Monday, February 28, 2011

கவுண்டமணியின் எதார்த்த காமெடி - பாகம் ஒன்று.

வணக்கமுங்கோ!  "கொஞ்சம் வெட்டி பேச்சு" சித்ராவின் முதல் வணக்கமுங்கோ !

நான் அதி தீவிர ரஜினி ரசிகை என்று, ரஜினியைத் தவிர எல்லோருக்கும் தெரியும்னு நினைக்கிறேன்....  அப்புறம் உனக்கு என்ன இங்கே வேலை என்று நினைக்கிறீங்களா?  இருக்குப்பா.....

எனக்கு  கவுண்டமணி காமெடி  பிடிக்க ஆரம்பித்ததற்கும் ரஜினி தான் காரணம். முதல் தடவையா, மன்னன் படம் பார்த்த போதுதான்,  ரஜினி - கவுண்டமணி காம்பினேஷன்ல, கவுண்டபெல்லின்  காமெடி ரசிச்சு பார்த்தேன். இன்னைக்கும் என்னுடைய ஆல் டைம்  பிடிச்ச காமெடி சீன்ஸ்ல அந்த படம் இருக்குது. 

அதில ரஜினி, கவுண்டமணி சந்திக்கும் காட்சியிலேயே பட்டையை கிளப்புவாங்க...

மேலும் இந்த காட்சியில் கவுண்டமணி கொடுக்கிற பில்ட் அப் பேச்சு மாதிரி,  இங்கே என்னுடைய நண்பர் ஒருவர் அவரது IT வேலையில் கேட்க வேண்டியதாக போச்சு... ஆமாம்ப்பா.... 

எங்கள் நண்பர், செந்தில்  சென்னையில் இருந்து,  ஒரு ப்ராஜெக்ட் மேனேஜர் ஆக நியமிக்கப்பட்டு கலிபோர்னியா  வந்து இருந்தாப்புல.   அங்கே இவர் பொறுப்பில் எடுத்துக் கொள்ள வேண்டிய அந்த  ப்ராஜெக்ட் வேலைகள்  குறித்த  சில தகவல்கள் பகிர்ந்து கொள்ள, அந்த கம்பெனியில் வேற கன்சல்டன்ட் மூலமாக வந்த ஒரு Software engineer ஆன இன்னொரு தமிழரிடம் சொல்லி இருந்து இருக்காங்க.   அவரோ, வேலைக்கு வந்து ஆறு மாதம் கூட ஆகவில்லை.  ஆனால், என்னமோ கம்பெனியே, இவர் கம்ப்யூட்டர்ல  தட்டுற என்டர் கீயினால் தான் ஓடுதுன்கிற லெவல்க்கு -  நினைப்பில்  நடந்துக் கிட்டு இருந்தாப்புல. 

  செந்தில்தான்  ப்ராஜெக்ட்டின் மேனேஜர் என்று தெரியாமல்,   அந்த ஆளு எகத்தாளமா பேசி - அலட்டிக்கிட்டு  செந்திலை இம்சை பண்ணியிருக்காப்புல.   ரெண்டு நாள் கழிச்சு,  Client கம்பெனி ஒரு மீட்டிங்கில் வைத்து, செந்திலை official ஆக அவர்கள் கொடுக்கப் போகும் அடுத்த ப்ராஜெக்ட் மேனேஜர்  அவர்தான் என்று அறிவித்த பொழுது,  இந்த ஆள் முகம் போன போக்கை இன்னும் செந்தில் மறக்கல.... சமீபத்தில் இந்த காமெடி சீன்  பார்த்த போது,  செந்தில் அந்த ஆளை பத்தி எங்க கிட்ட சொல்லி,  சத்தம் போட்டு சிரிச்சார்... 

இப்போ எங்களுக்கும் இந்த சீன் பார்க்கும் போதெல்லாம்,   அரைகுறையாக வேலை தெரிஞ்சிக்கிட்டு பெருசா சீன் விடுற காமெடி பீஸ்களை  நினைச்சு சிரிக்க ஆரம்பிச்சுடுவோம். நிச்சயமாக உங்களுக்கும் இந்த மாதிரி ஒரு ஆளையாவது தெரிஞ்சு இருக்கணுமே!  சிரிங்க...சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...


கவுண்டமணி காமெடி காட்சிகளில் பெரும்பாலும் - எல்லாவற்றிலும் அல்ல - ஒரு எதார்த்தம் இருக்கும்.
 ஒரு சாதாரண மனிதரை, அவராலே  அழகா படம் பிடிச்சு காட்ட முடியும்.  அதுவே அந்த காமெடி சீனில் தனிச்சு நிக்கும்.  நம்மையும் ரசிக்க வைக்கும்.



நல்லா சிரிச்சீங்களா?  மீண்டும் அடுத்த மாதம், நான் ரசித்த மற்றுமொரு கவுண்டமணி காமெடி காட்சியோடு மீண்டும் உங்களை சந்திக்கும் வரை, உங்களிடம் இருந்து  விடை பெறுவது - சித்ரா!!!


Friday, February 25, 2011

டிக்கிலோனா






                                                       
                                                              


அபாய எச்சரிக்கை:

மன்ற  மாமணிகளே,   

கீழே உள்ளே நடுநிசி நாய்கள் திரைப்படம் தங்கள் பார்வைக்கு மட்டுமே. தயவு செய்து வேறு எவருக்கும் தெரிவிக்க வேண்டாம். உயிரை பணயம் வைத்து HD தரத்தில் இப்படத்தை வெளியிட்டு உள்ளோம். இது குறித்த தங்கள் பொன்னான விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன. இதை நகல் எடுத்து பணம் பார்க்க நினைப்பவர்கள் குண்டர், ஒல்லியர், மீடியர் என பல பிரிவுகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவீர்கள் என்பதை உறுதியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். 



http://www.youtube.com/watch?v=2tl8u7MiEhM


படம் பார்த்ததுக்கு கட்டணம் 150 ரூவா. கூட்டத்துல ஒரு மஞ்ச சட்டக்காரனும் எஸ்கேப் ஆகக்கூடாது. அப்பிடி போற எல்லாரையும் நடுநிசில நெசமாவே நாய்கள் கடிக்கும். தூம் தாதா!

அனுப்பவேண்டிய முகவரி:
கவுண்டமணி - செந்தில் ரசிகர் மன்றம்,
சேந்தம்பட்டி,
மத்திய கிழக்கு மேற்கு அண்டார்டிகா.
..............................

இது எப்படி இருக்கு?

                                        

"யூகத்தின் அடிப்படையில் பேசப்படுவதால்  மட்டுமே ஒருவர் குற்றவாளி இல்லை"                          

"நடுநிலை ஊடகங்கள் சொல்வதால் மட்டுமே ஒருவர் குற்றவாளி இல்லை"

"குற்றம் சாட்டப்படுவதால் மட்டுமே ஒருவர் குற்றவாளி இல்லை"

"சி.பி.ஐ. ரெய்டு வருவதால் மட்டுமே ஒருவர் குற்றவாளி இல்லை"

"கைது செய்யப்படுவதால் மட்டுமே ஒருவர் குற்றவாளி இல்லை"

" தக்க ஆதாரம், சாட்சி இருப்பதால் மட்டுமே ஒருவர் குற்றவாளி இல்லை"

" நீதிபதி தீர்ப்பு சொல்வதால் மட்டுமே ஒருவர் குற்றவாளி இல்லை"

"தன் குற்றத்தை தானே ஒப்புக்கொள்வதால் மட்டுமே ஒருவர் குற்றவாளி இல்லை..இல்லை...இல்லீங்கோ"
.....................................................

