Wednesday, April 4, 2012

ஆபீசர் வீட்டு கல்யாணத்தில் அண்ணாத்தை மனோ!



                       " சட்டு புட்டுன்னு நாலாவது பந்திய போடுங்க ஆபீசர்..நாக்கு ஊருதுல்ல ..." 


மும்பையில் இருந்து அரபிக்கடல் மார்க்கமாக நான் சென்னை கடற்கரைக்கு வந்த கதை பற்றி தனியாக ஒரு நெட்ட நெடுந்தொடர் பதிவை தனி ப்ளாக்கில்   எழுதுகிறேன். பயணக்கட்டுரைக்கு என்றே தனி ப்ளாக் தொடங்க வேண்டுமென என் ரசிகர்கள் பலர் கேட்டதால் இனி பயணம் பற்றிய போன்ற பதிவுகள் manotravels.nonstop.out தளத்தில் வெளியாகும் என்பதை இறுமாப்புடன் தெரிவித்து கொள்கிறேன். மும்பையில் இருந்து கடல்வழியாக எப்படி சென்னை வந்தேன் என்றுதானே நாக்கின் மேல் விரல் வைத்து கேட்கிறீர்கள்? அது ஒரு வீரசாகச பயணம் மக்களே. தாரவி பகுதியில் ஏழைச்சிறுவன் ஒருவன் செய்து வைத்திருந்த பேப்பர் கப்பலை ராவோடு ராவாக ராவி அதன் மூலம் ஒருவழியாக இங்கு வந்து சேர்ந்தேன். வழியில் ஒரு வஞ்சிரம் மீன் என் கப்பலை கவிழ்க்க சதி செய்தது. விடுவனா? கூலிங் கிளாஸ் கண்ணாடியை உடைத்து அதை குத்தி குத்தியே கொன்று விட்டேன்..அந்த கடல் பயண அனுபவத்தை பிறகு பார்ப்போம்.

சென்னையில் இருந்து ரயில் மார்க்கமாக சிதம்பரம் சென்று கொண்டிருந்தேன் (இது குறித்து manochennaitochidhambaram.point2point.avvv தளத்தில் எழுதுகிறேன்). ஒரே ஒரு சாம்பிள் அனுபவம் மட்டும் உங்களுக்காக. ட்ரெயினில் சப்பணங்கால் போட்டுக்கொண்டு லாப்டாப்பை திறந்து பதிவு எழுதிய நள்ளிரவு நேரமது. அரை தூக்கத்தில் இருந்தேன். அப்போது அந்த நிலா வெளிச்சத்தில் அழகிய சிற்றருவி ஒன்று சலசலவென பாய்ந்து கொண்டு இருந்த அழகைக்கண்டேன். அதை வர்ணித்து எழுதியதை பெர்த்தில் இருந்து பார்த்த சிறுவன் சொன்ன வார்த்தைகள் என் நெஞ்சில் ஈட்டியாக குத்தி குதறின.."அய்ய..அங்கிள் அது அருவி இல்ல. நாந்தான் இப்ப சொய்யின்னு சுடச்சுட சுச்சா போனேன்"

                                                                            நக்கீரனின் காஸ்ட்லி கார்

"எலேய் மனோ. நான் நேரா நெல்லை போயிடறேன். என் கார் ட்ரைவர் உன்னை சிதம்பரத்ல பிக்கப் பண்ணிப்பான்" என்று சொல்லிவிட்டார் நக்கீரன். மேலே உள்ள படத்தில் இருக்கும் காரை மணிக்கு 150 சென்ட்டி மீட்டர் வேகத்தில் ஓட்டி என்னை நெல்லைக்கு கொண்டு சேர்த்த ட்ரைவர் வாழ்க.

கல்யாண மண்டபத்திற்கு வெளியே நக்கீரனுக்கு தனி போன் பூத் வைத்து தந்திருந்தார் ஆபீசர். வாசலில் நின்றோருக்கு கூட போன் போட்டு "வாங்க. வாங்க" என்று உபசரிப்பு வேறு..நக்கி தொல்லை தாங்கலடா. "எங்கலே சிபி?" என்று கேட்டதற்கு "செவுத்துல உக்காந்துகிட்டு போற வர்ற பொண்ணுங்களுக்கு மார்க் போட்டதால அவரோட மொகத்துல லேடி போலீஸ் மார்க் போட்டுட்டாங்க. பேன்ட் ஏஜ் வாங்க போயிருக்கு பய புள்ள" என்றார் நக்கி. ஹி..ஹி..தேவைதான். சொன்னா கேட்டாத்தான....

