Monday, February 14, 2011

திறப்பு விழா

                                                      

ரசிகர் மன்றம் உருவான விதம்:
சில நாட்களுக்கு முன் மெரினா கடற்கரையில் கே.ஆர்.பி செந்தில் அண்ணன், 'விந்தை மனிதன்' ராஜாராம், நான், பிலாசபி பிரபாகரன் ஆகியோர் சந்தித்தோம்.  அப்போது கவுண்டமணி - செந்தில் பற்றி பேசிக்கொண்டிருக்கையில், கே.ஆர்.பி அண்ணன் என்னிடம் சொன்ன வார்த்தைகள்தான் இந்த மன்றம் உருவாக காரணமானது.  அவர் சொன்னது "நாம் ஏன் கவுண்டமணி பெயரில் ஒரு வலைப்பூவை ஆரம்பித்து நகைச்சுவை செய்திகளை போடக்கூடாது?".   நாங்கள் மூவரும் உடனே சரி என்றோம்.  இன்னும் சிலரை மன்றத்தில் இணைக்க முயன்றோம்.  பிரபாவின் அழைப்பின் பேரில் சித்ரா மேடம் மற்றும் ஆனந்தி ('ஹைக்கூ அதிர்வுகள்' ) ஆகியோர் இணைய, இன்று   'அஞ்சா சிங்கம்' செல்வினும் சேர,  மன்றம் விரிவுபடுத்தப்பட்டது.  அலைகடலென ஆதரவு வரவிருப்பதால்(!)  மன்ற செயல்பாடுகள் குறித்து மேலும் பல செய்திகள் விரைவில் வெளியிடப்படும். 

ஒருவழியாக திறப்பு விழா துவங்க இருந்த நேரத்தில் தலைவர் கவுண்டமணியின் அசரீரி ஒலித்தது "படுவா ராஸ்கோல்ஸ்! என்ன  கேக்காம என்னடா இதெல்லாம். அந்த ரெண்டு வாழைப்பழத்துல இன்னொண்ணு எங்கன்னு சொல்றவன் மட்டும்தான் என் உண்மையான ரசிகன். ஒருமாசம் டைம் தர்றேன். எவனும் சொல்லலன்னா,  அப்ப  இருக்கு உங்களுக்கு தீபாவளி". 


மன்றத்தின் திறப்பு விழா
"சித்தப்பு எனக்கு ஒரு சந்தேகம்?"
"சொல்றா, வடை சட்டி தலையா
"எதுக்கு இப்ப சூடம் கொளுத்துறீங்க? "
"அடேய், நம்மள நம்பி நகைச்சுவை வலைப்பூவை நண்பர்கள் ஆரம்பிச்சி இருக்காங்க. அது வெற்றி அடையணும். அதுக்குதாண்டா"
     
                                                                   
 "என்னடா இது?"
 "வாழை எல  சித்தப்பு"
"நான் மட்டும் என்ன தென்னை இலைன்னா சொன்னேன். விசயத்த சொல்றா"
"முதன் முதல்ல பதிவை படிக்க வர்றவங்களுக்கு சோறு போட வேண்டாமா? "
"அது சரி. எதுக்கு ஒரு எல"
"பதிவை படிக்க போறது நான் மட்டும் தானே. அதுக்குத்தான்
"அடிங்.. ரொட்டித்தலையா. வாய கழுவுடா. நமக்கு என்னக்குமே மார்க்கெட் எறங்காது. நெறைய எல கொண்டு வா".
......................................................................                                                                                 

            

கவுண்டமணி - செந்தில் சரவெடி! 
காதலர் தின சிறப்பு பாடல்

நகைச்சுவை நீச்சல் குளத்தில் தலைகீழாக சம்மர் அடிக்க உங்களை அன்புடன் அழைக்கிறோம். 


47 comments:

Dinesh said...

nice...

எஸ்.கே said...

அவங்களை பிடிக்காதவர்கள் உண்டோ! வாழ்த்துக்கள்!

தஞ்சாவூரான் said...

வாழ்த்துக்கள்!

கும்மி said...

ஆடிக்கொரு தடவை அமாவாசைக்கொரு தடவை பதிவுலகுக்கு வர்ற எனக்கெல்லாம் இங்க அனுமதி உண்டா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அடங்கொன்னியா என்றா இது நம்ம பேருலேயும் மன்றமா.....? உங்களுக்கு ஏன் இந்த வேல? அந்த ஹீரோக்க தான் ஃபேனு ட்யூப்லைட்டுன்னு வெச்சி ஊரை நாறடிக்கிறானுங்கன்னா நமக்கு எதுக்கு இந்த வெளம்பரம்? சரி சரி, சின்னப் பசங்க ஆசப்படுறீங்க, வெச்சுக்குங்க.... அப்பிடியே அந்த கிரீஸ் டப்பாவ எடுத்துக் கொடுத்துட்டு போங்க...

கும்மி said...