செல்லக்குட்டியின் ஆட்டம்:

ஆசிரியர், தாய், தந்தை என பலர் சொல்லித்தந்தும் உங்கள் குழந்தை படிக்க மறுக்கிறதா? அது அந்த குழந்தையின் தவறில்லை. சரியான வழிகாட்டி இல்லாமல் போனதே காரணம். இதோ 'நிலா நிலா ஓடி வா' பாடலை ஒரு பச்சிளம் குழந்தை பாடி ஆடி உள்ளது. தங்கள் குழந்தையை உற்சாக கடலில் மூழ்கடிக்க ஒரு அருமையான வாய்ப்பு:



http://www.youtube.com/watch?v=AcebV9s2jnA
.................................................

டமாசு:

ஒரு மிகப்பெரிய தனியார் நிறுவனத்தின் முதலாளி வேலை நேரத்தில் ஒரு இளைஞன் வண்டி நிறுத்தும் இடத்தின் அருகே சுவற்றில் சாய்ந்தபடி வானத்தை வெறித்து பார்த்து கொண்டிருப்பதை கண்டார். அவன் அருகில் சென்று "ஏன் இங்கே நின்று கொண்டு இருக்கிறாய். ஏதேனும் பிரச்சனையா?"  அவன் "ஆம். எனக்கு சம்பளம் போதவில்லை" என்கிறான். அவர் "உனக்கு தற்போது எவ்வளவு சம்பளம்"  அவன் "ஐந்தாயிரம் ரூபாய்".  முதலாளி "இந்தா பிடி. இதில் 15,000 ரூபாய் உள்ளது. இனி இந்த இடத்தில வந்து நேரத்தை வீண் அடிக்காதே. எனக்கு பிடிக்காது. வேலையை பார்" என்று சொல்லிவிட்டு நகர்கிறார். 

தன் அலுவலகத்தில் பணிபுரியும் இன்னொரு ஊழியரை அழைத்து "கீழே ஒருவனிடம் பேசிக்கொண்டு இருந்தேன்.."  ஊழியர் "நானும் அதை பார்த்தேன்". முதலாளி "யார் அவன்? எந்த பிரிவில் வேலை செய்கிறான்?"  ஊழியர் "அவன் நம் நிறுவனத்தில் வேலை செய்பவன் அல்ல. பீசா விற்க வந்தவன்" 

முதலாளி "@#$%$$%"

நீதி:  தீர விசாரிப்பதே மெய். 
.....................................................


Posted by:
! சிவகுமார் !


          

Tuesday, February 22, 2011

காட்டு தர்பார் -சித்தியானந்தாவின் சிறுவிளையாடல்




கவுண்டமணி :- டேய் சிலிண்டர் தலையா என்னடா இன்னக்கி காலங்காத்தால பஞ்சயத்த கூட்டிருக்காங்க இன்னக்கி எவன்டா இந்த ஊர்காரங்க கிட்ட சிக்குனா?

செந்தில் :- தெரியலனே எவனோ வெளியூரு காரணாம் என்ன கேட்டாலும் சிரிச்சிகிட்டே இருக்கானாம் ஜனங்க அடிச்சும் பாத்துட்டாங்க அப்பாவும் சிரிச்சிக்கிட்டே இருக்கான் .

கவுண்டமணி :- அது யாருடா அப்பிடி ஒரு கிறுக்கன் பார்த்துடா கடிச்சிவச்சிர போறான்.

செந்தில் :- அதெல்லாம் சங்கிலி போட்டு கட்டி வச்சிருக்காங்க நாம போயி விசாரிச்சி தீர்ப்பு சொல்லணும் அவ்ளோதான் .

(அனைவரும் எழுந்து நிற்கிறார்கள் அங்கே முகம் எல்லாம் முடியோடு சங்கிலி போட்டு கட்டபட்ட ஒரு உருவம் அது அஞ்சாசிங்கம் மருது பாண்டியை பார்த்து ஆசீர்வாதம் செய்வது போல் கைகளை தூக்குகிறது .)

கவுண்டமணி :- இவளவு வாங்கியும் திருந்தல பாரு . டேய் பறங்கிக்கா தலையா அவன் மூஞ்ச மூடி இருக்கும் அந்த டோர ஓபன் பண்ணு  அவன் யாருன்னு நான் பாக்கணும் .

செந்தில் :- (முகத்தில் முடியை விலக்கியவுடன் )அய்யய்யோ அண்ணே  என்று கதறிய படி கீழே விழுகிறார் .


கவுண்டமணி :- யாருடா அது பச்ச புள்ளைய பயம் காட்டுனது ? டேய் நீயா............. உன்ன நான் இதுக்க முன்னால எங்கயோ பாத்துருக்கிறேனே. பரங்கிமலை ஜோதிலையா ?....................ஆங் ...இப்போ ஞாபகம் வந்திருச்சி நீ சண் டி.வீ.ல வந்த சாமியாருதானே .
உன் பேரு கூட சித்தியானந்தா தானே இங்க வந்து என்ன கேப்மாரித்தனம் பண்ணுனே .

சித்தியானந்தா :- நான் எந்த தவறும் பண்ணல ஒரு ஆராய்ச்சி செய்தேன் என்னை தவறாக நினைத்து பிடித்து கொண்டு  வந்து  விட்டார்கள் .

கவுண்டமணி :-அப்படி என்ன ஆராய்ச்சி (கீழே கிடக்கும் செந்திலை எட்டி உதைத்தபடி ) உட்டா அப்படியே தூங்கிடுவியே எந்திரிடா .

செந்தில் :- அண்ணே ஆத்துல குளிச்சிக்கிட்டு இருந்த நம்ம ஆறுமுகம் பொண்டாட்டிய பின்னால இருந்து கட்டி பிடிசுட்டாருனே .

கவுண்டமணி :-அது என்ன அப்படி ஒரு ஆராய்ச்சி பண்ணிருக்கே பொம்பள குளிக்கும் போது கட்டி பிடிகுற ஆராய்ச்சி. உன்ன உதச்சதோட விட்டாங்களேன்னு சந்தோசபடு மகனே நான் மட்டும் ஸ்பாட்ல இருந்திருந்தா நடக்குறதே வேற .

சித்தியானந்தா :- கட்டி பிடித்தது நான் இல்லை அது கிராபிக்ஸ் . இது ஒரு ஆன்மீக ஆராய்ச்சி உங்களுக்கு புரியாது .

கவுண்டமணி :- கையும் களவுமா பிடிச்சிருக்காங்க நான் இல்லேன்னா எப்படி ?

சித்தியானந்தா :- உங்களுக்கு விளக்கமா சொல்லனும்னா நான் இங்க இருக்கும் போதே பாண்டிச்சேரியிலும் இருப்பேன் .
அது மாதிரி இப்போ நான் பாண்டிச்சேரியில் இருக்கிறேன் . இங்க இருக்கிறவன பிடிச்சிட்டு அது நான்தான்னு சொன்னா எப்படி ?

 கவுண்டமணி :- டேய் இவன் ரொம்ப குழப்புராண்டா ...................

செந்தில் :- அண்ணே இந்த சாமியாரு வாய்ல இருந்து லிங்கம் எடுப்பாரான்னே ......

கவுண்டமணி :- வாய்ல இருந்து வாந்தி தான் எடுக்க முடியும் .என் வாய்ல இருந்து ஏதாவது வர்றதுக்கு முன்னால  எட்ட ஓடி போய்டு நாயே .....டேய் என்னடா உன் காலு அழுக்கு ஆகி  புன்னு பிடிச்சி போயி இருக்கு நீ காலே கழுவுறது இல்லையா ?

சித்தியானந்தா :- முன்னெல்லாம் என் கால கழுவுறதுக்கு 25,000  ஆயிரம் கட்டணம் வாங்குவேன் இப்போ யாரும் என் கால கழுவ வர மாட்றாங்க .

கவுண்டமணி :- யாரு வராட்டி என்ன நீ கழுவிக்க வேண்டியது தானே நாயே ..........

