Thursday, September 5, 2013

கர்மவீரர் கவிதை வீதியார் அவர்களுக்கு
                                                                        

பொறுப்பு மிக்க பள்ளி ஆசிரியர் கவிதை வீதி சௌந்தர் அவர்களுக்கு முதலில் ஆசிரியர் தின வாழ்த்துகள் சொல்லி கும்புடறோம் சாமி. 'அதுக்கு அந்த நடிகை தயாரா?' 'இந்த நடிகை அந்த குழந்தைக்கு தாயாரா?' என்று தங்களைப்போல் அதி அற்புத தலைப்புகள் வைத்து வாசகர்களை இழுக்கும் வசியக்கலை தெரியாத முட்டாள் பதிவர்களின் மடல் இது. 

ஒரு சில உருப்படியான ஆலோசனைகள்/குறைகள் கூறி இருந்தால் இந்த மடலுக்கு அவசியமே ஏற்பட்டிருக்காது. ஆனால் பொறுப்புள்ள ஆசிரியர் மற்றும் ஊர்க்காவல் அதிகாரியான நீங்கள் மானாவாரியாக அள்ளிவிட்ட பல்வேறு மொக்கை காரணங்களுக்கு பதில் சொல்ல வேண்டி இருக்கிறது. உங்கள் அதிரடி கேள்விகளுக்கு எங்களால் ஆன பதில்கள்:

உங்கள் பதிவின்(http://kavithaiveedhi.blogspot.com/2013/09/blog-post_4.html) முதல் பேராவில் தேன் தடவிய சம்பிரதாய வார்த்தைகள் போடாமல் எடுத்த உடனே கிழித்து இருக்கலாம். இன்னும் பழங்கால ட்ரங்க் பெட்டியாகவே இருக்கிறீர்கள்.
/உண்மையில் இந்த பதிவர் சந்திப்பு வெற்றிப்பெற்றதா என்று ஒவ்வொறு பதிவரும் யோசிக்க வேண்டும்./

வெற்றிப்பெற்றதா, ஒவ்வொறு.... தயவு செய்து இனியாவது குறைந்தது 10 பிழைகள் இன்றி  பதிவெழுதுவது என ஆசிரியர் தினத்தில் உறுதி எடுத்து கொ'ல்'க. பதிவர் சந்திப்பின் வெற்றி என்பதற்கு எது அளவுகோல் என்று சொல்லித்தொலைத்தால் புண்ணியம். ஒருவேளை எண்ணிக்கை என்று தெரிந்திருப்பின் சென்னை பதிவர்கள் குடும்பத்தாரை அழைத்து வந்து மாஸ் காட்டி இருப்போம். 50 பேர் வந்தாலும் அதில் 70% மேற்பட்டோர் வலைப்பதிவர்கள் என்றாலே அது வெற்றிதான் என்கிறது எங்கள் சிற்றறிவு.


/இந்த பதிவர் சந்திப்பு என்னை போன்று நிறைய பதிவர்களின் மனதை கவரவில்லை என்றே சொல்ல வேண்டும்/

'நிறைய' என்றால் 50 பேரா அல்லது 100 பேரா வாத்யாரே? அவர்கள் அனைவரும் தங்களிடம் தனிப்பட்ட முறையில் இதை சொன்னார்களா? ஆதாரம் உள்ளதா? 

/இந்த அரங்கம் பிரதான சாலையில் இருந்தாலும் உள் அரங்கம் அனைவரையும் அனைவரும் பார்த்துக்கொள்ளகூடிய வகையில் இல்லை... இதுப்போன்ற அரங்கம் மேடையில் இருப்பவர்களை பார்க்கும் வகையில் மாத்திரமே வடிவமைக்கப்பட்டிருக்கிறது. உடன் இருப்பவர்கள் யார் என்று தெரியாத பட்சத்தில் இந்த அரங்கம் சரி ஆனால் அனைவரும் பார்த்துக்கொள்ள இது வசதியாக இல்லை./

