Wednesday, January 25, 2012

எது மொக்கைப்படம்..இல்ல தெரியாமத்தான் கேக்கறோம்..

           
பல நாட்களாக உலக மகா சந்தேகம் ஒன்றுக்கு இன்றுவரை தீர்வு கிடைக்காமலே உள்ளது. அது என்னன்னா 'எது மொக்கைப்படம்?'.

விஜய்,அஜித் எல்லாம் தொடர்ந்து பல ப்ளாப் தந்தாலும் அதை பத்தி பல மணிநேரம் விவாதிப்பாங்களாம். ஆனா டி.ஆர்., பசுநேசன், பவரு ஸ்டார், செவன் ஸ்டார் நடிக்ற படம் வந்தா மட்டும் மொக்கைப்படமாம். என்னய்யா இது நியாயம், என்னய்யா இது நீதி?  ஆழ்வார், ராஜபாட்டை, சுறாவை விட எந்த விதத்துல எங்க செல்லக்குட்டிங்க படங்கள் எல்லாம் கொறஞ்சி போச்சி. உங்க பெரிய ஸ்டாருங்க நடிக்குற சில ரோல்கள் எல்லாம் சமூகம் வெளங்குறதுக்கா?  போக்கிரி,ஜனா, பாபா....இதுல ஹீரோ பண்றதை இளவட்ட பசங்க பாலோ பண்ணா எப்படியா சமூகம் சீர்படும்? 

                               ஒரிஜினல் உலக சினிமா ரசிகர்கள் அஞ்சாசிங்கம், பிலாசபி     

அதே எங்க ஆளுங்க நடிச்ச படங்களை எடுத்துக்கங்க. மேதைல நல்லாசிரியரா வந்து குழந்தை தொழிலாளிகளை வில்லன் கிட்ட இருந்து மீட்குராறு எங்க ராமராஜன். அடுத்து தேனி மாவட்டத்துல செவன் ஸ்டாரு விவசாய நிலங்களை எல்லாம் மீட்டு தரப்போறாரு. இவங்களை பாத்தா உங்களுக்கு கிண்டலா போச்சி. எல்லை மீறி போறீங்க. ஜாக்ரதை. சட்டை பட்டன் போடாம விஜய் சுத்தலாம், பெல்ட்டை கழுத்துல மாட்டிட்டு அஜீத் திரியலாம், கலர் துண்டை தலைல கட்டிட்டு ரஜினி விரல் வித்தை செய்யலாம். ஏன் சிம்பு கூட இன்ஸ்பெக்டரா ட்ரெஸ் போடலாம். கெரகம்..கெரகம்). அதையெல்லாம் கண் கொட்டாம பாப்பாங்க. ஆனா மேதைல எங்க ஆளு ஒயிட் அண்ட் ஒயிட்ல வந்தாக்கூட எட்டிப்பாக்க மாட்டாங்க. எங்கே போகுது உலக சினிமா ரசன? இல்ல தெரியாமத்தான் கேக்கறோம். 

இதுக்கு மட்டும் முண்டி அடிச்சி படம் பாத்து வெமர்சனம் போடுவாங்களாம். ஆனா மேதை மட்டும் போட்டா இமேஜ் ஸ்பாயில் ஆகிடுமாம்? (நான் பயங்கர கோவத்தோட சீரியஸா எழுதிட்டு இருக்கேன். யாருய்யா அங்க சிரிக்கறது). அதாவது பெரிய ஸ்டார், பேனர், இயக்குனர், தொழில்நுட்ப கலைஞர்கள் சேந்து எவ்ளோ மொக்கைப்படம் ரிலீஸ் பண்ணாலும் வெமர்சனம் போடுவாங்க. அப்பறம் விவாதிப்பாங்க(தெய்வத்திருமகள், மன்மதன் அம்பு). ஆனா எங்க அமுல் பேபிங்க நடிச்சா மட்டும் கண்டுக்கவே மாட்டாங்களாம். கேக்குறதுக்கு ஆள் இல்லைன்னு நெனப்பு போல.

                      மேதை இயக்குனருடன் ஒரு கலந்துரையாடல்..அஞ்சாசிங்கம், பிலாசபி

என்னமோ நாங்க பாகிஸ்தான் பார்டருக்கு கூப்புட்ட மாதிரி கஸாலி செதறி ஓடறாரு. 'கேபிள் கிட்ட மேதை படம் பாத்து விமர்சனம் போடணும். ஏன் இந்த பாரபட்சம்'னு கேட்டா 'யோவ்..என்ன விட்டுரு. கோடி ரூவா தந்தா கூட என்னால முடியாதுன்'னு கதறி அழுவராறு. ஒரு கண்ல நெய் ஒரு கண்ல சுண்ணாம்பு. இதுதான் பன்முக கலைஞரின் சமத்துவமா? வேர் இஸ் வேடியப்பன்? மேதை விமர்சனம் போடற வரைக்கும் அவரை பன்முக கலைஞர்னு(நீங்க தந்த பட்டம்தான்) ஒத்துக்க மாட்டோம். மேதை, ஆனந்த தொல்லை, தேனிமாவட்டம் ஆடியோ சி.டி.களை டிஸ்கவரி புக் பேலஸில் விற்காத வேடியப்பனுக்கு மனசாட்சி இருக்கா? 

                                     மேதை இயக்குனருடன்..நானும், அஞ்சாசிங்கமும்

ஷங்கர், மணிரத்னம் மாதிரி பெரிய தலைகள் கிட்ட கூட இருக்காத அன்பும், பண்பும் மேதை இயக்குனர் சரவணன் கிட்ட இருக்குய்யா. கிருஷ்ணவேணி தியேட்டர்ல எங்கள பாத்து அன்பா பேசுனாரு. இடைவேளை நேரத்துல படத்தின் முதல் பாதி பத்தி கலந்து ஆலோசிச்சோம். அவர் ஏற்கனவே ஹரி கிட்ட அசிஸ்ட்டண்டா வேலை செஞ்சாராம். "செகண்ட் ஆப் பாருங்க சார். படம் சும்மா பறக்கும்" அப்டின்னு சொன்னார். அதை கேட்டதும் என்ன சொல்றதுன்னே எங்களுக்கு தெரியல. மேல இருக்குற ஸ்டில்லை பாருங்க. ரசிகர்களும், படைப்பாளியும் எப்படி 'நிறைகுடம் நீர் தளும்பாம' இருக்கணும்னு சொல்ற வார்த்தைக்கு உதாரணமா இல்ல?. "அவர் கிட்ட நீங்க சிக்குனீங்களா? இல்ல உங்ககிட்ட அவரு சிக்கி இருக்காரா?" என்று போட்டோவை பார்த்து ரவுசு கட்டும் அன்பர்களே. போதும் நிறுத்துங்க. 

இம்மாதிரி படங்கள் உங்களை பொருத்தமட்டில் மொக்கையாகவே இருந்தால் அது உங்கள் துர் அதிர்ஷ்டம். ஆனால் அதை முழுதாக பார்ப்பது என்பது ஆழ்நிலை தியானம். அந்த அபூர்வ பொறுமை எம்மிடம் உள்ளது. நீங்கள் நடக்கும் பாதையில் ரோஜாக்கள் மட்டுமே வேண்டும் என எதிர்பார்த்து சில சமயம் அது கை  கால் கூடலாம்(நண்பன், எங்கேயும் எப்போதும்..மற்றும் சில). பல சமயம் ரோஜா என்று நினைத்து விஷ முள்ளில் கால் வைத்து புண்ணாக்கி கொள்ளலாம்(ராஜபாட்டை, ஆஞ்சநேயா, ஒஸ்தி, குருவி, பாபா, மன்மதன் அம்பு). ஆனால் முற்கள் நிரம்பி இருக்கும் பாதை என்று தெரிந்தும் அதில் கால் வைத்து இரண்டரை மணி நேரம் பயணிக்கும் எமக்கும் இறுதியில் கிடப்பது ரோஜாத்தோட்டமே(லத்திகா, மேதை, தேனி மாவட்டம்)!!!

******************************************


...............................
Posted by:
!சிவகுமார்!
..............................

.................................................

மேதை சிறப்பு மலர்கள்:

பாகம் ஒன்று

பாகம் இரண்டு 

பாகம் மூன்று

பாகம் நான்கு 
..................................................Tuesday, January 24, 2012

தல கவுண்டமணி அளித்த அரிய பேட்டி - 2


பேட்டியின் தொடர்ச்சியை நாளை வரை தள்ளி வைத்து பதிவிடுவதை விட ரசிகர்களுக்காக உடனே தருவதுதான் சரி என நினைத்ததால் இதோ பாகம் இரண்டு:

தொடர்கிறது பேட்டி.....


விகடன்: உங்களோட வளர்ச்சியில யாருக்கு பங்கு உண்டு? உங்க காட்பாதர்னு யாரை சொல்லுவீங்க? 

