Wednesday, August 24, 2011

கொக்கு பரோட்டா (24/08/11)


                                                                   
நேற்று பின் தினம்(மாலை)  '' கபேயில் படு பிரபல பதிவர் சிந்திப்பு நடந்தது. தமிழ் பதிவுலகில் மட்டுமன்றி, செவ்வாய் கிரக பதிவுலகின் முக்கியமான நண்பர்களும், பஸ்ஸர்களும்(பதிவர் வேறு பஸ்ஸர் வேறா என்று கேக்கப்படாது). இலக்கியம் பற்றி யாரேனும் பேச ஆரம்பித்தாலே எனக்கு நாக்கு ரோலிங் ஆகிவிடும் என்பதால் ஆப்ரிக்க கண்ட நண்பரிடம் கூடுமானவரை பேச்சு குடுக்காமலே இருந்தேன். அக்கூட்டத்தில்  திடீரென நான் பாட ஆரம்பித்ததில் சைதாப்பேட்டை ஆத்தோரம் இருந்த சென்னையின் ஒரே கழுதையும் கதறி அழுதவாறு செங்கல்பட்டில் தஞ்சம் புகுந்தது. 
############################################


என்னவோ தமிழ் சினிமா ஆட்சி மாறியவுடன் தேனும் பாலும் ஓடும் என்பது போல சொல்லிக் கொண்டிருந்தவர்கள் எல்லாம் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.(ஏன் தவிக்க வேண்டும். அதுதான் தேனும் பாலும் ஓடுகிறதே. எடுத்து ஆளுக்கு ஒரு மொடக்கு குடிக்கலாமே). ஆட்சி மாறி.. சமீபம் வரை தெய்வதிருமகளும், காஞ்சனாவும்தான் ஓடிய படங்களாய் இருக்கிறது மற்ற படங்கள் எல்லாம் போட்ட பணத்தில் போஸ்டர் ஒட்டிய காசு கூட வரவில்லை என்கிறார்கள். (போஸ்டர் ஒட்டிய காசு எப்படி 'கூட' வரும். கொஞ்சம் குறைவாகத்தான் வரும்)  எல்லா படங்களையும் அடி மாட்டு ரேட்டுக்கு கேட்கிறார்கள். என்ன செய்வது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருக்கிறார்கள் சிறு முதலீட்டு தயாரிப்பாளர்கள். மம்மி ஆட்சி மாறும் வரை இதே டயலாக்கை நான் திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டே இருப்பேன். கேட்பது உங்கள் விதி!!
############################################


புதிய தலைமை செயலகத்தில் ஆஸ்பத்திரி கட்டும் ஐடியாவை மம்மி சொன்னதில் இருந்து என்னைப்போன்ற ஆளும்கட்சி எதிர்ப்பாளர்கள்..குறிப்பாக என் பாலோயர் கலைஞர் கூட கதிகலங்கி போய் இருக்கிறார். வேறு வழியில்லை. பாராட்டி ஆக வேண்டும். அட்லீஸ்ட் என் கொக்கு பரோட்டாவை சாப்பிட்டு விட்டு வயித்தை கலக்கிக்கொண்டு அல்லாடும் ரசிகர்களுக்காவது இந்த மருத்துவமனை பயன்படட்டும். 
###########################################