சென்னைக்கு அருகில் இருப்பதால் பலமுறை கலந்தாலோசனைக்கு வரவும் என்று நண்பர் ஆரூர் முனா சொல்லியும் நீங்கள் எட்டிப்பார்க்கவில்லை. கடிதம்/தொலைபேசி மூலம் கூட ஆலோசனை சொல்ல முடியாத அளவிற்கு சார் ரொம்ப பிசிங்களா?
                                                                      


 /இந்த பதிவர் சந்திப்பை ஏற்பாடு செய்திருந்த அனைத்து பதிவர்களும் அரங்கினுள் அவ்வப்போது மாத்திரமே தலைக்காட்டினார்கள். முக்கியமான நிறைய பதிவர்கள் அரங்கிற்கு வெளியேவும், வரண்டாவிலுமே இருந்தார்கள். இவர்கள் விழா அரங்கினுள் முழுமனதாக இருந்ததுபோல் தெரியவில்லை. பெரும்பாலான சென்னைபதிவர்கள் இருக்கைகளில் அமைந்து இருக்க வில்லை.  இவர்களை அரங்கினுள் இருந்து வெளியே வந்தால்தான் பார்க்க முடிந்தது. இதுவே அவர்களின் ஈடுபாட்டை அப்பட்டமாக காட்டியது./

அடேங்கப்பா!!! வெளியில் இருந்து வருவோரை வரவேற்றல், அரங்கிற்கு வழி சொல்லுதல், மதிய உணவு ஏற்பாடு உள்ளிட்ட வேலைகளை செய்யாமல் அரங்கினுள் விழாக்குழுவினர் இருந்தால் அதற்கும் ஒரு பதிவு போட்டு ஹிட்ஸ் அடிப்பீர்கள். வட போச்சே!!

/மேலும் பதிவர்கள் அறிமுக நிகழ்வு ஏதோ சம்பரதாயம் போல் தான் தோன்றியது. புதுமுக மற்றும் வெளியில் வந்த பதிவர்களை முதன்மை படுத்தவில்லை என்றே தோன்றுகிறது. அப்படி அறிமுகப்படுத்திக்கொள்பவர்களை யாரும் கவனித்ததுபோலும் தெரியவில்லை/

பதிவர் அறிமுகம் வேறு எப்படி இருக்க வேண்டும் சாமி??????? 

/பதிவர்களின் தனித்திறமையை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்வுகள் இருக்கிறது என்று பல்வேறுபதிவுகளில் வெளிப்படுத்திய விழாக்குழுவினர்கள் விழா நாளன்று மிகவும் சிறப்பாக செய்வார்கள் என்று எதிர்பார்த்தால் அதுபோல ஏதும் இல்லை என்பது போல் சப்பென்று முடிந்துவிட்டது. கடைசியில் மிகுந்த ஏமாற்றத்துடன் திரும்பவேண்டியதாயிற்று/

அங்கு நடந்த கவிதை வாசிப்பு, பாடல் போன்றவற்றை எல்லாம் தனித்திறன் இல்லை என்ற ஆலமரத்தடி சித்தர் சொன்னாரோ? விருப்பம்/நேரம் இல்லாத பதிவர்களை கட்டாயப்படுத்தி தனித்திறன் காட்ட சொல்ல இது என்ன பள்ளியா வாத்யாரே?

/சிறப்பு அழைப்பாளர் திரு பாமரன் அவர்கள் சிறப்பாக தன் அனுபவங்களை பகிர்ந்துக்கொண்டார் ஆனால் அவருக்கும் சரியான நேரம் ஏற்படுத்தி தரவில்லை. /

ஐயா உசிதமணி. பாமரன் அரங்க வாசலுக்கு வந்தபோது நேரம் மதியம் 12.05 மணி. மேடைக்கு பின்புறம் அவர் சில நண்பர்களிடம் பேசிய பிறகு மைக் பிடிக்க 12.16 ஆனது. அவருக்கு பேச ஏற்பாடு செய்த நேரம் 12-1 மணி. இதில் ஏற்பாட்டாளர்கள் மீது என்ன தவறு? டாண் என்று 12 மணிக்கு பேச வேண்டுமென்று மிரட்ட சொல்கிறீர்களா? கொடுமை.

