Saturday, February 4, 2012

குருவி, பெண்சிங்கம் அப்பாலிக்கா பிரின்ஸ்..என்ன பொழப்போ!!



                                                              
பிரின்சின் புத்தம் புதிய ரீல் படிச்சதும் நம்ம உச்சி மண்டைல சுர்ருங்குது. பின்ன என்னங்க. வேலாயுதம் 100 வது நாள் போஸ்டரை கண்டு கடும் அதிர்ச்சி அடஞ்சிட்டாராம். "என்னது..இந்திரா காந்தி செத்துட்டாங்களா?" எபக்ட் தந்துருக்காறு. என்னமோ உலக தமிழ் கொட்டாய் வரலாற்றில் ஓடாத படத்திற்கு 100 வது நாள் விழா எடுத்தது இதுதான் மொத தபா மாதிரி ஜெர்க் குடுக்கறாரு. விசய் எப்ப அம்மாவுக்கு ஆதரவு குரல் தர ஆரம்பிச்சாரோ அப்ப இருந்தே அவரைக்கண்டா ப்ரின்சுக்கு ஆவாது. அதுக்காக இப்படியா? 

வேலாயுதம் 30 வது நாளே காத்து வாங்க ஆரம்பிச்சிருச்சின்னு ரிப்போர்ட் தந்துருக்கார். ஆனா ஒரு படத்துக்கு நூறாவது நாள் போஸ்டர் ஒட்டுனாங்க ஊரு பூராவும். அதைப்பாத்து நமட்டு, சங்கீத, வெடி...இப்பிடி பல வெரைட்டில சிரிச்சாங்க மக்கள். அது என்ன படம்னு மேல இருக்குற ஸ்டில்லை பாத்தா தெரியும்.நியாயமா பாத்தா பிரின்ஸ் இப்ப போட்ட பதிவை அப்ப போட்டுருக்கணும். ஆனா முடியாதே. நம்மள மாதிரி கட்சி சார்பு இல்லாம எழுதறது நடக்குற கதையா? இந்த வேலை தெரிஞ்சி இருந்தா எப்பவோ பிரபலம் ஆகி கொறஞ்சது 25 பாராட்டு விழாவாச்சும் 'நமக்கு நாமே' நடத்தி இருப்போம். 

தியாகராஜ பாகவதர் 1944 - ல நடிச்ச மெகா சூப்பர் ஹிட் படம் 'ஹரிதாஸ்'  மெட்ராஸ் பிராட்வே தியேட்டர்ல 770 நாள் ஓடிச்சி. வீம்புக்குன்னே அந்த சாதனையை முறியடிக்க சந்திரமுகி படத்தை சாந்தி தியேட்டர்ல 800 நாளுக்கு மேல ஓட்டுனாங்க. இதை தயாரிச்சது சிவாஜி பிலிம்ஸ். அதனால அவங்க சொந்த தியேட்டர் சாந்தில அநியாயத்துக்கு ஓட்டுனது அதிசயமில்லைதான். அதைவிடவா வேலாயுதம் 100 நாள் ஓடிச்சின்னு சொன்னது பெருசா போச்சி?  
                                                                        
ரெட் ஜெயன்ட், க்ளவுட் நைன் (தமிழ் வால்க) மூவிஸ் தயாரித்த படங்கள்  அனைத்திற்கும் நியாயமாக ஓடிய நாட்களை மட்டும் கணக்கில் கொண்டு போஸ்டர் ஒட்டினார்களா? / படத்தை ஓட்டினார்களா? அப்போது அண்ணன் பொங்கி இருந்தால் மகிழ்ந்து இருப்போம். கடந்த 5 வருடங்களாக தயாரிப்பாளர்களுக்கு நஷ்டத்தை தந்து வருகிறாராம் விசய். கொஞ்சம் ரீவைண்ட் செய்து பார்த்தால் சிரிப்புதான் வருகிறது. பலம்மிக்க படங்கள் தியேட்டர்களை ஆக்ரமிக்கையில் நன்றாக ஓடிய சிறிய படங்களை தூக்க சொல்லிய நாட்கள் நினைவில்லையா? ரெட் ஜெயன்டின் மதராசப்பட்டினம் ஓடுகையில் களவாணியும்  பட்டையை கிளப்ப ஆரம்பித்தது. அப்போது அதை தியேட்டர்களில் இருந்து தூக்க சொன்னது யார்? 

