Monday, May 30, 2011

டிக்கிலோனா - 5



மே - 17 நெல்லை பதிவர் சந்திப்பில் என்ன நடக்கும்?


           
                                           
ரயில்வே ஜங்சனில் முக்காடு போட்டுக்கொண்டு மெதுவாக குறுகுறுவென பார்க்கிறார் மனோ. "நல்லவேளை, கடன் கொடுத்தவன் எவனும் கண்ணுல தட்டுப்படல. அப்படியே ஹோட்டல் ஜானகிராம் உள்ள பதுங்கிடுவோம்" என எண்ணிய அடுத்தநொடி...ஒரு அருவா அவர் முதுகை சொறிகிறது. "எலேய் மக்கா சத்த நில்லு" என ஒரு குரல் பீதியை கிளப்ப..வேர்த்து விறுவிறுக்க  திரும்பி பார்க்கிறார். "இம்சை அரசா..நீயா..ஏன் இப்படி வவுத்த கலக்குற. என்ன அப்படியே பொத்துனாப்புல ஹோட்டலுக்குள்ள கொண்டு போயிரு" என்று பாபு காலின் சுண்டு விரலை இழுத்து பிடித்து கேட்கிறார். ஹோட்டல் வாசலில் இருவருக்கும் அனுமதி மறுக்கும் காவலாளி "சாரி சார் பொக்கே கொண்டு வந்து வாழ்த்து சொல்றவங்களை மட்டும் அனுமதிக்க சொல்லி இருக்கார் சங்கரலிங்கம் சார்". அந்த நேரம் பார்த்து கவிதை வீதி சௌந்தர் சுட்டெரிக்கும் சூரியனை வைத்த கண் வாங்காமல் பார்த்து கவிதை எழுத, அப்படியே அவர் கையில் இருக்கும் பொக்கேவை லவட்டிக்கொண்டு உள்ளே செல்கின்றனர் இருவரும்.  

"அப்படியே ஓரமா நிறுத்துப்பா லாரிய" என்று கத்தும் சத்தத்தை கேட்டு வெளியே வருகிறார் 'உணவு' சங்கர். "ஹல்லோ சி.பி. எப்படி இருக்கீங்க" என கேட்க "கில்மாவா இருக்கேன் சார்" என்றவாறு அருகில் இருக்கும்  மளிகைக்கடை அண்ணாச்சியிடம் கைகொடுக்கிறார் சி.பி. "அய்யா தயவு செஞ்சி கூலிங் கிளாசை கழட்டுங்க. நான் இங்க இருக்கேன்" என வீறிடும்  சங்கர் "எதுக்குங்க லாரி?" என்கிறார். அதற்கு சி.பி. "மொத்தமும் நாட்டு தக்காளி சார். தக்காளி அந்த நாஞ்சில் மேல எறியத்தான்". சங்கர் "அது உங்க இஷ்டம். ஆனா இந்த தக்காளி எல்லாம் தரமானதுதானா? ஏம்பா, ஒரு தக்காளி விடாம செக் பண்ணுங்க. கலப்பட தக்காளி இருந்தா எல்லாத்தையும் ஆத்துல கொட்டுங்க" என ஆர்டர் போடுகிறார். கடுப்புடன் உள்ளே சி.பி. நுழைகிறார். 

"ஒசரமா இருக்குறவங்க தயவு செஞ்சி பின்னால உக்காருங்க. இல்லன்னா இந்த கழுகை விட்டு உங்க மூக்கை கொத்த விட்டுடுவேன்" என வேடந்தாங்கலில் இருந்து கொண்டு வந்த பெரிய சைஸ் பறவையை காட்டி அனைவரையும் பயமுறுத்துகிறார் கருன். ரோல்ஸ் ராய்ஸ் காரில் இருந்து மின்னலென இறங்கி மேடைக்கு வருகிறார் சித்ரா. "ஹாய் மக்காஸ். ஹாப்பி வீக்கென்ட் டு எவெரிபடி" என கை அசைக்கிறார். "மேடம், இன்னிக்கி வெள்ளிக்கிழமை" என்று ஒரு அசரீரி கேட்கிறது. அது வேறு யாருமல்ல, நம்ம நிரூபன்தான். "சகோ(தரி), லைவ் ப்ரோக்ராம் தொடங்கப்போகுது. சக்கரை புக்கை தயார் ஆகிடுச்சான்னு பாருங்கோள்". 

