Wednesday, October 10, 2012

வெள்ளை இட்லி - அதிரடி அறிமுகம்



                                      வெண்ணிட்லியை தேடி ஒரு வெ(ற்)றிப்பயணம்

உணவு மற்றும் சாப்பாட்டிற்கான எனது தேடல் எப்போதும் பலப்பல பற்பல சுவாரஸ்யங்களால் நிறைந்து இருக்கும் என்பது இந்திய துணைக்கண்ட வாசகர்கள் நான்கு பேரும் நன்கு அறிந்ததே. இதுவரை நான் சென்ற அனைத்து கடைகளிலும் இட்லியை வட்டமாகவும், வெள்ளையாகவும் தந்தே வெறுப்பேற்றியதால் இம்முறை காஞ்சியில் எப்படியேனும் வித்யாச, மான முறையில் ஒரு இட்லியை குழைத்து அடித்து தங்கள் தூக்கத்தை குலைத்து பதிவிட முடிவு செய்தேன். 

                                                         

நான் கால்களால் நடந்து சென்ற வழியில் கண்ணில் பட்டது அதிசயம் passed புட். அகால மரணம் அடைந்த உணவிற்கு அதிசயம் என்று பெயர் வைத்து விற்பனை செய்வதா? எவ்வளவு கொழுப்பு இருக்க வேண்டும் அவனுக்கு. பேரன்பை கிடப்பில் போட்டுவிட்டு பெருங்கோபத்துடன் அந்த கடைக்குள் நுழைந்தேன். பிறகென்ன...அவன் என்னை அடிக்க, என்னை அவன் அடிக்க...ரெண்டு பேருக்கும் செம சண்ட. 'நா பாட்டுக்கு எண்ணறேன். நீ பாட்டுக்கு அடி' என்று கூறியதால் டயர்ட் ஆகி விட்டு விட்டான். நடக்குமா? தேக்குல செஞ்ச உடம்புலே!!                          
       

                                           
காஞ்சி பஸ் ஸ்டாண்ட் அருகே போனவாரம் வரை அமோக இட்லி வியாபாரம் செய்து கொண்டிருந்த ஓனர் என்னை கண்டதும் ஓட்டம் பிடித்தார். விரட்டி பிடித்து 'அண்ணே..உங்க ஓட்டலை பத்தி பெருமையா எழுதி இருந்தனே? இப்ப எப்படி போகுது யாவாரம்?' என்றேன். 'நாலு ஓசி இட்லி, ரெண்டு பக்கெட் சாம்பார் சாப்புட்டதோட போக வேண்டியதுதான? எவன்யா எழுத சொன்னது? லெப்டுல கீழ பாரு. பிசினெஸ் வயித்தால போயி இப்ப பிளாட்பாரத்ல இட்லி குண்டா சொப்பு விக்கிற கடை வக்கிற நிலைக்கு ஆயிட்டேன்யா' எனக்கதறினார். உங்களுக்கு மறுவாழ்வு கிடைக்க வேண்டுமெனில் எனக்கு 'பொன்னான வாழ்வே மண்ணாகி போச்சே..துயரம் இதுதானா' டைப்பில் ஒரே ஒரு பேட்டி மட்டும் தாருங்கள். ஓரிரவில் அதிசயம் நிகழும்' என்றதற்கு அதீத மௌனத்துடன் சில நொடிகள் இருந்துவிட்டு கணுக்காலில் விழுந்து 'ஒழுங்கா போயிரு. இடுப்ப ஒடிச்சி அடுப்புல சொருகிறுவேன்' என கூக்குரலிட்டு கண்ணீர் மழை பொழிந்தார். அந்தோ பாவம். மன்னித்து விட்டேன். மீண்டும் ஒயிட் கேக் (தட் மீன்ஸ் இட்லி) தேடல் தொடர்ந்தது.             
 
