Saturday, February 18, 2012

அட உங்க வூட்ல பார்ட்டி!!


                                                           எப்படி இருந்த நான்...

தல கவுண்டமணி: வீட்டுக்கு குடிவந்து நாலு மாசம் ஆச்சி. இந்த டிபன் பாக்ஸ் தலையன் வாடகையே குடுக்காம டிமிக்கி குடுக்கறானே? இன்னிக்கி படுவா அவன் காதை கடிச்சி தின்னுட வேண்டியதுதான். அதுல இருக்குற கடுக்கண வித்து அமவுண்ட்டை எடுத்துக்கணும்..

சிம்பு வீட்டு ஜன்னல் வழியே எட்டிப்பார்க்கிறார் தல. உச்சஸ்துதியில் கோஷ்டியுடன் பாடி ஆடிக்கொண்டு இருக்கிறார் சிம்பு. 

ரீட்டா: ஏ டோலு மய்யா..டோலு மய்யா..ஏ டைய்யா. ஏ பைய்யா. ஹே டும்மியிலே டும்மியிலே டும்மா  டும்மா ங்கொய்யா.

தல: என்னங்கடி இது..பய்யா கொய்யாவா? கேட்டியா கொடுமைய. இதை கட்டி கஞ்சி ஊத்த போறானே..அந்த கேனப்பய எங்க இருக்கானோ பாவம். 

சிம்பு: என்னமோ பண்ணலாம். டிஸ்கோவுக்கு போகலாம். 

தல: அது சரி..டிஸ்கோவுக்கு போயி ஆடுறத தவிர என்ன என்னமோ பண்றீங்க. பய உண்மையத்தான் சொல்லறான். 

சிம்பு: வோட்காவ போடலாம். ஓடிப்பாடி ஆடலாம். 

தல: ஓங்கி தல மேல போடறேன் இரு. இப்ப நான் குடுக்கற குடுப்புல எப்படி தெருத்தெருவா ஓடி ஓடி பாடி ஆகப்போறன்னு பாருடி ராசா..

சிம்பு: ஆல்ரெடி நேரம் ஆச்சி. பப்பும் தான மூடிப்போச்சி.

தல: வாடக குடுக்க வக்கில்லாத கம்னாட்டி. நேரம் வேற ஆகுதுன்னு பீலிங்கா. ஏன்..இந்த டாஸ்மாக்கு பக்கம் எல்லாம் போனா ஐயாவோட லட்சியத்துக்கு இழுக்கு வந்துருமாக்கும்..'பப்பா' முல்ல. படுவா.

சிம்பு:  Where is the party. ஆ உங்க ஊட்ல பார்ட்டி. 

தல: எங்க வூட்லயா? வாசல்ல கால வய்யி. மகனே..என் வீட்டு பூனையை விட்டே உன்ன கடிக்க விடறேன். 

சிம்பு: போலீசு இப்ப ரொம்ப ஸ்ட்ரிக்ட் ஆனதே. நம்ம யூத் மனசு ரொம்ப வெக்ஸ் ஆனதே. 

தல: இருக்காதா பின்னே. இந்த வாரம் மட்டும் 419 பிக்பாக்கெட்ட புடிச்சி இருக்காங்க. நீ மட்டும் சிக்குனா 420. 

சிம்பு: தா..நீ ஒன்னியும் கவலைப்படாத..நான் ஆடுனா தமிழ்நாட்டுக்கே பார்ட்டிதான். 

தல: ஆமா..பின்ன.. இப்படி ஒரு வித்தைய குற்றலாத்துல இருக்கே அதைத்தவிர யாரும் காட்டுனதே இல்ல. நீ காட்டு காட்டுன்னு காட்றா!

சிம்பு: முன்னெல்லா ஒரு பொண்ணு வேணுமுன்னா. நாங்க காலேஜுக்கும், பஸ் ஸ்டாண்டுக்கும் போவோமுங்க.    

தல: சரி..அதுக்கு என்ன இப்ப? மத்தவங்க எல்லாம் பப்ளிக் கக்கூசுக்கும், பாதாள சாக்கடைக்குமா போவாங்க? 

