Friday, December 14, 2012

பட்டிக்காட்டான் ஜெய் கதைகள் 3


திருவாளர் பட்டிஸ் ஒரு கருமிங்கறது நம்ம பூமியையும் தாண்டி செவ்வாய், வியாழன் வரைக்கும்  தெரியும், "எச்சக் கையில குருவி கூட ஓட்டமாட்டாப்ல...!" என்பது அனைவருக்கும் தெரியும். வீட்டுல பிளஸ்ல எகத்தாளம் பேசுற மாதிரியே…பேச சோத்தைக் "கட்" பண்ணிட்டாங்க…!இவருக்கு கொல பட்டினி வேற சரி நைசா ஹோட்டல்ல போய் சாப்பிட்டுக்கலாம்ன்னு கிளம்புறார். "நானே ராஜா நானே மந்திரி .."அப்படின்னு பாட்டுப் பாடிட்டு ரோட்டுல அலம்பிக்கிட்டு வர்றார் ஆட்டோக்காரன் ஓருத்தர் வண்டிய நிறுத்தி சார் வண்டி வேனுமா..? அப்படிங்கிறார்…!

"இல்லப்பா செகன்ட் ஹேன்ட் வண்டி நான் வாங்குறதில்லை..! " அப்படின்னு நக்கல் பேச…."போய்யா சாவு கிராக்கி பன்னாடை..., பரதேசி, அப்படின்னு திட்டிட்டு போறான்…!

வழக்கமா நாமதானே திட்டுவோம் இவம் திட்டுறான்…! சரி ஒரு லைக்கப் போட்டுருவோம் அப்படின்னு "லைக்......லைக்......" அப்படின்னு கத்தறாரு..! அப்ப அந்தபக்கம் பால்கனியில் இருந்து குப்பை கொட்ட வந்த "ஆன்ட்டி"  யாரைப் பாத்து லைக்குங்கற ராஸ்கல் அப்படின்னு குப்பைய இவர் தலையில கொட்டிட்டு போயிருச்சு…! இன்னிக்கு நாம ஸ்டேட்டஸ் போட்ட நேரம் சரியில்ல போல அப்படின்னு புலம்பிக்கிட்டு வர்றார் ஒரு ஹோட்டல் கண்ணுல படுது உள்ள நுழையறார்.

ஹோட்டல்க்குள்ள இவர் உள்ள நுழைஞ்ச நேரம் பாத்து  அங்க ஏற்கனவே சிவாவும், நக்கீரனும் இருக்காங்க…..இவரும் போயி அவங்க இருந்த டேபிள்ல உக்காறாரு……! எதாவது ஆர்டர் பண்ணுவாய்ங்க நாம ஓசில சாப்பிட்டுக்கலாமின்னு பாக்கறாரு அவங்க அதைப் பத்தியே பேசலை…! இவருக்கு கொலைப்பட்டினி மெதுவா சிவா சாப்பிடலாமே அப்படின்னு பிட்ட போடுறாரு

"ஓ….சாப்பிடலாமே…! பில்லு நீங்க கொடுங்க" அப்படினாப்டி…!சிவா!

"இது என்னடா வம்பாப் போச்சுன்னு"  யோசனை செய்த பட்டிஸ் முழிச்சிட்டு இருக்கையில…..அப்ப பாத்து ஆருர் முனா வர்றாப்ல ஹோட்டல்ககுள்ள….! அவரும் ஒரு சேர்ல உக்காந்துட்டு "ஏம்பா என்ன ஆர்டர் பண்ணயிருக்கீங்க…?" அப்படின்னு கேட்க "ஒன்னும் பண்ணல யாரு இன்னிக்கு வாங்கி தருவதுன்னு டிஸ்கஷன் பண்ணிட்டு இருக்கோம் அப்படிங்கிறாரு நக்கீரன்..!" 