"என்னாது சக்கரை புக்கையா? ஓடுலே மக்கா ஓடுலே" என்று சி.பி.யை தள்ளி விட்டு ஓடுகிறார் மனோ. லேனா தமிழ்வாணன் அன்பளிப்பாக குடுத்த கூலிங் கிளாஸ் உடைந்ததில் மனம் வெம்பியவாறு பந்தியை நோக்கி சிபி செல்ல அனைவரும் பின்தொடர்கின்றனர். அந்த நேரம் பார்த்து கரண்ட் வேறு கட் ஆகிவிட வேர்த்து வழிய அனைவரும் இலையை பார்த்தவண்ணம் உள்ளனர். முதலில் சக்கரை புக்கை, பிறகு அவியல், பொரியல் செம மெனு. மனோவின் கர்சீப்பை திருடி முகத்தை துடைத்துவிட்டு மீண்டும் அதே இடத்தில் வைக்கிறார் சிபி. முதல் உருண்டை சோற்றை உள்ளே தள்ளும் நேரம் ஒரு கை தடுக்கிறது மனோவை. அவர்தான் தமிழ்வாசி பிரகாஷ், "சார் பஹ்ரைன்ல வெயில் எத்தனை டிகிரி? உங்க ஊரு ஹோட்டல்ல குஷ்பு இட்லி கிடைக்குமா? தலைல டை அடிச்சிட்டு கழுத்துல டை கட்டுறது ஏன்?" என பேட்டிக்கான  கேள்விகளை அடுக்குகிறார். 

"தம்பி கடைசியா பஹ்ரைன் பார்டர்ல சாப்பிட்டது. செம பசில இருக்கேன். ப்ளீஸ்" என கெஞ்சிக்கதறுகிறார் மனோ. பாவம் என்று பிரகாஷ் அவரை ரிலீஸ் செய்கிறார். எல்லாரும் உண்ண ஆரம்பிக்கும் நேரம் ஓடி வருகிறார் ஆபீசர் சங்கர். "சாப்பிடாதீங்க நிறுத்துங்க. இங்க நிறைய பேர் கையை டெட்டால் போட்டு கழுவலை. பின்கீயா, கஜ்மோயா போன்ற பாக்டீரியா இருக்கும். கைய கழுவிட்டு வாங்க" என்கிறார். மனோவுக்கு மண்டை காய்கிறது "ஏங்க ஆபீசர். உங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா. அந்நியன் அம்பி மாதிரி இப்படி டார்ச்சர் பண்றது என்ன நியாமுங்க ஆபீசர்" என்று கண்கள் சிவக்க பார்த்துவிட்டு செல்கிறார். கைகளை சுத்தம் செய்துவிட்டு அனைவரும் ஒரு வழியாக உண்டு முடிக்கின்றனர். 

மனோ மட்டும் முதலில் சாப்பிட்டுவிட்டு கீழே வந்து அமர்கிறார். இதுதான் தருணம். சி.பி.யின் கோக்குமாக்கான மூளை வேலை செய்ய ஆரம்பிக்கிறது.  பின் பக்க சுவர் ஏறி குதித்து லாரியில் இருக்கும் தக்காளிகளை அள்ளி மனோ மீது கொலைவெறியுடன் வீச ஆரம்பிக்கிறார். "அய்யய்யோ.. மக்கா.. காப்பாத்துலே காப்பாத்துலே" என்று மனோ கூவ, மேலே இருந்து அனைவரும் கைதட்டி சந்தோசமாக வேடிக்கை பார்க்கின்றனர். சித்ரா அவர்கள்  "இப்படித்தான் அட்லாண்டால தக்காளி திருவிழா அடிக்கடி நடக்கும்" என்று சொல்ல, இம்சை அரசன் பாபு மனோவுக்கு அரிவாளை தூக்கி எறிகிறார். வெறிகொண்ட வேங்கையாக சிபியை நெல்லை வீதிகளில் மனோ துரத்துகிறார். அந்த வழியில் திரிஷா ஷூட்டிங் நடப்பதை கண்ட சிபி "என்ன மேடம் இங்க?" திரிஷா "சாமி படம் ஹிந்தில எடுக்கறாங்க" என்கிறார். அவரை மொபைலில் போட்டோ எடுத்துக்கொண்டே ஒலிம்பிக் 100 மீட்டர் வேகத்தில் ஓட்டம் பிடிக்கிறார் சிபி.