கவுண்டர்: (கலகலவென சிரிக்கிறார்..) இது என்ன மாபியா கேங்கா? காட்பாதர் இருக்கறதுக்கு! 'ஒருத்தன் வளர்றது இன்னொருத்தனுக்கு பிடிக்காது'ன்னு நான்தான் சொல்றேனே. ரஜினி இவ்வளவு உயரத்துல இருக்காருன்னா அவரை சுத்தி இருக்குறவங்களுக்கு சந்தோஷம்னா நினைக்கறீங்க?.. சூப்பர் ஸ்டார்னு புகழராங்களே தவிர, சொந்தக்காரங்க கூட உள்ளுக்குள்ளே எரிச்சலோடதான் இருப்பாங்க. இதுதான் உலகம். இதுதான் எனக்கும்.

                                                                        
விகடன்: ஒரு நடிகன் எப்படி இருக்க வேண்டும்?

கவுண்டர்: தன்னைப்பத்தின நிஜ ரூபத்தை பொத்தி பொத்தி மூடணும். பெட்டிக்கடையில பீடியைக்கூட கட்டுக்கட்டா உள்ளேதான் வெச்சிருப்பான். அப்போதான் அதுக்கு மரியாதை. அள்ளி வெளியே கொட்டிப்பரத்தி வியாபாரம் பண்ணிப்பாருங்க..பீடி விக்காது. நான் விழாக்கள், பேட்டிகள்னு எதுக்கும் ஒப்புக்கறதில்லை. 'கலை நிகழ்ச்சி' என்ற பேரில் துபாய், சிங்கப்பூர் போறதில்லே. ரசிகர் மன்றம் இருந்தது. இப்ப மன்றத்தை எல்லாம் கலச்சிட்டேன். என் பிறந்த நாள் என்னன்னே மறந்து போச்சி. முக்கியமா டி.வி.க்கு பேட்டி குடுக்கறதில்ல. கவுண்டமணியை சினிமாவுல மட்டும் பாரு..அப்பதான் கிக்!

....சில நிமிட மௌனத்திற்கு பின் கேள்வி கேட்காமலே சொன்னார்... 

இது ஒரு ட்ரெண்டுங்க. நம்ம காமடியை ஒப்புக்கறாங்க. அதை அழகான மேக்கப் போட்டுட்டு வந்து பண்ணக்கூடாதா? முகத்தை அசிங்கம் பண்ணிட்டு, மண்ணாங்கட்டி அது இதுன்னு பேர் வச்சிக்கிட்டு வந்தாதான் காமடியா?! காமடிக்காகவே கோண மூஞ்சிக்காரங்களை தேடிப்பிடிக்கறது அக்கிரமம். அட ஜனங்க ரெண்டு மணிநேரம் நம்ம முகத்தை பாக்க வேண்டாமாங்க? என்னைக்கேட்டா நகைச்சுவை நடிகன்தான் அழகா, நீட்டா ப்ரெஷ்ஷா இருக்கணும்.

..பேட்டியின் போது போட்டோ  எடுக்க அனுமதிக்கவில்லை....

அதற்கு அவர் சொன்ன பதில் "மேக்கப் இல்லாம போட்டோ எடுக்க போஸ் குடுக்குறது இல்லைங்க" என்கிறார் தலையை தடவியபடி. குடும்பத்தை படம் எடுப்பதற்கும் மிகப்பெரிய தடை போடுகிறார். 

"முடியாதுங்க. இதுவரைக்கும் என் பேமிலி படம் எதுலயாச்சும் பாத்து இருக்கீங்களா? தர்றதே இல்லை. எனக்கு ரெண்டு பொண்ணுங்க. நல்ல சந்தோஷமான குடும்பம். அவங்களை பொறுத்தவரை நான் காமடி கவுண்டமணி கிடையாது. ஏதோ ஒரு வேலைக்கு போறேன். கூலி வாங்கிட்டு வர்றேன். அதை வச்சி குடும்பம் நடத்துறது அவங்க வேலை. என் குடும்பத்து ஆளுங்க இன்னிவரைக்கும் ஷூட்டிங் பாத்தது கிடையாது. என்னை ஒரு நடிகனா வீட்ல யாரும் பாக்கக்கூடாது. அது வேற..இது வேற.

உம்முன்னு உட்காந்துட்டு இருக்குறவங்க எல்லாம் தனியா எதுனா அள்ளிட்டா போகப்போறாங்க? அப்புறம் எதுக்கு பொறக்கணும்? என்னைப்பொறுத்தவரை நாலு பேரைப்பாக்கணும், நாலு விதமா பேசணும், சந்தோஷமா சிரிக்கணும். அவ்வளவுதான் வாழ்க்கை. இருக்கிற வரைக்கும் சிரிப்போம்...ரைட்டா?" 

முற்றும். 
................................................................

புத்தக கண்காட்சியில் வாங்கிய விகடனின் பொக்கிஷம் புத்தகத்தில் இப்பேட்டி படித்தேன். அதை கவுண்டர் ரசிகர்களுக்கு பகிர்ந்ததில் மகிழ்ச்சி. 
..............................................................
...........................
Posted by:
!சிவகுமார்! 
...........................


                                                                  

தல கவுண்டமணி அளித்த அரிய பேட்டி


         

விகடனுக்கு 2.6.96 அன்று கவுண்டமணி அளித்த பேட்டி உங்களுக்காக:

இந்தியாவில் இன்று அதிகம் சம்பாதிக்கிற நடிகர் இவர்தான் என்று பேச்சு. இவருடைய கால்ஷீட் கிடைத்த பிறகுதான் படத்துக்கு பூஜை. இவர் வந்து இறங்கும்போது ஹீரோக்களுக்கு இணையாக ஷூட்டிங் ஸ்பாட் சலசலத்து அடங்குகிறது. இளம் நடிகைகள் சிலரை இவரோடு இணைத்து கிசுகிசுக்கிறார்கள்.  கடந்த வாரத்தில் இவர் வீட்டில் வருமான வரித்துறை நடத்திய ரெய்டு தான் கோடம்பாக்கத்தின் பரபரப்பு பேச்சு!

ஜகஜவென நைலக்ஸ் லுங்கி, ஒரு பட்டன் கூடப்போடாத சட்டையோடு வீட்டில் உட்கார்ந்திருந்தார் கவுண்டமணி. லேசான தொந்தியை தாண்டி மூன்று முழ நீளத்திற்கு ஒரு தங்கச்சங்கிலி, தங்க பிஸ்கட் கோத்து போட்டிருக்கிறார். வயது 63 என்கிறது அவரது நெருங்கிய வட்டாரம். அதன் ஒரே அடையாளம் முன் தலையின் வழுக்கை மட்டுமே. 

விகடன்: தியேட்டர்ல படம் ஆரம்பிச்சி 20 நிமிஷம் ஆனதும் சடார்னு ப்ரேமுக்குள்ள நுழையறீங்க. நீங்க பேசுறதுக்கு முன்னாடியே உங்க முகத்தை பார்த்து தியேட்டர் சிரிப்புல அதிருது. விசில் பறக்குது. எப்படி சாதிச்சீங்க?

கவுண்டர்: இன்னிக்கி நாட்ல உள்ள ஏகப்பட்ட பிரச்னைகளை மீறி மக்களை சிரிக்க வைக்கிறது என்கிற விஷயத்தை ஒரு பார்முலா மாதிரி போட்டு கண்டு புடிச்சிற முடியாது. சிரிக்க வைக்கக்கூடிய சங்கதி தானாகத்தான் ஒருத்தனுக்குள்ள அமையனும். அது 'ப்ளட்'னு வச்சுக்கோங்களேன்.

15 வருஷத்துக்கும் மேல காமடி பண்றேன். எனக்கு முன்னால எவ்வளவோ பேர் சாதிச்சி இருக்காங்க. எனக்கு பிறகு வந்தவங்களும் நிறைய இருக்காங்க. எப்படியோ கடவுள் அருளால ஜனங்களுக்கு நம்மள புடிச்சி போச்சி. கவுண்டமணின்னா என்னவோ ஒரு கிரேசி".

                                                                 
விகடன்: நடிக்க வந்தது எப்படி?

கவுண்டர்: நமக்கு சொந்த ஊரு உடுமலைப்பேட்டை. வீட்ல விவசாயம் பாத்தாங்க. சினிமாவுக்கும், நமக்கும் ரொம்ப லாங்கு. லாங்குன்னா இப்படி அப்படி லாங் இல்லை. அமேரிக்கா அளவுக்கு தூரம். அவங்க யாரும் டாக்கீஸ் பக்கம் கூட போனதில்ல. சின்ன வயசுல நடிக்கனும்னு வெறி எனக்கு. காமடியா, வில்லனா, ஹீரோவா..அதெல்லாம் முடிவு பண்ணல. நடிகன் ஆயிடணும். அதான் லட்சியம். 12 வயசுல நாடக கம்பனில செந்தேன். பாய் கம்பனில இருந்து ஜோதி நாடக சபா வரை எல்லாத்துலயும் இருந்தேன். எல்லா வேஷமும் போட்டேன். கூச்சம், பயமெல்லாம் போயி நம்மால முடியும்னு தைரியம் வந்துச்சி. அப்பதான் சினிமா சான்சும் வந்துச்சி.

விகடன்: 16 வயதினிலே உங்க முதல் படம். அதில் கண்ணெல்லாம் சுருங்கி போயி கன்னத்து எலும்பெல்லாம் நீட்டிக்கிட்டு இருக்கும் உங்களுக்கு. அதாவது வறுமை?

