Saturday, August 31, 2013

சென்னை பதிவர் சந்திப்பு 2013: நேரடி ஒளிபரப்பு



 
                                                                         


அனைவருக்கும் வணக்கமுங்க,
செப்டம்பர் 1 ஆம் தேதி  காலை 9 முதல் மாலை 5 மணிவரை நடைபெறவுள்ள சென்னை பதிவர் சந்திப்பின் நேரடி ஒளிபரப்பை  இத்தளத்தில் கண்டு மகிழலாம். நன்றி.          
 
                                     



Saturday, August 10, 2013

உணவகம் அறிமுகம் - சரவண பவன்



                                                                    

சென்னையில் எவருக்குமே பரிச்சயம் இல்லாத பிரபல குவாலிட்டியான ஓட்டல்களை அறிமுகம் செய்வதில் என்னை அடித்துக்கொள்ள ஆள் இல்லை என்பது சொல்லித்தெரிய வேண்டியதில்லை. அடையாறு ஆனந்த பவன்,  திருவல்லிக்கேணி ரத்னா கபே மற்றும் புகாரி போன்ற ஹோட்டல்களை அறிமுகம் செய்து சாப்பாட்டுக்கடையில் ஒரு ஏகாந்த புரட்சியை எட்டுத்திக்கும் பரப்பிய செய்தியை உலகறியும்.

அந்த அமேசிங் ரெக்கார்டை தஞ்சாவூர் கல்வெட்டில் பதிக்கும் பொறுப்பை விளிம்பு நிலை ஸ்தபதி ஒருவருக்கு தந்திருக்கிறேன் மக்களே(அவருடைய பேட்டி அடுத்த பதிவில்).

ஏற்கனவே மூடப்பட்ட ஒரு உணவுக்கடைக்கு விமர்சனம் எழுதி உண்டக்கட்டி வாங்கிய அனுபவம் இருந்ததால் அதற்குப்பின் செம அலெர்ட் ஆகி விட்டேன். இம்முறை இனிமேல் திறக்கப்போகும் உணவகத்தை அறிமுகம் செய்துள்ளேன். மடிப்பாக்கம் அம்சா மாமி வீட்டருகே சரவண பவன் எனும் புதிய ஹோட்டல் ஓப்பனிங் செரமனி அறிவிப்பு பார்த்தேன். (மன்னிக்க. ஒரு ஒரு வரியாக எழுதி அதை பேரா போல காண்பித்து பதிவை நிரப்ப மறந்துவிட்டேன்).

உள்ளே நுழைந்ததும் எட்டுக்கு எட்டு சதுர அடி பரப்பில் அட்மாஸ்பியரே அசத்தியது.  

பார்சல் வாங்கும் இடத்தில் சில பேர் பார்சல் வாங்கிக்கொண்டு இருந்தார்கள். சாப்பிடும் டேபிளில் பலபேர் சாப்பிட்டுக்கொண்டு இருந்தார்கள். 

கல்லாவில் இருந்தவர் முதலாளி என பெர்பெக்டாக யூகித்து 'வணக்கம். நான் பிரபல உணவுக்கடை ப்ளாக்கர்' என்று விண்ணைத்தாண்டி வருவாயா கணேஷ் போல கரகர குரலில் அறிமுகம் செய்ததுதான் தாமதம். 'அண்ணே...ரெண்டு இட்லி பார்சல் ப்ரீயா வாங்கிட்டு போங்க. என் ஓட்டல பத்தி மட்டும்....'. புரிந்து கொண்டேன். அந்த பயம் இருக்கணும். 

நான் ஆர்டர் செய்தது:

வட்ட இட்லி ஒன்று 
தேசியக்கொடி கலரில் மூவர்ண சட்னிகள்
ஓட்டை போட்ட மெதுவடை பாதி
ஒரு டம்ளர் தண்ணீர்

பொதுவாக நாம் சாப்பிடும் இட்லிகள் மெத்து மெத்தென்று இருக்கும். ஆனால் இங்கே வெரி ஸ்மூத்தியாக இருந்தது. இட்லியை 21 ஆக பிரித்து கலருக்கொரு சட்னி வீதம் ஒவ்வொரு சட்னியிலும் 7 முறை முக்கி முக்கி சாப்பிட்டேன். செம டேஸ்டி.

ஓட்டல் ஸ்பெஷல் உணவுகள்:
மசாலா தோசை, உருளைக்கிழங்கு சொருகப்பட்ட தோசை
கொம்பன் சுறா சுக்கா மக்கா, கடல் ராசா கத்தரி கொஸ்து
பூனைக்கொம்பு பொடிமாஸ், பேமிலி இடியாப்பம்.
பெண் சிக்கன் ப்ரை, ஆண் சேவல் ஆப் பாயில்.