சித்தியானந்தா :- அது எப்படி நானே என் கால கழுவிக்கிட்டா எனக்கு 25,000  ஆயிரம் நஷ்டம் இல்லையா அதான் அப்படியே விட்டுட்டேன் .

கவுண்டமணி :-அட நாத்தம் பிடிச்சவனே உன்ன இப்படியே உட்டா நீ ஊரு ஊரா போய் ஆராய்ச்சி பண்ணிக்கிட்டு இருப்பே உன் ஆராய்ச்சிக்கு இங்கயே முடிவு கட்டுறேன் . டேய் இவன நம்ம ஊரு சுடுகாட்டுக்கு எடுத்துட்டு போங்க .

சித்தியானந்தா :- நாட்டாம தீர்ப்ப மாத்தி சொல்லு இங்க இருக்கிறது நான் இல்ல நான் பாண்டிச்சேரியில் இருக்கேன் .

 கவுண்டமணி :- அதாண்டி மகனே நீ பாண்டிசேரியில இரு நாங்க இங்க சுத்திக்கிட்டு இருக்குற இந்த கேப்மாறியதான் புதைக்க
 போறோம்

(அய்யோ என்று பின்னங்கால் பிடரியில் அடிக்க ஓடுகிறார் சித்தியானந்தா பின்னால் ஊர் மக்கள் துரத்திக்கொண்டு ஓடுகிறார்கள்  )


 

Monday, February 21, 2011

கால் கிலோ அல்வா - பன்னிக்குட்டி ராம்சாமி பேட்டி!





                                                                


இன்றைய கேள்விகளுக்கு பதில் அளிப்பவர்  பதிவுலக கவுண்டர் பன்னிக்குட்டி ராம்சாமி அவர்கள்!



1.ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணம் பண்ணு, பசி வந்தால் பத்தும் பறந்து
போகும், மாமியார் உடைச்சா மண் குடம்..மருமக உடைச்சா பொன் குடம். இந்த
பழமொழிகளுக்கு உங்க ஸ்டைல் ரிவிட் என்ன?

பன்னிக்குட்டி: 
ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணம் பண்ணு,
ஏன் 1001 பொய் சொன்னா அது கல்யாணம் இல்லியா?  பொய் சொல்றதே தப்பு, இதுல இவரு ஆயிரம் வரைக்கும் எண்ணிக்கிட்டே சொல்வாராம், ங்கொக்காமக்கா.... இப்படிப் பண்ணிப் பண்ணித்தாண்டா நாட்ல பாதிப் பேருக்கு மண்டைல முடி இல்லாம போச்சு....

பசி வந்தால் பத்தும் பறந்து போகும்,
பத்து பறந்து போறதுக்கு அது என்ன எலிக்காப்டராடா........? டவுசர் வாயா.....  பசி வந்தா போய் சாப்புடறத விட்டுப்புட்டு பேச்ச பாரு, லொல்ல பாரு, எகத்தாளத்தப் பாரு?

மண் குடம்...பொன் குடம்.
அப்போ மாமனாரு ஒடச்சா வெங்கல கொடமா? படுவா எந்தா நாரு ஒடச்சாலும்  மண்கொடம் மண்கொடம்தாண்டா கரிச்சட்டி மண்டையனுங்களா.....  கருமம் புடிச்சவனுங்க.... பழமொழி,  பழுக்காத மொழின்னு... ஏண்டா  எவனோ எப்பவோ பொழுதுபோகாம சொல்லி வெச்சத இன்னும் சொல்லிக்கிட்டு திரியறீங்க?
..........................

2. உலக கோப்பை கிரிக்கெட் பார்க்கும் ஆர்வத்தில் தேர்வுக்கு படிக்காமல்
இருக்கும் மாணவர்களுக்கு ஒரு குட்டிக்கவிதை சொல்லுங்க தலைவா...
யக்கா மவளே இந்து....... ஓ.... சாரி.... ட்ங்க் ஸ்லிப்மா....... யூ மீன் ஸ்டுடண்ட்ஸ்.......... ?

பன்னிக்குட்டி:  ஹல்லோ ஆல் யங் ஸ்டூடண்ட்ஸ்....... படிச்சமா.... பரிட்ச எழுதுனமான்னு இருக்கோனும், அதவிட்டுப்புட்டு, அங்க அங்க நின்னு டீவி ஷோரூம்கள்ல மேட்சு பாக்கறது, முக்குல நின்னு சிகுனல் கொடுக்கறது, காத்துல கணக்குப் போடுறது...... பொண்ணுகள பாத்து மம்மிய பாத்த எம்எல்ஏ மாதிரி பம்முறது.... இதெல்லாம் பாத்தேன்... படுவா... ஒருத்தனுக்கும் இனி காலைல பல்லு வெளக்க பல்லு இருக்காது.....!  
என்னது இது கவிதை இல்லியா?  அப்போ.. நெக்ஸ்ட் கொஸ்டின் ப்ளீஸ்....
............................

3. பேரரசு: என் அடுத்த படத்துல நீங்கதான் வில்லன். விஜய் ஹீரோ. படத்தோட  டைட்டில் 'விஜயவாடா'.  சிச்சுவேசன்: ரேசன் கடைல ஊழல் செஞ்சதா உங்களை விஜய் தட்டி கேட்கும் காட்சி. அந்த வசனம் மட்டும் நீங்க எழுதணும். என்ன எழுதுவீங்க?

பன்னிக்குட்டி: அய்யய்யோ..... இந்த தீஞ்ச மண்டையன் படத்துக்கெல்லாம் வசனம் எழுத வெச்சிட்டானுகளே?
ஓகே, ஐ வில் ட்ரை...

விஜய்: டேய்ய்..... ரேசன் கடைல இருந்துக்கிட்டு மக்களுக்கு போய் சேரவேண்டிய பொருள்களை இப்படி திருடித் திங்கிறீயே வெக்கமா இல்ல உனக்கு?

பன்னிக்குட்டி: ஆமா, அப்பிடியே கோடி கோடியா அடிச்சு அயல்நாட்டுக்கு ஏற்றுமதி பண்ணிட்டோம் பாரு?  2 லட்சம் கோடி, 4 லட்சம் கோடின்னு அடிக்கறவன விட்ருங்கடா, எங்ககிட்ட மட்டும் வந்து நல்லா கேள்வி கேளுங்கடா.......! ங்ணா..... இதே வசனத்த 51-வது தடவையா பேசுறீங்களே, உங்களுக்கு வெக்கமா இல்லீங்களாங்ணா.....?  ங்கொக்காமக்கா.. கரடிக்கு சேவிங் பண்ண மாதிரி இருந்துக்கிட்டு பேச்ச பாரு? படுவா..... உனக்கும் ஒரு பங்கு கொடுத்திருந்தா வாய மூடிக்கிட்டு லைன்ல நின்னுருப்பே....! பிஞ்சு போன பஞ்சு டயலாக்க ஓரமா நின்னு வாந்தி எடுக்கப் போற பயலுக்கு லவுசப் பாரு... என்னமா சவுண்டு கொடுக்குது பார்ரா?  அதெப்பட்றா பண்றதையும் பண்ணிட்டு கொஞ்சம் கூட வெக்கப்படாம இப்படி கேள்வி கேக்குறீங்க? நான் பாட்டுக்கு பேசிக்கிட்டு இருக்கேன், கொஞ்சமாவது பீல் பண்றானான்னு பாருங்க? அதென்றா வாய்க்குள்ள உருளுது, அதுக்குள்ள எடக்கல்ல எடுத்து வாய்க்குள்ள அமுக்கிட்டியாடா டாஸ்மாக் வாயா.......? 

விஜய்: கடவுள்கிட்ட மட்டும்தான் சாந்த்த்தமா பேசுவேன்.. சாக்கடை கூட இல்ல...

