Monday, September 23, 2013

நையாண்டி பவன் – சங்கவி


சில்லென சில்லென நீர்த்துளி பட்டு... மெல்லென மெல்லென கைவிரல் தொட்டு... பாடிக்கொண்டே நையாண்டி பவன் சமையலறைக்குள் நுழைகிறார் செந்தில்.

கவுண்டமணி: ஆமா இவரு பெரிய பாகவதரு ! பாட்ட நிறுத்துடா படுவா !!

செந்தில்: அண்ணே... நான் சொல்ற விசயத்த கேட்டா நீங்க பாடுறது மட்டுமில்லாம ஆடவும் செய்வீங்க.

க: நான் ஆடுறது இருக்கட்டும். மொதல்ல நீ ஆடாம விஷயத்த சொல்லுடா !

செ: நம்ம ஹோட்டலுக்கு சங்கவி வந்திருக்காங்க.

க: ஆஹா ! நம்ம டாகுட்டர் முதுகு தேய்ச்சி விடுவாரே அந்த சங்கவி தானே... வாடா போயி பாக்கலாம்.

பேச முனையும் செந்திலை பேசவிடாமல் அவசரப்படுத்தி அழைத்துச்செல்கிறார் கவுண்டமணி.

சங்கவி முதுகு மட்டும் தெரியும்படி அமர்ந்திருக்கிறார்.

க: ஆஹா இதுவல்லவா முதுகு. டேய் மண்டையா ஒரு லோடு சோப்பு வாங்கிட்டு வா. இன்னைக்கு பூரா நான் தேய்க்கணும்.

செ: அண்ணே ???

க: என்ன அண்ணே நோன்னேன்னுக்குட்டு ! படுவா தள்ளி நில்லுடா !!

கவுண்டமணி சங்கவியின் முதுகை தடவிக்கொண்டே சங்கவியின் முகத்தை திருப்பிப் பார்க்கிறார்.

க (அதிர்ச்சியாகி செந்திலை உதைத்தபடி): டேய் காலிபிளவர் தலையா ! இவனைத்தான் சங்கவி வந்திருக்கான்னு சொன்னியா. இத ஏண்டா நீ மொதல்லயே சொல்லலை.

செ: அண்ணே. நீங்க எங்கண்ணே சொல்ல விட்டீங்க !

க: செய்யுறத செஞ்சிட்டு மூஞ்சியை வச்சிருக்குறத பாரு, நயாபைசாவுக்கு பிரயோஜனம் இல்லாதவன் மாதிரி. இப்ப இந்த நாயிக்கு என்னடா வேணுமாம்.

செ: அண்ணே. நம்ம சங்கவி அண்ணன்...

க: அடேய் தயிர்வடை வாயா ! அவன் அண்ணன்னா அப்பா நான் யாருடா ?

செ: சூ குறுக்குல பேசக்கூடாது. அண்ணன் கவிதை புக்கு வெளியிட்டிருக்காரு. அதை உங்ககிட்ட படிச்சு காட்டிட்டு போலாமுன்னு வந்திருக்காரு.

க: எங்க ? அந்த கவிஞ்சரு மூஞ்ச கொஞ்சம் காட்டச்சொல்லு. அய்யா கவிஞ்சரே படிச்சுக் காட்டிட்டு நீங்க போயிடுவீங்க. நாங்க எங்க போறது ?

சங்கவி: அதெல்லாம் முடியாதுண்ணே நான் படிச்சு காட்டிட்டுதான் போவேன்.

க (காதை பொத்தியபடி மனதிற்குள்): அய்யோ கரிச்சட்டி தலையன் படிச்சு காட்டாம விடமாட்டான் போலருக்கே.

க: சரி படிச்சுத் தொலை !

சங்கவியின் கவியரங்கம் ஸ்டார்ட்ஸ்...

சங்கவி:
உன் பேரைக்
கவிதையாய் எழுதுவேன்,
ரசிப்பேன்,
மீண்டும் படிப்பேன்,
ஆனால் வெளியே சொல்லமாட்டேன்
ரகசியக் காதலியை
எப்படிச் சொல்வது ?

க: படுவா அதென்ன ரகசியக்காதலி ? கள்ளக்காதலி’ன்னு சொல்லித் தொலையேன்டா ! ஆமாம், இத வெளிய வேற சொல்லுவியா. அவ புருஷன்காரன் பொளந்துறமாட்டான் ?

சங்கவி:
உன்னை நினைத்து
கவிதை எழுத
கணிப்பொறி முன்
உட்கார்ந்து யோசிக்கும்
போது கூடவே
மனைவியும் உட்கார்ந்து
என்ன யோசனை
என்கிறாள்.

க: ஆங் இவரு பெரிய்ய பூகோள ஆராய்ச்சியாளரு ! சொறி புடிச்ச மொண்ணை நாயி கணிப்பொறிக்கும் எலிப்பொறிக்கும் வித்தியாசம் தெரியாம மசால்வடையை மொறச்சி பார்த்தா அப்படிதான்டா கேப்பாங்க.

சங்கவி:
உன்னை நினைக்காமல்
ஒரு நாளும்
இருந்ததில்லையடி
நான் மட்டும் நினைத்து
என்ன பயன் ?
உனக்கு என் நெனப்பிருக்கா ?
சொல்லு புள்ள

க: டேய் ! இப்ப எதுக்கு நீ சொல்லு புள்ள’ன்னு கேப்டன் மாதிரியெல்லாம் மிமிக்ரி பண்ணி காட்டுற. இவரு அப்படியே ஹாலிவுட் ஹீரோ டாம் க்ருஸு இவரைப்பத்தியே நெனச்சிக்கிட்டிருக்காங்க. அதை வேற சொல்லணுமாம். மொதல்ல உன்னையெல்லாம் கொல்லணும்டா.

சங்கவி:
உன் சிரிப்பினில்
சிரிப்பினில்
மேலே எழுத முடியலைடி
கற்பனையிலே
எனை கவிழ்த்தவளே

க: அடேய் ஆமைவடை தலையா அதுக்கு மேல இல்லை, நீ எழுதுன ரெண்டு வரியே ஏற்கனவே தாமரையக்கா எழுதுனது தான். புதுசா ஏதாவது எழுதுங்களேன்டா.

சங்கவி:
செல்லச் சிணுங்கல்
மிதமான சிரிப்பு
பார்க்கத் தூண்டும் கண்கள்
கடிக்கத் தூண்டும் உதடு
இது எதுவும் உன்னிடம்
எனக்கு பிடிக்கவில்லை
எனக்கு பிடித்ததெல்லாம்
உன் திமிர் தான்

க: ஏது உனக்கு ? படுவா ஏதோ ஒரு ஃபேக் ஐடி ஃபிகருகிட்ட சாட் பண்ணி செம மாத்து வாங்கியிருக்க. வாங்குனதுக்கு அப்புறமும் அவ திமிரு பிடிச்சிருக்கு, குமிரு பிடிச்சிருக்குன்னு பசப்புற. மவனே டேய். அடுத்தத வாசி.