Bad Experience !!

ஒரு முறை இங்கு சாப்பிட்டு விட்டு, இன்னொரு நாள் பார்சல் வாங்கலாம் என வீக் எண்டில் சென்று வெறுத்து போய் விட்டேன். 2 பேருக்கு மேல் காத்திருக்க ஒவ்வொருவருக்கும் டோக்கன் போட்டு தருகிறார்கள். 'டோக்கனை போடாமல் கையில் தந்தால் என்ன?' என்று கத்திய பிறகே இஸ்யூ சால்வ் ஆனது.

மாத்ருபூதம் டாக்டர் வீட்டில் காத்திருப்பது போல் ஒரு மணி நேரம் காத்திருக்க நேருகிறது. 5 நிமிஷத்துக்கு தான் ஒவ்வொருவர் டோக்கன் நம்பராக அழைக்கிறார்கள் நம் முறை வர குறைந்தது அரை மணி நேரம் முதல் 1 மணி நேரம் ஆகிடுது கொடுமை. 

டோக்கன் '108' என்று இரண்டாவதாக ஒருவழியாக என்னை அழைத்தனர். என்ன யூஸ்?

பார்சல் வாங்கினால் கண்டிப்பாக காசு வேறு தர வேண்டும் என்று அடம் பிடிக்கிறார்கள். புல் ஷிட்.

ரேட் கார்னர்  



மேலதிக தகவல்கள்:
ஓட்டல் பெயர்: சரவண பவன்
கிளைகளின் பெயர்கள்: சரவண பவன்
பார்சல் கவரில் இருக்கும் பெயர்: சரவண பவன் 
வெப்சைட் பெயர்: சரவண பவன்.

நான் வெஜ் பிரியர்கள் அவசியம் ஒரு தரம் கண்டிப்பாக நிச்சயம் விசிட் செய்து பாருங்கள்.  

நான் வெஜ் என்றால் அசைவம் அல்ல. 'நான் வெஜ்' என்று சொல்லும் சைவ பிரியர்களை சொன்னேன். எப்படி நம்ம காமடி :))

கீழதிக தகவல்கள்:
இந்த பதிவை நான் ட்ராப்டில் வைத்திருந்ததை எப்படியோ கண்டுபிடித்துவிட்ட
அன்னாசி என்னை பொளந்து கட்ட பொங்கிய செய்தி கேட்டு செம உஷாராகி கம்ப்ளைன்ட் செய்துவிட்டேன். என்ன வேட்டுடே!!
                                                                   

  _____________________________________________


Posted by:

! சிவகுமார் !

 

Friday, August 9, 2013

வெத்து பரோட்டா (09/08/13)




சென்ற வாரம் வெத்து பரோட்டாவில் ஒண்டிப்புலி நாயக்கர் ஸ்ட்ரீட்டில் மண்டிக்கிடக்கும் குப்பை பற்றி எழுதியதற்கு இம்மீடியட் ரெஸ்பான்ஸ் கிடைத்திருக்கிறது. எனது ரெகுலர் ரீடரான இங்கிலாந்து பிரின்ஸ் ஹாரியின் உத்தரவின் பேரில் கார்பேஜ்கள் உடனே அகற்றப்பட்டு கிரீன் கலர் புற்கள் போர்த்தி, மம்முட்டியால் பள்ளம் தோண்டி ட்ரீயும் நட்டுவிட்டு  சென்ற ஹாரிக்கு தேங்க்ஸ்கள் பல. ஆதாரம் கீழே:

ஒண்டிப்புலி ஸ்ட்ரீட் நேற்று:
                                                                       
                                               
இன்று:                                      
                             

@@@@@@@@@@@@@@@@@@@

என்னுடைய முதல் பட வெற்றிக்கு பிறகு கரோக்கியில் நான் பாடவிருக்கும் பாடல் இதுதான்:

