Showing posts with label நகைச்சுவை. Show all posts
Showing posts with label நகைச்சுவை. Show all posts

Wednesday, August 31, 2016

இரண்டு மருத்துவர்களும் ஒரு செங்கல் சைக்கோவும் ! - கழுகார்

பாரதிக்கு கண்ணம்மா... நீயெனக்கு உயிரம்மா... பழைய விஜய்ண்ணாவைப் போல தலையை ஆட்டியபடி உள்ளே நுழைந்தார் கழுகார்.


என்ன கழுகாரே ஆளையே பார்க்க முடியவில்லை என்றோம்.

பறவையோட குணமே பறக்குறதுதான்... அதை பறக்க விடுங்கம்மா.. என்றபடி ஏற்கனவே யோசித்து வைத்திருந்த டயலாக்கை பேசிவிட்ட பெருமையில் மிளிர்ந்தார்.

சரி சரி விஷயத்துக்கு வாங்க... என்றோம்.

மாசக்கடைசி. கோஹிபா கட்டுப்படியாகவில்லை. சாக்லேட் ஃப்ளேவர்ட் சிகார் ஒன்றை பற்ற வைத்தபடி தொடங்கினார் கழுகார்.

ஒரு முன்னாள் பதிவர்... என்றபடி இழுத்தார்.

பதிவருன்னாலே முன்னாள் தானே... மொக்கை போடாம விஷயத்துக்கு வா கழுகே... செல்லமாக கண்டித்தோம்.

மனுஷனுக்கு ஏழு கழுத வயசாகியும் காதல் பிசாசு பிடிச்சு ஆட்டிண்டிருக்கு...

ஏன் வயசானா காதல் வரக்கூடாதா ஓய்...

தாராளமா வரலாம்... ஆனால் மனுஷன் செய்யுற வால்த்தனத்துக்கு ஒரு அளவில்லையோ... ஆ ஊன்னா தண்ணியப்போட்டு சலம்புனா எப்படி ? அதுவும் ஃபேஸ்புக்கில்...

அதுகூட பரவாயில்லை... அவருடைய காதலி என்று ஒரு கேரக்டர் வருதில்லையா... அதுவே ஒரு புனைவாம்...

ஆஹான் என்றோம் கோரஸாக...

பழைய நிஜக்காதலியின் பொறாமைத்தீயை கிளறி மீண்டும் இன்பமாய் குளிர் காய்வதே அய்யாவின் திட்டமாம்...

ஓஹோ

அது மட்டுமில்லை... கருப்பன் குசும்புக்காரன் சைடுல மீன்குழம்புக்கும் ஆசைப்படுறானாம்... அது நெத்திலியா இருந்தா பரவாயில்லை திமிங்கலமாச்சே...  தூண்டில்ல சிக்குமா...?

போதும் நிறுத்தும்... புதிய செய்தியை கொண்டுவரச் சொன்னால் இறந்து புதைத்த செய்தியை கொண்டு வருகிறீர்களே... இதான் உங்க டக்கா...? என்று எக்காளமிட்டோம்.

கழுகாரின் முகம் வாடியது.. நீண்ட இழுப்பு ஒன்று இழுத்தார்... சிகார் முனையில் கங்கு மிளிர்ந்தது...

குறும்படம் எடுக்கக் கிளம்பிய நம் பதிவுலக மணிரத்னங்களின் கதை தெரியுமா...?

ஓ... அது ரொம்ப பழைய கதையாச்சே...

இல்லை... இது புதுக்கதை... சாக்லெட் புகை அறையெங்கும் படர்ந்தது.

யாருக்கும் பயப்படாத அந்த பதிவர், ஒரு பயங்கரமான ஸ்க்ரிப்ட் வைத்திருக்கிறாராம்... பதிவுலகில் லந்து பண்ணிக்கொண்டிருக்கும் இரண்டு மருத்துவர்களையும் ஒரு சைக்கோவையும் மனதில் வைத்து அந்தக்கதையை புனைந்திருப்பதாக அவரே சொல்கிறார்...

இரண்டு மருத்துவர்கள் என்றால் அவங்க ரெண்டு பேர்தானே என்றோம் ஜாடையாக.