பன்னிக்குட்டி: அப்போ இங்க ஏனுங்ணா வந்தீங்க....?கடவுள்கிட்டேயே போய் பேசுங்ணா.... !

விஜய்: வாடா..வாடா விஜயவாடா........

பன்னிக்குட்டி: போடா போடா... போண்டாவாயா......
.....................................

4. தலைவர் கவுண்டரும் நீங்களும் ஒரு இடத்தில் தற்செயலாக சந்திக்கிறீர்கள். அப்போது நீங்கதான் கவுண்டர் என்றெண்ணி மக்கள் உங்களிடம் ஆட்டோ க்ராப் கேட்கிறார்கள். அப்ப நீங்க என்ன செய்வீங்க? கவுண்டமணி எப்படி பேசி இருப்பார்?

பன்னிக்குட்டி: அடங்கொன்னியா இவனுக  நம்மளையே ஒரிஜினலுன்னு நெனச்சுட்டானுகளே? சே இது கொஞ்ச வருசத்துக்கு முன்னாடி தெரிஞ்சிருந்தா அப்பிடியே மார்க்கெட்டையும் புடிச்சிருக்கலாம் சில சில சிட்டுகளையும் வளைச்சிருக்கலாம்..... எதுக்கும் இப்பிடியே மெயிண்டெயின் பண்ணி இன்னிக்கு ஏதாவது கிடைக்குமான்னு பார்ப்போம்........!

கவுண்டர்: அடங்கொக்காமக்கா, இந்தப் பன்னிவாயன் பேசுறதுதான் டுபாக்கூருனா ஆளே சுத்த ஃபோர்ஜரியா இருப்பான் போல இருக்கே? நல்ல வேள நான் வேற தெளிவா இருக்கேன், கொஞ்சம் அப்பிடி இப்பிடி இருந்திருந்தா இன்னேரம் நானே நம்பி இருப்பேனே.....? ராஸ்கல்.. இவன இப்பிடியே விட்டா என்னையே வித்துட்டு போயிடுவான்... .... ஹாய்.... பப்ளிக்.....  ஐ கம்முய்யா......அது நாந்தாங்க...... அது நாந்தாங்க.......... ம்ம் என்னது எவனும் கண்டுக்க மாட்டேங்கிறான்... அடப்பரதேசி பன்னாட நாய்ங்களா இத்தன வருசமா நடிச்சும் ஒரிஜினலு நாந்தான்னா நம்ப மாட்டேங்கிறீங்களேடா? பன்னி, மரியாதையா நீயாவது அது நாந்தான்னு சொல்லிரு......

பன்னிக்குட்டி: யோவ் கம்முனு இருய்யா, எனக்கும் ஒரு சான்ஸ் கெடச்சிருக்கு கொஞ்ச நேரம் எஞ்சாய் பண்ணிக்கிறேன். இதுக்குத்தான் அப்பப்போ டீவி, ரேடீயோ, பேப்பருல, பொஸ்தவத்துல பேட்டி கொடுத்து ஜனங்களுக்கு மூஞ்சிய காட்டிக்கோனும்கறது....

கவுண்டர்: எனக்கே அல்வாவா.....? மவனே.... எல்லாரும் போகட்டும், அப்புறம் இருக்குடி உனக்கு...........!
....................................

5. பதிவர்களில் மூன்று பேர் நேரில் சிக்கினால் பொளந்து கட்ட வேண்டும் என
நினைப்பது யாரை? ஏன்?

பன்னிக்குட்டி: ங்ணா நாங்கள்லாம் சவுண்டுதானுங்ணா ஜாஸ்தியா கொடுப்போம்..... ஒரு அப்பு அப்புனா அப்பிடியே பொத்திக்கிட்டு போய்ருவோம்ணா.......
..............................

6. படத்திற்கு கமன்ட் போடவும்:



                                                                       
பன்னிக்குட்டி: ஆமா இந்த வெளக்கெண்ண வாயன்க அப்பிடியே பேசிக் கிழிச்சி பாலாறும் தேனாறும் ஓட வெச்சிடுவானுங்க பாருங்க......? கேன்டீன்ல பஜ்ஜி நல்லாருந்தா போயி நல்லா தின்னுப்புட்டு தூங்க வேண்டியதுதானே, படுவா அத விட்டுப்புட்டு சும்மா சக்கைல சாறு எடுத்தா வருமா.....? அதெல்லாம் எப்பவோ எங்கெங்கேயோ டெபாசிட் பண்ணியாச்சுங்கோ, இனி கூட்டுக்குழு போட்டாலும் கெடைக்காது, கூட்டாத கூழு குடிச்சாலும் கெடைக்காதுங்கோ.......பேசாம அடுத்து எதுல சான்ஸ் கெடைக்கும்னு பாருங்கங்கோவ்..........
..............................

7. பன்மோகன் சிங்: எவ்ளோ நல்லவனா இருந்தாலும் பல ரூபத்துல பிரச்னை
வருதே. எத்தனை ஊழல்டா சாமி. மிஸ்டர் ராம்சாமி, ஒரு மாசம் ஜாலியா
வெளிநாட்ல ரெஸ்ட் எடுக்கப்போறேன். நீங்க என் பதவில உக்கார்றீங்களா?

பன்னிக்குட்டி: கொஞ்சம் இருங்க, பின்னாடி அடியாளு யாரும் வெச்சிருக்கீங்களான்னு பாத்துக்குறேன்....ங்ணா... என்னங்ணா இது... உங்களுக்கே நியாயமா.......? சும்மா இருந்தப்பெல்லாம் உக்காந்து ஜாலியா எஞ்சாய் பண்ணிட்டு, அடி கன்பர்ம்னு தெரிஞ்ச உடனே மாட்டிவிடுறீங்களே? ங்ணா எந்த நாட்டுக்குங்ணா போறீங்க? ஸ்விஸ்சுக்குங்ளா? என்னையும் அங்கேயே கூட்டிட்டுப் போய்டுங்ணா, அந்த பேங்கு வாசல்லேயே உக்காந்து பிச்சை எடுத்தாவது நானும் ஓரு தொழிலதிபர் ஆயிடுறேனுங்ணா.......
................................

8. நீங்க பாட்டுக்கு சிவனேன்னு ரோட்ல போயிட்டு இருக்கீங்க. இன்னும் கொஞ்ச நேரத்துல இன்டர்வியு. திடீர்னு 'வல்லரசு' விஜயகாந்த் குறுக்க வந்து "கொலை  முயற்சி கேசுல உங்களை கைது செய்றேன்" அப்டின்னு உங்களை கொண்டு போய் ஜெயிலில் அடிக்கிறார். நீங்கள் என்ன சொல்லியும் கேட்காமல் வெளுத்து துவைக்கிறார். மறு நாள் காலை கேப்டன் உங்கள பாத்து  "நீங்க பில்லா இல்லன்னு கன்பார்ம் ஆயிருச்சி. போகலாம்" என்று சொல்கிறார். அப்போது உங்க ரியாக்சன்/பதில்..


                                                          
                                                                
பன்னிக்குட்டி: ஆ..... காது ரெண்டுலேயும் நல்லா அடிச்சுட்டாங்க போல..... ஒண்ணும் கேக்க மாட்டேங்கிது........ யப்பா .... டங்குவாரு கிழிஞ்சிடுச்சுடா சாமி......... இன்னேரம் வீட்ல இருந்தா சொகமா கொத்துப்பரோட்டா தின்னுக்கிட்டு இருப்பேனே..............? என்ன ஏட்டு என்னமோ சொல்றாரு.... சார்... என்ன சார் சொல்றீங்க?

ஏட்டு: உன்னை ரிலீஸ் பண்ணச் சொல்லிட்டாங்க...

