Tuesday, January 15, 2013

சென்னை புக் ஃபேர் - பட்டிக்காட்டானின் 'காணோம்' பொங்கல்
சென்னை புக் ஃபேர் பற்றி எழுத முக்கிய விஷயங்கள் நிறைய இருந்தாலும் கடந்த ஞாயிறு அன்று நமது சகலகலா பதிவர்/ ஃபேஸ்புக்கர்/ட்விட்டர்/பின்னூட்டர் பட்டிக்காட்டான் செய்த காமடியை மறக்க முடியாமல் இன்னும் சிரித்துக்கொண்டு இருப்பதால் இப்பதிவு சிட்டிக்ஸ் சிறப்பு மலராக வந்தாக வேண்டிய கட்டாயம். 'அப்படியா?சொல்லுங்கண்ணே. சொல்லுங்க' என்று துள்ளி குதித்து ஓடிவரும் மக்களே....வாங்க பார்க்கலாம்.

ஞாயிறு மாலை பட்டிக்ஸை ரவுண்டு கட்டி அடிக்க இப்படி ஒரு அமோக சந்தர்ப்பம் கிடைக்கும் என சென்னை பதிவர்கள் எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள். டிஸ்கவரி புக் பேலஸ் கவுன்டர் அருகே புலவர் ராமானுஜம், பிலாசபி மற்றும் அஞ்சாசிங்கத்துடன் பேசிக்கொண்டு இருந்தேன். அப்போது புலவர் தந்த உளவுத்துறை தகவல் 'சற்று முன்புதான் ஜெய்யை பார்த்தேன். இங்குதான் குடும்பத்துடன் வந்துள்ளார்'. சிங்கத்திற்கு இருப்பு கொள்ளவில்லை. உடனே பட்டிக்ஸிற்கு போன் போட்டார். அடுத்த பத்து நிமிடத்திற்கு தன்னை அல்லாக்க தூக்கி மல்லாக்க போட இறைவன் செய்த திருவிளையாடலின் அச்சாரமே இந்த போன் கால்தான் என்று நம்ம ஜெய் எதிர்பார்த்திருக்க மாட்டார் பாவம். பாக்கெட்டில் இருந்து போன் எடுத்த ஒரு நொடி கேப்பில் பட்டிக்ஸின் புதல்வன் காணாமல் போக 'டேய் ராஜ் டி.வி.ஸ்டால் கிட்ட ஓடி வாங்கடா. குட்டி பட்டிக்சை காணுன்டா' என்று அலறினார் அண்ணாத்தை. படபடப்புடன் நாங்கள் மூவரும் ஸ்பாட்டை அடைந்தோம்.

'போன் எடுத்து ஹலோன்னு சொல்றதுக்குள்ள பய டப்புனு ஜம்ப் பண்ணி ஓடிட்டான்டா. தேடுங்கடா. தேடுங்கடா' என்று அவர் சிதற 'கூல்..நாங்க கண்டுபிடிக்கறோம்' என்று கூறிவிட்டு ஆளுக்கொரு திசையாக ஓடினோம். 'ரெட் கலர் ட்ரெஸ். சோட்டா பீம்னு எழுதி இருக்கும்' என்று அண்ணாத்தை சொன்ன அடையாளத்தை மனதில் வைத்துக்கொண்டு தேடுதல் படலம் தொடர்ந்தது. ஜெய்யும் இன்னொரு திசை நோக்கி ஓடினார். அப்போது அதே கலரில் உடை அணிந்த வேறொரு பையனை பிடித்து 'நீ இங்கதான் இருக்கியா?' என்று ஜெய் கேட்க, கோபத்தில் பையனின் நைனா முறைக்க இன்னும் டென்ஷன் எகிறியது.