                                                                   
அவரை பிடிக்க முடியாத கடுப்பில் பங்கு ஆட்டோ பிடித்து ஹோட்டலுக்கு வருகிறார் மனோ. மேடையில் மைக்கை பிடிக்கும் சங்கர் "இந்த சந்திப்பு நல்லா நடக்கும். அதுல சந்தேகம் இல்ல. அடுத்த வருஷம் எங்க மீட் பண்ணலாம்?" என்று கேட்கிறார். லைவாக நிரூபன் வருகிறார், "சகோ. அடுத்த மீட்டிங்கை அமெரிக்கால வைப்போம். அனைவரும் டிஸ்னிலான்ட் போவோம். சித்ரா அக்கா செலவு செய்வார்கள்" என்று சொல்ல, தலை சுற்ற ஆரம்பிக்கிறது மேடமுக்கு "அடப்பாவி நிரூபா. டிஸ்னிலான்ட் என்ன தமிழ்நாட்ல இருக்குற குவீன்ஸ்லாண்டுன்னு நினைச்சியா? நான் என்ன மனோ மாதிரி மல்டி மில்லியனரா?. எல்லாரும் பஹ்ரைன்ல அவர் ஹோட்டலுக்கு போயி ஓசில ஸ்டே பண்ணலாம்" என் மனோவை கோர்த்துவிடுகிறார் சித்ரா. 

அனைவரும் மனோ இருக்கும் திசையை நோக்க நெல்லை பார்டரை தாண்டி ஸ்பைடர்மேன் போல பறந்து காணாமல் போகிறார் அண்ணன்!

                                                               
                           மீண்டும் 2012 - ல்  பஹ்ரைன் மனோ ஹோட்டலில் சந்திப்போம். 

............................................................................


கற்பனை:




52 comments:

இராஜராஜேஸ்வரி said...

பதிவுலக தர்மப்படி எனக்கு வடையா?
அருமையான கற்பனை. நிஜ பதிவர் சந்திப்பு இவ்வளவு சுவாரஸ்யமாக இருக்குமா என்ன?
சிவகுமாரனுக்குப் பாராட்டுக்கள்.
உணவு உலகம் ஐயாவுக்கு இந்தப் பதிவைவிட அருமையாக நிகழ்ச்சி நடந்திட வாழ்த்துக்கள்.

உணவு உலகம் said...

சிவகுமார், உண்மையில் இன்று காலை இதை படித்தவுடன் என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை. என்னே, உங்கள் கற்பனை வளம்.நன்றி.

உணவு உலகம் said...

அது சரி, அந்த சக்கரை புக்கை, அவியல், பொரியல் என செம மெனு தயாரித்த சிவகுமார் பற்றி ஒன்றும் கூறாதது மட்டும் எனக்கு வருத்தம்.

Sivakumar said...

//இராஜராஜேஸ்வரி said...
பதிவுலக தர்மப்படி எனக்கு வடையா?//

'உணவு' ஆபீசரால் செக் செய்யப்பட தரமான வடை உங்களுக்கே.

Sivakumar said...

//FOOD said...
அது சரி, அந்த சக்கரை புக்கை, அவியல், பொரியல் என செம மெனு தயாரித்த சிவகுமார் பற்றி ஒன்றும் கூறாதது மட்டும் எனக்கு வருத்தம்.//

வருகைக்கு நன்றி சார். என்னை பற்றி திட்டத்தான் பின்னூட்டம் இருக்கே. போட்டு தாக்கவும்!

பொன் மாலை பொழுது said...

அது என்னா "சக்கரை புக்கை"?? பேரே சரி இல்லையே ஏதோ ஆட்டு புழுக்கை ஞாபகம்தான் வருது.

Anonymous said...

கக்கு அண்ணே புக்கை பற்றி அறிய இங்கே படிக்கவும்:
http://www.thamilnattu.com/2011/05/blog-post_26.html

இம்சைஅரசன் பாபு.. said...

சிவகுமார் நேற்று தான் முதலில் சங்கரலிங்கம் சார் ஐ முதல் முதலில் பார்த்தேன் ..நீங்களும் வருகிறீர்கள் தானே ..நேரில் பார்க்க ஆவலுடன் உள்ளேன் ...