நான் எழுதும் விமர்சனங்களுக்கு பல விதமான ரெஸ்பான்ஸுகள் அப்படத்தை இயக்கிய இயக்குனர்களிடமிருந்து, நடிகர், நடிகைகளிடமிருந்தும், டெக்னீஷியன்களிடமிருந்தும் வரும்(ஆனா வராது). சில சமயம் எழுதாத போது போன் செய்தும் கேட்பார்கள்(ASK சந்தா கட்டவைத்துவிட்டேன்). சில படங்களின் காட்டமான விமர்சனத்தை போலவே காட்டமாய் பேசியதும் உண்டு(நானும் எத்தனை மொக்கை படம்தான் பாக்குறது). பின்னர் வெகு நேர கலந்துரையாடலுக்கு பிறகு புரிந்து கொள்வார்கள். (நான் எழுதும் விமர்சனத்திற்கு நான் மட்டுமே வாசகன் என்று) பின்பு அவர்களின் நெருங்கிய நண்பனாக ஆகிவிடும் அளவிற்கு  நெருக்கமும் வளர்ந்திருக்கிறது(சாப்பாட்டுக்கடை வெற்றிநடை போட வேண்டாமா?).  அப்படி ஒரு இயக்குனர் சென்ற வாரம் ஃபேஸ்புக் இணையளதள வாசகர்களுக்காக ஒரு சிறப்பு காட்சியை ஏற்பாடு செய்திருந்தார்(கடைசி வரை ஒரு சிறப்பு காட்சி கூட படத்தில் இல்லை என்பது வேறு விஷயம்). அப்படத்திற்கு நான் விமர்சனம் எழுதினேன். என்னைத் தவிர படம் பார்த்த ஒருவர் கூட விமர்சனம் செய்யவில்லை(ஏனென்றால் நான் மட்டும்தான் பார்த்தேன்). காலையிலேயே கோபமாய் பேசினார். நான் எப்படி எழுத வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தார். எனக்கு என்ன அறிவில்லை என்று சொன்னார். நான் ஒரு தயாரிப்பாளரின் அலுவலகத்தில் இருப்பதை சொல்லி பிறகு பேசுகிறேன் என்றேன். பிறகு நான் பேச அழைத்த போது எடுக்கவில்லை. நான் அவருக்கு ஒரு குறுஞ்செய்தியை அனுப்பினேன். Thanks for your review about my___________ review, and about me. என்று. பின்பு கூப்பிட்டார். பேசினேன். என் மேல் வைக்கும் விமர்சனத்தை நான் ஏற்றுக் கொள்ள நான் தயாராக இருக்கிறேன். I expect the same too Nanba. இதை எழுதி ஒரு வாரம் ஆகியும் அவரிடம் இருந்து நோ ரெஸ்பான்ஸ்.  எனவே என் மேல் வைக்கப்பட்ட விமர்சனம் பற்றி ஒரு விமர்சனத்தை நாளை எழுதப்போகிறேன். 
###########################################


தத்துவம்
சில சமயம் நம் வாழ்க்கையின் அத்தனை கதவுகளும் மூடப் பட்டுவிட்டதாகவே தோன்றும். ஆனால் எல்லாம் மூடப்பட்ட கதவுகள் அடைக்கப்படுவதில்லை(டைரக்டர் சான்சு கிடைக்கிறது சும்மாவா?) கதவை மெல்ல அழுத்தித் திறக்கும் கைகளுக்காக காத்துக் கொண்டிருக்கிறது. கதவை திற காற்று நிச்சயமாய் வரும்(ரஞ்சிதாவும் வருவாரா?)

அவனால் செய்ய முடியுமென்றால் உன்னாலும் நிச்சயமாய் செய்ய முடியும் - எவனாலும் செய்ய முடியாது என்றால் நிச்சயம் நீ செய்ய வேண்டும்.-ஜப்பானிய பழமொழி. (ரஜினி நடிச்ச ஜப்பான் பட டப்பிங் மாதிரி இருக்கே)

அவனால் செய்ய முடியுமென்றால், அவனே செய்யட்டும், யாராலும் செய்ய முடியாது என்றால் “ஆணியே புடுங்க வேண்டாம்” விட்டுருங்க.- நம்மூர் பழமொழி (கேட்டியா கொடுமைய)

விவாதிப்பதை விட வளைந்து கொடுத்து போவது நல்லது.
அர்த்தமுள்ள மெளனம், அர்த்தமில்லாத வார்த்தையை விட சிறந்தது.

(வாங்குன கடனுக்கு பதில் சொல்லிட்டு இதை எழுதி இருக்கலாம்) 
############################################

கார் கீ,  ஆ.மூ.கி., படகோட்டி ஆகியோர் தளபதி பட வசனத்திற்கு செமையாக டப்பிங் பேசி இருக்கிறார்கள். கார் கீ குரல் அப்படியே ரஜினி குரல் போல இருந்ததை கேட்டு நான் எழுந்து விழுந்து பிறகு விழுந்து எழுந்து சிரித்தேன். அந்த ஒரிஜினல் ரஜினி குரல்..சேன்ஸே இல்லை கார் கீ.  எ டிவைன் வாய்ஸ்!! நீங்களும் கேட்டு மலைத்துப்போங்கள். 
   