/சிறப்பு விருந்தினரை மாலை நேரத்தில் பயன்படுத்திக்‌கொண்டிருந்தால் பதிவர்களும் இருந்திருப்பார்கள். சிறப்பு விருந்தினரும் தன்னுடைய கருத்தை விரிவாக ‌வெளிப்படுத்தியிருப்பார்./ 


சென்னைக்கு அருகில் இருப்பதால் பலமுறை கலந்தாலோசனைக்கு வரவும் என்று நண்பர் ஆரூர் முனா சொல்லியும் நீங்கள் எட்டிப்பார்க்கவில்லை. கடிதம்/தொலைபேசி மூலம் கூட ஆலோசனை சொல்ல முடியாத அளவிற்கு சார் ரொம்ப பிசிங்களா?
                                                                          

 
/உணவு விஷயத்தில் எந்த குறையும் சொல்லமுடியாத அளவுக்கு இருந்தது. சென்ற பதிவர்சந்திப்பு போல் அமரவைத்து பரிமாறியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். இடம் அதற்கு வதியாக இல்லை./

அந்தக்குறையை போக்கி இருக்கலாம். ஆனால் அவ்விடத்தில் மூத்த/பெண் பதிவர்கள் அமர்வதற்கு உணவு பரிமாறும் இடத்தின் அருகில் சேர்களை போட்டிருந்தோம். ஐயா பார்க்கவில்லை போல. 

/சென்ற பதிவர் சந்திப்பில் தனக்கு பிடித்த பதிவர்களுடன் அனைவரும் புகைப்படம் எடுத்த வண்ணம் இருந்தனர் ஆனால் இந்த சந்திப்பில் யாரும் யாருடனும் அதிகமாக புகைப்படம் எடுத்துக்கொண்டதுபோல் தெரியவில்லை/

இதென்னடா கொடுமை நாராயணா? படமெடுப்பது பதிவர்களின் விருப்பம். ஸ்ஸ்....நெக்ஸ்டு......

/தனித்திறன்  போட்டியில் அந்த நாடகம் இந்த நாடகம், பதிவர்களை கலாய்ப்போம் தவறாக எண்ணக்கூடாது என்றெல்லாம் அலம்பல் செய்திருந்தார்கள்... அவர்கள் யாரையும் அங்கு காணவில்லை./

திண்டுக்கல் தனபாலன் மற்றும் சென்னை பதிவர்கள் நாடகம் போட முடிவு செய்திருந்தோம். ஆனால் வேலைப்பளுவின் காரணமாக நிகழ்வு நடைபெறவில்லை. மற்றபடி பாடல், கவிதை நிகழ்ச்சிகள் நடந்ததே.. அப்போது 'அந்த தலைவருக்கு இந்த இடத்தில் கட்டியா?' என்று பதிவு போட போய் விட்டீர்களா நல்லவரே?
 
/மயிலன் நல்லதொரு கவிதையை வாசித்தார் அதை கைத்தட்டி ரசிக்ககூட ஆளில்லை.... என்பேர் பிரம்மன் என்ற தலைப்பில் வந்த நான் அரங்க சூழ்நிலையை கருத்தில் கொண்டு கவிதை வாசிப்பதை தவிர்த்து விட்டேன்....  (அந்த கவிதை கண்டிப்பாக பதிவாக வரும்)/

யப்பா....மீண்டும் கொசுத்தொல்லை. இதைப்பற்றி மயிலனே கவலைப்படாத போது உங்களுக்கு என்ன பிரச்சனை? இனி பதிவர் சந்திப்புகளில் கை தட்ட சொல்லி மிரட்ட வேண்டும் என்கிறீர்களா? கைதட்டல் கிடைக்காது என்பதற்காக நீங்கள் கவிதை வாசிக்கவில்லை என்பது மொக்கையான காரணம். 
                                                                     