https://www.youtube.com/watch?v=AFEsuL5gNHo

@@@@@@@@@@@@@@@@@@@@@

சாப்பாட்டு ஷாப்ஸ்:
என் படத்தில் அசைவ ஓட்டல் காட்சிகள் நிறைய இருப்பதால் சைவ ஹோட்டல்களை தவிர்த்து சென்னையின் பிற ஹோட்டல்களில் லொக்கேஷன் பார்க்க ஹெவியாக டைம் பாஸ் செய்ய வேண்டி இருந்தது. குதிரைமுத்து நகர் சற்குணம் தெருவில் ஃபுல்லுகட்டு முத்தம்மா ஓட்டல் கண்ணில் பட்டது. இரண்டு வெள்ளை இட்டிலி, நான்கு வாலி மஞ்சள் சாம்பார் ஆர்டர் செய்தோம். பக்கத்து இலையில் இருந்த சிக்கன் குழம்பும், கோழி க்ரேவியும் அட அட அட அட....டிவைன். பொதுவாக பிற ஓட்டல்களில் சிக்கன் குழம்பு டேஸ்டியாக இருந்தால் கோழி க்ரேவி சொதப்பி விடும். ஆனால் இங்கு இரண்டுமே சம்திங் வாவ்.  

அருகில் இருந்த ஹன்சிகா அத்வானி நான் சூப் உறிஞ்சும் ஸ்டைலை பார்த்து 'சூப்பர். சூப்பரோ சூப்பர்' என எனது கன்னத்தில் கிள்ளி துள்ளினார். அந்த சில நொடிகள் மட்டும் வெக்கத்தை தூக்கி கக்கத்தில் வைத்துக்கொள்ள படாத பாடு பட வேண்டி இருந்தது. லெத்தார்ஜிக் முமெண்ட்ஸ்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@   

சென்னை மல்டிப்ளெக்ஸ் தியேட்டர்களில் பார்க்கிங் அராஜகம் பத்துதலை விரித்து ஆடுவதால் பரங்கிமலை ஜோதி அருகே உள்ள 'மல்லு'ப்ளெக்ஸில் மட்டுமே படங்கள் பார்க்கிறேன். இந்த வாரம் 'துள்ளு ராணி அள்ளு ராஜா' பிரிமியர் ஷோ. படம் முடிந்து வெளியே வந்தால் பார்க்கிங் சார்ஜ்  ஐம்பது பைசா என்று அராஜகம் செய்தார்கள். நேற்று 'வாடி பொட்ட புள்ள வெளியே. என் வாலிபத்த நோகடிச்ச கிளியே' படத்துக்கு நாலணா தான வாங்குனீங்க என்று சத்தம் போட்டேன். 

பிரச்னை பெரிதானது. 'நீங்கள் கேபிள் ஷங்கர்தான' என்று லட்சக்கணக்கான வாசகர்கள் வேறு சூழ்ந்து கொண்டதால் கிண்டி ரேஸ் கோர்ஸ் வரை ட்ராபிக் ஜாம் ஆகிப்போனது.  பதறி ஓடி வந்த முதலாளி " வேணும்னா து.ரா.அ.ரா. இன்னொரு ஷோ பாத்துக்கங்க. ப்ளீஸ்" என கெஞ்சியதால் சாந்தமானேன். 

கேட்டால் கிடைக்கும்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
 

என் ட்வீட்டில் இருந்து:

-கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
ஒண்தொடி கண்ணே உள.

-மச்சான் மீச வீச்சருவா. மச்சினியெல்லாம் ஏங்கிடுவா.
மச்சான் கண்ணும் மந்திரமா. சொக்கி போனேன் பம்பரமா.

என் முகநூலில் இருந்து:

-வாடா வாடா வாங்கிக்கடா. வாய்ல பீடா போட்டுக்கடா.
போடா போடா பொழச்சி போடா. போகும்போது பாத்து போடா.

-பத்து முறைக்கு மேல் மனைவி கையால் அடி வாங்கிய பிறகும்
  பொறுமை காட்டாதே. கெத்தாக எழு.
  அவங்க உன்ன அடிக்க. உன்ன அவங்க அடிக்க. ரெண்டுல ஒண்ணு பாத்துடு.

@@@@@@@@@@@@@@@@@@

அடல்ட் Garner:
இந்தப்பகுதியில் ஜோக்  எழுத சரக்கு தீர்ந்து கொண்டே வருவதால் இந்த வாரம் கடுமையாக சரக்கு அடித்து தீர்த்தேன். நல்லவேளை என் ரெகுலர் ரீடர் சச்சின் ஒரு அரை நிர்வாண புகைப்படத்தை அனுப்பி 'குறையை' போக்கினார்.