சங்கவி:
என்னவளின் இடையும்
என் கவிதையும்
சிக்கென்று இருக்கும்

இரண்டையும்
அனுபவித்து ரசிக்க வேண்டும்
ஆராயக்கூடாது

க: எனக்கு ச்சீ’ன்னு இருக்குதுடா ! அந்த பொண்ணுக்கு ஒன் கவிதையை படிக்க குடுத்திருப்ப. வயித்தாலயும் வாயாலயும் போனா சிக்குன்னு தாண்டா இருக்கும் சிக்கன் 65 மண்டையா !

சங்கவி:
என்னவள்
அழகு என்று
சொல்லிட முடியாது
இல்லை என்று மறுக்கவும்
முடியாது.

க: டேய் கவிதையை சொல்லுடான்னா என்னடா அறிக்கை வுடுற. அட்டு ஃபிகரை வச்சிக்கிட்டு இதுக்கு லொள்ள பாத்தியா ? எகத்தாளத்த பாத்தியா ?

சங்கவி:
சைவமாக
இருக்க வேண்டும்
என்றுதான் வருவேன்
உன்னை நெருங்கி
உன் சுவாசத்தை
சுவாசிக்கும்போது
அசைவமாக
மாறி விடுகிறேன்.

க: ஏன் அந்த பொண்ணு வீட்டுல கருவாட்டு கொழம்பு சாப்டுட்டு வந்துச்சாக்கும். லவ்வு பண்ணுங்கடா வேணாங்கல. அதை கொஞ்சம் பல்ல வெளக்கிட்டு பண்ணுங்களேன்டா.

சங்கவி:
எனக்கு
எழுத வராது
என்று தெரிந்தும்
கவிதை எழுதச்
சொல்கிறாய்,
அடியேய்
உன் இதழ்
என் இதழுடன்
எழுதிய அளவிற்கு
கவிதை எழுத வராது.

க: ஒனக்கு எழுத வராதுங்குறது தான் நீ சொல்ற கவிதையை கேட்டாலே தெரியுதேடா. அதை வேற ஒன்னின் கீழ் ஒன்னு போட்டு ஒரு பக்கத்த ரொப்பிட்டியா ?

சங்கவி:
உன்னைப் பார்க்க
பேச... கொஞ்ச...
சண்டை போட...
சத்தியமாக ஆசை இல்லை...

க: டேய் என்னதிது ?

சங்கவி: கவிதைங்ணா.

க (செந்திலிடம்): டேய் மசால்தோசை வாயா !

செ: சொல்லுங்கண்ணே.

க: அடுப்படியில ஒரு தாடிக்காரன் ஒளிஞ்சிருப்பான் அவன வரச்சொல்லு !

உள்ளிருந்து தண்டோரா போட்டபடி மணிஜி வர, தலைதெறித்து ஓடுகிறார் சங்கவி !!!

Tuesday, September 10, 2013

ஆர்யா சூர்யா !


அன்புள்ள வலைப்பூவிற்கு,

கடந்த ஞாயிறின் காலையில் கேபிளின் தொட்டால் தொடரும் பூஜையை வெற்றிகரமாக முடித்துக் கொடுத்துவிட்டு வடசென்னை நோக்கி திரும்பிக்கொண்டிருந்தோம். “சர்ச்சுல ஏதோ நோன்பி கும்பிடுறாங்க வர்றியாடாப்பா” என்றார் சிங்கம். ஏற்கனவே அதிகாலையில் துயில் எழுந்திருந்தமையால் கண்கள் சொருகின. இருப்பினும், “சரி, வண்டியை விடுங்கஜீ” என்று ஆமோதித்தேன். உள்ளே நுழைந்தால் கறி, மீன் என்று ஒரே அசைவ வாடை. தவிர, ஆங்காங்கே ‘ஷேவ் தி பலூன்’ வகையறா விளையாட்டுப்போட்டிகள். சிங்கம் அவருடைய உடன்பிறப்பை பதினேழாவது முறையாக எனக்கு அறிமுகப் படுத்திவைத்தார். ஏற்கனவே பூஜையில் இட்லியும் கெட்டிச்சட்டினியயும் லபக்கியிருந்ததால் பசிக்கவில்லை. அடுத்து என்ன செய்யலாம் ? என்று யோசித்தபோது ‘ம்ம்ம் ம்ம்ம் புரோட்டா சாப்பிடலாமா ?’ என்று ஒரு அபிஷ்டு கேட்டதைப் போலவே ‘சினிமாவுக்கு போலாமா ?’ என்றது ஒரு குரல். பெருசா சிறுசா என்று நினைவில்லை.

“ஓ போலாமே ! எம்.எம்மிலே ஆர்யா சூர்யா ஓடுது. ராம.நாராயணன் ரீ-என்ட்ரி கொடுத்திருக்கிறாராம்” என்று திருவாய் மலர்ந்தருளினேன். அப்போது நான்கு கண்களில் மரணபயத்தைக் கண்டேன். “அதெல்லாம் ஆகாது. எம்.எஸ்.எம்மில் ரிட்டிக் போட்டிருக்கான். வேணுமின்னா அதுக்கு போகலாம்” என்றது வரலாறு. அதையே சின்னவரும் ஆதரிக்க, வேற வழி. வாகனங்கள் எம்.எஸ்.எம் நோக்கி விரைந்தன. அப்போதுதான் தெய்வாதீனமாக அந்த போஸ்டர் என் கண்ணில் பட்டது. “ஜீ வண்டியை நிறுத்துங்க” – பதறினேன். “எம்.எஸ்.எம்மில் ஈவ்னிங்கும் நைட்டும் தான் ரிட்டிக் ஓடுதாம், பாக்கி ரெண்டு ஷோ தெலுங்கு படம் தூஃபன் ஓடுதாம்”. அடுத்து என்ன செய்யலாம் ? என்று அண்ணனும் தம்பியும் யோசிப்பதற்குள், “பேசாம ஆர்யா சூர்யாவுக்கே போயிடலாமா ?” என்றொரு கேள்வியை முன்வைத்தேன். ஒருவேளை அப்படியும் அவர்கள் வழிக்கு வரவில்லை என்றால் தூஃபனுக்கு போய் ப்ரியங்கா சோப்ராவின் தொடைகளை பார்த்து வரலாம் என்று சில மைக்ரோ செக்கண்டுகளில் மாற்றுத்திட்டம் ஒன்றை தீட்டி வைத்தேன். பெரிய ஆடு தலையை ஆட்டிவிட்டது. சின்ன ஆடு யோசித்துக்கொண்டிருக்கும்போதே “அட, வண்டியை திருப்புங்க பாஸ்” என்று சொல்லிக்கொண்டே ஒரு கேவலமான சிரிப்பு ஒன்றை உதிர்த்து அவருடைய மூளையை சில நொடிகள் செயலிழக்கச் செய்தேன். 

