Tuesday, January 22, 2013

சென்னை புக் ஃபேர் - பட்டிக்ஸ் சிறப்பு மலர் +



ஆன்றோர் பெருமக்கள் அனைவருக்கும் வணக்கம். சமகால சரித்திர நாயகன் மேதகு பட்டிக்காட்டானின் சிறப்பு புகைப்பட கண்காட்சிக்கு வந்திருக்கும் தங்கள் யாவரையும் வந்துருங்க வந்துருங்க என வரவேற்கிறோம். சென்னை புத்தக கண்காட்சிக்கு பட்டிக்ஸ் அவர்கள் விஜயம் செய்தபோது எடுக்கப்பட்ட பொக்கிஷ புகைப்படங்களை உங்கள் முன் பகிர்வதில் உய்யலாலா உற்சாகம் அடைகிறோம். தங்கள் எண்ணங்களை பின்னூட்டங்கள் வாயிலாக போதும் போதும் என்று அண்ணன் சொல்லும் அளவிற்கு 'கொட்டி'விட்டு போகுமாறு பம்மியவாறு கேட்டுக்கொள்கிறோம்.

வாசலில் கால் வைத்ததும் 'லக்கா கிக்கா' ரோஜா அக்கா அருகே ஜகஜோதியாக நிற்கும் தலைவர்:   

                                                                     

புத்தகங்கள் லைப்ரரியை தேடலாம்.  ஒரு லைப்ரரியே புத்தகம் தேடும் அதிசயம் பாரீர். 'அத்தே தண்டி புத்தகத்தை ஓசியிலேயே 4 மணிநேரம் படித்த இம்மகான் யாரோ?' என பின்புறம் எட்டிப்பார்க்கிறார் ஒரு நபர்:       

                                                              

ஓசி புத்தகம் வாங்கிய களைப்பில் சற்றே இளைப்பாறும் இடிதாங்கி. விடலை பருவத்தில் கடலை போடுவோருக்கு போட்டியாக கடலை போடும் பட்டிக்ஸ்.

டீச்சர்: 'டேய் நேத்து நீ கட் அடிச்சிட்டு கடலை போட்டியா?'

பட்டிக்ஸ்: 'சத்தியமா இல்ல டீச்சர்'

டீச்சர்: 'நீ கடலை போட்டதை எல்லாரும் பாத்தாங்களாமே?'

பட்டிக்ஸ்: 'என் கப்பாகுட்டிக்கு ஆறு, நதி, ஏரி போட்டேன்னு சொன்னாலும் நியாயம். அவ்ளோ பெரிய கடலை எப்படி போட முடியும். சத்தியமா நான் நேத்து பீச்சுக்கு போகவே இல்ல டீச்சர்'.         

                                            

அனைவரும் போட்டோவிற்கு போஸ் தரும்போது கண்கொத்திப்பறவையாக கடலை போட ப்ளான் செய்யும் பட்டிக்ஸ். அதைக்கண்டு அதிரடியாக கர்ஜிக்கும் அஞ்சாசிங்கம். மிலிட்டரி தேர்வுக்கு போஸ் தருவது போல் நிற்கும் ஆரூர்:   
                
                                             

'பதிவுலகம் எங்கிலும் உன்னை மிஞ்சிட யாரு? 
உன் பின்னோட்டம் கண்டதும் சிதறு ஓடுது நாடு.
உலக நாயகனே. கண்டங்கள் கண்டு வியக்கும்.
இனி ஐ.நாவும் உன்னை அழைக்கும். பதிவுலக நாயகனே.

பட்டிக்ஸ்: கம்ஸ் டான்ஸ் வித் மீ before யூ கோ. 

நீ பெரும் வலைஞன். நிரந்தர நம்பர் 1.
உலகமெங்கிலும் உன் லைக்சை மிஞ்சிட யாரு.
உன்னை 24/7 காண்பதில் இன்பம் கொள்ளும் இந்நாடு.