பன்னிக்குட்டி: ஆங்..இது பெரிய சூப்பர் ஸ்டாரு படம்.... இன்னிக்கு ரிலீஸ்சு......... பாத்தீங்களா ஜனங்களே அந்த இண்டெர்வியூ மட்டும் போயிருந்தா.. இன்னேரம் எங்கேயோ போயிருக்க வேண்டியவன, இவனுக அள்ளிக்கிட்டு வந்து விடிய விடிய கொத்துக்கறிய கொத்துற மாதிரி கொத்திப்புட்டு இப்போ கொஞ்சம் கூட பீல் பண்ணாம போக சொல்றானுங்க......  (தீபாவளி, பொங்கல்னு காசு கேட்டு வரட்டும்... சொறிநாய வெச்சி கடிக்க விடுறேன்....)
போலீஸ் டிப்பார்ட்மெண்ட்ல வேற ஆளே இல்லேன்னுதானே உங்களைக் கூப்புட்டு பில்லாவ புடிக்கச் சொன்னாங்க கேப்டன்......... இது உங்களுக்கே நல்லா இருக்கா? நான்தான் நான் பில்லா இல்லேன்னு அப்பவே சொன்னேனே.... கேக்க மாட்டேனுட்டானுகளே.... எவனோ ஒரு கிருதுருவம் புடிச்ச மாங்கா மண்டையன் அவன்பாட்டுக்கு நான் தான் பில்லான்னு சொல்லிட்டுப் போயிட்டான்.... நான் இவனுககிட்ட மாட்டிக்கிட்டு இப்படி லோல்படுறேன்....  அவன் மட்டும் என் கைல கெடச்சான்.........

கேப்டன்: ஏய் மிஸ்டர்... குற்றவாளிகளை தேடும்போது இப்படி அப்பாவிகள் மாட்டறது சகஜம்.... இப்போ தமிழ்நாட்ல 1 லட்சத்து 84 ஆயிரம் பேரு தேடப்படும் குற்றவாளியா இருக்காங்க, அவங்களைப் பிடிக்க 23 ஆயிரம் போலீஸார்......

பன்னிக்குட்டி: (மேட்டுக்குடியில் வருவது போல் கையெடுத்து கும்பிட்டபடி) ங்ணா....... அந்தக் கொலைய நாந்தான் பண்ணேனுங்ணா.... புடிச்சி தூக்குலேயே போட்ருங்ணா..... போற உசுரு உடனே போகட்டும்.......!

.........................................

9. பாஜபக்சே: ஹல்லோ மிஸ்டர்..ராம்சாமி. எங்க நாட்டு டூரிசம் சார்பா உங்கள ஒரு வாரம் சிறப்பு விருந்தாளியா அழைக்கிறேன். என் ரூம்ல தான் தங்கணும். என்ன சொல்றீங்க?

பன்னிக்குட்டி: என்னது சுற்றுலாவா அதுவும் உங்ககூட வேற தங்கனுமா? இதுக்கு அந்த கூகிள் மண்டையன் கூடவே இருந்திடுவேனே...... வேண்டாம்டா சாமி,  என்னைய வெச்சிக்கிட்டு நான் தான் மீனவர்களை கொல்ல சொன்னேன்னு பேட்டிக் கொடுத்தாலும் கொடுத்திருவ....  அப்புறம் எங்க தலைவரு அதிலேயும் பங்கு கேப்பாரு......! அய்யோ........ இந்த ஹிப்புப்போட்டமஸ் தலையன் இன்னும் அடங்க மாட்டேங்கிறானே? ஆண்டவா என்னை ஏன் இந்த மாதிரி நாதாரிங்க கூட கூட்டு சேர்க்கிறே...........?
.......................................

10. "சப்போஸ் உன்ன காதலிச்சா", "லூசு பெண்ணே லூசு பெண்ணே", "எவண்டி உன்ன பெத்தான். கைல கெடச்சான் செத்தான்" போன்ற தத்துவ பாடல்களை எழுதியவர்கள் உங்கள் கையில் சிக்கினால்...

பன்னிக்குட்டி: இவனுகளைத்தான்யா நானும் ரொமப நாளா தேடிக்கிட்டு இருக்கேன், ங்கொக்காமக்கா...  காச வாங்கிட்டு இவனுக பாட்டுக்கு இஷ்டத்துக்கு எதையாவது எழுதிட்டுப் போயிடறானுங்க, அதாவது பரவால்ல..... பொழப்புன்னு அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம், ஆனா அதுக்கப்புறம் அந்தப் பாட்டுகள நாட்ல இருக்க வெந்தது வேகாதது, ஒட்டு பீடி பொறுக்குனதுகள்லாம் பாடிக்கிட்டுத் திரியறானுங்க பாருங்க.........  முடியலடா சாமி...  காச்சுன கம்பிய எடுத்து காதுல விட்ட மாதிரி இருக்குய்யா.......   சே..சே..சே நாடே நமச்சல் எடுத்து போச்சு............ !
...................................

சிறப்பு கேள்வி: கவுண்டமணி/செந்தில் படங்களில் தங்களுக்கு மிகவும்
பிடித்த மூன்று காமெடி ட்ராக் எது? ஏன்?

பன்னிக்குட்டி: இதுதான் ரொம்பக் கஷ்டமான கேள்வி...... மூன்று மட்டும் எப்படி சொல்றது?  இருந்தாலும் உங்களுக்காக (இது தரவரிசைப்படி அல்ல)

மன்னன்: இந்த தொழிலதிபர்கள் தொல்ல தாங்கமுடியலடா சாமி....
சேரன் பாண்டியன்: அய்யா கொட புடிச்சிக்கிட்டு போற பெரியவரே....
சூரியன்: அரசியல்ல இதெல்லாம்..........., ஸ்டார்ட் மியூசிக்....
அப்புறம்......
கோயமுத்தூர் மாப்ள
உத்தமராசா
ஊர்மரியாதை
தாலாட்டு கேட்குதம்மா
கரகாட்டக்காரன் (இது இல்லேன்னா எப்படி?)
உள்ளத்தை அள்ளித்தா
மேட்டுக்குடி
மாமன் மகள்
கோவில் காளை
சின்னக் கவுண்டர்
நடிகன்

இன்னும் நிறைய இருக்கு, ஆனா படங்களின் பெயர்கள் இப்போ ஞாபகம் இல்ல
...................................

கேள்விகள் 
! சிவகுமார் ! 



Thursday, February 17, 2011

நையாண்டி பவன் – மிஷ்கின்


முஸ்கி: இந்த இடுகையில் உள்ள அனைத்தும் நகைச்சுவைக்காக மட்டுமே எழுதப்பட்டது... யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கில் அல்ல...

(குமுதத்தில் வரும் நையாண்டி பவன் காமிக்ஸ் கான்செப்ட் பற்றி அறிந்திருப்பீர்கள். அறியாதவர்களுக்கு நையாண்டி பவன் என்ற இந்த ஹோட்டலுக்கு நம்ம தானைத்தலைவர் கவுண்டமணி அண்ணன்தான் முதலாளி அவரோட உதவியாளரா செந்தில். ஹோட்டலுக்கு வந்து போறவங்ககிட்ட என்னா ரவுசு பண்றாங்கன்னு நீங்களே பாருங்க...)

கவுண்டமணி: அய்யா கூலிங்கிளாஸ் போட்டுட்டு வர்ற பெரியவரே... வணக்குமுங்க...

(கூலிங்கிளாஸ் போட்டபடி இயக்குனர் மிஷ்கின் உள்ளே நுழைகிறார்...)

கவுண்டமணி (மைண்ட்வாய்ஸ்): இவனுக்கா வணக்கம் சொன்னோம்... வீட்டுக்கு போனதும் கையை அடுப்புல வச்சி கருக்கிடனும்...

கவுண்டமணி: அதென்னங்கண்ணா ரூமுக்குள்ள வந்தப்புறமும் கூலிங்கிளாஸ்... கழட்டி ஓரமா வைக்கிறது தானே...

