ரசிகர் மன்றம் உருவான விதம்:
சில நாட்களுக்கு முன் மெரினா கடற்கரையில் கே.ஆர்.பி செந்தில் அண்ணன், 'விந்தை மனிதன்' ராஜாராம், நான், பிலாசபி பிரபாகரன் ஆகியோர் சந்தித்தோம். அப்போது கவுண்டமணி - செந்தில் பற்றி பேசிக்கொண்டிருக்கையில், கே.ஆர்.பி அண்ணன் என்னிடம் சொன்ன வார்த்தைகள்தான் இந்த மன்றம் உருவாக காரணமானது. அவர் சொன்னது "நாம் ஏன் கவுண்டமணி பெயரில் ஒரு வலைப்பூவை ஆரம்பித்து நகைச்சுவை செய்திகளை போடக்கூடாது?". நாங்கள் மூவரும் உடனே சரி என்றோம். இன்னும் சிலரை மன்றத்தில் இணைக்க முயன்றோம். பிரபாவின் அழைப்பின் பேரில் சித்ரா மேடம் மற்றும் ஆனந்தி ('ஹைக்கூ அதிர்வுகள்' ) ஆகியோர் இணைய, இன்று 'அஞ்சா சிங்கம்' செல்வினும் சேர, மன்றம் விரிவுபடுத்தப்பட்டது. அலைகடலென ஆதரவு வரவிருப்பதால்(!) மன்ற செயல்பாடுகள் குறித்து மேலும் பல செய்திகள் விரைவில் வெளியிடப்படும்.
ஒருவழியாக திறப்பு விழா துவங்க இருந்த நேரத்தில் தலைவர் கவுண்டமணியின் அசரீரி ஒலித்தது "படுவா ராஸ்கோல்ஸ்! என்ன கேக்காம என்னடா இதெல்லாம். அந்த ரெண்டு வாழைப்பழத்துல இன்னொண்ணு எங்கன்னு சொல்றவன் மட்டும்தான் என் உண்மையான ரசிகன். ஒருமாசம் டைம் தர்றேன். எவனும் சொல்லலன்னா, அப்ப இருக்கு உங்களுக்கு தீபாவளி".
மன்றத்தின் திறப்பு விழா:
"சித்தப்பு எனக்கு ஒரு சந்தேகம்?"
"சொல்றா, வடை சட்டி தலையா"
"எதுக்கு இப்ப சூடம் கொளுத்துறீங்க? "
"அடேய், நம்மள நம்பி நகைச்சுவை வலைப்பூவை நண்பர்கள் ஆரம்பிச்சி இருக்காங்க. அது வெற்றி அடையணும். அதுக்குதாண்டா"
"என்னடா இது?"
"வாழை எல சித்தப்பு"
"நான் மட்டும் என்ன தென்னை இலைன்னா சொன்னேன். விசயத்த சொல்றா"
"முதன் முதல்ல பதிவை படிக்க வர்றவங்களுக்கு சோறு போட வேண்டாமா? "
"அது சரி. எதுக்கு ஒரு எல"
"பதிவை படிக்க போறது நான் மட்டும் தானே. அதுக்குத்தான்"
"அடிங்.. ரொட்டித்தலையா. வாய கழுவுடா. நமக்கு என்னக்குமே மார்க்கெட் எறங்காது. நெறைய எல கொண்டு வா".
......................................................................
கவுண்டமணி - செந்தில் சரவெடி!
காதலர் தின சிறப்பு பாடல்:
நகைச்சுவை நீச்சல் குளத்தில் தலைகீழாக சம்மர் அடிக்க உங்களை அன்புடன் அழைக்கிறோம்.