கண்ணடித்து உறுதி செய்தார் கழுகார்.

சரி கதைய சொல்லுங்கோ என்று கொக்கி போட்டோம்.

அத மட்டும் வெளிய சொல்லக்கூடாதுன்னு டைரக்டர் சத்தியம் வாங்கியிருக்கார்... ஆனா அதிர்ச்சி மதிப்பீடுகள் இருக்குமாம்...

சரியா போச்சு போங்க...மருத்துவ சமூகத்தை யாராச்சும் கீறிவிட்டுட்டா தஞ்சாவூரு பொம்மையாட்டம் தவிப்பாரே அந்த டாக்டர்...

அவராச்சும் பரவாயில்லை... மூக்கு புடைப்பானவர்கள் ஏன் இப்படியெல்லாம் யோசிக்கிறார்கள் என்று ஏராளமான ஆங்கில ஜார்கன்ஸ் கலந்து, புல்லட் பாயிண்ட்ஸ், புள்ளி விவரங்கள் போட்டு சைக்காலஜிக்கல் அனாலிஸிஸ் செய்வாரே அந்த இன்னொரு டாக்டர் அதை நினைத்தால்தான் எனக்கு கெதக்கென்று இருக்கிறது... கழுகாரின் கண்களில் மரண பயம் தெரிந்தது.

சைக்காலஜிக்கல் அனாலிஸிஸ்ன்னு சொன்னதும் ஞாபகம் வருது... கதையில் ஒரு சைக்கோவும் இருக்குறதா சொன்னீங்களே... அது யாராக்கும், பதிவுலகில் நிறைய சைக்கோக்கள் இருக்கிறார்களே... நைஸாக நூல்விட்டு பார்த்தோம்.

சிகாரை ஆஷ்ட்ரேயில் பொசுக்கிவிட்டு, தலைமுடியை சிலுப்பியபடி விருட்டென்று பறந்தார் கழுகார்...!

Saturday, December 13, 2014

லிங்கா - நம்பலாமா ? நம்பப்படாதா ?

BEWARE OF NUDITY CONTENT...!

“யப்பா... லிங்கா படம் நல்லா இருக்கா இல்லையா ? பாக்கலாமா ? வேணாமா ? நம்பலாமா ? நம்பப்படாதா ? இது எனக்கு தெரிஞ்சாகணும்...”

“இதுக்கு ஏன்பா இத்தனை தடவை திரும்புற. இதுக்கு ரஜினி ஃபேன்சே தேவலை போலிருக்கே...”

“முருகேஷா... லிங்கா மொக்கை’ங்குறத சில அறிகுறிகள வச்சி கண்டுபிடிச்சிடலாம்...”

“எப்படி...?”

“தூ....ரத்துல இருக்குற நாட்டுலருந்து FDFS பார்த்து விமர்சனம் போடுறவங்க, வழவழ கொழகொழ’ன்னு எழுதி கடைசியா ரஜினிக்காக பார்க்கலாம்’ன்னு முடிச்சிருப்பாங்க.”

“யப்பா... நெஜமாலுமே இதே மாதிரி அங்க எழுதியிருக்காங்கப்பா...”

மணிமாறன் – ரஜினிக்காகவும் அந்த பிளாஷ்பேக்குக்காகவும் ஒரு தடவை பார்க்கலாம். (வேறென்ன... அப்படித்தான் முடிக்கணும்).

Filmibeat ஷங்கர் – ரஜினி படத்தைப் பொறுத்தவரை, அவரது ரசிகனுக்கு எதுவுமே குறையில்லை. அவர் ‘வந்தா மட்டும் போதும்தான்’. ஆனால் மற்றவர்களுக்கு...?

“நான் கேட்டேனா...?”

“இல்ல”

“அப்புறம், விமர்சனம் எழுதச் சொன்னா ரஜினி ரஜினி ரஜினி ரஜினி... ரஜினி ரஜினி ரஜினி ரஜினி’ன்னு இம்போசிஷன் எழுதியிருப்பாங்க...”

“யப்பா... இந்த மாதிரியும் அங்க எழுதியிருக்காங்கப்பா...”