//அப்பிடியே அந்த கிரீஸ் டப்பாவ எடுத்துக் கொடுத்துட்டு போங்க...//

கைல பட்டா அழுக்காயிரும். எட்டி உதைக்கிறேன். அப்படியே பிடிச்சிக்கிங்க.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////கும்மி said...
//அப்பிடியே அந்த கிரீஸ் டப்பாவ எடுத்துக் கொடுத்துட்டு போங்க...//

கைல பட்டா அழுக்காயிரும். எட்டி உதைக்கிறேன். அப்படியே பிடிச்சிக்கிங்க.//////

ம்ஹூம்..... இவரப் பாத்தா கையெடுத்து கும்புட்டோம், வீட்டுக்கு போன உடனே கை ரெண்டையும் அடுப்புல வெச்சி கருக்கிடனும்.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

தலைகீழாகத்தான் குதிப்பான் இந்த கோட்டைச்சாமி...........

கும்மி said...

//வீட்டுக்கு போன உடனே கை ரெண்டையும் அடுப்புல வெச்சி கருக்கிடனும்..... //

அடுப்பு எப்படிண்ணே எரியுது?

சே.குமார் said...

வாழ்த்துக்கள்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////கும்மி said...
//வீட்டுக்கு போன உடனே கை ரெண்டையும் அடுப்புல வெச்சி கருக்கிடனும்..... //

அடுப்பு எப்படிண்ணே எரியுது? //////

கொள்ளிக்கட்டைய எடுத்து பத்த வெச்சா எரிஞ்சுட்டு போவுது! அது என்ன நமீதா இடுப்பா உக்காந்து ஆராய்ச்சி பண்ண?

கும்மி said...

//அது என்ன நமீதா இடுப்பா உக்காந்து ஆராய்ச்சி பண்ண? //

இல்லைன்னே பெட்ரோமாஸ் லைட்டெல்லாம் வாடகைக்கு விடுறீங்களே, அது மாதிரி அடுப்பும் வாடகைக்கு விடுறீங்களோன்னு கேட்டண்னேன்.

விக்கி உலகம் said...

சரிங்கண்ணா!

பட்டய கெளப்புங்க!

அப்படியே மாநாடு நடத்தி ரெண்டு M.P நாலு MLA சீட்ட போடுங்க நானும் வரேன்!

தனி காட்டு ராஜா said...

//கொள்ளிக்கட்டைய எடுத்து பத்த வெச்சா எரிஞ்சுட்டு போவுது! அது என்ன நமீதா இடுப்பா உக்காந்து ஆராய்ச்சி பண்ண? //

:))

பாரத்... பாரதி... said...

அட்ரா சக்க.........அட்ரா சக்க.........அட்ரா அட்ரா சக்க..................

அன்னு said...

aahaa...intha vishayamkavundarukku theriyuma?? arumaiyaana idea. k.r.p.senthil annan blogla padaththai paarthe sirippu thaangalai.ini valaiyulagam kalakalakkum. thanks. :))

மனசாட்சி said...

இது எல்லம் இனையதலதில் சகஜமப்பா..........

jasminpriya said...

அண்ணா, நீங்கள் எல்லாரும் செய்வது சரியா? நம் தேசம் தற்போது உள்ள நிலையில் நமக்கு நகைச்சுவை அவசியம்தானா? தங்கள் நேரத்தை இப்படி வீண் அடிப்பதை விட்டு விட்டு சமூகத்தை திருத்த பல நல்ல காரியங்கள் செய்யலாமே? மனது மிகவும் வலிக்கிறது. தேம்பி அழுவதை தவிர வேறென்ன செய்ய முடியும்.

MANO நாஞ்சில் மனோ said...

அடங்கொன்னியா.... ஆரம்பிச்சிட்டாங்கைய்யா அடுத்த சரவெடியை......
சிரிச்சி சிரிச்சி இனி வயிறு வலிக்க போகுதே... அதுக்கு ஏதாவது மருந்து கிடைக்குமான்னு தேடனுமே......

MANO நாஞ்சில் மனோ said...

//கொள்ளிக்கட்டைய எடுத்து பத்த வெச்சா எரிஞ்சுட்டு போவுது! அது என்ன நமீதா இடுப்பா உக்காந்து ஆராய்ச்சி பண்ண?//


ஹி ஹி ஹி நமீதா இடுப்பு ஹி ஹி ஹி.....

நா.மணிவண்ணன் said...

ஓகே ஓகே கெளப்புங்க கெளப்புங்க

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

வாழ்த்துக்கள்

கோமாளி செல்வா said...

தலைவருக்கு புது ப்ளாக்கா ஐ சூப்பர் ..

Speed Master said...

கலக்குங்க

# கவிதை வீதி # சௌந்தர் said...

உங்க சங்கத்தில் நானும் இணைந்துக் கொள்கிறேன் பாஸ்...
வாழ்த்துக்கள்..

வானம் said...