கீழே பப்பரப்பே என்று கார்னரில் சாய்ந்து இருப்பது வெஸ்ட் இண்டீஸின் முன்னாள் பவுலர் ஜோயல் கார்னர். அவருடைய வயது 18 பூர்த்தி ஆகிவிட்டது என்பதும் கன்பர்ம் செய்யப்பட்டு விட்டது. எனவே இந்த வாரம் இதுதான் அடல்ட் Garner. அடேங்கப்பா எவ்ளோ பெருசு.......................................காலு!! 
                                                           


@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@  





Tuesday, August 6, 2013

பதிவர் சந்திப்பை கலைக்க பலாபட்டறை சதி



மாட்சுமை மிகோ மிகு. பபாஷா அவர்களுக்கு,

சமீபத்தில் கூகிள் ப்ளஸ்ஸில் தங்கள் உள்ளக்குமுறலையும், இதய இருமலையும் ஒரு ஏகாந்த பொன்மாலைப்பொழுதில் எம்மால் காண நேர்ந்தது. அது யாதெனின்:

''நடைபெறவிருக்கும்  அகில உலக வலைப்பதிவர் மாநாட்டில் +Pattikaattaan Jey என்ற மாணிக்கத்தை திரும்ப ப்ளாக் உலகத்திற்கே திருப்பி எடுத்துக்கொண்டு தமிழ்மண யாவாரசங்க தலைவராக்கி கூகுள் ப்ளஸ் என்னும் இந்த சிறிய உலகத்தைக் காப்பாற்றுமாறு அன்புடன் கோரிக்கை வைக்கிறேன்''.

நெஞ்சிலோர் துளி moisture இருப்பினோ அல்லது உடலிலோர் சொட்டு நற்குருதி ஓடினாலோ இப்படி ஓர் கோரிக்கையை வைத்திருப்பீரா? மோட்டாரில்லா காட்டாறாக கண்ட இடத்தில் அலைபாய்ந்து கொண்டிருந்த பட்டிக்ஸை பகுமானமாக ப்ளஸ் பக்கம் திருப்பிவிட நாங்கள் பட்ட பாடு கொஞ்சமல்லவே? தங்கள் களத்தில் துள்ளி விளையாடுவதற்காக காலா காலத்திற்கும் நேர்ந்து விடப்பட்ட AVM இன் முரட்டுக்காளையான அவரை திரும்பப்பெறுதல் எம் போன்ற ஆரண்ய காண்ட ஜமீன்களுக்கு வரலாறு காணா இழுக்கை ஏற்படுத்தித்தரும் என்பதை கிஞ்சித்தும் யோசிக்காமல் இப்படி ஒரு முடிவெடுக்க காரணமென்ன? 'ஜெய்' போலே போலோ நாத்!
                                                                 

                                                       செந்தொடையுடன் சீர்மிகு பலாப்ஸ்
 
இந்திய துணைக்'கண்டம்' பட்டிக்ஸ் முதல் இருண்ட ஆப்ரிக்கா இடி அமீன் ஆவி வரை அனைவரும் அதிரும் வண்ணம் உமது செவ்விதழ் திறந்து இப்படி ஒரு விண்ணப்பம் வந்திருப்பதன் பின்னணி என்னவென்பதை எம்முடைய பட்டத்து பூனைப்படை புலன் விசாரணை மேற்கொண்டதன் விளைவாக ஒரு வலுவான ஆதாரம் சிக்கி இருக்கிறது. 

அதாகப்பட்டது வரும் சென்னை பதிவர் சந்திப்பில் 'அழுக்குச்சட்டை போட்டாலும் அழகாய் தோன்றும் ஆணழகன்' போட்டி நடைபெறுவதாக ஒரு வதந்தி உம்மிடம் பரப்பப்பட்டதாகவும், எங்கே அப்போட்டியில் அப்பாஸ் லுக் அலைக் அப்துல்லாவிடம் ஒரு ஓட்டு வித்யாசத்தில் தோற்றுவிடுவோமோ எனும் பேரச்சத்தில் இம்முடிவை மேற்கொண்டிருப்பதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.
                                                                       

                                                   மாநிற தொடையுடன் மேதகு. பட்டிக்ஸ்

எனவே நேற்று நள்ளிரவே யாம் அனைவரும் ஆலோசனை செய்து பட்டிக்ஸ் எனும் ஹைதர் காலத்து ட்ரங்க் பெட்டியை கூகிள் ப்ளஸ் வாழ் ஒளிவட்ட சான்றோர்களுக்கு  அடுத்த 99 ஆண்டுகள் மொத்தை குத்தகைக்கு விடுகிறோம். அதில் வரும் வருமானத்தை ப்ளஸ் பாண்டிய சகோதரர்களே அனுபவிக்கவும் இந்த சுத்த விக்கிய பத்திரம் அனுகூலம் செய்கிறது. 

