Sunday, March 20, 2011

டிக்கிலோனா - 4
                                                             
.................................................................


வடிவேலு 'ரெண்டு அம்பது' ரீமிக்ஸ்:
(நகைச்சுவைக்கு மட்டும்)

பைகோ: மேடம் அந்த 21....

மேடம்:  இருய்யா தர்றேன். எல்லாருக்கும் சில்லறை தர வேண்டாம். 

சிறிது நேரம் கழித்து...

பைகோ: எல்லாருக்கும் தந்துட்டீங்க..என்னோட 21.....

மேடம்: ஏய்யா..நச்சு நச்சுங்கற. வைட் பண்ணு. 

பைகோ: அவங்க சில்லறைய மட்டும் கரெக்டா பிரிச்சிக்கறாங்க. நம்ம பங்க கேட்டா மட்டும் இப்படி கொந்தளிக்கராங்களே..சாமி.

மேடம்: யோவ் இந்தாங்க 60. பிரிச்சி எடுத்துட்டு அவர் பங்க குடுத்து அனுப்புங்க.

உதிரி அணிகள்: வாங்க பாஸ் உங்க பங்க வாங்கிட்டு போங்க. 

பைகோ: அப்பாட. நல்ல வேலை..ரோசப்பட்டு குடுத்துட்டாங்கய்யா.  இந்த அனத்து அனத்தலன்னா கெடைக்குமா...என்ன எல்லாரும் பங்க வாங்கிட்டு நேரா ஒயின் ஷாப்புக்கு போறானுங்க. பூனை வாலை விட்டுட்டு புலி வாலை புடிச்சதுக்கு ஆப்பு வக்க போறானுங்களா??

உதிரி 1: வாங்க சார். நாங்க உங்களுக்கு எவ்ளோ தரணும்?

பைகோ: இருவத்தி ஒண்ணுங்க.

உதிரி 2: எவ்ளோ சொன்னீங்க?

பைகோ:  இருவத்தி ஒண்ணுங்க

உதிரி 3: எவ்ளோ?

பைகோ:  இருவத்தி ஒண்ணுங்க.

உதிரி 1: எப்டி..எப்டி. நான் 21. அவன் 21. இவன் 21. மொத்தம் உங்களுக்கு 63 தரணுமா??

பைகோ: அய்யய்யோ.. அப்படி இல்லீங்க?

உதிரிகள் கோரஸாக: அப்படித்தான். எல்லாரும் சேந்து அடிங்கடா. சியர்ஸ்!  
..........................................................


இந்நூற்றாண்டின் இணையற்ற பாடல் வரிகள்:       
உபயம்: சிம்பு.

சில வரிகள் ட்ரிம் செய்யப்பட்டுள்ளது. முக்கியமான வரிகள் மட்டும் உங்கள் பரவசத்திற்கு:

உன்ன பாத்தா பஸ்ட் செகண்ட்ல என்ன காணும். 
தேடிப்பாக்குறேன் கண்டபடி நானும். 
சத்தியமா எனக்கு நீ வேணாம். கண்டிப்பா எனக்கு நான் வேணும்.
ஒன்ன என்ன கண்டுபுடிச்சி கொடு. இல்ல ரொம்ப சிம்பிள். உன்ன எனக்கு குடு.
இல்ல தயவு செய்து ஒரு கன் எடுத்து என்ன சுடு.

எவண்டி உன்ன பெத்தான்.பெத்தான். பெத்தான். பெத்தான்.
கைல கெடச்சா செத்தான். செத்தான். செத்தான். செத்தான்.

என் பேஸ்புக் ஸ்டேட்டசும் நீதான். என் ட்விட்டர் ட்வீட்டிங்கும் நீதான்.
என் ஸ்கைப் காலும் நீதான். என் ஐ போன், ஐ பேட் எல்லாம் நீதான். நீதான்.
என் ஐ ட்யூன் ப்ளே லிஸ்ட் நீதான். அதில் லவ் சாங்கும் நீதான். 
அதில் ப்ளே ஆகுற ஸ்பீக்கர் நீதான். என் அப்பாவும் நீதான். அம்மாவும் நீதான்.
என் சொத்து சோகம் எல்லாமே நீதான். என் கடவுளும் நீதான். என் உயிரும் நீதான். எனக்கு எல்லாமே நீதான். நீதான்.