வேலாயுதம் மாதிரி பொய் விளம்பரம் செய்வோரை சிறையில் தள்ள வேண்டுமாம். ஹய்யோ..ஹய்யோ..அப்படி என்றால் முதலில் உள்ளே செல்ல வேண்டியது யார் என்று நாங்கள் சொல்லியா தெரிய வேண்டும்? கீழே உள்ளே போஸ்டர் ஒன்று போதாதா? ஆனாலும் நீங்க செம குறும்பு சாரே. அதுவும் தேவிகலாவில் 150 வது நாள் ஓடிச்சாம் குருவி. ஆனா அந்தக்குருவி எம்புட்டி சீக்கிரம் எல்லா தியேட்டரையும் விட்டு பறந்துச்சின்னு பச்ச புள்ளைக்கு கூட தெரியும்.  தேவிகலா தியேட்டரே மலிவு விலை மதுக்கடை சைசுல பாதிதான் இருக்கும்.அதுல 150 ஓடுனது ஓட்டுனதை ஒரு சாதனையா போட்டுக்கிட்டு...என்ன கொடும சரவணன்?  

                                                                       
இதுபோக விசய்யின் நைனா தயாரிப்பாளர் சங்க தலைவராக இருந்தது குறித்து டென்சன் ஆகி சில வார்த்தைகள் எழுதி உள்ளார் பிரின்ஸ். 'துர்கா, குட்டிப்பிசாசு புகழ்' இயக்குனர் ராம. நாராயணன் தயாரிப்பாளர் சங்க தலைவராக இருக்கையில் மனுநீதிச்சோழன் சொற்படிதான் நடந்து கொண்டாரா? டெல் அஸ் ப்ரதர். நண்பன் ஈ அடித்து கொண்டு இருக்கிறதாம். இருந்து விட்டு போகட்டும். ஆனால் இப்படம் பார்த்த நண்பர்கள் அனைவரும் நன்றாகத்தான் உள்ளதென கூறியுள்ளனர். இது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். 

கடைசியில் பவர் ஸ்டார் ஸ்டில் போட்டு பதிவு எழுதும் ரேஞ்சுக்கு வந்துவிட்டார் நம் தோழர். பவர் ஸ்டார் பத்தி எல்லாம் நாங்க முதல் உலகப்போர் நடந்தப்பவே போட்டாச்சி தலைவா. என்னமோ (ஒரு கல் ஒரு கண்ணாடி வந்தா) போங்க :)))
..........................................................................................

கொலவெறி தள்ளுபடி:

பொதுசபையில் நாகரீகமாக அவன் இவன் என்று அழைத்து பிறரை தாழ்த்துவது எப்படி? சிறப்பு பயிற்சி. குறைந்த கட்டணம். நிறைந்த சேவை.

விண்ணப்பங்கள் கிடைக்குமிடம்: பிரின்ஸ் டுட்டோ ரியல்(!) கல்லூரி:


                                                                          
                                               

சாம்பிள் க்ளாஸ் - 1

"உனக்கு காமடிய வரல. உனக்கு காமடியே வரல. டேய். டெட்ட டேய்" என்று நியாயாமாக எதிர்கேள்வி கேட்பவர்களை ஒருமையில் அழைத்து கலாய்க்கவும். இந்த ஒரே மொக்கை ப்ளேடை மறுக்கா மறுக்கா சாணை பிடித்து கலக்கவும்.

நாளைய க்ளாஸ்:

'எம்.ஜி.ஆர். சமாதி அருகே சோகமாக அமர்ந்து இருக்கும் அப்பாவி ரசிகனை பார்த்து 'டேய். உனக்கு காமடியே வரலை' என்று கலாய்ப்பது எப்படி?'

இவன் இவண்,
'காமடி கண்டெய்னர்' பிரின்ஸ். 
(கல்லூரி நிறுவனர்) 


தலைமை ஆசிரியர்:

அண்டா பிரிட்ஜி வாயன்
.. ..................................................................................................................                                                  

அடி வயிற்றை கலக்கும் பிரின்சின் போக்கிரி அறிமுக காட்சி. அட்டாச்ட் பாத்ரூம் வசதி உள்ளவர்கள் மட்டுமே பார்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம். 



****************************************

JRP.ரெட்தில் பய்யா(பையா இல்லீங்ணா.. Bhaiyaa), ஒரு தபா முடிவு பண்ணிட்டா எங்க பேச்ச நாங்களே கேக்க மாட்டோம். ஏன்னா இன்னிக்கி மவுத் ப்ரெஷனர் வாங்க ஸ்பான்சர் கெடைக்கலீங்ணா :((

******************************************
  
  

15 comments:

ரஹீம் கஸாலி said...