மேற்படி இந்த ஐந்தடி நான்கு அங்குல ப்ராப்பர்டியின் பால் வரும் எந்த ஒரு இன்னலுக்கும் பதிவர் குழு பொறுப்பேற்காது என்பதை திட்டவட்ட மற்றும் சதுரமாக அறுதியிட்டு உறுதி கூறுகிறது. 

இப்படிக்கு,
ஏழேழுலக பதிவர் சங்க தலைமைக்குழு,
தென்கிழக்கு இருண்ட ஆப்ரிக்கா.
 ​​​​-----------------------------------------------------------


posted by:

! சிவகுமார் ! 
 

Thursday, August 1, 2013

2013 சென்னை பதிவர் சந்திப்பில் கலந்து கொள்வோர் பட்டியல்


அனைவருக்கும் வணக்கம்,

இதுவரை சென்னை பதிவர் சந்திப்பிற்கு வர சம்மதம் தெரிவித்துள்ள பதிவர்கள் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது.  எண்ணிக்கை கூடும்போது இப்பட்டியல் புதிதாக பகிரப்படும்:
                                                                        


ஜோதிஜி திருப்பூர்
கவிதைவீதி செளந்தர்
சரவணன்(ஸ்கூல் பையன்)
ரூபக்ராம்
வேடியப்பன்(டிஸ்கவரி புக் பேலஸ்)
சசிகலா (தென்றலின் கவிதைகள்)
ரஹீம் கஸாலி
சிராஜுதீன்
காணாமல் போன கனவுகள் ராஜீ
கேபிள் சங்கர்
தமிழ்வாசி பிரகாஷ் – மதுரை
கோகுல் மகாலிங்கம் – பாண்டிச்சேரி
தனபாலன் - திண்டுக்கல்
வீடு சுரேஷ்
சசிமோகன்
இரவுவானம் சுரேஷ்
நாய் நக்ஸ் நக்கீரன்
சின்ன சின்ன சிதறல்கள் அகிலா,
நிகழ்காலம் எழில்
கலாகுமரன்
கோவை ஆவி
உலகசினிமா பாஸ்கரன்
சுட்டிமலர்
கோவை கமல்
கோவை சதிஸ்
வெண்பா சுஜாதா
கோவை நேரம் ஜீவா
கோவை சக்தி
இப்படிக்கு இளங்கோ
ஒட்டக்கூத்தன்
வா.மு.முரளி
ஒட்டக்கூத்தன்
கோவை கோவி
சாமக்கோடங்கி பிரகாஷ்
கோவை ராமநாதன்
சதீஸ் சங்கவி
சிபி செந்தில்குமார்
வீரகுமார்
குருவை மாதேஸ்
குணா
சேலம் தேவா
கோகுலத்தில் சூரியன் வெங்கட்
கிராமத்துக் காக்கை
விஜயன் துரைராஜ் கடற்கரை
கருத்து கந்தசாமி
செல்லப்பா (‘இமயத்தலைவன்’) (‘செல்லப்பா தமிழ் டயரி’)
முகமது சபி சக்கரக்கட்டி
அ.சிவசங்கர்
தங்கம் பழனி
முனைவர் இரா.குணசீலன்
சைதை அஜீஸ்
குடந்தையூர் ஆர். வி. சரவணன்
முரளிக்கண்ணன் மதுரை
பெருங்குளம் ராமகிருஷ்ணன்
சசிகலா திருவண்ணாமலை
ஜீவன் சுப்பு,
சிவகாசிகாரன் ராம் குமார்,
சதீஸ் செல்லதுரை
கடல் பயணங்கள் சுரேஷ் குமார்
சுப்புரத்தினம்
ராகவாச்சாரி
ரேகா ராகவன்
ஆதிமனிதன்
சமீரா 
நம்பி
வழிப்போக்கன் ராஜேஷ்
பழனி கந்தசாமி(மன அலைகள்)
புலவர் இராமானுஜம்
சென்னை பித்தன்
கவிஞர் மதுமதி
பாலகணேஷ் (மின்னல்வரிகள்)
மோகன்குமார்(வீடு திரும்பல்)
கவியாழி கண்ணதாசன்
பட்டிகாட்டான் ஜெய்
டி.என்.முரளிதரன்
கே.ஆர்.பி.செந்தில்
ஆரூர் மூனா செந்தில்
அஞ்சாசிங்கம் செல்வின்
அரசன் ( கரைசேரா அலை)
சீனு (திடங்கொண்டுபோராடு)
பிலாசபி பிரபாகரன்
சிவகுமார்(மெட்ராஸ்பவன்)