எவண்டி உன்ன பெத்தான்.பெத்தான். பெத்தான். பெத்தான்.
கைல கெடச்சா செத்தான். செத்தான். செத்தான். செத்தான்.

உன் பேஸ்ட் பிரஸ்ஸும் நாந்தான். உன் ஷவர் ஜெல்லும் நாந்தான். 
உன் மானம் காக்கிற மேலாடை நாந்தான். உன் அழகு கூட்ற மேக்கப் நாந்தான்.
உன் டெட்டி பேர் நாந்தான். உன் பெட் அண்ட் பில்லோ நாந்தான்.

உன் வீட்டோட நைட் வாட்ச்மேன் நாந்தான். உன் நகமும் சதையும் நாந்தான்.
உன் அலும்பும் நரம்பும் நாந்தான். உனக்கு எல்லாமே நாந்தான். நாந்தான்.

எவண்டி உன்ன பெத்தான்.பெத்தான். பெத்தான். பெத்தான்.
கைல கெடச்சா செத்தான். செத்தான். செத்தான். செத்தான்.

...................................................

என் முன்னேற்றத்துக்கு ஸ்டெப்..நீ. ஸ்டெப் நீ..
(சாம் ஆண்டர்சனா..கொக்கா)                                                          
.......................................................

posted by:
! சிவகுமார் !
                                                                      

12 comments:

தமிழ் 007 said...

சூப்பரோ! சூப்பர்!

எல்லாமே செம காட்டு!

rajatheking said...

Super comedy . . Ha . . Ha . . Ha . . Visit www.kingraja.co.nr

rajatheking said...

More picture joke visit www.kingraja.co.nr

இரவு வானம் said...

! சிவகுமார் !

அடடா ஆச்சரியகுறி, அருமை சிவா, அனைத்தும் கலக்கல் காமெடி, ஆனாலும் எங்க அண்ணன் பவர் ஸ்டார தாக்கியதால உங்களுக்கு ஓட்டு போடாம என் கண்டனத்தை தெரிவிக்கிறேன் :-)

ttpian said...

ஒப்பாரும் மிக்காரும் அல்லாத
உலக நவரச நாயகன்,

மோதல்வரு: கார்த்திக்க்க்கக் ...

நான்காவது அணி!
எவரும் எதிர்பார்க்காத தேர்தல் முடிவுகள்!:
எல்லா தொகுதிகளிலும் வென்று நவரசம் ஆட்சி அமைத்ததை காணச் சகிக்காமல்
பச்சை புடவையும்,மஞ்சள் துண்டும் வனவாசம் போன பிறகு நவரச நாயகன்
மேக்கப் போடாத நடிகன் உலக முதல்வரு கார்த்திக்க்க்க்...
தினப்புருடா நிருபன்-(மன்னிக்கவும்- நிருபர்ர்ர்ர்) கவுண்டர் பெல்லுக்கு அளித்த முதல் செவ்வி
மக்களை கொள்ளை கொண்ட இந்த ஆட்சி மக்களுக்கு மட்டும் அல்ல நாய் ,குருவி நலன் பெற பாடுபடும்!,
நாய்கள் குட்டி போட ஒவ்வொரு கிராமத்திலும் பிரசவ ஆசுபத்திரி கட்டி (அதற்கு நடிகை .......பெயர் சூட்டி ) நாய்கள் பிரசவம் முடிந்து ஊட்டுக்கு திரும்பும் வரை நாய் சோப்பு முதல் நண்டு சூப்பு வரை அரசாங்கமே செலவு செய்யும்!
குருவிகள் இனிமேல் பறந்து திரிந்து குச்சி
பொறுக்கி கூடு கட்ட சிரமப்படவேண்டாம்!

அரசாங்க செலவில் பிளாஸ்டிக் குச்சிகள் வெளி நாடுகளில் இருந்து இறக்குமதி செய்து தருவதோடு, குருவிகளுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்க ஏற்பாடு செய்யப்படும்!
கடன் வழங்குவதில் முறைகேடு நடந்தால்....
நடிகை நமீதாவுடன் சேர்ந்து பெண்டு நிமிர்த்தி விடுவேன்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

சந்தடி சாக்கில் எங்கள் பவர் ஸ்டாரை தாக்கியதற்கு கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறோம்... இதற்கு விரைவில் தக்க பதிலடி தரப்படும் என்று பவர்ஸ்டார் ரசிகர் பேரவை சார்பாக எச்சரிக்கிறோம்!