கவுண்டர்: (சட்டென்று இடைமறித்து) அதெல்லாம் சும்மா சார். வறுமையாவது ஒண்ணாவது. சினிமாவுக்கு முன்னாடி நாடகத்துல இருந்தேன்னு சொல்றேனே. வேளா வேளைக்கு சோறு. அதிகம் இல்லாட்டியும் பொழுதை தள்றதுக்கு காசு கிடைச்சிட்டு தான் இருந்துச்சி. வளர்ந்து பெரிய ஆள் ஆன பிறகு 'ஒரு காலத்துல பணத்துக்கு லாட்டரி அடிச்சேன்..துண்டு பீடிதான் புடிச்சேன்' ன்னு சொல்றது இப்ப ஒரு பேஷன் ஆகிப்போச்சி. அதெல்லாம் நான் சொல்ல மாட்டேன்.

விகடன்: அந்த பெட்ரோமாக்ஸ் காமடி?

கவுண்டர்: ஆமாமா. 'இதுல எப்பிடிண்ணே லைட் எரியுது?' ன்னு செந்தில் கேப்பான். 'அடேய்..இதுதான் மேண்டில். இதுலதான் பளீர்னு லைட் எரியுது'ன்னு நான் சொல்லிட்டு இருக்கும்போதே செந்தில் மேண்டிலை எடுத்து நசுக்கிப்புட்டு, 'என்னண்ணே..ஒடச்சி புட்டீங்க?'ன்னு கேப்பான்(கவுண்டர் முகத்தில் சிரிப்பு பரவுகிறது). அப்ப நான் உடனே பதில் சொல்லாம கேமரா பக்கம் திரும்பி டென்ஷனா ஒரு லுக் விடுவேன். ஆடியன்ஸ் விழுந்து பொறண்டு சிரிக்கும். (அந்த காட்சியை செய்து காட்டுகிறார்). அந்த இடத்துல அப்படி ஒரு லுக் விட்டாலே போதும்னு யார் சொல்லி குடுத்தா? நமக்கா தோணுது. அதைத்தான் ப்ளட்னு சொல்ல வர்றேன்.

விகடன்: கோயம்புத்தூர் மண்ணுக்கும் சினிமாவில் காமெடிக்கும் ஏதோ தொடர்பு இருக்கும் போலிருக்குதே! நிறைய பேர் அங்கிருந்து வர்றாங்க..

கவுண்டர்: ஏங்க... மண்ணுக்கும் காமடிக்கும் என்னங்க சம்மந்தம்? அது என்ன கிழங்கா, மண்ணுல விளையறதுக்கு? அப்படியெல்லாம் எதுவும் கிடையாது. என்ன..அந்தப்பக்கம் கொஞ்சம் லொள்ளு ஜாஸ்தி! வீட்ல சொன்னபடி கேக்காம ஏடாகூடமா தப்பு பண்ணிப்புட்டு அப்படி இப்படின்னு கிடந்து வர்றாங்க. இங்கே பெரியாளா ஆறாங்க.

கலகலப்பு பேட்டி - பாகம் இரண்டு
.........................................................................


..........................
Posted by:
!சிவகுமார்!
..........................Monday, January 23, 2012

தமிழ்நாட்டின் ஒரே ஸ்டார் 7 ஸ்டார் ஜி.கே.தான் மாப்ள!!


டார்க் ரோஸ் தமிழன் ராமராஜன், அமுல் பேபி பவர் ஸ்டார் ஆகியோருக்கு கடும் சவாலைத்தர வந்தே விட்டார் 7 ஸ்டார் ஜி.கே. வரும் குடியரசு தினத்தில் ரிலீஸ் ஆகிறது தலைவரின் படமான தேனி மாவட்டம். தமிழகம் மட்டுமல்ல..உலகமே அல்லோகலப்படப்போகும் அதிசய சித்திரம் இந்த வாரம் வெளியாவதைக்கண்டு ரவுண்ட் நெக் டி ஷர்ட் போடுவோர் கூட டெய்லரிடம் சொல்லி காலர் வைத்து அதை தூக்கி விட அலைமோதுவதால் பொங்கல் தாண்டியும் தையல் மிஷின்கள் எல்லாம் தடதடக்கிறதாம்!!

                           காதல் ரசத்தை கண்டெய்னரில் இருந்து கடகடவென ஊற்றும் GK 

ரியல் எஸ்டேட் தொழிலில் நடக்கும் அபத்தங்களை களைந்து மக்களை காக்கும் கண்ணியவானாக ஜி.கே. பட்டையை கிளப்புவதே படத்தின் ஒன் லைன். நாயகி வர்ஷா இனி வருஷா வருஷம் பேசப்படுவார் என்று அறுதியிட்டு உறுதி கூறுகிறார்கள். 
                                                     
                      விவசாயிகளுக்கு தன்னம்பிக்கை உரமேற்றும் அதிநவீன எம்.ஜி.ஆர். 

'அசல் தல' கோபால் கந்தன் (GK) இக்காவியத்தின் மூலம் பராசக்தி, பருத்திவீரன் நாயகர்கள் செய்த புரட்சிகளை புறந்தள்ளி மாபெரும் வெற்றி பெறுவார் என ஆஸ்கர் கமிட்டி மெம்பர்கள் வரை நாக்கில் விரல் வைத்து பேசி வருகின்றனர். 

எதிரிக்கு வலி என்றாலும் கதறி அழும் ஹெவன் ஹ்யூமன் 7 ஸ்டார் 

         "மேதை, ஆனந்த தொல்லை வசூலை மிஞ்சணும். மொத டிக்கட் எனக்குத்தான்"

        லெக் பைட்டுல இனிமே கேப்டனுக்கு அடுத்து நம்ம வைஸ் கேப்டன்தான்!

                "மேதையை விட ஒரு ஷோ அதிகமா என்னை தியேட்டர்ல வச்சி அழகு பாப்பீங்களா?" 

       "குடியரசு தினத்தில் சந்திப்போம். தியேட்டருக்கு வந்துருங்க சாமியோ!!" 

                                                                   
அரை பாடி லாரியில் கம்பியை பிடிக்காமல் நிற்கும் தெகிரியசாலிகளை கூட மிரள வைக்கும் செவென் ஸ்டாரின் செமத்தியான ட்ரெயிலர்:
வை திஸ் கொலைவெறி பாடலை டம்மி பீஸ் ஆக்க வந்திருக்கும் செவன் ஸ்டாரின் செம குத்து: 

"யக்கா யக்கா" பாடல் தமிழ்நாட்டை கலக்கி அடிக்கும். வித்தவுட் டவுட்டு.  ******************************************************

................................
Posted by:
! சிவகுமார் !
...............................
                                                            

Friday, January 20, 2012

வட்டச்செயலாளர் வண்டு முருகன் வா....ழ்....க!
பிரபல பதிவர்கள் ஒரு சிலருக்கு மட்டுமே எதிர்கருத்தை ஏற்றுக்கொள்ளும் பக்குவமும், அதை நீக்காமல் தன்மையாக பதில் அளிக்கும் பண்பும் இருந்து வருகிறது என்பது ஊரறிந்த விஷயம். தனக்கு பின்பு பதிவுலகில் வந்தவர் வந்தவன் ஏதேனும் எதிர்கருத்தை (ஆபாச வார்த்தைகள் இன்றி)  முன் வைத்தால் அதை சமாளிக்க(அதாவது பேமஸ் ஆவதில் சில வழிகள்) சிற்சில பிரபலங்கள் கையாளும் ஆயுதங்கள்: கமன்ட் மாடரேஷன் வைத்து அவற்றை நீக்குவது, கேள்விக்கு பதில் சொல்லாமல் இருப்பது, அல்லது 'படுமொக்கை. சிரிப்பே வரலை. காம்ப்ளான் சாப்பிடு' என்று கேள்விக்கு சம்மந்தம் இல்லாமல் தீர்ப்பு/அட்வைஸ் சொல்வது. ஆஹா அருமை. ஓஹோ பெருமை. 

கே.ஆர்.பி. அவர்களின் பயோடேட்டா - தொண்டன் எனும் பதிவில் இப்படித்தான் ஆரம்பம் ஆனது ப்ரின்சின் யுத்தி. தொண்டன் என்று மட்டுமே விளித்த அஞ்சாசிங்கத்திற்கு கிடைத்த பட்டம் அடிவருடி, அதன்பின் சில நண்பர்கள் போட்ட கருத்துக்கு கிடைத்த பட்டம் 'தம்பிங்களா' (இப்படி சொல்வதால் 'அண்ணா' ஆகி தமிழகத்தை ஆள முடியாது). பேமஸ் ஆவதற்கு ஏதோ வேலை செய்ய வேண்டுமாம். அந்த பிழைப்பு எங்களுக்கு தேவை இல்லை.ஏனெனில் நாங்கள் ஆள ஆசைப்படவே இல்லை. அதற்கான தகுதி சுத்தமாக இல்லை(எங்களச்சொன்னோம்.எங்களச்சொன்னோம்.) கஸாலிக்கு கிடைத்த பட்டம் 'இவன் யாரு பின் லேடன்? எங்கிருந்து கிளம்பி வர்றானுன்களோ?' (அவன் இவன் என்று ஒருமையில் அழைக்கும் அநாகரீகம். பின்பற்றும் கட்சித்தலைமையே இது போன்ற செயல்களை ஊக்குவிப்பதால் இது ஒன்றும் ஆச்சர்யமல்ல), மேலும் சாக்கடை பயலுவ, சிராஜுக்கு கிடைத்த பட்டம் 'இன்னொரு சாக்கடையும் சங்கமம் ஆகிருச்சி'. 