மண்டபத்தின் உள்ளே நுழைந்த நான் கல்கண்டு தட்டை கண்டதும் துள்ளி குதித்தேன். இரண்டு கைகளால் நான்கு முறை அள்ளி கார்கோஸ் பேன்ட் பாக்கெட்டுகள் முழுக்க நிரப்பியதும் "ஐயோ திருடன் திருடன்" என்று அங்கிருந்த சிறுமிகள் கத்தி ஊரை கூட்டிவிட்டனர். "என்ன நடக்குது. இங்க" என்று கேட்டவாறு வந்தார் ஆபீசர். எத்தனை நாள் ஆனது அவரைப்பார்த்து..கண்கள் கலங்கி இதயம் பனித்தது. அவரோ "ஏன் மனோ இப்படி?? கேட்டா ஒரு மூட்டை கல்கண்டை தர்றேன். வாங்க உள்ள" என்று தன் சுண்டுவிரலால் என் கரங்களை பற்றி அழைத்து சென்றார்.

"எனக்கு அசதியா இருக்கு. சத்த நேரம் தூங்கணும். என்னை தூங்க வைங்க ஆபீசர்" என்றேன். "என்னங்க..நான் எவ்வளோ பிசியா இருக்கேன். இப்ப போயி.." என்றார் ஆபீசர். "ஒரு அரை மணிநேரம்..ப்ளீஸ்" என 'துர்கா படத்து   ஷாமிலி போல கெஞ்சினேன். என் பிஞ்சு முகம் அவரை சம்மதிக்க வைத்தது என்றால் அது மிகையில்லை.

மண்டப வாசலில் எனக்காக ஒரு தூளி கட்டி வாயில் பிங்க் கலர் நிப்பிளை சொருகி 'பச்ச மல பூவு..நீ உச்சி மல தேனு' பாடலை போட்டுவிட்டார்.

                                             "தூளியிலே ஆட வந்த பெட்ரோமாக்ஸ் விளக்கே..." 

என்னை கழற்றி விட்டு நைசாக ஜகா வாங்க பார்த்த உணவு உலகம் ஆபீசரிடம் "சார்..எங்க ஓடறீங்க. எனக்கு பசிக்குது. உணவு உலகம் ஆபீசர் கல்யாணத்துல உலக உணவெல்லாம் தயார் செஞ்சி இருப்பீங்க. ஆனா எனக்கு வெறும் தயிர் சாதம் மட்டும் பெசஞ்சி தாங்களேன்" என்று அழுதேன். முதலில் அவர் சம்மதிக்கவில்லை. "இல்லாட்டி நிப்பிளையும், பால் புட்டியையும் அப்படியே கடிச்சி தின்னுபுடுவேன்" என்று மிரட்டியதும்தான் வழிக்கு வந்தார்.

சிறிய வெற்றிலை ஒன்றில் ப்ரீத்தி மிக்சியில் 50 முறை மிருதுவாக அரைத்த தயிர் சாதத்தை இட்டு என்னருகே வந்தார் ஆபீசர்.
                           
                                                   
                                                                    
எனக்கு மிகவும் பிடித்த பிங்க் நிற ஸ்பூனில் ஒவ்வொரு பருக்கையாக ஊட்டினார். அமெரிக்கா, இந்தியா, ஒரிஸ்ஸா, லண்டன், இங்கிலாந்து போன்ற எல்லா நாட்டு தாய்களும் ஒன்றாக சேர்ந்து எனக்கு உணவு ஊட்டியதை போன்று இருந்தது அந்த அனுபவம். "உப்பு போடவா?" என்றார் ஆபீசர். "வேண்டாம் சார். நான் ஏற்கனவே நிறைய உப்பு போட்டுட்டேன்" என்றேன்.

நான் சொன்னது என் கண்ணீரை..........

இதற்கு மேல் எழுத முடியாமல் என் மனம் நெகிழ்கிறது. உள்ளம் உருகுகிறது. பிறகு சந்திக்கிறேன்...
..................................................................


_________
Posted by:
sivakumar
_________