! சிவகுமார் ! said...

தமிழ் 007, ராஜா, சுரேஷ், ttpian...தேங்க்ஸ் நண்பா!

! சிவகுமார் ! said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
சந்தடி சாக்கில் எங்கள் பவர் ஸ்டாரை தாக்கியதற்கு கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறோம்... இதற்கு விரைவில் தக்க பதிலடி தரப்படும் என்று பவர்ஸ்டார் ரசிகர் பேரவை சார்பாக எச்சரிக்கிறோம்!//

சிம்பு 'சிறப்பு' ரசிகர் மன்றம் மான நஷ்ட வழக்கை தொடரும் என்று கூறிக்கொள்கிறோம்.

விமலன் said...

சூப்பரப்பு/

அருள் said...

"பயோடேட்டா - பா.ம.க ..." வெளியிட்டவர் கே.ஆர்.பி.செந்தில்

http://krpsenthil.blogspot.com/2011/04/blog-post_09.html

// //டிஸ்கி : பசுமைத்தாயகத்தை ஆட்டைய போட்டீங்களே, அந்த அமைப்பை ஆரமிச்ச பசங்க இப்போ என்னங்கய்யா பண்றாங்க?
// //

அருள் கூறியது...

// //பசுமைத் தாயகத்தை தொடங்கியவர் மருத்துவர் அய்யா அவர்கள்தான்.

அவர் இப்போது தைலாபுரத்தில்தான் இருக்கிறார்.// //

விந்தைமனிதன் கூறியது...

// //பசுமைத்தாயகம் அமைப்பைத் தொடங்கியவர்கள் இரண்டு இளைஞர்கள். பெயர் அருள் & சீனிவாசன் என்று நினைக்கிறேன். அந்த அமைப்பின் துவக்கவிழாவுக்கு வருகை தந்தவர்தான் ராமதாஸ். பிறகு அந்த இரண்டுபேரையும் டம்மியாக்கித் தானே கவர்ந்துகொண்டார். இன்னும் துல்லியமான தகவல்களைத் தேடித்தந்தால் நீங்கள் விவாதத்துக்குத் தயாரா?// //

அருள் கூறியது...

// //தங்களை விவாதத்திற்கு வரவேற்கிறேன்.

மருத்துவர் அய்யா பல்வேறு அமைப்புகளை தொடங்கியுள்ளார்கள். பொங்குதமிழ் அறக்கட்டளை, தமிழ் ஓசை, மக்கள் தொலைக்காட்சி, சமூகநீதிப் பேரவை, சமூக முன்னேற்ற சங்கம் என்று மிக நீளமானது அந்த பட்டியல்.

அவ்வாறு, அவர் 1995 ஆம் ஆண்டு தொடங்கிய மற்றுமொரு அமைப்புதான் பசுமைத் தாயகம்.

நீங்கள் குறிப்பிடும் இரண்டு பேர் சீனிவாச ராவ் மற்றும் ஞானசேகரன். அவர்கள் இரண்டு பேரும் கடந்த இருபது ஆண்டுகளாக சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக உலக் சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டு வருகிறார்கள் (இன்றைக்கும் அவர்கள் குடும்பத்தோடு ஐரோப்பிய நாடுகளில் பயணம் மேற்கொண்டுள்ளனர்). மருத்துவர் அய்யா அவர்கள் பசுமைத் தாயகம் அமைப்பை தொடங்கிய போது அவர்கள் இருவரையும் அந்த அமைப்பின் பொருப்பாளர்களாக மருத்துவர் அய்யா நியமித்தார்.

அவர்கள் இருவரும் தொடர்ச்சியாக இந்தியாவில் இருக்க இயலாத காரணத்தால் பின்னர் அருள் என்பவர் பொருப்பாளராக ஆனார். பசுமைத் தாயகத்தை ஒரு முன்னிலை அமைப்பாக மாற்ற வேண்டி மருத்துவர் அன்புமணி இராமதாசு அதன் தலைவர் ஆனார். இதுதான் பசுமைத் தாயகத்தின் வரலாறு.