பட்டிக்ஸ்: கம்ஸ் டான்ஸ் வித் மீ before யூ கோ'   

                                                விஸ்வரூபமும், வில்லங்க ரூபமும்                             
                                         

'வாங்க  கல்லுல உக்காருவோம்' என்று சொன்னால் அதற்கு முன்பு அந்தக்கல் 'எந்த நூற்றாண்டை சேர்ந்தது, அது சென்னை வந்து சேர்ந்ததன் மர்மம் என்ன?' என்று தீர விசாரித்த பிறகே அமரும் அஞ்சாசிங்கத்திடம் தெரியாமல் வரலாறு பேசி மாட்டி முழிக்கும் மதுமதி. குந்தவை நாச்சியார் அரண்மனை அருகே யூ டர்ன் போட்டு, கிரேக்க காலத்து குதிரை மீதேற்றி நெப்போலியன் போர்க்களத்தில் சைனா டீ குடிக்க வைத்த பின்பே மதுமதியை கீழே இறக்கினார் அஞ்சா. வாயடைத்து நின்றார் மதுமதி. சிங்கம்லே!!  வரலாற்று சப்ஜெக்டில் யானை முட்டை வாங்கியதால் எட்டி நிற்கும் பட்டிக்ஸ் நடுவே.     
                                                                
                                                     

ஷார்ட்ஸ், வேட்டி, கருப்பு சட்டை என்று நாளொரு மேனி பொழுதொரு காஸ்ட்யூமில் வலம் வந்த இளைய ஆதீனம். குறிப்பிட்ட ஸ்டாலில் ஒரு பெண் வருடா வருடம் தன்னை லுக் விடுவதாக தம்பி சொன்னதை முதலில் நம்பவில்லை. இம்முறை அந்த ஸ்டால் அருகே சென்றபோது 'கண்கள் இரண்டால்' அந்த யுவதி இவரை பார்த்து சிரிக்க ரெண்டு புறா ஜொய்யென்று பறந்து சென்றது:   

                                                                  

'லிச்சி ஜூஸ் வாங்கித்தரேன் வாங்கலேய்' என்று கேபிள் எம்மை அழைக்க நாங்கள் இன்னும் பலரை அழைக்க உஷாராக இன்னொருவர் தலையில் பில் கட்டிவிட்டு கமுக்கம் ஆன தானைத்தலைவர் வாழ்க:  

                                                 




Wednesday, January 16, 2013

சென்னை புக் ஃபேர் - ஜாலி பட்டாசுகள்



சம்பவங்கள் நடந்த நாள்: ஜனவரி 13 ஞாயிறு

மதியம் 2 மணிக்கு நடக்கும் விழா ஒன்றில் மணிவாசகர் பதிப்பகம் 30 நூல்களை வெளியிடுகிறது என்றும்  சிறப்பு விருந்தினர்களில் ஒருவராக புதிய பவர் ஸ்டார் ராஜகுமாரன் வருகிறார் என்ற செய்தியும் பரபரப்பை அதிகப்படுத்தியது. தலைவனை தரிசிக்க பிலாசபி, அஞ்சாசிங்கம், கே.ஆர்.பி. ஆகியோர் மேடையை ஸ்கேன் செய்து பார்த்தோம். எங்கள் துரதிர்ஷ்டம் ஆள் வரவே இல்லை. திருமாவளவன், 'ஆரோகணம்' இயக்குனர் லக்ஷ்மி ஆகியோர் முன் வரிசையில் இருந்தனர்.

                                              நான் லாங் ஜம்ப் பண்ணி ஓடிய ஸ்டால்            

நல்லி குப்புசாமி மைக்கை பிடித்தார். முதன் முறை அவர் பேச்சை கேட்டேன். ஆறிப்போன பொங்கலை அர்த்த ராத்திரியில் சாப்பிட்ட உணர்வு. பேசுகிறார். பேசுகிறார். பேசிக்கொண்டே இருக்கிறார். எந்த சுவாரஸ்யமும் இன்றி. பல்வேறு அமைப்புகளில் தலைவராக இருக்கும் இவர் இனி தயவு செய்து ஓரிரு நிமிடங்கள் பேசிவிட்டு அமர்வது (யாவருக்கும்) நலம். அடுத்து ஒரு பெரியவர் உணர்ச்சி கொப்பளிக்க பேசினார்: 'மேடையை நேர்த்தியாக அமைத்து இருக்கும் அன்பர்களின் கீர்த்தியை சொல்லிவிட்டு என் பேச்சை பூர்த்தி செய்கிறேன்'. (மிச்சம் வைத்தது ஆர்த்தி மற்றும் மூர்த்தியைத்தான்). வடிவேலு பெட்டிக்கடை வைத்திருப்பார் ஒரு படத்தில். அப்போது சிங்கமுத்து சிறுவர்கள் உண்ணும் தின்பண்டம் ஒன்றை கேட்டவுடன் வடிவேலு 'இன்னும்மா இதுகளை திங்கற' என ஆச்சர்யமாய் கேட்பார். அதுபோல 2013 லயும் இப்படி பேசிக்கிட்டு திரியறாங்க நம்ம ஆளுங்க.         