சி.பி.செந்தில்குமார் said...

haa haa ஹா ஹா கலக்கல் காமெடி... ராசலீலா ராஜேந்திரனிடம் சனிக்கிழமை இரவுதான் சொன்னேன்.. நெல்லை பதிவர் சந்திப்பு பற்றி ஒரு காமெடி கற்பனை ரெடி பண்றேன்னு .. நீங்க முந்திக்கிட்டீங்க.. வெரிகுட் எஃப்ஃபார்ட்

சி.பி.செந்தில்குமார் said...

>>ரோல்ஸ் ராய்ஸ் காரில் இருந்து மின்னலென இறங்கி மேடைக்கு வருகிறார் சித்ரா. "ஹாய் மக்காஸ். ஹாப்பி வீக்கென்ட் டு எவெரிபடி" என கை அசைக்கிறார்

haa haa ஹா ஹா ஓப்பனிங்க் செம

சி.பி.செந்தில்குமார் said...

>>இதுதான் தருணம். சி.பி.யின் கோக்குமாக்கான மூளை வேலை செய்ய ஆரம்பிக்கிறது.

அப்போ எனக்கு மூளை இருக்குங்கறீங்க?

சி.பி.செந்தில்குமார் said...

>>
அனைவரும் மனோ இருக்கும் திசையை நோக்க நெல்லை பார்டரை தாண்டி ஸ்பைடர்மேன் போல பறந்து காணாமல் போகிறார் அண்ணன்!

ஹா ஹா மாட்னான் மனோ

Anonymous said...

//இம்சைஅரசன் பாபு.. said...
சிவகுமார் நேற்று தான் முதலில் சங்கரலிங்கம் சார் ஐ முதல் முதலில் பார்த்தேன் ..நீங்களும் வருகிறீர்கள் தானே ..நேரில் பார்க்க ஆவலுடன் உள்ளேன் ...//

பாபு, சந்திப்பை ஞாயிறன்று வைத்து இருந்தால் என்னைப்போல் பலரும் வந்திருப்போம். என்னால் வர இயலாதது வருத்தமே. கண்டிப்பாக வெள்ளி அன்று காலை நேரடி ஒளிபரப்பில் பேசுகிறேன். மறக்காமல் மனோவை அரிவாளுடன் பின்தொடருங்கள்.

Anonymous said...

/சி.பி.செந்தில்குமார் said...
ராசலீலா ராஜேந்திரனிடம் சனிக்கிழமை இரவுதான் சொன்னேன்.. நெல்லை பதிவர் சந்திப்பு பற்றி ஒரு காமெடி கற்பனை ரெடி பண்றேன்னு .. நீங்க முந்திக்கிட்டீங்க.. வெரிகுட் எஃப்ஃபார்ட்//

அதனால் என்ன சார். உங்க ஸ்டைலில் அப்பதிவை போடுங்கள். காத்திருக்கிறோம்!!

நிரூபன் said...

கக்கு - மாணிக்கம் said...
அது என்னா "சக்கரை புக்கை"?? பேரே சரி இல்லையே ஏதோ ஆட்டு புழுக்கை ஞாபகம்தான் வருது.//

சகோ, சர்க்கரைப் பொங்கலைத் தான் எங்கள் ஊரில் சர்க்கரைப் புக்கை என்று அழைப்பார்கள். ரொம்ப ஓவராத் தான் லொள்ளு பண்ணுறீங்க;-)))

http://www.thamilnattu.com/2011/05/blog-post_26.html

நிரூபன் said...

எல்லோரையும் செமையாப் போட்டுத் தாக்கியிருக்கிறீங்க...

நாஞ்சில் மனோ தான் ஹீரோ, நம்ம சிபி சார் வில்லன் ஆயிட்டாரு. அவ்

TERROR-PANDIYAN(VAS) said...

@இம்சை

//..நேரில் பார்க்க ஆவலுடன் உள்ளேன் ... //

ஓசியில் சோறு அப்படினு சொன்னா போதுமே ஆவலோட அடுத்த செகண்ட் கிளம்பிடுவிங்களே.. :)

Sivakumar said...

/நிரூபன் said...
நாஞ்சில் மனோ தான் ஹீரோ, நம்ம சிபி சார் வில்லன் ஆயிட்டாரு. அவ்//

சிபி வில்லனா..அப்பா திரிஷாவோட வாழ்க்கை?