இப்படி அரதப்பழசான ஆயுதங்களை வீசினால் ஆப் ஆகி விடுவார்கள் எனும் மிதமிஞ்சிய கற்பனைக்கு சல்யூட். அதெல்லாம் அந்தக்காலம்...!! பிரின்ஸ் தன்னால் தர்க்கம் செய்ய முடியாமல் பின்னடைவை சந்திக்கும் போதெல்லாம் 'உங்கள் காமடி படு மொக்கை' என்று தீர்ப்பு சொல்வதெல்லாம் இருக்கட்டும். அவர் அடித்த கமண்ட்டுகள்  எல்லாம் 80 களில் வரும் எஸ்.எஸ். சந்திரனின் காமடியில் 25%  கூட இல்லாதது பரிதாபமாக இருந்தது.

                                                                               
இதுவரை கே.ஆர்.பி. சொல்லி எந்தப்பதிவும் வெளியிடப்பட்டதில்லை. கே.ஆர்.பி. பதிவில் ஆரத்தி ஏந்தி கமன்ட் போட்டதை விட அவரை நாங்கள் ஓட்டியதே அதிகம். அதற்கு ஆதாரம் அவருடைய அண்மைக்கால பதிவுகளில் நாங்கள் இட்ட பின்னூட்டங்களே. அதை ஏற்கும் பக்குவம் இருப்பதால்தான் அவர் மீதான மரியாதை கூடுகிறது. 

கே.ஆர்.பி. ஏதோ 500 இளைய பதிவர்களை கைவசம் வைத்திருப்பதாகவும், அவர்கள் வேறெங்காவது பொங்கினால் இவர் சொல்லிதான் இதெல்லாம் நடக்கிறது என்று தென்னகத்து ஜேம்ஸ் பாண்டு போல துப்பறியும் பதிவுலக பிதாமகர்கள் சிலர் அந்த எண்ணத்தை மாற்றிக்கொள்ளவும்.அவரை ஆதாரமின்றி கேள்வி கேட்டு தொந்தரவு செய்வது, 'உங்க பசங்கள ஆப் பண்ணுங்க' என்று சொல்வது எல்லாம் இனி வேண்டாம். கே.ஆர்.பி. என்ன மாணிக் பாட்ஷாவா? அவருடைய ஆட்டோ கிழிக்கப்பட்டதும் நாங்கள் ஆயுதத்தை கையில் எடுப்பது போலவும், நாலா பக்கமும் அவர் பார்த்ததும் அவற்றை கீழே போடுவது போலவும்(பாட்ஷா சீனை கற்பனை செய்து கொள்க) அட்மாஸ்பியர் க்ரியேட் பண்றீங்க?  

கே.ஆர்.பி..... இதனால் சில நேரங்களில் உங்களுக்கு தொந்தரவு ஏற்படுவதை பார்த்து வருகிறோம். அது உங்களுக்கு சங்கடத்தை தந்தால் வருந்துகிறோம். (ரொம்ப கஷ்டப்பட்டு வருந்த வேண்டி இருக்கு)  அதே சமயம் யார் ஒருமையில் அழைத்து சாடுகிறார்கள் என்பதும் உங்களுக்கு தெரியும். எங்கள் லிமிட்டும் எங்களுக்கு மிக நன்றாக தெரியும். அதை அந்த பிதாமர்களிடம் சொல்லி இருப்பீர்கள் என நம்புகிறோம். இந்த கூத்துக்கு ஆரம்ப புள்ளி நாங்கள் இல்லை என்பதால் வழக்கம் போல் எங்கள் பாதையில் செல்கிறோம். 

எம்மிடம் பதில் அளிக்க இயலாதவர்கள் எதிர்ப்பதிவு போடுவதை வரவேற்கிறோம். அது அவரவர் உரிமை. இங்கு வந்து கூட ஏகத்துக்கும் பொங்கலாம். ஆனால் சாக்கடை, அவன் இவன் என்று இஷ்டத்திற்கு வாய் விட்டால்...அதே தரத்தில்தான் ரிவிட் அடிக்கப்படும்.(கே.ஆர்.பி.யே   தடுத்தாலும்).    அதில் எள்ளளவும் சந்தேகமே வேண்டாம்!!

*****************************************************************

இந்தப்பாடலை உங்களுக்கு டெடிக்கேட் செய்கிறோம். வரிக்கு வரி உங்களுக்குனே எழுதன மாதிரி இருக்குண்ணே. தயவு செஞ்சி முழுசா கேட்டுப்பாருங்க கே.ஆர்.பி. ப்ளீஸ். 

இதற்கு கேபிள் பாடணும். நீங்க வாய் அசைக்கணும். (நெனச்சாலே சிரிப்பை கண்ட்ரோல் பண்ண முடியல). இவங்க ரெண்டு பேரும் நேர்ல சிக்குனா விடாதீங்கப்பா. பெர்பாம் பண்ணியே ஆகணும்..Both the guys!!

"கிளிகளுக்கு ரெக்கைகள் மொளச்சிடுத்து. அது எல்லாம் ஆத்தை விட்டு பறந்து போயிடுத்து" - பாரிஸ்டர் KRP.செந்தில்காந்த்.


************************************************************


                                                                     

Thursday, January 19, 2012

அமைதியா வேலை பாருங்கடா அப்ரண்டீசுங்களா..                                                    "காகித ஓடம்..கடலலை மீது.."

'பைலட் பாதுஷா' லைப் டைம் அசீவ்மென்ட் அவார்ட் உங்களுக்கு தர்றோம். புத்தக கண்காட்சிக்கு மாக்குனு தவ்வி ஓடி வாங்க என்று ஒரு அழைப்பு வந்தது. "எனக்கு அவார்டா? செய்யாத தப்புக்கு புழலில் குழாப்புட்டா?" என்று வெளியே சீன் போட்டாலும் அதை வாங்காமலா போயிடுவேன். ஹி..ஹி..! பைக்கில் பறக்க ஆயத்தமானேன். ஆனால் அது செல்ப் எடுக்கவில்லை. அந்நேரம் பார்த்து அஜயும், குஜயும் வேது(யானை) மீதமர்ந்து டபுள்ஸ் போய்க்கொண்டு இருந்தனர்.'நானும் வர்றேன்' என்றதற்கு 'இடமில்லை. இது மாநகர ப்ரின்சோட டிரைவரின் யானை. வேண்டுமெனில் அதன் வாலைப்பிடித்து தொங்கியவாறு வா' என்றனர். டபுள் ஓக்கே என்றேன். வால் பிடித்து தொங்கியவாறு செல்லும் சிரமம் எவ்வளவு கடுமை கொடுமையானது என்று அன்று உணர்ந்தேன். 14 ஹவர்ஸ் 59 செகண்டில் ஸ்பாட்டை அடைந்தேன்.

                                                            'பிடிவாதுடுலு' பிரின்ஸ்

வாசலில் ஒரு பீட்டர் நான் தொங்குவதை பார்த்து 'Hey..you are so ridiculous dude' என்று ஏளனம் செய்தான். முதல் அப்பு. என்ன சொல்கிறான் என்று புரியாவிட்டாலும் 'போடா சத்யம் த்யேட்டர்ல ஓசி டிக்கட் வாங்கி தராத பரதேசிப்பயலே' என பீட்டரை ரிவிட் அடித்தேன். அவன் பேசியதன் அர்த்தத்தை அறிந்து கொள்ள உள்ளே ரெபிடெக்ஸ் டிக்சனரி வாங்கவும் உறுதி பூண்டேன். சென்ற வழி நெடுகிலும் 'அடிவருடிகளும், சில அவதானிப்புகளும்' எனும் குறு நாவலின் பேனர்களை குறு குறுவென பார்த்தவாறு பயணித்தேன்.  

                                           ஒளிவட்டத்தை சுற்றி பாதுஷா வட்டமிடல்     

ஆயிரக்கணக்கானோர் கூடியிருந்த இடத்தில் எனது பைஜாமா மட்டும் தனித்து  தெரிந்ததை கண்டு கொண்ட பிரின்ஸ் ஓடோடி வந்தார். வந்த வேகத்தில் ஆளுங்கட்சி அடிவருடி கால் சுண்டுவிரலை பிரின்ஸ் நசுக்கிவிட 'ஏம்பா. பாத்து போ' என்றார் அந்த அடி(பட்ட)வருடி. "யோவ்..நீ செஞ்ச காமடி மொக்கை. சிரிப்பு வரல. எனக்கு கோவம் வரல" என சம்மந்தம் இல்லாமல் பேச, டென்சன் ஆன வருடி உச்சிமண்டையில் நங்கென கொட்டிவிட்டார். ப்ரின்சுக்கு முதல் ஆப்பு.