/நிகழ்ச்சிகள் மாலை 6.00 மணிக்கு முடியும் என இருந்தது ஆனால் பெரும்பாலான பதிவர்கள் மதிய உணவுக்கு பிறகு கிளம்ப ஆரம்பித்துவிட்டார்கள்/

தங்கள் பதிவிலேயே கேவலமான பொய் இதுதான். நூற்றுக்கும் மேற்பட்ட பதிவர்களில் 'பெரும்பாலும்' என்றால் குறைந்தது 70 பேரென்று வைத்து கொள்வோம். 70 பேரும் மதிய உணவிற்கு பிறகு கிளம்பிவிட்டனர் என்று  அப்பட்டமான பொய் தகவலை தந்துள்ளீர்கள். ஹிட்ஸ், ஓட்டு வாங்க சில பதிவர்கள் எந்த தரத்திற்கும் தாழ்ந்து போவார்கள் என்பதற்கு இதுவே சாட்சி.

/(நான் சரியாக 4.45 மணிக்கு கிளம்பினேன்). மாலை நிகழ்வு ஒன்றுமில்லை என்ன இருக்கிறது என்று கூடதெரியவில்லை./

யூகத்தின் அடிப்படையில் என்ன விளக்கெண்ணைக்கு இந்த வார்த்தைகள். கெரகம்.


/மேடையை ஒரு சில சென்னைப்பதிவர்கள் மாத்திரமே ஆக்கிரமித்தார்கள். பிரபல பதிவர்கள் என்ற போர்வையில் இவர்களே முன்னிலைப்படுத்தப்படுவது வளரும் பதிவர்களுக்கு ஆரோக்கியமானதாக தெரியவில்லை/

வாங்க. இதற்குத்தான் காத்திருந்தோம். அருமை. அருமை. வெளியூர் பதிவர்கள்/பேச்சாளர்கள் பங்களிப்பு இருக்க வேண்டுமென்பதில் இம்முறை நடந்த பதிவர் சந்திப்பை விட சரியான உதாரணம் சொல்லி விட முடியாது என்பதை நினைவில் கொள்க அண்ணாத்தை.

சென்றமுறை சங்கவி, சிபி போன்றோரையும் மேடையேற்றினோம். இம்முறை கோவையின் இரு பெண் பதிவர்கள் நிகழ்ச்சி தொகுத்ததை பார்த்தீர்களா? இல்லையா வாத்யாரே? சிறப்பு விருந்தினர்களில் கூட பாமரன், வாமு கோமு, கண்மணி குணசேகரன் என வெளியூர் நபர்களைத்தான் அழைத்திருந்தோம். 

வெளியூர் விழாதானே என்று எண்ணாமல் நட்புக்கரம் நீட்டி உதவிய அன்பு நெஞ்சங்கள்  கோவை ஜீவா, வீடு சுரேஷ், சங்கவி, ராஜி அக்கா, திண்டுக்கல் தனபாலன்(சிலரது பெயர் விடுபட்டிருப்பின் மன்னிக்க) மற்றும் ஊக்கம் தந்த ஒவ்வொரு வெளியூர்/வெளிநாட்டு பதிவர்கள் அனைவருக்கும் நன்றிகள் பலமுறை.

/நிகழ்ச்சிகளை தொகுக்க நாள் முழுவதும் ஒருவரே எனும் போது பல்வேறு பதிவர்களிடையே கொஞ்சம் சலிப்பை ஏற்படுத்தியது./

யாருக்கு சலிப்பை ஏற்படுத்தியது என்பதை சபீனா போட்டு விளக்கவும். 