Sivakumar said...

//TERROR-PANDIYAN(VAS) said...
@இம்சை

//..நேரில் பார்க்க ஆவலுடன் உள்ளேன் ... //

ஓசியில் சோறு அப்படினு சொன்னா போதுமே ஆவலோட அடுத்த செகண்ட் கிளம்பிடுவிங்களே.. :)//

எல்லாம் மனோவோட சேர்ந்த சகவாச தோஷம், டெர்ரர்!!

அஞ்சா சிங்கம் said...

கலக்கல் சிவா அருவாளுக்கு வேலை வைக்கலையே.........

Speed Master said...

அட்டகாசம்

=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=

நாமே ராஜா, நமக்கே விருது-8
http://speedsays.blogspot.com/2011/05/8.html

MANO நாஞ்சில் மனோ said...

ஏ யப்பா என்னா கொலைவெறி பதிவு அவ்வ்வ்வ்வ்வ்வ்....!!

MANO நாஞ்சில் மனோ said...

ரயில்வே ஜங்சனில் முக்காடு போட்டுக்கொண்டு மெதுவாக குறுகுறுவென பார்க்கிறார் மனோ. "நல்லவேளை, கடன் கொடுத்தவன் எவனும் கண்ணுல தட்டுப்படல. அப்படியே ஹோட்டல் ஜானகிராம் உள்ள பதுங்கிடுவோம்" என எண்ணிய அடுத்தநொடி...ஒரு அருவா அவர் முதுகை சொறிகிறது. "எலேய் மக்கா சத்த நில்லு" என ஒரு குரல் பீதியை கிளப்ப..வேர்த்து விறுவிறுக்க திரும்பி பார்க்கிறார். "இம்சை அரசா..நீயா..ஏன் இப்படி வவுத்த கலக்குற. என்ன அப்படியே பொத்துனாப்புல ஹோட்டலுக்குள்ள கொண்டு போயிரு" என்று பாபு காலின் சுண்டு விரலை இழுத்து பிடித்து கேட்கிறார்///

ஒப்பனிங்கே செம வாரல் ஹா ஹா ஹா ஹா...!

MANO நாஞ்சில் மனோ said...

. மனோவின் கர்சீப்பை திருடி முகத்தை துடைத்துவிட்டு மீண்டும் அதே இடத்தில் வைக்கிறார் சிபி///

எலேய் சிபி நீ எதுக்குடா என் கர்சீப்பை திருடுனே ராஸ்கல்....

MANO நாஞ்சில் மனோ said...

உண்ண ஆரம்பிக்கும் நேரம் ஓடி வருகிறார் ஆபீசர் சங்கர். "சாப்பிடாதீங்க நிறுத்துங்க. இங்க நிறைய பேர் கையை டெட்டால் போட்டு கழுவலை. பின்கீயா, கஜ்மோயா போன்ற பாக்டீரியா இருக்கும். கைய கழுவிட்டு வாங்க" என்கிறார். மனோவுக்கு மண்டை காய்கிறது "ஏங்க ஆபீசர். உங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா.//

ஹய்யோ ஹய்யோ ஆபீசர் கொடுமை பண்ணுறாரே எட்றா அந்த அருவாளை...

MANO நாஞ்சில் மனோ said...

மனோ மட்டும் முதலில் சாப்பிட்டுவிட்டு கீழே வந்து அமர்கிறார். இதுதான் தருணம். சி.பி.யின் கோக்குமாக்கான மூளை வேலை செய்ய ஆரம்பிக்கிறது. பின் பக்க சுவர் ஏறி குதித்து லாரியில் இருக்கும் தக்காளிகளை அள்ளி மனோ மீது கொலைவெறியுடன் வீச ஆரம்பிக்கிறார். "அய்யய்யோ.. மக்கா.. காப்பாத்துலே காப்பாத்துலே" என்று மனோ கூவ//

எலேய் சிபி நிசமாவே தக்காளி பைனான்ஸ் பண்ணுன தக்காளியை கொண்டு வந்துராதலேய் தம்பி நான் பாவம்....

MANO நாஞ்சில் மனோ said...