ரிசப்சனில் 'பையன் காணும்' என்று அறிவிக்க சொல்லிவிடலாம் என்று சிங்கம் கூறியதால் நான் வேகமாக அவ்விடம் நோக்கி ஓடினேன். எனக்கு முன்பு பிலாசபி அங்கு நிற்க அருகே பார்த்தால் கண்காட்சி அமைப்பாளர் மடியில் லேசாக அழுதவாறு  குட்டி ஜெய் போஸ் தந்து கொண்டிருந்தான். சிங்கமும் உடனே வந்து சேர ஒருவழியாக நிம்மதி பெருமூச்சு விட்டோம். 

'நண்பரின் மகன்தான் சார்' என்று நாங்கள் சொன்னாலும் 'அப்பா வரட்டும். அவரை கூப்புடுங்க. அப்பதான் பையனை ஒப்படைப்போம்' என்று நாட்டாமை ஒருவர் சொல்ல உடனே ஜெய்க்கு கால் செய்தோம். தலைகால் புரியாமல் பேயறைந்த முகத்துடன் ஓடி வந்தார். 'வாடா மகனே' என்று இவர் அழைக்க அலெர்ட் ஆன நாட்டாமை குட்டி ஜெய்யை பார்த்து 'தம்பி இவர் உங்க அப்பாதான?' என்று கேட்க பயபுள்ள பதிலேதும் சொல்லாமல்(அதிலும் குறிப்பாக பட்டிக்சை ஏறெடுத்தும் பார்க்காமல் அழுதுகொண்டே இருந்தான்.) 'மானத்தை வாங்கறானே' என்று நம்ம ஆளு முகத்தில் 1 டன் கலவரம் அப்பி இருந்ததை பார்த்து எங்களுக்கு உள்ளூர பயங்கர சிரிப்பு. நாட்டாமை பலமுறை கேட்டும் பையன் பதில் சொல்லாததால் பட்டிக்ஸ் சிதறி பதறி உதறிப்போனார். அந்த அம்சமான ரியாக்சன் போட்டோ கீழே:     

                           ''என் மானத்தை டைட்டானிக் கப்பல்ல ஏத்தறானே என் வாரிசு..."  
                                                                  
இரண்டு நொடிக்கு ஒருமுறை போட்டோ எடுக்கும் பதிவர்களில் பட்டிக்சும் இருந்ததே அவருக்கு சாதகம் ஆகிப்போனது. சற்று முன் புக் ஃபேரில் அவர் எடுத்த பேமிலி போட்டோவை நாட்டாமையிடம் காட்ட ஒருவழியாக குட்டிப்பயலை தர ஓ.கே. சொன்னார். ஆனாலும் பய அப்பாவிடம் வர மறுத்து மீண்டும் பல்பு தர சிட்டி சின்னாபின்னம் ஆனார். அம்மா வந்த பின்பே சமாதானம் ஆனான் நம்ம தம்பி. 'அடுத்து பட்டிக்சை டிஸ்கவரி புக் ஸ்டால் வாசலுக்கு நகர்த்தி கொண்டு வந்தோம் நாங்கள். 2012 இல் இணையத்தில் எத்தனை பேரை கதற விட்டு இருப்பார் நம்ம ஆளு. இன்னைக்கு இவரை விடக்கூடாது என்று மனதினுள் அனைவரும் சபதமேற்றோம்.

'என்னா ஜெய்.. 24 மணிநேரமும் நெட்ல இருக்கீங்க. அதுல இருக்குற அக்கறை பையனை பாத்துக்கறதுல இல்லையே??' என்று ஸ்டவ்வை பற்ற வைத்தேன். அண்ணி  ஜெய்யை முறைக்க ஆரம்பித்தார்.சும்மா இருப்பார்களா? பிலாசபி, அஞ்சாசிங்கம் என ஆளாளுக்கு தமது பங்கை சீரும் சிறப்பாக ஆத்தினர். 'திருந்தவே மாட்டாரு. தண்ணி தெளிச்சி விட்டாச்சி' என்று அண்ணி சொன்னபோது எமது காதுகளில் தேன் வந்து பாய்ந்தது.           