தங்களை விவாதத்திற்கு வரவேற்கிறேன்.// //

விந்தைமனிதன் சொன்னது…

// //முழுத்தகவல்களைத் திரட்டும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறேன். நிச்சயம் மீண்டும் வருகிறேன். நிச்சயம் இந்த விவாத்தை நாம் தொடர்ந்தாக வேண்டும். விவாதத்தில் வெல்ல அல்ல, இதன்மூலம் தவறான பிம்பங்களை (என் பக்கம் இருப்பினும், உங்கள் பக்கம் இருப்பினும்) தெளிவுபடுத்த...// //

உங்களுக்கு ஏதேனும் தகவல் தேவை எனில் என்னிடமும் கேட்கலாம்.

1995 ஆம் ஆண்டு பசுமைத் தாயகம் தொடங்கப்பட்ட புதிதில், கல்பாக்கத்தில் அணு எதிர்ப்பு கருத்தரங்கம், கடலூரில் தொழிற்சாலை மாசுபாட்டிற்கு எதிரான கருத்தரங்கம், ஆற்காட்டில் தோல்தொழில் மாசுபாட்டிற்கு எதிரான கருத்தரங்கங்கள் நடத்தப்பட்டன.

அதனையொட்டி, 1996 இல் வேலூர் மாவட்டத்தில் வாணியம்பாடி தொடங்கி வாலாஜா வரை"பாலாற்றைக் காப்போம்" மிதிவண்டி பிரச்சாரமும், மேட்டுப்பாளையம் தொடங்கி பவானி வரை "பவானி நதியைக் காப்போம்" மிதிவண்டி பிரச்சாரமும் நடத்தப்பட்டது. அதேபோன்று கடலூரில் உயிர்காக்கும் பேரணியும் நடத்தப்பட்டது.

நீங்கள் குறிப்பிடும் சீனிவாச ராவ் மற்றும் ஞானசேகரன் இரண்டு பேரும் மேற்கண்ட நிகழ்ச்சிகளில், பசுமைத் தாயகத்தின் பொருப்பாளர்கள் என்ற முறையில் பங்கேற்றனர். மருத்துவர் அய்யா தலைமையில் இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் நடந்தன.

நடைமுறையில் இந்த நிகழ்ச்சிகளுக்கான அனைத்து ஏற்பாடுகள் மற்றும் செலவுகளை ஏற்றவர்கள் - அந்தந்த மாவட்ட பா.ம.க'வினர்தான்.

இதில் நிங்கள் குறீப்பிடுவது போல "துவக்கவிழாவுக்கு வருகை தந்தவர்தான் ராமதாஸ். பிறகு அந்த இரண்டுபேரையும் டம்மியாக்கித் தானே கவர்ந்துகொண்டார்" எனும் கோயபல்ஸ் பிரச்சாரம் எங்கிருந்து வந்தது?

"பசுமைத்தாயகத்தை ஆட்டைய போட்டீங்களே, அந்த அமைப்பை ஆரமிச்ச பசங்க இப்போ என்னங்கய்யா பண்றாங்க?" என்று கே.ஆர்.பி. செந்தில் கோயபல்ஸ் பிரச்சாரத்தை அவிழ்த்து விடுவது ஏன்?

பா.ம.க'வுக்கு எதிராக கட்டுக்கதைகள் கட்டப்படுவதற்கு பின்னணி 'ஆதிக்க சாதிவெறி' தவிர வேறெதுவும் இல்லை.

மற்றபடி, பா.ம.க குறித்த அனைத்து விமர்சனங்களுக்கும் பதிலளிக்க நான் தயார்.

சாமக்கோடங்கி said...

பைகோ வை... பை(bye) கோ(go) என்று சொல்லி அனுப்பிட்டான்களே....படுபாவிங்க.. இனி என்ன பண்ணப் போறீங்க..??

goundamanifans said...

//விமலன் said...
சூப்பரப்பு//

வெல்கம் தலைவா..

//அருள் said...

அருள் கூறியது...

// //பசுமைத் தாயகத்தை தொடங்கியவர் மருத்துவர் அய்யா அவர்கள்தான்.

அவர் இப்போது தைலாபுரத்தில்தான் இருக்கிறார்.//

அருள் அவர்களே, இது முற்றிலும் நகைச்சுவை சார்ந்த பதிவுகளை எழுதும் இடம்....இங்கயுமா...


//சாமக்கோடங்கி said...
பைகோ வை... பை(bye) கோ(go) என்று சொல்லி அனுப்பிட்டான்களே....படுபாவிங்க.. இனி என்ன பண்ணப் போறீங்க..??//

அவர்தான் சொல்லணும்...பாப்போம்...