                                          நான் ட்ரிப்ள் ஜம்ப் பண்ணி ஓடிய ஸ்டால்                            
                                
"இதுக்கு மேல இன்னும் நெறைய பேரு பேசுவாங்கப்போய். புத்தகம் பார்க்க போகலாம்" என்று அனைவரும் உள்ளே நுழைந்தோம்.  அந்த நாள் முழுக்க அஞ்சாசிங்கத்தின் அடாவடிகள் ஆகாசத்தை தாண்டின. ஆதாரங்கள் பின்வருமாறு:

முன்சொன்ன மேடையில் பதிவர் கவியாழி கண்ணதாசனின் கவிதை நூல் வெளியீடும் இருந்தது. முக்கிய புள்ளி ஒருவர் பொன்னாடைக்கு பதில் அண்ணனுக்கு ரோஸ் கலர் டர்க்கி டவலை போர்த்தியதை வன்மையாக கண்டிக்கிறோம். விழா முடிந்ததும் புத்தக சந்தைக்குள் வேகமாக வந்தார் கவியாழி. அனைவருக்கும் தனது நூல் மற்றும் காலெண்டர் ஒன்றை பரிசளித்தார். 'நடமாடும் ஷாப்பிங் மால்' பட்டிக்ஸின் வலது கை மட்டும்தான் சும்மா இருந்தது. அதிலும் காலண்டர் சொருகப்பட அறுப்புக்கு வந்த ஆடு போல முழித்தார்(படத்தை பாருங்கள்). கவியாழியின் ஜிகு ஜிகு ஜிப்பாவை கண்டு அஞ்சா சிங்கமே ஒரு கணம் மிரண்டு போனார். "எலேய். நீங்க எங்களை ஓட்டிட்டு இருந்ததை   மேடைல இருந்து பாத்துட்டுதான் இருந்தேன்" என்று கவியாழி படபடப்புடன் கூறிவிட்டு மாயமாய் பறந்தார்.                                    
                                                         
                           அஞ்சாசிங்கம்: "அண்ணே ஜிப்பா கண்லயே நிக்குது. ஜிப்பா சூப்பர்"      

இவ்வாண்டு அஞ்சா லயன் கண்காட்சிக்கு வரும் முதல் நாள் இது. அதற்கு முன்பு வரை பிளாஸ்டிக்/எவர்சில்வர் டம்ளர்களில் தண்ணீர் வைத்து இருந்தனர். ஆனால் தாகத்திற்கு சிங்கம் தண்ணி அடிக்க தொட்டி நோக்கி ஓடிய நேரம் பார்த்து அலுமினிய சங்கிலியில் டம்ளரை மூன்று முடிச்சு போட்டு கட்டி சிங்கத்தை அசிங்கப்படுத்தியது 'என்ன கொடும சரவணா':  

                                   'ஹே...தண்ணி கேன் தேடி வந்த சிங்கக்குட்டி நான்'         


                          கே.ஆர்.பி.:   உலகம் சுற்றும் வாலிபனும், உலகம் சுற்றும் வாலிபனும்                


    "சொப்பன சுந்தரி காரை எங்க பார்க் பண்ணி இருக்காங்கன்னா கேக்கற. இந்தா வாங்கிக்க"   

               புலவர் ஐயாவை மதிக்காமல் புள்ளிமானை சைட் அடிக்கும் சில்லி சிங்கம்.
       
     
                          கண்காட்சியின் கவர்ச்சி அம்சம்: பிலாசபியின் பின்னங்கால்                                                             

                              கள்ளம் கபடம் இல்லாத வெள்ளை உள்ளம் கொண்ட பதிவர்


மேலும் சில சிறப்பு படங்கள். அடுத்த பதிவில்.

...................................................

