"டேய்..என்னடா பீச்ல உக்காந்துட்டு இருக்க. நம்ம சித்தப்பாவுக்கு சீரியஸ்னு ஹாஸ்பிடல்ல சேத்துருக்காங்க. சீக்ரம் வா போலாம்"
"தகவலுக்கு நன்றி"
"நன்றியா? அண்ணன்கிட்ட எதுக்குடா இதெல்லாம்? எந்திரி..வா..வா.."
கடற்கரை அருகே மீனை ஏலம் விட்டுக்கொண்டு இருந்தனர் சில மீனவர்கள்.
"இன்று என் வலையில்" என தம்பி கத்த, அதைக்கேட்டு சிலர் மீன் வாங்க நம்மாளை சூழ்ந்து கொள்கின்றனர். "ஏங்க..இவன் மீன் பிடிக்கறவன் இல்லைங்க. தயவு செஞ்சி போங்க. ஏண்டா இப்படி பேசிக்கிட்டு இருக்க? நடடா.." என்கிறார் அண்ணன். சில அடிதூரம்தான் கடந்து இருப்பார்கள்.
அப்போது ஒரு பஜ்ஜிக்கடையில் முதலில் போட்ட வடையை சாமி படம் அருகே வைத்து விட்டு வேலையை தொடர்கிறார் வியாபாரி. நம்ம ஆள் அந்த வடையை எடுத்து "முதல் வடை எனக்கே" என்று கூறி லபக்கென வாயில் போட்டுக்கொள்கிறார். வெறியான வியாபாரி ஓடி வந்து பஜ்ஜி சுடும் கரண்டியால் அவர் தொப்புளில் பழுக்க சூடு போடுகிறார்.
அண்ணன் "அடப்பாவி. உனக்கு என்னடா ஆச்சி? மானத்த வாங்கற?"
"முதல் முதல், முதல் மணல், முதல் அலை, முதல் பஜ்ஜி, முதல் கடைசி"
அண்ணன் செய்வதறியாமல் தவிக்கிறார். 'சித்தப்பா பெட்டுக்கு பக்கத்ல இவனுக்கு ஒரு பெட்டை ரெடி பண்ணனும் போல இருக்கே'. இருவரும் பஸ் ஸ்டாப்பை அடைகிறார்கள்.சில நொடிகள் கழித்துப்பார்த்தால் தம்பியைக்காணவில்லை. அருகில் இருக்கும் கோவிலில் செம கூட்டம். 'அட அங்க இருக்கான் தம்பி. சித்தப்பா சீக்கிரம் குணம் ஆக சாமியை வேண்டிக்கறான் போல'.
"உன் நல்ல மனசுக்கு நீ நூறு வருஷம் நல்லாருப்படா தம்பி. என்ன கும்புட்ட?"
கோவிலில் குடுத்த உண்டைக்கட்டியை காட்டியவாறு தம்பி சொல்கிறான்:
"நல்ல பகிர்வு"
மீண்டும் டென்ஷன் ஆகி அவனை பஸ்ஸில் ஏற்றுகிறான் அண்ணன்.
"டேய்..ஏழெட்டு காலேஜ் பொண்ணுங்க ஏறி இருக்காங்க. சென்ட் வாடை தூக்கலா இருக்கு. எதுக்கும் கொஞ்சம் தள்ளியே நில்லு"
"தமிழ் மணம் 7"
கொஞ்ச தூரம் வந்ததும் ஸ்டேஜ் போடப்படுகிறது. பிதுங்கி வழியும் கூட்டத்தில் வேர்க்க விறுவிறுக்க நடத்துனர் டிக்கட் கிழித்துக்கொண்டிருக்க...
"ரைட்டு" என்கிறார் நம்மாள். வண்டி கிளம்ப..நடத்துனர் கத்த ஒரே கூத்து. அண்ணன் இவனின் வாயைப்பொத்தியவாறு பயணம் செய்கிறார். ஸ்டாப் வந்துவிட்டது. "இருடா. லேடீஸ் மொதல்ல எறங்கட்டும். வெள்ளை சுடிதார் போட்டு இருக்காங்களே..அவங்க பெண் போலீஸ். அவங்கள இறங்க விடு". தம்பி பெண் போலீசின் உடையைப்பார்த்து "நல்ல அலசல், விரிவான அலசல்" என்று கூறித்தொலைக்க, அவன் வாயில் வெற்றிலை பாக்கு போடுகிறார் பெண் போலீஸ். "மேடம், இவன் என் தம்பிதான். மன்னிச்சிடுங்க" என்று சமாதானம் கூறி அனுப்புகிறான் அண்ணன். இருவரும் ஹாஸ்பிட்டலை அடைகிறார்கள்.
"டாக்டர், இப்ப சித்தப்பாவுக்கு எப்படி இருக்கு?"என அண்ணன் கேட்க, காண்டாக்ட் லென்சை கழட்டிவிட்டு சீலிங் பேனை ஒருமுறை பெருமூச்சு இட்டவாறு பார்த்துவிட்டு "ரொம்ப கஷ்டம். ஒண்ணும் செய்ய முடியாது" என்கிறார் டாக்டர்.
"கலக்கல் மச்சி"
வந்த கோபத்திற்கு தம்பியின் காதில் பொளேரென்று வைத்தான் அண்ணன்.