வாகனங்கள் எம்.எம் திரையரங்கை நோக்கி... வழியெல்லாம் மேக்கிங் ஆப் ஆர்யா சூர்யா பற்றி பேசி சிங்கத்தை வெறியேற்றிக் கொண்டிருந்தேன். திரையரங்க வாயிலில் சுமார் முப்பது பேராவது இருந்திருக்கக்கூடும். அதில் முக்கால்வாசி அபவ் ஐம்பது ! டிக்கெட்டை வாங்கிக்கொண்டு பேனருக்கு முன்னால் நின்று புகைப்படங்கள் எடுத்துக்கொண்டோம். ஷோவுக்கு இருபது நிமிடங்கள் இருந்தன. கட் பண்ணா டாஸ்மாக் !

ஆளுக்கொரு பியரை வாங்கினோம். பார் சுவற்றை போட்டோஷாப் மூலமாக மிகைப்படுத்தப்பட்ட தமன்னாவின் அங்கங்கள் அலங்கரித்திருந்தன. ஆடுகள் சமயத்தில் தப்பிக்க திட்டமிடக்கூடும். ஷோ நேரத்தை கடந்து ஐந்து நிமிடங்கள் ஆகியிருந்தது. சகோக்களின் பாட்டில்களில் கால்வாசி மீதமிருந்தது. “யப்பா... அடிச்சு விடுங்கப்பா... படம் போட்டிருப்பாங்க...” என்று நினைவூட்ட வேண்டியதாக போய்விட்டது. ஒருவேளை டி.ஆரின் பாடல் டைட்டில் சாங்காக இருந்துவிட்டால் என்ன செய்வதென்ற கவலை எனக்கு ?

சினிமாவில் இசையமைப்பாளராகும் முயற்சியில் இரு இளைஞர்கள். இருவரும் புத்திசாலிகள். ஆனால் சுஜாதாவின் கணேஷ் – வசந்த் போல ஒருவன் கொஞ்சம் ஜென்யூன், மற்றொருவன் குறும்பு கூட்டல் ரகளையானவன். சூழ்நிலையின் காரணமாக இருவரும் இணைந்து ஒரு கொள்ளைக்கூட்டத்தை பற்றி துப்பறிகிறார்கள். புகழ் பெறுகிறார்கள். அவர்களிடம் இன்னொரு துப்பறியும் ப்ராஜெக்ட் வந்து சேர்கிறது. இம்முறை சில சிக்கல்கள் ஏற்பட, இறுதியில் ஆர்யாவும் சூர்யாவும் எப்படி தங்கள் துப்பறியும் திறனை பயன்படுத்தி வெற்றி பெறுகிறார்கள் என்பதே க்ளைமாக்ஸ்.

கதையை கேட்கும்போது சுமாரா இருக்கு என்ற எண்ணம் தோன்றினால் ஆச்சர்யப்படுவதற்கில்லை. ஆனால் அதை எந்த அளவுக்கு கேவலமாக எடுக்க முடியும் என்பதை மெனக்கெட்டு ஆராய்ச்சி செய்திருக்கிறார். ராம நாராயணன். எந்த அளவிற்கு கேவலமாக என்பதற்கு சில உதாரணங்கள் தருகிறேன் :-

- முதல் காட்சியில் ஆர்யாவும் சூர்யாவும் நாம சந்திச்சு 24 மணிநேரம் கூட ஆகலை என்று பேசிக்கொள்கிறார்கள். அடுத்த காட்சியில் மூணு மாசமா வாடகை குடுக்காம இருக்குறீங்க என்று ஹவுஸ் ஓனர் இருவரையும் அடித்து விரட்டுகிறார்.

- நகைச்சுவை காட்சி: ஆர்யாவும் சூர்யாவும் உணவகத்திற்கு செல்கிறார்கள். கையில் காசு குறைவாக இருக்கிறது. ஒரேயொரு அன்லிமிட்டட் மீல்ஸ் வாங்கி சப்ளையர் பார்க்காத நேரமாக இருவரும் மாற்றி மாற்றி சாப்பிடுகிறார்கள். சொல்லும்போதே சிரிப்பு வருகிறதல்லவா ?

- ஆ & சூ வாடகைக்கு வீடு தேடி அலைகின்றனர். அந்த நேரம் பார்த்து ஒரு பங்களா வீட்டு தம்பதியரிடம் அவர்களுடைய பெண்ணைப் பார்க்க மாப்பிள்ளையும், மாப்பிள்ளைத் தோழனும் வர இருப்பதாக தரகர் சொல்லித் தொலைக்கிறார். அதன்பிறகு வரக்கூடிய காட்சிகளை சுச்சுபிஜுக்கு என்று இருக்கும் எல்.கே.ஜி பையன் கூட கண்டுபிடித்துவிடுவான்.

- க்ளைமாக்ஸ் காட்சியில் வெண்ணிற ஆடை மூர்த்தி பதட்டமாக ப்ரர்ர்ர்ர்ர்ர்ர் (என்னன்னே தெரியல அவரு பேரைச் சொன்னாலே இப்படியாகுது) தொலைபேசியை எடுக்கிறார். எடுத்ததும், “ஹலோ... போலீஸ் ஸ்டேஷனா ?” என்று கேட்கிறார். ஷாட் கட் செய்யப்படுகிறது. 

- நாயகிகளை கொள்ளைக்கூட்டத்தினர் கடத்தி வைத்திருக்க அவர்கள் போனில் நாயகர்களுக்கு குறிப்பு கொடுக்கிறார்கள். அதாவது அருகில் மசூதி, ரயில் நிலையம், சுடுகாடு ஆகியவை இருப்பதாக. அதனை க.க.க. என்று கவ்விக்கொண்டு ரயில் நிலையம், மசூதி, சுடுகாடு மூன்றுமே ஒருங்கே அமையப்பெற்றது பல்லாவரம் என்று மிக சாமர்த்தியமாக கண்டுபிடிக்கிறார்கள் ஆர்யாவும் சூர்யாவும். 

இவை தவிர்த்து, யாரும் இடைவேளையில் தப்பித்துவிடக் கூடாது என்பதற்காக ராவன்னா நாவன்னா ஒரு யுக்தியை பயன்படுத்தியிருக்கிறார். என்னவென்றால், இடைவேளை போடுவதற்கு முன்னால் டி.ஆர் “முமைத்த்த்து.....!” என்று அலறுகிறார். ஆஹா தலைவரு பாட்டு வந்துடுச்சு டோய் என்று உற்சாகமாகிற நேரத்தில் தொடரும் என்று போட்டு இடைவேளை விடுகிறார்கள். ப்ளடி ராஸ்கல்ஸ் !

