திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் வாசலில் தேங்காய் கடை வைத்திருக்கும் தல கவுண்டமணி அவருடைய அசிஸ்டன்ட் செந்திலிடம் இன்று போடப்பட்ட தமிழக பட்ஜெட்டை அலசுகிறார் வெளுக்கிறார்.
செந்தில்: Finance Minister O.Panneer reads out 2011-12 tamilnadu budjet.....
தல(கவுண்டமணி): டேய்...
செந்தில்: Mono rail works to begin soon.....
தல: டேய்.. டண்டணக்கா.. நிறுத்துடா. இவரு பெரிய லண்டன் லபக்குதாசு. இங்க்லீஸ் பேப்பர்தான் படிப்பாரு. அந்த ஓசி பேப்பர ஓரமா வச்சிட்டு தமிழ் பேப்பர்ல பட்ஜெட் பத்தி என்ன போட்டுருக்குன்னு படிடா.
செந்தில்: அண்ணே. சூப்பர் பட்ஜட்னே இது. மேலும் 106 கோயில்ல அன்னதானம் போடுறாங்களாம். ப்ரீ ஆடு, மாடு வழங்க ஏகப்பட்ட கோடி, நெல்லை மற்றும் ஒரத்த நாடுல மாட்டு ஆஸ்பத்திரி துவங்கப்படும்.
தல: ஆஹா..உன் பரம்பரைக்குன்னே ஸ்பெஷலா போட்ட மினி பட்ஜெட் மாதிரி இருக்கே.
செந்தில்: சும்மா இருங்கண்ணே. அரசு கேபிள் டி.வி. விரைவில் தொடங்கப்படும். அது யாருன்னே அரசு?
தல: அடேய் அடிபம்ப் தலையா. அரசு யாருன்னு தெரியாதா? திருமலை படத்துல மொட்ட மாடில நம்ம விசய் அண்ணன் "யார்டா இங்க அரசு, யார்டா இங்க அரசு, நீ அரசா.. நீ அரசா.."அப்டின்னு நாக்குல நொறை தள்ள அலறுவாறே அவர்தாண்டா அந்த அரசு. இப்ப கேபிள் பிசினஸ் ஆரம்பிச்சி இருக்காரு.
செந்தில்: ஓஹோ..படிக்கும் பெண் பிள்ளைகளுக்கு ஸ்கர்ட்டுக்கு பதில் சல்வார் கமீஸ் வழங்கப்படும். கிராமப்புற பெண்களுக்கு சானிட்டரி நாப்கின் வழங்கப்படும். இலங்கை அகதிகளுக்கு 25 கோடி ஒதுக்கீடு.
தல: அதுதாண்டா மேடம். கண்டிப்பா பாராட்டனும்.
செந்தில்: அண்ணா பிறந்த நாள் முதல் இலவச விஸ்கி வழங்கப்படும். அட. இன்னிக்கிதான் எங்க அண்ணன் பிறந்த நாளு. நான் போய் விஸ்கி வாங்கிட்டு வந்துடறேன் அண்ணே.
தல: நில்றா டேய். அடிச்சன்னா தல தண்டவாளத்துல போய் விழும். மவனே அது இலவச மிக்சிடா. என்ன சொன்ன? உங்க அண்ணன் பிறந்தநாளா? பன்னாட நாயே. பேரறிஞர் அண்ணா பிறந்தா நாள்டா அது.
செந்தில்: ஐ ஆம் வெரி சொரி(sorry)ண்ணே. கண்ணு ஸ்லிப் ஆயிருச்சி. இது அஞ்சி பைசாவுக்கு பிரயோஜனம் இல்லாத பட்ஜெட் என முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி கருத்து.
தல: எப்ப ஆளுங்கட்சி பட்ஜெட் போட்டாலும் இதே டயலாக்தானா? ரீலு அந்து போச்சி. மொதல்ல இந்த தமிழ்நாட்டு அரசியல்வாதி, நடிகனுங்க பேருக்கு முன்னாடி அடைமொழி வைக்கிறதுக்கு ஆப்பு வக்கணும். இவனுங்க இம்சை தாங்க முடியலடா.
செந்தில்: அடுத்த வருடம் ஆகஸ்ட் மாதம் மின்வெட்டு முற்றிலும் சரி செய்யப்படும். இன்னும் ஒரு வருஷம் நமக்கு சோதனையா..அய்யய்ய!!