                                                              இப்படி ஆயிட்டேன்... 

ரீட்டா: இப்பெல்லாம் ஒரு பொண்ணு வேணுமுன்னா நீங்க க்ளப்புக்கும், பப்புக்கும் வரணுமுங்க.  

தல: யாரு. உங்கள பாக்கவா? எங்கப்பன் வீட்டு மாங்கா மரத்துல 1000 ரூவா நோட்டா தொங்குது. அதுல 20 ஐ புடுங்கிட்டு வர்றேன் மவராசி. மொதல்ல தலைக்கி எண்ணை வைங்கடி. இருங்கடி ஒரு நாளைக்கி அந்தப்பக்கம் வர்றேன். அப்ப இருக்கு ஒரு உங்களுக்கு தீபாவளி. பெத்தவனுக்கும் சேத்து இருக்கு நாலு அப்பு. 

சிம்பு: வூட்ல இருந்து போகும்போது எல்லாத்தையும் மறைக்கிற. பப்புக்குள்ள போகும்போது எல்லாத்தையும் கொறைக்கிற. 

ரீட்டா: என்ன குத்தம் சொல்லாத. சந்தோஷத்த கொல்லாத.

தல: பொடவைக்கடை பொம்ம மாட்டுனாலே போன் பண்ணி பொழுது போற வரைக்கும் பேசுவ. பக்கத்து வீட்டு பொண்ணுன்னா சும்மாவா இருப்ப. அதான். 

ஒண்ண  குத்தம் சொல்லல தாயி. சீரூட்டி, மோரூட்டி, தயிரூட்டி உன்னையும் பொம்பளையா வளத்தாங்களே உங்க மம்மி. அவங்க அட்ரசைத்தான் தேடிட்டு இருக்கேன். ஆத்தா, பொண்ணு ரெண்டு பேரையும் ஈச்ச மரத்துல கட்டி தொங்க விடறேன். அடே அடி அடடீ...!!  

சிம்பு: (ஏக வேகத்தில் ஆடுகிறார்) ஆ.. தமிழ்நாட்ல பார்ட்டி டு நைட்..

தல: பார்ட்டிதான. கொஞ்சம் பொறு மாப்ள. கேப்டன் கட்சில உன்னை சேத்து விட்டுடறேன். அதுதான் உனக்கு சரியான பார்ட்டி. என் வாடகை போனாலும் பரவா இல்ல. அவருகிட்ட உன்ன புடிச்சு குடுக்காம தூங்க மாட்டேன். 

செந்தில்: புகை பிடிப்பது உடல் நலத்திற்கு கேடு. தம்பி படம் பாக்க எவன் கூப்புட்டாலும் தலை தெறிச்சி ஓடு. 

தல: மனுநீதிச்சோழனே சொல்லிட்டாரு. கேட்டுக்கங்கப்பா. அட்வான்சையே  அறுபது இன்ஸ்டால்மென்ட்ல தந்த பய நீ. அட்வைஸ் வேறயா. டேய் தேன்கூடு தலையா. ஓடாத அங்கயே நில்லு...வாய்ல பட்டாசை கொளுத்தி போட்டுருவேன். 

துரத்திக்கொண்டு ஓடுகிறார் தல.
.....................................................................................


............................
Posted by:
!சிவகுமார்!
........................... 

    

Saturday, February 4, 2012

குருவி, பெண்சிங்கம் அப்பாலிக்கா பிரின்ஸ்..என்ன பொழப்போ!!                                                              
பிரின்சின் புத்தம் புதிய ரீல் படிச்சதும் நம்ம உச்சி மண்டைல சுர்ருங்குது. பின்ன என்னங்க. வேலாயுதம் 100 வது நாள் போஸ்டரை கண்டு கடும் அதிர்ச்சி அடஞ்சிட்டாராம். "என்னது..இந்திரா காந்தி செத்துட்டாங்களா?" எபக்ட் தந்துருக்காறு. என்னமோ உலக தமிழ் கொட்டாய் வரலாற்றில் ஓடாத படத்திற்கு 100 வது நாள் விழா எடுத்தது இதுதான் மொத தபா மாதிரி ஜெர்க் குடுக்கறாரு. விசய் எப்ப அம்மாவுக்கு ஆதரவு குரல் தர ஆரம்பிச்சாரோ அப்ப இருந்தே அவரைக்கண்டா ப்ரின்சுக்கு ஆவாது. அதுக்காக இப்படியா? 