இம்சை அரசன் பாபு மனோவுக்கு அரிவாளை தூக்கி எறிகிறார். வெறிகொண்ட வேங்கையாக சிபியை நெல்லை வீதிகளில் மனோ துரத்துகிறார். அந்த வழியில் திரிஷா ஷூட்டிங் நடப்பதை கண்ட சிபி "என்ன மேடம் இங்க?" திரிஷா "சாமி படம் ஹிந்தில எடுக்கறாங்க" என்கிறார். அவரை மொபைலில் போட்டோ எடுத்துக்கொண்டே ஒலிம்பிக் 100 மீட்டர் வேகத்தில் ஓட்டம் பிடிக்கிறார் சிபி.//

சாவபோகுற நேரத்திலும் திரிஷாவை எடுக்குருயா கொய்யால....

MANO நாஞ்சில் மனோ said...

சித்ரா அக்கா செலவு செய்வார்கள்" என்று சொல்ல, தலை சுற்ற ஆரம்பிக்கிறது மேடமுக்கு "அடப்பாவி நிரூபா. டிஸ்னிலான்ட் என்ன தமிழ்நாட்ல இருக்குற குவீன்ஸ்லாண்டுன்னு நினைச்சியா? நான் என்ன மனோ மாதிரி மல்டி மில்லியனரா?. எல்லாரும் பஹ்ரைன்ல அவர் ஹோட்டலுக்கு போயி ஓசில ஸ்டே பண்ணலாம்" என் மனோவை கோர்த்துவிடுகிறார் சித்ரா. ///

ஐயய்யோ மேடம் நான் மல்டி மில்லினர் இல்லை சட்டி மில்லினர்....

MANO நாஞ்சில் மனோ said...

அனைவரும் மனோ இருக்கும் திசையை நோக்க நெல்லை பார்டரை தாண்டி ஸ்பைடர்மேன் போல பறந்து காணாமல் போகிறார் அண்ணன்!///

அதானே மனோ'வா கொக்கா....?

MANO நாஞ்சில் மனோ said...

மக்கா சிவகுமார், அருமையான கலகலப்பின் கலக்கல் கலாயிப்பு இது, சூப்பரா போட்டு தாக்கி இருக்கீங்க விழுந்து விழுந்து மனம் விட்டு சிரிச்சேன் ஹா ஹா ஹா ஹா வாழ்த்துகள் நன்றிகள்......

MANO நாஞ்சில் மனோ said...

! சிவகுமார் ! said...
/நிரூபன் said...
நாஞ்சில் மனோ தான் ஹீரோ, நம்ம சிபி சார் வில்லன் ஆயிட்டாரு. அவ்//

சிபி வில்லனா..அப்பா திரிஷாவோட வாழ்க்கை?//

அவங்க வாழ்கையை நான் பார்த்து கொள்கிறேன் ஹி ஹி....

Anonymous said...

//அஞ்சா சிங்கம் said...
கலக்கல் சிவா அருவாளுக்கு வேலை வைக்கலையே...//

அருவாளுக்கு ரெஸ்ட் குடுக்குறது அவங்க ரெண்டு பேரு கையில்தான் இருக்கு.

Anonymous said...

//Speed Master said...
அட்டகாசம்//

வாங்க ஸ்பீட். நீங்க அஜித் ரசிகரா? அட்டகாசம்!!

Anonymous said...

@நாஞ்சில் மனோ.

என்னங்க பதிவுக்கு கீழே நீங்க ஒரு பெரிய பதிவு போட்டுருக்கீங்க?

Anonymous said...

@ நாஞ்சில் மனோ

//எலேய் சிபி நிசமாவே தக்காளி பைனான்ஸ் பண்ணுன தக்காளியை கொண்டு வந்துராதலேய் தம்பி நான் பாவம்//

ரெண்டு பேருல யாரு தம்பி?? நெல்லைல மாஸ்டர் ஹெல்த் செக் அப் பண்ணி கண்டுபிடிக்கணும்!!

Anonymous said...

MANO நாஞ்சில் மனோ said...

//ஐயய்யோ மேடம் நான் மல்டி மில்லினர் இல்லை சட்டி மில்லினர்//

சும்மா டகுல்பாட்சா காட்டாதீங்க. இடுப்புல போட்டுருக்குற பிளாட்டினம் பெல்ட்டே எட்டு கிலோ தேறும்னு பஹ்ரைன் ஆசாரி சொல்லிட்டாரு!!