தல: நீயே நரி மோந்த சோதனைக்குழாய்ல பொறந்தவன். அதப்பத்தி நான்தாண்டா கவலைப்படணும். இன்னும் ஒரு வருசத்துக்கு கரண்ட் இல்லாம இருட்ல உன் தூங்கும்போது உன் மூஞ்ச பாக்கணுமே.. அட கர்த்தரே!! பட்ஜெட் தாக்கல் செய்றதுக்கு முன்னாடி கைல அம்மா படம் போட்ட பெட்டியை வச்சிக்கிட்டு மேடம் பின்னால பன்னீர் அன்னம் பவ்யமா வந்த காட்சி இருக்கே. பம்மல் திலகம்டா அவரு.
செந்தில்: சட்டசபை நிகழ்வுகள் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும். இலவச, வேஷ்டி சேலை வழங்க நிதி ஒதுக்கப்படும்.
தல: ஏற்கனவே சட்டசபைல சண்டை போட்டு எத்தனையோ வேஷ்டி கிழிஞ்சிருக்கு. அவங்களுக்கு கண்டிப்பா இலவச வேஷ்டி தேவைதான். என்னாது நேரடி ஒளிபரப்பா? (வேஷ்டி) கிழிஞ்சது போ. எம்.எல்.ஏ. எல்லாம் கோவம் வந்தா சட்ட, வேஷ்டிய கிழிச்சிகிட்டு நிப்பாங்களே. ரம்பா மாதிரி தொடைய காமிச்சிக்கிட்டு சண்டை போடுவாங்களே..அதை வேற பாக்கணுமா?
செந்தில்: வெளிமாநில அரிசி கடத்தல் தடுக்கப்படும், மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்க 912 கோடி ஒதுக்கப்படும்.
தல: அப்படியே உள்மாநிலத்து ஹோட்டல்ல இலவ அரிசிய கடத்தி இட்லி, தோசை போடுறவங்களுக்கு சவுக்கடி குடுத்தா நல்லா இருக்கும். லேப்டாப் வேற வரப்போகுதா. அந்த புள்ளைங்கள பெத்தவங்க ப்ளாக்கரா இருந்தா அவ்வளவுதான். ரெண்டே மாசத்துல ஓவர்டைம் வொர்க் பண்ணி அதை ரிப்பேர் ஆக்காம விட மாட்டாங்க. இவங்கள திருத்தவே முடியாது. சரி சரி.. நேத்து நம்ம thengai-to-shangai.blogspot.com சைட்ல எழுதுனதுக்கு தமிழ்மணத்துல எத்தனை ஓட்டு விழுந்துருக்கு பாரு.
செந்தில்: ஆறு ஓட்டுண்ணே..
தல: ஓ மை ட்ரிப்ளிகேன் பார்த்தசாரதி கடவுளே. what a pity. ஒரு ஓட்டு கொறையுதே. டேய். நம்ம கோயில் வாசல்ல உண்டைகட்டி வாங்க க்யூல நிக்குறார் பாரு. அவரும் பிளாக்கர்தான். இந்தா இளநீர் வெட்ற அருவா. இதை அப்படியே அவரு கழுத்துல வச்சி பக்கத்துல இருக்கற பிரவ்சிங் சென்டருக்கு கூட்டிட்டு போயி தமிழ்மணத்துல ஏழாவது ஓட்டு போட வைய்யி. ரொம்ப ரவுசு பண்ணா அவர் கழுத்துல ஏழு வெட்டு போடு. விடாதே!
....................................................................
Posted by:
! சிவகுமார் !
....................................................................
9 comments:
//மொதல்ல இந்த தமிழ்நாட்டு அரசியல்வாதி, நடிகனுங்க பேருக்கு முன்னாடி அடைமொழி வைக்கிறதுக்கு ஆப்பு வக்கணும். இவனுங்க இம்சை தாங்க முடியலடா. //
ஹ ஹ ..
அவர்கள் இல்லாத குறையை இது போன்ற விமர்சனங்கள் தீர்க்கிறது .
செம காமெடி :)
இந்த லொல்லுதான்யா எனக்கு பிடிச்சது..
Super comedy bosss
ஒரே குஷ்டமப்பா........
தேங்காய் கடைக்கு வந்த சுதர்சன், கிருஷ்ணா, காட்டான், ராஜா எல்லாருக்கும் கெட்டி தேங்கா சட்னி பார்சல்.
பதிவுலக கவுண்டர் பன்னிக்குட்டி ராமசாமி பட்ஜெட்டை பத்தி கருத்து சொல்லாம போயிட்டீங்களே..
என்னத்த சொல்றதுனே தெரியுல.....
இன்றுதான் உங்கள் வலைப்பதிவை முதன்முதலில் வாசித்தேன் ஆகா வலைப்பதிவு தலைப்பே அருமை,நான் தல கவுண்டமணிக்கு தீவிரமான ரசிகன்.இனி தொடர்ந்து வருவேன்
Post a Comment