(மிஷ்கின் கூலிங்கிளாசை கழட்ட, செந்தில் ஜெர்க் ஆகிறார்...)

கவுண்டமணி: ஐயோ ண்ணா... பையன் பயப்புடறான் தயவுசெஞ்சு கூலிங்கிளாசை கண்லயே மாட்டிக்கோங்கண்ணா... அது அங்கேயே இருக்கட்டும்...

செந்தில்: அண்ணே... உங்க யுத்தம் செய் படத்த பார்த்தேன்னே... எப்படிண்ணே இந்தமாதிரி எல்லாம் யோசிக்கிறீங்க...?

மிஷ்கின்: ஒரு அம்பது வயசு அம்மா....

கவுண்டமணி: யாருங்க நம்ம அம்மாங்களா...???

மிஷ்கின்: யோவ் குறுக்குல பேசாதய்யா மனப்பாடம் பண்ணிட்டு வந்தது மறந்து போயிடும்...

ஒரு அம்பது வயசு அம்மா கோர்ட்டுல உக்காந்திருக்காங்க... அந்த அம்மா சிகரெட் பிடிச்சாங்க... அதுக்கப்புறம் என் மூஞ்சில காரித்துப்பினாங்க.... அவங்க எதுக்காக துப்பினாங்கன்னு யோசிச்சு எழுதின கதை தான் யுத்தம் செய்...

செந்தில்: அதெல்லாம் சரிண்ணே... இந்தப்படத்துல சேரன் வித்தியாசமா நடிச்சிருக்காரே... அதப்பத்தி கொஞ்சம் சொல்லுங்கண்ணே...

மிஷ்கின்: நம்ம எல்லாருக்குள்ளையும் ஒரு புலி தூங்கிட்டிருக்கு... அந்தப்புலியை இந்தப்படத்துல அவுத்து விட்டிருக்கிறோம்...

கவுண்டமணி: என்னது புளிங்களா...? கொட்டை எடுத்ததா எடுக்காததா...?

கவுண்டமணி: அது ஏனுங்கண்ணா உங்க படத்துல அடியாளுங்க ஒவ்வொருத்தரா வந்து சண்டை போடுறானுங்க... இங்க என்ன ரேஷன்ல மண்ணெண்ணை கொடுக்குறாங்களா...

மிஷ்கின்: நிஜ வாழ்க்கைல யாராவது நம்மள அடிக்க வந்தா பறந்து பறந்து அடிக்கிறோமா... இல்லிங்களே... அந்த யதார்த்தத்தை தான் என் படத்துல காட்டுறேன்...

கவுண்டமணி: நல்லா காட்டுனீங்க பதார்த்தத்தை... உங்கள இந்தமாதிரி எல்லாம் பேசச் சொல்லி யாருங்க்ண்ணா கத்து குடுக்குறது...?

மிஷ்கின்: புக்ஸ் படிக்கிறேங்க... இப்ப இருக்குற உதவி இயக்குனரு பயலுங்க மாதிரி எல்லாம் கிடையாதுங்க நான்... நிறைய புக்ஸ் படிக்கிறேன்... அதனால பேசுறேன்...

கவுண்டமணி: புக்ஸ்ன்னா சரோஜா தேவி புக்ஸ் தானே...???

செந்தில்: அண்ணே... எனக்கு ஒரு டவுட்டுண்ணே...

கவுண்டமணி: ஆரம்பிச்சிட்டாரு டவுட் தங்கபாலு... என்றா டவுட் கொஸ்டின் மண்டையா...

செந்தில்: எது ஏன்னே உங்க எல்லாப் படத்துலயும் மஞ்சள் புடவை பாட்டு, சிகப்பு நிற டைட்டில் வைக்கிறீங்க...

கவுண்டமணி: டேய் விக்கி லீக்ஸ் வாயா... கலைஞருக்கு மஞ்சள் துண்டு, அம்மாவுக்கு பச்சை புடவை மாதிரி சாருக்கு அது ஒரு செண்டிமன்ட் டா...

மிஷ்கின்: அது ஒண்ணுமில்ல... ஆடித்தள்ளுபடில ஒரு புடவைய எடுத்தோம்... அதை கட்டிக்கிட்டு எப்படி ஆ(ட்)டினாலும் கிழியாம இருந்துச்சு... அதனால அதையே எல்லாப் படத்துலயும் யூஸ் பண்ணிக்கிறேன்...

செந்தில்: அது யாருண்ணே அந்த பாட்டுக்கு நடுவுல விரலை மட்டும் காட்டுறது...?

மிஷ்கின்: அது ஒரு அல்லக்கை... எனக்கு ஏதாவது ரோல் கொடுங்கன்னு கேட்டுட்டே இருந்தான்... சரி போய்த்தொலையட்டும்ன்னு ஹார்மோனியம் வாசிக்க விட்டேன்...

செந்தில்: அப்படின்னா சாரு நிவேதிதா...?

மிஷ்கின்: அவர் என்னோட நண்பர்... என்னோட நண்பர்... என்னோட நண்பர்...

கவுண்டமணி: அத ஏனுங்கண்ணா மூணு முறை சொல்றீங்க... தண்ணி ஓவராயிடுச்சா...???

கவுண்டமணி: ஏனுங்க நீங்க உலகப்படங்களை பாத்து காப்பி அடிக்கிறதா சிலவனுங்க சொல்றானுங்களே... அதெல்லாம் உண்மையா...?

மிஷ்கின்: ஆமாங்க... அகிரோ குரசோவா, டகேஷி கிடானு இவங்களை எல்லாம் பாத்து தான் நான் சினிமா எடுக்க கத்துக்கிட்டேன்...

செந்தில்: அண்ணே... என்னன்னே திடீர்னு கெட்டவார்த்தைல திட்டுராரு...

கவுண்டமணி: அடேய் கோமுட்டி தலையா... அதெல்லாம் ஓலகப்பட இயக்குனருங்க பேருடா... அவங்க எடுத்த படங்களை தான் இவரு ரீமேக் பண்றாரு...

மிஷ்கின்: அப்படியே பாத்தாலும் நான் உங்களுக்கு ஒன்னும் அபின் கொடுக்கலையேங்க... என் மக்களுக்காக நல்ல படங்களைதானே தர்றேன்...

கவுண்டமணி: ரொம்ப சந்தோஷமுங்க... அப்படின்னா கையோட கையா காப்பிரைட் வாங்கிட்டு எடுக்கலாமேங்க...

மிஷ்கின் (தலையை சொறிந்தபடி): அதுக்கெல்லாம் காசு கொடுக்கணுமே தம்பி...

கவுண்டமணி: பாத்துக்கோங்க பொதுஜனங்களே இந்த பாவத்துக்கெல்லாம் நான் ஆளாகவே மாட்டேன்... என்ன உட்ருங்க...

செந்தில்: எண்ணே... நந்தலாலா படமும் கிகுஜிரோ படமும் அப்படியே அச்சு அசல் ஒரே மாதிரியே இருக்குறதா பேசிக்கிறாங்களே ண்ணே...

மிஷ்கின் (கடுப்பாகி): ஏங்க அப்படி பார்த்தா மணிரத்னம் காப்பி, நாயகன் காப்பி, பாரதிராஜா காப்பி, பதினாறு வயதினிலே காப்பி, கேஆர்பியோட பயோடேட்டா காப்பி... இவ்வளவு ஏங்க உங்க நையாண்டி பவனே காப்பி... என்னவிட்டா நான் நாலு மணிநேரம் கூட பேசுவேன்...

கவுண்டமணி (டென்ஷனாகி செந்திலின் புட்டத்தை எட்டி மிதித்தபடி): சொறி புடிச்ச மொன்னை நாயே... இனிமே இந்த மாதிரி ஆளுங்கள எல்லாம் கடைக்குள்ள சேர்த்தா கூகுள் ஓனரை விட்டு கடிக்க வச்சிடுவேன்... ஜாக்கிரதை...

