.
முற்றிலும் சத்தியம் என்று நான் உரைக்கலாம்.

ஏனெனில்...........
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
அங்கிருக்கும் அனைத்து CCTV யையும் கண்ட்ரோல் செய்வதே நான்தானே என் பொன்மானே. என்னை புறக்கணிக்கும் ஒவ்வொரு நொடியும் உனக்கு வீணே!! 
..................................................................

Posted by:

! சிவகுமார்! 

Cable Sankar Image Copyright:
goundamanifans.blogspot.in

               

Tuesday, December 4, 2012

ஏடு திருப்பல் ஏகன் சுமார் - மெகாத்தொடர்விளிம்பு நிலையின் மறுபக்கம்.

               
பயங்கர திருப்பங்கள் நிறைந்த அதிரடி மெகாத்தொடர். வெகு விரைவில்...


கதை
திரைக்கதை
வசனம்
இயக்கம்
போஸ்ட் ப்ரொடக்சன்
நடனம்
பாடல்கள்
பின்னணி குரல்
எடிட்டிங்
மக்கள் தொடர்பு

ஏடு திருப்பல் ஏகன் சுமார்.

*******                            ***********************************           *************