/அது தவிர்த்த பிற நேரங்களில் அமைதியில்லை. மேலும் பதிவர் அறிமுகப்படுத்திக்கொள்ளும்போது அரங்கம் காலியாகவே இருந்தது/

காலியாக என்றால்? 5 அல்லது 10 பேர்தான் இருந்தார்களா? அப்படியே இருந்தாலும் அதில் என்ன குறை என்று சொல்லவும். பதிவர் சந்திப்பின் அடிப்படை நோக்கமே பல்வேறு இடங்களில் இருந்து வரும் பதிவர்களை சந்திக்க வைப்பது என்பதுதான். தங்களுக்கு விருப்பப்பட்ட நண்பர்களுடன் பதிவர்கள் தனியே உரையாடினால் உங்களுக்கு என்ன பிரச்சனை????????

/இக்கருத்துக்களை ஒருதலைப்பட்சமாக பாராமல் நடுநிலையோடு சொல்லுங்கள்.... இந்த பதிவர் சந்திப்பு வெற்றி அடைந்ததாஎன்ற...?/

பதிவர் சந்திப்பின் வெற்றி என்பதற்கு எது அளவுகோல் என்று சொல்லித்தொலைத்தால் புண்ணியம். 
  

வாத்யாரே,

2011 இல் மெட்ராஸ் பவன் பதிவை தெளிவாக மீண்டும் படிக்க. அதில் எந்த இடத்தில் உங்களுக்கு பிரச்சனை என்று கோடிட்டு காட்டுக. பிறகு வாதிடலாம். உங்கள் பாணியில் பொத்தாம் பொதுவாக 'அதில் இது சரியில்லை' 'இதில் அது எது?' என்று எழுதும் திறனை ஆண்டவன் எமக்கு அளிக்கவில்லை.

உங்கள் மேலான கவனத்திற்கு,

2011 அன்று நான் எழுதிய பதிவு குறித்து....

விழா நடந்தபோது மதியமே தோழர் சங்கவியிடம் இதுகுறித்து பேசி இருந்தேன். அவரும் சரி இனி இக்குறைகளை சரி செய்து விடலாம் என்று கூறினார். அதுபோக இதுகுறித்து தங்கள் தளத்தில் எழுதினாலும் ஆட்சேபனை இல்லை என்றார். அதன் பின்பே அப்பதிவு வெளியானது. குறைந்தபட்ச நாகரீகம் எமக்கு உண்டு. நம்பிக்கை இல்லையெனில் அவரிடமே போன் போட்டு கேட்டுப்பாருங்கள்.
                                                                   மறுக்கா கும்புடறோம் சாமி!!!!!

  

24 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

பாவம்... வழக்கம் போல அல்ப தலைப்பு வைத்து ஏதேனும் சொல்லலாம் என்று பதிவு போட்டு விட்டார்... மன்னிப்போம்... அவரது நண்பர் உட்பட....

அவரது நண்பர் யார்....? அதுவும் ஒரு நாளைக்கு 3/4 பதிவு போடும் த.ம. தீவிரவாதி... நண்பர்கள் பின்னூட்டத்தில் சொல்லவும்...

என் ராஜபாட்டை : ராஜா said...

10
பேரை ஒன்னா சேர்த்தாலே அங்கே நம்மை அறியா
சில குறைகள் வரலாம்.அங்க குறை சொல்ல
இருவர் இருப்பார்கள்.
குறையை பற்றி கவலைபடாமல் நம் அடுத்த
அடியை எடுத்து வைப்போம்.
குறையை எங்களிடமும்
நிறையை வெளியிலும் சொல்லுங்கள்
இது வியபார நிருவனத்திர்க்கு மட்டுமல்ல
பதிவர்களுக்கும் தான். ஊரு இரண்டுபட்டால்
கூத்தாடிக்கு கொண்டாடம் என்ற
நிலை வந்துவிட கூடாது.

என் ராஜபாட்டை : ராஜா said...