                                                               
வெள்ளைநிற ரவுண்டு இட்லி கடைக்கு வேகமாக செல்ல காஞ்சியில் இருந்த காஞ்சி ஆட்டோக்காரனிடம் பேரம் பேசினேன். அவன் தி.மு.க.காரன் என்பதால் 'இன்னா நெக்குலு இருந்தா வெள்ள இட்லி துன்ன ஆசைப்படுவ. அகுலு அவுலு வுட்டுக்கும். கட்சியோட 'புது கை' புதுகை அப்து அண்ணன் சொல்லிக்கீறாரு. இன்னும் ஒரு வருசத்துக்கு கறுப்பு இட்லிதான் துன்னனுமாம். அதை விக்கிறது நம்ம ஆளுதான். வரியா இட்டுனு போறேன்?'....அண்ணா பிறந்த பூமில அகராதி புடிச்ச பய புள்ளைக..!!     

                                                             
'ஏற்றுக்கொண்ட பதவிக்கெல்லாம் பெருமையை தந்தார். தன் இனிய குடும்பம் ஒன்றுக்குத்தான் லம்ப்பாக சொத்தினை தந்தார்' எனும் கலைஞர் ரீமிக்ஸ் பாடலை கேட்டவாறு கால்களால் நடந்து (ஹோட்டல்) சங்கீதாவை அடைந்தேன். காஞ்சி சங்கீதாவில் 'பெண் சப்ளையர்கள்' நிறைய உண்டு என்பதால் அங்கே உண்டு மகிழ முன்பே முடிவு செய்தேன்(ஆதாரம்: மேலே இருக்கும் படம்). 'என்ன சார் வேணும்?' என்று ஒரு ஆண் வந்து கேட்க மெல்லிய குரலில் 'பெண் சப்ளையரை வர சொல்லுங்க' என்று கிசுகிசுத்தேன். அவரோ மூர்க்கமாக 'கிசு கிசு பேசுறது தேன் மாதிரி இருக்கும் உனக்கு. பெண் சப்ளையர் உலவும் இடமென இதை நினைப்பது எதற்கு.' என எகிறலானார். அதிர்ந்த நான் 'உஸ்ஸு...உஸ்ஸு...ஏன் இவ்ளோ சத்தமா? பெண் சர்வர் இருக்காங்களான்னுதானே கேட்டேன்.நீங்க ஏன் தப்பா?'என ஆசுவாசப்'படுத்தினேன்'. இப்போதுதான் அந்த ட்யூப்லைட் பிரகாசமாக எரிந்தது.  

சில வெள்ளை இட்லிகள், வெள்ளை நிற தேங்காய் சட்னி, பச்சை வண்ண புதினா சட்னி, சூடான சாம்பார் நிறைந்த தட்டை டேபிளில் 'டொக்'கென வைத்து விட்டு டக்கென மறைந்து விட்டாள் அந்த பாவை. அடச்சே.... இங்கேயும் வட்ட வடிவ இட்லியா? வந்த  கோபத்திற்கு சென்ற அவளை அழைத்தேன்.

 'இட்லி வேண்டாம். சோலோ பூரி கொண்டு வாங்க'

'காலைல சோலோ பூரி எல்லாம் கிடைக்காது. பூரி செட்ல கொறஞ்சது ரெண்டு, மூணு பூரி இருக்கும். ஒரு சோலோ பூரி வாங்குனாலும் அதே பில்தான்'

'யார ஏமாத்தற. எத்தன ஓட்டல்ல லஞ்சுக்கு சோலோ பூரி தின்னுருப்பேன். பொம்பளையாச்சேன்னு 'பாக்கறேன்'. 