ஆரூர் மூனா – லிங்காவைப் பற்றி வேறென்ன சொல்ல. ரஜினி ரஜினி ரஜினி மட்டும்தான் படமே.

செங்கோவி – பாஸிடிவ் பாயிண்ட்ஸ்: சூப்பர் ஸ்டார், சூப்பர் ஸ்டார், சூப்பர் ஸ்டார்

“நான் கேட்டேனா...?”

“இல்ல”

“கதே மட்டும் கேக்கணும்... நோ க்ராஸ் கொஸ்டின்ஸ்... கேட்டா ? என்னதிது...?”

“லிங்கம்”

“பிச்சு எறிஞ்சிடுவேன்...”

“அவ்வ்வ்வ்வ்...”

“அப்புறம், ப்ர்ர்ர்ர்ர்...”

“என்னாது...?”

“ப்ர்ர்ர்ர்...”

“என்னா...து...?”

“வயித்தால போற சத்தம்...”

“கே.எஸ்.ரவிகுமாருக்கு வயித்தால போயிடுச்சு. அதனால தான் படம் சரியா எடுக்கல. ஏ.ஆர்.ரகுமான் பேக்குல கட்டி வந்ததால நின்னுக்கிட்டே மொக்கையா மியூசிக் போட்டிருக்காரு’ன்னெல்லாம் எழுதுவாங்க...”

“அய்யோ... வயித்தால போற சத்தமும் கேக்குதுப்பா...”

ArulSelvan - K.S. Ravikumar should be banned from taking tamil movies. After Barasuram, Linga is the worst BGM (even some songs) scored by Rehman.

AaVee Kovai - Lingaaaaaawww! யாருப்பா படத்தோட எடிட்டர் ?

“நான் கேட்டேனா...?”

“இல்ல”

“அப்படியே கொஞ்சம் கொஞ்சமா ஒன்னு ரெண்டு நாள்ல, நெகடிவ் ரிவ்யூஸா கெளம்பும்...”

“யப்பா... கெளம்பிருச்சுப்பா கெளம்பிருச்சுப்பா...”

“எங்க...?”

“அங்க”

AndichamyGA – பரமா... சாவு பயத்தை காமிச்சுட்டாய்ங்கடா... மூணு மணிநேரம் மூச்சுத் திணற திணற அடிச்சாய்ங்கடா...!!

SathishTamilselvan - Comparatively Baaba was better.. If this had been made without Rajini, may be by Vijay, it'd have been laughed at..

“நீ ஏன் விமர்சனத்தல்லாம் படிச்சிட்டு சிரிக்கிற...?”

“நான் சிரிக்கலைய்யா... ஊரே கைகொட்டி சிரிச்சிட்டிருக்குய்யா...”

Wednesday, July 17, 2013

கோனைவில்: கோவை நேரம் – வடிவுக்கரசி – அஞ்சரைக்குள்ள வண்டி – லொட்டு லொசுக்கு


பார்த்த படம்: அஞ்சரைக்குள்ள வண்டி
புதிதாக திருமணமான ஷகிலாவுக்கு தன்னுடைய எதிர்பார்ப்பிற்கு ஏற்ற வகையில் மணமகன் அமையவில்லை. அவர்களுடைய எதிர்வீட்டில் ஒரு வாட்டசாட்டமான ஆள் குடி வருகிறார். இருவருக்குமிடையே கள்ளக்காதல் மலர்கிறது.

மாலை ஐந்தரை மணிக்கு வருகிற ரயிலிலேறி ஓடிப்போக முடிவு செய்கிறார்கள். விஷயம் எப்படியோ ஷகிலாவின் கணவருக்கு தெரிந்து விடுகிறது. அப்போது தான் எதிர்வீட்டு ஆசாமி பற்றி ஒரு உண்மை தெரிய வருகிறது. ஷகிலா என்ன ஆனார் என்பதை படம் பார்த்து அறியுங்கள் !

மலையாளத்தில் மட்டும் எப்படி தான் இவ்வளவு அழகான கதைகள் வருகிறதோ ? பெரும்பலான காட்சிகளில் வசனம் போன்ற சமாசாரம் அதிகம் இன்றி ஒரு சுவாரஸ்ய படத்தை தந்திருக்கிறது இந்த டீம்.