அண்ணே, எனக்கு ஒரு சந்தேகம், இந்த பிரபல பதிவருங்கல்லாம் சேந்து நமக்கு ஒரு பிளாக்கு ஆரம்பிச்சுருக்காங்களாமே? இந்த பிளாக்கு, பிரபல பதிவர்ன்னா என்னண்ணே?

வந்தியத்தேவன் said...

யாரு தன்ராஜா? இந்த புளொக்கு பசங்க நச்சரிப்புத் தாங்கல்லை. அதுதான் நானும் ஸ்டார்ட் பண்ணிட்டன்

நல்லாயிருக்கு

T.V.ராதாகிருஷ்ணன் said...

வாழ்த்துகள்!

கூகுள் ஓனர் said...

ஹே.. ஹெஹ்ஹே..

கூகுள் ஓனர் said...

//அண்ணா, நீங்கள் எல்லாரும் செய்வது சரியா? நம் தேசம் தற்போது உள்ள நிலையில் நமக்கு நகைச்சுவை அவசியம்தானா? தங்கள் நேரத்தை இப்படி வீண் அடிப்பதை விட்டு விட்டு சமூகத்தை திருத்த பல நல்ல காரியங்கள் செய்யலாமே? மனது மிகவும் வலிக்கிறது. தேம்பி அழுவதை தவிர வேறென்ன செய்ய முடியும்.//

யாருப்பா சின்ன புள்ளைகள உள்ள விட்டது. பாப்பாக்கு குச்சி ரொட்டி வாங்கி கொடுத்து அனுப்புங்கப்பா..

கூகுள் ஓனர் said...

//அடங்கொன்னியா என்றா இது நம்ம பேருலேயும் மன்றமா.....? உங்களுக்கு ஏன் இந்த வேல? அந்த ஹீரோக்க தான் ஃபேனு ட்யூப்லைட்டுன்னு வெச்சி ஊரை நாறடிக்கிறானுங்கன்னா நமக்கு எதுக்கு இந்த வெளம்பரம்? சரி சரி, சின்னப் பசங்க ஆசப்படுறீங்க, வெச்சுக்குங்க.... அப்பிடியே அந்த கிரீஸ் டப்பாவ எடுத்துக் கொடுத்துட்டு போங்க..\\

தலைவா! செந்திலு பயல நம்பாத தலைவா!! அந்த ஊமைகுசும்பன் வேட்டிய அழுகாக்கிருவான்..

கூகுள் ஓனர் said...

//ஆடிக்கொரு தடவை அமாவாசைக்கொரு தடவை பதிவுலகுக்கு வர்ற எனக்கெல்லாம் இங்க அனுமதி உண்டா?//

இந்தக்கடை ஓனருங்க.. ஆள் இன் ஆள் கடை பாட்ர்னரே செத்துகனுன்னு சொல்லி நான் உத்தரவு போடுறேன்..

baln said...

எவனோ சொந்தக்காரன் சோத்துக்கு வந்துதான் திருப்புடா வண்டிய ...

baln said...

அடேய் வண்டுருட்டான் தலையா ..இதுக்கு தான் வூருக்குல ஒரு ஆள் இன் ஆள் ..அழகுராஜா வேணுங்கறது ..

baln said...

ஐயா நீங்கலாம் அக்கா தங்கச்சி யோட ..புறக்கலையா ...அது மூஞ்சிய பாருங்க வடை சுடுற சட்டி மாறியே இருக்கு ...

baln said...

அண்ணன் குழந்தைக்கு ஒரு பேரு வைங்க ...அட வேணாண்டா ...இல்ல வைங்க னே..ஓகே முருகேசன் நு வச்சிக்கோ ...அண்ணே ..அது பெண் குழந்தை ..அப்போ முருகேசி நு வச்சிக்கோ ...அண்ணன் இப்போ முருகேசி க்கு மொய் 200 குடுப்பார் ...

baln said...

என்னடா அது கரடி கக்கூஸ் போன மாதிரி ஒரு சவுண்ட்

அன்பரசன் said...

வாழ்த்துக்கள்!

சந்ரு said...

வாழ்த்துக்கள்.

காதலிக்கு எழுதிய கடிதங்கள் உங்கள் பார்வைக்கு...

பாரதசாரி said...

http://www.youtube.com/watch?v=tf47C60dcHI&feature=related

baln said...

அடே ..தயிர் சட்டி தலையா

ஆகாயமனிதன்.. said...

கலக்குங்க கவுண்டசெந்தில் !

ஆகாயமனிதன்.. said...

//அடேய், நம்மள நம்பி நகைச்சுவை வலைப்பூவை நண்பர்கள் ஆரம்பிச்சி இருக்காங்க. அது வெற்றி அடையணும். அதுக்குதாண்டா"//

வெற்றிக் கூட்டணி தான்...
நம்மளையும் சேர்த்துக்கனும்...

baln said...

http://www.youtube.com/watch?v=tARSE7nv1oU

baln said...
This comment has been removed by the author.
velu said...

very good..... keep it up

இசை ரசிகன் said...

வாழ்த்துக்கள்