'நேசனல் ஜ்யாக்ராபிக்' கடையில் பிரின்ஸின் புத்தகம் எப்படி போகிறது என்று மறைந்திருந்து மர்மமாக பார்த்தோம். 'இதை வாங்கிக்கங்க. இன்னிக்கி மட்டும் ஆறே முக்கா காப்பி வித்துருக்கு. போனா வராது. பொழுது போனா கிடைக்காது' என்று நாங்கள் சொல்லித்தந்தவாறு வியாபாரம் செய்தார் ஓனர்.

''அட நீங்க பாதுஷாதான?" என்று ஏற்கனவே செட் செய்த ஆள் அரங்கில் எங்களைப்பார்த்து அலறினார்.அப்பாட..என்ன ஒரு ஆனந்தம். இப்போதுதான் குளிர் காற்று முன்பை விட வேகமாக வீசியது. எல்லோரும் திரும்பி என்னையே பார்த்தனர். அமலாதித்த மாமல்ல மன்னன் உட்பட.  யாருக்கும் தெரியாமல் சுச்சா போய்க்கொண்டு இருந்த சுட்டியும் அதை அப்படியே விட்டுவிட்டு என்னை நோக்கி வாயை பிளந்தான். ஜெய் போலேநாத்!

''அட உங்க கக்கத்துக்கு பக்கத்ல வெக்கப்பட்டு நிக்குறது பிரின்ஸ்தான?" என்று இன்னொரு குரல் உற்சாகத்தில் கத்தியது. 'என்னை உயர்த்தி பேசாதீங்க. நான் எப்பவுமே தாழ்ந்த வீதி ஆளாகவே இருக்கணும்னு ஆசைப்படறேன். அப்பதான் அவாளை வம்புக்கு இழுத்து அவுல் சாப்பிட முடியும். ப்ளாக்கில் கல்லா கட்ட முடியும்' என அளவாக பேசினார் பிரின்ஸ். 'அப்பறம் எதுக்கு அவள் ஒரு தொடர்கதை சுஜாதா ஸ்டில்லை வீட்டு வாசல்ல தொங்கவிட்டுருக்கீங்க?' என்று 'வா.சூ' வை மூடத்தெரியாத முட்டாள் பம்ப் அடித்தான். ப்ரின்சுக்கு அடுத்த ஆப்பு! விடுவாரா நம்ம ஆளு? "தம்பி. டேய். டெட்ட டேய். உடன்பிறவா தம்பி..மொக்கையா இருக்கு. பெட்டர் 'லக்' நெக்ஸ்ட் டைம்' என்றார். ப்ரின்ஸின் கண்கள் சிவந்து இருந்தாலும் கோபமே இல்லை. நோட் திஸ் பாய்ன்ட் டு பாய்ன்ட் யுவர் ஆனர்(டிக்சனரி வாங்கியதும் நான் பேசிய முதல் இங்கிலிபீசு. இதுவும் புரியலன்னா நீ காமடி பீசு. ஹெ..ஹே).   

'கொன்னுட்ட மச்சி' என்று பிரின்ஸை நான் சீராட்டி மோரூட்டி தயிரூட்டிவயவாறு 'பின்பக்கம் உள்ள வரிசைக்கு'சென்று கொண்டு இருக்கையில் 'பால்பாய்ன்ட் மை'ஸ்டால் இருக்கையில் அமானுஷ்யபுத்திரன் அவர்கள் டைனோசர் பொம்மையுடன் விளையாடிக்கொண்டு இருந்ததைக்கண்டோம். 'பாதுஷா..Get Ready Folk. கேமராவை பாத்து போஸ் குடுத்தா பில்லக்கா பசங்கன்னு நினைப்பாங்க. நான் அவர்கிட்ட அவர் என்கிட்ட பேசுறாப்ல இருக்குற ஸ்டில்லை நச்சுனு எடு' என உயிரை வாங்கினார் பிரின்ஸ் . என்னிடமோ கேமரா இல்லை. நான் ஒரு பரம பர்மா ஏழை. படம் என்றாலே பைலட் தியேட்டர்தான் செல்வேன். 149 ஓவாய்க்கு மேல் புத்தகம் வாங்கவே என் பழைய தலைமுறை தாத்தாவிடம் ராக்கெட் வட்டிக்கு கடன் வாங்கும் குசேலன்(இப்படி அனுதாபம் தேடுவதில் அலாதின்னா அலாதி அப்படி ஒரு அலாதி). 

எனவே அரங்கில் மாட்டி இருந்த CCTV கேமராவை புடுங்கினேன். அதை பார்த்துவிட்ட நபர் ஆவேசமாக என்னிடம் வந்து 'How Dare! டேய்..நீ என்ன பெரிய புடுங்கியா' என்றார். ''ஏண்டா..நீதான் சென்னை(புத்தக காண்காட்சி)க்கு அத்தாரிட்டியா?நான் புடுங்குனதை பாத்தும் புடுங்கியான்னு கேக்குறியே..இலக்கிய ஒலகம் வெளங்குமாடா வென்ரு" என அவனை குழப்பி அடிக்க ஆரம்பித்தேன்.அப்படியே அந்தரத்தில் தொங்கி அடித்தவாறே ரெபிடெக்சில் How Dare அர்த்தத்தை படித்து முடித்தேன்.  அப்படியே Get ready folk வார்த்தையின் அர்த்தத்தை அறிந்து கொள்ள சுஜாதாவின் 'என் இனிய எந்திரா' புத்தகத்தை 500 காப்பி வாங்கி மூட்டை கட்டினேன். 

                                   "உன்னால நான் கெட்டேன். என்னால நீ கெட்ட" 
             
இன்னுமொரு வேலை மிச்சம் இருந்தது. அரங்கில் ஒரு சிலர் மிச்சம் இருந்த 'பைலட் பாதுஷா' விருது வழங்கும் பழைய தலைமுறை மேடையை நோக்கியவாறு விறுவிறுவென நடந்தேன். இரண்டு பேர் மட்டுமே கூட்டத்தில் இருந்தாலும் பேஸ்மென்ட் ஆடியது. அவ்விருவரில் எவனாவது எசகு பிசகாக கேள்வி கேட்டுவிட்டால்? அதனால் முன்பே வாங்கி இருந்த சரக்கை அடித்து  விட்டு சரக்கென விருதை வாங்கிய கையோடு ப்ரின்ஸின் யானை வாலை பிடித்து தொங்கியவாறு இருப்பிடத்தை நோக்கி பயணிக்கலானேன். 

************************************************
     

எனது பால்ய கால காணொளி. பார்த்து பரவச நிலையை அடையுங்கள்:  
__________________

Posted By:

அடிவருடிஸ்! (Not Diapers)
_________________


Monday, January 16, 2012

சென்னை புத்தக கண்கொள்ளாக்காட்சி - 2போகி, பொங்கல் அன்றும் புத்தக கண்காட்சி செல்லும் படலம் தொடர்ந்தது. பதிவர்கள் அனைவரும் டிஸ்கவரி புக் பேலஸ் ஸ்டால் அருகே நின்று நித்தம் மணிக்கணக்கில் பேசினாலும் தனது ஸ்டாலில் நிறைய புத்தகம் வாங்காம இருக்காங்களே?என்ற பதட்டம் அதன் ஓனர் வேடியப்பன் முகத்தில் வெடித்தவாறு இருந்தது வேடிக்கை. சில சமயம் "கொஞ்சம் தள்ளி நின்னு பேசுங்க" என்று பதிவர்களை ஓரம் கட்டுவதிலேயே டயர்ட் ஆகி லிட்டர் கணக்கில் தண்ணீர் குடித்து கொண்டிருந்தார். பதிவர்கள் எழுதிய புத்தகங்கள் உட்பட ஏனைய புத்தகங்கள் நிறைய விற்பனை ஆகிக்கொண்டு இருந்தது அவரது ஸ்டாலில். பழகுவதற்கு இனிமையான மனிதர். 

                                "ப்ளாக்கர்ஸ் இம்ச தாங்கலையே முருகா" - வேடியப்பன்

தன் படைப்புகளை வாங்கிய பக்தர்களுக்கு இலவச ஆட்டோக்ராப் போட்டு தந்தார் கேபிள். யார் போன் செய்தாலும் "ஹலோ..சொல்லுங்க. நானா? என்னுடைய ரசிகர்கள் கிட்ட பேசிக்கிட்டு இருக்கேன்" என்று அதகளம் செய்து கொண்டிருந்தார். நாட்டி பாய்!!

          "எத்தன?  பேஜுக்கு ஒரு கையெழுத்தா. போட்டாச்சி. போட்டாச்சி" - கேபிள்
         
நக்கீரன் ஸ்டாலை வலைவீசி தேடிக்கொண்டு இருந்தார் அரசியல் பதிவர்  கஸாலி. இலக்கியவாதிகள் பேரைக்கேட்டாலே கண்கள் சிவந்து கோபக்கனலை கக்குகிறார். 