'அதான் வந்ததுல இருந்து பாக்கறியே. கண்ணுல காராபூந்திய வச்சி அடைக்க. யோவ் நீ சொல்லுறது சோலா பூரி. அது சோலோவா கெடைக்கும்.  காலைல போடுறது சின்ன பூரி'

'சோலோ..சோலா ..ம்ம். விடு. 'லோ' 'லா' வித்தியாசம்தான. லோலாயி மாதிரி அதுக்கு போயி ஏன் கத்தற? பசிக்குது. மணியோ பத்தற. என்ன விட்டுட்டு வேற டேபிளாண்டா ஏன் ரொம்ப நேரமா சுத்தற?'

'அட..நீங்க கவிஞரா?'

(நம்ம அருவாள சும்மாக்கண்டிதான் வச்சிருக்கோம்னு கண்டுபுடிச்சிட்டாளே).

'டெபனெட்லி. டெபனெட்லி'

'எத்தன பூரி வேணும்னாலும் துன்னுய்யா..காசு வோணாம்'

'ஏன்? இல்ல ஏன்னு கேக்கறேன்'

'ஏன்னா..ஏன்னா...'

'சொல்ரி கள்ளி'

'ஏன்னா....... நீதான்யா என் தேன்ன்ன்னன் அட!!'                
                                                               
                                               ஓட்டல் சங்கீதா கால் துடைப்பான்

சென்னை (ஓட்டல்) சங்கீதாவுடன் மீண்டும் சந்திப்போம்.


ஆக்கம், நெறியாள்கை மற்றும் (ரோல்) மாடல்:
கே.ஆர்.பி.செந்தில்
.....................................................................................




19 comments:

பட்டிகாட்டான் Jey said...

சிவா, முனாவது படத்துல தலிவர் ஆட்டோக்கார் கிட்ட பேசிட்டிருக்க படத்துல வயிறு ஏழு மாசக்கணக்கா வீங்கினாப்ல தெரியுதே.... ஏதும் சரக்கை மடியில சொருகியிருக்காரா????

பட்டிகாட்டான் Jey said...

//நான் கால்களால் நடந்து சென்ற வழியில் கண்ணில் பட்டது அதிசயம் passed புட் //

ஃபுல் மப்புல தவழ்ந்துகிட்டே போனீங்களா????

பட்டிகாட்டான் Jey said...

// 'ஏற்றுக்கொண்ட பதவிக்கெல்லாம் பெருமையை தந்தார். தன் இனிய குடும்பம் ஒன்றுக்குத்தான் லம்ப்பாக சொத்தினை தந்தார்' //

:-)))

பட்டிகாட்டான் Jey said...

// ஓட்டல் சங்கீதா கால் துடைப்பான் //

இது நல்லாருக்கே?... எந்தக்கடைல கிடைக்கும்...என்ன விலை...ஏதும் தெரிஞ்சா ..தாக்கல் சில்லிவிடு மெட்ராஸ்... நாலு வாங்கோனும்....

வீடு சுரேஸ்குமார் said...

வெண்ணிட்லி என்று நீங்கள் குறிப்பிட்டது வெண்ணீரில் சுடுவதாலா...?இல்லை வெண்மை நிறமாக இருப்பதாலா...?

வீடு சுரேஸ்குமார் said...

"உணவு விடுதி கால்துடைப்பான்" அப்படியென்றால் மூஞ்சி துடைக்கும் கைக்குட்டையை மூஞ்சி துடைப்பான் என்றுதானே அழைக்க வேண்டும்...? யாரோ மட்டையான குடிகாரன் செய்த வரலாற்று பிழை! இது!

பாகன்குமார் said...

நானே பதிவிடலாம் என்று இருந்தேன்......!நீங்க போட்டுட்டிங்க...!நன்றி!

! சிவகுமார் ! said...

//பட்டிகாட்டான் Jey said...
சிவா, முனாவது படத்துல தலிவர் ஆட்டோக்கார் கிட்ட பேசிட்டிருக்க படத்துல வயிறு ஏழு மாசக்கணக்கா வீங்கினாப்ல தெரியுதே.... ஏதும் சரக்கை மடியில சொருகியிருக்காரா????//

இலக்கிய தாகம். நிறைய தண்ணி அடிச்சார்...அதேன்!!

goundamanifans said...