' 2012 சிறந்த(?) பதிவர்கள்' விருதுத்தேர்வு ஜரூராக நடந்து வருகிறது. அவார்ட் வழங்கும் வைபோகம் விரைவில்.
.................................................




Tuesday, January 15, 2013

சென்னை புக் ஃபேர் - பட்டிக்காட்டானின் 'காணோம்' பொங்கல்




சென்னை புக் ஃபேர் பற்றி எழுத முக்கிய விஷயங்கள் நிறைய இருந்தாலும் கடந்த ஞாயிறு அன்று நமது சகலகலா பதிவர்/ ஃபேஸ்புக்கர்/ட்விட்டர்/பின்னூட்டர் பட்டிக்காட்டான் செய்த காமடியை மறக்க முடியாமல் இன்னும் சிரித்துக்கொண்டு இருப்பதால் இப்பதிவு சிட்டிக்ஸ் சிறப்பு மலராக வந்தாக வேண்டிய கட்டாயம். 'அப்படியா?சொல்லுங்கண்ணே. சொல்லுங்க' என்று துள்ளி குதித்து ஓடிவரும் மக்களே....வாங்க பார்க்கலாம்.

ஞாயிறு மாலை பட்டிக்ஸை ரவுண்டு கட்டி அடிக்க இப்படி ஒரு அமோக சந்தர்ப்பம் கிடைக்கும் என சென்னை பதிவர்கள் எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள். டிஸ்கவரி புக் பேலஸ் கவுன்டர் அருகே புலவர் ராமானுஜம், பிலாசபி மற்றும் அஞ்சாசிங்கத்துடன் பேசிக்கொண்டு இருந்தேன். அப்போது புலவர் தந்த உளவுத்துறை தகவல் 'சற்று முன்புதான் ஜெய்யை பார்த்தேன். இங்குதான் குடும்பத்துடன் வந்துள்ளார்'. சிங்கத்திற்கு இருப்பு கொள்ளவில்லை. உடனே பட்டிக்ஸிற்கு போன் போட்டார். அடுத்த பத்து நிமிடத்திற்கு தன்னை அல்லாக்க தூக்கி மல்லாக்க போட இறைவன் செய்த திருவிளையாடலின் அச்சாரமே இந்த போன் கால்தான் என்று நம்ம ஜெய் எதிர்பார்த்திருக்க மாட்டார் பாவம். பாக்கெட்டில் இருந்து போன் எடுத்த ஒரு நொடி கேப்பில் பட்டிக்ஸின் புதல்வன் காணாமல் போக 'டேய் ராஜ் டி.வி.ஸ்டால் கிட்ட ஓடி வாங்கடா. குட்டி பட்டிக்சை காணுன்டா' என்று அலறினார் அண்ணாத்தை. படபடப்புடன் நாங்கள் மூவரும் ஸ்பாட்டை அடைந்தோம்.

'போன் எடுத்து ஹலோன்னு சொல்றதுக்குள்ள பய டப்புனு ஜம்ப் பண்ணி ஓடிட்டான்டா. தேடுங்கடா. தேடுங்கடா' என்று அவர் சிதற 'கூல்..நாங்க கண்டுபிடிக்கறோம்' என்று கூறிவிட்டு ஆளுக்கொரு திசையாக ஓடினோம். 'ரெட் கலர் ட்ரெஸ். சோட்டா பீம்னு எழுதி இருக்கும்' என்று அண்ணாத்தை சொன்ன அடையாளத்தை மனதில் வைத்துக்கொண்டு தேடுதல் படலம் தொடர்ந்தது. ஜெய்யும் இன்னொரு திசை நோக்கி ஓடினார். அப்போது அதே கலரில் உடை அணிந்த வேறொரு பையனை பிடித்து 'நீ இங்கதான் இருக்கியா?' என்று ஜெய் கேட்க, கோபத்தில் பையனின் நைனா முறைக்க இன்னும் டென்ஷன் எகிறியது.

ரிசப்சனில் 'பையன் காணும்' என்று அறிவிக்க சொல்லிவிடலாம் என்று சிங்கம் கூறியதால் நான் வேகமாக அவ்விடம் நோக்கி ஓடினேன். எனக்கு முன்பு பிலாசபி அங்கு நிற்க அருகே பார்த்தால் கண்காட்சி அமைப்பாளர் மடியில் லேசாக அழுதவாறு  குட்டி ஜெய் போஸ் தந்து கொண்டிருந்தான். சிங்கமும் உடனே வந்து சேர ஒருவழியாக நிம்மதி பெருமூச்சு விட்டோம். 