                           "மன்னார்குடி மர்மங்கள் புத்தகம் எங்க கிடைக்கும்" - கஸாலி.  

காலையிலேயே வந்து புத்தக வேட்டையை ஆரம்பித்தனர் வேடந்தாங்கல் கருனும், கவிதை வீதி சௌந்தரும். தேர்வு நேரம் என்பதால் வேலைப்பளு அதிகம் என கூறினார். மாணவர்களுக்கும் சில புத்தகங்களை வாங்கினர். சில சௌந்தர் வேறு கடைக்கு போனதும், நர்சரி ரைம்ஸ்களை எங்களுக்கு பாடிக்காட்டினார் கருன். :)  

                "சிபியின் சில்மிஷங்கள்" புத்தகம் மட்டும் கெடைக்கலையே?"  - கருன்.

நக்கீரன் ஸ்டாலில் நம்ம அஞ்சலி இருப்பதாக செய்தி வந்தது. உள்ளே சென்று பார்த்தேன். 'அப்படிப்பார்க்காதே' என்று வெட்கப்பட்டார். "இதென்னமா வம்பா போச்சி. அதை நான் சொல்லணும். பொல்லாத பொண்ணா இருப்ப போல" என்று ஆத்திரம் பொங்க திட்டுவிட்டு வேறு கடைக்குள் நுழைந்தேன்.  

                                     'அப்படி பாக்காதே'ன்னு நெசமாத்தான் சொல்றியா?

'சுப்ரமணியபுரம்'  ஜீனியர் ஆர்டிஸ்ட் ரேஞ்சுக்கு பெல்பாட்டம், கட்டம் போட்ட சட்டையுடன் வந்தார் பிலாசபி. அந்தாளு வாங்குற புக்கு எல்லாமே ஒரு மார்க்கமா இருக்கு. கணேஷ் சார் எங்களுடன் இணைந்தார். கேபிள் சங்கர் எனும் புதிய பதிவர் பற்றியும், பத்திரிக்கை துறை அனுபவங்கள் குறித்தும் எம்மிடம் பேசினார்.  அவரிடம் அரசியல் கேள்விகளை அலசிக்கேட்டார் கஸாலி.    

                             "விலையில்லா இலவச ப்ரீ புக் எங்க கிடைக்கும்" - கணேஷ்.

"இந்தா வந்துட்டேன்" என்று சொல்லிவிட்டு மணிக்கணக்கில் காணாமல் போனார் சிராஜுதீன். அன்று புத்தக ஸ்டால்களில் இருந்த பாதிக்கும் மேற்பட்ட புத்தகங்களை அவர்தான் வாங்கி இருப்பார் போல. பல கிலோவிற்கு வாங்கிய புத்தகங்களை சில பைகள் திணற திணற அடுக்கினார். அவருக்கு எந்த உதவியும் செய்யாமல் சேரில் அமர்ந்தவாறு பொறுப்பின்றி மாலை மலர் பேப்பர் படித்து கொண்டு இருந்தார் கஸாலி. 

வேர்வை சிந்த புத்தகம் அடுக்கும் சிராஜும், பொறுப்பின்றி மேதை ஸ்டில் பார்க்கும் கஸாலியும்.                                                                
         
கஸாலி, பிரபாகர், கணேஷன் சாருடன் சுற்றிக்கொண்டு இருக்கையில் ஒரு ஸ்டாலில் எழுத்தாளர் பாலகுமாரன் அமர்ந்து இருந்தார். அவரிடம் ஒரு சந்தேகம் கேட்க முனைகையில் கணேஷ் மற்றும் கஸாலி இருவரும் மேலும் இரண்டு கேள்விகளை கேட்க சொன்னார்கள். அதைக்கேட்டு பாலகுமாரனிடம் கன்னத்தில் சப்பென அறைவாங்க எனக்கு தைரியமில்லை. எனவே மிக முக்கியமான சந்தேகத்தை கேட்க விரைந்தேன். அந்தக்கேள்வி: "சார் நீங்க ஜென்டில்மேன் படத்துக்கு வசனம் எழுதி இருந்தீங்க. எனக்கு ஒரு சின்ன சந்தேகம். டிக்கிலோனா, ஸ்பூன்லிங்...அதெல்லாம் கூட நீங்க எழுதுனதா? இல்ல கவுண்டமணி - செந்திலுக்கு ட்ராக் எழுதுற வீரப்பன் எழுதுனதா?" என்று கேட்டேன்.  
                                                               
                                                புத்தக கண்காட்சியில் பாலகுமாரன்

                                                    பாலகுமாரன் அவர்களுடன்...

 "இல்லப்பா. நாந்தான் எழுதனேன். நிறைய பேர் என்னை சீரியசான ஆளுன்னு நெனைக்கறாங்க. அப்படி இல்ல. நான் ஜாலியான ஆள்தாம்பா" என்றார். என்னை மதித்து பதில் அளித்த பாலகுமாரன் அவர்களுக்கு நன்றி.

மேதை பார்த்த போதையில் இருந்த பிலாசபியும், அஞ்சாசிங்கமும் அது தெளிய நேற்று புத்தகங்கள் வாங்க வந்தனர். ஆனால் மேதையின் பாதிப்பு அதிகமாக இருந்ததால் சீக்கிரமே மலையேறி விட்டனர்.  
...............................................................................................

"புத்தக கண்காட்சிக்கு போகும் எண்ணம் உருவான விதம்" குறித்து 10 பதிவுகள் போடுமாறு அகிலமெங்கிலும் இருந்து அழைப்போசை. என்ன செய்யலாம்..!!!
..............................................................................................


...............................
Posted by:
!சிவகுமார்!
..............................
                                       
                             

Tuesday, January 10, 2012

சென்னை புத்தக கண்கொள்ளா காட்சி - 2012


சனியன்று(07/01/12) செ.பு .க துவங்கிய காலை 11 மணிக்கே டான் என ஆஜராகிவிட்டார் பிலாசபி. மூன்று மணிக்கு ஈசனை(பிரபாகரன்) அங்கு சந்தித்தேன். இருவரும் உள்ளே நுழைந்த மறுநிமிடமே ஒரு பெரியவர் ஈசனை மட்டும் தனியே அழைத்து பேசிக்கொண்டு இருந்தார். முன்னாள் பதிவர் என்று எண்ணினேன். "இல்லைங்க. அவர் வாசிக்கும் ஒரு சில ப்ளாக்குகளில் எனதும் ஒன்றாம். என்ன இது அதிசயம்" என்று 'குணா' கமல் போல 'பார்த்தவிழி..' நடைபோட்டார். அருகில் இருந்த ஸ்டாலில் ஒரு இளம்பெண் "நன்றி அக்கா. நன்றி ஐயா. நலமா?" என தூய தமிழில் பேசிக்கொண்டு இருந்தார். "யோவ்..நாங்க டெம்ப்ளேட் கமன்ட் போட்டா மட்டும் டென்ஷன் ஆவற. இதை மட்டும் கேக்க மாட்டியா?" என்றேன். தத்துவம் பதில் தரவில்லை. ராஸ்கோல்!

233-வது எண் ஸ்டாலை கண்டதும் ஆச்சர்யம். 'உணவு உலகம்' பெயர் போட்டிருந்தது. நம்மிடம் ஒரு வார்த்தை கூட சொல்லாமல் ஆபீசர் கடையை திறந்து இருக்கிறாரே என்று நரம்பு புடைத்து மனதை அடைத்தது. ஆனால் இதை முன்பே உணர்ந்திருப்பார் போல ஆபீசர். உள்ளே ஒரு பெண் போலீசை உலவ விட்டிருந்தார்.    
                                                           
                                             ஆபீசர் சார். இது உங்க கடைதான?

யாம் நடந்து போகையில் திடீரென இருவர் முதுகிலும் சப்பென அறைந்தார் ஒருவர். யாரது என்று திரும்பினால்..அட 'வீடு திரும்பல்' மோகன்குமார் சார். நீங்க இப்படி சுத்துங்க. நான் அப்படி சுத்தறேன் என்று எஸ்கேப் ஆனார். அடுத்து கண்ணில் பட்டது பிரபல பஸ்ஸர் க.ராவும், கீதப்ரியனும். இருவருக்கும் சலாம் போட்டுவிட்டு தொடர்ந்தோம். பிளாஸ்டிக் பைக்கு தடா போட்டதால், சீனியர் பதிவர்கள் பலர் படையாப்பா ரேஞ்சுக்கு கல்லூரி பேக்குடன் சுற்றிவந்தனர். பார்க்க பார்க்க பரவசம்.  
                                                                   
                                           சிங்கிள் Pack க.ரா. & ஸ்கூல் Bag கேபிள் 

அன்னா ஹசாரே புத்தகத்தை ஒரு கடையில் கண்டு கண்கள் சிவந்தார் கேபிட்டலிஸ்ட் கே.ஆர்.பி. 'அன்னா ஹசாரேவா? இதை நீங்களே வச்சிக்கங்க' என்று ஸ்டால் வைத்து இருந்தவர்களை ஓட்டினார். முறைத்து லுக் விட்டார்கள் அவர்கள். டிஸ்கவரி புக் பேலஸ் ஸ்டால் அருகே பதிவர்கள் முற்றுகை இட்டிருந்தனர். அங்கே வந்த யூத் ஒருவர் கேபிளை கண்ட ஆர்வப்பெருக்கில் 'சார் நீங்கதானே கேபிள். உங்க சினிமா விமர்சனங்கள எல்லாம் விடாம படிப்பேன். அருமைன்னா அருமை அப்படி ஒரு அருமை சார்' என்று பரவச மழை பொழிந்தார். இறைவா...!!!!