(இந்த சம்பவத்தை பார்த்து மிஷ்கின் தலைதெறித்தபடி ஓடுகிறார்...)

கவுண்டமணி (மிஷ்கின் ஓடிய திசையை பார்த்து): படுவா... இனிமே நீ ஓலகப்படம் பார்த்த உன்ன ஒரே அப்புல மக்காத்தி பண்ணிடுவேன்...

Wednesday, February 16, 2011

கால் கிலோ அல்வா - கே.ஆர்.பி. செந்தில்






கால் கிலோ அல்வா சிறப்பு பேட்டி:





ரசிகர் மன்ற கேள்விகளுக்கு கே.ஆர்.பி. செந்தில் பதில்கள். 



                                                                                

1. தங்கள் வலைப்பூவில் வரும் படங்கள் மற்றும் செய்திகள் பெரும்பாலும்
இயக்குனர் 'பாலா' பட ரேஞ்சுக்கு உள்ளதே? தங்களுக்கு 'பதிவுலக பிதாமகன்'
என்று பாராட்டு விழா நடத்தினால் பங்கேற்பீர்களா
?

கே.ஆர்.பி.செந்தில்: என்னை திருட்டு கேசுல உள்ள வைக்க திட்டமா என்ன? அத்தனை போட்டாவும் நான் எடுத்தது இல்ல தம்பி .. அது கூகுல்காரன்கிட்ட சுட்டது.

2. அது என்ன பின்நவீனத்துவம், இறையாண்மை, கண்டனம், JPC???  பத்து
வரிகளுக்கு குறையாமல் பதில் அளிக்கவும்.

கே.ஆர்.பி.செந்தில்: பின் நவீனத்துவன்றது எழுதரவனுக்கே புரியாம எழுதுறது. அத படிக்கிறவனெல்லாம் புரிஞ்ச மாறிக்கே கடுதாசி போடுறது. ஒரு பயலும் கடுதாசி போடலேன்னா தனக்கு தானே போட்டுக்குறது.

இறையாண்மைன்னா.. ஒரு நாட்டில் ஆட்சியாளர்கள் ஆண்மையுடன் இருக்கவேண்டும். அதாவது கர்நாடக அரசு ஓகேனக்கல்ல தமிழ் நாட்டு அரசாங்கம் கூட்டு குடிநீர் திட்டம் கொண்டு வந்தா எதுக்குது. நாம ஜகா வாங்கிட்டோம்.

சைனாக்காரன் காஸ்மீரிகளுக்கு தனி விசா கொடுக்குறான். அருணாச்சல பிரதேசத்த தன்னோடதுன்னு சொல்றான். நாம அவனோட நமக்கு இருக்கிற ராஜதந்திர உறவுகல முறிச்சுக்காம திபெத் அவனுதுதன்னு ஜகா வாங்கறோம். இப்படி கவருமென்டையே கொல்லையடிக்கிறவன் கிட்ட கொடுத்தா இறையாண்மை பத்தி சந்தேகம்தான் வரும்..
அப்புறம், கண்டனம் JPC லாம் டகால்டி வேலை.
.
3. குடி குடியை கெடுக்கும்.  குடியரசால் குடிமகன்களுக்கு நிம்மதி இல்லை என்பதுதான் இதன் உள்/வெளி, வெட்டவெளி அர்த்தமா??

கே.ஆர்.பி.செந்தில்: பின்னே வேறென்ன காரணம் இருக்குன்னு நெனக்கிரே .. ஆனா ஓட்டு மொத்த தமிழனையும் போலி சரக்க குடிக்க சொல்லிட்டு ஆளும் ராசா மாறுங்க வெளிநாட்டு சரக்கு அடிக்குதுங்க.. 

4. ஆண்கள் ஷார்ட்ஸ், பெண்கள் நைட்டி போட்டுக்கொண்டு நகர்வலம் வருவதை கண்டு பொங்கி எழலாமா? குமுறி அழலாமா? சிரித்து விழலாமா??

கே.ஆர்.பி.செந்தில்: ஒண்ணுமே போடாம் போறது கூட அவனுங்க\ அவளுங்க சொந்த விருப்பம். ஏன் இப்ப எல்லாரும் வேட்டியும், சேலையும்தான் கட்டனுமா. சின்னப்பய எல்லாம் புத்தி சொல்ல வந்துட்டானுக..  


5.
இந்த படம் குறித்து 'தெளிவான' கமன்ட் போடவும்

                                  
கே.ஆர்.பி.செந்தில்: இதுல என்ன தப்பு இருக்கு. அத்தனை பேரும் சரக்கு வாங்கரத விட்டுட்டு அந்த பொண்ணையே மொறச்சு பாக்குறானுக பாரு. பொண்ணுங்க சரக்கடிப்பது அவர்களின் தனிப்பட்ட உரிமை. இத போட்டா எடுத்தவன ஒதைக்கணும்.

6. ஊழலுக்கு அரசாங்கம் அடிக்கடி கமிட்டி என்று ஒன்று வைத்து
விவாதிக்கிறதே, எதிலும் கமிட் ஆகாமல் டீ குடித்துவிட்டு செல்வதால்தான் அந்த பெயரா
??

கே.ஆர்.பி.செந்தில்: இவனுங்க கொள்ளையடிச்சத பங்கு சரியாக் கிடைக்காத அவனுங்க ஆளே போட்டுக்கொடுப்பான். அதபத்தி போனதடவே கொறச்சலா அடிச்ச எதிர்க்கட்சிக்காரன் வயிதெரிச்சல் வந்து கூச்சல் போட அப்புறம் இவனே கமிட்டி போடுவான். மக்களே இது தாங்காமத்தான் காசு வாங்கிட்டு ஓட்டு போட தயாரயிட்டானுங்க.. 

7.
நெரிசலான ரங்கநாதன் தெருவில் நீங்கள் நடந்து செல்கையில் திடீரென ஒரு கட்சியின் மாவட்ட செயலாளர், சாக்பீஸில் ஒரு சிறு வட்டம் போட்டு "வாங்க வட்டத்துக்குள்ள நின்னுக்கிடுவோம். ஒண்டிக்கு ஒண்டி" என்று சண்டைக்கு இழுத்தால் என்ன செய்வீர்கள்? (என்ன செய்தாலும் வட்டத்தை விட்டு வெளியே செல்லக்கூடாது என்பது ஆட்ட விதி).

கே.ஆர்.பி.செந்தில்: வட்டமோ சதுரமோ எந்த அரசியல்வாதி வந்தாலும் ஒரு கை பாத்துர வேண்டியதுதான்.


8.
நீங்கள் தமிழகத்தின் முதல் அல்லது இரண்டாவது அமைச்சர் ஆனால் நிறைவேற்றத்(துடி)துடிக்கும் முக்கியமான மூன்று அம்சங்கள்?

கே.ஆர்.பி.செந்தில்: நானா? முதல், ரெண்டாவது இல்லே! கடேசில நின்னு வாழ்க கோசம் போடுறான் பாரு அவனாக்கூட ஆகமாட்டேன். இருந்தாலும் ரொம்ப ஆசெப்பட்டு கேக்குறே.
1. இதுவரைக்கும் கொள்ளையடிச்ச அத்தனை பேரையும் உள்ளே போடுவேன்.
2 . ஒரு குடும்பத்துல இருந்து ஒரு தடவதான் பதவி வகிக்க முடியும். அதுவும் மூணு வருசத்துக்குதான். அதே போல ஒரு தடவதான் அமைச்சர் பதவி வகிக்க முடியும். அப்படின்னு சட்டம் போடுவேன்.
3. எல்லோருக்கும் எல்லாமும் அப்படின்னு ஒரு திட்டம் வச்சிருக்கேன். அத துவங்கி நிறைவேத்துவேன் .  சரியாத்தான் பேசிருக்கேனா # டவுட்டு 

9. 'எவனா இருந்தா எனக்கென்ன' ,  'போங்கடா நீங்களும் உங்க அரசியலும்', 'எங்கடா உங்க எம்.எல்.ஏ?' எந்த படத்தின் டைட்டில் தங்களுக்கு மிகவும் பிடித்தது. ஐந்து வரிகளுக்கு குறையாமல் பதில் அளிக்கவும்.