############################################


மை சென்டர்: 
"ழ" கபேயில் நாங்கள் பாடும் பாட்டை கேட்டு பட்ட பாட்டால் இப்போது அந்த கடையின் பெயரை ஒருவழியாக "லா லலல்லா" கபே என்று மாற்றிவிட்டார்கள். மன்றம் வந்த தென்றலுக்கு பாடலை நான் பாட ஆரம்பித்ததுமே ரூம் முழுக்க லோ வோல்டேஜ் (ஆதாரம்: கீழே). வெற்றிலைப்பாக்கு கவிஞர் 'விந்தை மனிதன்'எனது வலப்புறத்தில் வெத்து இலையாக அமர்ந்து கொண்டு பல்லைக்கடித்துக்கொண்டு இருந்தார்.  "நான் தாம்பா ஏ.வி.எம். சரவணன்" ரேஞ்சில் கையை கட்டியவாறு 'தகதகக்கும் சூரியன்' அப்துல்லா இந்த பேரிம்சையை சகித்துக்கொண்டிருந்தார்.   

       
ஆத்தா பாடலுக்கு அப்துல்லா பாட ஆரம்பித்ததும் ராஜாராமன் இனி தப்பிக்க வழி இல்லை என்பதை உணர்ந்து விட்டதால், கூட சேர்ந்து தப்புத்தாளம் போட ஆரம்பித்தார். வெள்ளுடை வேந்தர் வீறிட ஆரம்பித்ததும் அவருக்கு பின்னாலே இருந்த டி.வி.யில் ஒளிவட்டம்(சத்தியமாக உதய சூரியன் அல்ல) தெரிய ஆரம்பித்தது (ஆதாரம்: காணொளியில்). அந்த ஒளிவட்டத்தை தனக்கு சாதகம் ஆக்கிக்கொள்ள சாதகம் செய்வது போல் நடித்து அப்துல்லாவிற்கு பின்னே ஒரு அ.தி.மு.க. அனுதாபி (பார்க்க புதிய பதிவர் போல் இருந்தார்) ஆட்டம் போட்டுக்கொண்டிருந்தார். டெபாசிட்டாவது   தேறுமா எனும் ஆசையில் அப்துல்லா உயிரை குடுத்து/எடுத்து பாடினாலும் கதவோரம் சாய்ந்து இருந்த கபே ஊழியர் கடைசிவரை கண்டுகொள்ளவே இல்லை. ஆட்சி மாறுனா யாருமே மதிக்க மாட்டானுங்களா!! அய்யகோ அப்துல்லா!! 





##################################################


அடல்ட் சென்டர்:


அடல்ட் சம்மந்தப்பட்ட படு கிளுகிளுப்பான செய்தி படிக்க இங்கே (கிளு)கிளுக்கவும் ':


அடல்ட்ஸ் ஒன்லி 

################################################## 

இப்பதிவை எழுதச்சொல்லி ஊக்கப்படுத்திய கேபிள் அண்ணனுக்கு ஜெ ஜே!

கபாலம் முதல் கணுக்கால் வரை இப்பதிவிற்கு ஆலோசனை வழங்கிய கே.ஆர்.பி. அண்ணன் வாழ்க. 
                      
- இப்படிக்கு அண்ணன்மார்களின் விழுதுகள். 
......................................................................................................


16 comments:

Philosophy Prabhakaran said...

இன்னொரு பக்கி லீக்ஸ்...!!!

Philosophy Prabhakaran said...

இன்னும் கூட நிறைய கலாய்த்திருக்கலாம்...

Philosophy Prabhakaran said...

// ஆப்ரிக்க கண்ட நண்பரிடம் கூடுமானவரை பேச்சு குடுக்காமலே இருந்தேன் //

புரிஞ்சவன் தான் பிஸ்தா...

Unknown said...

ஸ் ஸ் அபா முடியல முடியல ஹிஹி!

shortfilmindia.com said...