'டேய்..24 மணி நேரம் நெட்ல இருக்கேன்னு ஏன்டா பொய் சொல்றீங்க?' என்று பிளேட்டை திருப்ப பார்த்தார் சிட்டி. அந்த நேரம் பார்த்து கே.ஆர்.பி., பபாஷா, ரோஸ்விக் போன்ற பெரிய தலைகளும் ஸ்பாட்டிற்கு வர வசமாக சிக்கினார் சிட்டி. 'இவரு நாளுக்கு 26 மணிநேரம் நெட்ல இருக்காரு' என்று ஒப்புதல் வாக்குமூலம் தந்தார் பபாஷா. அண்ணி மீண்டும் கொந்தளிக்க 'இன்னைக்கு உங்க நேரம். ஆடுங்க' என்று பரிதாபமாக சிட்டி எம்மை பார்த்து கவலையுடன் கூறினார். அத்துடன் ஓயவில்லை கலாட்டா. 


சிட்டி போட்டிருந்த கார்கோஸ் பேன்ட் அனைவரின் கண்ணையும் உறுத்த ஒவ்வொரு பாக்கெட்டிலும் என்ன இருக்கிறது என்று ஆளாளுக்கு எட்டிப்பார்த்தோம். அப்பொருட்களின் விவரம் வருமாறு:

சட்டை பாக்கெட் - இரண்டு கூலர்ஸ்
கார்கோ இடது மேல் பாக்கெட் - இரண்டு அரை லிட்டர் வாட்டர் பாட்டில்கள்.
கார்கோ இடது கீழ் பாக்கெட் - காராசேவு, லேய்ஸ் சிப்ஸ் பாக்கெட்கள்.
கார்கோ வலது கீழ் பாக்கெட்  - சொருகி வைக்கப்பட்ட பலூன்கள்.
கார்கோ வலது மேல் பாக்கெட் - கொஞ்சம் சில்லறைகள்.

ஆதாரம் இங்கே - டைட் க்ளோஸ் அப்: 

                                             தாகம் தீர்க்க வந்த தண்ணி டேங்கியே 

அடுத்த ஆதாரம் - லாங் ஷாட்: 
                                                         
                                                   நடமாடும் ஷாப்பிங் மாலே!! 

இதில் உச்சகட்ட காமடி என்னவென்றால் சிட்டி பதிவர்களுடன் பல்ப் வாங்கிக்கொண்டு இருந்த நேரத்தில் அவ்வப்போது அவரது கார்கோ பாக்கெட்டில் இருந்த தண்ணீரை குடித்துவிட்டு மீண்டும் அதே ஸ்டாண்டில் வைத்த வண்ணம் இருந்தனர் நமது பதிவர்கள். யாரோ வியாபாரி போல என்று வழிப்போக்கர் ஒருவர் வந்து தனது பங்கிற்கு தாகத்தை தணித்து விட்டு சென்றது ரகளை. அதை சிட்டி நோட் செய்யாதது அருமையிலும் அருமை சாமியோ!!

கடைசியாக கிளம்பும் நேரத்தில் ஜெய் அஞ்சாசிங்கத்தை பார்த்து பலத்த கர்ஜனையுடன் கோபமாக சொன்னது:

'மவனே உன் போன் காலை ஒரு செகன்ட் அட்டென்ட் பண்ணதால எனக்கு இந்த நெலம. இனிமே எனக்கு போன் பண்ண %^^*&@#$...........""  

"எப்படியோ..நம்மை ஆண்டு முழுக்க கதற விட்ட பட்டிக்சை இன்று ரவுண்டு கட்டி அடிக்க சந்தர்ப்பம் தந்த இறைவா போற்றி" என்று  ஃபுல் மீல்ஸ் கட்டிய திருப்தியில் அனைவரும் வீடு போய் சேர்ந்தோம். இந்த பசுமையான நினைவு இன்னும் பல நாட்களுக்கு மனதில் நிற்கும்!!!