கே.ஆர்.பி.செந்தில்: படத்துக்காவது இப்படி பேரு வக்க முடியுதுன்னு சந்தோசப்படு ராசா. நேர்ல எந்த எம். எல். ஏ கிட்டயாவது இப்புடி கேக்க முடியுமா? கேட்டா உன்னை சும்மா விட்ருவாங்களா


10.
இறுதியாக/உறுதியாக, மக்களுக்கு என்ன(தான்) சொல்ல நினைக்கிறீர்கள்?

கே.ஆர்.பி.செந்தில்: ஆமா! நான்சொல்றத கேட்டாதான் எல்லாருக்கும் சோறு எறங்கும் பாரு! கருத்து சொல்லத்தான் ஆயிரம் பேர் இருக்கானுகளே! நானும் வேறயா?

................................


கேள்விகள் : ! சிவகுமார் !


  
  



Tuesday, February 15, 2011

அஞ்சா சிங்கம் மருது பாண்டியின் காட்டு தர்பார்



 

இடம் : அரசமரத்து அடிவாரம்
நேரம் : மாலை ஆறு மணி
ஊர்   : சினிமாபட்டி கிராமம்

எல்லோரும் நாட்டாமை அஞ்சா சிங்கம் மருது பாண்டியின் வருகைக்காக காத்திருக்கிறார்கள் .
அப்போது ..........எஜமான் காலடி மண்ணெடுத்து பாடல் ஒலிக்க ரெண்டு ஜோடி கால்கள். கொஞ்சம் மேல தூக்கி பார்த்தீங்கன்னா (யோவ் உங்க கண்ண சொன்னேன்) அந்த ரெண்டு ஜோடி கால்கள்ல ஒண்ணு பட்டாப்பட்டி அண்ட்ராயர் போட்டிருக்கு அது வேற யாரும் இல்ல நம்ம துணை நாட்டாமை செந்தில் .அப்போ நாட்டாமை யாருன்னு உங்களுக்கு சொல்ல வேண்டிய அவசியம் இல்லைன்னு நெனைக்கிறேன் .

இப்போ அஞ்சா சிங்கத்தின் காட்டு தர்பார் .

கூட்டத்தில் ஒருவர் :- எல்லாரும் இப்படி மச மசன்னு இருந்தா ஏப்படி யாராவது பேச்சை ஆரம்பிங்கப்பா

கவுண்டமணி :- யாருடா அது . இப்படி முன்னாலவா வாயில வெடிய கொளுத்தி போட்ருவேன்  .இங்க நான்தான் நாட்டாம நான்தான் பேசுவேன். குறுக்க எவனாவது பேசுன்னா கொதவளைய கடிச்சி வச்சிருவேன் . டேய் மண்டையா நீ போயி சொம்புல தண்ணி பிடிச்சிட்டு வா. யாருப்பா பிராது குடுத்தது.

செந்தில் : - இவர் அரசியல் என்னும் காட்டாறில் எதிர்நீச்சல் போடும் கட்டுமரம் .

கவுண்டமணி :- டேய் வாய மூடு இவரு கம்பன் பேரன் அப்படியே செந்தமிழ்ல தான் பேசுவாரு வாய்ல மிதிச்சிபுடுவேன்.

குடியுரப்பா : - நான்தான்யா குடியுரப்பா குர்நாடக முதல் அமைச்சர்.

கவுண்டமணி :- சரி அதுக்கென்ன இப்போ .

குடியுரப்பா : -  அதுக்கு ஒன்னும் இல்லைங்க என் அரசியல் எதிரிகள் எல்லாம் சேர்ந்து எனக்கு செய்வினை  வச்சிட்டாங்க.
தனியா இருக்க பயமா இருக்கு .

கவுண்டமணி :- உன்ன பார்த்தா செய்வினை வச்ச மாதிரி தெரியலையே 10 பேதி மாத்திரைய ஒண்ணா சாப்ட்ட மாதிரி இருக்கு சரி எத வச்சி செய்வினை வசிடாங்கன்னு சொல்றே .

 குடியுரப்பா : - போன ஏலேக்சன்ல நான் அவங்களுக்கு பில்லி சூனியம்  வச்சி முதலமைச்சரா ஆய்ட்டேன் அதே மாதிரி இப்போ அவங்க எனக்கு வச்சிட்டாங்க தனியா இருட்டுல இருக்க பயமா இருக்கு .

கவுண்டமணி :-  தனியா இருக்க தானே பயமா இருக்கு. எப்பவும் ஒரு கும்பலோட இரு பயமா இருக்காது .

 குடியுரப்பா : - ஆனா பாத்ரூம்முக்கு தனியா தான் போக வேண்டி இருக்கு துணைக்கு யாரும் வர மாட்றாங்க .

 கவுண்டமணி :- ஓஹோ நீ அதுக்கும் துணை  தேடுறியா அப்போ ரொம்ப டேஞ்சர் தான் உனக்கு நான் ஏதாவது பண்ணியே ஆகணும் .
டேய் மண்டையா அந்த தாயத்து எடுத்துட்டு வா

 குடியுரப்பா : -என்னது தாயத்தா?

 கவுண்டமணி :-  பயப்படாதே இது உனக்கு இல்ல குர்நாடகால இருக்கிற எல்லா மக்களும் இந்த தாயத்தை கட்டிக்க சொல்லு .

 குடியுரப்பா : - நான் சொன்னா கேப்பாங்களா?

கவுண்டமணி :- இந்த தாயத்த கட்டி இருக்கிறவங்களுக்கு மட்டும் தான் ரேசன்னு சொல்லிடு .
வாக்காளர் அடையாள அட்டை மாதிரி இதுவும் கட்டாயம்ன்னு சொல்லிடு இதெல்லாமா உங்களுக்கு நாங்களா  சொல்லிதரணும் .
அப்புறம் பாரு அடுத்த முதல்வரு நீதான் . அப்புறம் முக்கியமான விஷயம் அந்த தாயத்து தயாரிக்கிற காண்ட்ராக்ட் எனக்கு குடுத்துரு என்ன சரியா .

 குடியுரப்பா : - நீங்க தாயத்து பார்முலா மட்டும் குடுங்க அந்த காண்ட்ராக்ட் எடுக்க என் குடும்பத்துல நிறைய பேரு இருக்காங்க .

கவுண்டமணி :- இந்த டக்கால்டி வேலை எல்லாம் நம்ம கிட்ட வேண்டாம் மகனே பக்கத்துல பார்தேல்லே இந்த சொம்ப எடுத்து மண்டைல அடிச்சிடுவேன் .காண்ட்ராக்ட் நமக்கு வரணும்  தாயத்து கட்டாதவங்கள குர்நாடகாவை விட்டே தள்ளி வச்சிரு அவங்க கூட ஆறும் அன்னம் தண்ணி புழங்க கூடாது இது தான் நம்ம தீர்ப்பு.

அப்போது நீதிடா நாயம்டா என்று ஒரு குரல் அது விஜயகுமாரு. டேய் சொம்புக்கு சொந்தகாரன் வந்துட்டான் அப்படியே சொம்ப தூக்கிட்டு ஓடிபோய்டு ஓகே அடுத்த பஞ்சாயத்துல பார்க்கலாம்..


posted by அஞ்சா சிங்கம்