Thursday, April 4, 2013

அபி அப்பா - தி அமேசிங் உ.பி


                                                             

அபி அப்பா... வசீகர எழுத்து நடையால் பதிவுலகை ஒரு காலத்தில் கட்டிப்போட்ட சீனியர். தற்போது அரசியல் சாராத முகநூல் பதிவுகளில் தனது முத்திரையை பதித்து வருபவர். என்ன தி.மு.க.வை எதிர்த்து ஏதேனும் புள்ளை பூச்சிகள் துள்ளி குதித்தால் மட்டும் வழக்கத்திற்கு மாறாக அண்ணனின் டெம்பரேச்சர் எகிறோ எகிறென்று எகிறிவிடும். அக்கோவம் என்னதான் சீரியசாக இருந்தாலும் சில பல நேரங்களில் வாசகர்கள் சிரிப்பை அடக்க முடியாத நிலைக்கு சென்று விடுவது கண்கூடு. அவற்றில் ஒரு சில சாம்பிள்களை பார்க்கலாம் வாருங்கோள்.

பல மாதங்களுக்கு முன்பு 'ஈழத்தமிழர்களே..எங்கள் தலைவர்தான் புளியமரம். அவரை பிடித்து தொங்கிக்கொள்ளுங்கள். உங்களை காப்பாற்ற அவர் மட்டுமே உள்ளார்' என ஒரு பதிவு போட்டார். அதைக்கண்டு வெறியாகி இலங்கை, மலேசியா, உகாண்டா என பல்வேறு நாட்டு பதிவர்கள் அண்ணனுக்கு சிறப்பு கும்பாபிஷேகம் நடத்தியது பதிவுலகம் அறிந்தது.வெற்றிகொண்டான் டுடோரியல் காலேஜில் முதல் வகுப்பு மாணவர்களில் ஒருவராக இருப்பவரை இப்படி ரவுண்டு கட்டி திட்டியது தமிழக அரசியலில் நேர்ந்த மாபெரும் வரலாற்றுப்பிழை என்பதை திட்ட (மா)வட்டமாக தெரிவித்து கொள்கிறேன். (.முதல்வர் கரண்ட் தந்தால் அவரை 'மின்சார கன்னி' என்று அழைக்கலாம் என்று ஐடியா தந்த அண்ணன் வெ.கொ.டு. காலேஜில் டிஸ்டிங்சன் பெற வாழ்த்துகள்).  

நக்கீரனை தவிர அனைத்து பத்திரிக்கையும் டிஸ்யூ பேப்பர் ரகம்தான் என்பது கழக கண்மணிகளின் அசைக்க முடியா அவதானிப்பு. தற்போது ஜூனியர் விகடன் சர்வே கண்டு உக்கிரத்தின் உச்சத்திற்கு சென்றுவிட்டார் அபி அப்பா. "யாரைக்கேட்டு அடுத்த தலைவர் ஸ்டாலின் என்று ஜூ.வி. சொல்கிறது? வெறும் 5,000 பேரிடம் சர்வே எடுத்தால் அதுதான் இறுதியானதா?" என்பது அண்ணனின் முதல் கேள்வி. 

"அதுக்கு பேருதான் சர்வே. ஏழரை கோடி பேரிடம் எடுத்தால் அதுக்கு பேரு ஆல்மோஸ்ட் எலெக்சன் தானுங்களே''ன்னு யாருய்யா அது கூட்டத்துல கத்துறது. படுவா.

"1300 பொதுக்குழு உறுப்பினர்கள் இருக்காங்க. அவங்ககிட்ட சர்வே எடுங்க. அதுதான் சரி" என்பது அண்ணனின் அதிரடி டிப்ஸ். 

"தங்கத்தளபதி ஸ்டாலின், அவருக்கு அடுத்து 'வெள்ளி வென்றாள்' குஷ்பு, மூன்றாவதாக 'வெண்கல கிண்ணம் கொண்டான்' அழகிரி இதுதான் ஜு.வி. சர்வே ரிசல்ட். ஒருவேளை பொதுக்குழு சர்வே முடிவில் குஷ்புதான் அடுத்த தலைவி என்று அறிவிப்பு வந்தால் அதை அப்படியே செயல்படுத்துமா கட்சி" என்று மாங்காய், தேங்காய் மடையர்கள் கேட்க வாய்ப்புண்டு. ஆண்டாண்டு காலமாக கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கை காட்டும் நபரை மட்டுமே தலைவராக தேர்ந்து எடுக்கும் ஜனநாயக நாகரீகம் தெரிந்த கழகத்தை பார்த்து சில அரை ட்ரவுசர்கள் அப்படித்தான் பேசும். யூ கண்டினியூ அண்ணே.