குறிப்பு: செய்திகள் அனைத்தும் புகைப்பட ஆதாரத்துடன் வெளியிடப்பட்டு உள்ளது. எனவே இங்கு வந்து பட்டிக்ஸ் என்னதான் மறுப்பு சொன்னாலும் பருப்பு வேகாது என்பது மனசாட்சி உள்ளவர்களுக்கு தெரியும் என்பது எங்களுக்கு நன்றாக தெரியும்.   

ஜிம்பலக்கா ஜிம்பலக்கா ஜிம்பர ஜிம்பாலே. சிட்டிக்ஸ் ஆடு சிக்கிய நாளை மறக்க முடியுமா ஜிம்பர ஜிம்பாலே!! ஹேய்...ஜிம்பாலே....ஜிம்பாலே!!

...........................................................................


Posted By:

! சிவகுமார் ! 

47 comments:

! சிவகுமார் ! said...


வீட்டில் அண்ணியிடம் சிட்டிக்காட்டான் என்ன மாத்து வாங்கியிருப்பார் என்பதை நினைத்தால் சிப்பு சிப்பா வருதுடா சாமி!!

FOOD NELLAI said...

இந்த குடும்ப பொறுப்பு விரைவில் சிவாவிற்கும் ஏற்பட இறைவனை வேண்டுகிறேன்.

பால கணேஷ் said...

அடடா... பட்டிக்ஸ் வர்றதுக்கு கொஞ்ச நேரம் முன்ன வரை இருந்தனே... இந்த பொன்னான காட்சியை ரசிக்கிற சான்ஸ் மிஸ் ஆயிருச்சே... இதன் தொடர்ச்சியா வீட்டில என்ன நடந்ததுன்றதை பட்டிக்ஸ் தனியா தன் தளத்தில் வெளியிடுவார்(ன்னு நினைக்கிறேன்).

ஆரூர் மூனா செந்தில் said...

அடடா, பொங்கலுக்கு ஊருக்கு வந்துவிட்டதால் எனக்கு சந்தர்ப்பம் தவறிவிட்டதே. என் பங்குக்கு இன்னும் ரெண்டு மடங்கு ஏத்திவுட்டுருப்பேனே. ஜெய் வர்றேன்யா, இன்னும் ரெண்டு நாள்ல வர்றேன். கச்சேரி அடுத்த வாரமும் தொடரும்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

Haha

சீனு said...

எதையும் தாங்கும் பட்டிக்ஸ் தண்ணி தாங்கி இல்லை.. இடி தாங்கி இடி தாங்கி இடி தாங்கி

Philosophy Prabhakaran said...

// சகலகலா பதிவர்/ ஃபேஸ்புக்கர்/ட்விட்டர்/பின்னூட்டர் //

ராஜ குலோத்துங்குவை விட்டுவிட்டீர்... ப்ளஸ்ஸர் என்ற பதம் எங்கே அய்யா...

! சிவகுமார் ! said...

10-12 power cut. you continue guys. pattikkaattanai vida vendaam.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// அந்த அம்சமான ரியாக்சன் போட்டோ கீழே: ///////

பட்டிக்ஸ் அழுதுட்ட மாதிரி இருக்கே? எப்படிப்பட்ட இணைய போராளி அவரு, அவரையே அழுகுற மாதிரி படம் எடுத்தவர்கள் வாழ்க...........