விட்றா...விட்றா சூனாப்பானா

கே.ஆர்.பி.செந்தில் said...

சொன்னா கேப்பியா?.. கேப்பியா?...

NAAI-NAKKS said...

:)))))))))))))))))

விக்கியுலகம் said...

அய்யா ரீலு அந்து போச்சிய்யா...அந்த நாடா அறுந்து பல வருசம் ஆச்சு...இதெல்லாம் அல்லக்கை எனும் போது சாதாரணம்யா ஹிஹி!

இணையத்தில் நீங்களும் சம்பாரிக்கலாம் said...

முதலீடு இல்லாமல் உங்களாலும் இணயத்தில் சம்பாரிக்க முடியும். இந்த தளம் கடந்த 4 வருடங்களாக மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இது 100 சதவீதம் உண்மை. பணம் பெற்றதற்க்கான Proof உள்ளது.

http://www.bestaffiliatejobs.blogspot.com/2011/12/get-paid-every-30-seconds.html

goundamanifans said...

//ரஹீம் கஸாலி said...
விட்றா...விட்றா சூனாப்பானா//

ரைட்டு

goundamanifans said...

//கே.ஆர்.பி.செந்தில் said...
சொன்னா கேப்பியா?.. கேப்பியா?...//

கேப்பியான்னு சொன்னது ஆரு..ஓ...கே.ஆர்.பி.யா..!!

goundamanifans said...

//NAAI-NAKKS said...
:)))))))))))))))))//

நீங்களும் பெண்சிங்கம் போஸ்டரை பாத்துருப்பீங்க போல?

goundamanifans said...

அய்யா ரீலு அந்து போச்சிய்யா...அந்த நாடா அறுந்து பல வருசம் ஆச்சு...இதெல்லாம் அல்லக்கை எனும் போது சாதாரணம்யா ஹிஹி!//

அப்ப நீதி, நேர்ம, நாயம், சத்தியம் எல்லாம் டுமீலா??? அட டுமீலுதான்..டுமீலுதான்..

goundamanifans said...

//இணையத்தில் நீங்களும் சம்பாரிக்கலாம் said...
முதலீடு இல்லாமல் உங்களாலும் இணயத்தில் சம்பாரிக்க முடியும். இந்த தளம் கடந்த 4 வருடங்களாக மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இது 100 சதவீதம் உண்மை. பணம் பெற்றதற்க்கான Proof உள்ளது.

http://www.bestaffiliatejobs.blogspot.com/2011/12/get-paid-every-30-seconds.html//

நாங்க நாலு தெருவுக்கு பிச்சை எடுத்தாவது சம்பாதிச்சிக்கறோம். ஆள விடுங்க சாமி!!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

முதலீடு இல்லாமல் உங்களாலும் சம்பாரிக்க முடியும். இது கடந்த பல்லாயிரம் வருடங்களாக மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இது 100 சதவீதம் உண்மை. பணம் பெற்றதற்க்கான Proof உள்ளது.

http://www.take.pichai.blogspot.com/2011/12/get-paid-every-10-seconds.html/

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///அட்டாச்ட் பாத்ரூம் வசதி உள்ளவர்கள் மட்டுமே பார்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம். ////

வீ ஹேவ் பேம்ப்பர்ஸ்.......

சிராஜ் said...

அனைத்தும் நியாயமான கேள்விகள்... பதில் சொல்ல யுவ கிருஷ்ணா கடமை பட்டுள்ளார். அவர் பதில் சொல்லாட்டி எனக்கு சிரிப்பே வராது.

சிராஜ் said...

அடுத்து "அழிக்கப் பிறந்தவன்" விமர்ச்சனம் வேற ரெடி ஆகி கிட்டு இருக்குன்னு நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் வந்திருக்கு. அதில் தனி மனித தாக்குதல் இல்லாமல் மொத்தமாக மனித குல தாக்குதல் தான் இருக்கும் என்று அன்போடு தெரிவித்துக் கொள்கிறோம்.

வியபதி said...

"....குடை புடிச்சிட்டு போற பெரியவரே, கருத்து சொல்லிட்டு போங்க"
நான் குடை பிடிக்கலைனாலும் உங்களுடைய வேண்டுகோள் நல்லாவே இருக்கு. அதுக்காகவே இதை எழுதிருக்கேன்