                                                           


"டெ'ஷோ' மாநாட்டிற்கு போற எங்க ஆளுங்க முகத்த பாருய்யா. போராட்டம்னு சொன்னா பொண்ணு பாக்க போற மாதிரி குஷியா போற ஒரே கோஷ்டி அது எங்க கோஷ்டிதான்" என்று சில வாரங்களுக்கு முன்பு புளகாங்கிதம் அடைந்தார் எங்கள் அண்ணா. 

ஆனால் அது பொறுக்காத சில புல்லுருவிகள் "அது கெடக்குது ஒருபக்கம். 200 பெரிய தலைங்க. குறிப்பா 40+ கட்சி தலைவர்களை கூப்பிட்டும் வெறும் 7 கட்சி தலைவர்கள்தான் டெல்லி மாநாட்டுக்கு வந்தாங்களாமே" என்று கொக்கரித்த கொடுமையை கண்டுதான் ஏப்ரல் மாதத்தில் கூட மழை அடிக்காமல் வெயில் பல்லைக்காட்டிக்கொண்டு அடிக்கிறது. எகத்தாளம் பேசுனவனை எல்லாம்  தூக்கி வெயில்ல போட. #$@^&&*".      

தலைவர் ரெஸ்ட் எடுக்கிற கேப்பை(GAP..வேற மீனிங் இல்லீங்ணா) யூஸ் பண்ணிக்கிட்டு "அசந்தா ஜோக் அடிக்கறது தலைவர் பாலிசி. அசராம ஜோக் அடிக்கறது இந்த அபி அப்பா பாலிசி"ன்னு பின்றீங்கோ போங்கோ. என்னதான் மாங்கு மாங்குன்னு பதிவு எழுதுனாலும் கட்சில இருக்குற (மாதிரி) பரபரப்பை க்ரியேட் பண்ணி இணையத்துல வலம் வர்ற சுகமே தனிதான். 'நட்ட நடு சென்டர் எஸ்கலேட்டர் முன்னணி சார்பா நாளைக்கி ஒரு போராட்டத்துல கலந்துக்க போறேன். அதுக்கு ஒரே ஒரு உதவி மட்டும் பண்ணீங்கன்னா உங்க புகழ ஊர் முழுக்க தமுக்கு அடிச்சி பரப்பிடுவேண்ணே....

அது வந்து....வந்து...

நீங்க ஆவேசமா போராட்டத்துல ஈடுபடும்போது வளச்சி வளச்சி போட்டோ எடுக்கறாரே அவரோட வெலாசம்....வெலாசம்!!
.............................................................................

அபி அப்பாவின் தீவிர ரசிகர் ஆரூர் முனா செந்தில் அவர்கள் மெகா சைஸ் ஊசியை எனக்கு பின்னால் சொருக உசேன் போல்ட் வேகத்தில் ஓடிவருவது வன்முறையின் உச்சம். மஞ்சள் துண்டை தலையில் போட்டு ஓடியவாறே இதை அறிவிக்கிறேன் ஆன்றோர் பெருமக்களே.

.........................
Posted by:
!சிவகுமார்! 
........................
  

11 comments:

என் ராஜபாட்டை : ராஜா said...

இவரது அரசியல் சாராத பதிவுகள் அருமையாக இருக்கும் .

என் ராஜபாட்டை : ராஜா said...

இவர் தலைமையை விமர்சிபவர்களை இவர் திட்டும் வார்த்தைகள் ரொம்ப ஓவராக இருக்கும் .

! சிவகுமார் ! said...

//என் ராஜபாட்டை : ராஜா said...
இவர் தலைமையை விமர்சிபவர்களை இவர் திட்டும் வார்த்தைகள் ரொம்ப ஓவராக இருக்கும் .//

பசங்க ரீமேக்:

பக்கடா: "அண்ணன் கோவக்காரர்டா. இப்ப பயங்கரமா வைவார் பாரேன். கீழ கிழிச்சி போட்ட 10 ரூபாயை எடுப்பாருன்னு பாக்கறியே. மாட்டாரு. அதுதான் அவரோட கெத்தே"

புதுகை.அப்துல்லா said...

என் டேர்ம் எப்பய்யா? கொஞ்சம் பார்த்து அடிங்க :)

பட்டிகாட்டான் Jey said...

atraa sakkai ... atraa sakkai ... atraa sakkai ... :-)))

ஆரூர் மூனா செந்தில் said...

தலைவருக்கு புளியங்கொட்டைனு கூட ஒரு பெயர் இருக்குல.

வவ்வால் said...

hi..hi good comedy!

பால கணேஷ் said...

ஹா... ஹா.... சூப்பரு!

ஆரூர் மூனா செந்தில் said...

மஞ்சள் துண்டு என்பது அடையாளத்துக்காகவா இல்லை வாஸ்துவுக்காகவா சிவா

மாதேவி said...

:)))

வேடந்தாங்கல் - கருண் said...

சிவா? மஞ்சள் துண்டின் மகிமை என்னவோ?