அதோடு சரியாக க்ளைமாக்ஸுக்கு முன்னால்தான் பாடல் வருகிறது. படத்திலேயே உருப்படியான விஷயம் அந்த பாடல் மட்டும்தான் என சொல்லலாம். “ரங்கு ரக்கர ரங்கு ரக்கர ரங்கு ரக்கர ரக்கர ரக்கர ரக்கர...” என்று தலைவரு தலை மயிரை சிலுப்பும்போது டிக்கெட் கிழிப்பவரை பிடித்துவந்து நாலு உதை உதைக்கலாமா என்று தோன்றுமளவிற்கு உற்சாகம் கூடுகிறது.

ஆர்யா சூர்யா – பார்யா போய்ச்சேர்யா !

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Sunday, September 8, 2013

வெற்றிக்கோடு சாதிக்க துடிப்பவர்களுக்கான டானிக்


பதிவர் சந்திப்புக்கு முதல் வாரம் எனது தனிப்பட்ட வாழ்வில் மிகப்பெரும் அடி. இடிந்து அமர்ந்து விட்டேன். ஆனாலும் பதிவர் சந்திப்பு முடியும் வரை கொடுத்த பொறுப்பை முடிக்க வேண்டும் என்பதற்காக எனக்குள் என் பிரச்சனைகளை அடக்கிக் கொண்டு வெளியூரில் இருந்து வந்த நண்பர்களை நன்றாக உபசரித்து பதிவர் சந்திப்பை முடித்து அனுப்பி வைத்த பிறகு தனியாக இருந்ததால் என் கவலை அதிகமாகி இன்னும் சோகமானேன்.


வேலையிலும் என்னுடைய மேலதிகாரிக்கும் எனக்கு ஒரு சண்டை ஏற்பட்டு நான் இத்தனை வருடங்களாக இருந்த குழுவில் இருந்து பிரித்து வேறொரு குழுவில் போட்டு விட்டார்.அதற்கு யூனியனில் ஒரு பஞ்சாயத்து வைத்து அந்த பிரச்சனை ஓடிக் கொண்டு இருக்கிறது.

அதே சமயம் பழைய தோல்விகளில் கொடுக்க வேண்டிய பணம் கேட்டு கொடுத்தவர்கள் நெருக்க ஆரம்பித்தனர். கிட்டத்தட்ட நான் காலி என்றே யோசிக்கும் அளவுக்கு நான் மிகவும் மனது உடைந்து போயிருந்தேன். எதேட்சையாக பதிவர் சந்திப்பில் அண்ணன் மோகன் குமார் எழுதிய வெற்றிக்கோடு புத்தகத்தை வாங்கியிருந்தேன்.


நான் வாங்கியதற்கான காரணமே வேறு. எப்போதுமே நண்பர்களை கலாய்த்து கிண்டல் செய்து பழக்கப்பட்டு போனதால் இந்த புத்தகத்தையும் வாங்கி படித்து குறைகளை சொல்லி கிண்டல் செய்து கலாய்த்து அண்ணனை டென்சனாக்கலாம் என்று தான் வாங்கினேன்.

ஆனால் எனது மனநிலைக்கு பொருத்தமாக இந்த புத்தகம் அமைந்தது எப்படி என்றே தெரியவில்லை. ஒரு மணிநேரத்தில் படித்து முடித்து விட்டேன். எனக்குள் ஏற்பட்ட மாற்றம் மிகப்பெரியது. அந்த புத்தகத்தை படிக்கும் போது என் கண்கள் கலங்கிவிட்டது. சே இத்தனை நாளும் எப்படி ஒரு மோசமான வாழ்க்கை வாழ்ந்திருக்கிறோம் என்று எண்ணி வேதனைப்பட்டேன் வெட்கப்பட்டேன். திடீர் என்று என் கண்கள் திறந்தது. உலகம் புதிதாக தெரிய ஆரம்பித்தது.

இத்தனை நாட்களாக என் பலம் என்று நான் நினைத்திருந்த, இடையில் காணாமல் போயிருந்த என் தன்னம்பிக்கை துளிர் விட்டு எழுந்தது. மறுபடியும் வீறு கொண்டு எழுந்தேன். பிரச்சனைகள் மிகச் சிறியதாக கடுகு போல் ஆனது.

புத்தகத்தை படித்ததும் என்னுடைய பிரச்சனைகளை தீர்த்துவிடுவேன் என்ற நம்பிக்கை வந்துவிட்டது. அவ்வளவு ஆழமுள்ள கருத்துக்கள். ஒவ்வொரு பத்தியையும் ஆழ்ந்து கவனித்து படித்தால் நாம் எந்த எல்லையையும் தொடுவோம்.


இந்த புத்தகத்தை படித்த பிறகு தான் எனக்கு வேண்டியதை எனக்கு நானே முடிவு செய்து கொண்டேன். என்னுடைய இலக்கு மிகப்பெரியதாக இருந்தது. அதனால் தான் தீர்க்க முடியாமல் கண்ணை கட்டியது. அவரின் இலக்கை முடிவு செய்தல் பத்தியை படித்த பிறகு எனது இலக்கை சிறிது சிறிதாக பிரித்துக் கொண்டேன்.

அதன் பிறகு பார்த்தால் எல்லா சின்ன இலக்குகளும் தீர்த்து விடக் கூடியதாகவே இருந்தது. இரண்டு இலக்கை எட்டிப் பிடித்து விட்டேன். இன்னும் மிச்சமிருப்பதை ஒரு மாதத்திற்குள் முடித்து விடுவேன்.

தயக்கம் என்னும் நோய் தான் எல்லாப் பிரச்சனைகளையும் ஒத்திப் போட வைத்தது. அதனை இரண்டாம் பத்தி படித்த பிறகு களைந்து எறிந்து விட்டேன். எந்த பிரச்சனையாக இருந்தாலும் ஒத்திப் போடுவதே இல்லை. தயக்கமின்றி எதிர்கொள்கிறேன்.

முயற்சி என்னும் ஊக்க மருந்து படித்த பிறகு நானே தினமும் ஒவ்வொரு வேலையையும் முயற்சிக்கிறேன். பல முயற்சிகள் தவறிப் போனாலும் சில முயற்சிகள் கைகூடுகின்றன.

நீ கோபப்பட்டால் நானும் எனும் பத்தி படித்த பிறகு நான் ஆளே மாறிப் போய் விட்டேன். பதிவுலகில் எங்கு சண்டை நடந்தாலும் நானும் முன்னின்று சண்டை போடுவேன். பல சண்டைகள் என் கோவத்தால் தான் பெரிதாகியது.

இந்த முறை கூட பதிவர் சந்திப்பு நடந்ததும் ஒரு நண்பர் என்னை குறிப்பிட்டு ஒரு பதிவிட்டு இருந்தார். நான் மட்டும் இந்த புத்தகத்தை படிக்கவில்லை என்றால் திரும்ப இரண்டு பதிவு போட்டு சண்டையை பெரிதாகி இருப்பேன்.