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/// ஆனாலும் பய அப்பாவிடம் வர மறுத்து மீண்டும் பல்பு தர சிட்டி சின்னாபின்னம் ஆனார். ///

உங்களை மாதிரியே பையனும் ப்ளான் பண்ணி வெச்சி டைம் பார்த்து அடிச்சிருக்கான் போல?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////'என்னா ஜெய்.. 24 மணிநேரமும் நெட்ல இருக்கீங்க. அதுல இருக்குற அக்கறை பையனை பாத்துக்கறதுல இல்லையே??' என்று ஸ்டவ்வை பற்ற வைத்தேன்.////////

ஸ்டவ்வா ஸ்ட்ரெயிட்டா சிலிண்டர்லயே பத்த வெச்சிட்டு..... பேச்ச பாரு....

Easy (EZ) Editorial Calendar said...

உங்களுக்கு என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.....

நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// 'திருந்தவே மாட்டாரு. தண்ணி தெளிச்சி விட்டாச்சி' என்று அண்ணி சொன்னபோது எமது காதுகளில் தேன் வந்து பாய்ந்தது. /////

நாசமா போச்சி, இனி 30 மணிநேரம் ஆன்லைன்ல இருப்பாரே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////ரெட் கலர் ட்ரெஸ். சோட்டா பீம்னு எழுதி இருக்கும்' என்று அண்ணாத்தை சொன்ன அடையாளத்தை //////

பட் பையன் கட்டம் போட்ட சட்டையில்ல போட்டிருக்கான்....? நான் கேட்கலீங்கோ, ப்ளஸ்ல ஒருத்தர் கேட்டிருக்காருங்கோ.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// யாரோ வியாபாரி போல என்று வழிப்போக்கர் ஒருவர் வந்து தனது பங்கிற்கு தாகத்தை தணித்து விட்டு சென்றது ரகளை. அதை சிட்டி நோட் செய்யாதது அருமையிலும் அருமை சாமியோ!!//////

அப்போ பட்டிக்ஸ் கைல ஒரு பிசினஸ் டெக்னிக் கைவசம் இருக்கு.....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////"எப்படியோ..நம்மை ஆண்டு முழுக்க கதற விட்ட பட்டிக்சை இன்று ரவுண்டு கட்டி அடிக்க சந்தர்ப்பம் தந்த இறைவா போற்றி" என்று ஃபுல் மீல்ஸ் கட்டிய திருப்தியில் அனைவரும் வீடு போய் சேர்ந்தோம். இந்த பசுமையான நினைவு இன்னும் பல நாட்களுக்கு மனதில் நிற்கும்!!!///////

அடுத்த புக்ஃபேர் எப்போ.....?

! சிவகுமார் ! said...


மாட்டு பொங்கலை முன்னிட்டு 10-12 பவர் கட் இல்லாமல் செய்து பட்டிக்சை ஓட்ட உதவி செய்த அம்மா வாழ்க!! இனி இங்கதான்!!

! சிவகுமார் ! said...


//FOOD NELLAI said...
இந்த குடும்ப பொறுப்பு விரைவில் சிவாவிற்கும் ஏற்பட இறைவனை வேண்டுகிறேன்.//

ஏன் சார்? யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகமா???

! சிவகுமார் ! said...

//பால கணேஷ் said...
அடடா... பட்டிக்ஸ் வர்றதுக்கு கொஞ்ச நேரம் முன்ன வரை இருந்தனே... இந்த பொன்னான காட்சியை ரசிக்கிற சான்ஸ் மிஸ் ஆயிருச்சே... இதன் தொடர்ச்சியா வீட்டில என்ன நடந்ததுன்றதை பட்டிக்ஸ் தனியா தன் தளத்தில் வெளியிடுவார்(ன்னு நினைக்கிறேன்).//

எழுத மாட்டார். என்னா அடி!!