சனிகிழமை காலையே வந்தவன் என்ற முறையில் சொல்கிறேன் விழா ஏற்ப்பாடுகள் பிரமாதம். என் கண்ணில் எந்த குறையும் படவில்லை.

சப்பிப்போட்ட மாங்கொட்டை said...

ஸ்டார்ட் மூஜிக்

ஆத்மா said...

சென்னைக்கு அருகில் இருப்பதால் பலமுறை கலந்தாலோசனைக்கு வரவும் என்று நண்பர் ஆரூர் முனா சொல்லியும் நீங்கள் எட்டிப்பார்க்கவில்லை. கடிதம்/தொலைபேசி மூலம் கூட ஆலோசனை சொல்ல முடியாத அளவிற்கு சார் ரொம்ப பிசிங்களா?
///////////////////////////////

இதுவே போதும் ..... ஐயாவை மன்னிச்ச்ச்சூஊஊஊஊஊஊஊஊஊஊ

சப்பிப்போட்ட மாங்கொட்டை said...//பாவம்... வழக்கம் போல அல்ப தலைப்பு வைத்து ஏதேனும் சொல்லலாம் என்று பதிவு போட்டு விட்டார்... மன்னிப்போம்... அவரது நண்பர் உட்பட....//


மிஸ்டர் தண்டுக்கல் தினபாலன்...ச்சே திண்டுக்கல் தனபாலன்... அவரோட ஒவ்வொரு பதிவுக்கும் முதல் ஆளா போயி சூப்பர்,அருமை ,பிரமாதம் என கமெண்டு போட்டுட்டு ippo அல்ப தலைப்பு னு சொல்றது எவ்வளவு அல்பமா இருக்கு... வெரி பேடு யுவர் ஆனர்...

//அவரது நண்பர் யார்....? அதுவும் ஒரு நாளைக்கு 3/4 பதிவு போடும் த.ம. தீவிரவாதி... நண்பர்கள் பின்னூட்டத்தில் சொல்லவும்...//

இதுக்கு எதுக்குங்க பின்னூட்டம்....? ஊரே சொல்லுமே... இது சிபி தனமா இல்ல ச்சே...கப்பித்தனமா இல்ல...

வேடந்தாங்கல் - கருண் said...
This comment has been removed by the author.
வேடந்தாங்கல் - கருண் said...
This comment has been removed by the author.
வேடந்தாங்கல் - கருண் said...

என்னால் பதிவர் சந்திப்பில் கலந்துகொள்ள முடியவில்லை. விழா சிறப்பாக நடந்ததாக நண்பர்கள் மூலம் அறிந்தேன். சௌந்தர் எதனால் அப்படி எழுதினார் என கேட்டால் நான் குறைகளை சுட்டிகாட்டினேன் அவ்வளவுதான் என்றார். இதை அவர் தனிப்பட்ட முறையில் விழாக்குழுவினர் இடம் சொல்லி இருக்கலாம். ஏனெனில் இப்படிப்பட்ட ஒரு விழாவை நடத்துவது சுலபமல்ல. விழா குழுவினர் அனைவரும் பல இன்னல்களை சந்தித்து இருப்பார்கள். தம்முடைய பொன்னான நேரங்களை செலவழித்து இருப்பார்கள். அப்படி இந்த விழாவிற்காக உழைத்த அனைத்து நட்புகளுக்கு பாராட்டுகள்.

திண்டுக்கல் தனபாலன் said...

சப்பிப்போட்ட மாங்கொட்டை : சௌந்தர் எனக்கு நெருங்கிய நண்பர்... எங்களுக்கு என்ன வேண்டுமானாலும் இருக்கும்... நடக்கும்...

கொட்டை... நீங்க யாருங்க....?

MANO நாஞ்சில் மனோ said...

கடல் கடந்து ஜீவிக்கும் என்னையும் மதித்து ஸ்பீக்கர் போனில் பேச செய்து ஊக்குவித்த நண்பர்களை எப்பிடிய்யா குறை கூற மனசு வந்தது ?