சிவாகிட்டியும், எங்கிட்டியும் காசு இல்ல…..நீங்க இரண்டு பேர்ல யாராவது ஆர்டர் பண்ணுங்க என்கிறார்…..நக்கீரன்! ஆருர் மூனா சரி நான் நக்கீரனுக்கு பில் கொடுக்கிறேன் பட்டி சிவாவுக்கு பில் பண்ணட்டும் அப்படிங்க உடனே பட்டிஸ் சிவா நீ என்ன சாப்பிடுவே….? அப்படின்னு கேட்குறாரு…..!நான் என்னங்க சாப்பிடுவேன் இரண்டு இட்லி, இரண்டு ரோஸ்ட், ஒரு காப்பி, ஒரு வடை அவ்வளவுதான் அப்படிங்கிறாப்ல…!

அடுத்ததா நக்கீரனை கேட்குறாப்ல….நான் என்னய்யா டயட்ல இருக்கிறேன் எதா இருந்தாலும் ஒன்னுதான் சாப்பிடுவேன் அப்படிங்கறாப்ல…..! பட்டியின் கணக்கு பூச்சி மூளை அதிசயமா அன்னிக்குன்னு பார்த்து வேலை செய்யுது ஒரு பேப்பரையும் பேனாவையும் எடுத்து நாலு A4 ஷீட் வருகிற அளவுக்கு கணக்க எழுதி பார்த்துட்டு சிவாவை விட நக்கீரனுக்கு பில்லு குறைவா வருன்னு விடை சொல்ல……..நான் நக்கீரனுக்கு பில் தர்றேன்னு அடம் பிடிக்க……ஆரம்பிச்சாரு…! ஆருர் மூனா மறுத்தாலும் பிறகு சரி என்று சொல்ல நால்வரும் சாப்பிட்டார்கள்….! பட்டி தன் மொபைல்ல பிளஸ்க்கெல்லாம் லைக் போட்டுட்டே சாப்பிடுறாரு....!சாப்பிட்டு முடிச்சதும் நக்கீரன் சாப்பிட்ட பில்லப் பார்த்து பட்டிஸ் மயக்கம் போட்டு விழுந்திட்டாப்ல….பில்ல எடுத்துப் பார்த்தா…..!
இட்லி-1
பூரி -1
புரோட்டா -1
வடை-1
பொங்கல்-1
ஜிலேபி-1
குலோப் ஜாமுன்-1
கிச்சடி-1
ரோஸ்ட்-1
தயிர் வடை-1
சாம்பார் வடை -1
லெமன் சாதம்-1
ஆப்பிள் ஜூஸ் -1
காப்பி-1
டீ-1
பாதாம் பால்-1
மசாலா பால்-1
பீடா-1
---------------------------------------------
நீதி : ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது!

8 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

ரைட்டு....


போட்டுத்தாக்குங்க...

ஜோதிஜி திருப்பூர் said...

1990 ல் இது போல ரெண்டு மடங்கு தின்ன ஆளு நாங்க.

s suresh said...

ஹா! ஹா! செம காமெடி!

"என் ராஜபாட்டை"- ராஜா said...

list ல முக்கியமான சில விஷயங்களை காணும். . FULL ல சொல்லல

அமர பாரதி said...

Nice.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்ன எல்லாம் சைட் டிஷாவே இருக்கு......?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////சாப்பிட்டு முடிச்சதும் நக்கீரன் சாப்பிட்ட பில்லப் பார்த்து பட்டிஸ் மயக்கம் போட்டு விழுந்திட்டாப்ல….///////

யோவ் இப்படியெல்லாம் பண்ணி வெச்சீங்கன்னா அப்புறம் நாங்கள்லாம் யாரை நம்பி ப்ளஸ் விடுறது.... லைக் பண்றதுக்கு ஆளு வேணாமா?

Avargal Unmaigal said...


உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

2013ல் உங்கள் நம்பிக்கைகளும் ஆசைகளும் கனவுகளும் கைகூடட்டும்


அன்புடன்
மதுரைத்தமிழன்