! சிவகுமார் ! said...//ஆரூர் மூனா செந்தில் said...
அடடா, பொங்கலுக்கு ஊருக்கு வந்துவிட்டதால் எனக்கு சந்தர்ப்பம் தவறிவிட்டதே. என் பங்குக்கு இன்னும் ரெண்டு மடங்கு ஏத்திவுட்டுருப்பேனே. ஜெய் வர்றேன்யா, இன்னும் ரெண்டு நாள்ல வர்றேன். கச்சேரி அடுத்த வாரமும் தொடரும்.//

உங்களுக்கு அதிர்ஷ்டம் இல்ல ஆரூர். சும்மா சொயட்டி சொயட்டி அடிச்சாங்க அண்ணனை.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

Pathivulaka power star pattiks vazhka

! சிவகுமார் ! said...


//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
Haha//

i understand your position :)

! சிவகுமார் ! said...

//சீனு said...
எதையும் தாங்கும் பட்டிக்ஸ் தண்ணி தாங்கி இல்லை.. இடி தாங்கி இடி தாங்கி இடி தாங்கி//

அவரு போடற கமண்டுக்கு நியாயப்படி நாமதான் இடிதாங்கோ தாங்கி.

! சிவகுமார் ! said...


//Philosophy Prabhakaran said...
// சகலகலா பதிவர்/ ஃபேஸ்புக்கர்/ட்விட்டர்/பின்னூட்டர் //

ராஜ குலோத்துங்குவை விட்டுவிட்டீர்... ப்ளஸ்ஸர் என்ற பதம் எங்கே அய்யா...//

ஆமாம். வரலாறு முக்கியம் அமைச்சரே!!

! சிவகுமார் ! said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
////// அந்த அம்சமான ரியாக்சன் போட்டோ கீழே: ///////

பட்டிக்ஸ் அழுதுட்ட மாதிரி இருக்கே? எப்படிப்பட்ட இணைய போராளி அவரு, அவரையே அழுகுற மாதிரி படம் எடுத்தவர்கள் வாழ்க...//

பையன்தான் அழுதான். அண்ணாத்தையை கண்டுக்காததால் இமேஜ் டேமேஜ் ஆன ஆனந்த கண்ணீரில் சிட்டி குடுத்த போஸ்

! சிவகுமார் ! said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
/// ஆனாலும் பய அப்பாவிடம் வர மறுத்து மீண்டும் பல்பு தர சிட்டி சின்னாபின்னம் ஆனார். ///

உங்களை மாதிரியே பையனும் ப்ளான் பண்ணி வெச்சி டைம் பார்த்து அடிச்சிருக்கான் போல?//

டெபனெட்லி. டெபனெட்லி.

! சிவகுமார் ! said...


//பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////'என்னா ஜெய்.. 24 மணிநேரமும் நெட்ல இருக்கீங்க. அதுல இருக்குற அக்கறை பையனை பாத்துக்கறதுல இல்லையே??' என்று ஸ்டவ்வை பற்ற வைத்தேன்.////////

ஸ்டவ்வா ஸ்ட்ரெயிட்டா சிலிண்டர்லயே பத்த வெச்சிட்டு..... பேச்ச பாரு...//

சட்டம் தன் கடமையை செய்ய வேண்டிய நிர்பந்தம்!!

! சிவகுமார் ! said...

//Easy (EZ) Editorial Calendar said...
உங்களுக்கு என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.....

நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)//

சர்தாங்ணா!!!

! சிவகுமார் ! said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
//// 'திருந்தவே மாட்டாரு. தண்ணி தெளிச்சி விட்டாச்சி' என்று அண்ணி சொன்னபோது எமது காதுகளில் தேன் வந்து பாய்ந்தது. /////

நாசமா போச்சி, இனி 30 மணிநேரம் ஆன்லைன்ல இருப்பாரே?//

பேசாம ஒரு நாளைக்கி 48 மணிநேரம்னு தீர்மானம் கொண்டு வந்துரலாமா??