வேலாயுதம் 30 வது நாளே காத்து வாங்க ஆரம்பிச்சிருச்சின்னு ரிப்போர்ட் தந்துருக்கார். ஆனா ஒரு படத்துக்கு நூறாவது நாள் போஸ்டர் ஒட்டுனாங்க ஊரு பூராவும். அதைப்பாத்து நமட்டு, சங்கீத, வெடி...இப்பிடி பல வெரைட்டில சிரிச்சாங்க மக்கள். அது என்ன படம்னு மேல இருக்குற ஸ்டில்லை பாத்தா தெரியும்.நியாயமா பாத்தா பிரின்ஸ் இப்ப போட்ட பதிவை அப்ப போட்டுருக்கணும். ஆனா முடியாதே. நம்மள மாதிரி கட்சி சார்பு இல்லாம எழுதறது நடக்குற கதையா? இந்த வேலை தெரிஞ்சி இருந்தா எப்பவோ பிரபலம் ஆகி கொறஞ்சது 25 பாராட்டு விழாவாச்சும் 'நமக்கு நாமே' நடத்தி இருப்போம். 

தியாகராஜ பாகவதர் 1944 - ல நடிச்ச மெகா சூப்பர் ஹிட் படம் 'ஹரிதாஸ்'  மெட்ராஸ் பிராட்வே தியேட்டர்ல 770 நாள் ஓடிச்சி. வீம்புக்குன்னே அந்த சாதனையை முறியடிக்க சந்திரமுகி படத்தை சாந்தி தியேட்டர்ல 800 நாளுக்கு மேல ஓட்டுனாங்க. இதை தயாரிச்சது சிவாஜி பிலிம்ஸ். அதனால அவங்க சொந்த தியேட்டர் சாந்தில அநியாயத்துக்கு ஓட்டுனது அதிசயமில்லைதான். அதைவிடவா வேலாயுதம் 100 நாள் ஓடிச்சின்னு சொன்னது பெருசா போச்சி?  
                                                                        
ரெட் ஜெயன்ட், க்ளவுட் நைன் (தமிழ் வால்க) மூவிஸ் தயாரித்த படங்கள்  அனைத்திற்கும் நியாயமாக ஓடிய நாட்களை மட்டும் கணக்கில் கொண்டு போஸ்டர் ஒட்டினார்களா? / படத்தை ஓட்டினார்களா? அப்போது அண்ணன் பொங்கி இருந்தால் மகிழ்ந்து இருப்போம். கடந்த 5 வருடங்களாக தயாரிப்பாளர்களுக்கு நஷ்டத்தை தந்து வருகிறாராம் விசய். கொஞ்சம் ரீவைண்ட் செய்து பார்த்தால் சிரிப்புதான் வருகிறது. பலம்மிக்க படங்கள் தியேட்டர்களை ஆக்ரமிக்கையில் நன்றாக ஓடிய சிறிய படங்களை தூக்க சொல்லிய நாட்கள் நினைவில்லையா? ரெட் ஜெயன்டின் மதராசப்பட்டினம் ஓடுகையில் களவாணியும்  பட்டையை கிளப்ப ஆரம்பித்தது. அப்போது அதை தியேட்டர்களில் இருந்து தூக்க சொன்னது யார்? 