இந்த புத்தகத்தை படித்த பிறகு சண்டை வீண் என்று புரிந்து போனது. உடனே நானே சமாதானமாகி வெள்ளைக் கொடியை உயர்த்திப் பிடித்தேன். பெரியதாக ஆகியிருக்கக் கூடிய சண்டை சட்டென நின்று போனது.

அவ்வளவுதான் வாழ்க்கை.

மற்ற எல்லாப் பத்திகளையும் நானே சொல்லி விட்டால் எப்படி. நீங்களும் இந்த புத்தகத்தை வாங்கி படித்து வாழ்க்கையில் தெளிவடைந்து முன்னேறுங்கள்.

வெற்றிக் கோடு தாழ்வுமனப்பான்மையிலும் மனக்குழப்பத்தில் இருப்பவர்களும் படித்தே தீரவேண்டிய பொக்கிஷம்.

ஆரூர் மூனா

டிஸ்கி : இதுல எதுனா உள் குத்து இருக்குன்னு எவனாவது கிளப்பி விட்டான், கொண்டேபுடுவேன்.

Friday, September 6, 2013

சென்னை பதிவர் சந்திப்பு 2013 - நக்ஸ் சிறப்பு மலர்

தமது மேலான வருகை மூலம் மாநகரை சிறப்பித்த தலைவர் நக்கீரன் அவர்களுக்காக பிரத்யேக சிறப்பு மலரை தயாரித்து வழங்குவதில் இத்தளம் பெரும் புளகாங்கிதம் அடைகிறது நண்பர்களே....


                                                                       
                        புலவர் ஐயா: "போறப்ப அந்த நாய சூ ன்னு சொல்லிட்டு போயிடுங்க"
 
                                                                  
சென்னை பித்தன்: "நல்லவேள. மாறுவேஷத்துல வந்ததால இந்த ஆளு கிட்ட இருந்து தப்பிச்சேன். ஓம் நமச்சிவாய!!"

ராஜபாட்டை ராஜா: "அந்த பக்கமே திரும்பி பாக்க மாட்டனே...."

                                                               
                 நக்ஸ்: "என்ன இது இந்த டி.வி.ல சோட்டா பீம் போடாம ஏமாத்தறான்?"


                                                                      
  நக்ஸ்: "கே.ஆர்.பி. லைப் டைம் ப்ரீ அவுட் கோயிங் ப்ளான் கைவசம் இருக்கு. வாங்கிக்கறீங்களா?"

                                                                     

இடமிருந்து வலம்:
 ஜடாமுடி பிலாசபி, 'வெஜ்' பிரியாணி சாப்பிடும் ரெமோ பாலகணேஷ், மொத்த கறியையும் ஆட்டையை போட்ட நக்கீரனை குஸ்கா தட்டேந்தி அதிர்ச்சியுடன் பார்க்கும் அஞ்சாசிங்கம், அன்னக்கொடி கார்த்திகாவை விட அகலமான முதுகுடன் தரிசனம் தரும் நக்ஸ், நக்கீரன் பக்கம் தலை திருப்பாமல் தப்பித்த அஜீஸ்.
............................................................


Posted by:

!சிவகுமார்! 

 

Thursday, September 5, 2013

அஞ்சா சிங்கம் மருதுபாண்டியின் காட்டு தர்பார்

செந்தில் :- அண்ணே .அண்ணே ........
கவுண்டர் :- என்னடா காலங்காத்தால நொந்னே  நொந்னேன்னுகிட்டு .
செந்தில் :- சீக்கிரம் வாங்கன்னே ஒரு அவசரமான பஞ்சாயத்து .
கவுண்டர் :-இருடா இன்னும் பல்லு கூட விளக்கல நான் முடிச்சிட்டு வந்திடுறேன் .
செந்தில் :- அதுக்கெல்லாம் இப்போ நேரம் இல்லை. நீங்க உடனே வாங்க வாயிலேயும் வயித்துலேயும் அடிச்சி கிட்டு ஒருத்தர் அழுதுகிட்டு இருக்காரு ..சீக்கிரம் வந்து தீர்ப்பு சொல்லுங்கண்ணே .

கவுண்டர் :- ஹூ இஸ் தி டிஸ்டபன்ஸ் .. இருடா ஒரு சோம்பு பால் குடிச்சிட்டு வரேன் .
செந்தில் :- அதெல்லாம் போற வழியில் பார்த்துக்கலாம் நீங்க வாங்கன்னே .
கவுண்டர் :- ஏண்டா நீ எதுவும் கமிஷன் கிமிஷன் வாங்கிட்டியா . இப்படி அவசர படுறே ...
செந்தில் :- அதெல்லாம் இல்லைனே ஆளை பார்த்தா பாவமா இருக்கு அதான் ..
கவுண்டர் :- சரி சரி வா பாப்போம் ...........

கவுண்டர் :- யாருப்பா நீ உன் பேறு என்ன ..?
செந்தில் :- கழுதை வீதி கவுந்தர்ணே ..
கவுண்டர் :-  ஏன் அத அவரு சொல்ல மாட்டாராக்கும். டேய் அது என்ன கழுதை வீதி கவுந்தர் .
 செந்தில் :- அது வேற ஒன்னும் இல்லைனே . ஊருக்குள்ள பச்சை பசேல்ன்னு எவ்வளவு நல்ல இடம் இருந்தாலும் கழுதை குட்டிசுவத்து கிட்டே தான் போயி நிக்கும். அதே மாதிரி இவரு நல்லா சென்ட் அடிச்சி நடு ஹாலில் உக்கார வைத்தாலும் . கக்கூசை தேடி போயி மோந்து பார்த்து இது ரொம்ப நாருதுன்னு சொல்லுவாரு ..
 கவுண்டர் :- ஒ .அப்படி பட்ட அப்பாடேக்கரா நீ ..? சரி உனக்கு என்ன பிரச்னை .?

கழுதை வீதி கவுந்தர:- (கிட்ட வந்து தலைவரை முகர்ந்து பார்த்து விட்டு ) தலைவரே நீங்க இன்னைக்கு குளிக்கலை .
  கவுண்டர் :- எட்டி இடுப்பு மேல மிதிச்சி புடுவேன் ஓடி போயிடு . நான் உன் குறை என்னன்னு கேட்டா நீ என் கிட்ட குறை கண்டு பிடிகிறியா.
 கழுதை வீதி கவுந்தர:- பதிவர் சந்திப்பில் என்னை யாரும் கவனிக்கல .
கவுண்டர் :- யாருமே கவனிக்காத அளவுக்கு நீ எங்க இருந்த .?
கழுதை வீதி கவுந்தர:- மேடைக்கு கீழ அசந்து தூங்கிகிட்டு இருந்தேன் .