//பட்டிகாட்டான் Jey said...
//நான் கால்களால் நடந்து சென்ற வழியில் கண்ணில் பட்டது அதிசயம் passed புட் //

ஃபுல் மப்புல தவழ்ந்துகிட்டே போனீங்களா????//

ஆமாம் தம்பி. போனவாரம் வாங்கிட்டு வந்த மலேசியா இட்லி இருக்கு. வேணுமா?

goundamanifans said...



//பட்டிகாட்டான் Jey said...
// ஓட்டல் சங்கீதா கால் துடைப்பான் //

இது நல்லாருக்கே?... எந்தக்கடைல கிடைக்கும்...என்ன விலை...ஏதும் தெரிஞ்சா ..தாக்கல் சில்லிவிடு மெட்ராஸ்... நாலு வாங்கோனும்....//

சிங்கப்பூர் வண்டார் குழலி அவின்யூவில் கிடைக்கும் தம்பி.

goundamanifans said...


//வீடு சுரேஸ்குமார் said...
வெண்ணிட்லி என்று நீங்கள் குறிப்பிட்டது வெண்ணீரில் சுடுவதாலா...?இல்லை வெண்மை நிறமாக இருப்பதாலா...?//

தருமியோட லொள்ளுப்பேரன் நீதானா? மாமி மெஸ்ல ஒரு வெள்ளை இட்லி, கொஞ்சம் மல்டி கலர் சட்னி...சொல்லிடு ராசா!!

goundamanifans said...


//வீடு சுரேஸ்குமார் said...
"உணவு விடுதி கால்துடைப்பான்" அப்படியென்றால் மூஞ்சி துடைக்கும் கைக்குட்டையை மூஞ்சி துடைப்பான் என்றுதானே அழைக்க வேண்டும்...? யாரோ மட்டையான குடிகாரன் செய்த வரலாற்று பிழை! இது!//

அப்படியென்றால் டிஸ்யூ பேப்பரை கூட முகத்தூய்மை காகிதம் என்று அழைக்கலாமே..!!

goundamanifans said...

//பாகன்குமார் said...
நானே பதிவிடலாம் என்று இருந்தேன்......!நீங்க போட்டுட்டிங்க...!நன்றி!//

யாருய்யா இது டம்மி ஐ.டி.ல வந்து அம்மி அரைக்கறது??? கருப்பு துண்டால அடிப்போம்!!

முத்தரசு (மனசாட்சி) said...

காஞ்சி
சங்கீதா
வெள்ளை இட்லி
தேனு.....

மீண்டும் சந்திப்பா

Philosophy Prabhakaran said...

// ஆக்கம், நெறியாள்கை:
கே.ஆர்.பி.செந்தில் //

ஐ தோடா... யோவ் சிவா... செய்யுறதெல்லாம் செஞ்சுட்டு பெரியவர் மேல பழிய போட பாக்குறியா... அது நடக்காதுடீயோவ்...!

அஞ்சா சிங்கம் said...

என்ன இருந்தாலும் ஒரிஜினல் போல வருமா ................
ஐயாசாமி.. ஐயாசாமிதான் ......குமாரசாமி குமாரசாமிதான் .............
சப்பாத்தி சப்பாத்திதான் ...............ரொட்டி ரொட்டிதான் .................
இட்லி இட்லிதான் ...............பொங்கல் பொங்கல்தான் .....................

kutti said...

nalla madhiyaneram sema pasi nee enndanna idly kadhai sollra bethiyava

மோகன் குமார் said...

அய்யாசாமியை விட நல்லா தான் எழுதிருக்கீங்க. ரசித்தேன்

ஐடியா கே.ஆர். பி என்பதும் எழுதியது சிவா என்றும் நிச்சயம் தெரிகிறது

பன்னிக்குட்டி ராம்சாமி said...

பொங்கல் அருமை.