'நண்பரின் மகன்தான் சார்' என்று நாங்கள் சொன்னாலும் 'அப்பா வரட்டும். அவரை கூப்புடுங்க. அப்பதான் பையனை ஒப்படைப்போம்' என்று நாட்டாமை ஒருவர் சொல்ல உடனே ஜெய்க்கு கால் செய்தோம். தலைகால் புரியாமல் பேயறைந்த முகத்துடன் ஓடி வந்தார். 'வாடா மகனே' என்று இவர் அழைக்க அலெர்ட் ஆன நாட்டாமை குட்டி ஜெய்யை பார்த்து 'தம்பி இவர் உங்க அப்பாதான?' என்று கேட்க பயபுள்ள பதிலேதும் சொல்லாமல்(அதிலும் குறிப்பாக பட்டிக்சை ஏறெடுத்தும் பார்க்காமல் அழுதுகொண்டே இருந்தான்.) 'மானத்தை வாங்கறானே' என்று நம்ம ஆளு முகத்தில் 1 டன் கலவரம் அப்பி இருந்ததை பார்த்து எங்களுக்கு உள்ளூர பயங்கர சிரிப்பு. நாட்டாமை பலமுறை கேட்டும் பையன் பதில் சொல்லாததால் பட்டிக்ஸ் சிதறி பதறி உதறிப்போனார். அந்த அம்சமான ரியாக்சன் போட்டோ கீழே:     

                           ''என் மானத்தை டைட்டானிக் கப்பல்ல ஏத்தறானே என் வாரிசு..."  
                                                                  
இரண்டு நொடிக்கு ஒருமுறை போட்டோ எடுக்கும் பதிவர்களில் பட்டிக்சும் இருந்ததே அவருக்கு சாதகம் ஆகிப்போனது. சற்று முன் புக் ஃபேரில் அவர் எடுத்த பேமிலி போட்டோவை நாட்டாமையிடம் காட்ட ஒருவழியாக குட்டிப்பயலை தர ஓ.கே. சொன்னார். ஆனாலும் பய அப்பாவிடம் வர மறுத்து மீண்டும் பல்பு தர சிட்டி சின்னாபின்னம் ஆனார். அம்மா வந்த பின்பே சமாதானம் ஆனான் நம்ம தம்பி. 'அடுத்து பட்டிக்சை டிஸ்கவரி புக் ஸ்டால் வாசலுக்கு நகர்த்தி கொண்டு வந்தோம் நாங்கள். 2012 இல் இணையத்தில் எத்தனை பேரை கதற விட்டு இருப்பார் நம்ம ஆளு. இன்னைக்கு இவரை விடக்கூடாது என்று மனதினுள் அனைவரும் சபதமேற்றோம்.

'என்னா ஜெய்.. 24 மணிநேரமும் நெட்ல இருக்கீங்க. அதுல இருக்குற அக்கறை பையனை பாத்துக்கறதுல இல்லையே??' என்று ஸ்டவ்வை பற்ற வைத்தேன். அண்ணி  ஜெய்யை முறைக்க ஆரம்பித்தார்.சும்மா இருப்பார்களா? பிலாசபி, அஞ்சாசிங்கம் என ஆளாளுக்கு தமது பங்கை சீரும் சிறப்பாக ஆத்தினர். 'திருந்தவே மாட்டாரு. தண்ணி தெளிச்சி விட்டாச்சி' என்று அண்ணி சொன்னபோது எமது காதுகளில் தேன் வந்து பாய்ந்தது.           

'டேய்..24 மணி நேரம் நெட்ல இருக்கேன்னு ஏன்டா பொய் சொல்றீங்க?' என்று பிளேட்டை திருப்ப பார்த்தார் சிட்டி. அந்த நேரம் பார்த்து கே.ஆர்.பி., பபாஷா, ரோஸ்விக் போன்ற பெரிய தலைகளும் ஸ்பாட்டிற்கு வர வசமாக சிக்கினார் சிட்டி. 'இவரு நாளுக்கு 26 மணிநேரம் நெட்ல இருக்காரு' என்று ஒப்புதல் வாக்குமூலம் தந்தார் பபாஷா. அண்ணி மீண்டும் கொந்தளிக்க 'இன்னைக்கு உங்க நேரம். ஆடுங்க' என்று பரிதாபமாக சிட்டி எம்மை பார்த்து கவலையுடன் கூறினார். அத்துடன் ஓயவில்லை கலாட்டா. 