அவசியம் பாருங்கள் !

அழகு கார்னர்
வடிவுக்கரசி – கண், மூக்கு, உதடு, வாய், கழுத்து என அனைத்தும் சரியாய் இருந்தும் ஏனோ தமிழில் அதிகம் ஸ்கோர் செய்யாமல் போனது வருத்தமே. நம்ம பாக்யராஜ் கூட கன்னி பருவத்திலே படத்தில் இவரை ஹீரோயினாக்கி முன்னுக்கு கொண்டுவர முயற்சி செய்தார்.

வரணும். அம்மணி மீண்டும் ஒரு ரவுண்டு வரணும்.


போஸ்டர் கார்னர்

அய்யய்யோசாமி கார்னர்
சென்ற வாரம் ஒரு நாள் காய்கறி வாங்க சென்றார் அய்யய்யோசாமி. போனவர் சும்மா இருந்திருக்கலாம் இல்லையா ? கீரை விற்கும் ஆயாவிடம் போய் விளிம்புநிலை மனிதருக்கான பேட்டி காண முயற்சி செய்திருக்கிறார். அந்த நேரம் பார்த்து அங்கே வேறொரு வேலையாக வந்த ஹவுஸ்பாஸ் அய்யய்யோசாமியை ஆயாவும் கையுமாக பிடித்துவிட்டார்.

வீட்டுக்கு வந்ததும் ஹவுஸ்பாஸ் அய்யய்யோசாமியை கடுமையாக அர்ச்சனை செய்தார். ஆனால் அய்யய்யோசாமி வழக்கம்போல ஒரு பெரிய புஸ்தகத்தை எடுத்து வைத்துக்கொண்டு படிப்பதுபோல சீன் போட்டார். விடுவாரா ஹவுஸ்பாஸ் ? பூரிக்கட்டை, பூந்திக்கரண்டி என்று கிச்சனில் கிடைத்ததை எல்லாம் அய்யய்யோசாமியின் மீது தூக்கி எரிய ஆரம்பித்துவிட்டார். அய்யய்யோசாமி பாதுகாப்பாக வீட்டின் ஒரு கார்னரில் போய் பதுங்கிக்கொண்டார். அதுவே அய்யய்யோசாமி கார்னர் என்றழைக்கப்படுகிறது.

பதிவர் பக்கம் – கோவை நேரம்
நண்பரை கலாய்த்து எழுதும்போது – நம்மையே கலாய்த்து எழுதுற மாதிரி கொஞ்சம் கூச்சமா இருக்கு (க்கும் நண்பரை கலாய்க்கிறதுக்கு கூச்சபடுற ஆளா நீயி? - மனசாட்சி)

கோவை நேரம் என்கிற பெயரில் பதிவெழுதும் நண்பர் ஜீவா – இந்தப் பக்கத்தில் இருந்து பார்க்கும்போது அலைபாயுதே மாதவன் மாதிரி இருக்கிறார். ஒருவேளை அந்தப்பக்கம் சென்று பார்த்தால் அஜித்குமார் மாதிரி இருக்கலாம்.

ஒரு விசிட் அடித்து வாருங்களேன் !

என்ன பாட்டுடே – அடிக்குது குளிரு !
என்னை முதன் முதலாக கவர்ந்த பாடல் என்றால் – அது அடிக்கிது குளிரு தான் !

பள்ளியில் படித்த காலம் அது –

முல்லை பூங்கொடி கொம்பை தேடுது
கொம்பைப் போல உன் அம்பை தேடுது !

என்ற வரிகள் ரொம்பவே பிடித்து  விட்டது. என்னமா யோசிச்சிருக்காரு பாட்டு எழுதியவர் என நினைத்து நினைத்து வியந்தேன்.

அற்புதமாய் பாடத் தெரிந்த ரஜினிகாந்த், அருமையாய் முகபாவம் காட்ட கூடிய விஜயசாந்தி, கருத்தாழம் மிக்க வரிகள் என எல்லா பக்கமும் சிக்சர் அடிக்கும் பாட்டு.

இப்பாடலை பாடியமைக்கு ரஜினிகாந்துக்கு தேசிய விருது கிடைத்தது.