"என்ன டாக்டர் இப்படி சொல்லிட்டீங்க. லட்சக்கணக்குல செலவு செஞ்சும் இப்படியா? வெளில நிறைய கடன் வேற வாங்கி இருக்கேன்" என்று அண்ணன் விம்மி விம்மி அழும்போது தம்பி அவனை தேற்றுகிறான்.
"என்னடா தம்பி. இருந்த வேலையையும் விட்டுட்டு வி. ஆர். எஸ். வாங்கிட்டேன். அதுவும் ஆஸ்பத்திரிக்கே செலவாயிடுச்சி. சோத்துக்கு கூட இப்ப வழி இல்லையேடா. என்ன செய்யலாம்? "
"சாட்டையடி"
"என்னது சாட்டையடிச்சி சம்பாதிக்கவா? உனக்கு என்ன கொழுப்புடா?" என்று அருகில் இருக்கும் குளுக்கோஸ் பாட்டிலை எடுத்து அவன் கபாலத்தில் சொருகுகிறார்.
.................................................................................................................
..................................
Posted by:
! சிவகுமார் !
..................................
30 comments:
ஊமைக்குத்து, குத்திப்புட்டீரே...
:-)
உள்குத்து பதிவு போட்டு பிரபலமான சிவா வாழ்க
தகவலுக்கு நன்றி!
முதல் வடை!
நல்ல பகிர்வு!
தமிழ்மணம் -7(ஓ!அது இங்கே இல்லையா?சரி இன்டலி-2)
ரைட்டு!
நல்ல அலசல் விரிவான அலசல்.
கலக்கல் மச்சி!
சாட்டையடி!
ஐயா சாமி முடியலப்பா?
சிரிச்சு சிரிச்சு தான்!
இப்படியெல்லாம் நீங்க இறங்கிட்டா நாங்க என்ன தான் பண்றது?
கூடிய சீக்கிரம் ரூம் போட்டாவது புதிய வார்த்தைகளை கண்டு பிடிக்கணும்!
Mudiyalai....
Aana intha varthaigalai
kadakkatha
pathivere illai.....
@வெளங்காதவன்
நம்மள நாமே கலாய்க்கற திட்டம்தான் இது.
//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
உள்குத்து பதிவு போட்டு பிரபலமான சிவா வாழ்க//
எல்லாப்புகழும் 'எங்கே செல்லும் இந்தப்பாதை' ஓனருக்கே!!
@ கோகுல்
என்ன தம்பி தடுமாற்றம். பாண்டிச்சேரி மருந்து ஓவர்டோஸா?
@ நாய் நக்கிஸ்
அதுவும் சரிதான்.
@ கோகுல்
சும்மா டமாசுக்குதான். எக்குதப்பா ரூம் போட்டுடாதீங்க..இருக்குற வார்த்தைகளே போதும். தங்கள் வருகைக்கு நன்றி.
செம கலக்கல். சிரிச்சு சிரிச்சு கண்ணுல தண்ணி வந்துடுச்சு
நம்ம ஆளுங்க சில பேர் இப்படி தான் ஆக போறாங்க
சரிதான்.. இவருக்கு என்ன சொல்லி கமெண்ட் போடறதுன்னே தெரியலியே... ஆளவிடுங்கப்பா சாமி...
சீக்கிரத்துல ஒரு பதிவு ரெடி பண்ணனும் போல உமக்கு ஹிஹி!
இது ஏதோ உள்குத்து மாதிரி இருக்கு.
உள்குத்து வெளிக்குத்து கும்மாங்குத்து இது, இருடி அப்புறமா வச்சிக்கிறேன் ஹி ஹி....
"தகவலுக்கு நன்றி"
"நல்ல பகிர்வு"
//"இன்று என் வலையில்" என தம்பி கத்த,//
இது என்னைத்தானே ?
@ "என் ராஜபாட்டை"- ராஜா
நீங்க ரொம்ப நல்லவருங்க...
வணக்கம் மச்சி,
பின்னிட்டீங்க...
அட நெசமாத் தான் பதிவைப் படிச்சு கமெண்ட் போடுறேனப்பா.
சுவையாகவும், சுவாரஸ்யமாகவும் டெம்பிளேட் கமெண்ட் நாயகர்களை வைத்து ஒரு குறுங் கதை எழுதிப் போட்டுத் தாக்கியிருக்கிறீங்க.
ரசித்தேன்.
மொய்க்கு மொய் கதையா கமெண்டு போட வந்தா இதுதான் நடக்கும்!!
11.11.11 நூறுவருடத்திற்கு ஒருமுறை வரும் இந்த அபூர்வ நாளில்... தங்களுக்கும், தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.. வசந்தங்கள் வீசட்டும்... வாழ்வு செழிக்கட்டும்... மகிழ்ச்சி என்றும் பொங்கட்டும்... வெற்றிகள் குவியட்டும்... மனம் கனிந்த வாழ்த்துக்கள்...
ஹா ஹா.
பதிவு அருமை தொடரவும்!
கலக்கல் நண்பா, நல்ல பகிர்வு, சாட்டையடி...
Im also a goundamani fan.. pls check my tamil comedy videos blog to know more...
Ha ha ha.. Nallarukku..
nice.... thanks to share.. www.rishvan.com
மாப்புள்ள பின்னிட்டீங்க இல்ல, ஊமகுத்து ஊமகுத்து என்றது இது தானா?
http://kishoker.blogspot.com/2011/12/2.html
Post a Comment