! சிவகுமார் ! said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////ரெட் கலர் ட்ரெஸ். சோட்டா பீம்னு எழுதி இருக்கும்' என்று அண்ணாத்தை சொன்ன அடையாளத்தை //////

பட் பையன் கட்டம் போட்ட சட்டையில்ல போட்டிருக்கான்....? நான் கேட்கலீங்கோ, ப்ளஸ்ல ஒருத்தர் கேட்டிருக்காருங்கோ.....//

சட்டைக்கு மேல ஒரு உள்ளன் போட்டிருந்தான்.

! சிவகுமார் ! said...


பன்னிக்குட்டி ராம்சாமி said...
//// யாரோ வியாபாரி போல என்று வழிப்போக்கர் ஒருவர் வந்து தனது பங்கிற்கு தாகத்தை தணித்து விட்டு சென்றது ரகளை. அதை சிட்டி நோட் செய்யாதது அருமையிலும் அருமை சாமியோ!!//////

அப்போ பட்டிக்ஸ் கைல ஒரு பிசினஸ் டெக்னிக் கைவசம் இருக்கு.....!//

நடமாடும் நாடார் கடை ஆகிவிடுவார் போல.

! சிவகுமார் ! said...

//ன்னிக்குட்டி ராம்சாமி said...
//////"எப்படியோ..நம்மை ஆண்டு முழுக்க கதற விட்ட பட்டிக்சை இன்று ரவுண்டு கட்டி அடிக்க சந்தர்ப்பம் தந்த இறைவா போற்றி" என்று ஃபுல் மீல்ஸ் கட்டிய திருப்தியில் அனைவரும் வீடு போய் சேர்ந்தோம். இந்த பசுமையான நினைவு இன்னும் பல நாட்களுக்கு மனதில் நிற்கும்!!!///////

அடுத்த புக்ஃபேர் எப்போ.....?//

23 ஆம் தேதிவரை கண்காட்சி தொடரும். இந்த வார இறுதியில் மீண்டும் சிட்டி சிக்குவாரா என்று பார்ப்போம்.

பட்டிகாட்டான் Jey said...

வலையுலக மக்களே, இது எல்லாம் பொய், படம் எல்லாம் கிராபிக்ஸ் செய்யப்பட்டவை. நம்பாதீர்கள்.

அஞ்சா சிங்கம் said...

யோவ் அண்ணியோட ரியாக்சன் தான் டாப்பு ......
நாம் கலாய்க்கும் போது என்னங்க அப்போ நீங்க வெறும் காமடியன் தானா .? என்று கேட்டாங்களே ஒரு கேள்வி .

! சிவகுமார் ! said...


வேற பாஷைல அண்ணனை அவங்க கொத்து பரோட்டா போட்டது கூட செம டாப்பு. வீ ஆர் ஆல் வெரி ஹாப்பி!!!

! சிவகுமார் ! said...


//பட்டிகாட்டான் Jey said...
வலையுலக மக்களே, இது எல்லாம் பொய், படம் எல்லாம் கிராபிக்ஸ் செய்யப்பட்டவை. நம்பாதீர்கள்.//

ஒண்ணும் நடக்காது. வேடிக்கை மட்டும் பாருங்க. பொங்கல் இன்னும் பொங்கும்!!

Vasudevan Tirumurti said...

:-))))

அஞ்சா சிங்கம் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////ரெட் கலர் ட்ரெஸ். சோட்டா பீம்னு எழுதி இருக்கும்' என்று அண்ணாத்தை சொன்ன அடையாளத்தை //////

பட் பையன் கட்டம் போட்ட சட்டையில்ல போட்டிருக்கான்....? நான் கேட்கலீங்கோ, ப்ளஸ்ல ஒருத்தர் கேட்டிருக்காருங்கோ.....//
//////////////////
பண்ணி அது அவரோட பொண்ணு பையன் படம் வெளியிடவில்லை

பட்டிகாட்டான் Jey said...

வீட்டுக்கு வந்து நல்லா ஜாலியா பேசிட்டிருந்தப்ப அவன் கிட்ட “ஏண்டா அப்பா கூப்பிட்டு வரலை”னு கேட்டா அவன் சொன்னது...