சிட்டி போட்டிருந்த கார்கோஸ் பேன்ட் அனைவரின் கண்ணையும் உறுத்த ஒவ்வொரு பாக்கெட்டிலும் என்ன இருக்கிறது என்று ஆளாளுக்கு எட்டிப்பார்த்தோம். அப்பொருட்களின் விவரம் வருமாறு:

சட்டை பாக்கெட் - இரண்டு கூலர்ஸ்
கார்கோ இடது மேல் பாக்கெட் - இரண்டு அரை லிட்டர் வாட்டர் பாட்டில்கள்.
கார்கோ இடது கீழ் பாக்கெட் - காராசேவு, லேய்ஸ் சிப்ஸ் பாக்கெட்கள்.
கார்கோ வலது கீழ் பாக்கெட்  - சொருகி வைக்கப்பட்ட பலூன்கள்.
கார்கோ வலது மேல் பாக்கெட் - கொஞ்சம் சில்லறைகள்.

ஆதாரம் இங்கே - டைட் க்ளோஸ் அப்: 

                                             தாகம் தீர்க்க வந்த தண்ணி டேங்கியே 

அடுத்த ஆதாரம் - லாங் ஷாட்: 
                                                         
                                                   நடமாடும் ஷாப்பிங் மாலே!! 

இதில் உச்சகட்ட காமடி என்னவென்றால் சிட்டி பதிவர்களுடன் பல்ப் வாங்கிக்கொண்டு இருந்த நேரத்தில் அவ்வப்போது அவரது கார்கோ பாக்கெட்டில் இருந்த தண்ணீரை குடித்துவிட்டு மீண்டும் அதே ஸ்டாண்டில் வைத்த வண்ணம் இருந்தனர் நமது பதிவர்கள். யாரோ வியாபாரி போல என்று வழிப்போக்கர் ஒருவர் வந்து தனது பங்கிற்கு தாகத்தை தணித்து விட்டு சென்றது ரகளை. அதை சிட்டி நோட் செய்யாதது அருமையிலும் அருமை சாமியோ!!

கடைசியாக கிளம்பும் நேரத்தில் ஜெய் அஞ்சாசிங்கத்தை பார்த்து பலத்த கர்ஜனையுடன் கோபமாக சொன்னது:

'மவனே உன் போன் காலை ஒரு செகன்ட் அட்டென்ட் பண்ணதால எனக்கு இந்த நெலம. இனிமே எனக்கு போன் பண்ண %^^*&@#$...........""  

"எப்படியோ..நம்மை ஆண்டு முழுக்க கதற விட்ட பட்டிக்சை இன்று ரவுண்டு கட்டி அடிக்க சந்தர்ப்பம் தந்த இறைவா போற்றி" என்று  ஃபுல் மீல்ஸ் கட்டிய திருப்தியில் அனைவரும் வீடு போய் சேர்ந்தோம். இந்த பசுமையான நினைவு இன்னும் பல நாட்களுக்கு மனதில் நிற்கும்!!!

குறிப்பு: செய்திகள் அனைத்தும் புகைப்பட ஆதாரத்துடன் வெளியிடப்பட்டு உள்ளது. எனவே இங்கு வந்து பட்டிக்ஸ் என்னதான் மறுப்பு சொன்னாலும் பருப்பு வேகாது என்பது மனசாட்சி உள்ளவர்களுக்கு தெரியும் என்பது எங்களுக்கு நன்றாக தெரியும்.   

ஜிம்பலக்கா ஜிம்பலக்கா ஜிம்பர ஜிம்பாலே. சிட்டிக்ஸ் ஆடு சிக்கிய நாளை மறக்க முடியுமா ஜிம்பர ஜிம்பாலே!! ஹேய்...ஜிம்பாலே....ஜிம்பாலே!!

...........................................................................


Posted By:

! சிவகுமார் !