வேலாயுதம் மாதிரி பொய் விளம்பரம் செய்வோரை சிறையில் தள்ள வேண்டுமாம். ஹய்யோ..ஹய்யோ..அப்படி என்றால் முதலில் உள்ளே செல்ல வேண்டியது யார் என்று நாங்கள் சொல்லியா தெரிய வேண்டும்? கீழே உள்ளே போஸ்டர் ஒன்று போதாதா? ஆனாலும் நீங்க செம குறும்பு சாரே. அதுவும் தேவிகலாவில் 150 வது நாள் ஓடிச்சாம் குருவி. ஆனா அந்தக்குருவி எம்புட்டி சீக்கிரம் எல்லா தியேட்டரையும் விட்டு பறந்துச்சின்னு பச்ச புள்ளைக்கு கூட தெரியும்.  தேவிகலா தியேட்டரே மலிவு விலை மதுக்கடை சைசுல பாதிதான் இருக்கும்.அதுல 150 ஓடுனது ஓட்டுனதை ஒரு சாதனையா போட்டுக்கிட்டு...என்ன கொடும சரவணன்?  

                                                                       
இதுபோக விசய்யின் நைனா தயாரிப்பாளர் சங்க தலைவராக இருந்தது குறித்து டென்சன் ஆகி சில வார்த்தைகள் எழுதி உள்ளார் பிரின்ஸ். 'துர்கா, குட்டிப்பிசாசு புகழ்' இயக்குனர் ராம. நாராயணன் தயாரிப்பாளர் சங்க தலைவராக இருக்கையில் மனுநீதிச்சோழன் சொற்படிதான் நடந்து கொண்டாரா? டெல் அஸ் ப்ரதர். நண்பன் ஈ அடித்து கொண்டு இருக்கிறதாம். இருந்து விட்டு போகட்டும். ஆனால் இப்படம் பார்த்த நண்பர்கள் அனைவரும் நன்றாகத்தான் உள்ளதென கூறியுள்ளனர். இது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். 

கடைசியில் பவர் ஸ்டார் ஸ்டில் போட்டு பதிவு எழுதும் ரேஞ்சுக்கு வந்துவிட்டார் நம் தோழர். பவர் ஸ்டார் பத்தி எல்லாம் நாங்க முதல் உலகப்போர் நடந்தப்பவே போட்டாச்சி தலைவா. என்னமோ (ஒரு கல் ஒரு கண்ணாடி வந்தா) போங்க :)))
..........................................................................................

கொலவெறி தள்ளுபடி:

பொதுசபையில் நாகரீகமாக அவன் இவன் என்று அழைத்து பிறரை தாழ்த்துவது எப்படி? சிறப்பு பயிற்சி. குறைந்த கட்டணம். நிறைந்த சேவை.

விண்ணப்பங்கள் கிடைக்குமிடம்: பிரின்ஸ் டுட்டோ ரியல்(!) கல்லூரி:


                                                                          
                                               

சாம்பிள் க்ளாஸ் - 1

"உனக்கு காமடிய வரல. உனக்கு காமடியே வரல. டேய். டெட்ட டேய்" என்று நியாயாமாக எதிர்கேள்வி கேட்பவர்களை ஒருமையில் அழைத்து கலாய்க்கவும். இந்த ஒரே மொக்கை ப்ளேடை மறுக்கா மறுக்கா சாணை பிடித்து கலக்கவும்.

நாளைய க்ளாஸ்:

'எம்.ஜி.ஆர். சமாதி அருகே சோகமாக அமர்ந்து இருக்கும் அப்பாவி ரசிகனை பார்த்து 'டேய். உனக்கு காமடியே வரலை' என்று கலாய்ப்பது எப்படி?'

இவன் இவண்,
'காமடி கண்டெய்னர்' பிரின்ஸ். 
(கல்லூரி நிறுவனர்) 


தலைமை ஆசிரியர்:

அண்டா பிரிட்ஜி வாயன்
.. ..................................................................................................................                                                  

அடி வயிற்றை கலக்கும் பிரின்சின் போக்கிரி அறிமுக காட்சி. அட்டாச்ட் பாத்ரூம் வசதி உள்ளவர்கள் மட்டுமே பார்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம். ****************************************

JRP.ரெட்தில் பய்யா(பையா இல்லீங்ணா.. Bhaiyaa), ஒரு தபா முடிவு பண்ணிட்டா எங்க பேச்ச நாங்களே கேக்க மாட்டோம். ஏன்னா இன்னிக்கி மவுத் ப்ரெஷனர் வாங்க ஸ்பான்சர் கெடைக்கலீங்ணா :((

******************************************