கவுண்டர் :- டேய் கிட்ட வா எங்க ஊது .....( அப்படி ஒன்னும் தண்ணி அடிச்சா மாதிரி தெரியலையே ) சரி வேற என்ன .
கழுதை வீதி கவுந்தர:- நாட்டுகொழின்னு நினைச்சேன் போண்டா கோழியை போட்டுடாங்க.
கவுண்டர் :- நீயா நினைச்சிகிட்டா அதுக்கு அவங்க எப்படி பொறுப்பாக முடியும்.
கழுதை வீதி கவுந்தர:- என் ஆலோசனையை கேட்டிருந்தா இந்த வெள்ளையனை வெள்ளை மாளிகையில் வச்சி விழா எடுத்திருப்பாங்க .
கவுண்டர் :- சரி நீ என்ன ஆலோசனை சொன்னே .
கழுதை வீதி கவுந்தர:- நான்தான் எந்த கூட்டத்துக்கும் போகலையே . அதான் ஒன்னும் சொல்லலை .
கவுண்டர் :-   விளக்கமாத்துல அடிக்கமா உட்டாங்க பாரு . (செந்திலுக்கு சப்பு சப்பு என்று அரை விழுகிறது ) என்னடா இது பஞ்சாயத்து . காலங்காத்தால என்ன பல்லு விளக்க விட்டியா இல்ல கக்கூஸ் போகத்தான் விட்டியா.
டேய் உனக்கு என்ன பிரச்சனைன்னு நல்லா விவரமா சொல்லு. என் பொறுமையை சோதிக்காதே .
கழுதை வீதி கவுந்தர:- இந்த பதிவர் சந்திப்பிலேயும் ஞானபழத்துக்கு கொட்டை  இருக்கா இல்லையா என்று யாரும் சொல்லல.
 கவுண்டர் :- (ஒரு முடிவோடதான் வந்திருக்கான் போல இருக்கு) சரி பஞ்சாயத்து முடிஞ்சுது நான் கிளம்புறேன் .

கழுதை வீதி கவுந்தர:- எனக்கு ஒரு தீர்ப்பு சொல்லிட்டு போங்க .
கவுண்டர் :- தீர்ப்பு தானே(செந்திலை காட்டி ) இந்தா இவன் சொல்லுவான்.இருந்து நிதானமா இவனுக்கு தீர்ப்பு சொல்லிட்டு வா. நான் கிளம்புறேன் . அப்புறன் தம்பி... பையன் ஒரு மாதிரி என்கிட்டே பேசுன மாதிரி ஏடாகூடமா அவன்கிட்ட பேசிடாதே. குப்புற விழுந்து கடிச்சி வச்சிடுவான்.
அநேகமா  நீ காலம் முழுக்கா ஒரு காது இல்லாமல்தான் அலைவேன்னு நினைகிறேன்.    


கர்மவீரர் கவிதை வீதியார் அவர்களுக்கு
                                                                        

பொறுப்பு மிக்க பள்ளி ஆசிரியர் கவிதை வீதி சௌந்தர் அவர்களுக்கு முதலில் ஆசிரியர் தின வாழ்த்துகள் சொல்லி கும்புடறோம் சாமி. 'அதுக்கு அந்த நடிகை தயாரா?' 'இந்த நடிகை அந்த குழந்தைக்கு தாயாரா?' என்று தங்களைப்போல் அதி அற்புத தலைப்புகள் வைத்து வாசகர்களை இழுக்கும் வசியக்கலை தெரியாத முட்டாள் பதிவர்களின் மடல் இது. 

ஒரு சில உருப்படியான ஆலோசனைகள்/குறைகள் கூறி இருந்தால் இந்த மடலுக்கு அவசியமே ஏற்பட்டிருக்காது. ஆனால் பொறுப்புள்ள ஆசிரியர் மற்றும் ஊர்க்காவல் அதிகாரியான நீங்கள் மானாவாரியாக அள்ளிவிட்ட பல்வேறு மொக்கை காரணங்களுக்கு பதில் சொல்ல வேண்டி இருக்கிறது. உங்கள் அதிரடி கேள்விகளுக்கு எங்களால் ஆன பதில்கள்:

உங்கள் பதிவின்(http://kavithaiveedhi.blogspot.com/2013/09/blog-post_4.html) முதல் பேராவில் தேன் தடவிய சம்பிரதாய வார்த்தைகள் போடாமல் எடுத்த உடனே கிழித்து இருக்கலாம். இன்னும் பழங்கால ட்ரங்க் பெட்டியாகவே இருக்கிறீர்கள்.
/உண்மையில் இந்த பதிவர் சந்திப்பு வெற்றிப்பெற்றதா என்று ஒவ்வொறு பதிவரும் யோசிக்க வேண்டும்./

வெற்றிப்பெற்றதா, ஒவ்வொறு.... தயவு செய்து இனியாவது குறைந்தது 10 பிழைகள் இன்றி  பதிவெழுதுவது என ஆசிரியர் தினத்தில் உறுதி எடுத்து கொ'ல்'க. பதிவர் சந்திப்பின் வெற்றி என்பதற்கு எது அளவுகோல் என்று சொல்லித்தொலைத்தால் புண்ணியம். ஒருவேளை எண்ணிக்கை என்று தெரிந்திருப்பின் சென்னை பதிவர்கள் குடும்பத்தாரை அழைத்து வந்து மாஸ் காட்டி இருப்போம். 50 பேர் வந்தாலும் அதில் 70% மேற்பட்டோர் வலைப்பதிவர்கள் என்றாலே அது வெற்றிதான் என்கிறது எங்கள் சிற்றறிவு.


/இந்த பதிவர் சந்திப்பு என்னை போன்று நிறைய பதிவர்களின் மனதை கவரவில்லை என்றே சொல்ல வேண்டும்/

'நிறைய' என்றால் 50 பேரா அல்லது 100 பேரா வாத்யாரே? அவர்கள் அனைவரும் தங்களிடம் தனிப்பட்ட முறையில் இதை சொன்னார்களா? ஆதாரம் உள்ளதா? 