எந்த பதிவிலும் யாரும் எனக்கு தெரிந்து எந்த குறையும் சொல்ல [[எழுத]] வில்லை.

அவர்கள் உழைப்புக்கு நாஞ்சில்மனோ"வின் ராயல் சல்யூட்......

மறப்போம் மன்னிப்போம் மக்கா, விரல்கள் எல்லாம் ஒரேபோல் இருக்காது இல்லையா....!

s suresh said...

எவ்வளவுதான் சிறப்பாக ஏற்பாடுகள் செய்தாலும் சிலருக்கு குறைகள்தான் பெரிதாக தெரியும்!நம்மிடையே ஒற்றுமை தேவை! குறைகளை பாராட்டாமல் நிறைகளை பார்ப்போம்!விழா சிறப்பாக இருந்தது! வாழ்த்துக்கள்!

சப்பிப்போட்ட மாங்கொட்டை said...


என்னய்யா ஒரு பரபரப்பையே காணோம். வெரி பேடு

சப்பிப்போட்ட மாங்கொட்டை said...


//சப்பிப்போட்ட மாங்கொட்டை : சௌந்தர் எனக்கு நெருங்கிய நண்பர்... எங்களுக்கு என்ன வேண்டுமானாலும் இருக்கும்... நடக்கும்...

கொட்டை... நீங்க யாருங்க....?//

ஐ..ஐ... அப்படினா அவரை போன் பண்ணி திட்டிட்டு விட்டுருக்கனும்.... பொதுவெளியில் கமெண்டு போட்டால் அப்படித்தான் கேட்போம்... ஆமா அவரு பதிவுக்கு தொடர்ந்து ஓட்டு போட்டது நீங்கதான...

Manimaran said...


இது ஒரு கல்யாணமோ காதுகுத்தாவோ இருந்தா சாப்பாட்டு சூப்பர்,வரவேற்பு அருமைனு சொல்லிட்டு போயிடலாம். இது பதிவர் சந்திப்பு. எல்லோருமே பதிவர்கள். எல்லோருமே எழுத்தாளர்கள்.எல்லோரையும் ஒரே அலைவரிசையில் இணைப்பது கொஞ்சம் சிரமம்தான். பதிவர் திருவிழா என்பது சொந்த விசேசம் மாதிரி. சிறு தவறுகள் இருந்தா அந்த தவறில் நமக்கும் பங்கு இருக்கு என்று உணரவேண்டும். அதற்காக பொத்தாம் பொதுவாக பதிவு போட்டு பதிவர் சந்திப்பையே அவர் கேவலப்படுத்தியிருக்கக் கூடாது.

எல்லாம் ஹிட்ஸ் படுத்தும் பாடு..!!

தமிழ்சேட்டுபையன் said...

குறை சொல்வது அவர் உரிமை விழாக்குழுவில் இடம் பெற்றவர்கள் அதற்கு பதிலளிக்க வேண்டும். இப்படி எகத்தாளம் பேசுவது சரியில்லை.
பிறகு குறையை எப்படி அறிந்து கொள்வீர்கள்?

தமிழ்சேட்டுபையன் said...

த.ம. -1

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இப்படியே ஆளாளுக்கு பேசிக்கிட்டு இருந்தா எப்படி, சட்டுபுட்டுன்னு முடிச்சு வைங்கப்பா......

வீடு சுரேஸ்குமார் said...

அண்ணன் கர்மவீரர் அடுத்த கபிகாப்பிகுமார் ஆக முயற்சி பண்ணிட்டு இருக்காரு...!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அப்படின்னா மணத்துல இருந்து தூக்கிடுவாங்கன்னு சொல்றீங்க....?

T.N.MURALIDHARAN said...

பதிவர் சந்திப்பு சிறப்பாக நடந்தது என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.
நேரம் காலம் பாராமல் உழைத்தவர்களுக்கு பாராட்டுக்கள். அவர்கள் தங்களது வீட்டு விழாக்களுக்குக் கூட இந்த அளவு சிரமப் பட்டிருக்க மாட்டார்கள்.

bandhu said...