எனக்குன்னு தனி ப்ளாக் போட்டுள்ள எழுத சொன்னேன்... அவ்வ்வ்.. நல்லாருக்கு.. :))

அஞ்சா சிங்கம் said...

காரம் கொஞ்சம் கம்மியா இருக்கு ..
இதுக்கு எல்லாம் கே.ஆர்.பி. தான் காரணம் என்று நினைக்கிறன் ...
நல்லாஇருக்கு ...
அடுத்து ஒரு பயோடேட்டா எதிர்பார்கிறேன் ...........

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

sema sema

goundamanifans said...

//Philosophy Prabhakaran said...
இன்னும் கூட நிறைய கலாய்த்திருக்கலாம்..//

நேரம் இல்லை தம்பி. ஓவர் சரக்காயிருச்சி (இவண் - KRP)

goundamanifans said...

Philosophy Prabhakaran said...
// ஆப்ரிக்க கண்ட நண்பரிடம் கூடுமானவரை பேச்சு குடுக்காமலே இருந்தேன் //

புரிஞ்சவன் தான் பிஸ்தா...//

நான் அவரை சொல்லவில்லை, தம்பி.

இப்படிக்கு - KRP

goundamanifans said...

விக்கியுலகம் said...
//
ஸ் ஸ் அபா முடியல முடியல ஹிஹி//

வியட்நாம்ல சந்திச்சதுக்கு அப்புறம் மறுபடி எப்ப சந்திப்போமோ?

- KRP

goundamanifans said...

//அஞ்சா சிங்கம் said...
காரம் கொஞ்சம் கம்மியா இருக்கு ..
இதுக்கு எல்லாம் கே.ஆர்.பி. தான் காரணம் என்று நினைக்கிறன் ...
நல்லாஇருக்கு ...
அடுத்து ஒரு பயோடேட்டா எதிர்பார்கிறேன்//

பரோட்டால காரம் வேணும்னு அதிகாரமா கேக்காதீங்க தம்பி. இதுக்கு நாந்தான் பொறுப்புன்னு கேபிள் கிட்ட சொல்லிட்டுதான் எழுத ஆரம்பிச்சேன். இதுல சில வரிகளுக்கு வசனம் எழுதியது சித்ராவும், பன்னிக்குட்டி ராமசாமியும். அவர்களுக்கு நன்றி. பயோடேட்டா எழுதுனா ஹிட்ஸ் வரலைன்னு சொல்லிதான் இப்படி ஆரம்பிச்சிட்டேன். வாழ்த்துக்கள் தம்பி!

- KRP

goundamanifans said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
sema sema//

சந்தோஷம் தம்பி. சிங்கப்பூர்ல சந்திப்போம்.

- KRP

goundamanifans said...

//shortfilmindia.com said...
எனக்குன்னு தனி ப்ளாக் போட்டுள்ள எழுத சொன்னேன்... அவ்வ்வ்.. நல்லாருக்கு.. :))//

வாங்க கேபிள். அதுதான் சிறப்பு மலர் போட்டுருக்கனே. shortfilmindia எடுக்குற காலம் போய் longfilmindia எடுக்குற காலம் சீக்கிரம் வரட்டும். ஒரு லெமன் டீ சாப்டுட்டு பயணத்தை தொடருங்க.

- KRP

Anonymous said...

ரசித்தேன்...உங்களுக்கென்று ஒரு தனி பாணி...தனி ரசிகர்கள் வர வாழ்த்துக்கள்...

Philosophy Prabhakaran said...

யோவ்... இந்த இடுகையை எழுதியது சிவாவா அல்லது கே.ஆர்.பியா...? சிவசிவா... வரிக்கு வரி தம்பி, தம்பின்னு பின்னூட்டம் போட்டா நீங்க கே.ஆர்.பின்னு நம்பிடுவோமா சிவா...

Philosophy Prabhakaran said...

// இதுல சில வரிகளுக்கு வசனம் எழுதியது சித்ராவும், பன்னிக்குட்டி ராமசாமியும். //

இது வேறயா... பதினோரு பேர் கொண்ட குழு..?