/இந்த அரங்கம் பிரதான சாலையில் இருந்தாலும் உள் அரங்கம் அனைவரையும் அனைவரும் பார்த்துக்கொள்ளகூடிய வகையில் இல்லை... இதுப்போன்ற அரங்கம் மேடையில் இருப்பவர்களை பார்க்கும் வகையில் மாத்திரமே வடிவமைக்கப்பட்டிருக்கிறது. உடன் இருப்பவர்கள் யார் என்று தெரியாத பட்சத்தில் இந்த அரங்கம் சரி ஆனால் அனைவரும் பார்த்துக்கொள்ள இது வசதியாக இல்லை./

சென்னைக்கு அருகில் இருப்பதால் பலமுறை கலந்தாலோசனைக்கு வரவும் என்று நண்பர் ஆரூர் முனா சொல்லியும் நீங்கள் எட்டிப்பார்க்கவில்லை. கடிதம்/தொலைபேசி மூலம் கூட ஆலோசனை சொல்ல முடியாத அளவிற்கு சார் ரொம்ப பிசிங்களா?
                                                                      


 /இந்த பதிவர் சந்திப்பை ஏற்பாடு செய்திருந்த அனைத்து பதிவர்களும் அரங்கினுள் அவ்வப்போது மாத்திரமே தலைக்காட்டினார்கள். முக்கியமான நிறைய பதிவர்கள் அரங்கிற்கு வெளியேவும், வரண்டாவிலுமே இருந்தார்கள். இவர்கள் விழா அரங்கினுள் முழுமனதாக இருந்ததுபோல் தெரியவில்லை. பெரும்பாலான சென்னைபதிவர்கள் இருக்கைகளில் அமைந்து இருக்க வில்லை.  இவர்களை அரங்கினுள் இருந்து வெளியே வந்தால்தான் பார்க்க முடிந்தது. இதுவே அவர்களின் ஈடுபாட்டை அப்பட்டமாக காட்டியது./

அடேங்கப்பா!!! வெளியில் இருந்து வருவோரை வரவேற்றல், அரங்கிற்கு வழி சொல்லுதல், மதிய உணவு ஏற்பாடு உள்ளிட்ட வேலைகளை செய்யாமல் அரங்கினுள் விழாக்குழுவினர் இருந்தால் அதற்கும் ஒரு பதிவு போட்டு ஹிட்ஸ் அடிப்பீர்கள். வட போச்சே!!

/மேலும் பதிவர்கள் அறிமுக நிகழ்வு ஏதோ சம்பரதாயம் போல் தான் தோன்றியது. புதுமுக மற்றும் வெளியில் வந்த பதிவர்களை முதன்மை படுத்தவில்லை என்றே தோன்றுகிறது. அப்படி அறிமுகப்படுத்திக்கொள்பவர்களை யாரும் கவனித்ததுபோலும் தெரியவில்லை/

பதிவர் அறிமுகம் வேறு எப்படி இருக்க வேண்டும் சாமி??????? 

/பதிவர்களின் தனித்திறமையை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்வுகள் இருக்கிறது என்று பல்வேறுபதிவுகளில் வெளிப்படுத்திய விழாக்குழுவினர்கள் விழா நாளன்று மிகவும் சிறப்பாக செய்வார்கள் என்று எதிர்பார்த்தால் அதுபோல ஏதும் இல்லை என்பது போல் சப்பென்று முடிந்துவிட்டது. கடைசியில் மிகுந்த ஏமாற்றத்துடன் திரும்பவேண்டியதாயிற்று/

அங்கு நடந்த கவிதை வாசிப்பு, பாடல் போன்றவற்றை எல்லாம் தனித்திறன் இல்லை என்ற ஆலமரத்தடி சித்தர் சொன்னாரோ? விருப்பம்/நேரம் இல்லாத பதிவர்களை கட்டாயப்படுத்தி தனித்திறன் காட்ட சொல்ல இது என்ன பள்ளியா வாத்யாரே?

/சிறப்பு அழைப்பாளர் திரு பாமரன் அவர்கள் சிறப்பாக தன் அனுபவங்களை பகிர்ந்துக்கொண்டார் ஆனால் அவருக்கும் சரியான நேரம் ஏற்படுத்தி தரவில்லை. /

ஐயா உசிதமணி. பாமரன் அரங்க வாசலுக்கு வந்தபோது நேரம் மதியம் 12.05 மணி. மேடைக்கு பின்புறம் அவர் சில நண்பர்களிடம் பேசிய பிறகு மைக் பிடிக்க 12.16 ஆனது. அவருக்கு பேச ஏற்பாடு செய்த நேரம் 12-1 மணி. இதில் ஏற்பாட்டாளர்கள் மீது என்ன தவறு? டாண் என்று 12 மணிக்கு பேச வேண்டுமென்று மிரட்ட சொல்கிறீர்களா? கொடுமை.

/சிறப்பு விருந்தினரை மாலை நேரத்தில் பயன்படுத்திக்‌கொண்டிருந்தால் பதிவர்களும் இருந்திருப்பார்கள். சிறப்பு விருந்தினரும் தன்னுடைய கருத்தை விரிவாக ‌வெளிப்படுத்தியிருப்பார்./ 


சென்னைக்கு அருகில் இருப்பதால் பலமுறை கலந்தாலோசனைக்கு வரவும் என்று நண்பர் ஆரூர் முனா சொல்லியும் நீங்கள் எட்டிப்பார்க்கவில்லை. கடிதம்/தொலைபேசி மூலம் கூட ஆலோசனை சொல்ல முடியாத அளவிற்கு சார் ரொம்ப பிசிங்களா?
                                                                          

 
/உணவு விஷயத்தில் எந்த குறையும் சொல்லமுடியாத அளவுக்கு இருந்தது. சென்ற பதிவர்சந்திப்பு போல் அமரவைத்து பரிமாறியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். இடம் அதற்கு வதியாக இல்லை./

அந்தக்குறையை போக்கி இருக்கலாம். ஆனால் அவ்விடத்தில் மூத்த/பெண் பதிவர்கள் அமர்வதற்கு உணவு பரிமாறும் இடத்தின் அருகில் சேர்களை போட்டிருந்தோம். ஐயா பார்க்கவில்லை போல. 

/சென்ற பதிவர் சந்திப்பில் தனக்கு பிடித்த பதிவர்களுடன் அனைவரும் புகைப்படம் எடுத்த வண்ணம் இருந்தனர் ஆனால் இந்த சந்திப்பில் யாரும் யாருடனும் அதிகமாக புகைப்படம் எடுத்துக்கொண்டதுபோல் தெரியவில்லை/

இதென்னடா கொடுமை நாராயணா? படமெடுப்பது பதிவர்களின் விருப்பம். ஸ்ஸ்....நெக்ஸ்டு......

/தனித்திறன்  போட்டியில் அந்த நாடகம் இந்த நாடகம், பதிவர்களை கலாய்ப்போம் தவறாக எண்ணக்கூடாது என்றெல்லாம் அலம்பல் செய்திருந்தார்கள்... அவர்கள் யாரையும் அங்கு காணவில்லை./

திண்டுக்கல் தனபாலன் மற்றும் சென்னை பதிவர்கள் நாடகம் போட முடிவு செய்திருந்தோம். ஆனால் வேலைப்பளுவின் காரணமாக நிகழ்வு நடைபெறவில்லை. மற்றபடி பாடல், கவிதை நிகழ்ச்சிகள் நடந்ததே.. அப்போது 'அந்த தலைவருக்கு இந்த இடத்தில் கட்டியா?' என்று பதிவு போட போய் விட்டீர்களா நல்லவரே?
 