//// சிபி வில்லனா..அப்பா திரிஷாவோட வாழ்க்கை?//

அவங்க வாழ்கையை நான் பார்த்து கொள்கிறேன்/////

ஸ்பெல்லிங் மிஸ்டேக் சாரே. பார்த்து கொல்கிறேன்னு எழுதவும்.

goma said...

பஹ்ரெனுக்கு ஒரு டிக்கெட் ப்ளீஸ்....
ஸ்டாண்டிங் கிடைச்சாலும் ஓகே.

MANO நாஞ்சில் மனோ said...

சிவகுமார் ! said...
@ நாஞ்சில் மனோ

//எலேய் சிபி நிசமாவே தக்காளி பைனான்ஸ் பண்ணுன தக்காளியை கொண்டு வந்துராதலேய் தம்பி நான் பாவம்//

ரெண்டு பேருல யாரு தம்பி?? நெல்லைல மாஸ்டர் ஹெல்த் செக் அப் பண்ணி கண்டுபிடிக்கணும்!!//

அவன் எனக்கு அண்ணன்'னா நான் தம்பிதானே...?

MANO நாஞ்சில் மனோ said...

ஸ்பெல்லிங் மிஸ்டேக் சாரே. பார்த்து கொல்கிறேன்னு எழுதவும்.//

செல்லாது செல்லாது நான் சொன்னதுதான் கரிட்டு...

MANO நாஞ்சில் மனோ said...

goma said...
பஹ்ரெனுக்கு ஒரு டிக்கெட் ப்ளீஸ்....
ஸ்டாண்டிங் கிடைச்சாலும் ஓகே.//

ஏற்கெனவே எமெர்ஜென்சி அமலில் இருக்கு, மிலிட்டிரி'காரன் ரப்பர் புல்லட் இல்லை, ஒரிஜினல் புல்லட்டோடு உங்களை வரவேற்பான் ஹே ஹே ஹே ஹே...

Unknown said...

மாப்ள ரொம்ப நன்றிய்யா...என்னை விட்டுவிட்டதுக்கு...
உனக்கு புண்ணியமா போச்சி.....நான் ஒரு பயந்த பய ஹிஹி!

MANO நாஞ்சில் மனோ said...

விக்கி உலகம் said...
மாப்ள ரொம்ப நன்றிய்யா...என்னை விட்டுவிட்டதுக்கு...
உனக்கு புண்ணியமா போச்சி.....நான் ஒரு பயந்த பய ஹிஹி!//

என்னை எறிய சிபி'க்கு ஒரு லாரி தக்காளிக்கு பைனான்ஸ் பன்றியாமே ராஸ்கல்...?

Sivakumar said...

//விக்கி உலகம் said...
மாப்ள ரொம்ப நன்றிய்யா...என்னை விட்டுவிட்டதுக்கு...
உனக்கு புண்ணியமா போச்சி//

மாம்ஸ், 2 - வது பார்ட் ரெடி ஆகிட்டு இருக்கு. அதுல உங்களுக்குதான் கும்பாபிஷேகம் !!

அமுதா கிருஷ்ணா said...

try to meet in mano hotel..

பிரபாஷ்கரன் said...

இம் நல்ல கலக்கல் சூப்பர்

மாலதி said...

இம் நல்ல கலக்கல்

erodethangadurai said...

சூப்பர் காமெடி

Sadhu said...

Do Visit

http://verysadhu.blogspot.com

உலக சினிமா ரசிகன் said...

ஆரண்யகாண்டம்-படமா எடுக்கிறானுங்க.....மயிறானுங்க என்ற தலைப்பில் நானும் எனது கருத்தை சொல்லி உள்ளேன்.
மேலும் விபரமறிய எனது வலைப்பக்கம் வாருங்கள் நண்பர்களே!

அம்பாளடியாள் said...

என் மனவலி தீர ஒரு மருந்து சொல்லுங்கள் உறவுகளே..........

சிவ.சி.மா. ஜானகிராமன் said...

அருமை நண்பர்களே,

நோயெல்லாம் நீங்க நல்ல தளம்

வாழ்த்துக்கள்

நன்றி..

http://sivaayasivaa.blogspot.com

சிவயசிவ

Karthikeyan Rajendran said...

சார் பஹ்ரைனில் சந்திப்பது இருக்கட்டும், தினமும் இணையத்தில் சந்திப்போம்.