                                         கொத்து பரோட்டாவிற்கு போட்டி புத்தகம்    

இம்முறை சில கடைகளில் பன்றி தலைப்புள்ள புத்தங்களை காண நேர்ந்தது. அதில் ஒன்று அருந்தவப்பன்றி. 
                                                                        

அடுத்த புத்தகத்தின் பெயர் பன்றிக்குட்டி. நிஜமாக வாசிக்க வேண்டாம். வாசிப்பது போல் போஸ் குடுத்தால் போதும் என்று சொல்லியும் பன்றிக்குட்டி பற்றி சில வரிகளை வெறியுடன் பார்க்கும் பயபுள்ள.                                                     
                   
                                                     பன்றிதாசனின் படிப்பாற்றல் 

சில பல இலக்கிய புத்தகங்களின் தலைப்புகளை கண்டு 'எங்க உச்சி மண்டலை சுர்' என்றது.  பகலில் ஒளிரும் நிலா, இருளில் மிளிரும் சூரியன், தாத்தா எனும் பேரன், போண்டா விற்கும் பாண்டா கரடி, ஒற்றைக்காலில் நிற்கும் எட்டுக்கால் பூச்சி..ஆத்தாடி என்னமா தலைப்பு வக்கிறாங்க? முரணான தலைப்புகளை இன்னுமா வச்சிக்கிட்டு இருக்காங்க. அதெல்லாம் பழைய பேஷனாச்சே? எனவே ரிஸ்க் எடுக்க விரும்பாமல் சிதறி ஓடினோம்.

என்னடா இது ஒரே மாதிரி திரைப்பட பாடல்களை கேட்டு சலித்து விட்டதே என்று எண்ணிய நேரத்தில் கண்ணில் பட்டது கீழே உள்ள ஸ்டால்.  அங்கிருந்த டி.வி.யில் 'தவளையாரே' பாடலைக்கேட்டு மெய்மறந்தேன்.  உணர்ச்சிவேகத்தில் உள்ளே நுழைந்தேன்  'செல்லமே செல்லம்' குழந்தைப்பாடல்கள் எனும் பெயரில் இருந்த 6 பாகம் கொண்ட டி.வி.டி.க்களை அள்ளினேன். விலை 600+. ஆனால் 5 டி.வி.டி.க்களை 10% தள்ளுபடியுடன் சேர்த்து மற்றொன்றை இலவசமாக தந்தனர். ஒவ்வொன்றிலும் 20 பாடல்கள். மொத்தம் 120 பாடல்கள். எல்லாம் எனக்கே!! இனி இதுதான் நமக்கு டைம் பாஸ். 

     
  எம் போன்ற சுட்டிகளுக்கு பிடித்த ஸ்டால் 


என் மனம் துள்ளிவிளையாட காரணமான அந்தப்பாடல் உங்களுக்காக:


நீங்களே சொல்லுங்க? எப்படி அருமையா இருக்கு பாட்டு? ஆனா இந்த பிலாசபி "ஹலோ..உங்க சொந்தக்கார குழந்தைங்களுக்கு வாங்கறீங்களா?" என்று வெறுப்பேற்றினார். இல்லை. எனக்காகத்தான் என்று பலமுறை சொல்லியும் கேட்கவில்லை.  பழம்பெரும் பதிவர்கள் எல்லாம் திடுதிப்புன்னு காமிக்ஸ் கடைல பூந்து புத்தங்களை அள்ளி 'நாங்களும் கொளந்தைங்க'தான்னு சொன்னா நம்புற உலகம் நான் சொன்னா மட்டும் நம்ப மாட்டேங்குதே..!!

புதிய தலைமுறை ஸ்டாலில் பழைய புத்தகங்களை விற்றனர். அழகான யுவதி அங்கு தரிசனம் தந்தார். அரைக்கை டி ஷர்ட்டை மடித்து விட்டு அவர் போஸ் தந்ததைக்கண்ட கோபத்தில்/கூச்சத்தில் அந்த ஸ்டாலை ஸ்கிப் செய்தோம்.  வி டோன்ட் லைக் இட். அதனருகே சத்தியம் தமிழ் செய்தி சேனல் கடையை பரப்பி இருந்தது. சத்தியம் - Yes as Yes. No as No (என்ன ஒரு புத்திசாலித்தனம்). என்று விளம்பரம். பலே!!  புதிய சேனல் வெற்றி பெற வாழ்த்துகள். சில நிமிடங்கள் மட்டும் தலைகாட்டினார் ஆரூர். முனா. செந்தில்.  லேட் ஆனால் அவர் வீட்டில் பூரிக்கட்டை பறக்கும் என்று உளவுத்துறை தகவல் கிடைத்தது.

பிறகு அங்கன இங்கன சுத்தி வந்ததில் இரவு  9 மணி ஆகிவிட்டது.   எல்லாரையும் பேக் அப் செய்தனர். ஓடியாந்துட்டோம் வீட்டுக்கு.  
.....................................................................................


..............................
Posted by:
!சிவகுமார்! 
...............................

     

Wednesday, January 4, 2012

அண்மைத்தமிழன் க்ரூப் - துவக்க விழா + பேட்டி!அண்மைத்தமிழன் அண்ணாச்சியை பேட்டி எடுக்க பல நாள் முயற்சித்தும் பலன் கிடைக்கவில்லை. எப்போது கேட்டாலும் "இரு முருகா. நேற்று எழுத ஆரம்பித்த பதிவை சீனப்பெருஞ்சுவரை விட நாலு அடி நீளமாவது அதிகம் எழுதிவிட்டுதான் உன்னை சந்திக்க நேரம் ஒதுக்குவேன்.அதுவரை பொறு முருகா" எனும் பதிலே எமக்கு கிடைத்தது. நேற்றுகூட அவர் எழுத ஆரம்பித்த பதிவின் நீளம் உலக மேப்பின் உச்சியில் இருக்கும் க்வீன் எலிசபெத் தீவிற்கும், கீழே கிடக்கும் வெட்டல் கடலுக்கும் இருக்கும் தூரத்தை விட இரண்டு இன்ச் நீளமாக இருந்ததை கண்டு (ஆறு) மலைத்தோம். முருகா!! 

இறுதியில் ஒருவழியாக முருகன் இட்லி ஷாப்பில் பேட்டி அளிக்க சம்மதம் தெரிவித்தார். இதோ அந்த சுவாரஸ்யமான நிமிடங்கள்..உங்களுக்காக:


நாம்: வணக்கம் அண்ணாச்சி 

அ.த: வா முருகா. ஆத்தா ஆட்சி எப்படி இருக்கு?

நாம்: ஆத்தா பத்தி அ.த. தான் சொல்லணும் 

அ.த: அத சொல்லு. அதாவது ஆத்தா ஆட்சி அப்படி ஒண்ணும் அபாரம் இல்ல.

நாம்: 'அ' லயே வார்த்தைகளை கோக்கறீங்க? வெ. ஆ. மூர்த்தி ரசிகரா?

அ.த: அதெல்லாம் அநியாயம் ஆண்டவா..நான் ஆத்தா ரசிகன். அவங்க பண்ற அரசியலை ஆத்து ஆத்துன்னு ஆத்துவேன். அவ்ளோதான் அய்யா.

நாம்: அதெப்படி அய்யா அரை வரில அடங்கற மேட்டரை அஞ்சாயிரம் வரியா எழுதி அசத்தறீங்க? அந்த ரகசியத்த உங்க அபிமான ரசிகர்களுக்கு சொல்லியே தீரனும்.

அ.த: நீ ஏய்யா இத்தன 'அ' போடற? அதாவது அன்பரே, ஒருவரிக்கதைய திரைக்கதையா எழுதறதுக்கும், (கணினி) திரை கிழிய கிழிய கதையா எழுதறதுக்கும் ஏகப்பட்ட வித்யாசம் இருக்கு. உ.தா.ரணம் சொல்லட்டா?

நாம்: அதுக்குத்தான வந்ததே. சொல்லுங்கோ. சொல்லுங்கோ. 

அ.த: 'ஹோட்டலுக்கு போயி ரெண்டு இட்லி சாப்பிட்டேன்'. இதை என் ஸ்டைல்ல சொல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்றேன் கேளு. 

நாம்: ஸ்டார்ட்டுங்கண்ணா...... 