/மயிலன் நல்லதொரு கவிதையை வாசித்தார் அதை கைத்தட்டி ரசிக்ககூட ஆளில்லை.... என்பேர் பிரம்மன் என்ற தலைப்பில் வந்த நான் அரங்க சூழ்நிலையை கருத்தில் கொண்டு கவிதை வாசிப்பதை தவிர்த்து விட்டேன்....  (அந்த கவிதை கண்டிப்பாக பதிவாக வரும்)/

யப்பா....மீண்டும் கொசுத்தொல்லை. இதைப்பற்றி மயிலனே கவலைப்படாத போது உங்களுக்கு என்ன பிரச்சனை? இனி பதிவர் சந்திப்புகளில் கை தட்ட சொல்லி மிரட்ட வேண்டும் என்கிறீர்களா? கைதட்டல் கிடைக்காது என்பதற்காக நீங்கள் கவிதை வாசிக்கவில்லை என்பது மொக்கையான காரணம். 
                                                                     


/நிகழ்ச்சிகள் மாலை 6.00 மணிக்கு முடியும் என இருந்தது ஆனால் பெரும்பாலான பதிவர்கள் மதிய உணவுக்கு பிறகு கிளம்ப ஆரம்பித்துவிட்டார்கள்/

தங்கள் பதிவிலேயே கேவலமான பொய் இதுதான். நூற்றுக்கும் மேற்பட்ட பதிவர்களில் 'பெரும்பாலும்' என்றால் குறைந்தது 70 பேரென்று வைத்து கொள்வோம். 70 பேரும் மதிய உணவிற்கு பிறகு கிளம்பிவிட்டனர் என்று  அப்பட்டமான பொய் தகவலை தந்துள்ளீர்கள். ஹிட்ஸ், ஓட்டு வாங்க சில பதிவர்கள் எந்த தரத்திற்கும் தாழ்ந்து போவார்கள் என்பதற்கு இதுவே சாட்சி.

/(நான் சரியாக 4.45 மணிக்கு கிளம்பினேன்). மாலை நிகழ்வு ஒன்றுமில்லை என்ன இருக்கிறது என்று கூடதெரியவில்லை./

யூகத்தின் அடிப்படையில் என்ன விளக்கெண்ணைக்கு இந்த வார்த்தைகள். கெரகம்.


/மேடையை ஒரு சில சென்னைப்பதிவர்கள் மாத்திரமே ஆக்கிரமித்தார்கள். பிரபல பதிவர்கள் என்ற போர்வையில் இவர்களே முன்னிலைப்படுத்தப்படுவது வளரும் பதிவர்களுக்கு ஆரோக்கியமானதாக தெரியவில்லை/

வாங்க. இதற்குத்தான் காத்திருந்தோம். அருமை. அருமை. வெளியூர் பதிவர்கள்/பேச்சாளர்கள் பங்களிப்பு இருக்க வேண்டுமென்பதில் இம்முறை நடந்த பதிவர் சந்திப்பை விட சரியான உதாரணம் சொல்லி விட முடியாது என்பதை நினைவில் கொள்க அண்ணாத்தை.

சென்றமுறை சங்கவி, சிபி போன்றோரையும் மேடையேற்றினோம். இம்முறை கோவையின் இரு பெண் பதிவர்கள் நிகழ்ச்சி தொகுத்ததை பார்த்தீர்களா? இல்லையா வாத்யாரே? சிறப்பு விருந்தினர்களில் கூட பாமரன், வாமு கோமு, கண்மணி குணசேகரன் என வெளியூர் நபர்களைத்தான் அழைத்திருந்தோம். 

வெளியூர் விழாதானே என்று எண்ணாமல் நட்புக்கரம் நீட்டி உதவிய அன்பு நெஞ்சங்கள்  கோவை ஜீவா, வீடு சுரேஷ், சங்கவி, ராஜி அக்கா, திண்டுக்கல் தனபாலன்(சிலரது பெயர் விடுபட்டிருப்பின் மன்னிக்க) மற்றும் ஊக்கம் தந்த ஒவ்வொரு வெளியூர்/வெளிநாட்டு பதிவர்கள் அனைவருக்கும் நன்றிகள் பலமுறை.

/நிகழ்ச்சிகளை தொகுக்க நாள் முழுவதும் ஒருவரே எனும் போது பல்வேறு பதிவர்களிடையே கொஞ்சம் சலிப்பை ஏற்படுத்தியது./

யாருக்கு சலிப்பை ஏற்படுத்தியது என்பதை சபீனா போட்டு விளக்கவும். 

/அது தவிர்த்த பிற நேரங்களில் அமைதியில்லை. மேலும் பதிவர் அறிமுகப்படுத்திக்கொள்ளும்போது அரங்கம் காலியாகவே இருந்தது/

காலியாக என்றால்? 5 அல்லது 10 பேர்தான் இருந்தார்களா? அப்படியே இருந்தாலும் அதில் என்ன குறை என்று சொல்லவும். பதிவர் சந்திப்பின் அடிப்படை நோக்கமே பல்வேறு இடங்களில் இருந்து வரும் பதிவர்களை சந்திக்க வைப்பது என்பதுதான். தங்களுக்கு விருப்பப்பட்ட நண்பர்களுடன் பதிவர்கள் தனியே உரையாடினால் உங்களுக்கு என்ன பிரச்சனை????????

/இக்கருத்துக்களை ஒருதலைப்பட்சமாக பாராமல் நடுநிலையோடு சொல்லுங்கள்.... இந்த பதிவர் சந்திப்பு வெற்றி அடைந்ததாஎன்ற...?/

பதிவர் சந்திப்பின் வெற்றி என்பதற்கு எது அளவுகோல் என்று சொல்லித்தொலைத்தால் புண்ணியம். 
  

வாத்யாரே,

2011 இல் மெட்ராஸ் பவன் பதிவை தெளிவாக மீண்டும் படிக்க. அதில் எந்த இடத்தில் உங்களுக்கு பிரச்சனை என்று கோடிட்டு காட்டுக. பிறகு வாதிடலாம். உங்கள் பாணியில் பொத்தாம் பொதுவாக 'அதில் இது சரியில்லை' 'இதில் அது எது?' என்று எழுதும் திறனை ஆண்டவன் எமக்கு அளிக்கவில்லை.

உங்கள் மேலான கவனத்திற்கு,

2011 அன்று நான் எழுதிய பதிவு குறித்து....

விழா நடந்தபோது மதியமே தோழர் சங்கவியிடம் இதுகுறித்து பேசி இருந்தேன். அவரும் சரி இனி இக்குறைகளை சரி செய்து விடலாம் என்று கூறினார். அதுபோக இதுகுறித்து தங்கள் தளத்தில் எழுதினாலும் ஆட்சேபனை இல்லை என்றார். அதன் பின்பே அப்பதிவு வெளியானது. குறைந்தபட்ச நாகரீகம் எமக்கு உண்டு. நம்பிக்கை இல்லையெனில் அவரிடமே போன் போட்டு கேட்டுப்பாருங்கள்.
                                                                   மறுக்கா கும்புடறோம் சாமி!!!!!