“வா கட்டபொம்மன் பேரா... கட்டழகு வீரா...!”

நாட்டு மக்களுக்கோர் நற்செய்தி !  
கவுண்டமணி செந்திலில் ஆடிக்கொன்று அமாவாசைக்கொன்று என்று பதிவு வெளியிட்டு வந்ததை தாங்கள் அறிவீர்கள். ஆனால் இனி வாரத்திற்கு ஒரு பதிவாவது நிச்சயம் வரும். அதுவும் மற்ற பதிவர்களை பகடி செய்யும் பதிவாக இருக்கும். யாரை கலாய்க்கலாம் என்று வாசகர்களும் அய்யய்யோசாமிக்கு ஐடியா கொடுக்கலாம். போக போக இது இன்னும் அதிகமாக கூகிள் ஆண்டவரை வேண்டுவோம் !

Sunday, June 30, 2013

நாங்களும் எழுதுவமில்ல காதல் (கவுஜ)கடிதம்...!

டிஸ்கி : திடங்கொண்டு போராடு சீனு ஒரு காதல் கடிதம் எழுதும் போட்டி நடத்துவது நமது பதிவர்கள் அனைவருக்கும் தெரியும். அந்த போட்டியில் நமது தீவிர இலக்கியவாதியும், நற்சிந்தனையாளரும்!?, எங்கள் அண்ணன் நக்கீரன் கலந்து கொண்டிருக்கின்றார். அவர் தன்னுடைய பால்ய கால காதலியான அருக்காணிக்கு ஒரு அழகான காதல் (கவிஜ) கடிதம் வரைந்து அனுப்பியிருக்கின்றார்....அதை கவுண்டமணி செந்தில் தளத்தில்தான் பதிவிட வேண்டும் என்று ஒற்றைக்காலில் சற்று தள்ளாடியபடி வேண்டிக் கொண்டார்.



அன்பே எங்கக்கா மவளே அருக்காணி
உங்கப்பன் ஒரு மொள்ளமாரி
உன் வூட்டுப் பக்கம் நான் வந்தாலே
பேசுறான் வசைமாரி
அதனால நான் மொட்டை மாடியில
படுத்துகினு யோசிச்சேன்
இதோ எழுதினேன் ஒரு கடுதாசி...!

என் ஊரு சிதம்பரம்
உன் பக்கத்து வூட்டுக்காரன் ஏகாம்பரம்
அவனுக்கு வாங்கித்தந்தேன் பலாப்பழம்
அவன்கிட்ட கொடுத்து வுட்டேன் காதல் கடிதம்
அந்த நாதாரி புல் மப்புல மட்டையானான் டிச்சு ஓரம்......!

குளிருக்கு ஆவாது மெக்டோவலு
காதலுக்கு ஆவாது அல்லக்கையி
அதனால நானே நல்ல கடிதம் எழுதி
கொண்டு வரேன் நாளான்னிக்கி....!

உன் மஞ்சா கலரு தாவணி
ஒண்ணே முக்காலு ரூவா பாண்ட்ஸ் பவுடரு....!
வானத்தைப் பாக்கும் உன் கூந்தலு
எம் மனசு நீ வந்துகினு உக்காரும் ஸ்டூலு
அமலா பாலு, திரிசா எல்லாருக்குமே நீ ஒரு ஸ்கூலு!

நான் குடிக்கும் கிங் பிசரு பீரு நீதாண்டி
நான் வெச்சிருக்கிற நோக்கியா போனு நீதாண்டி
என்னோட லேப்டாப்பும் நீதாண்டி....
என்னோட கமெண்ட் பாக்சும் நீதாண்டி
நான் எழுதும் பிளாக்கும் நீதாண்டி
என் காதலுக்கு நீ தாடி சம்மதம்
இல்லையின்னா நான் டிராப்டில் இருக்கும் ஒலக எலக்கியம்....!

அன்புடன்


”கவிக்கோ”பால் பல்பொடி (எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது) ”முனைவர் நக்கீரர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!”

---------------------------------------------------------------------------------------------

சீனுவின் போட்டி தொடர்பான பதிவு : http://www.seenuguru.com/2013/06/contest-updates.html