பதிவெழுதுவது பொதுவாக ஆத்மா திருப்தியை தவிர வேறு எதுவும் தராது. பக்கத்து வீட்டுக்காரர்கள் கூட பேசத்தயங்கும் இவ்வுலகில் இந்த அளவு ஒரு விழாவாக எடுத்து எல்லோரையும் நேருக்கு நேர் சந்திக்க வைத்ததற்கு உங்கள் எல்லோருக்கும் பெரிய நன்றி. பண செலவு முதல் நேர செலவு வரை அனைத்தையும் செய்த உங்கள் முயற்ச்சியில் குறை காண்பது எந்த விதத்திலும் சரியில்லை. யாரும் யாருக்கும் எதுவும் செய்யவேண்டும் என்பது கிடையாது. அப்படி இருக்கும்போது, இந்த அளவு நீங்கள் எல்லோரும் செய்ததே பெரிய விஷயம். இதில் குறை காண்பது தவறு என நினைக்கிறேன். வாழ்த்துக்கள்.

Ramani S said...

வேடந்தாங்கல் கருண் அவர்களின் கருத்தே
என் கருத்தும்.
சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த
விழாக்குழுவினருக்கு
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

மோகன் குமார் said...

சௌந்தர் பதிவு - அதிலுள்ள பின்னூட்டங்கள் மற்றும் இப்பதிவு இன்று வாசித்தேன்

சௌந்தர் - குறை சொல்வதில் தவறில்லை - நிறைகளை சொல்லிவிட்டு சில குறைகளை சொல்லியிருக்கலாம் ஆனால் குறைகளை மட்டுமே சொல்லியது .............................

அவர் கூறியவற்றில் விழா அரங்கம் இன்னும் நன்றாக தேர்ந்தெடுத்திருக்கலாம் மற்றும் லைவ் ரிலேயில் ஆடியோ கேட்கும்படி இருந்திருக்கலாம் என்ற இரு குறைகள் தவிர மற்ற எதுவுமே பெரிய விஷயம் அல்ல !

பதிவுலகில் உள்ள பல்வேறு குழுக்களிடமும் நட்புடன் பழுகுபவன் என்ற முறையில் - சொல்கிறேன் - பதிவர் சந்திப்பை நடத்தும் இக்குழுவிடம் உள்ள உழைப்பும், நேர்மையான வெளிப்படையான அணுகுமுறையும், ஒவ்வொரு பதிவரையும் அன்புடன் வரவேற்று அவர்களை உபசரிக்கும் பாங்கும் - சான்சே இல்லை ! இப்படி உழைப்பவர்கள் மீது - மளிகை கடை லிஸ்ட் போல குறை சொல்லும்போது - வலிக்கத்தான் செய்யும்

சென்ற முறை நடந்த விழாவிற்கு வராத, சிறு வருத்தித்தில் இருந்த எத்தனையோ பதிவர்கள் இம்முறை வந்ததுடன் - விழா பற்றி பெரிதாய் எந்த குறை சொல்லாததையும் நாம் கவனிக்க வேண்டும்


இவ்வளவு பெரிய விழா நடந்தால் - நிச்சயம் 2-3 குறைகள் வரத்தான் செய்யும் ; அவை தான் அரங்க தேர்வும், ஆடியோ பிரச்னையும். நிச்சயம் அடுத்த முறை இந்த தவறுகள் இல்லாதபடி விழாக்குழு பார்த்து கொள்ளும் ; ஆனால் அப்போதும் புதுசாய் சிறு சிறு குறைகள் இருக்கும் - அதனை பற்றி நிச்சயம் சௌந்தர் எழுத மாட்டார்; வேறு ஒரு நபர் புதிதாய் கிளம்பி வரக்கூடும் !

" If you want to avoid Criticism, do nothing, say nothing; Be nothing".