                                      "கால் ஸ்பூன் மாவுல 25 இட்லி சுடும் சூட்சுமமுங்க"         

அ.த: நேற்று மாலை 5 மணி 47 நொடி சுமாருக்கு முருகன் இட்லி கடை வாசலின் இடது பக்கத்தில் பைக்கை நிறுத்தினேன். ஹெல்மட்டை கையில் எடுத்து கொள்ளவில்லை. வணக்கம் போட்ட காவலாளியை கண்டு நான் லேசாக சிரித்து வைத்தேன். ஹோட்டலை நோக்கி வலது காலை எடுத்து தரையில் வைத்து நடக்க துவங்கினேன்.  அப்போது வழக்கம்போல இடது கை முன்னே வந்தது. அடுத்து இடது காலை வைத்தால்தான் நடக்க முடியும் என்பதால் அதை எடுத்து அடுத்த அடி வைத்தேன். இப்போது வலது கை முன்னே வந்தது. நல்வரவு எனும் தரைவிரிப்பில் கால் வைக்க மனம் ஏனோ மறுத்தது. அதனால் இடது ஓரம் இரண்டு சென்டி மீட்டர் தள்ளி காலை வைத்தேன். 

எல்லா ஹோட்டல்களிலும் இருப்பதுபோல இங்கும் அதன் முதலாளி நமக்கு இடது பக்கமாகவே கல்லாவில் வீற்றிருந்தார். பில் குத்தும் கம்பி, அதில் நிறைய பில்கள். உள்ளே எட்டிப்பார்த்தேன். கூட்டம் நிரம்பி வழிந்தது. எங்க உட்காரலாம் என்று யோசிக்க ஆரம்பித்தேன். அடுப்பிருக்கும் இடத்தருகே ஒரு நாற்காலி காலியானது. ஆனால் உச்சியில் மின்விசிறி இல்லை. சற்று காத்திருப்போம் என மனது சொன்னது. நானும், மனதும் பொறுமை காத்தோம். 
குடும்பத்துடன் பலர், ஜோடியாக சிலர் என ஆங்காங்கே ஆகாரத்தை அமுக்க, ஒருவர் "ஆ..காரம்" என அலறினார். பச்சையாக இருக்கும் பச்சை மிளகாயை கடித்து விட்டார் போல. 

என்னருகே வந்த சர்வர் "ஒரு ரெண்டு நிமிஷம் வைட் பண்ணுங்க சார்" என்றார். 'அது என்ன ஒரு,ரெண்டு நிமிஷம்?'என மனதுக்குள் சிரித்துக்கொண்டேன். "ஒண்ணும் பிரச்னை இல்லை முருகா" என்று நான் சொன்னதைக்கேட்டதும் கண்  கலங்கிவிட்டார்.."என் பேர் முருகன்னு உங்களுக்கு எப்படி சார் தெரியும்?" என்றார். "உங்க சட்டை பாக்கெட்ல பேரு போட்டிருக்கே முருகா" என்றேன். ஏகத்துக்கும் சிரித்தவர் "இது எங்க கடையோட பேரு 'முருகன் இட்லி ஷாப்' முருகா" என்று செல்லமாக கொமட்டையில் குத்திவிட்டு சென்றார். அவன் பெயர் முருகன் என்பது உண்மைதான். ஆனால் அதை நான் துப்பறிந்தது தப்பாய் போனதில் வருத்தமே. 

ஒருவழியாக ஒரு நாற்காலி காலியானது. ஓடிப்போய் உட்கார்ந்தேன். முருகன் வந்தார் "என்ன வேணும் சார்?". நான் "உங்க ஹோட்டல்ல இட்லிதான பேமஸ். சிக்கன் டிக்கா, ஸ்ப்ரிங் ரோல், கபாப் இதா கிடைக்கும்? ரெண்டு இட்லி மட்டும் கொண்டுவாங்க" என்றேன். பிறகு ஹோட்டலை நோட்டம் விட்டேன். மின்விளக்குகள் எரிந்து கொண்டு இருந்தன. சிலர் உள்ளே வர சிலர் வெளியே போய்க்கொண்டு இருந்தனர். சர்வர் உணவு பரிமாற கஸ்டமர்கள் சாப்பிட்டு கொண்டு இருந்தனர். மாஸ்டர் சமையல் செய்து கொண்டு இருந்தார். 

எனக்கான இட்லிகளை கொண்டுவந்து வைத்தார் சர்வர். தேங்காய், தக்காளி, கருவேப்பிலை சட்னி வகையாறாக்கள், சாம்பார், தண்ணீர் நிறைந்த டம்ளர், எவர்சில்வர் ஸ்பூன்கள் இரண்டு என அனைத்தும் ஆஜர். சரியான பசியில் நான் இருந்ததால் இட்லிகளை வெட்ட எத்தனித்தேன். இறைவனே பெர்மனென்ட் ஸ்பூனாக விரல்களை தந்திருக்கையில் வேறு ஸ்பூன் எதற்கு? எனவே வலது கையால் (சுண்டு விரலை மட்டும் விட்டு விட்டு) வெள்ளையாக இருந்த லேசான இட்லியை லேசாக பிய்த்தேன். மீதி இட்லி தட்டிலேயே இருந்தது. எடுத்த இட்லி துண்டை தொண்டையில் நுழைத்தேன். இலகுவாக பயணித்தது இட்லி. இலகென்றாலும் இலகு அப்படி ஒரு இலகு. முருகா..இட்லி..ஷாப்பாய சரணம்.

மீண்டும் அதே இட்லியை பிய்த்தேன். முதல் இட்லித்துண்டை விட இந்த துண்டு சற்று மொற மொறவென இருந்தது. ஒருவேளை இதை டைப் அடிக்கும் போது பேன் காற்றில் காய்ந்திருக்கலாம். அத்துண்டை சாம்பாரில் முக்க எண்ணுகையில் நண்பன் சாம், பாரில் இருந்து போன் செய்தான். கட் செய்து விட்டேன்.  போனை எடுக்கும் அவசரத்தில் அத்துண்டை கீழே போட, தன் துண்டால் அத்துண்டை சுத்தம் செய்தார் ஊழியர். அடுத்த இட்லியின் முதல் பாதியை பிய்த்தேன். மூன்று ரக சட்னியிலும் அதன் தலையை நனைத்தேன். என்ன ஒரு சுவை. டிவைனப்பா டிவன். சங்கரா..நாராயணா!!

கடைசி இட்லியை கையகப்படுத்தினேன். சாம்பாரில் ஒரே முக்கு. மஞ்சள் குளித்த அழகி போல சிணுங்கியது இட்லி(குஷ்பு இட்லி அல்ல). வலது கையால் முன்னோக்கி வாயருகே கொண்டு வந்தேன். பாதி தூரம் வரும்போது சாம்பாரில் இருந்த சாம்பார் வெங்காயம் இட்லியில் இருந்து கீழே விழுந்து விட்டது. கூடவே இரண்டு சொட்டு சாம்பாரும். கருவேப்பிலை மற்றும் குச்சி போல் இருக்கும் தக்காளி மட்டும் இட்லியின் வல, இடப்பக்கங்களில் புட் போர்ட் அடித்து கொண்டிருந்தன. இன்னும் ஓரிரு மைக்ரோ செகண்டுகள் மட்டுமே. அந்த இட்லியை நான் சாப்பிட போகிறேன். அந்நேரம் சட்டென கரண்ட் கட் ஆகிவிட்டது. அடுத்த நொடி மீண்டும் கரண்ட் வந்தது. கையில் இருந்த இட்லியைக்காணவில்லை. எவனோ இருட்டில்  என் கையை பிடித்து இழுத்ததை பிரமை என்று எண்ணினேன். ஆனால் அது நிஜமென பிறகுதான் உணர்ந்தேன். கோபம் வந்தே விட்டது.

வலது பக்கம் திரும்பி இடது பக்கம் வழியாக கல்லாவில் இருந்த முதலாளியிடம் புகார் செய்தேன். அவர் சிரித்தவாறு நான்கு பார்சல் பைகளை நீட்டிவிட்டு "சார்..'ரெண்டு இட்லி சாப்பிடுவது எப்படி'ன்னு நீங்க யோசிக்க ஆரம்பிச்சி ரெண்டு மணி நேரம் ஓடிப்போச்சி. இட்லித்துண்ட நீங்க வாய்ல போடுறீங்களோ இல்லையோ. இதே நிலை நீடிச்சா நான் தலைல துண்டு போடுறது நிஜம் சார். கூட்டம் ஜாஸ்தியா இருக்கு. புரிஞ்சிக்கங்க சார்" என்று வீறிட்டார். அவருக்கு பேராறுதல் சொல்லிவிட்டு வலது பக்கம் திரும்பி பைக்கை கிளப்பினேன். 'விர்'ரிட்டவாறு வீட்டை நோக்கி பறந்தது எனது பைக். எப்படி தம்பி திரைக்கதை?"

நாம்: அருமை சார். இதை மூன்று பாகமா படமெடுக்க முடிவு செஞ்சிட்டோம். மகிழ்ச்சி. நெகிழ்ச்சி. இந்தாங்க இதப்பிடிங்க.

அ.த: என்ன இது?

நாம்: அண்மைத்தமிழன் க்ரூப் - துவக்க விழா அழைப்பிதழ்.

அ.த: ஆத்தா..எனக்கு எதுக்கு க்ரூப்பு. வேண்டாம் போயிடு ராசா.

நாம் பதில் சொல்லாமல் எஸ்கேப்.
.............................................................................................

.........................
Posted by:
!சிவகுமார்! 
..........................