”ஆமாம்... நீ காணோம்னு அப்பா அப்பானு கூப்பிட்டா ஆளையேக் காணோம், வரவே இல்லை அதான் கோவம்” ன்றான்.

பயபுள்ளை செம கோவத்துல இருந்திருக்கான் போல :-)))))

எல்லாம் இந்த பரதேசி “அஞ்சா சிங்கம் போட்ட போன்” கால்தான் காரணம்.

கும்பலா சேர்ந்து கலாய்க்கிறது வீரமாடா... உங்களுக்கு வெங்கலக்கிண்ணிகூட கிடையாது தெரிஞ்சிக்கிடுங்க. :-))))))))))

சென்னை பித்தன் said...

சிவா!இந்த ஆட்டமெல்லாம் இன்னும் சில காலம்தான்! உங்களுக்குக் கால்கட்டுப் போட்ட பின் ஜெய் சேர்த்து வைத்துப் பழி வாங்கப் போகிறார்!

புலவர் சா இராமாநுசம் said...

அடக் கடவுளே! இவ்வளவு கூத்து நடந்திருக்கு, எனக்கு எதுவும் தெரியாதே!

வேடந்தாங்கல் - கருண் said...

சிவ., சிவா,,

வேடந்தாங்கல் - கருண் said...

பையன் ரொம்ப பயந்துட்டான் போல..
அதான் அப்பாவையே மறந்துட்டான்..

வேடந்தாங்கல் - கருண் said...

பட்டிகாட்டான் Jey said...
வலையுலக மக்களே, இது எல்லாம் பொய், படம் எல்லாம் கிராபிக்ஸ் செய்யப்பட்டவை. நம்பாதீர்க// நம்பிட்டோம்,, சிவா சொன்ன்னதை..

வவ்வால் said...

பட்டிக்காட்டார் அவர் பையனை ,என்ப்பதிவ படி,பிளசுக்கு லைக் போடுன்னு பையனை அநேகமா டார்ச்சர் பண்ணிருப்பாருன்னு நினைக்கிறேன்,அதான் நேரம் பார்த்து பையன் பழி வாங்கிட்டான் :-))

பாட்டிலில் நாம "வழக்கமா குடிக்கிற" "தண்ணி" தானே இருந்துச்சு ?

பட்டிகாட்டான் Jey said...

// அடக் கடவுளே! இவ்வளவு கூத்து நடந்திருக்கு, எனக்கு எதுவும் தெரியாதே! //

அய்யா, செல்வின் உங்க பேரைச் சொல்லி தப்பிச்சுட்டாம், இல்லைனா அங்கனகுள்ளேயே பின்னி எடுத்திருப்பேன்.... பயபுள்ளை தப்பிசுட்டாம்..:-))

// நம்பிட்டோம்,, சிவா சொன்ன்னதை.. //
@ வேடந்தாங்கல் - கருண்

அவ்வ்வ்வ்வ்வ் :-))

@வவ்வால் - ஏன் இந்தக்

கொலைவெறி :-)))

பையனுக்கு காணாமா போய்ட்டொம்ன்ற கான்செட்டே இன்னும் புரியலைனுதான் தோணுது. என்னை காணோம்னு அவன் அப்பானு கூப்பிடும் போது ஏன் உடனே வரலைன்ற ரீதியில கோவமா இருந்திருக்கான்.

நான் கொஞ்சம் பதட்டப்பட்டதுகூட அதுக்காகதான். அப்பா அம்மா காணலைனா அவன் மனநிலை மோசமாயிரும்தான் :-)))

ஆனால் 10 நிமசத்துள்ளே கலேபரம் ஆயிட்டு....

தண்ணீர் அக்காபீனா பிராண்டு :-)))


கவியாழி கண்ணதாசன் said...

just now my system problem rectified.

"SUPER JOKE "