Friday, May 16, 2014

பரோட்டா பாதி... சால்னா மீதி...! – 1

ஒரிஜினல்: சாத்தான் பாதி… கடவுள் மீதி – 1!

பரோட்டா சூரியின் காமெடியை ரசிக்காதவர்களே இல்லை. நானும் சூரி ரசிகன் தான். ஆனால், சூரியிடம் நான் காமெடியை மட்டும் ரசிக்கவில்லை. வேறு சில பண்புகளையும் ரசிக்கிறேன். முதல் விஷயம், அவருடைய பேச்சு. அவர் பேசும்போது சுமார் பத்தடி தூரத்திற்கு எச்சில் வந்து தெறிக்கும். அச்சமயத்தில் அவருக்கு முன்னால் சென்று அமர்ந்துகொண்டால் குற்றால அருவியில் குளித்தது போல இருக்கும். ஐரோப்பிய நாடுகளில் பலரும் இந்த நூதன குளியல் முறையை பின்பற்றுகின்றனர். 

கல்லூரி பருவத்தில் நான் பரோட்டாவுக்கு மாவு பிசைய ஆசைப்பட்டேன். ஒரு நாளில் குறைந்தபட்சம் ஆறு மணி நேரம் ஷகிலா படம் பார்க்க வேண்டும் என்றார் மாஸ்டர். விட்டுவிட்டேன். ஏனென்றால், நான் ஏற்கெனவே ஏழெட்டு மணி நேரம் என் படிப்புக்காகச் செலவிட்டுக் கொண்டிருந்தேன். நான் சொல்வது சரோஜா தேவி புத்தகங்கள். ஸ்க்ரூ டிரைவரை போல எழுத்தாளனாக வேண்டும் என்றால் உலக இலக்கியத்தையெல்லாம் படித்தாக வேண்டும் என்ற வெறி. பைத்தியத்தைப்போல் படித்தேன்.

சூரி அதே வார்த்தைகளைச் சொல்லுகிறார். ஐம்பது பரோட்டாக்களை ஒரே மூச்சில் சாப்பிட வேண்டும் என்றால் பரோட்டா மீது பைத்தியமாக இருக்க வேண்டும் என்கிறார்.

பரோட்டா சூரியை போலவே அடத்தூ பேசும்போதும் எச்சில் தெறிக்கும். அடத்தூ சூரியை விட நன்றாக தூறல் போடுவார் என்று வானிலை நிபுணர்கள் சொல்வதைக் கேட்டிருக்கிறேன். ஆனால் அடத்தூவுக்கு சூரி அளவிற்கு தூரமாக துப்பும் மனோபலம் இல்லை. சாந்தியும், நித்யாவும் அவரை வேறு திசையில் இழுத்துக்கொண்டு விட்டார்கள். அந்த determination மனோபலத்தைப் பெறுவது மிகவும் சுலபம். காறி உமிழ்ந்தால் அது கைகூடும்.

சூரி வெண்ணிலா கபடிக்குழுவில் பரோட்டா சாப்பிடுவதற்கு முன்பு சால்னாவை கையில் மொண்டு குடிக்கிறார் அல்லவா ? அதற்கு அவர் சொன்ன விளக்கம்: நான் இப்படி இருப்பதற்கு இந்த பரோட்டாதான் காரணம். இது எனக்குக் கோவில் மாதிரி. ஆங்கிலத்தில் gravy என்பார்கள். அது மட்டும் இல்லையென்றால் பரோட்டாவை மொஜக் மொஜக் என்று சாப்பிட முடியாது. அப்படியானால் நம்முடைய வாழ்நாள் முழுவதும் நாம் சால்னாவை வணங்க வேண்டாமா ? சூரியிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய அற்புதமான பண்பு இது. கிராமப்புறங்களில் குழம்பை அடுப்பிலிருந்து இறக்குவதற்கு முன்பு ஒரு கை எடுத்து குடிப்பதை பார்த்திருக்கலாம். சாம்பாரை சட்னியோடு குழைத்து இட்லியில் பெனஞ்சு அடிக்கிறோம். அதற்கான மன்னிப்புக் கோருதலும் வணக்கமுமே அது.

ஆனால், இன்றைய தினம் இந்தியர்களாகிய நாம்தான் சால்னாவை அதிகம் அவமதிக்கிறோம். தமிழர்களுக்கே அதில் முதல் இடம். சால்னா செழிப்பாக இருக்க வேண்டுமென்றால் பரோட்டாவை அதிகம் சாப்பிட வேண்டும். ஆனால், நாமோ நான், குல்ச்சா என்று வட இந்திய டிபன் ஐட்டம்களை அடித்து நொறுக்குகிறோம். தம் வாழ்நாளில் பரோட்டாவே சாப்பிடாத ஆட்கள் பலர் தமிழகத்தில் இருக்கின்றனர். மேற்கத்திய நாடுகளுக்குச் செல்லும் நம்முடைய பார்வையில் படும் முதல் விஷயம் அங்குள்ள ஃபிகர்கள் தான். அங்குள்ள பார்ன் நடிகைகள் எல்லாம் தமக்கு அளிக்கப்படும் சொற்ப அளவிலான திரவ உணவினை வீணடிக்காமல் உட்கொள்வதை கவனித்திருக்கிறீர்களா ?

முன்பெல்லாம் முனியாண்டி விலாஸ்களுக்கு சென்றால் மாவு பிசைவதற்கு என்று ஒரு பெண்ணை வைத்திருப்பார்கள். இரண்டு கைகளாலும் மாவை பிசைந்துவிட்டு கடப்பா கல்லில் போட்டு அடிக்கும்போது தொப் தொப் என்று ஒருவித சப்தம் வரும். அதை பார்க்கும்போது எனக்கு எனது தலையில் மசாஜ் செய்வது போல இருக்கும். நன்றாக தூக்கம் வரும். இப்பொழுதெல்லாம் கொழுப்பெடுத்த தடியன்களை வைத்து ஒரு பாடல் முடிவதற்குள் மாவு பிசைந்து முடித்துவிடுகிறார்கள். என் கல்லூரி பருவத்தில் அந்த பரோட்டா மாஸ்டர் சொன்னது எனக்கு இன்னமும் நினைவிலிருக்கிறது. ஆனால் ஷகிலா படங்களுக்கும் மாவு பிசைவதற்கும் என்ன சம்பந்தம் என்றுதான் இன்றுவரை புரியவில்லை. இன்னொரு புரியாத சமாச்சாரம் தற்காலத்தியது. சன்னி லியோனி என்று ஒரு நடிகை இருக்கிறாரே, அவருக்கும் திண்டுக்கல் லியோனிக்கும் ஏதாவது சம்பந்தம் உள்ளதா ?